Wednesday, August 18, 2010

Inception பதில்கள் - 3

இன்னும் தொடருது...

@ஜெய்
//படத்துல புரியாதது காட்டாதது எல்லாமே ஓபன் எண்ட்-ஆ ஒத்துக்க முடியலைங்க... //
 கண்டிப்பா அப்படி இல்லை...

//நாம எல்லாருமே புரியாத விஷயங்களையும் ஓபன் எண்ட்-னு நினைச்சுகிட்டு,
நமக்கு பிடிச்சா மாதிரி புரிஞ்சுக்கறோம்னு நினைக்கிறேன்... //
இருக்கலாம்... ஆனா நூறு சதவீதம் அப்படியேன்னு நினைக்கவும் முடியாதே...

//இந்த முக்கியமான விஷயங்களை ரெண்டு பக்கமும் argue பண்ணதான் படத்துல அங்கங்க வேணும்னே ரெண்டு பக்கத்துக்கும் argument points வச்சுருக்காங்க இல்லையா... //
நோலனுக்கு வேற வேலையே இல்லைங்க. வாங்க ஆர்க்யூ பண்ணுவோம் :)

//முடிவு நிஜம்னு சொல்லணும்னா, க்ளைமாக்ஸ்ல குழந்தைகள் வளர்ந்து இருக்கது, ஹீரோ கையில மோதிரம் இல்லாதது, (படம் பேர் போட்டு முடிச்சவுடனே டோட்டம் கீழே விழற சத்தம் கேக்குதாமே!!!) //
அப்படி எதுவும் கேட்கலை. புரளிகளை நம்பாதீர்...

//முடிவு கனவுன்னு சொல்லணும்னா.......அதே இடத்துல விளையாடறது, இந்த மாதிரி arguments சொல்லலாம்...//
எனக்கு அதே மாதிரி டிரெஸ்னு தான் தோணுது..

//குழப்பத்துல இருக்கதே பெட்டர்னு நினைக்கிறேன்... //
நீங்களும் காப் மாதிரியே பேசறீங்களே...

//ஒவ்வொருத்தருக்கும் ஒரு லிம்போ இருக்கும்... நாலாவ்து லெவல் ஃபிஷருக்குதான் லிம்போ...//
கண்டிப்பா அது  ஃபிஷருக்குதான் லிம்போ, ஆனா அவரை கண்டெடுக்கறது காபோட லிம்போவுல. ஏன்னா அங்க தான் அவரை மால் புடிச்சு வெச்சிருக்காங்க.

//அப்பறமா, ஹீரோ வேன் லெவல்ல தண்ணிக்குள்ள இருக்கதால செத்துப்போய் சைட்டோவோட லிம்போவுக்கு போய் அவரை காப்பாத்தறாரு.. :)//
இதை ரெண்டு விதமா சொல்லலாம். அவர் தண்ணிக்குள்ள மயக்கத்துல இருக்கார்னும், ஏற்கனவே லிம்போல இருக்கறதால, அங்கேர்ந்தே சைட்டோவா தேடற வேலைய தொடங்கரார்னும் வெச்சுக்கலாம். ஏன்னா, ஃபிஷர காப்பாத்தின அப்பறம், அவர் எந்த கிக்கும் பயன்படுத்தலை

//ஃபிஷர் சாகவே இல்ல... குண்டடி பட்டு மயக்கம் ஆகிடறான்............
மால் செத்துட்டதால, அவங்க சுட்ட புல்லட் காயம் போயிடுச்சு... :)//
இது என்னோட புரிதல் கூடவும் கொஞ்சம் ஒத்துப்போகுது. ஃபிஷர் செத்ததா முடிவு பண்ணவே இல்லை. இயாம்ச ட்ரீட்மென்ட் கொடுக்க சொல்லிட்டுதான் அவங்க லிம்போவுக்கு போறாங்க.

//நாலாவது லெவல் காப்-ன் சப்கான்ஷியஸ்.....அதான் அவனை கூட்டிட்டு வர அங்க போறாங்க... //
அது லிம்போதாங்கர்துல இன்னும் என்னக்கு எந்த டவுட்டும் வரலை. இனிமேலும் வராதுன்னு நினைக்கறேன்.

//இப்படி நிறைய... இதெல்லாம் தப்புன்னு என்னால சொல்ல முடியல... ஆனா, சரின்னும் ஒத்துக்கமுடியல... //
அதுதான் டைரக்டரும் எதிர்பார்க்கறார்...
 
//மால்-ம், சைட்டோ-வும் ஒரே மாதிரி சொல்லற “take a leap of faith" டயலாக்....... தாத்தா சொல்லற "they come here only to sleep again. dream is their real world. who are you to say otherwise?" டயலாக்... இதெல்லாம் முக்கியமான விஷயங்கள்னு தோணுது எனக்கு... ஏன்னா ஹீரோ க்ளைமாக்ஸ் கனவுதான்னு புரிஞ்சே அதுல வாழ தயாராகுறானா?//
இந்த இடத்துல, இன்னொரு interpretationஉம் சில பேர் முன்வைக்கறாங்க. இயாம்சொட இடத்துல போயிட்டு, அந்த செடேஷன பரிசோதிக்கற இடத்துலேர்ந்து (தாத்தா டயலாக் அப்பறம்) எல்லாமே காபோட கனவுன்னும் சொல்றாங்க.

//Is there a final truth to MEMENTO? Christopher Nolan claims there is one.//
படத்தோட கிரானலாஜிகல் வெர்ஷன பார்த்த அப்பறம், முடிவு இருக்குனுதான் தோணுது.

@பாலி
//நான் திரும்ப படம் பார்க்கும்போது கன்ஃபர்ம் பண்ணிகிட்டேன். வேறு உடைகள்.//
தல, அதே செட் உடைகள் தான். நான் அதுக்காகவே நூத்தி இருவது ரூவா செலவழிச்சு பார்த்தேன். இன்னொரு தடவையும் பார்க்க ரெடி.

//ஆக்சுவலி இந்த மேட்டரையெல்லாம்.. நான் கி.மு 200-லயே தினமும் 12-16 மணிநேரமா படிச்சி வந்திருந்தேன்.//
தல, நானும் கனடா கபோதிக்கு, பத்து வருஷத்துக்கு முன்னாடியே உங்கள refer பண்ணி, இதைப் பத்தி எழுதி, ஒரு மெயில் அனுப்பினேன். பப்ளிஷ் பண்ணலை. இலக்கியவாதிகள மதிக்கத் தெரியாத கம்மனாட்டி பசங்க.. இதைப் பத்தி, ராணி முத்துல வேலை செய்யற என்னோட தோழிகிட்ட கூட, டப்ளிங்க்ல ஒக்காந்து பேசியிருக்கேன்.

@ஜெய் 
//நாட்டுல இவ்ளோ குழப்பம், சண்டை, சச்சரவு வருமா?//
கலைஞர்களுக்குள்ள இதெல்லாம் சகஜம் ....

@ஜெய் + பாலி
ஸ்வேதா யாரு??

அடுத்த பதிவுல, நண்பர் பத்மநாபன் கேட்டா மாதிரி, படத்தோட கதைய முடிஞ்சவரைக்கும் சிம்பிளா எழுதறேன்.. மறுபடியும் எல்லாருக்கும் நன்றி.. :)
கேள்விகள் இல்லாமையே பதில் சொன்னா அதுக்கு என்ன பேரு???

Thursday, August 12, 2010

Inception பதில்கள் - 2

போன பதிவுல சொன்ன பதில்களுக்கான சந்தேகங்களுக்கு பதில் சொல்லலாம்னு பார்த்தா, அதுவே கமெண்ட் பேஜ்ல நிறைய வந்துருச்சு. அதனால தனிப்பதிவா போட்டு, கல்லா கட்டலாம்னு பாக்கறேன் :P

@எஸ் கே -
மிக்க நன்றி :)

@பாலி -
தல, நீங்க வேற ஒரு முக்கியமான வேலைல இருந்தாதால உங்க வேலை பளுவ குறைக்க முயற்சி செஞ்சேன் :)
கிளைமாக்ஸ்ல வரதும் அதே செட் உடைகள் மாதிரி தான் தெரியுது. இத மாதிரி ரெண்டு மூணு சந்தேகங்களுக்காகவே ரெண்டு முறை படத்தை பார்த்தேன்...
அண்ட்மன்னிக்கவும், முதல் கேள்விய ஒழுங்கா படிக்காம பதில் சொல்லிட்டேன். ஓபன் எண்டிங்னு சொன்னது முடிவ. ஆரம்பம் லிம்போதான்..
ஏன், விளையாட்டுக்கு வரலைன்னு சொன்னீங்க??? இங்க கண்டிப்பா வேற யாரும் வந்து பிரச்சனை பண்ண மாட்டாங்க. கவலைபடாதீங்க.

@சர்வேசன்
//லிஃப்ட்ல மயக்கத்துல இருக்கரவங்களை எழுப்பினா போதுமே, பனிமலை வேட்டு வச்சு ஏன் சாகப் பாக்கணும்?//
எனக்கு நிஜமாவே உங்க கேள்வி புரியலைன்னுதான் சொல்லணும் :(
இருந்தாலும் கொஞ்சம் விளக்கிடறேன்.
முதல் லெவல் -  யூசுபின் கனவு - அங்க கிக் அந்த தண்ணில விழற வண்டி
இரண்டாவது லெவல் -  ஆர்தரின் கனவு - அங்க கிக் லிப்ட்டு
மூணாவது லெவல் - இயாம்ஸோட கனவு - அங்க கிக் அந்த இடம் தகர்க்கபடுவது, அப்போதான் எல்லாரும் அப்படியே கீழ இருக்கற அஸ்திவார பள்ளத்துல விழுவாங்க.
நாலாவது லெவல் - யாரோட கனவும் இல்லை, லிம்போ - அங்க கிக் எப்படியாவது நாம லிம்போல இருக்கோம்னு உணர்ந்து, சாவறது or free fallaa கீழ விழறது...

@ஜெய்
//அதுனாலயே முதல்ல ஃபாலோவர் ஆயிட்டேன்... //
மிக்க நன்றி :)

//இன்னைக்கு இந்த படத்தை புரிஞ்சுக்காம கிளம்பப்போறதில்லை...//
வாங்க பழகலாம் :))

//நியூயார்க் டைம்ஸ் படிக்கிற தோழி இல்லாம இருக்கணும்னு வேண்டிகிட்டு, கமெண்டறேன்...//
எனக்கு பாம்பே டைம்ஸ் படிக்கற தோழி கூட இல்லை... யாராச்சும் இருந்தா சொல்லுங்க.. :(
நான் சென்னை டைம்ஸ் படிப்பேன் :P

// கமெண்ட் டெம்ப்ளேட் கொஞ்சம் அகலமா//
மொத்த டெம்ப்ளேட் தான் மாத்தணும் தல ;(

//முதல் காட்சி ரியல் இல்லைதானே?//
மறுபடியும் மன்னிச்சு.. கேள்விய ஒழுங்கா பார்க்கலை..அது ரியல் இல்லை. லிம்போ

//இது எங்கேயும் சொல்லப்படற மாதிரி தெரியல/?
நேரடியா எங்கயும் சொல்லல. ஆனா சில டயலாக் imply பண்ணுது. அதனாலதான் சொன்னேன்.

// எல்லாரும் செத்தா லிம்போவுக்கு போவோம்னு தெரிஞ்சதும் அவ்வளவு டென்ஷன் ஆகறாங்க...?//
ஃபிஷர் போனது காபின் லிம்போவுக்கு. அதனால அவரை ஈசியா கண்டுபுடிக்கறாங்க. முதல்ல டென்ஷன் ஆவர்துக்கான காரணம், அவங்க அவங்களோட லிம்போவுல காணாம போயிடுவாங்கன்னு காரணத்துனால. சைட்டோவ காப்பத்த காபுக்கு எவ்வளவு காலம் புடிச்சிதுனு படத்துல சொல்லல. ஆனா அவர் சைட்டோவை கண்டு புடிக்கும்போது,  சைட்டோ தொண்டுக்கெழமா இருக்கறாரு. காபிற்க்கும் ஒரு 40-50 வயசு இருக்கறா மாதிரி முடி எல்லாம் நரைச்சிருக்கு.

//ஹீரோவே மூணாவது லெவல்ல(பனிமலை) இருக்கப்ப, ஹீரோவோட மனைவி எப்படி லிம்போல இருப்பாங்க??//
மால் அங்க வரக்கூடாதுன்னு தான், கனவுகளோட ஆர்க்கிடேக்ச்சர காப் தெரிஞ்சிக்காம இருக்காரு. ஆனா, அரியாட்னே எமேர்ஜன்சி என்ட்ரி பத்தி சொல்லும்போது காபும் அதை கேட்டுடறார். அதனால மாலுக்கும் இப்போ அங்க எப்படி போறதுன்னு தெரியும். அப்படிதான் மால் அங்க வராங்க. ஹீரோவின்  மனைவி எப்பவுமே லிம்போலதான் இருக்காங்க. காபுக்காக வெயிட் பண்றாங்க. இங்க முக்கியாமான விஷயம், லிம்போல இருக்கறதும், ஒவ்வொவொரு முறையும் பிளான கெடுக்கர்தும் காபோட குற்ற உணர்வின் பிரதிபலிப்புதான்.

//மூணாவ்து லெவல்ல குண்டடி பட்டு, திரும்ப மூணாவ்து லெவலே வந்தா?//
திருத்தம், மூணாவது லெவல்ல அடிபட்டு, நாலாவது லிம்போவுக்கு போயிட்டு, மறுபடியும் மூணாவது லெவலுக்கு வரார். வீரியம் குறைஞ்சு போய், திரும்ப defibrillatorஅ கிக்கோடா சின்கரனைஸ் பண்ணி அவர உயிரோட கொண்டு வராங்க.

//சைடோவை கண்டுபிடிக்க காப் லிம்போல இருந்தாதானே முடியும்? //
அதானால்தான் அரியாட்னே சுட வரும்போது தடுத்து, அவர் லிம்போலயே இருக்காரு.

//அவங்க பாட்டுக்கு சுட்டுட்டு காப் நிஜ உலகத்துக்கு போயிட்டா, சைட்டோவை யாரு காப்பாத்தறது?//
அவங்க ஒரு பதட்டத்துல சுட வரும் போதுதான் காப் சொல்லுவாரு, சைட்டோ இந்த நேரத்துக்கு இறந்துருப்பாறு, அதனால அவர தேடி கூப்ட்டுட்டு வரேன்னு.

//மோதிரம் போடலைன்னு சொன்னேங்க...//
நான் கவனிக்கலை. ஒரு யூகத்துலதான் சொன்னேன்.

//ஏன் ரெண்டு பேர் பார்வையில காட்சி அமைக்கணும்? அப்படி என்ன significance அதுக்கு?//
முன்னாடியே சொன்னா மாதிரி, இதுக்கு எந்த significanceஉம் இருக்கணும்னு அவசியம் இல்லை. நாம கொஞ்சம் ஓவராவே யோசிக்கறோம் ;)

// நான் ஏதாவது தப்பா புரிஞ்சுட்டாலும்//
இத மாதிரி ஓபன் எண்டிங் படங்கள்ல, தப்பு எது, ரைட்டு எதுன்னு சொல்லவே முடியாது.

 மறுபடியும் கேள்வி கேட்ட எல்லாருக்கும் நன்றி. இன்னும் இருந்தாலும் கேளுங்க. எதையும் தாங்கும் 'இதையும்'.. :)

இன்னுமா நான் யாருன்னு தெரில??? ஹா ஹா ஹா

Inception பதில்கள்

என்னடா சின்னப் பையனாச்சேன்னு யாரும் கேள்வி கேட்காம விட்டுருவாங்களோன்னு நினைச்சேன். இருந்தாலும், என்னையும் மதிச்சு சில கேள்விகள் கேட்ட அந்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி. இப்போ பதில்களுக்கு போவோம்.

திரு பத்மநாபனின் கேள்வி
 • please explain the story na?
முதல்லையே போட்டாரு பாருங்க ஒரு போடு. கண்டிப்பா சொல்றேன். அதுக்கு முன்னாடிச் சின்ன கேள்விகளுக்கு பதில் சொல்லிட்டு வந்துடறேன்.

திரு ரமியின் கேள்விகள்

 • Is the movie is begin in dream or real?
 அது டைரக்டர் நம்ம கற்பனைக்கே விட்டுடறாரு. open ending.
 • Actually what is the climax in this movie?
பாசிடிவா சொல்லனும்னா, அவங்க வெற்றிகரமா வேலைய முடிச்சிட்டு, நாயகன் காப் தன்னோட குழந்தைங்களோட இணையராருனு வெச்சிக்கலாம். இல்லை, நெகடிவா போனா, காப் வேலையை சரியா முடிக்காம, லிம்போல மாட்டிகிட்டாருனு வெச்சிக்கலாம். இல்ல, ஒரு தரப்பினர் சொல்றா மாதிரி, படம் முழுக்கவே, காபோட கனவா இருக்கலாம். இதுக்கு பதில் இல்லைனு சொல்றதுதான் உண்மையான பதிலா இருக்கும். 
 • Different between extraction and inception?
ரொம்ப சிம்பிள். Extraction - சப் கான்ஷியஸ்ல / மண்டைல இருக்கற ஒரு விஷயத்தை திருடறது. Inception - அப்படியே உல்டா. அவங்க சப் கான்ஷியஸ்ல, அவங்களுக்கே தோணுவது மாதிரி ஒரு எண்ணத்த விதைப்பது. இதுல, Inception தான் ரொம்பக் கடினமான வேலை, ஏன்னா, விதைக்கற எண்ணம் அந்நியமா இல்லாம, அவங்களே யோசிச்சா மாதிரி இருக்கணும். 
 • Is there any explanation in movie that these are all possible or not?
இது ஒரு சைன்ஸ் ஃபிக்ஷன். இதெல்லாம் சாத்தியமா இல்லையான்னு இந்தப் படத்துல எங்கயும் ஆதாரத்தோட காமிக்கல.

திரு ஜெய்யின் கேள்விகள்
 • அந்த நாலாவது லெவல் லிம்போவா இல்லையா?

  அது லிம்போதான்..
 • அதிக மயக்கமருந்து எடுத்துகிட்டபின் கனவுல செத்தாதான் லிம்போ-க்கு போகமுடியும், அங்க செத்தா ரியாலிடிக்கு வரமுடியும்னு சொல்லறாங்க இல்லையா? ஆனா ஹீரோவும் அரியாட்னியும் நாலாவது லெவலுக்கு சாகாமலே போறாங்க... அரியாட்னியும் ஃபிஷரும் ஜாலியா கிக் மூலமாவே திரும்ப வர்றாங்க... அதுனால அது லிம்போவா இருக்க முடியாது இல்லையா? 
                  அது லிம்போதான்னு நான் சொல்றதுக்கான காரணங்கள். லிம்போ யாரோட கனவும் கிடையாது. அது ஒரு பொரம்போக்கு நிலம் மாதிரி. அங்க ஏற்கனவே போயிட்டு வந்தவங்களால சுலபமா அங்க போக முடியும். தெரிஞ்ச இடத்துக்கு நாம ஈசியா மத்தவங்கள கூட்டிட்டு போறதில்லியா, அது மாதிரி. ஹீரோவும் அரியாட்னேயும், ஹீரோவோட கனவுல இருக்கற லிம்போவுக்கு போறாங்க. ஏன்னா, ஹீரோவுக்கு தெரியும், தன்னோட மனைவி, அங்க தான் ஃபிஷர ஒழிச்சு வெச்சிருப்பாங்கன்னு. ஏன்னா, அவங்களோட முதல் + கடைசி விருப்பம் காபோட எப்பவும் ஒண்ணா இருக்கனும்ங்கறது மட்டுமே. அரியாட்னேயும் ஃபிஷரும் ஜாலியா கிக் மூலமாவே திரும்பி வரதுதான் நீங்க கேட்ட கேள்விக்கு பதிலே. லிம்போ கொஞ்சம் கொஞ்சமா அழிஞ்சிகிட்டு வராத பாக்கற அர்யாட்னே, மேல உள்ள லெவல்ல கிக் ஆரம்பமானதா உணர்ந்து, ஃபிஷர கீழ தள்ளி விட்டுட்டு, தானும் குதிக்கறாங்க.
 • ஆனா, அது லிம்போ இல்லைன்னா செத்துப்போன ஃபிஷர் எப்படி அங்க இருக்காரு? ஃபிஷர் திரும்ப மூணவது லெவலுக்கு வந்தபின் ஏன் குண்டடி பட்ட வலி இல்லை?
அது லிம்போதான். காபோட சப் கான்ஷியாசின் பிரதிபலிப்பான அவரோட மனைவி மால், காப் தன்னைத் தேடி வந்து, தன கூடவே இருக்கணும்னு, அவரை அங்கே ஒழிச்சு வெச்சிருக்காங்க. ஃபிஷரின் வலியின்மைக்கான காரணங்கள், என்னோட யூகத்தின் அடிப்படைல சொல்லனும்னா,  ஃபிஷர் லிம்போவுக்கு போயிட்டு திரும்ப வந்ததுனால இருக்கலாம். ஏன்னா, வீரியம் கம்மியான அடுத்த லெவலுக்கு போயிட்டு, திரும்ப வராரு இல்லையா. அதனால அவர் வலியை உணராம இருக்கலாம்.
 • ஒருவேளை நாலாவ்து லெவல், ஹீரோவோட சப்கான்ஷியஸ் லெவல்னு வச்சுகிட்டா, அங்க ஃபிஷரோட ப்ரொஜக்‌ஷன் (மால் மாதிரி) இருக்கலாம்... ஆனா ஃபிஷரே எப்படி இருக்க முடியும்? அந்த லெவலுக்கு ஹீரோவும் அரியாட்னியும் போரதுக்கு முன்னாடி கொஞ்ச நேரம் செத்துப்பொன ஃபிஷர் எங்க இருந்தாரு? 
செத்துப்போனவுடனே  ஃபிஷர் லிம்போவுக்கு போயிட்டாரு. உடனே, மாலும் சுடப்படறாங்க. முன்னாடியே சொன்னா மாதிரி, லிம்போவுக்கு போயிட்டு வந்தவங்களால, மறுபடியும் அதுக்குள்ள சுலபமா போக முடியும். போன பதில்ல சொன்னா மாதிரி, காபுக்காக ஃபிஷர பணயக்கைதி மாதிரி ஒழிச்சு வெக்கறாங்க மால். இதுல முக்கியமான விஷயம், இது எல்லாமே, காபையும் அறியாம, அவரோட குற்றஉணர்வின் பிரதிபலிப்பான மால் செய்யறாங்க. உண்மையான மால் எப்பவோ இறந்து போய்ட்டாங்க.
 • முக்கியமான விஷயம்... நாலாவது லெவல் முடியறப்போ, அரியாட்னி கீழே குதிக்கும் முன், ஹீரோகிட்ட “சைடோ லிம்போல இருக்காரு... போய் அவரைக்காப்பாத்து”-ன்னு சொல்லி துப்பாக்கி எடுத்து ஹீரோவை சுட பார்க்கிறாங்க... (அப்படின்னா நாலாவது லெவல் லிம்போ இல்லைதானே?)
இது சொல்ல வந்த காண்டக்ஸ்ட்ல நீங்க எடுத்துக்கலைன்னு நினைக்கறேன். அவங்க லிம்போலதான் இருக்காங்க. நீங்க படத்தை தமிழ்ல பாத்துருக்கலாம். ஆங்கிலத்துல வர டயலாக் இதுதான், "Don't lose yourself!! Find Saito and bring him back!"  . அவங்க துப்பாக்கி எடுத்து ஹீரோவா சுடப் பாக்கறது, அவரை மால் நினைவுலேர்ந்து காப்பாத்தி, நிஜ உலகத்துல கண் முழிக்க வெக்க.
 • ஹீரோவும் அவ்ர் மனைவியும் 50 வருஷம் வாழ்ந்ததா சொல்லற இடத்துல ஒரு ஷாட்ல அவங்களை பின்பக்கத்துல இருந்து காண்பிக்கறாங்க... அவங்க ரெண்டு பேரோட கையும் சுருங்கி வயசாகி இருக்காங்க... ஆனா, அதுக்கப்பறம் தற்கொலை பண்ணிக்கறப்போ இளமையா இருக்காங்களே? 50 வாழ்ந்தது பல லெவல் கனவுக்குள்ளா? இல்ல லிம்போலயா?
ஹீரோவும் அவர் மனைவியும் ஐம்பது வருஷம் நிஜமாவே லிம்போல கழிக்கறாங்க. ஆனா இந்தக் கதைய கேட்கற அரியாட்னேவோட காட்சியமைப்புலதான் நாம பாக்கறோம். அதனாலதான் ரெண்டு பேரும் இளமையாவே இருக்காங்க. இன்னொரு முறை காப் அதைப் பற்றி பேசும்போது, வயதான அவர்களோட காட்சிகள் வரும். ஏன்னா அதுதான் உண்மையான அவரோட காட்சியமைப்பு.

 • முடிவு ஓபன் எண்ட்தானே? ஒருவேளை மொத்த படமும் கனவுன்னு ஒரு argument இருந்தா எப்படி அதுக்கு முன்னாடி ரெண்டு வாட்டி எப்படி டோட்டம் விழுந்துச்சு?
கண்டிப்பா ஓபன் எண்டு தான். ரெண்டு வாட்டி டோட்டம் விழுந்ததற்கான காரணம் ரொம்ப சிம்பிள்னுதான் நான் நினைக்கறேன். அதோட சரியான வடிவமைப்பும், எடையும், எப்படி வேலை செய்யும்னும்  காபுக்கு நல்லாவே தெரியும். அது ஏன் அவர் கனவுல ஒழுங்க வேலை செய்யக்கூடாது. முக்கியமா, டோட்டம், நாம மத்தவங்க கனவுல இருக்கோமா இல்லையாங்கறத சொல்லுமே தவற, நம்மலோடதுல இல்லை.
 • க்ளைமாக்ஸ் கனவா/நிஜமா? படம் முழுக்க கனவா?, ஏன் குழந்தைகள் அதே இடத்துல இருக்காங்க(ஆனா க்ளைமாக்ஸ்ல வர்றது வேற செட் குழந்தகளாம்...!!), 
முன்னாடியே sollitten. ஓபன் எண்டு.
 • ஏன் டோட்டம் சுத்தறப்போ ஒரு தடவை சைட்டோவும், க்ளைமாக்ஸில் மைக்கேல் கெயினும் வந்து டிஸ்டர்ப் பண்ணறாங்க?, அப்படின்னா அவங்க ஹீரோவுக்கு பண்ணற இன்செப்ஷனா இது? அதுக்கு அரியாட்னி உதவியா? (அந்த பொண்ணுதான் முக்கியமான எதிர்பாராத பல விஷயங்கள் பண்ணுது படத்துல) இல்ல ஹீரோவே அவருக்கே இன்செப்ஷன் பண்ணிக்கறாரா? (to get rid of his guilt) ஏன்னா மெமெண்டோவும் ஒரு வகையில இதேதான்... மனைவி தற்கொலைக்கு ஹீரோ காரணமா இருந்து, அந்த குற்ற உணர்ச்சியை போக்க ஹீரோ பண்ணற கிறுக்குத்தனமான விஷயங்கள்தான் மொத்த படமே.
அப்படியும் ஷட்டர் ஐலாண்ட் மாதிரி யோசிக்கலாம். ஒப்பன் எண்டு தான்
 • ஹீரோ ஏன் கனவுல மட்டும் திருமண மோதிரம் போட்டு இருக்காரு, க்ளைமாக்ஸ்ல போடலையே? (அதை க்ளோஸ் அப்ல வேற காண்பிக்கறாங்க) அப்ப க்ளைமாக்ஸ் நிஜமா? மால் சொல்லற அதே “take a leap of faith” டயலாக் ஏன் சைடோ சொல்லறாரு? சம்பந்தமே இல்லாம நோலன் க்ளைமாக்ஸையே (speaking with saito in limbo) முதல் காட்சியா காண்பிப்பாருன்னு தோணலை... அதுக்கு ஏதாச்சும் காரணம் இருக்கா?
சில நேரங்கள்ல, டைரக்டர் சொல்ல வராத விஷயங்களைக் கூட நாமே புரிஞ்சிப்போம். அப்படியே தான் நீங்க கேட்கறதும் இருக்கு, அதனால, அதே மாதிரியே பதிலும் சொல்றேன்.  ஹீரோ, தன்னோட குற்ற உணர்ச்சிய போக்கிட்டதுநாளா கிளைமாக்ஸ்ல திரும்பவும் மோதிரத்தை போட்டிக்கிட்டு இருக்கலாம். நிஜத்துல அதுவரை அவர் போடாததுக்கு காரணம், தன்னோட மனைவியோட நியாபகங்களும், அது தர குற்ற உணர்வும் தான். கிளைமாக்ஸ்தான் படத்தோட முதல் காட்சி. அப்படி அது வேற காட்சியா இருந்தா, படம் முழுக்கவே ஒரு சைக்கிள் மாதிரி எடுத்துக்கலாம். ஷட்டர் ஐலாண்ட் தியரிய அடிப்படையா வெச்சு, ஹீரோ தன்னோட குற்ற உணர்வ போக்க, இதையே திரும்ப திரும்ப செய்யறாருன்னு வெச்சிக்கலாம்.

திரு சர்வேசன் கேட்ட கேள்வி
 • பனிமலை ஏன் குண்டு வச்சு தகர்க்கப்பட்டுது?
நீங்க முதல்ல வர பனிச்சரிவ  சொல்றீங்கன்னு நினைக்கறேன். அது, அவங்க முதல் லெவல்ல வர van நிலை தடுமாறி ஒரு ரோலிங் அடிச்சிட்டு நிக்கர்துனால ஏற்படுவது. அது நல்ல வேளையா கிக்கா மாறாம, எல்லாரும் அதை மிஸ் பண்ணிடறாங்க. அந்த  அதிர்வு, பனிச் சரிவோட போய்டுது.இரண்டாவதா தகர்க்கப்படுவது கிக்குக்காக. (தில்லாலங்கடி கிக்கு இல்லை)

இன்னும் கேள்விகள் இருந்தா பின்னூட்டத்துல போடுங்க, அதுக்கு பார்ட் 2 பதிவு போட்டுடலாம். திரு பத்மநாபன் கேட்டா மாதிரி, வேற ஒரு பதிவுல, முழுக்கதையும் சொல்றேன். ஒரு வேளை நான் சொன்னதும், என்னோட புரிதலும் தப்பா இருந்தா திருத்துங்க. கேள்வி கேட்ட அன்பர்களுக்கு மீண்டும் ஒரு முறை நன்றி.. :)இப்படி கேட்ட கேள்விக்கெல்லாம், அடடே, ஆச்சர்யக்குறி ரேஞ்சுக்கு பதில் சொல்லிட்டனோ??


Monday, August 9, 2010

Inception பற்றிய கேள்விகளுக்கு

நான் ஏதொ பெரிய லாடு லபக்கு தாஸ் மாதிரி பேசறேன்னு நினைக்காதீங்க... இந்தப் படம் எனக்கு கொஞ்சம் நல்லாவே புரிஞ்சிருச்சுனு தைரியத்துல சொல்றேன். உங்களுக்கு இந்த படத்தைப் பத்தின எதாவது சந்தேகம் இருந்தா, பின்னூட்டமா போடுங்க, பதில் சொல்றேன். பெரிய பெரிய ஆளுங்க எல்லாம் மூடிகிட்டு இருக்கும்போது, உனக்கென்னனு ஈகோவோட யோசிக்காதீங்க. ஏதொ என்னால முடிஞ்ச சமூக சேவை.. :)

பி.கு யாரும் எந்த சந்தேகமும் கேட்காம மொக்கை கொடுத்துருவாங்கனு ஒரு பயமும் இருக்கு. இருந்தாலும் பரவால்ல. வந்தா மலை.

பி.கு 2 - ஏதோ யோசிச்சேன். மறந்துட்டேன்

எதுவா இருந்தாலும் தைரியமா பயப்படமா கேளுங்க...

Thursday, August 5, 2010

எந்திர-ப்-புலி

சீனியாரிட்டி படி, புலி படத்தோட பாடல்கள் பற்றி பேசுவோம்/சறேன்

புலி, தெலுங்கு படம். சிரஞ்சீவி தம்பி, பவன் கல்யான் ஹீரோவா நடிக்கறார். நம்ம BF எஸ்.ஜே. சூர்யா (best friend)  டைரக்டர். இவங்க காம்பினேஷன்ல முதல்ல வந்த, தமிழ் குஷி ரீமேக், ஆந்திரப் பிரதேசத்துல மிகப் பெரிய ஹிட்டு. அதனால, இந்தப் படத்துக்கு நியாயமான எதிர்பார்ப்பு இருக்கு. மியூசிக் வேற நம்ம ஆஸ்கர்மான். So, அதுக்கும் எதிர்பார்ப்பு. படத்துல மொத்தம் ஆறு பாடல்கள். ரகுமானின் தாக்கத்தோட, சூர்யாவோட தாக்கம் அதிகமா இருக்கு. ஆந்திர ரசிகர்களுக்கு ஏத்த பாடல்கள். எல்லா பாடலைப் பற்றியும் ஓரிரு வரி/வார்த்தைகள்..


பவர் ஸ்டார் - அநேகமாக ஒபெனிங் சாங். நல்ல ரிதம். ஹோசன்னா விஜய் பிரகாஷ் பாடிருக்கார். கூடவே தன்வி, தெலுங்கையும் கடிச்சு துப்பிருக்காங்க. தெலுங்கு சுமாரா தெரிஞ்ச எனக்கே தெரியுது, லிரிக்ஸ் கொஞ்சம் காமெடியா இருக்குனு. மத்தபடி, பாடல் சூப்பர் ஹிட் ஆக நிறைய அறிகுறிகள் இருக்கு.

அம்மா தல்லே - ஆங்கிலத்துல டங் டிவிஸ்டர்ஸ்னு சொல்லுவாங்க, அதுமாதிரி, வார்த்தைகளை வேகமா அடுக்கிட்டே போறாங்க. அழகா பாடவும் செஞ்சிருக்காங்க, பாடகி சுஜாதாவோட பெண் ஸ்வேதா. கூட நம்ம நரேஷ் ஐயர். இந்தப் பாடலைப் பற்றி ஒரு சின்ன எக்ஸ்ட்ரா பிட்டு. நியூ படத்துல உபயோகப்படுத்த முடியாமப் போன மார்கண்டேயா பாடலோட வாடை, இந்தப் பாடல்ல, பலம்மா இருக்கு.

மாரலண்டே
- ரஹ்மானே பாடிருக்கார். அவரோட ரசிகர்கள் சொல்றா மாதிரி, திரும்ப திரும்ப கேட்டாலும், முதல் ரெண்டு பாடல்கள் இம்ப்ரெஸ் பண்ண அளவுக்கு, இது ஈர்க்கலை. ரஹ்மானோட கே.எம் மியூசிக் கன்செர்வேடரி மாணவர்களோட சேர்ந்து இந்தப் பாடலை பண்ணிருக்கார். நாட்டுக்கு நல்லது பண்ண, அட்வைஸ் பண்றா மாதிரி வருது பாடல். வெயிட்டான orchestration.

மஹ மாயே
- அடுத்த டூயட். நம்ம குச்சி சுச்சி பாடிருக்காங்க. ஜாவேத் அலியோட இணைஞ்சு. கேட்க கேட்க பிடிக்கக் கூடிய பாடல். ரஹ்மானோட பெஸ்ட் இல்லை. இருந்தாலும் ரசிக்கலாம். திரைல நல்லா இருக்கும்னு ஒரு நம்பிக்கை.

தோச்சே
- கேட்டவுடனே ஐட்டம் நம்பர்னு உரைக்கும் பாட்டு. காஷ் n க்ரிஸ்ஸினு இரண்டு பாடகர்களை அறிமுகப்படுத்திருக்கார். இதான் அவங்களுக்கு முதல் திரைப்படப் பாடல்னு நினைக்கறேன். இவங்க ரெண்டு பேர் பாடறது நல்லா இருந்தாலும், ஸ்ரேயா கோஷல் பாடும்போதுதான் அந்தப் பாட்டுக்கே ஒரு அழகு சேருது. இந்தப் பாடல்லயும் நல்ல ரிதம். நல்ல டியூன்.

நம்மகம் - கடவுள் கிட்ட நம்பிக்கை வேண்டி ஒரு பாடல். காற்றில் வரும் கீதமே ஸ்டைல்ல, சித்ரா, மதுஸ்ரீ மற்றும் ஹரிணி சேர்ந்து பாடியிருக்காங்க. ரொம்ப அழகான மெலடி. நைட்டு இந்தப் பாடலை கேட்டீங்கன்னா, தூக்கம் நிச்சயம். ரொம்ப மினிமம் ஆர்கெஸ்ட்ரா. எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஒத்து வராத, நல்ல, (உண்மையான) பக்திப் பாடல்.

மொத்தத்துல புலி, ஆந்திர ரசிகர்களுக்கு ஏத்த ஒரு மசாலா ஆல்பம். எல்லா தரப்பினருக்கும், எதாவது இருக்கு. மாஸான  சிவாஜிக்கு பிறகு, அடுத்த மாஸ் படம். ரஹ்மானிடமிருந்து (எனக்கு) ஒரு இன்ப அதிர்ச்சி. மிஸ் பண்ணிறாதீங்க. --> இங்க க்ளிக்கினா<-- எல்லாப் பாடல்களையும் கேட்க லிங்கிருக்கேன்.
 
அடுத்து நம்ம ஊர் பரபரப்பான எந்திரன் பாடல்களுக்கு போவோம்

அதிசயமா, புலி படப் பாடல்கள் என்னை கவர்ந்த அளவுக்கு, எந்திரன் படப் பாடல்கள் ஈர்க்கலை. உடனே "Rahman Songs requires repeated listening, it should grown on you, you are anti-rahman, uncle-ரஹ்மான்", அது இதுனு கமெண்ட் போடத் துடிக்காதீங்க. எனக்கு முதல் தடவை கேட்கும்போது புடிக்கலன்னா, எவ்வளவு தடவை முயற்சி பண்ணி முக்கினாலும் புடிக்காது. உதாரணத்திற்கு, எனக்கு இன்னைக்குவரை, சக்கரக்கட்டி படப் பாடல்களும், ஹிந்தி கஜினி படப் பாடல்களும் புடிக்கலை. எந்திரன் ரொம்ப மோசமான ஆல்பம் கிடையாது. ஆனா, ரஹ்மானோட பெஸ்ட்டும் கிடையாது. இன்டர்நேஷனல் ரசிகர்களை மனசுல வெச்சே இசையமச்சா மாதிரி இருக்கு. டெக்னோ மியூசிக்கோட ஓவர்டோஸ்னு சொல்லலாம். பாடல்களைப் பற்றி ஓரிருவரி, 

அரிமா அரிமா - வீரபாண்டி கோட்டையிலே பாடலைப் போல, ரிச் orchestration. ஆனால், ஹரிஹரன் பாடுவது இரைச்சலாதான் இருக்கு. ஹீரோவின் புகழ் பாடி ஆரம்பிக்கும், இன்னொரு எம்.ஜி.ஆர் ஸ்டைல் டூயட் (oxymoron??)

பூம் பூம் / சிட்டி டான்ஸ் - டான்ஸ் ப்ளோர்களுக்கு ஏத்த பாட்டு. சிட்டி டான்சைப் பாடல்னு சொல்றதை விட, ஒரு கூடை சன்லைட் மாதிரி, சப்தங்களோட கோர்வைனு சொல்லலாம்.

இரும்பிலே ஒரு - முன்னாடி சொன்ன காஷ் N க்ரிஸ்ஸியோட சேர்ந்து ரஹ்மான் பாடிருக்கார். அதிரடிக்காரன் ஸ்டைல் பாடலாக இருக்காலாம். காஷ் பாடற இடங்கள் எல்லாம், aqua பார்பி கேர்ள் பாடலை நியாபகப்படுத்துது. ஏனோ....

காதல் அணுக்கள் - இந்த ஆல்பத்தோட, முதல் முணுமுணுக்கக்கூடிய பாடல். ஹோசனா பாடலுக்கு அப்பறமா, விஜய் பிரகாஷின் அடுத்த ஹிட் என்பது ஏறக்குறைய உறுதி. என்னைப் பொறுத்த வரை, ரொம்பச் சாதரணமான பாடல். அதனாலதான் ஹிட் ஆகுமோ என்னவோ.

கிளிமான்ஜாரோ
- எனக்குப் பிடித்த ஒரே பாடல். சின்மயி வித்தியாசமான முறைல, கொஞ்சம் கீச்சுனு பாடிருக்காங்க. குலுவாலிலே பாடல் மாதிரி, ரொம்ப வித்தியாசமான பாடல். catchy. கண்டிப்பா ஹிட்டு.

புதிய மனிதா
- சம்பிரதாயமான ஹீரோ ஒப்பனிங் சாங் இல்லை இது. பாடல் ஆரம்பிச்சு, பில்ட் அப் எல்லாம் வந்து, எஸ் பி பி பாட ஆரம்பிக்க ஒண்ணரை நிமிஷம் ஆகுது. வழக்கம் போல தன்னோட சவுண்ட் இஞ்சினியரிங் வித்தையை காமிச்சிருக்கார் ரஹ்மான். டிப்பு குமாரு மாதிரி ஆகிடக் கூடாதுன்னு வேண்டிக்கோங்க . அவ்வளவு மோசம் இல்லை, இருந்தாலும் not "that" impressive.

எனவே மக்களே, சமீபத்துல வந்த, ரெண்டு ரஹ்மான் படப் பாடல்கள்ல, என் ஓட்டு, புலி பாடல்களுக்கே. ஒரு வேளை, எந்திரன் பாடல்களோட காட்சியமைப்பு, எல்லா ஷங்கர் படப் பாடல்கள் மாதிரி, ஈர்க்கலாம். ஆனா, தனிச்சு நிற்கும்போது, வழக்கம் போல நிறைய
அடி வாங்குது. ஆனா, எப்பவுமே ஷங்கர் படத்தோட பாடல்கள் சுமாரா இருந்தாதான், அவரால, விஷுவலா நல்லா காட்சியமைக்க முடியுது.  (ஒரு சிலப் பாடல்களைத் தவிர)