Showing posts with label college memoirs. Show all posts
Showing posts with label college memoirs. Show all posts

Wednesday, January 4, 2012

எண்ணிப் பார்த்தேன் - 2011 - 1


வருஷக் கடைசில பதிவு போடறேன்னு சொன்னது வழக்கம் போல லேட் ஆனதுக்கு வழக்கம் போல மன்னிக்கனும். போன வருஷத்தை எண்ணிப் பார்த்ததுல, சில விஷயங்கள் நல்லதாவும், பல விஷயங்கள் கெட்டதாவும் நடந்திருக்கு. கெட்ட விஷயங்களை வாழ்க்கைப் பாடமா எடுத்துகிட்டேன். வேற என்ன பண்றது. இப்போ, போன வருஷம் நடந்து, பதிவு போட முடியாம போன சில விஷயங்களைப் பத்தி கடகடன்னு சுருக்கமா சொல்லிடறேன். அதை நீங்க விரிவா படிச்சு தெளிவாய்டுங்க :)

பவர் 

கரென்ட் கட் பிரச்னை பெருசாகி அதுவும் ஆட்சி மாற்றத்துக்கு முக்கிய காரணமா இருந்தது உங்களுக்கு தெரிஞ்சிருக்கும். ஆனா, தொடர்ந்து பல இடங்கள்ள பவர் கட் தொடர்ந்துட்டேதான் இருக்கு. என் நண்பர்கள் பல பேர் புலம்பிட்டே இருக்காங்க. இதனால அவங்களோட முக்கியமான வேலைகளும் கெட்டு போறதா பீல் பண்றாங்க. இருந்தாலும் வழக்கம் போல மக்கள் சுரணை இழந்து அதை தட்டி கேட்க மறந்துட்டாங்க. அடுத்த எலெக்ஷன்ல பாத்துக்கலாம்னு விட்டுட்டாங்களோ என்னமோ (ஆனாலும் உள்ளாட்சி தேர்தல்ல இவங்களேதான் வின் பண்ணாங்க). யார் செஞ்ச புண்ணியமோ தெரியலை, என் ஏரியால கரென்ட் கட் ஆகறதே இல்லை. (நான்  திருவல்லிக்கேணி வாசி). அதே மாதிரி இந்த லைப்ரரிய மாத்தற திட்டமும் ஏகோபித்த எதிர்ப்ப சம்பாதிச்சிருக்கு. மெட்ரோ ரயிலை மோனோ ரயில்னு வேற மாத்திட்டாங்களாம். இவங்களுக்கு யார் இப்டியெல்லாம் யோசிக்க சொல்லிதராங்கன்னு தெரியலை.

BBC பறந்து போச்சு 

என் BBC வேலையை விட்டதைப் பத்தி --> இங்க ரெண்டாவது பத்தில  எழுதிருந்தேன். இன்னமும் சரியான வேலை கெடைக்கல. மத்த துறைகள்ல இருக்கற ஒரு முக்கியமான விஷயம் மீடியால இல்லைன்னு படுது. வேற எங்கயுமே, அந்த கம்பெனி HR ஆளை நேரடியா காண்டாக்ட் பண்ணி வேலை கேட்கலாம். அவங்களும் பொறுப்பா இருக்கு இல்லைன்னு பதில் சொல்றாங்க. ஆனா, மீடியால மட்டும் HRனு ஒரு ஆள் இருந்தாலும், நாம அனுப்பற resume ஒழுங்கா போய் சேருதானு தெரியலை. கால் பண்ணாலும் ஒழுங்கான பதில் வரதில்லை. முக்கியமா ஏதாவது ஒரு வடிவத்துல சிபாரிசு தேவைப்படுது. கடுப்பா இருக்கு. சும்மா இருக்ககூடாதுன்னு பல வேலைகளை செஞ்சிட்டுதான் இருக்கேன். பார்க்கலாம், நமக்குன்னு ஒரு வேலை இல்லாமலா போய்டும்.

Revolution  2020

இந்த வருஷம் வெளியான சேட்டன் (மலையாளி இல்லை) பகத்தோட இந்த நாவல், ப்ரீ ஆர்டர் பண்ணி, ரிலீசுக்கு ஒரு நாள் முன்னாடியே வந்து சேர, ஒரே மூச்சுல படிச்சேன். அவரோட க்ளீஷே நிறைய இருந்துது.  ஒவ்வொரு கேரக்டரோட உணர்வுகளை கரெக்டா சொல்லிருந்தாலும், ஒரு கட்டத்துல கதை எழுத்தாளரோட கண்ட்ரோல்ல இல்லையோன்னு தோண ஆரம்பிச்சுது. க்ளைமாக்ஸ்ல அது conform ஆச்சு. ஆனாலும் சேட்டனுக்கு மற்றுமொரு வெற்றி.

Facebook Page
என்ன கருமத்துக்கெல்லாம் page ஆரம்பிக்கறதுன்னு இல்லையா. இந்த page பாருங்க. https://www.facebook.com/Tamilanchors . என்ன ஒரு மகா வெட்டி வேலை. சாதாரண போட்டோ இல்லமா, டிவில வரதை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வேற போடறாங்க. இதை சில பேர் ஷேர் வேற பண்ணாங்க. கலி முத்திடுச்சுனு தெரிஞ்சுது.

நானும் ஜட்ஜ் ஆனேன்


காலேஜ்ல நடந்த பாட்டு போட்டியோட முதல் ரவுண்டுக்கு என்னை நாட்டமையா வர சொல்லி என் ஜூனியர்ஸ் கூப்டாங்க. முதல்ல தயக்கமா இருந்தாலும் ஒத்துக்கிட்டேன். அங்க போன அப்பறம், இன்னும் பல பேர் என்னை ஞாபகம் வெச்சிருக்கறது தெரிஞ்சு ரொம்ப சந்தோஷமா இருந்துது. வழக்கம் போல பல ப்ளாஷ் பேக் நிகழ்வுகள் வந்து மனசு கொஞ்சம் கஷ்டமாவும் இருந்துது. என்ன செய்ய. its all fate.

தொடரும்.....

Monday, May 17, 2010

இனி....

நம்ம வாழ்க்கைல, பல தடவை, இனி என்ன பண்ண போறோம்னு, கேள்வி, நமக்குள்ள எழுந்துகிட்டே இருக்கும். இப்போ எனக்கும் அப்படியே. முதல் முறை அந்த கேள்வி வந்தது, டென்த் முடிச்ச உடனே.. இனி எந்த க்ரூப் செலக்ட் பண்ணி, எப்படி படிக்கறதுன்னு. அதுவும் ஒரு வழியா முடிஞ்சு, அடுத்து +2. இப்படி ஒவ்வொரு கட்டத்துலையுமே, எல்லாருக்கும் வர "இ.எ.ப.போ" கேள்வி வந்துகிட்டேதான் இருந்துச்சு.

இப்போ, என்னோட முதுகலை பட்டபடிப்பு என்கிற PG முடிஞ்சு போச்சு. இது நாள் வரை வந்த 'இனி' கேள்விகளோட, இப்போ வந்துருக்குற கேள்வி ரொம்பவே முக்கியமானதா படுது. மனசுக்கு பிடிச்ச வேலை கிடைச்சு, ஒழுங்கா வேலை செஞ்சு சம்பாதிக்கணும். விட்ருந்தா UG முடிஞ்சவுடனேயே வேலைக்கு போயிருப்பேன். ஆனா வீட்ல இருக்கறவங்களோட ஆசையை பூர்த்தி செய்யவே இந்த PG. சேரும் பொது பெரிய எதிர்பார்ப்பு இல்லைனாலும், என்னோட வாழ்க்கைல மிக முக்கியமான ரெண்டு வருடங்கள் வரப்போகுதுன்னு எனக்கு அப்போ தெரியலை.

நிஜமான காலேஜ் வாழ்கையை நான் இந்த ரெண்டு வருஷத்துல தான் அனுபவிச்சேன். என்னோட UGல கூட படித்தவர்கள் ரொம்ப கம்மி (மொத்தம் 10). காலேஜ் போனதே இப்போ எனக்கு சரியா நினைவில்லை (நடுவுல நடந்த ஆக்சிடென்ட் காரணமோ??). அங்கே கிடைச்ச சில நல்ல நண்பர்களோட சகவாசம் இன்னும் தொடருது. இருந்தாலும், இந்த சினிமா பாத்து கெட்டுப் போன நல்லுகத்தைச் சேர்ந்த ஆளுங்கற முறைல, காலேஜ் வாழ்க்கை மேல சில எதிர்பார்ப்புகள் இருந்துச்சு. அது எதுவுமே நடக்கலை. இந்த பழம் நிஜமாவே புளிக்கும்னு நினைச்சு, ஒரு கட்டத்துல வெறுத்தே போயிட்டேன்.

இப்படிதான் PG படிப்பும் இருக்கும்னுதான் நினைச்சேன். ஆனா, அதுக்கும் இதுக்கும் சம்மந்தமே இல்லை. எக்கச்சக்க நண்பர்கள், நண்பிகள். சிறப்பா பல தருணங்கள்னு சரியான கொண்டாட்டம். முக்கியமா, முன்னெல்லாம் நான், போட்டோ எடுக்கும்போது, முடிஞ்ச வரை போஸே குடுக்க மாட்டேன், இல்லை ஏதாவது லைட் கம்மியான இடத்துல நிப்பேன். எப்படி நின்னு போஸ் குடுத்தாலும், நல்லா விழ மாட்டேன்னு ஒரு காம்ப்ளெக்ஸ். இன்னிவரைக்கும் அந்த காம்ப்ளெக்ஸ் இருந்தாலும், இந்த போட்டோ போஸ் காம்ப்ளெக்ஸ், இந்த ரெண்டு வருஷத்துல காணாம போச்சு. எச்ச்சகச்சமான கிளிக்ஸ். கிட்டத்தட்ட ஒரு 40gb அளவுக்கு எங்க புகைப்படங்கள் மட்டுமே இருக்கு.

அடுத்து, என் பாடும் விருப்பத்திற்கு தீனி போட்ட ரெண்டு வருடங்கள். எங்க காலேஜ் லைட் மியூசிக் ட்ரூப்ல, லீட் சிங்கரா தேர்ந்தெடுக்கப்பட்டு, (அவங்களுக்கும் வேற வழியில்லை, பாவம்) நிறைய மேடைகள்ல பாடி, இன்னும் புதுசா நிறைய விஷயங்களை கத்துகிட்டேன். எங்க ப்ராக்டிஸ் நாட்கள் எல்லாம் இன்னும் நினைவுல இருக்கு. நினைச்சு பார்க்கும்போது கொஞ்சம் கஷ்டமாகவும் இருக்கு. இப்படி, என் வாழ்க்கைல நடக்கவே நடக்காதுன்னு நினைச்ச பல விஷயங்கள், இந்த ரெண்டு வருடங்கள்ள நடந்துருக்கு.

ஆனா, என் நிலைன்னு சொல்லனும்னா, UG முடிக்கும்போது என்ன மாதிரி மனநிலைல இருந்தேனோ, அதே மாதிரி மன நிலைலதான் இப்பவும் இருக்கேன். அடுத்து என்ன பண்ண போறேன்னு தெரியாம. ஆனா, இப்போ கொஞ்சம் பக்குவும் வந்துருக்கர்த நானே உணர்றேன். கொஞ்சம் பொறுப்பும் கூடியிருக்கரா மாதிரி தோணுது. முக்கியமா, இந்த ரெண்டு வருடங்கள்ள நடந்த சில விஷயங்களால, லாங் டைம் effect இருக்கும்னு தோணுது. எது எப்படியோ, நமக்கும், நம்மை சுத்தி இருக்கறவங்களுக்கும் நல்லது நடந்தா சரி. அடுத்த 'இனி' கேள்வி வருமான்னு தெரியல, வந்தா, அப்போ மறுபடியும் இதே தலைப்புல ஒரு பதிவு நிச்சயம்... ரெடியா இருங்க...    


இப்படி ஏதாவது ஹெல்ப் பண்ணாங்கன்னா நல்லா இருக்கும்...

பி.கு. இதைப் படித்துக் கொண்டிருக்கும் என் நண்பர், நண்பிகளுக்கு. இந்த ரெண்டு வருஷத்துல, உங்கள புண்படுத்தரா மாதிரி, மனசுக் கஷ்டப்படறா மாதிரி ஏதாவது சொல்லிருந்தேன்னா, பண்ணிருந்தேன்னா மன்னிச்சிருங்க. இந்த நாட்கள்ல, என் வாழ்க்கைல ஒரு அங்கமா இருந்ததுக்கு உங்களுக்கு கோடான கோடி நன்றி... thanks for the wonderful experience.

Wednesday, March 3, 2010

டில்லி - பயணானுபவங்கள்

விலாவரியா ஒண்ணும் விவரிக்க போறதில்லை. அதனாலா தைரியமா படிங்க.

காலேஜ்ல Industrial Visitனு (I.V) ஒரு விஷயம் இல்லன்னா, ரொம்பவே மொக்கையா இருக்கும். ஊர் சுத்த அது ஒரு சாக்கு. சாதரணமாவே நண்பர்களோட சுற்றுவேன்னாலும், I.Vனு சொல்லிட்டு போறது கொஞ்சம் எக்ஸ்ட்ரா த்ரில். போறதுக்கு முன்னாடி பலப் பிரச்சனைகள். நான் வரலை, நீ வரலை. நீ போகாதே. டிக்கெட் கிடைக்காது. டில்லில பனி, சிம்லால சனி, இப்படி எச்சகச்ச தடைகள் இருந்தாலும், ஒரு வழியா, 21 பேரோட கிளம்பினோம். போகும்போது RAC. அதனால, TTRஅ கரெக்ட் பண்ணி (ஏதொ பாத்து செஞ்சீங்கனா......), அல்மோஸ்ட் எல்லாருக்கும் பெர்த் ஏற்பாடு பண்ணிட்டு. ரெண்டு தியாகிகள் மட்டும் ஒரே பெர்த்ல அட்ஜஸ்ட் பண்ணிகிட்டோம்.            

மதுரா கிருஷ்ணர் கோவில் இல்லாம, வழக்கம் போல, எல்லாரும் சுற்றி பார்க்கும் இடங்களான, தாஜ் மஹால், பிர்லா கோயில், குதுப்மினார், அக்ஷர்தாம் கோவில் (உள்ள பெரிய imax கீது),  இந்தியா கேட் (எகிறி குதிக்க முடில), கொஞ்சம் பொறுப்புணர்ச்சியோட ஜீ டிவி, அப்பறம் சிம்லா (யப்பா இன்னா குளுரு. டாப் டு பாட்டம் ப்ரீஸ்) அங்க ரெண்டு மலை உச்சி, பொறவு மறுபடியும் டில்லி வந்து ஷாப்பிங்க்னு நான் ஸ்டாப் பயணம். சிம்லா குளிர் எனக்கு ரொம்ப புதுசு. வந்த எல்லாரும், ஷூ, கைலயும் கால்லயும் ஸாக்ஸ், ரெண்டு ஜெர்கின், ஸ்வெட்டர்னு ரெடியா வந்திருந்தாங்க. நான் மட்டும் கேவலமா ஒரே ஒரு ஜெர்கினோட, ஜெர்க்கு விட்டுகிட்டிருந்தேன். ஸ்வெட்டர், ஷூ, ஸாக்ஸ் எதுவுமே இல்லாம.

இருந்தாலும், அசராம, ரெண்டு மலை உச்சியும் (குதிரை பயணம்) தொட்டுட்டுதான் இறங்கினேன். ட்ரிப் முழுக்க மூணு வேளையும் சப்பாத்தி. தொட்டுக்க, பனீர் கலந்த ஏதாவது இரு டிஷ். சோறு இருந்தாலும் ஒரு பருக்கை உள்ள போகலை. அவங்க ஊர் ஹோட்டல் எங்கயுமே நம்ம ஊர் சாப்பாடு நல்லா இல்லை. விலையும் ஜாஸ்தி. டில்லி அவ்வளவு குளிர் இல்லை. நம்ம ஊர் பொண்ணுங்களை, அங்க இருக்குற பசங்க, முழுங்கரா மாதிரியே பாக்கறானுங்க. சில தைரியசாலிகள் வந்து இடிக்கவும் செய்யறாங்க.

இதுல முக்கியமான விஷயம் இன்னானா, எனக்கு டில்லி சுத்தமா புடிக்கலை. ஊரு முழுக்கவே, ஏதொ எல்லாரும் வேற வழி இல்லாம இருக்கறா மாதிரி, சூன்யமா இருக்கு. எல்லாரோட பார்வைலயும் ஒரு விரோதம் இருக்கு. கட்டாயத் தாலி கட்டினா மாதிரியே அலையறாங்க. ஒருத்தருக்கும், எனக்கு தெரிஞ்ச அளவு கூட இங்க்லீஷ் தெர்ல. எல்லாரும் இந்திலயே குளிக்கறாங்க (mein hindi 'bath' kartheen hoon). பொண்ணுங்க, மைதா மாவுல புடிச்சு வெச்சா மாதிரி இருக்காங்க. சரியா சைட் அடிக்க கூட முடியலை. நல்ல டிராபிக். பொண்ணுங்க ஷாப்பிங் பண்ண எக்கச்சக்கமா கொட்டிகிடக்கு. பசங்களுக்கு ரொம்பவே கொஞ்சம் தான். பைய தூக்கிட்டு, பின்னாடியே போக வேண்டியதுதான்.

மத்தபடி பெருசா நான் ஒண்ணும் கவனிக்கலை. ரயில் பயணத்துல பெரிய தொல்லை ஒண்ணு இருக்கு. திருநங்கைகள் கும்பலா வந்து, பசங்கள மிரட்டி காசு புடுங்கறாங்க. காசு குடுக்காதவங்களுக்கு என்ன ஆகும்னு என்னால இங்க 'ஓபனா' விவரிக்க முடியாது. போலீஸ் இருந்தும் கண்டுக்கலை. இப்படி டிரைன்ல வர (திரு)நங்கைகள் தன்னை தானே கேவலப்படுத்திகிட்டு ஏன் இப்படி மட்டமா நடந்துக்கராங்கன்னு தெரியலை. இதுக்கெல்லாமும் அரசாங்கத்தையே குற்றம் சொல்றது வேலைக்கு ஆகாது.

ஓட்டு மொத்தத்துல, என்னுடைய இந்த முதல் வட இந்திய பயணம், இனிதே நிறைவடைந்தது. பெர்சனலா எனக்கு இது மறக்க முடியாத அனுபவம். எக்கச்சக்க படங்கள் க்ளிக்கினோம். ஒரு நல்ல காமெரா இல்லாம, டில்லிய சுற்றி பாக்கறது வேஸ்ட். இதெல்லாத்தையும் விட, நிறைய விஷயங்களை புரிஞ்சிகிட்டேன், தெரிஞ்சிகிட்டேன்.  முக்கியமா ஒரு நாலு வார்த்தை கத்துக்கோங்க. "முஜே ஹிந்தி நஹி மாலூம்".. ரொம்ப வசதியா இருக்கும். இப்போதைக்கு இவ்ளோதான். வர்டா....


ஷாஜஹான் இவ்ளோ பெரிய சின்ன வீடு கட்டிருக்காரு...இது காதல் சின்னமாம். ஏன் அவரை இப்டி அசிங்கப் படுத்தறீங்க....

Monday, November 30, 2009

மேல் படிப்பு

மு.கு. நகைச்சுவை உணர்வு இல்லாத பொண்ணுங்க, தயவு செஞ்சு கெளம்புங்க, காத்து வரட்டும்...
  
நீங்க நினைக்கற மேல் படிப்பு இல்லைங்க இது. நான் சொல்லப் போறது Male, அதாவது பசங்க படிக்கற படிப்பு பத்தி. 'அதென்ன படிப்புல male படிப்பு female படிப்பு. எல்லாம் ஒண்ணுதான. இதுல என்ன பெரிய ஆராய்ச்சி பதிவு வேண்டி கெடக்கு', இதான உங்க டவுட்டு. கண்டிப்பா வித்தியாசம் இருக்குங்க. எல்.கே.ஜில ஆரம்பிச்சு, இப்போ post graduation வரைக்கும் நான் இந்த வித்தியாசத்தை பாத்துகிட்டு இருக்கேங்க. எஸ்.ஜே சூர்யா சொல்றாப்போல, சில சமயங்கள்ல, பொண்ணுங்க படிக்கறத பார்த்தா, எனக்கு தலையே வெடிச்சிடும் போல இருக்கும். பசங்களுக்கு, Pass - Fail, இப்படி ரெண்டு  மேட்டர் தான் முக்கியம். ஆனா பொண்ணுங்களுக்கு???????????  வாங்க அலசுவோம்.

எப்பவும், படிச்சிகிட்டே இருந்து, எப்பாவாச்சும் சும்மா இருப்பாங்கல்ல, அப்போ, மத்த விஷயங்களை யோசிக்கறவங்க பொண்ணுங்க. ஆனா பசங்க, அப்படியே ரிவர்சு. வேற வேலையே இல்லாமா, பொழுது போகலன்னா, லைட்டா படிப்பாங்க. சத்தியமா நான் அப்படிதாங்க. ஆனா, சில பசங்களும் பொண்ணுங்க மாதிரி படிக்கற கேசு தான். இந்த farmville விளையாடுற பசங்க மாதிரி. ஆனா அவங்க எண்ணிக்கைல ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப கம்மி. அவங்களை நான் பசங்களாவே பாக்கறதில்லை. அவங்கெல்லாம் IITல இருப்பாங்க,  இல்லைனா அண்ணா universityல இன்ஜினியரிங் படிச்சிகிட்டு இருப்பாங்க.

இந்த பசங்க பொண்ணுங்க வித்தியாசம், பரீட்சை சமயங்கள்ல பாத்தீங்கன்னா அப்பட்டமா தெரியும். எனக்கு தெரிஞ்சு, முக்கால் வாசி பசங்க (என்னையும் சேர்த்து), பரீட்சைக்கு முன்னாடி நாள்தான் படிக்க ஆரம்பிக்கறதே. அதுவும் மனப்பாடம் பண்றதெல்லாம் இல்லை. சும்மா, அப்டீ திருப்பி பாக்கறது. அப்படி பார்க்கும்போதுதான், நம்மகிட்ட சில நோட்ஸ் இல்லைன்னே தெரியவரும். சரி, நம்ம தோஸ்து எவனாவது வெச்சிருப்பானான்னு மெசெஜோ, காலோ பண்ணா, அவன் "மச்சான், படிக்க ஆரம்பிச்சுட்டியா?? கேடி நாய்டா நீ. எதுவும் படிக்கலை படிக்கலை சொல்லியே நிறைய மார்க் வாங்கிருவ. ஒ*!@ உன்னை நம்பவே கூடாதுடா". இதுல நோட் பண்ண வேண்டிய விஷயம் என்னன்னா, அந்த நாயும் அங்க புக்க வெச்சிகிட்டு முக்கிட்ருப்பான்.                                          

எதுக்கு phone பண்ணமோ, அதில்லாம, வெட்டியா வேற ஏதாவது பேசிட்டு வெச்சிருவோம். சரி, பரவாயில்லைன்னு, வெக்கத்தை விட்டு பொண்ணுங்க யாருக்காவது phone பண்ணுவோம். அவங்க விடுவாங்க பாருங்க ரீலு. "ஹே, நான் சத்தியமா படிக்கலபா. Group study பண்ணலாம்னு நினைச்சோம், ஆனா முடியலை. காலைல அம்மாகூட வெளியில போயிட்டேன். அப்பறம் வீட்ல ஒரே வேலை (சாஞ்சிகிட்டு TV பாக்கறது ஒரு வேலையா) கொஞ்ச நேரம் முன்னாடிதான் புக்கை கையில எடுத்தேன், கரெக்டா நீ கால் பண்ற". அடுத்த முக்கியமான விஷயம், அந்த பொண்ணு எப்பவோ இதெல்லாம் படிச்சிருக்கும். சும்மா ஒரு தடவை பார்த்தாலே அதுக்கு எல்லாம் ஞாபகத்துல வந்துரும்.

சில பொண்ணுங்க, ஹாரி பாட்டர் hermione மாதிரி, புத்தகத்துல இருக்கறத வார்த்தைக்கு வார்த்தை மனபாடம் செஞ்சு ஒப்பிபாங்க. நான் பல முறை இந்த மாதிரி பொண்ணுங்களை பார்த்து, அடங்கொக்கா மக்கான்னு ஷாக் ஆகிருக்கேன். சில நல்ல பொண்ணுங்க, எக்ஸாம் ஹால்ல நமக்கு சொல்லியும் தரதுண்டு. அவங்கெல்லாம் வாழ்க. சிலதுங்க, அப்படியே எழுதற ஷீட் மேல படுத்துகிட்டு எழுதுங்க. உள்ள இறங்கி தூர் வாருதோன்னு சந்தேகம் கூட நமக்கு வரு. என்ன சிக்னல் குடுத்தாலும் திரும்பாம இருந்து பல்பு குடுத்துருவாங்க. இடி இடிச்சா கூட "யாரோ கடுகு தாளிக்கரான்களோ" reaction தான் கிடைக்கும்.

வெளியில வந்து, ஏன் திரும்பியே பார்க்கலைன்னு கேட்டா, "நீ கூப்டியா???" அப்படின்னு கேப்பாங்க. இதெல்லாம் இருக்கட்டும். அந்த எக்ஸாம் பேப்பர் குடுக்கும்போது வரும் பாருங்க reactions. வாய்ப்பே இல்ல. எவ்வளவு மார்க் போட்டாலும், குடுத்த ஆள் கிட்ட போய், "சார், இதுல மார்க் கம்மி, இதுல total கம்மி, இங்க நான் நல்லாதான எழுதியிருக்கேன் ஏன் இப்படி மார்க் போட்டுருக்கீங்க??" அப்டி இப்டி ஏதாவது நொட்டு சொல்லி, வாத்தியாருக்கே அவர் படிச்ச படிப்பு மேல சந்தேகம் வர அளவுக்கு நச்சரிச்சு, குறைந்தபட்சம் அரை மார்க்காவது கூடுதலா வாங்கிட்டு, வெற்றி களிப்புல ஒரு இளிப்பு வேற இருக்கும் பாருங்க......

பசங்க பாவமா, என்ன மார்க், என்ன கேள்வி, என்ன பதில்னு புரியாம இருப்பானுங்க. முடிஞ்ச வரைக்கும், கரெக்ஷன் பண்ண பேப்பர்ல சந்தேகம் எதுவும் கேக்காம கமுக்கமா இருப்பாங்க. ஏன்னா நம்மாளுக்குதான் கேள்வியே ஒழுங்கா தெரியாதே. எங்க ஏதாவது  ஏடாகூடமா கேட்டு இருக்குற மார்க்கும் போய்டுமோன்னு ஒரு கிலி இருக்கும். குடுத்து முடிச்சிட்டு போன அப்புறம், பொண்ணுங்க மத்தியில, அத பத்தி ஒரு மணி நேரம் விவாதம் வேற நடக்கும். "அந்த சாருக்கு என்னை பிடிக்கலை, அதான் மார்க் கம்மி. அன்னிக்கு நான் அந்த மேடமுக்கு குட் மார்னிங் சொல்லல, அந்த காண்டுல சரியா கரெக்ஷன் பண்ணலை"னு புதுப் புது காரணமா, கும்பலா, கண்டுபுடிச்சிகிட்டிருப்பாங்க.

பொறவு யார் highest மார்க் அப்படின்னு calculation வேற நடக்கும். "நீ என்னைவிட ஜஸ்ட் மூன்றை மார்க் ஜாஸ்தி. பரவாயில்லை, நான் fail ஆயிருவேன்னு நினைச்சேன்"னு மனசாட்சியே இல்லாம பேசுவாங்க. ஒருத்தி 98, இன்னொருத்தி 95 வாங்கிருப்பா. எந்த பொண்ணுங்களையும் அசிங்கப் படுத்த நான் இந்த பதிவை போடலைங்க. எல்லாம் ஒரு பொறாமைலதான். என்னுடைய இஸ்கூல் படிப்புலேர்ந்து, இப்போ PG வரைக்கும் இதே கதை தாங்க. என்ன, இப்போ சில பொண்ணுங்க பீட்டர்ல feel பண்றாங்க. பெரிய வித்தியாசம் ஒண்ணுமில்லை. பொண்ணுங்க இப்படிதான் எப்பவுமேவா, இல்லை எப்பவுமே இப்படிதானான்னு எனக்கு ஒரே குழப்பம்.

வேணும்னா நான் சொன்னதை டெஸ்ட்டு பண்ணி பாக்கலாம். இந்த பதிவை நீங்க படிச்சிட்டு, பொறவு வேற ஒரு பொண்ணை படிக்க சொல்லுங்க. அந்த பொண்ணு படிச்சிட்டு, "அதெல்லாம் ஒண்ணும் இல்லை. நாங்க அப்படி கிடையாது, நீங்க தப்பா புரிஞ்சுண்டேள்" அப்படின்னு சொல்லிச்சுன்னா, அதுவே என் பதிவுக்கு கிடைச்ச வெற்றி. நான் கடைசில "HENCE PROVED" அப்படின்னு சேத்துக்கறேன். :))))




வேலைக்கு சேர்ந்த அப்புறமாவது திருந்துவாங்களா??

Wednesday, April 29, 2009

டைரியின் கைதி...

இந்த வருடம், என் வாழ்வில் மறக்க முடியாத ஒன்றாக ஆகிறது. என் நினைவில் வைத்துக்கொள்ளக்கூடிய அளவில், நிறைய நல்ல விஷயங்கள். So, இதை மறக்காமல், டைரியில் பதிவு செய்தே ஆக வேண்டும் என்று தோன்றியது. நம்மில் நிறைய பேருக்கு டைரி எழுதும் பழக்கம் இருக்கும். எனக்கில்லை. ஏற்கனவே இரு முறை முயற்சி செய்து, தோல்வியுற்றேன். இப்பொழுது எழுத உட்காரும்போது, ஆரம்பத்தில் சிறிது கடினமாகவே இருந்தாலும், போகப் போக வேகம் பிடித்து, இந்த நான்கு மாதங்களில் நடந்ததை, சிரமத்துடன் நினைவுகூர்ந்து, ஒரு வழியாக 47 பக்கங்களில் எழுதிவிட்டேன்.

5 நாட்களில், தினம், இரண்டு அல்லது மூன்று மணிநேரம் உட்கார்ந்து, எழுதினேன். யார் எழுதும் டைரியையும், ஏதாவது ஒரு காலத்தில், வேறொருவர் படிப்பார் என்பது திண்ணம். என்னுடையதும் அப்படியே. ஆனால், முடிந்த வரை, எனக்கென இருக்கும் ஞாபகங்களை, எண்ணங்களை, (i.e. exclusive thoughts and memories of mine) யாரிடமும் பகிர்ந்து கொள்ள நான் விரும்பவில்லை. So, நான் மொத்தமாக எதையும் எழுதப் போவதில்லை. இங்கே, என் டைரியின் முதல் பக்கத்தை மட்டும் கொடுக்கிறேன். படித்துவிட்டு எப்படி இருக்கிறதென்று (உண்மையை மட்டும்) சொல்லுங்கள். முக்கியமான விஷயம், இதற்கு மேல் என் டைரியிலிருந்து வேறெந்த பக்கங்களும், ப்ளோகில் வராது...

-------------------------------------------------------------------------------------------------
23 ஏப்ரல், 00:18am
"இது, கடந்த நான்கு மாதங்களாக (ஜனவரி 09 - ஏப்ரல் 09), என் வாழ்வில் நடந்தவைகளைப் பற்றிய, என் நினைவில் நின்ற, நான் இனி மறக்க முடியாத, மறக்கக் கூடாத, மறக்க விரும்பாத சம்பவங்களைப் பற்றியவை. இவ்வளவு நாள், டைரி எழுதும் பழக்கம் எனக்கில்லை. இரண்டு முறை முயற்சித்து, சோம்பேறித்தனத்தினாலும், பயத்தினாலும், தொடர்ந்து எழுத முடியாமல் போனது. கடந்த ஒரு வாரமாகவே, டைரி எழுதும்படி என் instinct சொல்லிக்கொண்டிருக்கிறது. அதனாலேயே, இந்த அகால வேளையில், நிறைய யோசித்ததின் விளைவாகவும், பழைய நினைவுகளின் தொல்லைகளாலும், எழுதிக்கொண்டிருக்கிறேன்.

ஒருவேளை
, இதை நானல்லாது, வேறு யாரேனும் படித்துக் கொண்டிருப்பீர்களேயானால், தயவு செய்து இத்துடன் நிறுத்திக் கொள்ளவும். மற்றவர்களது டைரியை படிக்கும் ஆர்வம் எத்தகையது என்பதை நானும் அறிவேன். நான் இங்கே கேட்டுக் கொண்டாலும், அலட்சியம் செய்துவிட்டுப் படிக்கத் தொடர்வீர்கள் எனவும் தெரியும். அப்படிப் பட்டவர்களிடம் நான் கேட்டுக்கொள்வது, இனி வரும் பக்கங்களை படித்து விட்டு, என் மேல் உங்களுக்கிருந்த அபிப்பிராயம், நல்லதோ கெட்டதோ, மாறினால், அதற்கு நான் பொறுப்பல்ல. இதை டைரியை நீங்கள் படித்துவிட்டது எனக்கு தெரிந்தாலும், உங்களிடம் எப்போதும் பழகுவது போலவே பழகுவேன். முடிந்தவரை, படித்ததை, வேறு யாரிடமும் சொல்ல வேண்டாமெனக் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

-------------------------------------------------------------------------------------------------

இதற்குப் பிறகே, விஷயங்களை எழுத ஆரம்பித்தேன். என்னுடைய எழுத்து நடை, ப்ளோகின் உதவியால், சிறிது முன்னேறி இருப்பதாக, எழுதி முடித்ததைப், படித்துப் பார்த்ததில் தெரிந்தது. அதை நானே சொல்லிக் கொள்ளக் கூடாதல்லவா, அதனாலேயே, ஒரு சோறு பதமாக, முதல் பக்கம் இங்கே. நன்றாக இருக்கிறதா என்று சொல்லுங்கள். நன்றி...

Sunday, April 12, 2009

ஆனந்தம், மகிழ்ச்சி, சந்தோஷம்...

வேற என்ன வார்த்தையெல்லாம் இருக்கோ, எல்லாத்தையும் சேர்த்துக்கோங்க.
நிஜமாவே, வார்த்தையால விவரிக்க முடியாத தருணம்னு என் வாழ்க்கைல இதுவரை, எதுவமே இருந்ததில்லை. இப்ப இருக்கு....

ஜெயா டிவி நிகழ்ச்சியில, நாங்க championship வாங்கிட்டோம்.

இவ்வளவு நாள் உழைத்த, உழைப்போட பலனை அனுபவிக்கும்போது......................... .................................................. என்ன சொல்றதுன்னே தெரியல போங்க.... :)

மனசுக்குள்ள இன்னும் வெடிச்சிகிட்டே இருக்கேன்...

Friday, December 26, 2008

கதை பண்றது....Part-3

போன பாகம் --->இங்கே<--- இப்ப, சிறுகதை, எழுத்தில்....

------------------------------------------------------------------------------------------------
ஒரு சின்ன short film ...


டக்.... டக்... டக்....கதவு தட்டும் சத்தம் கேட்டுது.

நான்
என்னோட ஆபீஸ்ல பெருசா வேலை எதுவும் இல்லாம உட்கார்ந்துகிட்டு இருந்தேன். மறுபடியும் கதவு தட்டப்பட்டது. அந்த பசங்கதான் வராங்கன்னு தெரியும். மறுபடியும் டக்... டக்... டக்... எவ்வளவு முறை சொன்னாலும் கேக்கமாட்டனுங்க. சத்தமா "போதும்பா கதவ தட்டுனது உள்ள வா" அப்படின்னேன். உள்ள வரும்போதே "நாங்க தான்னு முன்னாடியே தெரியுமா சார்?"னு கேட்டுகிட்டேதான் வந்தான் ரெண்டு பேர்ல ஒருத்தன்.

"இந்த காலத்துல யாருடா கதவ தட்டிட்டு உள்ள வராங்க, வர எல்லாரும், உள்ள வந்துட்டு, அப்பறம் excuse me சார், may i enter sirனு கேக்கறாங்க. நீங்க மட்டும்தான் கதவ தட்டிட்டு வரீங்க. சரி, இன்னிக்கு என்ன shoot பண்ணிருக்கீங்க?". "நீங்களே பாருங்க sir"னு சொல்லிட்டு, தோள்ல மாட்டிருந்த handy cam baga ஓபன் பண்ணி, கேமரா குடுத்தான், பதில் சொன்னவன். அதுல LCD screena ஓபன் பண்ணி play பண்ணேன்.

வழக்கம் போல ஏதோ நியூஸ் ரீல் மாதிரி ஒரு டாகுமெண்டரி. எடிட் பண்ணாத அந்த footage ஓடிச்சு. இந்த ரெண்டு பசங்கள பத்தி சொல்ல மறந்துட்டனே. இந்த கேமரா குடுத்த பையன், என்னோட சிஷ்யன் மாதிரி. நல்ல creativity இருக்குற, கஷ்ட்டப்படுற பையன். நான்தான் financiala கொஞ்சம் ஹெல்ப் பண்ணி, Visual Communication படிக்க சொன்னேன். கடந்த ஒரு வாரமா, அவனோட நண்பனோட, காலேஜ்ல ஏதோ போட்டிக்காக, ஒவ்வொரு படமா எடுத்து, என்கிட்ட opinion கேட்க வந்துகிட்டு இருக்கான். நானும், அவன வெறுப்பேத்த, எதுவும் நல்லா இல்லன்னு சொல்லிகிட்டே இருக்கேன்.

இந்த படம் முடிஞ்ச அப்பறமும், கேமரா வழக்கம் போல கீழ வெச்சிட்டு, "அப்பறம் சொல்லுங்கப்பா"னு சகஜமா ஆரம்பிச்சேன்.

அவன் - "என்ன sir அப்பறம், எப்படி இருக்குன்னு சொல்லுங்க".

நான் - "எப்பவும் போலதான், ஒரே மாதிரி montage, interview and ஒரே மாதிரி சாதாரணமா இருக்கு".

அவன் - "இதுக்கு மேல எப்படி sir எடுக்க முடியும்"

நான் - "என்னை கேட்டா எப்படி, நீ தான vis com student. நீதான் வித்தியாசமா யோசிக்கணும். இத கொண்டு போய் காலேஜ்ல குடுத்த, அப்படியே எடுத்து ஓரமா வெச்சிட்டு, போயிட்டுவான்னு அனுப்பிருவாங்க"

ரெண்டு பேரும் ஒருத்துர ஒருத்தர் குழப்பமா பாத்துகிட்டாங்க. அப்பறம் அவன், "ஓகே sir, நாளைக்கு நாங்க ஒண்ணு shoot பண்ணிக்கிட்டு வரோம், அத பாத்து நீங்க கட்டாயம் ஷாக் ஆகப் போறீங்க பாருங்க"னு சொன்னான்

"பாக்கலாம் பாக்கலாம். சரி, நீங்க இப்ப கிளம்புங்க, எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு"னு அவங்கள கிளப்பினேன்.

"சரி sir"னு சொல்லிட்டு அவங்க போன நேரம், எனக்கு ஒரு போன் வந்தது. கொஞ்ச நேரம் பேசுன அப்பறம், சரியா சிக்னல் கிடைக்கல, அதனால, "கொஞ்சம் இருங்க sir"னு போன்ல சொல்லிகிட்டே, கதவை திறந்து, balcony வந்து, பேச ஆரம்பிச்சேன். கீழ வேடிக்கை பாத்துகிட்டே பேசும் போது, அந்த ரெண்டு பசங்களும் ஏதோ discuss பண்ணிக்கிட்டு இருந்தாங்க. கொஞ்ச நேரம் கழிச்சு, என்னோட சிஷ்யன் ஏதோ சைகை செய்ய, அவன் நண்பன் வண்டிய ஸ்டார்ட் பண்ணான். "அப்பறம் பேசறேன் sir"னு போன் லைன கட் பண்ணிட்டு, கவனிச்சேன்.

கேமராவும் கையுமா, பின்னாடி உட்கார்ந்த சிஷ்யன், அப்படியே ரெகார்ட் பண்ண ஆரம்பிச்சான். எனக்கு என்ன shoot பண்ண போறாங்கன்னு புரிஞ்சிடுச்சு. நான் பார்த்த அவங்க பாக்கல. சிரிச்சுகிட்டே மறுபடியும் உள்ள போனேன்.

அடுத்த நாள்.

டக்... டக்... டக்... மறுபடியும் சிஷ்யன். "வாங்கப்பா உள்ள, உங்கள கதவு தட்ட வேணாம்னு எவ்வளவு தடவ சொல்றது". ரெண்டு பேரும் உள்ள வந்தாங்க. ஆனா இப்ப எதுவும் பேசாம, என் கைல கேமரா குடுத்துட்டு உட்கார்ந்தாங்க. "எப்படியும் என்ன shoot பண்ணேன்னு சொல்ல மாட்டீங்க, சரி குடுங்க"னு கேமரா வாங்கி play பண்ணேன். நான் நினைச்ச மாதிரியே, வண்டியில் உட்கார்ந்துகிட்டே, வர டிராபிக் எல்லாத்தையும் shoot பண்ணிருந்தாங்க. சிரிச்சிகிட்டே சொன்னேன், "நான் அப்பவே நினச்சேன், நீங்க இப்படிதான் shoot பண்ணுவீங்கனு. எதுக்கும் fulla பாக்கறேன்".

Footage ஓட ஆரம்பிச்சது. போகும்போது இவங்க பேசுனதும் ரெகார்ட் ஆகி இருந்தது. ஒரு அஞ்சு நிமிஷத்துக்கு அப்பறம் போர் அடிக்க ஆரம்பிச்சது. கரெக்டா, அத சொல்லலாம்னு நினைக்கும் போது, ஒரு அதிர்ச்சி. இவங்க வண்டிய நோக்கி ஒரு லாரி வேகமா வர, இவங்க அத கவனிக்கல போல. லாரி வண்டிய மோத, அதுவும் ரெகார்ட் ஆகியிருந்தது. திடீர் சுவாரஸ்யம் தாங்காம பாத்துகிட்டே இருந்தேன். கேமரா கொஞ்சம் நேரம் blank ஆகி, மறுபடியும் உயிர்வரும்போது, கேமராசுத்தி, இல்ல, இவங்கள சுத்தி ஒரு கூட்டம்.

கூட்டத்துல ஒருத்தருக்கொருத்தர் ஏதோ பேச, ஆனா யாரும் எதுவும் உதவி செய்ய முன் வரல. அவங்கள்ல ஒருத்தன், இந்த கேமரா பாத்து அத எடுக்க கைய வெக்க, casseette முடிஞ்சு static வர ஆரம்பித்தது. எனக்கு ஒண்ணும் புரியல. குழப்பத்தோட, கேமரா கீழ வெச்சிட்டு, "என்னப்பா எடுத்திருக்கீங்க"னு கேட்டேன். ரெண்டு பேரும் சிரிச்சுகிட்டே ஒருத்தர ஒருத்தர் பாத்து சிரிச்சிகிட்டாங்க. அப்பறம், மெதுவா காத்துல மறஞ்சிடாங்க.

நிஜமாவே காத்துல மறஞ்சிடாங்க.

அதிர்ச்சியோட, கீழ இருந்த கேமரா பார்த்தா , அதுவும் அங்க இல்ல.
அடுத்த வினாடி,

டக்... டக்... டக்... கதவு தட்டப்பட்டது....

-------------------------------------------------------------------------------------------------

First person narrative was kind of easy to me. So wrote it that way. but the film was not taken as FPN. Here is the video of the short film. I dont have previous experience both in writing short story and taking a short film. So, please excuse me.... thank you...



Sunday, December 21, 2008

கதை பண்றது....Part-2

First part படிக்காத நேயர்கள், -- இங்கே -- போய் படிச்சிட்டு தொடரலாம்...

ரொம்ப கஷ்டப்பட்டு யோசிச்சிகிட்டு இருந்தேன். சில மாதங்களுக்கு முன்ன, "BLOW-UP" அப்படின்னு ஒரு இங்கிலீஷ் படத்த பற்றி, ஆனந்த விகடன்ல படிச்சு, கதை வித்தியாசமா இருந்ததால, டவுன்லோட் செஞ்சு பார்த்தேன். அது ஒரு free-end ஸ்டோரி. அதாவது படத்தோட முடிவை, audience எப்படி வேணும்னாலும் assume பண்ணிக்கலாம். Ok, நாமளும் இத மாதிரி ஏதாவது வித்தியாசமா யோசிப்போம்னு அப்பவே முடிவு பண்ணேன்.

இந்த கதை யோசிப்பு நாட்களுக்கு, சில வாரங்கள் முன்னாடி, விஜய் குமார் அண்ணா, ஒரு பேய் கதை சொன்னாரு. நானும் அவரும் ஒரு நாள் பைக்ல போகும் போது, நான் பின்னாடி உட்கார்ந்துகிட்டே, வழியில வர எல்லாத்தையும் shoot பண்ணேன். அப்ப அண்ணா என்ன சொன்னாரு, "இப்ப நமக்கு accident ஆய்டும், நாளைக்கு நம்மளோட ஆவி, பாலா அண்ணாவுக்கு இந்த படத்த போட்டு காமிக்கும். இந்த accident சீன் அதுல record ஆகியிருக்கும். அந்த சீன் பாத்துட்டு, அண்ணா shockingaa நம்மள பாப்பாரு. நாம சிரிச்சிகிட்டே, புகைல மறந்சிடுவோம். சூப்பரா இருக்கும்ல".

அண்ணா சொன்னது என்னமோ நகைச்சுவைக்காக. ஆனா நான், இத short filma, எடுக்கலாம்னு அப்போ சொல்லி வெச்சிருந்தேன். So, சட்டுனு அந்த கதை ஞாபகம் வந்துச்சு. அதையும் இந்த BLOW-UP கதையையும், மிக்ஸ் பண்ணி, இந்த accident கதைய, ஒரு காமெடி கதையா இல்லாம, ஒரு super natural free-end கதையா மாத்தினேன். ஆனா, இந்த கதைய கேட்ட, 90% மக்களுக்கு, கான்செப்ட் புரியல. மனம் தளராம, நான் explain பண்ண அப்பறம், நல்லா இருக்குன்னு சொல்லுவாங்க.

எங்க சாருக்கும், explain பண்ணினேன். அவரு வேற கதை யோசிக்க சொன்னாரு. ஆனா நான் விடாப்பிடியா, இந்த கதையதான் கடைசில எடுத்தேன். ஆனா நான் நினச்சது போல படம் வரல. So எனக்கு திருப்தி இல்ல. இருந்தாலும், முதல் கதை/short பிலிம், ரொம்பக் கேவலமா இல்லாம, நல்லாவே வந்துச்சுன்னு சொல்லிக்கிற அளவுக்கு எடுத்திருந்தேன். இந்தப் படம் எடுக்கும் போது பல வாழ்கைப் பாடங்கள் கெடச்சுது. So, இப்படியாகத்தானே, நான் எனது முதல் கதையை யோசித்து, முதல் குறும் படத்தையும் (வெற்றிகரமாக) எடுத்து முடித்தேன். முக்கியமான விஷயம், இந்த படத்தோட முடிவு, பல சுஜாதா கதைகளோட பாதிப்புனால....

இந்த பதிவோட அடுத்த பாகத்துல, அந்த கதையும், படமும், உங்க பார்வைக்கு...

ஓபன் பண்ணவுடனே.......

Friday, December 12, 2008

கதை பண்றது....Part-1

கதை பண்றதுனா என்னான்னு உங்களுக்கு தெரிஞ்சிருக்கலாம், இருந்தாலும் சொல்றேன். சும்மா வேலை செய்யாமலே செய்யறாப் போல பாவ்லா பண்றதுதான் கதை பண்றது. உதாரணத்துக்கு, நம்ம வடிவேல் காமெடி ஒண்ணுத்துல, ஒரு ஆள் பஸ் தள்ளாமையே "ஹே தள்ளு தள்ளு தள்ளு"னு கதை பண்ணுவார். இத மாதிரி பல பேர் இருக்காங்க. ஆனா நான் சொல்லவந்தது இந்த கதை பண்றதப் பத்தி இல்ல, இது நெஜமாவே ஒரு சிறுகதையோ, தொடர்கதையோ, சினிமாவுக்கான கதையோ பண்றதப் பத்தி....

கதை எழுதனும்னு நான் எப்பவும் முயற்சி பண்ணது இல்ல. ஆனா சின்ன வயசிலேர்ந்தே நிறைய படிச்சிருக்கேன். அப்பெல்லாம் மாலைமதினு ஒரு novel + வாரப் பத்திரிக்கை ஒண்ணு வரும். அதுல வர கதைகள் பல, குப்பையா இருந்தாலும், சும்மா படிக்கற பழக்கதுக்காக வீட்ல வாங்குவாங்க. என் அம்மாவும் நிறைய படிப்பாங்க. கதை கவிதை எல்லாம் எழுதுவாங்க. அவங்களுக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்காததுனால ஆர்வம் குறைஞ்சுடுச்சு. ஆனா அவங்களால எனக்கும் நிறைய படிக்கற பழக்கம் வந்தது. (ஆனா எனக்கு கவிதை ரசிக்கவும் எழுதவும் தெரியாது)...

நான் முதல்ல ஒரு முழு novel படிச்சது ஒரு ரயில் பயணதப்போ. அப்ப நான் 3rd ஸ்டாண்டர்ட் படிச்சிகிட்டு இருந்தேன். கதையோட பேர்கூட காவல் கல்யாணம். கதை செரியா ஞாபகம் இல்ல. அதெல்லாம் விடுங்க, இப்ப என்ன சொல்ல வரேன்னா, நான் நெறைய கதை பண்ணிருக்கேன்/படிச்சிருக்கேன் அப்படீங்கறதுதான். இதோட, லைப்ரரி மெம்பெர் வேற. கேக்கணுமா, ஒரே கதைதான் (ஒன்லி தமிழ் கதைகள், நோ peters). இப்படியாக போய்கிட்டு இருந்த கதைல, சுஜாதா சார் கதைகள் என்னை ரொம்ப influence பண்ணிச்சு. ஒரு கதை எப்படி இருக்கணும்னு நான் அவரோட பல கதைகள படிச்சுதான் கத்துகிட்டேன்.

என்னோட இளங்கலை பட்டப் படிப்பு (அதான் UG) ரெண்டு semesterlayum, ஒரு படம் எடுக்கணும். முன்ன ஒரு பதிவுல சொன்னா மாதிரி, எடுத்த படம் ஒண்ணு. கடைசி ஸெம்ல ஒரு குறும் படம் (ஷார்ட் பிலிம்) எடுக்கணும். அதுக்கான கதைய ரெடி பண்ண சொன்னாரு எங்க சார். எனக்கு ரொம்ப நாளாவே சுஜாதவின் சிறுகதைகள்ல ஏதாவது ஒண்ண எடுக்கனும்னு ஆசை. ஆனா கூட இருக்குற என்னோட ஒரு நண்பன் சுஜாதா கதைகள்ல ஒண்ண எடுக்கப்போராத சொன்னதுனால நான் என்னோட திட்டத்த கை விட்டேன். எனக்கு ஒரு பெரிய problem. என்னால ஒரு பழைய conceptku புதுசா பல modifications பண்ணி/ improvise பண்ணி நாசம் பண்ண தெரியும். ஆனா புதுசா ஒரு கான்செப்ட் யோசிச்சு கெடுக்க பல நாள் டைம் வேணும்.

ஆனா, எங்களுக்கு இருந்ததோ ரொம்ப கம்மியான டைம். அதனால என்ன பண்ணலாம்னு யோசிச்சிகிட்டு இருந்தேன். நீங்களும் யோசிச்சுகிட்டே இருங்க, மீதிய அடுத்த பதிவுல சொல்றேன்.......


இத தான காலங்காலமா பண்றேன்.....

p.s.இது lancelot போட்ட பதிவுனால பாதிப்பு அடைஞ்சு எழுதுன பதிவு இல்ல. இத நான் ஒரு 20 நாளாவே draftla save பண்ணி வெச்சுருக்கேன்...

Thursday, December 4, 2008

வெட்டுனேன் பாருங்க...

இந்த மாதிரி ஆகும்ன்னு நினைச்சே பாக்கல. ஆனா இதுக்கு நான் காரணம் இல்ல. என்ன சுத்தி இருக்குற "சமுதாயமும்" "மக்களும்"தான் காரணம். நானும் எவ்ளோதான் முயற்சி பண்றது..........................
நீங்க திட்டுறதுக்கு முன்னாடி மேட்டர் என்னான்னு சொல்றேன். என் பிறந்தநாளுக்கு (இன்னிக்கு - 4/12) கேக் வெட்டுனதப் பற்றிதான் நான் மேல சொன்ன விஷயம் எல்லாம்...

என் கிளாஸ்ல யாருக்காவது பர்த்டேனா கேக் வெட்டி கொண்டாடுறது வழக்கம். அந்த பிறந்தநாள் குழந்தைக்கு புடிக்குதோ இல்லையோ, எல்லாரும் சேர்ந்து கேக் வெட்டி, அத சாப்பிடவும் செய்யாம மூஞ்சில அடிச்சு வெளையாடுரதுனு அன்னிக்கு ஒரே பாசம்ஸ் of இந்தியாவா மாறிடுவாங்க. எனக்கு இந்த கேக் வெட்டி கொண்டாடுறதுல விருப்பம் கிடையாது. அதே சமயத்துல யாராவது கேக் வெட்டுன அவங்க கைய புடிச்சு நியாயம் பேசமாட்டேன். ஏன்னா என் பாலிசி எனக்கு.

எப்பவும் date of birth கொண்டாடாம, ஸ்டார் பர்த்டே மட்டும்தான் கொண்டாடுவேன். ஏதோ தமிழ் பித்துன்னு வெச்சுக்கோங்களேன். அதுவும் இல்லாம நான் பிறந்தது கார்த்திகை தீபம் அன்னிக்கு (பெயர் காரணம் கவனிக்க). ஏதோ அன்னிக்கு ஊரே சந்தோஷமா இருக்கும், நாம இன்னும் எக்ஸ்ட்ராவான சந்தோஷத்தோட இருப்பமேனு ஒரு நல்ல எண்ணம்தான். இன்னிக்கு பிறந்தநாள் ஆர்பாட்டம் எதுவும் இல்லாம, வழக்கம் போல காலேஜ் போனேன். ஆனா விஷயம் தெரிஞ்ச ரெண்டு பேர் விஷ் பண்ணதுல எல்லாருக்கும் மேட்டர் தெரிஞ்சுபோச்சு...

உடனே எனக்கு தெரியாம கேக் வாங்க பிளான் போட்டாங்க. (கொஞ்சம் மெதுவா பேசிருக்கலாம்) நானும் ரொம்ப தன்னடக்கத்தோட "மக்களே, எனக்கு கேக் வெட்டுவது புடிக்காது, எனக்கு அதுல நம்பிக்க இல்ல. So, தயவுசெஞ்சு வாங்கிடாதீங்க"னு சொன்னேன். கேப்பாங்களா?? "மவனே மத்தவங்க பொறந்தநாள்ல மூஞ்சுல கேக் பூசும்போது மட்டும் பாத்துகிட்டு சும்மா இருந்தல்ல, இன்னிக்கு வா நீ மாட்டுனா"னு நெனச்சிருப்பாங்க போல.
"கான்டீன் வா"னு சொல்லிட்டு, Galleryla கேக் வெச்சு வெட்ட சொன்னாங்க.

அப்பவும் ஏதாவது சீன் create பண்ணி கேக் வெட்ரத புறக்கணிக்கலாமானு பார்த்தேன். But அவங்க பாசமா வாங்கிட்டு வந்தத அப்படி பண்ணா நல்லா இருக்காதுனு பட்டுது. எனவே நானும் வெட்டுனேன் பாருங்க, வழக்கம் போல யாரும் சரியா கேக் ஈட்டாம, என் முகத்துக்கே குறி வெச்சு பூசுனாங்க. இவுங்கள இன்னான்னு சொல்றது. இது இல்லாம என் அளவு (உயரத்துல)ஒரு பெரிய greeting கார்டு + leather purse(உள்ள காசுதான் இல்ல) அன்பளிப்பு வேற. இப்படியாகத்தானே என் பிறந்தநாள் என் கல்லூரி நண்பர்களுடன் இனிதே நடந்து முடிந்தது.

அடுத்த முறை எப்படி இருந்தாலும் கேக் வெட்டக்கூடாதுனு முடிவு பண்ணிருக்கேன். என் எண்ணங்களுக்கு என் நண்பர்கள் மரியாதை குடுப்பாங்கன்னு நம்பறேன். இத்தருணத்திலே, என்னை வாழ்த்திய அனைத்து உற்றார், உறவினர் மற்றும் நண்பர்களுக்கு நன்றிகளும், இந்தத் தருணம் வரை பிறந்தநாளை மறந்து 'belated wishes" சொல்லப்போகிறவர்களுக்கு மன்னிப்பையும் தெரிவித்துக் கொள்கிறேன். கடைசியா ஒரு குட்டி அறிவுரை + கவிதை..

Veg கேக்,
Non-Veg கேக்,
எதுவா இருந்தாலும் சரி..
கேக் வெட்டுறது தப்பு இல்ல...
கேக்காம வெட்டுறதுதான் தப்பு...
!!!...

small correction Its "Karthick Krishna"

Friday, November 7, 2008

காதல் கசக்குதய்யா - Part 2

முதல் பாகம் படிக்காதவங்க --> இங்க போய் <-- படிச்சிட்டு அப்பறம் தொடருங்க...

என் முறை வந்ததும் பாடறத்துக்கு மேடை ஏறினேன். கூட வாசிக்க ஒரு drumpad + keyboard இருந்துச்சு.. அவங்க குத்து மதிப்பா வாசிக்கறதா சொன்னாங்க. நான் வழக்கம் போல பெருசா பீல் பண்ணாம " காதல் கசக்குதய்யானு" ஆரம்பிச்சேன். அவ்வளவுதான். எல்லாரும் கத்த ஆரம்பிச்சாங்க. கத்தல்னு சொல்றத விட, ஆரவாரம்னு சொன்னாதான் பொருத்தமா இருக்கும். அவ்ளோ ஆரவாரத்துக்கு மத்தியில, கண்ண மூடிகிட்டு நெஜமாவே ரொம்ப ரசிச்சு பாடினேன்.

பாடி முடிச்சு மேடை இறங்கி வரும்வரை ஆரவாரமும் கைதட்டலும் நிக்கல. கீழ இறங்கி வந்ததும், தெரிஞ்சவங்க தெரியாதவங்கனு எல்லாம் பாராட்ட ஆரம்பிச்சுடாங்க. இதுவரைக்கும் நான் பாடின எல்லா சமயங்கள்ளையும், பாடி முடிச்சவுடனே எல்லாரும் பாராட்றது சகஜம் (என்ன தன்னடக்கம்!!!). அந்த மாதிரி பலபேர் பாராட்டுனாலும், நெறைய தடவ எனக்கு பரிசு கிடைச்சதில்ல. இதுவும் அது மாதிரி ஒரு பாராட்டுதான்னு நெனச்சேன். ஆனா, எனக்கு கெடச்சது முதல் பரிசு. நம்பவே முடியாத ஒரு தருணம் அது.

போட்டில participate பண்ணவே முடியாதுங்கற நிலைம போய், முதல் பரிசுனா எப்படி நம்ப முடியும். வாய்நெறைய, நம்பமுடியாத சிரிப்போட போய், prize வாங்கினேன். நான் பாடினத விட, பாடினதுக்கும், அந்த பாட்டிற்கும் கெடச்ச கைதட்டலும் ஆரவாரமும்தான் எனக்கு பரிசு வாங்கி கொடுத்துச்சு. அப்பதான் புரிஞ்சிகிட்டேன், போட்டிகள்ள, judgea விட, பாட்டு கேக்கற ரசிகர்களோட response தான் முக்கியம்னு. அடுத்த ரெண்டு வருஷம், என் காலேஜ்ல நடந்த ரெண்டு பாட்டு போட்டிலயும் (வருசத்துக்கு ஒண்ணுதான் நடக்கும்) நான்தான் first prize வாங்கினேன்.

Second year "பனிவிழும் மலர்வனம்" and third year, போக்கிரி படத்துல வர "வசந்த முல்லை" பாடல்களும் பாடினேன். அந்த ரெண்டு வருஷமும் judgea வந்தது, எனக்கு முதல் வருஷம் studenta இருந்து ஹெல்ப் பண்ண என்னோட சீனியர்s, கௌதம் பரத்வாஜ் and ஹரிணி. இந்த hat-trick அடிச்சதுல, என்ன விட, என் அம்மாவுக்கும் நண்பர்களுக்கும்தான் ரொம்ப பெருமை. இந்த வெற்றிகள்ள என் seniors பங்கும் இருக்கு. அவங்க நான் எப்ப பாடுனாலும் நல்லா உற்சாகப்படுத்துவாங்க.

இப்ப recenta, என்னோட PG first yearla, போன வாரம் எங்க காலேஜ்ல (அண்ணா பல்கலைக்கழகம்) நடந்த பாட்டு போட்டியிலையும், முதல் முறையா (அதாவது இந்த காலேஜ்ல முதல் முறையா), காதல் கசக்குதய்யா பாடல் பாடி first prize வாங்கினேன். பரிசு வாங்கினதும், அந்த மேடைலையே, இளையராஜா sirku ஒரு தாங்க்ஸ் சொன்னேன். என் seniorsoda விருப்பத்திற்கு இணங்க, காதல் கசக்குதய்யா பாடல நான் பல மேடைகள்ல சும்மா போய் பாடிருக்கேன். என் நண்பன் ரகுவும் அந்த பாடல பாடும்போது ரொம்ப ரசிப்பான்.

So, இதுதான் காதல் கசக்குதய்யா பாடல் என் வாழ்க்கைல ஒரு அங்கமா மாறின கதை. இத்தருணத்திலே, என்னை சிறு வயதிலிருந்து, பாட உற்சாகப்படுத்திவரும் என் குடும்பத்திற்கும், என் நண்பர்களுக்கும், என் seniorskum முக்கியமாக இளையராஜாவிற்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். கீழ அந்த play buttona கிளிக்கினா அந்த பாடல் கேட்கலாம்... கவலை படவேண்டாம், இது நான் பாடினது இல்ல, original version of the song...
காதல் கசக்குதய்யா முற்றும்..

Saturday, November 1, 2008

காதல் கசக்குதய்யா - Part 1

பி.கு.feelingsa நான் எதுவும் சொல்ல வரல. இது காதல் கசக்குதய்யானு ஆரம்பிக்கற ஒரு பாட்டு பற்றி சொல்ற பதிவு..

என்னோட இரண்டாம் கிளாஸ் படிக்கும்போதுதான் முதல் தடவை ஒரு பாட்டுப் போட்டியில கலந்துகிட்டேன். என்னோட முதல் பாடல் "காதல் ரோஜாவே" from "ரோஜா", அதுல எனக்கு first prize. அதுக்கப்பறம் நெறைய போட்டிகள்ள கலந்துகிட்டு நெறைய மொக்கைகளும், சில பரிசுகளும் வாங்கிருக்கேன். காலேஜ் போன அப்பறம் கூட, பாட்டு போட்டி பழக்கத்த விடாம வெச்சிருந்தேன். முதல் வருஷம் நான் கலந்துகிட்ட ஒரு போட்டியாலதான் எனக்கு ஒரு ஞானோதயம் கெடச்சுது..

காலேஜ்ல என்னோட சீனியர்s, airtel super singer புகழ், கௌதம் பரத்வாஜ் and காதல் படத்துல வர்ற "தொட்டு தொட்டு என்னை" பாடல் பாடுன ஹரிணி. அதுவரைக்கும் பல பரிசுகள் வாங்கினவங்க, அவங்களோட final yearla, organising teamla வந்துட்டாங்க. So, அவங்க மேற்பார்வைல நடந்த ஒரு போட்டிக்கு நான் போனேன், நான் நல்லா(!!!) பாடுறத பாத்துட்டு(கேட்டுட்டு), கௌதம் என்னபத்தி கேட்டாரு. விசாரிச்சதுல அவருக்கு என் அண்ணன நல்லா தெரியும்னு தெரிஞ்சுது. (என் அண்ணனும் அதே கல்லூரிதான்)

கௌதம் பரிச்சயம் கெடச்சதுனால, பல போட்டிகள் பற்றி தெரிய ஆரம்பிச்சுது (including ஆஹா பாடலாம் in DD). ஆனா காலேஜ் annual day song competition பற்றி எனக்கு சொல்ல மறந்துட்டாரு. competition finals எங்க காலேஜின் பெரிய ஹால்ல நடக்கும். So அத shoot பண்ண சொல்லி எங்க சார் சொல்லும்போதுதான் எனக்கு அந்த போட்டிய பத்தி தெரியவந்துச்சு. போற வழில கௌதம் வர, நான் அவர பாத்து, ஏன் சொல்லலனு கேட்டேன். அவர் நெஜமாகவே மறந்து போயிருந்தாரு, organiser வேற.

So அத ஒரு பெரிய mattera எடுத்துக்காம (பெருந்தன்மையோட) "சரி அடுத்த முறை கலந்துக்கறேன்"னு சொல்லிட்டேன். நானும் என் cameraman friend பிரேமும், கொஞ்ச நேரம் அங்க கேமாராவும் கைகளுமா அலைஞ்ச அப்பறம், திடீர்னு கௌதம் என்கிட்டே வந்து, "நாங்க பத்து participants செலக்ட் பண்ணிருந்தோம், அதுல ஒரு பையன் வரல, அதுக்கு பதிலா நீ பாடுறியா"னு கேட்டாரு, நானும் இதுல என்ன இருக்குன்னு நெனச்சிகிட்டு சரின்னு சொன்னேன்.

பிரேம், "என்ன பாட்டு பாடப்போறே"னு கேட்டான். அந்த காலகட்டத்துல, என்னோட இன்னொரு friend ரகுநாத், ஆண் பாவம் படத்துல வர்ற "காதல் கசக்குதய்யா" பாடல டவுன்லோட் பண்ண சொல்லி கேட்டுகிட்டிருந்தான். நானும் டவுன்லோட் பண்ணேன், அத எங்க ஆடியோ லேப்ல போட்டு கேட்டுகிட்டே இருப்போம். So, அந்த பாடல் பாடலாம்னு முடிவு பண்ணேன். Judge யாருனா, டைலாமோ பாடல பாடுனா திருமதி.சங்கீதா ராஜேஸ்வரன். கடைசியா என்னோட முறை வந்துச்சு. பாடறத்துக்கு மேடை ஏறினேன்......

தொடரும்....

http://www.city.sendai.jp/kikaku/kokusai/english/images/simc.jpg
இவ்ளோ பிரம்மாண்டமா இல்லனாலும், ஏதோ இருந்துச்சு

Monday, October 27, 2008

பீட்டரும் நானும்...Part 2

இங்கிலிஷ் பேசறதுக்கு எவ்ளோ உரிமை இருக்கோ, அதே அளவு, பேசாம இருக்குறதுக்கும் உரிமை இருக்குன்னு நம்பர ஆள் நான். இங்கிலீஷ் பேசறதுல எனக்கு இருந்த பிரச்சனைய போன பதிவுல சொல்லியிருந்தேன். அதன் தொடர்ச்சி.

என்ன சோதனைனா, என்னோட இந்த semesterla "language lab" அப்படின்னு ஒரு practical பேப்பர் இருக்கு.. அதுக்கான தேர்வு மாதிரி சிலது நடக்கும், அதுல, group discussion, online test மற்றும் Presentation இருக்கு.. group discussion and online test முன்னாடியே முடிஞ்சிருச்சு.. மிச்சம் இருக்கறது Presentation மட்டுமே. நான் சொன்ன சோதனை இந்த இடத்துல தான். Presentation மொத்தமும் இங்கிலிஷ்லதான் இருக்கணும். எப்பவுமே தர்மதுக்குதான் சங்கடம் வரும், அதனாலதான் அதுக்கு தர்மசங்கடம்னு பேர் வெச்சிருக்காங்க.

எனக்கு குடுக்கப்பட்ட/எடுத்துக்கொண்ட topic, "Moral values in today's society". பத்து நிமிஷம் present பண்ண தோதான தலைப்புதான், இருந்தாலும் அந்த பத்து நிமிஷமும் பீட்டர்லதான்பேசனும்னா நமக்கு கொஞ்சம் ஒதைக்கும். இருந்தாலும், இரண்டாவது முறையா, விவேகானந்தரோட "face the brute" ஞாபகம் வந்து உதவிச்சு. So, ரமேஷ் அண்ணா உதவியோட, நானும் சில points சேர்த்து, ஒரு powerpoint Presentation பண்ணேன். என்னை பொருத்த வரை, முதல் Presentation அப்படிங்கற பார்வைல பார்க்கும்போது, நான் நல்லாவே பண்ணேன்னு தோணுது.

பீட்டர்ல எனக்கு பொதுவான பிரச்சனை(கள்) என்னனா, ஒரு மொழிய பேசனும்னா, அந்த மொழில சிந்திக்க ஆரம்பிக்கணும், ஆனா தமிழவிட வேற எந்த மொழிலயும் சிறப்பாக சிந்தக்கமுடியாதுங்கர என்னோட கருத்துனால, என்னால இங்கிலிஷ்ல சிந்திச்சு பேச முடியாது. நான் எல்லார்கிட்டயும் சொல்றது என்னன்னா, "i dont speak english, i just translate". அதுவும் ஒரு formal speakingnu வரும்போது, ரொம்பவே தடுமாறிடுவேன். Informal speakingla பொளந்து கட்டுவனான்னு கேக்காதீங்க, அது ஓரளவு சுமாராவே வரும்.

இங்கிலிஷ் grammar சுமாரா தெரியும்ங்கரதனால, பேசும்போது, வார்த்தைல தப்பு வந்துரக்கூடாதுன்னு, ரொம்பவே ஜாக்கிரதையா நிதானமா பேசுவேன். அதுவே தடுமாற்றத்துக்கு எடுத்துட்டு போய்டும். சீ சீ இந்த பழம் புளிக்கும் போல இல்லாம, இயல்பாவே எனக்கு இங்கிலிஷ் புடிக்காம போய்டுச்சு, இது போல சோதனைகளால இன்னும் புடிக்கல. ஆனா இத மாதிரி பிரச்சனைகளால, தனியா பாத்ரூம் போய் அழுவற பார்ட்டி நான் இல்ல. நமக்கு எல்லாமே "face the brute தான்".

எதிர்காலத்துல, கண்டிப்பா இவ்ளோ தடங்கல் இல்லாம, இங்கிலிஷ் பேசுவேன்னு நம்பிக்கை இருக்கு. சொல்லப்போனா, இன்னொரு Presentation வெச்சா கூட, அதுல முன்னைவிட நல்லா பண்ணுவேன்னு நினைக்கறேன். என்னுடைய இந்த Presentation முடிஞ்ச அப்பறம் வந்த feedbacks தெரியனும்னா கேளுங்க, தனியா மெயில் பண்றேன். இதுபோன்ற சமயங்கள்ல எனக்கு நானே சொல்லிகறது, "விட்ரா, அப்துல் கலாமே கடைசி பென்ச்லதான் உட்கார்ந்தாரு"!!!

பீட்டரும் நானும் முற்றும்....

http://content.pimp-my-profile.com/userpics/funny_pictures/random_sign.jpg
இதவிட மோசமாவா இருந்துரமுடியும்
(படங்கள் - போனபதிவும் இந்தபதிவும், ஜப்பான்லேர்ந்து)