Showing posts with label multiple. Show all posts
Showing posts with label multiple. Show all posts

Sunday, October 23, 2011

மற்றும் பல - 23/10/2011

வழக்கம் போல அப்படியே சோம்பேறித்தனத்துல இங்க எதுவும் எழுதாம விட்டுட்டேன். என்னோட பழைய பதிவுகளை கொஞ்சம் பார்க்கலாம்னு நினைச்சா, கடைசியா எழுதின 10 பதிவுகளுமே விமர்சனங்களாவே இருக்கு. சங்கடமா போச்சு. இனிமேலாவது ஒழுங்கா அப்டேட் பண்ண முயற்சி பண்ணனும். தட்டிக் கேட்க ஆள் இல்லாம போச்சுல. அதான்.. :)
-----------------------------------------------------------------------
பிபிசி வேலையை விட்டுட்டேன். என் மேல அக்கறை இருக்கற எல்லாரும் என்னை திட்டியாச்சு. உங்க அக்கறைக்கு நன்றி மக்களே :) ஆனா என்னை புரிஞ்சிகிட்ட யாரும் எதுவும் சொல்லல. அதுவே சந்தோஷமா இருக்கு. பிபிசில வேலை செஞ்ச இந்த ஒரு வருஷம் எப்படி போச்சுனே தெரியலை. எக்கச்சக்க நண்பர்கள், புரிஞ்சிகிட்ட விஷயங்கள், புதுப்புது அனுபவங்கள்னு மிக வேகமான ஒரு வருஷம். நான் எங்கெல்லாம் போக முடியாதுன்னு நினைச்சனோ, யாரையெல்லாம் பார்க்க முடியாதுன்னு நினைச்சனோ, எல்லாமே நடந்துச்சு. (என்னோட facebook ஆல்பம பார்த்தா உங்களுக்கு புரியும் :P) சம்பந்தமே இல்லாத இடங்களுக்கும் போனேன். இந்த முதல் வேலை அனுபவம் கண்டிப்பா என்னோட எல்லா எதிர்கால வேலைகள்லையும் எதிரொலிக்கும்னு நம்பறேன். நன்றி டு பிபிசி :) அடுத்து என்னான்னு கேட்காதீங்க. இன்னும் யோசிச்சிக்கிட்டுதான் இருக்கேன் :) 
-----------------------------------------------------------------------
ராக் ஸ்டார் மற்றும் ரா ஒன் படத்தோட பாடல்கள் கொஞ்சம் ஈர்த்திருக்கு.
முதல்ல
, ராக் ஸ்டார்..... 
படத்துக்கு, ரஹ்மான், சூப்பர்லேடிவா இசை அமைச்சிருக்கர்தா இசை விமர்சகர்கள் நிறைய பேர் சொல்றாங்க. பாடல்கள் நல்லா இருந்தாலும் நம்ம நேட்டிவிட்டி இருந்தாதான ஓட்டும். அது எனக்கு கஷ்டம். டில்லி 6க்கு அப்பறம், ஹிந்தில ரஹ்மானோட பெஸ்ட்டுன்னு சில பேர் சொல்றாங்க. நமக்கு ஒண்ணும் புரியல. என்னதான் இருந்தாலும் ரஹ்மானுக்கு மற்றுமொரு வெற்றிப் படம்.
அடுத்து ரா ஒன் பத்தி சொல்லனும்னா, சம்மக் சல்லோ பாடல் மட்டுமே நிறைய பேரை கவனிக்க வெச்சிருக்கு. அதோட மேக்கிங் வீடியோ பாத்திருப்பீங்க. ஏகான் ஹிந்தி பாடினது ஆச்சர்யம்னா, பாடல்ல தமிழ் வரிகள் இருக்கறது அடுத்த ஆச்சர்யம். ஆனா படத்தோட ட்ரைலர பார்க்கும்போது ஆச்சரியப்பட முடியலை. ஷாருக் ஒவ்வொரு தெரு முனைல நின்னும் படத்துக்கு பிரமோஷன் பண்றாரு. படம் எப்படி இருக்குனு பார்க்கலாம். தலைவர் வேற வராரே.
-----------------------------------------------------------------------
குறுஞ்செய்தி என்கின்ற எஸ்.எம்.எஸ்க்கு கட்டுப்பாடு விதிச்சிருக்காங்க மாண்புமிகு ட்ராய். அதுக்கு அவங்க சொல்ற காரணம், டெலி மார்க்கெட்டிங் ஆளுங்களை கட்டுப்படுத்தவாம். அதுக்கு எதுக்கு நம்ம மடில கை வெக்கணும்னு தெரியலைநிறைய பேர் இந்தக் கட்டுப்பாடை ஆதரிக்கறாங்க. தேவையில்லாத  எஸ்.எம்.எஸ் வராதுன்னு. இவ்வளவு கோடி மக்களை கட்டுப்படுத்த முடியரவனுக்கு, நூறு டெலி மார்க்கெட்டிங் கம்பெனிகளை கட்டுப்படுத்த முடியாதா? இல்லை வேற ஏதாவது காரணங்களாநான் காசு குடுக்கறேன். ஒரு நாளைக்கு எவ்வளவு  எஸ்.எம்.எஸ் அனுப்பறதுன்னு நான் முடிவு பண்ணிக்கறேன். இவனுங்க யாரு அதை கட்டுப்படுத்த? இன்னைக்கு இதுல கட்டுப்படுத்தரவனுங்க, நாளைக்கு "நீ இவ்ளோதான் பேசணும், இதுக்கு மேல பேசகூடாது"னு கட்டுப்படுத்தினா?? இதுல ஆச்சர்யம் என்னான்னா, இதுக்கு எதிரா, காதுல விழறா மாதிரி எந்தக் குரலும் வரலை. அவ்வளவு கூடவா யோசிக்க திராணி இல்லாம ஆகிட்டோம்? 
-----------------------------------------------------------------------
ரெண்டு பாட்டுக்காகவே சதுரங்கம் படம் பார்த்தேன். கிளைமேக்சை தவிர படம் சுவாரசியமாத்தான் இருந்துச்சு. சோனியா அகர்வாலைப் பத்தி நிறைய கமெண்ட்ஸ் சொல்லிட்டே படம் பார்த்தோம் நானும் என் நண்பனும். நல்ல வேளை சத்தமா சொல்லலை. பின்னாடி ரோல சோனியாவே உட்கார்ந்திருந்தாங்க. படம் முடிஞ்சா பின்னாடி, வெளிய கரு பழனியப்பன் நின்னுகிட்டு இருந்தாரு. போய் என்ன பேசறதுன்னு தெரியலை. அப்படியே வந்துட்டேன். 
-----------------------------------------------------------------------
முரண் படமும் நல்லா இருந்துச்சு. ஆனா கொஞ்சம் யோசிச்சா படத்தோட எல்லா டிவிஸ்டயும் பத்தாம் கிளாஸ் பையனே / பொண்ணே (நான் ஆணாதிக்கவாதி இல்லீங்கோ :P ) கண்டுபிடிக்கறா மாதிரி இருந்துச்சு. பிரசன்னா ரொம்ப நல்லா நடிச்சிருக்காரு. சேரனுக்கு, எதையோ முழுங்கிட்டு வயித்துல சங்கடம் பண்றா மாதிரியான அதே லுக்கை, படம் முழுக்க மெய்ன்டெய்ன் பண்ணாரு. அவருக்கு ஏத்த ரோல். ஆனா, படம் நல்லா ஓடலைன்னு  கேள்விப்பட்டேன். pity. பாட்டு எல்லாம் மொக்கை. 

Thursday, April 14, 2011

மற்றும் பல (14/04/2011)

ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டா, சித்திரை ஒண்ணானு காவலன் வடிவேல் மாதிரி சில பேர் கன்பீஸ் ஆகிருக்காங்க. நிறைய பேர் தெளிவாதான் இருக்காங்க.  தமிழ் புத்தாண்டு வாழ்த்தை சொல்லிகிட்டுதான் இருக்காங்க. காலங்காலமா அதை தமிழ் புத்தாண்டா கொண்டாடிட்டு, ஒரு தனியாளோட விருப்பத்துக்கு / சுயநலத்துக்கு ஏத்தா மாதிரி மாத்தினதை யாரும் பெருசா எடுத்தக்கலை. இந்த நாள்ல ஒண்ணுமே பண்ணாமா இருக்கறவங்களுக்கு பெரிய வித்தியாசம் இல்லை. அவங்களுக்கு லீவு கிடைச்சா போதும். 
------------------------------------------------------------------------------------------------------------------
எப்பவுமே ஸ்டேடியம் போய் மேட்ச் பாக்கறது எனக்கு பிடிக்காது. இருந்தாலும் என் தொழிலுக்காக அப்படி பார்க்க வேண்டியிருந்தது. சேப்பாக்கம்  மைதானத்துல நான் பார்த்த முதல் மேட்ச், இந்த ஐ.பி.எல்ல சென்னை-கொல்கத்தா ஆடின மேட்ச். அதுவும் மீடியா பாக்ஸ்ல, ஏசில உட்கார்ந்து பார்த்தது நல்ல அனுபவம். ஆனா, இந்த முறை ஐ.பி.எல் மோகம் கொஞ்சம் கம்மி ஆகிருக்கரா மாதிரி தெரியிது. நானும் பெருசா ஒன்னும் ஃபாலோ பண்ணலை. நிறைய ஆட்டம் ஃபிக்சிங் மாதிரியே வேற இருக்கு. என்ன எழவோ.
------------------------------------------------------------------------------------------------------------------
விவேக்கை பெட்டி எடுக்கும்போது சுவாரசியமான விஷயம் ஒண்ணு சொன்னாரு. காதலுக்கு மரியாதைல, விஜயோட ஃபிரெண்டா, இவர்தான் முதல்ல கூப்டான்கலாம். ஆனா, அந்த சமயத்துல, காதல் மன்னன் படத்துக்காக இவர் உதவி செஞ்சிகிட்டு இருந்ததால இவரால நடிக்க முடியலியாம். அடுத்து அழகிய தீயே படத்துல, இவர்தான் கதாநாயகனா நடிக்க வேண்டியதாம். சில கருத்து வேறுபாடுனால நடிக்க முடியாம போய், இன்னிவரைக்கும் ராதா மோகன் படங்களை மிஸ் பண்ணிக்கிட்டு இருக்கறதா வருத்தப்பட்டார்.
------------------------------------------------------------------------------------------------------------------
ஒன்னரை மாசமா எதுவும் எழுதலை. வழக்கம் போல வேலைகள். சோம்பேறித்தனம். writers block. இப்படி நிறைய காரணங்கள். 
------------------------------------------------------------------------------------------------------------------
180 படத்தோட ஆடியோ ரிலிஸ், சம்பிரதாயமா, சத்யம் தியேட்டர்ல நடந்துச்சு. வழக்கம் போல, மேடைல பாடினவங்க, பாடலை, வாய் அசைச்சாங்க. வாசிச்சவங்க கை அசைச்சாங்க. ஃபான்டம் காமெரால 2500fpsல ஷூட் பண்ணிருக்காங்க. விஷுவலா நல்லா இருக்கு. டிரைலர் பெரிய எதிர்பார்ப்பு எதையும் உருவாக்கலை. ஒரு பாடல்ல சித்தார்த்தும் பிரியா ஆனந்தும் நெருக்கமா இருந்தது, ஆர்யாவை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணிருச்சு போல. அவர் பேசும்போது, அத பத்தியே சொல்லிக்கிட்டு இருந்தாரு. வர வர இந்த மாதிரி நிகழ்ச்சியெல்லாம் ரொம்ப கடியாயிருக்கு. 
------------------------------------------------------------------------------------------------------------------
நண்பர்கள் எல்லாம் சேர்ந்து ஒரு மொக்கை ஷார்ட் பிலிம் எடுத்திருக்கோம். எடிட்டிங் போய்கிட்டு இருக்கு. 
-----------------------------------------------------------------------------------------------------------------
நிறைய பரபரப்புக்கு மத்தியலா எலெக்ஷன் முடிஞ்சு போச்சு, யாருக்குமே மெஜாரிட்டி கிடைக்காதுன்னு நினைக்கறேன். முதல் முறையா ஓட்டு போட்டேன். சல்பியா முடிஞ்சிருச்சு. 
------------------------------------------------------------------------------------------------------------------
பாலாவோட அவன் இவன் படத்துல, சூப்பர் சிங்கர்ல பாடின பிரியங்கா, ஸ்ரீ நிஷா, நித்தியஸ்ரீ மூணு பேரையும் ஒரு பாட்டுல, பாட வெச்சிருக்காங்க. பாட்டோட பிரிவியூ amazon.comல இருக்கு. இப்போதைக்கு பிரியங்கா குரல் மட்டும்தான் கேட்குது. பொண்ணு மிரட்டிருக்கு. கேட்டுப் பாருங்க.

Wednesday, January 26, 2011

மற்றும் பல (26/01/2011)

பொங்கலுக்கு வந்த படங்கள்ல, ஆடுகளமும் காவலனும் பிடிச்சிருந்துது. சிறுத்தைல காமெடி நல்லா இருந்துச்சு. ஆனா tiring. ஒரு கட்டத்துக்கு மேல அந்த சில்லறைத்தனங்களை பொறுத்துக்க முடியலை. காவலன், விஜயோட நடிப்புக்காகவே ரெண்டாம் முறை பார்த்தேன். இதுவரைக்கும் எந்த விஜய் படத்தையும் ரெண்டு முறை தியேட்டர்ல பார்த்த்ததில்லை. முக்கியமா அந்த பார்க் சீன், "எனக்காக கொஞ்சம் வேண்டிக்குங்கனு சொல்லும்போது, ஆல் தி பெஸ்ட் சொல்ல மாட்டீங்களா"ன்னு கேட்கும்போதும், நிஜமாவே நல்லா இருந்துச்சு. (காவலனின் கோ.பா.சே ரேஞ்சுக்கு மாறிட்டனோ??)
------------------------------------------------------------------------------------------------------------------
யுத்தம் செய் படத்துல இருக்கற அந்த ஒரே ஒரு பாடலை ஒளிபரப்பும்போது பார்த்தேன். அமீர் செம்மையா ஆடிருக்காரு. இவருக்குள்ள இப்படியொரு டான்சாரானு ஆச்சரியமா இருந்துச்சு. அடுத்த ஹிட்டு பாட்டு ரெடி. செவ்வாய் கிரக புகழ் சாரு அவர்கள், மொத்தம் அஞ்சு செகண்ட் வராரு. அவரோட விரல் நல்லா டான்ஸ் ஆடிருக்கு.
------------------------------------------------------------------------------------------------------------------
 ரொம்ப கஷ்டப்பட்டு, நேரம் ஒதுக்கி, ஒரு வழியா, கடைசி நாள், புத்தக கண்காட்சிக்கு போயிட்டு வந்தேன். என்னோட ஒரே நோக்கம், சுஜாதாவோட எல்லா புத்தகங்களையும் கொஞ்சம் கொஞ்சமா வாங்கணும்ங்கறது. இந்த முறை குறு நாவல்கள் இரண்டு, மூணாம் தொகுதிகள், எப்போதும் பெண், ரத்தம் ஒரே நிறம், (என் தொலஞ்சு போன) கனவுத் தொழிற்சாலை மற்றும் திரைக்கதை எழுதுவது எப்படி புத்தகங்களை வாங்கினேன். நம்ம கேபிளாரோட சினிமா வியாபாரம், ரொம்ப நேரம் தேடிகிட்டு இருந்தேன். நமக்கு தான் பார்வை கீழயே போகாதே ;). அந்த புத்தகம், கீழ் வரிசைல, கடைசில அடுக்கிருந்தாங்க. வாங்கினேன். என் அண்ணன் சுவாரசியாம படிச்சிகிட்டு இருக்கான்.
------------------------------------------------------------------------------------------------------------------
சில சினிமா சம்மந்தப்பட்ட ஆட்களை பேட்டிக்காக சந்திச்சேன்... அங்க கிடைச்ச tidbits
  • பாரதிராஜா அடுத்து, தென்கிழக்கு சீமையிலே ஒரு அப்பனும் ஆத்தாளும், அப்படின்னு ஒரு படம் எடுக்க போறாராம். அவருடைய கனவு படம், குற்ற பரம்பரையை கண்டிப்பா எடுப்பேன்னும் சொன்னார்
  • காவலன் படத்தோட இன்னொரு கதாநாயகி மித்ரா குரியன், நல்லாவே தமிழ் பேசறாங்க. ரொம்ப அப்பாவியா, வெள்ளந்தியா இருக்காங்க. இன்னும் எவ்வளவு நாளைக்குன்னு பார்க்கலாம்.
  • நடிகை ராதாவோட மகள் கிருத்திகா, 12ஆம் வகுப்பாம். பார்த்தா அப்படி தெரியலை. 
  • 3 இடியட்ஸ் பத்தின கேள்விகளுக்கு, டைரக்டர் ஷங்கர், ரொம்ப மழுப்பாலனா பதில்களே தந்தார். என்ன நடக்குதுன்னு புரியலை.
  • வைரமுத்துவோட வீடு, அடேங்கப்பானு இருக்கு. விவரிக்க வார்த்தையே இல்லை. ரொம்ப நல்லா பேசினார்.
  • பிரபல புகைப்படக் கலைஞர் ஜி வெங்கட்ராமன், காலேண்டர்னு ஒண்ணு போட்டுருக்காரு. நடிகர், நடிகைகள, அந்தக் கால வண்டிகளோட சேர்த்து போட்டோ எடுத்துருக்கார். இவ்வளவு கவனிச்சஅவங்க, காலெண்டர்ல வெறும் தேதிகள் மட்டும்தான் இருக்குனு கவனிக்காம விட்டுட்டாங்க. நாட்கள் இல்லவே இல்லை. அப்பறம் என்ன ______கு இதை காலேண்டர்னு சொல்றாங்க???
 ------------------------------------------------------------------------------------------------------------------
ஐபிஎல்  ஏலம் ரொம்ப சுவாரசியமா இருந்துச்சு. ஏலம் விட்ட ரிசர்ட் ஹாட்லி பிரமாதாமா கொண்டு போனாரு. பார்க்கும்போது இருந்த ஒரே ஒரு வயத்தெரிச்சல், இந்த காசெல்லாம் எதாவது நல்ல காரியத்துக்கு பயன்படுத்தாம, இப்படி கேவலமா செலவழிக்கராங்களேன்னு தான். ஒரு பக்கம் இந்திய ஏழை நாடுன்னு வேற காமெடி பண்ணிக்கிட்டு இருக்காங்க. எங்கடா வெச்சிருக்கீங்க எல்லா காசையும்??
------------------------------------------------------------------------------------------------------------------
 இந்த முறையும் ஆஸ்கர் பந்தயத்துல, நோலனை ஒத்துக்கிட்டாங்க. சிறந்த படத்துக்கான ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப் பட்டாலும், சிறந்த இயக்குனர்னு, நோலன் ப.படலை. என்ன டகால்டி நடக்குதுன்னு புரியலை. அட்லீஸ்ட் நோலனுக்கு, திரைக்கதைக்கும், படத்துக்குமான அவார்டாவது கிடைக்கணும். ஜெய் ஜக்கம்மா.
------------------------------------------------------------------------------------------------------------------
நண்பன் ஒருத்தன் ரொம்ப சின்சியரா காதலிச்சிகிட்டு இருந்தான். ரெண்டு பேருமே பயங்கர அன்யோன்யமா இருந்தாங்க. ரெகுலரா முகபுத்தகத்துல, நிறைய புகைப்படங்கள், வீடியோக்கள்னு போய்கிட்டு இருந்துச்சு. யார் கண்ணு பட்டதோ தெரியலை, இப்போ பிரிஞ்சிட்டாங்க. அதுல ரொம்பவே மனம் நொந்து போன நண்பன், அந்த பெண்ணை திட்டி நிறைய ஸ்டேட்டஸ் அப்டேட் பண்ணிக்கிட்டு இருக்கான். இதை பார்த்த அப்பறம், நான் அடிக்கடி பாக்கற ஒரு பிரபல sms தான் நினைவுக்கு வந்துச்சு


காதலில் தோற்ற ஆணின் மனதின் புண்பட்ட வார்த்தைகள்
அவ ஒரு தேவ____ மச்சி....

நான் இப்போதைக்கு அப்பீட்டு...
     

Thursday, December 30, 2010

மற்றும் பல (30/12/2010)

கடைசி ரெண்டு மூணு வாரத்துல, நிறைய சினிமா ஆட்களைப் பார்த்துட்டேன். கிடைக்கற சாக்குல ஃபோட்டோவும் எடுத்து, சும்மா ஸீனுக்கு ஃபேஸ்புக்கல போடறேன். சும்மா சொல்லக்கூடாது, நல்ல வரவேற்பு...
 ------------------------------------------------------------------------------------------------------------------
மன்மதன் அம்பின் சர்ச்சைக்குரிய பாடலை நீக்க மாட்டேன்னு அறிவிச்ச அன்னைக்கு சாயங்காலமே நீக்கப்படும்னு அறிவிச்சது செம்ம காமெடி. கமலை கண்மூடித்தனமாக ஆதரிக்கும் ரசிகர்களும், அடுத்த எலெக்‌ஷன்ல திமுகவுக்கு ஓட்டு போடற ஆட்களும் ஒரே மாதிரிதான். இவங்க ரெண்டு பேருக்குமே என்ன சொன்னாலும் புரியாது, உரைக்காது. அதனால, இப்படிப்பட்ட ஆட்களோட விவாதத்துல இறங்காதீங்க.
------------------------------------------------------------------------------------------------------------------
 இப்பவே சிறந்த படத்துக்கான ஆஸ்கார் எந்தப் படத்துக்குப் போகும்னு பேச ஆரம்பிச்சுட்டாங்க. சமீபத்துல வந்த ப்ளாக் ஸ்வான் அப்படிங்கற படத்துக்கும் வாய்ப்பு இருக்கறதா பேசிக்கறாங்க. எனக்கென்னமோ இன்செப்ஷன் படத்துக்கு கொடுக்கலாம்னு தோணுது. ஏற்கனவே இருக்கறத வெச்சி ஒண்ணும் பண்ணாம, புதுசா ஒரு விஷயத்தை உருவாக்கி, அதை சிக்கலாக்கி, மக்களுக்கு புரியறாமாதிரி தந்து, அவங்களை யோசிக்கவும் வெச்ச படம் இது. வேற என்ன தகுதி எதிர்பார்க்கறாங்கன்னு தெரியலை. ஆஸ்கார் கமிட்டிக்கும், இயக்குனர் நோலனுக்கும் ஆகாதுன்னு வேற பேசிக்கறாங்க. ம்ம்ம், பொறுத்திருந்து பார்ப்போம்.
------------------------------------------------------------------------------------------------------------------
இயக்குனர் சங்க விழா ஒண்ணு வெச்சாங்க. மொக்கையா டான்ஸ், பாட்டுனு போய்கிட்டு இருந்த விழாவுல, அப்பப்போ யாராவது வந்து கலகலப்பாக்குனாங்க. ஆனா, ராஜாவும், பாராதிராஜாவும் பேசினது, சகிக்கலை. ராஜா இன்னும் ஒரு குழந்தை மாதிரியே சண்டை போடுறத பார்க்கும்போது மகேந்திரன் சார் சொன்னது தான் ஞாபகம் வருது. பாரதிராஜாவும் சளைக்காம சண்டை போட்டாரு. ரெண்டு பெரிய மனுஷங்க இப்படி பண்ணது, நல்லாவே இல்லை. அதே நேரத்துல, யுவன், வெங்கட் பிரபு, லிங்குசாமி, விஷ்ணுவர்த்தன் மேடைல ஜாலியா பேசிகிட்டதைப் பார்க்க நல்லா இருந்த்துச்சு. Little Girls are wiser than men அப்படிங்கற கதையும் ஞாபகம் வந்துது. கடைசி வரைக்கும் ரஜினி இண்டர்வியூவை போடாம ஏமாத்திட்டாங்க. :(
------------------------------------------------------------------------------------------------------------------
புதுசா ஆரம்பிச்சிருக்கற தேவியின் டால்பி 3டி, டிக்கெட் காசு போக 30ஓவாயும் கண்ணாடிக்கு கொடுக்கணுமாம். அங்க எந்த 3டி படமும் பார்க்க வேணாம்னு இருக்கேன்.
------------------------------------------------------------------------------------------------------------------
டிஸ்னியின் Tangled படம், இந்தியாவுல எப்போ ரிலீஸ் ஆகும்னு யாராவது கேட்டு சொல்லுங்க.
------------------------------------------------------------------------------------------------------------------
சினிமா மாதிரியே, சீரியலும் எடுத்தா நல்லா இருக்கும்னு பல காலமா சொல்லிகிட்டு இருக்கேன். அதுவும் பிலிம்ல எடுத்து, அதே தரத்துல கொடுத்தா கண்டிப்பா வரவேற்பு இருக்கும்னு நினைச்சேன். நான் நினைச்சதை, இயக்குனர் கவுதம் மேனன் பண்ணப்போறாரு. சமீபத்துல கொடுத்த ஒரு பேட்டிலதான் இத சொன்னாரு. அவருடைய ஃபோட்டான் கதாஸ் நிறுவனமே தயாரிக்கற இந்த டி வி சீரிஸ், ஏ ஆர் ரகுமானின் இசைல இருக்கப்போகுது. இன்னும் எந்த சேனல்னு முடிவு பண்ணலியாம். CSI, Friends ரேஞ்சுல, தமிழ்ல ஒரு சீரியல்னு நினைக்கவே நல்லா இருக்கு.
------------------------------------------------------------------------------------------------------------------
நண்பர்கள் சேர்ந்து  http://sa-pa-sa.blogspot.com/ அப்படின்னு, ஒரு இசை சம்பந்தப்பட்ட blog ஆரம்பிச்சிருக்கோம். படிச்சுப் பாருங்க..

Wednesday, December 29, 2010

நாலு படம் - நாலு பத்தி

இந்த மாதம் பார்த்த நான்கு படங்களைப் பற்றிய என் எண்ணங்கள்...

ஈசன்
எதிர்பார்ப்பு இல்லாமல் பார்த்திருந்தால் நன்றாக இருந்திருக்குமோ என்று பார்த்த பிறகு நினைத்தேன். சுப்ரமணியபுரம் பார்க்கும்போதும், கிளைமாக்ஸ் வரை, என்ன ஒரே வெட்டு குத்து, என சலித்துக்கொண்டேன். கிளைமாக்ஸ் உண்மையாகவே அதிர்ச்சியடைய வைத்தது. இந்தப் படத்திலும் அப்படி எதாவது இருக்குமென, ஐந்து வயது குழந்தைகூட யூகிக்க்கூடிய வகையில் அமைந்திருந்த கதையை, பார்த்துக் காத்திருந்தேன். கடைசி வரை ஒன்றும் வரவில்லை. பழிவாங்கும் ஆள் மட்டும் புதுசே தவிர, காரணங்கள் எல்லாம் ஒன்று தான். ஒரு சில வசனங்களைத் தவிர்த்துப் பார்த்தால், (எனக்கு) ஏமாற்றமே.

Easy A
தன இமேஜை காப்பாற்றிக்கொள்ள, ஹீரோயினி, தான் ஒருவனோடு டேட்டிங் போனதாக தன நண்பியிடம் சொல்ல, அதை ஒட்டுக் கேட்கும் இன்னொரு பெண், பள்ளி முழுவதும் அதைப் பற்றி பரப்ப, பிறகு தனது gay நண்பனின் இமேஜைக் காப்பாற்ற, ஒரு பார்டியில், மூடிய கதவிற்கு அந்தப்பக்கம், அவனோட செக்ஸ் வைத்துக்கொளவது போல் பாவனை செய்ய (பாய்ஸ்), இமேஜைக் காப்பாற்றிக் கொள்ள நினைக்கும் அத்தனை பையன்களும், இவளுடன் செக்ஸ் வைத்துக்கொண்டதாய், சிலர் இவளின் ஒப்புதலுடனும், சிலர் பொய்யும் சொல்ல ஆரம்பிக்க, இவளின் இமேஜ் என்னவாகிறது என்பதை, நிறைய நகைச்சுவை, கொஞ்சம் செண்டிமெண்ட் + கொஞ்சம் ரொமான்ஸ் கலந்து சொல்லியிருக்கிறார்கள். ஹீரோயினி எம்மா ஸ்டோனின் தெளிவான நடிப்பு, படத்தைக் காப்பாற்றுகிறது. நல்ல பொழுதுபோக்கு.

The Social Network
இந்தப் படம், பேஸ்புக்கை கண்டுபிடித்த மார்க் ஸுக்கர்பெர்கின் கதை என சொல்லப்படுகிறது. ஸுக்கர்பெர்கின் ஒன்றிரண்டு பேட்டிகளைப் பார்த்த பிறகு, இந்தப் படத்தைப் பார்க்கும் ஆவல் அதிகமானது. ஆரம்பம் முதல், முடிவு வரை, படம் எந்த விதத் தோய்வும் இன்றிச் செல்கிறது. பைட் கிளப் இயக்குனர் ஃபிஞ்சரின் மேல் வைத்திருந்த நம்பிக்கை வீணாகவில்லை. நடித்த அனைவருமே மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்கள். முக்கியமாய் ஹீரோ ஜெஸ்ஸி ஐஸன்பெர்க், கிட்டத்தட்ட அப்படியே ஸுக்கர்பெர்கின் உடல் மொழியை வெளிப்படுத்தியிருக்கிறார். ஜஸ்டின் டிம்பர்லேக் மற்றும் கார்பீல்டும் நன்றாகவே நடித்திருந்தார்கள். அருமையான திரைக்கதை, வசனங்கள். (ஸப்டைடில்ஸாய நமஹ:) நல்ல திரைப்படங்களைப் பார்க்க விரும்பும் அனைவரும் பார்க்க வேண்டிய படம்.

மன்மதன் சொம்பு
உலகநாயகன், கலைஞானியின் படைப்பை விமர்சனம் செய்யும் அளவு எனக்குத் தகுதியிருக்கிறதா எனத்தெரியவில்லை. அதனால், எதுவும் சொல்வதற்கில்லை..
என்ன சார், ஃபர்ஸ்ட் காபி பார்த்தே உஷார் ஆகிட்டீங்க போல??

Friday, November 5, 2010

மற்றும் பல (05/11/2010)

ஒரு பேட்டிக்காக, இயக்குனர் மகேந்திரனை சந்திக்க நேரிட்டது. ரொம்பவே எளிமையான ஆளாக இருக்கிறார். பேட்டி முடிந்தும் ஒரு அரை மணி நேரம், என்னையெல்லாம் மதித்து, பேசிக்கொண்டிருந்தார். தமிழ் சினிமா டூயட்டுகளால்தான் அழிகிறது எனக் கவலைப்பட்டார். ஹோம் சினிமா என்ற புதிய முறையில் படம் எடுப்பதாகவும், அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது என்றும் சொன்னனர். கேபிளார் சொன்னது நினைவிற்கு வந்து, மௌனராகம் - நெஞ்சத்தை கிள்ளாதே படங்களைப் பற்றி கேட்டேன். மணிரத்னம், இவரிடம் ஒப்புதல் பெற்ற பிறகே, திரைக்கதையை எடுத்துக் கையாண்டதாகச் சொன்னார். வாசல் வரை வந்து வழியனுப்பிவிட்டு, நேரம் கிடைத்தால் அவ்வபோது வீட்டிற்கு வருமாறு சொன்னார்.
நல்ல மனிதர்...

------------------------------------------------------------------------------------------------------------------
 என் வேலை, முக்கால்வாசி பேட்டிகளைச் சார்ந்தே இருப்பாதால், நிறைய மனிதர்களை சந்திக்க நேரிடுகிறது. பெரும்பாலானோர் பேசுவதில் அவ்வளவாக தயக்கம் காட்டுவதில்லை. சிலர் மைக்கைப் பார்த்தாலே வெட்கப்படுகிறார்கள். சிலர் அதிகமாகவே பேசுகிறார்கள். பேசும்போதே நிறைய பேருக்கு, முழுத் தமிழா, ஆங்கில கலப்பு இருக்கலாமா, செந்தமிழா, சென்னைத்தமிழா எனப் பல குழப்பங்கள் இருக்கிறது.  இதில் முக்கியமாக, சில அரசாங்க அதிகாரிகள், பேசுவதற்கு நிறையவே தயங்குகிறார்கள் / பயப்படுகிறார்கள்.
கருத்து சுதந்திரம்.
------------------------------------------------------------------------------------------------------------------
Legend of the Guardians: The Owls of Ga'Hoole என்கிற படத்தைப் பார்க்க நேரிட்டது. டிரைலரைப் பார்த்து ஏமாந்து போனேன். ரொம்பவே சுமாரான குழந்தைகள் படம். குழந்தைகளும் ரசிப்பார்களா எனத் தெரியவில்லை. மழையில் நனைந்து, ஐஸ்க்ரீம் சாப்பிட்டு, குதித்து விளையாடும் குறும்புக்கார ஹீரோயினி நினைப்பில் இருக்கும் பெண்களுக்கு பிடிக்கலாம் (oh!!!!!!!!!!!!! so cute la?!?!?!?!?!?!?!?!). படத்தில் எனக்கு பிடித்த ஒரே விஷயம், வெகு சில இடங்களில் இருக்கும் நல்ல வசனங்கள். (Just because it is sung, it is not a song). சப்டைடில்ஸ் வேறு போட்டார்கள். கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. சம்பிராதய 3டியால், திரை மங்கலானதுதான் மிச்சம்.
படத்திற்கு Rs. 135  (ஆன்லைன் புக்கிங்) +
3d கண்ணாடி Rs.20 +
பார்க்கிங் (கொள்ளை) Rs. 40 -
ஆக மொத்தம் Rs. 195 காலி.
வீண் செலவு
------------------------------------------------------------------------------------------------------------------
____த்தனையாவது முறையாக, நான் எழுதலாம் என்று நினைத்ததை அண்ணன் கேபிளார் எழுதியிருக்கிறார். மழையால் சாலைகள் பாதிக்கப்படுவதைப் பற்றி எழுதலாம் என நினைத்தேன். முந்திக்கொண்டார், வழக்கம் போல. தினமும் கண்டிப்பாக செய்திகள் பார்க்க வேண்டியிருப்பதால், இந்த மழை - சாலை செய்தியை பல நாட்கள் தினசரிகளில் பார்த்தேன். மேயர், வீராப்பாக, இந்தப் பருவ மழைக்காலத்தை எதிர்கொள்ள அனைத்து சாலைகளும் நன்றாக தயார் செய்யப்படும் என பல பேட்டிகள் அளித்து வந்தார். எதுவும் செய்தார்ப் போல் தெரியவில்லை. வண்டி ஓட்டும்போது, எழுத வேண்டும் என நினைத்தாலே பேனா முனை உடைகிறது. அவ்வளவு மேடு பள்ளம்.
கூட்டத்தில் கூடி நின்று, கூவிப்பிதற்றலன்றி.

------------------------------------------------------------------------------------------------------------------
நோக்கியா தொழிற்சாலையில் இறந்து போன ஒரு பெண்ணைப் பற்றிய செய்தியை படிக்கும்போது அவ்வளவு கோபம் வந்தது. இயந்திரத்தில் சிக்கிய பெண்மணி, கிட்டத்தட்ட அரைமணிநேரம் அதிலேயே தவித்திருக்கிறார், உற்பத்தி பாதிக்கப்படும் என்பதால், சுற்று முடிந்த பிறகே இயந்திரம் நிறுத்தப்பட்டது. இங்கே என்ன நடக்கிறது என்று புரியவில்லை. வழக்கம் போல இந்த சம்பவம் மூடி மறைக்கப்படும்.
கலி
------------------------------------------------------------------------------------------------------------------
இரண்டு பதிவுகளுக்கிடையில் இருக்கும் இடைவேளை அதிகமாகிக்கொண்டே போகிறது. அடிக்கடி பதிவ முடியாமல் போவதில் வருத்தம்தான். இருந்தாலும், என்ன செய்ய. என் வேலை அப்படி. என் 47 தொடர் ரசிகர்களிடமும் + ஆயிரக்கணக்கான தொடராத ரசிகர்களிடமும் மன்னிப்பினைக் கோருகிறேன். என் எழுத்துக்களைத் தொடர்ந்து வாசிப்பதற்கு மிக்க நன்றி.
------------------------------------------------------------------------------------------------------------------
ஹாலிவுட் பாலாவைக் காணவில்லை.
காந்திய சுட்டுட்டாங்க.

Sunday, September 26, 2010

மற்றும் பல... (26/9/2010)

ஒரு வழியா வேலை கிடைச்சிடுச்சுனு சொல்ல மாட்டேன். ஏன்னா, நான் அவ்வளவு தீவிரமா தேடி, எல்லாம் எடத்துலயும் NO VACANCY போர்ட் பார்த்து, காண்டாகி, வேலையே கிடைக்கலைன்னு கத்தலை. என்னோட முதல் இன்டர்வியூ  இதுதான். அதுலயே வேலை கிடைச்சிடுச்சு. அதனாலயே ரொம்ப சந்தோஷம். காலை முதல் இரவு வரை அயராது உழைக்கர்தால, பதிவ டைம் தேட வேண்டியதா இருக்கு. வழக்கம் போல, எதாவது ஒரு விஷயத்தை பத்தி எழுதனும்னு நினைக்கும்போது, ஒண்ணு வேற யாராச்சும் எழுதிருவாங்க, இல்லை எனக்கு மறந்துரும். அது மாதிரிதான் எந்திரன் பத்தி எழுத நினைச்சதும்....
------------------------------------------------------------------------------------------------------------------
காலைலதான் எழுதலாம்னு நினைச்சேன், நம்ம கேபிள் முந்திகிட்டாரு. ஆனா, அவரு எழுதின பாயிண்ட் of வியூ வேற. நான் எழுத நினைச்சது, இந்த தியேட்டர்கள் பண்ற அநியாயத்தை பத்தி. சென்னைல முக்கால்வாசி தியேட்டர்கள்ள, முதல் மூணு நாள் டிக்கெட்டையும் கார்பரேட்டுக்கு குடுத்துட்டாங்க. என்ன ஒரு அநியாயம். நிறைய காசு தரவங்களுக்கு தான் டிக்கெட்டுன்னு, இது என்ன ஏலத்துல எடுக்கறா மாதிரி. இன்னொரு முக்கியமான விஷயம், முதல் மூணு நாள் டிக்கெட்டு மாயாஜால்ல இருந்தாலும், அங்க அந்த மூணு நாளைக்கும், ரூ.320 தான் டிக்கெட் ரேட். காம்போ ஏதொ சாப்ட தராங்க. அது கம்பல்ஸரியாம். செம்ம டென்ஷன் ஆகிட்டேன். மீதி டிக்கெட் இருக்கற தியேட்டர்கள் எல்லாம் ரொம்ப தூரத்துல இருக்கு, இல்ல, அட்டு தியேட்டரா இருக்கு. இந்த அநியாயத்தை தட்டி கேட்க யாருமே இல்லையா.
p.s. படம், முதல் நாலு நாளைக்கு எல்லாம் இடத்துலையும் fullu. இப்பவே  வெற்றி விழா கொண்டாடிடலாமே ???   
------------------------------------------------------------------------------------------------------------------
 வேலை ஆரம்பிச்ச முதல் வாரத்துலயே, பசங்க படக்குழுவைப் பேட்டி எடுக்க வாய்ப்பு கெடச்சுது. சசிகுமார் நிஜமாவே சூப்பர் ஆளு. ரொம்ப எளிமையா இருந்தாரு. பேசறாரு. செம்ம காஷுவலா இருக்காரு. எல்லாரும் பார்த்து கத்துக்கணும்...
------------------------------------------------------------------------------------------------------------------
நண்பர்கள் சிலர் முதுகுல குத்துவாங்கன்னு சொல்லுவாங்க. எனக்கு தெரிஞ்ச சில பேர் முகத்துலேயே குத்திட்டாங்க. பல நாள் பழகின நட்பை, எப்படி நொடியில தூக்கிப் போட்டு அசிங்கப் படுத்தமுடியுதுன்னு தெரியலை. நம் முகத்துக்கு நேர நம்மை பத்தி தப்பா சொன்னா கூட பரவாயில்லை, மத்தவங்க கிட்ட, ஏதொ நாம கொலை குத்தம் பண்ண ரேஞ்சுக்கு பேசறது எல்லாம் சுத்த பத்தாம் பசலித்தனம். அதுவும் அவங்க குடுக்கற justifications எல்லாம் கேட்கணுமே, அட அட அட, ரொம்பவே அருமையா இருக்கும். அது ஏன் கூட இருக்கற இவ்வளவு நாள் நம்ம குறைகள் இவங்களுக்கு தெரியாம, பிரியக்  காரணங்கள் தேடும்போது மட்டும் கிடைக்குதுன்னு தெரியலை. இதை எல்லாம், எக்கச்சக்க டைம் + எனர்ஜி செலவு பண்ணி, இவங்களுக்காக உதவின சமயங்கள்லையே சொல்லிருந்தா, அப்பவே கொஞ்சம் நம்மளோட பாசத்தை கட்டுப் படுத்தியிருக்கலாம். இப்ப, ஏமாற்றமும், கண்ணீரும்தான் மிச்சம். அவங்கள சொல்லி ஒண்ணும் ஆகப்போறதில்லை, என்னை உதைக்கணும். இவங்களையெல்லாம் நான் ஒதுக்கப்போரதில்லை. எனக்கு நல்ல பாடங்கள கத்து கொடுத்திருக்காங்களே. அதனால, இன்னும் என் நண்பர்களாதான் பார்க்கறேன். இதை படிக்கற என் நண்பர்கள் சிலருக்கு, உங்களை குத்தம் சொல்றா மாதிரி இருந்தா, அதுக்கு நான் பொறுப்பில்லை. நான் பொதுவா சொன்னேன்...
------------------------------------------------------------------------------------------------------------------
இந்தியா வரும் லண்டன் லேன்சை வருக வருக என வரவேற்கிறேன்....சீக்கரமா வந்து ட்ரீட் குடுங்க பாஸு..
------------------------------------------------------------------------------------------------------------------
சென்ற வாரங்கள்ல, இன்ஸோம்ன்யா, அப் இன் தி ஏர் மற்றும் பாஸ் என்கிற பாஸ்கரன் படங்கள் பார்த்தேன். இன்ஸோம்ன்யா சூப்பரா இல்லைனாலும், நல்லா இருந்துச்சு. நம்ம அல்-பசினோ பின்னிட்டாரு. ராபின் வில்லியம்சும் நல்லா நடிச்சிருந்தாரு. அப் இன் தி ஏர் படம், கொஞ்சம் எதார்த்தத்தோட நல்லா இருந்தாலும், மொக்கையா முடிச்சிட்டாங்க. பாஸ், ரொம்ப நாள் கழிச்சு, தியேட்டரே வாய் விட்டு சிரிச்சிகிட்டே இருந்ததை பார்த்தேன். எல்லாரும் சந்தானத்தை பாராட்டினாலும், இப்படி ஈகோ எதுவுமே இல்லாம நடிச்ச ஆர்யாவுக்கு ஒரு சபாஷ். இதுலயும் படத்தோட முடிவு மொக்கை...
------------------------------------------------------------------------------------------------------------------
எஸ்கேப் சினிமாஸ்ல couple seatனு  சொல்லி ஏமாத்தறாங்க (எதுவும் விபரீதமா நினைக்காதீங்க). அதுவும், அறுவது ரூவா பார்க்கிங்குக்கே போயிடுது. ஆனா, எப்பவும் கூட்டம் அள்ளுது. கவனிக்க, இந்தியா ஏழை நாடு.
------------------------------------------------------------------------------------------------------------------
காமன் மேனோட காசையெல்லாம், காமன்வெல்த்னு, வெளுத்துக்கட்டி, ஊழல்ல புது சாதனையே பண்ணிருக்காங்க. மீடியாவோட எந்த குற்றச்சாட்டுக்கும், கேள்விக்கும் ஒழுங்க பதில் சொல்லாம, தட்டி கழிக்கறாங்க. இப்ப, இத வெச்சு பார்வர்ட் ஜோக் எல்லாம் வருது. நாட்டுக்கே வெட்க கேடான இத வெச்சி, ஒரு கூட்டம் உட்கார்ந்து, காமெடி பண்ண யோசிச்சிகிட்டு இருக்கு. ஊழல் பண்றவங்களுக்கு, இவங்களுக்கும், பெரிய வித்தியாசம் ஒண்ணும் தெரியலை. ரெண்டு பேருமே பொறுப்பில்லாதவங்கதான். இப்ப முடிஞ்ச ரமணா படத்துல காமிச்சா மாதிரி, இவனுங்க எல்லாரையும் எதாவது பண்ணனும்னு தோணுது... ஓ@!#@ தேவ@!#$%(&%)$&)....
------------------------------------------------------------------------------------------------------------------
அப்பா டக்கருன்னா என்ன????

Sunday, May 30, 2010

மற்றும் பல...

இனிமே, பதிவு எழுத நேரமே இல்லைன்னு சொன்னா, அடுத்த நிமிஷமே மக்கள், "ஆமா, நீங்க ரொம்ப பிஸி, அதான, அட போயா"னு கத்தறாங்க. அதனால, இனிமே அப்படி சொல்ல வேணாம்னு பாக்கறேன். இருந்தாலும், திடீர் திடீர்னு காணாம போறதுக்கு காரணம் இருக்கணும் இல்லையா, அதுவும் இல்லாம என் ரசிகப் பெருமக்கள் வேற வருத்தப்படுவாங்களா, அதனாலா ஒரு சின்ன விளக்கம் கொடுக்க கடமை பட்டிருக்கேன்..

பதிவு எழுதாம இருக்கா இப்போ ரெண்டு காரணங்கள் இருக்கு. ஒண்ணு, சின்னதா நான் ஒரு internship பண்ணிக்கிட்டு இருக்கேன். அடுத்து, i just run of ideas a bit fast. தொரை இங்கிலீஷ் எல்லாம் பேசுதேன்னு நினைக்காதீங்க, தமிழ்ல கரிக்டா சொல்ல முடில. மனசுல இருக்கறத, சரியா பதிவு வடிவத்துக்கு மாத்த முடியல. வேற சில பிரச்சனைகளும் இருக்கு. ஆனா, அதெல்லாம் ஒரு நாலு வருஷம் கழிச்சு சொல்றேன், ஞாபகப்படுத்துங்க.
------------------------------------------------------------------------------------------------------------------
திரை விமர்சனப் பதிவுகள், ரொம்பவே clicheவா ஆகிட்டு வருது. வார்த்தைப் பிரயோகம், பாராட்டும்/திட்டும் விதம், எல்லாமே ஒரே மாதிரியா இருக்கு. என்னோட சில விமர்சனங்களும் அப்படி மாறி வர்றத உணர்ந்து தான், ஒரு பத்தில விமர்சனம் பண்ணலாம்னு முடிவுக்கு வந்தேன். இருந்தாலும், இன்னமும் நம்ம கேபிள் ஷங்கர் சாரோட பதிவுகளுக்கு, ஹிட்ஸ் குவியுது. அவர், சத்யம் தியேட்டர், சன் டிவி, ஏ.ஆர்.ரகுமான் மாதிரி ஆகிட்டார்.
------------------------------------------------------------------------------------------------------------------
சுறாவோட தாக்குதல்ல இருந்து தப்பிச்சிட்டேன். வழக்கம் போல விஜய், "படம் ஹிட்டு"ன்னு பெட்டி குடுக்க, அடுத்த நாளே ரெட் கார்ட் போடப் போறாங்கன்னு செய்தி வருது. இதையே படமா எடுத்துருக்கலாம், செம்ம காமெடியா இருந்திருக்கும் and இரும்புகோட்டை முரட்டு சிங்கம், எனக்கும் ரொம்ப புடிச்சுது. முக்கியமா, அந்த translator சாம்ஸ் மற்றும் பாஸ்கர், காட்சிக்கு காட்சி கோல் அடிக்கறாங்க. பாடல்கள் ஒண்ணும் வேலைக்கு ஆகல. மறுபடியும், ஜி.வி.பிரகாஷ்சுமார் தான். முக்கியமா, குழந்தைகள் படத்துல, அந்த லக்ஷ்மி ராய் பாட்டு, totally irrelevant...
------------------------------------------------------------------------------------------------------------------
இதுக்கு முன்னாடி, என் ஆங்கில அறிவுக்கு வந்த சோதனையைப் பத்தி எழுதியிருந்தேன். ஆனா, இப்போ யோசிச்சுப் பார்க்கும் போது, இந்த இரண்டு வருடங்கள்ல, என் ஆங்கிலம் கொஞ்சம் நல்லாவே improve ஆகிருக்குன்னு நினைக்கறேன். சில வார்த்தைகள், வாக்கியங்கள், பீட்டர்ல மட்டுமே சிந்திக்க வருது. முக்கியமா, சில ஆங்கில வார்த்தைகளுக்கு இணையான தமிழ் வார்த்தை கிடைக்கவே மாட்டேங்குது. (and vice-versa). எப்படியோ, நானும், பீட்டர்ல கொஞ்சம் சீன் போட முடியும்னு நம்பிக்கை வந்திருக்கு. பார்க்கலாம், 'எதாவது' நடக்குதான்னு... ;)
------------------------------------------------------------------------------------------------------------------
வேலை இன்னும் கிடைக்கல, கிடைச்ச அப்பறம் கண்டிப்பா சொல்றேன்.
------------------------------------------------------------------------------------------------------------------
"உன் பிரச்சனைக்கு அவன் காரணமா, இல்ல இவன் காரணமா இல்ல அந்த பொண்ணு காரணமா"னு கேள்வி கேட்ட என் நண்பன் கிட்ட, சமீபத்தில் நான் உதிர்த்த தத்துவம்.. "நடந்தது, நடப்பது, நடக்கப் போவது, எல்லாத்துக்கும் என் எண்ணமும் செயலும் மட்டுமே காரணம். வேற யாரும் இல்லை. அதனால FV". (fv means freeya vidu). கரெக்டாதன சொல்லிருக்கேன். Sometime i get too philosophical you see.. :P..

இந்த நேரத்துல, வேற ஒரு காமெடி நினைவுக்கு வருது. போன வருஷம், என் பேரைச் சொல்லி, எடை பாக்கற மெஷின்ல, என் நண்பிகள் சில பேரு, சீட்டு எடுத்தாங்க, (என்ன பாசம் பாருங்க) அதுல என்ன போட்டிருந்துதுனா, "நீங்கள் சிந்தித்து கொண்டே இருப்பாதால், உங்களால் வாழ்க்கையில் முன்னேற முடியாது". இப்போ நினைக்கறேன், "So true"
------------------------------------------------------------------------------------------------------------------
நிறைய விஷயம் சொல்லிட்டேன்னு நினைக்கறேன். அடுத்த பதிவுக்கு கொஞ்சம் மிச்சம் வெக்கறேன். மீண்டும், மீண்டு வருக... இப்போதைக்கு நான் ஜூட்டு...

எங்க போயி சொல்லுவேன், என்னான்னு சொல்லுவேன்...

Friday, February 19, 2010

மற்றும் பல... (cinema special)

ஆயிரத்தில் ஒருவன் படத்தை நான் முதல் நாளே பாத்தாலும், அதற்கான விமர்சனம் எழுதனுன்னு எனக்கு தோணவே இல்லை. வழக்கம் போல நம்ம பதிவுலகத்துல, படத்தை பல பேர் கிழிச்சி தொங்க போட்டாலும், சில பேர் வாயார வாழ்த்தினாங்க. எல்லாருமே பொதுவா சொன்ன ஒரு விஷயம், இப்படி வித்தியாசமா சிந்திச்சு ஒரு படத்தை எடுத்த செல்வராகவனை பாராட்டியே ஆகணும்னு. எனக்குப் படம் ரொம்ப பிடிச்சிருந்துது. படம் ஆரம்பிச்ச அஞ்சாவது நிமிஷமே நம்மை படத்துக்குள்ள, டைரக்டர் எடுத்துட்டுப் போய்ட்டார். மொக்க சவுண்ட் இருக்குற சங்கம் தியேட்டர்லையே இப்படினா, சத்யம் தியேட்டர்ல இன்னும் நல்லா இருந்திருக்கும். முதல் பாதி வேகம், ரெண்டாவது பாதி சொதப்பல்னு நான் எந்த குறையும் சொல்லப் போறதில்லை. சில குறைகள் இருந்தாலும், எனக்குப் படம் மொத்தமுமே பிடிச்சிருந்துது.
------------------------------------------------------------------------------------------------------------------
அடுத்து, மறுபடியும், நான் ரொம்பவே ரசிச்ச, கோவா பத்தி பேச வேண்டியிருக்கு. படம் பார்த்து முடிச்ச உடனே சொன்னேன், வயசான ஆளுங்களுக்கு இந்த படம் பிடிக்காதுன்னு.  அதேமாதிரி, பல பதிவர்களுக்கு இந்த படம் பிடிக்கல. என்ன குறைய கண்டாங்கன்னு தெரியலை. படத்தை கண்டபடி கண்டம் பண்ணாங்க. வெங்கட் பிரபு, சவுந்தர்யா காசுல கூத்தடிச்சிருக்காரு, ரெண்டாவது பாதி சரியில்லை, blah blah blah. படம் பார்க்கும்போது எந்த குறையும் தெரியலை. எனக்கு மட்டும்தான் இப்படியான்னு பார்த்தா, என் நண்பர்கள் எல்லாருக்குமே படம் ரொம்ப பிடிச்சிருந்துது. முக்கியமா சில பொண்ணுங்களுக்கு, சம்பத் கேரக்டர் ரொம்ப பிடிச்சிருந்துது. ஒரு வேளை எங்களுக்கு படம் பார்க்க தெரியலியோ???
------------------------------------------------------------------------------------------------------------------
தமிழ் படம்னு ஒரு படம் வந்துருக்கு இல்லையா. எல்லாருமே சிலாகிச்சு, தலைல தூக்கி வெச்சு கொண்டாடினாங்க. நானும் ரொம்பவே எதிர்பார்த்தேன். நேத்து அந்த படத்தை பார்த்தேன். Surprisingly, என்னை அவ்வளவா இம்ப்ரெஸ் பண்ணலை. முதல் பாதி நல்லா இருந்துச்சு. இரண்டாவது பாதி ரொம்ப இழுவை. அதுவும் கிளைமாக்ஸ்ல, ஒவ்வொரு தடையா தாண்டி போறது, ரொம்ப மொக்கை. கண்டிப்பா படம் மோசம் இல்லை. நிஜமாவே பாராட்டப் படவேண்டிய முயற்சி தான். எல்லாருக்கும் செம்ம தில்லுதான். ஆனா, என்னால புரண்டு புரண்டு சிரிக்க முடியலை. சில காட்சிகள் எல்லாம், கண்டிப்பா இந்த படத்தை கலாய்ச்சே ஆகணும்னு திணிச்சா மாதிரி இருக்கு. இதோட பார்ட்-2 வந்தா எப்படி இருக்குன்னு பார்க்கணும். (வரவிடுவாங்களா, நான் எடுக்கறேன்...:)
------------------------------------------------------------------------------------------------------------------
இன்னிக்கு காலேஜ் டூர் விஷயமா டெல்லி போறேன். வர ஒரு பத்து நாள் ஆகும். ஏதாவது சுவாரசியமா நடந்தா, வந்து பதிவரேன். அதுவரை உங்களிடமிருந்து விடை பெறுகிறேன்... டாட்டா..... :)

  
ஒரு வேளை நகசுத்தியோ????

Wednesday, November 25, 2009

மற்றும் பல...

வெற்றிகரமா என்னோட மூணாவது செமஸ்டரும் முடிஞ்சு போச்சு. ரிசல்ட் வர இன்னும் ஒரு மாசமாவது ஆகும். அடுத்த ஒரு மாசம் வெட்டியா இருக்கலாமா, இல்ல internship ஏதாவது போகலாமான்னு யோசிச்சுகிட்டு இருக்கேன். நம்மளை நம்பி நிறைய பேர் இருக்கறதால, இந்த மாதிரி யோசிச்சு முடிவு எடுக்க வேண்டியதா இருக்கு. என்ன செய்ய..
--------------------------------------------------------------------------------------------------------------
என்னுடைய சில updates பதிவுகளுக்கு தான் இப்போ மற்றும் பல அப்படின்னு பெயர் மாத்திருக்கேன். எண்ணிக்கையில பார்த்தா, சென்ற வருடத்தை விட, இந்த வருடம் கொஞ்சம் கம்மியாதான் பதிவுகள் எழுதியிருக்கேன். சில சமயங்கள்ல, இந்த விஷயத்தை பதிவா போடலாமான்னு யோசிச்சாலும், அதை அழகா ஒரு வடிவத்துக்கு கொண்டு வந்து எழுத, நேரம் கிடைக்கறதில்லை. பெரும்பாலும் என் பதிவுகள் எல்லாமே, இரவு பத்து மணிக்கு மேல போட்டது. அடுத்த ஒரு மாசத்துக்காவது இந்த நிலைமை மாறும்னு நினைக்கறேன்.
--------------------------------------------------------------------------------------------------------------
கடந்த ஒரு மாதமா, facebook பித்து பிடிச்சு அலையறேன்(றோம்). முதல்ல நான் orkutல இருந்தாலும், FB எப்படியிருக்கு பாக்கலாமேன்னு உள்ள நுழைஞ்சா, நிஜமாவே மனுஷனை கட்டிப் போட்ருது. ஆர்குட்ட விட இதுல interface பளிச்சுன்னு இருக்கு. comments சுலபமா போஸ்ட் பண்ண முடியுது. Status messages ரொம்ப ஈசியா update பண்ண முடியுது. அதுலயும், உள்ள இருக்குற பல விளையாட்டுகளும், கேள்வி பதில்களும், சூப்பரா இருக்கு. என்னை மாதிரி பசங்க mafia warsலயும், எங்க கிளாஸ்ல இருக்குறா மாதிரி பொண்ணுங்க (பல பிஞ்சு மூஞ்சு பசங்களும்) farmville விளையாட்டுலயும் மூழ்கியிருக்கோம். போன மாதத்துல ஒரு நாள், ஆர்குட்டும் அதனோட interface மாத்தி ஒரு காமெடி பண்ணிருக்காங்க. புலியப் பாத்து சூடு போட்டுகிட்டக் கதையாதான் இருக்கு. செம்ம காமெடி. சிமிபிளா சொல்லனும்னா, facebook - சத்யம் தியேட்டர், ஆர்குட் - ஆல்பர்ட் தியேட்டர். இரண்டு தியேட்டருக்குமான ரசிகர்கள் இருந்துட்டு தான் இருப்பாங்க.ஆனா ஆல்பர்ட், எப்பவும் சத்யம் ஆக, சத்தியமா முடியாது.
--------------------------------------------------------------------------------------------------------------
சில மாதங்களுக்கு முன்னாடி, அண்ணன் சர்வேசன், பொன்னியின் செல்வன் மொத்த கதையோட சாராம்சத்தையும், அழகா ஒரு nutshell மாதிரி கொடுத்தார். நல்ல வரவேற்பும் கிடச்சுது. அதே மாதிரி நானும், ஹாரி பாட்டர் கதைகள சுருக்கி சொல்லலாமான்னு யோசிக்கறேன். எனக்கு ரொம்ப பிடித்த ஹாரி பாட்டர் கதைகள யார் எப்ப கேட்டாலும், சலிக்காம ரொம்ப ஆர்வமா அவங்களுக்கு சொல்லுவேன். அந்த கதை, படிப்பதற்கும், மத்தவங்களுக்கு விவரிப்பதற்கும் ரொம்ப நல்லா இருக்கும். என்ன சொல்றீங்க??    
--------------------------------------------------------------------------------------------------------------
2012 படத்தை இன்னும் இரண்டு முறை பார்க்கலாம்னு பிளான் பண்ணிருக்கேன். படம் நம்ம தமிழ் நாட்டையே ஒரு கலக்கு கலக்கிட்டிருக்கு. படத்துல, ஹீரோ தப்பிக்கும் ஒவ்வொரு காட்சிக்கும், மக்கள், ரஜினி வில்லன அடிக்கறா மாதிரி, கத்தறாங்க. அதுலயும், இந்தியா கடல்கோள் ஆகறத, mapla காட்றாங்க. அதுக்கே மக்கள் உணர்ச்சிவசப்படறாங்க. நான் முன்னாடியே சொன்னா மாதிரி, ஒரு அருமையான மசாலா படத்தை எடுத்து அதுல வெற்றியும் பாத்துட்டாங்க. இந்த படத்தை imaxல பார்த்தா இன்னும் நல்லா இருக்கும்ல?
--------------------------------------------------------------------------------------------------------------
 நம்ம ராதா மாதவன் அண்ணன், அவர் ப்ளோக்ல, புதுசா ஒரு சிறுகதைப்போட்டி அறிவிச்சிருக்கார். என்னையும் ஒரு மனுஷனா மதிச்சு கூப்பிட்டிருக்கார். நல்ல கதையா யோசிச்சிங். இதோ அந்த போட்டி விவரங்களுக்கான -->லிங்க்  
 --------------------------------------------------------------------------------------------------------------
பால்கி - இளையராஜா கூட்டணியில, பா பட பாடல்களும் அருமை. என்னதான் ராஜாவோட பழைய மெட்டுக்களை போட்டிருந்தாலும், இன்னும் அழகாவே இருக்கு. அதுவும் அந்த புத்தம் புது காலை prayer பாட்டும், ஹிச்கி ஹிச்கி பாட்டும் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. சந்தத்தில் பாடாத கவிதையோட இந்த வெர்ஷன்ல, live in italy வெர்ஷனோட பாதிப்பு கொஞ்சம் தெரியுது. தீம் மியூசிக்கும், அது ஒரு கனாக்காலம் படத்துல வந்ததைவிட, இங்க நல்லா பொருந்தியிருக்கு. மொத்தத்துல, ராஜா ரசிகர்களுக்கு, ரொம்ப நாள் கழிச்சு ஒரு நல்ல விஷயம். ஒரு சின்ன trivia.இயக்குனர் பால்கி தான், walk and talk ஐடியா செல்லுலாரோட விளம்பர இயக்குனர். அந்த விளம்பரத்துல வர இசையும், இளையராஜாவோட ஒரு பழைய கன்னட பாட்டுதான். இந்த பாட்டு, மணிரத்னமோட முதல் படமான, பல்லவி அனு பல்லவில வருது. லிங்க் -->இங்க
------------------------------------------------------------------------------------------------------------- 
வேட்டைக்காரன் trailer பத்தி நான் ஏதாவது சொல்லுவேன்னு நீங்க நினைசீங்கன்னா அது தப்பு. நான் எதுவும் சொல்ல மாட்டேன். என்னடா புதுமையா ஒண்ணும் இல்லையே, விஜயோட முந்தையப் படங்கலானா பகவதி, மதுரை, சிவகாசி காட்சிகள் மாதிரியே இருக்கே, இத இந்தப் பையன் கண்டுகிட்டும் விமர்சனம் பண்ணலியேன்னு நீங்க நினைச்சாலும் நான் விமர்சனம் பண்ண மாட்டேன். அதுவும் அந்த சின்ன தாமரை பாட்ல வர hairstyle , டைனோசர் வாந்தி எடுத்த கலர்ல இருக்கே, அதை பத்தியாவது எதாவது பேசுவேன்னு நினைசீங்கன்னா, அதுவும் தப்பு. நான் ஒண்ணும் சொல்ல மாட்டேன். எனக்கு எதுக்குங்க வம்பு. நான் எதோ எழுதப்போய், படம் எக்குத்தப்பா ஹிட் ஆகிடுச்சுன்னா?? நம்ம தமிழ் நாட்டு ஜனங்களை நம்ப முடியாதுங்க...       
-------------------------------------------------------------------------------------------------------------
ரொம்ப சொல்லிட்டேன், போதும்.....


நிக்காம ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு

Monday, September 28, 2009

இப்படியும் ஒருவன் (mindvoice - நான் இல்ல)

எல்லா பதிவர்கள் மாதிரி, எனக்கும், உன்னைப்போல் ஒருவன் படத்தோட விமர்சனம் எழுதனும்னு ஆர்வமாதான் இருக்கு.(உனக்கு வேற ஏதாவது எழுதத்  தெரியுமா) ஆனா, என்ன எழுத?? ஒரு பக்கம் என்னடான்னா, ரொம்ப thinkittu படத்தை திட்டறாங்க. (முற்போக்குவாதிகளாமா) இன்னொரு பக்கம் "நாங்க சாதாரண, பத்து ரூவா டிக்கெட் ரசிகர்கள், ரொம்ப யோசிக்காம படங்களை பார்த்தல் போதும். தேவையில்லாம எங்களை சிந்திக்க வெச்சி கெடுக்காதீங்கன்னு கேட்கறவங்க ஒரு பக்கம் (ரொம்ப நல்லவன்களாமா).

இதுல வேடிக்கை என்னன்னா, இப்படி சொல்ற பதிவர்கள், இதுக்கு முன்னாடியே, பல பதிவுகள்ள, மொக்கையா, சாதாரண மக்களுக்கு கருத்து சொல்லிருக்காங்க. இந்தப் படம் பார்க்கும்போது மட்டும் ஏன் சாதாரண மக்களா மாறிட்டாங்கன்னு தெரியல (இது இப்ப தேவையா). எது எப்படியோ, என் கருத்தை சொல்லாம விட மாட்டேன். (அதான் தெரியுமே) படம் எனக்கு பிடித்தது. பாட்டு இல்லைனா, ஒரு படம் எவ்வளவு வேகமா இருக்கும்னு காமிக்க, இந்த படம் ஒரு உதாரணம். 

படத்தோட ஹீரோ மோகன்லாலின் (இன்னாது) நடிப்பு, வழக்கம் போல சோப்பர். கமல் கஷ்டப்பட்டு அடக்கி வாசிச்சிருக்கார் (வேற வழி). பின்னணி இசை இன்னும் நல்லா பண்ணிருக்கலாம். டைப் அடிக்கும்போது எனக்கே dejavu மாதிரி இருக்கு (இங்கயுமா). அதனால இதுக்கு மேல படத்தப் பற்றி நான் சொல்ல விரும்பலை. வேற எங்கயாச்சும் review பார்த்துக்கோங்க. மொத்தத்துல, கமல் போட்ட திட்டம் (இவன் karamchandlala - HINDU )  அவருக்கே back -fire ஆயிடுச்சுன்னு நினைக்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு. ரொம்ப சிந்திச்சாலே இதான் பிரச்சனை. 
___________________________________________________________________________
இதுக்கு முன்னால, நினைத்தாலே இனிக்கும் படம் பார்த்தேன். சொல்றதுக்கு ஒண்ணும் இல்லை. சன் டிவி ஸ்டைல்ல சொல்லனும்னா, "நினைத்தால் மட்டும் இனிக்கும்" பாத்துறாதீங்க. (லேட் வார்னிங்)
___________________________________________________________________________
விஜயின் வேட்டைக்காரன் (!?!?!?!) பாடல்கள் வழக்கம் போல செம்ம massala. எனக்கு மூணு பாட்டு (அனுஷ்கா!!!) புட்சிகிது. ஆனா சார் எதுக்கு அட்வைஸ் பண்றாருன்னு தெரியல(எதோ எதோ கவசாகி). புலி வருது புலி வருதுனு பாடல்,(கொ.... எடுத்ததா எடுக்காததா???) இதுக்கு நம்ம தளபதி குதிரைல வராராமா. எனக்கு வில்லு flashback + போக்கிரி போலீஸ் சீன் ஞாபகம் வந்து சிரிக்க ஆரம்பிச்சிட்டேன். ஏதோ ஆடி மாசம் அம்மன் பாட்டு கேட்ட effect. இதனால படம் ஓடுமான்னு கேட்டீங்கன்னா..................... "மதுர" அப்படீன்னு ஒரு படம் வந்துச்சுல்ல??(மச்சான் பேரு மதுர) அத ஞாபகத்துல வைங்க.
___________________________________________________________________________
 ஜெயா டிவில, நாங்க வர finals episode, இந்த வாரம், சனிக்கிழமை காலை, telecast ஆச்சு (மறைந்திருந்து பார்க்கும் + காதல் கசக்குதய்யா). மிஸ் பண்ணவங்க, வியாழக்கிழமை சாயங்காலம் 5 மணிக்கு பாருங்க. இல்லை பொறுத்திருந்து youtubela பாருங்க. 


 விஜய் மாதிரி நாம எப்போ வித்தியாசமா நடிக்கப்போகிறோம்????

Sunday, July 12, 2009

மற்றும் பல...

ஆரம்பிச்சிட்டாங்க...

கல்லூரி திறந்தாச்சு. இந்த முறை பாடங்கள் கொஞ்சம் வித்தியாசமா இருக்கு. நான் எதிர்பார்த்தா மாதிரி, practical வேலைகள் கொஞ்சம் நிறையவே இருக்கும்னு நினைக்கறேன். அதானால, நிறைய ப்ளோக முடியாதுன்னும் நினைக்கறேன். எங்க music band மீட்டிங்கும் நடந்தது. புதுசா நாலைந்து பேர் தேவைப்படறாங்க. இப்பதான் கவுன்சிலிங் நடக்குது. லைன்ல நிக்கற பசங்களையும், அப்பா அம்மாக்களையும் பார்க்க கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கு. நாம என்ன செய்ய முடியும்...

நாடோடிகள்

நாடோடிகள் பட விமர்சனத்தை எழுதச் சொல்லி, என் நண்பர்கள் சில பேர் கேட்டாங்க. 3 முறை அந்த படத்தை பார்த்துட்டேன். இதுக்கு மேல அதை பற்றி வேற என்ன சொல்ல. இருந்தும், அவர்களோட விருப்பத்திற்கு இணங்க, வரும் வாரம், எழுதுகிறேன். (உங்க தலை விதி அப்படி)

பைக்

புது பைக் ஒன்னு வாங்கினேன். (paasion plus). நான், ஏன் அண்ணனோட வண்டி (discover) ஓட்டி பழகியதால, புது வண்டியில, இன்னும் gear pattern பழகல. ரொம்ப பேஜாரா கீது. அதனால, என் அண்ணனோட வண்டியவே இன்னும் ஓட்டிங். ஏன் தலை விதி பாருங்க, புது பைக் இருந்தும், ஓட்ட தெரிஞ்சும், ஆண்டவன் இப்படி பண்ணிட்டான். இருந்தும், பொங்கி எழுந்து, பழகிக் கொண்டு, ஏன் பைக்கை ஓட்டுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.

வரும் வாரம், படம் ரிலீஸ். பார்க்க நான் ரெடி, நீங்க ரெடியா??

Friday, May 15, 2009

மற்றும் பல....

தினமும் ஒரு சிக்ஸர்
விளம்பர உலகத்திலேயே இதுபோல எதுவும் நடந்தது கிடையாதுன்னு நினைக்கிறேன். Almost, தினமும் ஒரு concept, தினமும் ஒரு AD, தினமும் அது நல்லா இருக்கு, அடுத்து என்னான்னு எதிர்பார்ப்பை கிளப்பிவிடுது. நான் சொல்றது, இப்ப IPL போட்டிகள் நடுவுல ஒளிபரப்பாகும் Vodafone ADs பற்றி. என்னை வேறெந்த விளம்பரமும் இவ்வளவு ஆச்சரியப்படுத்தியதில்லை. அது உண்மையா, கிராபிக்ஸா அப்படீன்னே நிறைய பேருக்கு சந்தேகம். இந்த விளபரம் கிராபிக்ஸ் இல்லையாமா. உண்மையான மனிதர்களுக்கு, அந்த கேரக்டர் ஏற்றாப் போல உடைகள் போட்டு எடுத்துருக்காங்க. அதைப் பார்க்கும்போது ஒருத்தருக்கு, அனிமேஷன்னே தோணும்.

பிரகாஷ்
வர்மா என்கிறவர்தான் இந்த விளம்பரங்கள இயக்கிருக்கார். இந்த கதா/விளம்பரப் பாத்திரங்கள உருவாக்க ரொம்ப பாடுபட்டிருக்கார். மொத்தம் மூணு வாரம் முன் ஏற்பாடுகள் மட்டுமே பண்ணிருக்கார். இன்னும் பல trivia இருக்கு. இந்நேரத்துக்கு அதெல்லாம் உங்களுக்கு forward mailla வந்திருக்கணும். அப்படி ஒரு வேளை உங்களுக்கு வரலைன்னா, கமெண்ட்ல உங்க மெயில் id mention பண்ணி, சொல்லுங்க. நான் அனுப்பறேன்..
-------------------------------------------------------------------------------------------------
Sadist
போன பதிவுல, என் டைரியை பற்றி நான் எழுதினதுக்கு (அதுவும் தூய தமிழில்), ரொம்ப நாளைக்கு அப்பறம், நிஜமாகவே நல்ல feedbacks வந்தன. என் நண்பர் ஒருவர், ஒரு படி மேலே போய், "உன் டைரிய படிக்க கொடு"னு கேட்டார். தரமாட்டேன்னு சொன்னதுக்கு, "நீ ஒரு sadist, எதிர்ப்பார்ர்பை கிளப்பி விட்டு, இப்ப வெறுப்பேத்தர"னு சொல்லிட்டார்.

நான் எழுதியதன் நோக்கம், என் நடையை நானே ஒரு வகையில சோதிச்சிக்கிட்டேன். உருப்படியா எதுவும் எழுதி ரொம்ப நாள் ஆகுதே, So, நம்மளால ஒழுங்கான நடைல எழுத முடியுதான்னு பார்க்கவே எழுதினேன், அதுவுமில்லாம, எழுதிய டைரிய படிச்சுப் பார்க்கும்போது, ஒரு மாதிரி திருப்தியாவே இருக்கு. என்னோட டைரிய படிக்கனும்னு கேட்ட அன்பர்கள் எல்லாருக்கும் , SORRY.
-------------------------------------------------------------------------------------------------
எண்ணங்கள்
தேவையில்லாத சிந்தனைகள் நிறைய தோணுது. நிறைய மனிதர்களோட பழகும் போது, அவங்களோட நடவடிக்கைகள கவனிக்க தோணிது. "நான் ஏன் அதெல்லாம் கவனிக்கறேன்" அப்படீங்கற எண்ணமும் parallela ஓடிகிட்டு இருக்கு. ஆனா இதுதான் மனித இயல்பு அப்படீன்னு எனக்கு நானே சமாதானம் சொல்லிக்கறேன். இவ்வளவு வித்தியாசமான attitudes இருக்குற ஆட்களோட பழகும் வாய்ப்பு, ஒரே சமயத்துல கிடைக்கும்போது, அதை ஒரு learning experiencea தான் நான் எடுத்துக்கறேன். எல்லாருமே, தினமும், அவங்களோட செயல்களால என்னை ஆச்சரியப் படுத்தறாங்க. அது, சில சமயங்கள்ல பாஸிடிவாகவும், பல சமயங்கள்ல நெகடிவ்வாகவும் இருக்கு.

நாம எவ்வளவு importance கொடுத்தாலும், நம்மை மதிக்காத, எந்த பிரச்சனையும் இல்லைனாலும், "சொல்லுங்க, உங்களுக்கு என்ன பிரச்சனை, நான் தீர்த்து வைக்கறேன்"னு சொல்ற, ஓவரா பொது நலத்துல அக்கறைன்னு மத்தவங்களுக்கு தெரியப்படுத்துற, நட்புக்கும் காதலுக்கும் சரியானா வரைமுறை பிரிக்கத் தெரியாத, இப்படி பலதரப்பட்ட ஆட்கள, ஒரு குறுகிய கால கட்டத்துல சந்திச்சிருக்கேன். இந்தப் பதிவ படிச்சிட்டு, "யாரைப் பற்றி சொல்ற??"னு யாரும் என்னை கேட்க வேண்டாம். உங்களுக்கு உண்மையான பதில் கிடைக்காது. நீங்களாகவே யாரையும் கற்பனை பண்ணிக்கவும் வேண்டாம். அது தவறாகவே இருக்கும்.

Friday, April 10, 2009

மற்றும் பல...

வழக்கம் போல, காலேஜ் அலுவல்கள். நல்லா மாட்டிக்கிட்டேன். இந்த மாச கடைசில செமஸ்டர் எக்ஸாம் வருது. அதுக்கும் கொஞ்சமாவது படிக்கணும். அதனால, blog பக்கம், ஏன், வீட்டுப் பக்கமே வர முடியல. வழக்கம் போல என்னை மன்னிச்சு, கொஞ்சம் பொறுமையா இருந்து, படிச்சிட்டு போங்க.

----------------------------------------------------------------------------------------------------

முடிஞ்சா, வாரா வாரம் ஞாயிற்று கிழமை, ஜெயா டிவி பாருங்க. மதியம் 12-1.

----------------------------------------------------------------------------------------------------

குங்குமப்பூவும், கொஞ்சும் புறாவும், படத்துல, ரெண்டு பாட்டு நல்லாயிருக்கு. "சின்னஞ்சிறுசு" and "நான் தருமண்டா". கேட்டுட்டு, எப்படி இருக்குன்னு சொல்லுங்க

Monday, March 30, 2009

ஒரு வழியா...

இப்படியெல்லாம் busy ஆவேன்னு கனவுல கூட நினைச்சதில்லை. ப்ளோக் பக்கம் வர முடியாம போக முக்கிய காரணம், எங்க காலேஜ் சார்பா, ஜெயா டிவில ஒரு நிகழ்ச்சியில participate பண்றோம். அதுக்கான practice + shooting. வெற்றிகரமா, முதல் மூணு rounds win பண்ணிட்டோம். மீதி இருப்பது, quarter, semi and final மட்டுமே. வெற்றி கிடைக்கும்னு நம்பிக்கை இருக்கு. நிகழ்ச்சிய, ஞாயிறு மதியம் 12-1 பார்க்கலாம்.

இது மட்டும் இல்லாம, சில பல assignments வேற. அதற்காகவும் இராப்பகலா வேலை. எனக்கு time management வேற அவ்வளவா வராது. So, கொஞ்சம் சொதப்பவும் செய்யறேன். இருந்தாலும், இன்னும், பெருசா ஒண்ணும் பாதிப்பு வரலை. என்ன, சரியா தூங்க முடியறதில்லை. மத்தபடி எல்லாம் ஓகே. எல்லாம் okனு சொல்லும்போதுதான் இன்னொரு மேட்டர் ஞாபகம் வருது. நேத்து, "யாவரும் நலம்" படம் பார்த்தேன். இவ்வளவு நாளா, stereo typela இருந்த horror genre, இந்தப் படம் மூலமா, வேற வடிவம் எடுத்திருக்கு.

நிஜமாவே, நல்லா இருந்துச்சு. பாட்டு மட்டும் செம்ம மொக்கை. ஆரம்பத்துல கொஞ்சம் நாடகத்தனமா இருந்தாலும், போகப் போக interesting. அதுவும், கிளைமாக்ஸ் சூப்பர். P.C. ஸ்ரீராம், நல்லா பண்ணிருக்கார். (DI உதவியோட). இந்தப் படத்தை, ஹாலிவுட்ல ரீமேக் பண்றதா செய்தி. நல்ல விஷயம். ஒரு வழியா, கொஞ்சம் ஒரிஜினலா ஒரு படம் பண்ணிருக்காங்க. படத்துல, ஓரிரு continuity mistakes இருக்கு, கவனிச்சேளா???

heroine, make-up இல்லாம வந்தா, இன்னும் பயங்கரமா இருக்கும்

Sunday, February 8, 2009

மற்றும் பல...

என் அண்ணன் கல்யாணம், சிறப்பாக நடந்து முடிந்தது. வந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. அழைப்பு வராதவர்கள் மன்னிக்கவும். அழைப்பு வந்தும், வராதவர்களை, நான் மன்னிக்கிறேன்.
---------------------------------------------------------------------------------------------------
வில்லு, படிக்காதவன் படங்களை B2B பார்த்தேன். ரெண்டுமே மொக்கை என்றாலும், படிக்காதவன் least worst. தமிழ் ரசிகர்களை, விஜயை விட, வேறு யாரும் அவமானப் படுத்த முடியாது. நல்ல வேளை படம் ஓடலை.
---------------------------------------------------------------------------------------------------
காலேஜ் music troupela நான் சேர்ந்திருக்கேன்/சேர்க்கப்பட்டேன். அநேகமா "techofes" culturalsla perform பண்ணலாம்..
---------------------------------------------------------------------------------------------------
golden globe அடுத்து oscar விருதுக்கு போட்டி போடும் சேரி நாய் (அதான் slum dog) பாட்டு ரொம்ப சுமாராதான் இருக்குன்னு நான் நினைக்கறேன். நீங்க??? oscar மட்டும் கிடைச்சுது, ARR அபிமானிகள கைல புடிக்க முடியாது. படம் பற்றி ப்ரியதர்ஷன் சொன்ன கருத்துக்களை நான் ஆமோதிக்கிறேன்/வழிமொழிகிறேன்.
நான் சொல்றது என்னனா, நம் வீட்டினரை நாம் திட்டலாம், பக்கத்து வீட்டுக்காரன் திட்டலாமா??
---------------------------------------------------------------------------------------------------
அழகும் அறிவும் பதிவுல நான் சொன்ன கருத்துக்கள, சில அன்பர்கள் , தெளிவா தப்பா புரிஞ்சிகிட்டாங்க. நான் யாரையும் குறிப்பிட்டு சொல்லல. பெண்களை மட்டும் அங்க குறிப்பிட்டு சொல்லக் காரணம், அழகு என்ற சொல்லே, பெண்கள் சம்பந்தப் பட்டது. அழகும் அறிவும் சேர்ந்து ஒரு பெண் கிடைப்பது அபூர்வம்னு பல பேர் சொல்லி கேட்டிருப்பீங்க. அதனாலதான் அழகுக்கும் அறிவுக்கும் சம்பந்தம் இல்லைன்னு சொல்லி, நிரூபிக்க, அந்த blonde quotes வேற போட்டிருந்தேன். இன்னும் சமாதானம் ஆகாதவங்க, alt + f4 press பண்ணிட்டு, வேற வேலை எதாவது இருந்தா பாருங்க.

Monday, January 12, 2009

ரெண்டு படம் - மூணு விஷயம்

படிக்காதவன் and வில்லு படப் பாடல்கள் கேட்டேன்...

1. படிக்காதவன் - மணிஷர்மா தன் தெலுங்கு reputationa maintain பண்ணிகிறார். ரெண்டு மூணு பாடல்கள் தெலுங்கு ரீமேக். ஆனா lyricsதான் தாங்கல. நானே நல்லா எழுதிருப்பேன். ரொம்ப average பாடல்கள்.

2. வில்லு - விஜய், போக்கிரி மாதிரியே பாடல் வேணும்னு கேட்ருப்பார். தேவி ஸ்ரீ பிரசாத், அது மாதிரி இல்ல, அதையே போட்டு தரேன்னு, intro சாங் போட்ருக்கார். மத்த பாடல்களும் ரொம்ப சுமார் ரகம். "வாடா மாப்பிள" பாட்ல வர வடிவேலுவின் டயலாக் நல்லா இருக்கு.

தமிழ் சினிமால பாடல்களுக்கான முக்கியத்துவம் கம்மி ஆகிகிட்டே வருதுனு நினைக்கறேன். சும்மா சம்பிரயதாயதுக்காகவே பாட்டு இருக்குன்னு தோணுது. அதே நேரத்துல, பாடல்கள் எவ்ளோ நல்லா இருந்தாலும், யாரும் தியேட்டர்ல இருக்கறதில்ல. விவேக் சொல்றா மாதிரி, பொண்ணுங்க கூட வெளிய போய் தம் கட்றாங்க. இப்படியே இருந்தா, எதிர்காலத்துல, இந்திய சினிமானு சொன்னாலே, பாடல்கள் என்கிற நிலைமை போய்டும். சமீபமா நான் கேட்ட நல்ல பாட்டு, நான் கடவுள் படத்துல வர, "பிச்சை பாத்திரம்" and "அம்மா உன் கோயிலில்". பாடல்கள்ல எதுவும் புதுமை இல்லைனாலும், ராஜா ராஜாதான்.

3. வில்லு பட விமர்சனம், நாலா பக்கத்துலேர்ந்தும் வந்துகினே இருக்கு. நிறைய பேர், படம் குருவி பார்ட் 2, அப்படின்னு சொல்றாங்க. விஜய் ரசிகர்களோ, வழக்கம் போல, படம் சூப்பர், விஜய் எங்கயோ போய்ட்டார். படம் சில்வர் ஜூப்ளி. எல்லாம் சொல்லிக்கிட்டு இருக்காங்க. behindwoods review, "Verdict – Not worth risking your patience!". youtubela intro song பார்த்தேன். இவங்கள லொள்ளு சபால கலாய்ச்சது தப்பே இல்லன்னு தோணுது. படம் ஓடுமான்னு ஒருத்தன் கேட்டான். நான் வடிவேல் ஸ்டைல்ல சொன்னேன் "DONT ANGRY ME".. இந்தப் படமும் ஓடலாம். தமிழ் நாட்ல இன்னா வேணாலும் நடக்கும்.


p.s. சிம்பு ஒரு பேட்டியில சொன்னது - "தமிழ் சினிமால, இவ்ளோ வருஷமா, தலை வகிடு கூட மாத்தாம நடிக்கிற ஒரே ஆள் விஜய் தான்". பய புள்ள ஷோக்கா சொன்னான்யா.

மூணும் வேற வேற படம். 6 வித்தியாசம் கண்டுபிடிங்க பார்க்கலாம்...

Friday, January 2, 2009

முதல் multiple போஸ்ட்

NEWYEAR
ஜனவரி 1 பெரிய ஆர்பாட்டம் எதுவும் இல்லாம போச்சு. நான் ஆங்கில புத்தாண்டு கொண்டாடுற ஆள் இல்ல. வர wish எல்லாத்துக்கும், தேங்க்ஸ், நன்றி மட்டும் சொன்னேன். நான் விஷ் பண்ணல. இனிமே pseudo-seculara இருக்குற ஆளுங்க wish பண்ணா, பாலா அண்ணா மாதிரி, "Shame to U" சொல்லப்போறேன். எனக்கு ஒரு மாசம் ஆரம்பிக்கிறா மாதிரி தான் ஒரு வருடத்தோட ஆரம்பமும். எல்லாரும் கடந்த வருடத்துல, அவங்க செஞ்சத அசை போட ஆரம்பிச்சிருக்காங்க. எனக்கு எதுவும் தோணலை. போன வருஷம் பண்ண தப்புகளை, இந்த வருஷம் பண்ணக் கூடாதுன்னு நினைச்சிகிட்டு இருக்கேன். பார்க்கலாம்.

எந்திரன் ரிலீஸ் ஆவுமா??

ஹைதராபாத்
சும்மா ஓய்வு எடுக்க நான் இப்ப ஹைதராபாத்ல, என் பெரியம்மா வீட்ல இருக்கேன். தினமும் சாப்பிட்டு சாப்பிட்டு தூங்கறே. அவ்வளவே. இங்க "கிங்", "Neninthe" அப்பறம் "Polar express 3d" (in imax) பார்த்தேன். கிங் படம், தமிழ் விஜய் படங்களுக்கு போட்டி. செம்ம காமெடி. ஹீரோ ஆவேசமான டயலாக் பேசினாலும் எனக்கு சிப்பு வந்துருச்சு (எனக்கு தெலுங்கு நல்லா புரியும், கொஞ்சம் பேசுவேன்). அடுத்த படம் கனவு தொழிற்சாலை மாதிரி, சினிமா உலகத்தப் பற்றி சொல்ற படம். கொஞ்சம் மசாலா நெடியோட நல்ல இருந்துச்சு. Polar express பழைய படமா இருந்தாலும், imaxபாக்கனும்னு பார்த்தேன். நல்ல அனுபவம். ஸ்க்ரீன் ஒரு மாதிரி பெருசா, சதுரமா இருந்துச்சு. அந்த ஸ்க்ரீன்குசேலன் கூட நல்லா இருக்கும்னு தோணிச்சு. நம்ம ஊர்ல ஒண்ணு ஆரம்பிச்சா நல்லா இருக்கும்.
imax வாசல்ல

Harry Potter
இங்க படிக்கலாம்னு, HP பார்ட் 6 & 7 எடுத்துட்டு வந்தேன். கழுதை எத்தனை தடவ படிச்சாலும் போர் அடிக்கல. 7th பார்ட்ல நிறைய cinematic situations. இருந்தாலும் படிக்க நல்லா இருக்கு. குறிப்பா எனக்கு பிடிச்சது, 7th பார்ட்ல அந்த house-elf dobby இறந்து போகற இடம் & "King's Cross" chapter. Almost எல்லா கேள்விகளுக்கும் விளக்கம் குடுக்குற இடம். தசாவதாரம் டயலாக் மாதிரி, கடைசில கொஞ்சம் குழப்பவும் தவறாத chapter. ஆனா, சின்ன பசங்களுக்காக எழுதப்பட்டா மாதிரி இல்ல. நிறைய கொலைகள் + வன்முறை. ஏதோ நீதி சொல்ற மாதிரி இருந்தாலும், கடைசில மனசுல நிக்கறது என்னமோ அந்த adventuresதான். முடிஞ்சா படிச்சு பாருங்க.

கன்னித்தீவு எப்படி இருக்கும்???


ok, ippatiki idhi chaalu. சென்னை reach aina tharavaathaa, malli meet audhaam.
எப்படி நம்ம தெலுங்கு?? புரியலன்னா, பக்கத்துல தெலுங்கு தெரிஞ்ச யாரையாவது கேளுங்க.... vartaa....