Wednesday, October 22, 2008

பீட்டரும் நானும்...Part 1

பீட்டர் என் friend இல்ல. ஆங்கிலத்துல பேசறதுக்கு நான்(ங்க) பீட்டர்னு சொல்றது வழக்கம். நான் LKG படிச்ச காலத்துலேர்ந்தே இங்கிலீஷ் மீடியம். ஆறாவது வரை நான் படிச்சது, christian matriculation ஸ்கூல்ல, so அங்க, இங்கிலிஷ்ல பேசறது ஒரு வகைல கட்டாயம். ஆறாவது படிக்கும்போது பல வகைல கட்டாயம். இங்கிலிஷ்ல பேசலைனா கண்டிப்பாங்க. நான் நல்லாத்தான் பேசிகிட்டும் இருந்தேன். சில சமயங்கள்ல என் class நண்பர்களுக்கு நான்தான் Mediator. அவங்க தமிழ்ல சொல்ற விஷயத்த, டீச்சர் கிட்ட இங்கிலிஷ்ல சொல்லுவேன் (class லீடர்னா இந்த வேலையெல்லாம் செய்யணும்!!!)...

என் வீட்ல இருந்த financial பிரச்சனைகளால ஏழாவது படிக்க ஒரு ஸ்டேட் போர்டு ஸ்கூலுக்கு மாறினேன். The great HIndu Higher Secondary School, Triplicane, சென்னைதான் அந்த School. என் அண்ணாத்தையும் அந்த ஸ்கூல்லதான் படிச்சாரு. School மாறுன அப்பறம், இங்கிலிஷ்ல பேசறதுக்கான அவசியம் இல்லாம போச்சு. இருந்தாலும் இங்கிலிஷ்ல எழுதவேண்டிய கட்டாயம் இருக்கே, so என் எழுத்துக்கள்ள இங்கிலீஷ் உயிரோட இருந்தது. அதுக்கு அப்பறம் என் பள்ளிப் படிப்பு fulla அங்கதான். அதுக்கப்பறம் காலேஜ் போனேன்...

சில காலேஜ்ல பீட்டர்லதான் பேசனும்னு enforce பண்ணுவாங்கனு கேள்விபட்டிருக்கேன், so கொஞ்சம் பயத்தோட தான் காலேஜ் சேர்ந்தேன். அந்த bayam எதனாலன்னா, இங்கிலீஷ் பேசுற பழக்கத்த விட்டதனால, என்னுடைய பீட்டர் பேசும் திறன் ரொம்பக் கேவலமா இருந்துச்சு, அதுவுமில்லாமா என் இங்கிலீஷ் vocabularyla வார்த்தைகள் ரொம்பக் கம்மி, tats wy. ஆனா நான் பயந்த அளவுக்கு என் ஆங்கில அறிவுக்கு சோதனை வரல. பேசறதுக்கு வந்த ஒன்னு ரெண்டு சமயத்துலயும், சுமாரா சமாளிச்சிட்டேன். இது போல bayam இருந்தாலும், நான் எப்பவுமே இங்கிலீஷ் கத்துக்க பிரயத்தனப் பட்டதில்ல...

ஆங்கில படங்கள் அடிக்கடி பாத்துகிட்டேதான் இருந்தேன். so இங்கிலீஷ் எனக்கு எப்பவுமே புரியாம இருந்ததில்ல, அதுவுமில்லாமா, இங்கிலீஷ் grammarல எனக்கு தப்பு வராது.. அதனால எழுதவும் நல்லா வரும். இப்படியாக போய்கிட்டு இருந்த என் (பீட்டர்) வாழ்க்கைல ஒரு வாரம் முன்னாடி ஒரு சோதனை வந்தது.. அத அடுத்த partla blogaren...
to be continued....


என் இங்கிலீஷ் இவ்ளோ மோசம் இல்ல

No comments: