Saturday, July 25, 2009

மோதி, உடைந்தோம்.....

எனக்கு மட்டும்தான் நேரம் சரியில்லைனு நினைச்சேன். என் நண்பர்களுக்கும் சரியில்லை. ஏன், தமிழ் சினிமாவுக்கே நேரம் சரியில்லை. நம்மாளுங்க, நல்ல படம் எடுக்க போட்டி போடறாங்களோ இல்லையோ, யார் மோசமான படம் எடுக்கறதுன்னு நல்லாவே மோதி விளையாடறாங்க. நல்ல production values மட்டுமே, ஒரு படத்தை காப்பாற்ற முடியாதுன்னு மறுபடியும் நிரூபிக்கற படம்தான் மோதி விளையாடு...

மொத்தம் எட்டு பேர், 2.5 மணி நேரம், தலைக்கு 50 ரூவா, மூச்சுத் திணறத் திணற மொக்கை வாங்கினோம் பாருங்க. மாசிலமணியவிட ஒரு மொக்கையான படம் வராதுன்னு நினைச்சேன் (குருவி பார்க்கும்போதும் same பீலிங்க்ஸ்), ஆனா இந்தப் படம் 15 முறை ATM படத்தை பார்த்த effect தருது. கதை நல்லாத்தான் இருக்கு. எடுத்த விதம் தான் why blood same blood. நான் பெற்ற இன்பமோ / துன்பமோ, பெருக இவ்வையகம். So, கதைய நான் சொல்ல மாட்டேன். தைரியம் இருந்தா நீங்களே பார்த்து தெரிஞ்சிக்கங்க.

நடிப்புகள பார்க்கும் போது, நம்ம கலாபவன் மணிய, குழந்தையப் போட்டு தாண்டி, கற்பூரம் அடிச்சு சத்தியம் பண்ணி சொன்னாலும், கொடீஸ்வரர்னு நம்பமுடியலை. வினய் பணக்கார வீட்டுப் பையன் வேஷத்துக்கு நல்லாவே போருந்தறார். ஆனா, ஏன்யா உனக்கு இந்த கொலை வெறி. தலைகீழாகத்தான் குதிக்கப்போகிறேன்னு சொல்றா மாதிரி, சொந்தக் குரல்லதான் பேசுவேன்னு பேசி, டோட்டல் damage பண்ணிட்டார். சகிக்கலை. ஹீரோயினி வழக்கம் போல, வராங்க, பாடுறாங்க, ஆடுறாங்க, ஹீரோவா உற்சாகப் படுத்தறாங்க, போறாங்க.

படத்துல நிஜமான relief, சந்தனாம், மயில்சாமி & ஹனீ ஃபா. மூணு பேருமே காமடியில கலக்காறாங்க. தியேட்டர்ல வந்த 3 விசில் சத்தங்கள்ள, ஒண்ணு, சந்தானம் காமடிக்கு, ரெண்டு, மயில்சாமி காமடிக்கு, மூணு, மோதி விளையாடு பாட்டுல வர தேவாவுக்கு. அழகான காமிராவைக் கூட, மோசமான திரைக்கதை பின்னுக்குத் தள்ளுது. எடிட்டிங், சில இடங்களில் நல்லா இருந்தாலும், பெருசா சொல்லிக்கறா மாதிரி ஒண்ணும் இல்லை. பாடல்கள் சுமார் ரகம். படத்தோட லோகேஷங்கள்ள பயங்கர குழப்பம். சென்னைனு சொல்லி பாண்டிச்சேரிய காட்டலாம், மலேசியாவ காட்டலாமோ???

இந்தப் படத்துக்குப் போகலாம்னு சொன்னதால என் மேல தான் என் நண்பர்கள் எல்லாருக்கும் காண்டு. படம் ஆரம்பிச்ச 20 நிமிடத்தில் ஒருத்தன் தூங்கிட்டான். இரண்டாவது பாதியின் நடுவிலேயே இன்னும் ரெண்டு பேரு கிளம்பிட்டாங்க. ஆனா நான் அசருவனா, வில்லு படத்தையே பார்த்த ஆளாச்சே. மன தைரியத்தோட, முழுசையும் பார்த்துட்டுதான் வந்தேன். இல்லைனா உங்க எல்லாரையும் காப்பாற்ற முடியாதே. வீட்டுக்கு வந்ததும், முதல் வேலையா, தலைல சொட்டை விழுந்துருக்கான்னு கண்ணாடியில பார்த்தேன். நல்ல வேளை, எதுவும் இல்லை.

ஆகவே, மக்களே, ரொம்ப போர் அடிச்சா, சன் டிவியில போடுற டப்பிங் படத்த கண் கொட்டாம பார்த்துட்டு, குப்புற படுத்துக்கங்க. நான் இவ்வளவு சொல்லியும், "இல்லை, நீங்க தப்பா புரிஞ்சுண்டேள், படம் அப்படியெல்லாம் இல்லை"னு யாரவது சொன்னீங்க, உங்க வீட்டுக்கு, ஷேர் ஆட்டோல, ATM, ஏகன், வில்லு, குருவி, கீதை, உதயா, ஆஞ்சநேயா, ஜனா படங்கள் அடங்கிய DVD, தேடி வரும்.....

இவர் பேரு வினய். இந்தப் படத்தப் பார்த்தது நான் செஞ்ச வினை.....

Wednesday, July 22, 2009

நாடோடிகளும் அரை ரத்த இளவரசனும்

நாடோடிகள்

நான் என்ன பெரிய விமர்சனம் எழுதறது. எனக்கு முன்னாடியே, பல நல்லவர்கள், படத்தை பார்த்து எழுதித் தள்ளிட்டாங்க, எனக்கு மிச்சம் வைக்காம. இது, எதை மாதிரியான படம்னு வரையறுக்க முடியலை. எந்த மாதிரி வேணாலும் புரிஞ்சிக்கலாம். வேறு வேறு விதமான நண்பர்களுக்குள்ள நடக்கும் கதையாகவும் பார்க்கலாம், வேறு வேறு விதமான தந்தைகளைப் பற்றிய படமாகவும் எடுத்துக்கலாம், வேறு வேறு பெண்களை/காதலிகளை/அம்மாக்களைப் பற்றிய படமாகவும் பார்க்கலாம்னு, இந்தப் படத்திற்கு, எக்கச்சக்க கோணங்கள். ஒரு தேவையில்லாத பாடலைத் தவிர (யக்கா யக்கா) படம் வேறு எங்கயுமே போர் அடிக்கல. திரைக்கதை அப்படி.

அருமையான ஒளிப்பதிவு, எடிட்டிங், வசனம், நடிப்புன்னு படம் நெடுக ஒரே positives மட்டுமே. இருந்தும் எனக்கு, மூன்று முறை பார்க்கும் போதும், கண்ணை உறுத்திய சில விஷயங்கள். முன்னமே சொன்னது போல அந்த யக்கா யக்கா பாடல். பாட்டும் சுமார்தான், அதில் ஒளிப்பதிவு, ரொம்பக் கீழ்த் தரம், நிறைய low angles. தேவையில்லாத திணிப்பு. சசிகுமாரின் amateur நடிப்பு. அவருக்கு ஹீரோ வேஷம் பொருந்தினாலும், பல இடங்களில் அவர் நடிக்கக் கஷ்டப்படுவது தெரிகிறது. மொக்கை பின்னணி இசை. அந்தக் கடத்தல் இடத்துல வரும் இசையைத் தவிர, வேற எங்கையும் பெருசா ஒட்டலை. பல இடங்களில், ஒரே இசையை மீண்டும் மீண்டும் போட்டு, வெறுப்பேத்தறாங்க.

மற்றபடி இது கன கச்சிதமான படம்.

இப்படி கை தூக்கினவங்க எல்லாம் என்ன ஆனாங்க தெரியுமா...

ஹாரி பாட்டர்

இது வரை வந்த ஹாரி பாட்டர் படங்கள்லேயே, இது தான் உன்னதமான படைப்புன்னு வந்த பல நூறு விமர்சனங்களை பார்த்து, வழக்கம் போல ஏமாறாம, என் எதிர்பார்ப்புகளை கொஞ்சம் கட்டுப்படுத்திக்கிட்டு, படம் பார்க்க போனேன். முதல் நாளே பார்க்கனும்னு இருந்தேன், ஆனா என்னை விட பல ஆர்வக் கோளாறுகள் இருந்ததால, அவங்க முந்திகிட்டாங்க. ஒரு வழியா நாலாவது நாள் நைட் ஷோ, சத்யம் தியேட்டர்ல, நடு சென்டர் ஸீட்டாப் பார்த்து புக் பண்ணேன்.

படம் பெருசா ஒண்ணும் ஏமாத்தலை. ஆனா புத்தகத்தை படிச்சவங்களுக்கு கொஞ்சம் ஏமாற்றமாகவே இருக்கும். நான் இந்தப் படத்தை தூற்றவும் இல்லை, போற்றவும் இல்லை. கிடைத்த 2.5 மணி நேரத்துல, முடிந்த வரை, பரபரப்பா கதை சொல்லிருக்காங்க. திரைக்கதை நல்ல வேகம். ஆனா, தேவையே இல்லாம, புத்தகத்துல இல்லாத ஒரு fight சீன் படத்துல இருக்கு. படத்துல சில பல இடங்கள், செம்ம humorous. நடிப்புன்னு பார்த்தா, இந்த படத்துல, dumbledore பாத்திரத்துல வர michael gambon நல்லா நடிச்சிருக்கார். daniel, படத்துல பெரிய வேலை ஒண்ணும் இல்லாம வரார். rupert grint நல்ல காமெடி நடிகரா வருவார்னு நினைக்கறேன். அவரோட reactions எல்லாம் செம்மக் காமெடி.

நம்ம emma watson, வழக்கம் போல நல்லாவே நடிச்சிருக்காங்க. அவங்க எதுக்கு நடிக்கணும். சும்மா வந்து நின்னா போதும். அட அட அட. அதுவும் RDX ஸ்க்ரீன்ல இன்னும் அழகா இருக்காங்க. alan rickman, tom felton, எல்லாருமே கிடைச்ச ஸ்க்ரீன் டைம்ல, நல்லா நடிச்சிருக்காங்க. படத்துக்கு முக்கியமான பலம், கிராபிக்ஸ், கேமரா & எடிட்டிங். எல்லாமே உச்சக்கட்டம். Almost, படத்தோட எல்லா காட்சியிலுமே கிராபிக்ஸ் இருக்கு. அதுவும் சிறந்த தரத்தோட. மொத்ததுல, படம் நல்ல பொழுதுபோக்கு. ஆனா, வந்த படங்கள்லேயே சூப்பர்னு எல்லாம் சொல்ல முடியாது. நான் புத்தகங்களை முன்னமே படிச்துனால இருக்கலாம்.

அடுத்த படத்தை நான் பெருசா ஒண்ணும் எதிர் பார்க்கலை. ஆனா, அடுத்த படத்துல நம்ம emma watsonku இன்னும் கொஞ்சம் ஸ்க்ரீன் டைம் கொடுத்தா நல்லா இருக்கும். மற்றபடி, இது, பாட்டர் படங்களில், மற்றுமொரு வெற்றிப் படம்.
படத்தை, சத்யம் தியேட்டர்ல மட்டும் பாருங்க.

இதப் பாரு. கிருஷ்ணா ரொம்ப நல்லவன்னு போட்டிருக்கு...

(பி.கு. இந்த அரை ரத்த இளவரசன் என்கிற மொழி மாற்றம், நான் முன்னமே யோசிச்சது. அதனால, நண்பர் lancelot ராயல்டி கேட்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன்)

Sunday, July 12, 2009

மற்றும் பல...

ஆரம்பிச்சிட்டாங்க...

கல்லூரி திறந்தாச்சு. இந்த முறை பாடங்கள் கொஞ்சம் வித்தியாசமா இருக்கு. நான் எதிர்பார்த்தா மாதிரி, practical வேலைகள் கொஞ்சம் நிறையவே இருக்கும்னு நினைக்கறேன். அதானால, நிறைய ப்ளோக முடியாதுன்னும் நினைக்கறேன். எங்க music band மீட்டிங்கும் நடந்தது. புதுசா நாலைந்து பேர் தேவைப்படறாங்க. இப்பதான் கவுன்சிலிங் நடக்குது. லைன்ல நிக்கற பசங்களையும், அப்பா அம்மாக்களையும் பார்க்க கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கு. நாம என்ன செய்ய முடியும்...

நாடோடிகள்

நாடோடிகள் பட விமர்சனத்தை எழுதச் சொல்லி, என் நண்பர்கள் சில பேர் கேட்டாங்க. 3 முறை அந்த படத்தை பார்த்துட்டேன். இதுக்கு மேல அதை பற்றி வேற என்ன சொல்ல. இருந்தும், அவர்களோட விருப்பத்திற்கு இணங்க, வரும் வாரம், எழுதுகிறேன். (உங்க தலை விதி அப்படி)

பைக்

புது பைக் ஒன்னு வாங்கினேன். (paasion plus). நான், ஏன் அண்ணனோட வண்டி (discover) ஓட்டி பழகியதால, புது வண்டியில, இன்னும் gear pattern பழகல. ரொம்ப பேஜாரா கீது. அதனால, என் அண்ணனோட வண்டியவே இன்னும் ஓட்டிங். ஏன் தலை விதி பாருங்க, புது பைக் இருந்தும், ஓட்ட தெரிஞ்சும், ஆண்டவன் இப்படி பண்ணிட்டான். இருந்தும், பொங்கி எழுந்து, பழகிக் கொண்டு, ஏன் பைக்கை ஓட்டுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.

வரும் வாரம், படம் ரிலீஸ். பார்க்க நான் ரெடி, நீங்க ரெடியா??

Wednesday, July 1, 2009

சிகாமணியின் சின்னபிள்ளைத்தனமான கதைகள் -2

முதல் பகுதி -->இங்க<--

தொடர்ந்தான் சிகாமணி, "அதாவது படம் எவ்வளவு கேவலமா இருந்தாலும், பிரம்மாண்டத்த வெச்சு ஒட்டிரலாம்னு பல பேர் நினைக்கறதால, அத மாதிரியே ஒரு கதை. மொத சீன்லயே மவுண்ட் ரோடு LIC பில்டிங் மேல ஒரு டைனோசர் நிக்குது". உடனே நான், "அது எப்படி மச்சான். கிராபிக்ஸ்ஸா??". "இல்லைடா, ஒரு யானைக்கு டைனோசர் make up போட்டு நிக்க வெக்கறோம். இதுக்கு, ஆப்ரிக்கா வனப் பகுதிலேர்து ஒரு make up மேன வரவழைப்போம். இன்னும் கேளு. அந்த டைனோசர பார்க்க, மவுண்ட் ரோடு முழுக்க ஜனங்க குவியறாங்க"

"எல்லாம் ஜூனியர் ஆர்டிஸ்ட். என்னப் பண்றதுன்னே தெரியாம குழப்பத்துல இருக்குற நம்ம டைனோசர், பக்கத்துல இருக்குற பில்டிங் எல்லாத்தையும், தன் வாலாலையும், காலாலையும், (சென்சார்) அடிச்சு நொறுக்குது. அத கிராபிக்ஸ் பண்றோம். ஆனா, ரியலிஸ்டிக்கா இருக்கணுமே, அதனால, மவுண்ட் ரோட்ல இருக்குற எல்லா பில்டிங்குக்கும் வெள்ளை பெயிண்ட் அடிக்கிறோம். சுண்ணாம்பு பரவுதே. அப்புறம், அந்த டைனோசர அழிக்க, இந்திய ராணுவமே அங்க குவியுது. விமானப் படைலேர்ந்து, பிளைட்டெல்லாம் வருது. குண்டு போட்டு, டைனோசர அழிக்கப் பாக்கறாங்க, ஆனா எதுவும் நடக்கலை"

"கீழ இருக்குற மக்கள், என்ன ஆகப் போகுதோன்னு, அன்னாக்கா ஆ போட்டு, ஆகாயத்தை பார்க்க சொல்ல, நம்ம ஹீரோ, டைனோசர் ஸ்டொமக்க கிழிச்சிகிட்டு வெளிய வந்து, டைனோசர அழிக்கராறு. எப்பூடி??"

"மச்சான், பேரரசு உடம்புல, ஷங்கர் ஆவி புகுந்தா மத்திரி இப்படியொரு கதை யோசிச்சு வெச்சிருக்கியே. பட்ஜெட் எவ்வளவு??"

"10 கோடி"

"பத்துமா??"

"மொத சீனுக்கு கரெக்டா இருக்கும்"

"அடப்பாவி, முதல் சீனுக்கேவா. ரைட் விடு. எனக்கு கொஞ்சம் கியாரா இருக்கு, நான் வரட்டா??"

"அட இருடா. அடுத்து நாம எப்ப பார்க்கறது. இந்த கதயவே முடிக்கல. ஆனா, சிம்பிளா இன்னும் ஒரே ஒரு கதை சொல்றேன். கேட்டுட்டு போயேன்"

"நான் பாவம்ல. சரி சீக்கரமா சொல்லு. ஆனா இதோட நிறுத்திக்க. start music"

முதல்ல அவ்வளவு சிம்பிளா இருக்கும்னு நினைக்கல. கதைல இருக்குற செண்டிமென்ட கேட்டு எனக்கு வயறு upset ஆகிருச்சுனா பாருங்களேன்.

......will end in next post