Wednesday, April 7, 2010

ஒரு பத்தி விமர்சனம் - பையா

வர தமிழ் படங்கள் நிறைய, விமர்சனம் பண்ற அளவுக்கு கூட தேற மாட்டேங்குது. அதானால ஒண்ணு முடிவு பண்ணிருக்கேன். மொக்கை படத்துக்கு, ஒரு பத்தி விமர்சனம். சுமாரான படங்களுக்கு (முடிஞ்சா) ரெண்டு பத்தி, நல்ல - சூப்பர் படங்களுக்கு ரெண்டு பத்தி மேல, விமர்சனம் எழுதலாம்னு எண்ணம். மொக்கை படத்துக்கு ஒரு பத்தி விமர்சனமே ஓவர்தான். இருந்தாலும், மக்களைக் காப்பாற்ற, ஒரு சேவையா (?!?!?!?!) அதை செய்யறேன்.. 

பையானு ஒரு படம். நண்பர்களோட அன்புத்தொல்லைல போய் பார்த்தேன். படமும், கொஞ்சம் அன்பு, கொஞ்சம் தொல்லைன்னு இருந்துச்சு. கொஞ்சம் கில்லி, கொஞ்சம் ரன், கொஞ்சம் சண்டைகோழினு கலந்து கட்டி ஒரு படம். இந்த படம் ஓடிச்சுன்னா, அதுக்கு பெரிய காரணம், யுவன் ஷங்கர் ராஜா. குறிப்பிட்டு சொல்லனும்னா, காமெரா, எடிட்டிங் நல்லா இருக்கு. கார்த்தி இன்னும் ஹாங்ஓவர்ல இருக்கார். சீக்கரமா வெளிய வாங்க சார். தமன்னா, இந்த படத்துலயும் நடிக்க முயற்சி பண்றாங்க. பாவம். வேற யாருக்கும் படத்துல அவ்வளவு பெரிய வேலை இல்லை. இண்டர்நேஷனல் மாடல், மிலிந்த் சோமனோட நிலைமை, அந்தோ பரிதாபம்.

படத்துல ரொம்ப வித்தியாசமா, ஒரே ஒரு விஷயம் பண்ணிருக்காங்க. எப்பவும் நம்ம ஹீரோக்கள் தான் மச்சம் வெச்சிகிட்டு, வில்லன்கள் கிட்டேர்ந்து தப்பிபாங்க. இந்த படத்தோட ஒரு காட்சில, ஒரு கார் மச்சம் வெச்சிகிட்டு, வில்லன்களுக்கு பெப்பே காட்டுது. அவ்வளவே. இதற்கு மேல் எழுத மனம் வரவில்லை. படம் போர் அடிக்கலை. அதே சமயம், புதுசா ஒரு மண்ணும் இல்லை. நெறைய காசு இருந்தா சத்யம்ல பாருங்க. இல்லைனா ஏதாவது சின்ன, மொக்கை தியேட்டர்ல பாருங்க.

p.s. மதராசபட்டினம் ட்ரைலர் நல்லா இருக்கு. பாத்தீங்களா??? 

அம்மணி ரியாக்சன பாருங்க...குளிச்சீங்களா பாஸ்??