Wednesday, December 31, 2008

3 in ONE.. but மூணுல ரெண்டுதான்...

இப்ப என் கைல, butterfly அவார்ட் இல்லாம, 4 அவாரட்(by ரெண்டு பேர்) and 1 tag (by ஒருத்தர்) கீது. அதப் பற்றி தான் இந்த போஸ்ட். எனக்கு அவார்ட்னு தெரிஞ்சவுடனே, வழக்கம் போல, ஒண்ணுமே புரியல. மணிரத்னம் படம் மாதிரி, "ஏன், எதுக்கு, எப்படி, எதனால, தாம்பரம், பஸ் ஸ்டாண்ட், சிங்கப்பூர்", இப்படியெல்லாம் என்னை நானே கேட்டுகிட்டேன். அவார்ட் குடுத்த 2 ஆத்மாக்கள், கார்த்திக் and அருண்குமார். இந்த அவார்ட்ஸ் வாங்கரதுல, ஒரு ரூல் இருக்கு. நாமளும் யாருக்காவது இத குடுக்கணும். இங்கதான் சிக்கலே.

அவார்ட் குடுத்ததுதான் குடுத்தீங்க, இவ்ளோ பேருக்கா குடுக்கறது. நான் யாருக்காவது குடுக்கலாம்னு பார்த்தா, அவங்க எல்லாருக்குமே நீங்க ஏதாவது ஒரு அவார்ட் giving. ஏன் இந்த கொல வெறி???. So, நீங்க கட்டாயம் தப்பா நினைக்க மாட்டீங்கன்னு நானே assume பண்ணிக்கிட்டு, im going to end this chain of awards.
யாராவது முடிக்கனும்ல. என்னை மன்னிச்சு, எதிர்காலத்துல இத மாதிரி சிக்கல் ஏற்படாம பார்த்துக்கோங்க. மத்தவங்களுக்கும் கொஞ்சம் விட்டு வைங்க and கார்த்திக், உங்க tag, கொஞ்சம் மண்டைய தட்டி, யோசிச்சு, போஸ்ட் பண்ண வேண்டிய மேட்டர், எனவே, give me some time. Also explain the tag, im confused.

அவார்ட்ஸ் - AWARDS

1. KREATIV BLOGGER AWARD - குடுத்தது, கார்த்திக்....
சார் என்ன பீல் பண்றார்னா,

"The blog name suggests it- Creativ(et)ty. Few have the talent to blend imagination with humor and real-life incidents. He is the man of such a kind. Kaadal Kasakudaiya and how to write Tamil Lyrics posts defends what I’d mentioned above"


2. BLOG KING AWARD - குடுத்தது, again கார்த்திக்.... (புள்ளைக்கு இன்னா நம்பிக்கை)
இப்ப என்ன சொல்ல வரார்னா,

"Friend of Lancelot needs no better explanation for flair and talent (except me)"


மிக்க
நன்றி கார்த்திக்.. உங்க தன்னம்பிக்கையும், தன்னடக்கத்தையும் பார்த்தா ரொம்பப் பாவமா இருக்கு. வாழ்க வளமுடன்...

அடுத்தது

3. AMAZING BLOGGER AWARD &
4. EXTRAORDINARY BLOGGER AWARD...

வக்கீல் சார் சொன்னது,

"
I give him two awards for his versatile blogs, from Short film to count down to email messages to everyday life to interesting info to whatever. I award him AMAZING BLOGGER AWARD and EXTRAORDINARY BLOGGER AWARD (claps X 2). You deserve this award dude. The amazing goes to the Short film you've shot off late and the story style of it in your blog and extra ordinary goes to all the other blogs you have posted in your blogspace. Keep up the good work and very soon you are gonna get some shocking news from Kartik and Me. Keep guessing about it and don't use your usual silencer effect for this award showing your humbleness etc. Just accept it and spread it to others as well. Bring in more bloggers as we need competitors. Don't forget to book me as the hero for your first feature film. (Kartik you will be my KO PAA SE). How is beauty and Meera? :P"


கோடி நன்றிகள் அருண்குமார் அண்ணா.....

So, இப்படியாகத்தானே, இந்த ஆங்கில வருஷத்துல, ஏமாந்த ரெண்டு பேர் மாட்னதுல, எனக்கு 5 AWARDs கிடைத்தது. ரெண்டு பேருக்கும் நன்றிஸ். அடுத்த போஸ்டில் சந்திப்போமா.....

p.s.1 - எண்ணிப் பார்த்தேன் will continue for sure. நான் இப்ப ஹைதராபாத்இருக்கேன். So, ப்ளோக time அவ்வளவா இல்ல. இந்த சிறு பெடியனை மன்னிக்கவும்...

p.s. 2 - எனக்கென்னமோ அருணும் கார்த்திக்கும் தான் beauty and மீரானு வெளையாடுராங்கனு தோணுது. இது உண்மையா இருந்தா, எல்லாத்தையும் நிறுத்திருங்க. இல்ல.............. ஒண்ணும் பண்ண முடியாது. திருடனாய் பார்த்து திருந்தா விட்டால்.... தலைவர் சொன்னது....

Friday, December 26, 2008

கதை பண்றது....Part-3

போன பாகம் --->இங்கே<--- இப்ப, சிறுகதை, எழுத்தில்....

------------------------------------------------------------------------------------------------
ஒரு சின்ன short film ...


டக்.... டக்... டக்....கதவு தட்டும் சத்தம் கேட்டுது.

நான்
என்னோட ஆபீஸ்ல பெருசா வேலை எதுவும் இல்லாம உட்கார்ந்துகிட்டு இருந்தேன். மறுபடியும் கதவு தட்டப்பட்டது. அந்த பசங்கதான் வராங்கன்னு தெரியும். மறுபடியும் டக்... டக்... டக்... எவ்வளவு முறை சொன்னாலும் கேக்கமாட்டனுங்க. சத்தமா "போதும்பா கதவ தட்டுனது உள்ள வா" அப்படின்னேன். உள்ள வரும்போதே "நாங்க தான்னு முன்னாடியே தெரியுமா சார்?"னு கேட்டுகிட்டேதான் வந்தான் ரெண்டு பேர்ல ஒருத்தன்.

"இந்த காலத்துல யாருடா கதவ தட்டிட்டு உள்ள வராங்க, வர எல்லாரும், உள்ள வந்துட்டு, அப்பறம் excuse me சார், may i enter sirனு கேக்கறாங்க. நீங்க மட்டும்தான் கதவ தட்டிட்டு வரீங்க. சரி, இன்னிக்கு என்ன shoot பண்ணிருக்கீங்க?". "நீங்களே பாருங்க sir"னு சொல்லிட்டு, தோள்ல மாட்டிருந்த handy cam baga ஓபன் பண்ணி, கேமரா குடுத்தான், பதில் சொன்னவன். அதுல LCD screena ஓபன் பண்ணி play பண்ணேன்.

வழக்கம் போல ஏதோ நியூஸ் ரீல் மாதிரி ஒரு டாகுமெண்டரி. எடிட் பண்ணாத அந்த footage ஓடிச்சு. இந்த ரெண்டு பசங்கள பத்தி சொல்ல மறந்துட்டனே. இந்த கேமரா குடுத்த பையன், என்னோட சிஷ்யன் மாதிரி. நல்ல creativity இருக்குற, கஷ்ட்டப்படுற பையன். நான்தான் financiala கொஞ்சம் ஹெல்ப் பண்ணி, Visual Communication படிக்க சொன்னேன். கடந்த ஒரு வாரமா, அவனோட நண்பனோட, காலேஜ்ல ஏதோ போட்டிக்காக, ஒவ்வொரு படமா எடுத்து, என்கிட்ட opinion கேட்க வந்துகிட்டு இருக்கான். நானும், அவன வெறுப்பேத்த, எதுவும் நல்லா இல்லன்னு சொல்லிகிட்டே இருக்கேன்.

இந்த படம் முடிஞ்ச அப்பறமும், கேமரா வழக்கம் போல கீழ வெச்சிட்டு, "அப்பறம் சொல்லுங்கப்பா"னு சகஜமா ஆரம்பிச்சேன்.

அவன் - "என்ன sir அப்பறம், எப்படி இருக்குன்னு சொல்லுங்க".

நான் - "எப்பவும் போலதான், ஒரே மாதிரி montage, interview and ஒரே மாதிரி சாதாரணமா இருக்கு".

அவன் - "இதுக்கு மேல எப்படி sir எடுக்க முடியும்"

நான் - "என்னை கேட்டா எப்படி, நீ தான vis com student. நீதான் வித்தியாசமா யோசிக்கணும். இத கொண்டு போய் காலேஜ்ல குடுத்த, அப்படியே எடுத்து ஓரமா வெச்சிட்டு, போயிட்டுவான்னு அனுப்பிருவாங்க"

ரெண்டு பேரும் ஒருத்துர ஒருத்தர் குழப்பமா பாத்துகிட்டாங்க. அப்பறம் அவன், "ஓகே sir, நாளைக்கு நாங்க ஒண்ணு shoot பண்ணிக்கிட்டு வரோம், அத பாத்து நீங்க கட்டாயம் ஷாக் ஆகப் போறீங்க பாருங்க"னு சொன்னான்

"பாக்கலாம் பாக்கலாம். சரி, நீங்க இப்ப கிளம்புங்க, எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு"னு அவங்கள கிளப்பினேன்.

"சரி sir"னு சொல்லிட்டு அவங்க போன நேரம், எனக்கு ஒரு போன் வந்தது. கொஞ்ச நேரம் பேசுன அப்பறம், சரியா சிக்னல் கிடைக்கல, அதனால, "கொஞ்சம் இருங்க sir"னு போன்ல சொல்லிகிட்டே, கதவை திறந்து, balcony வந்து, பேச ஆரம்பிச்சேன். கீழ வேடிக்கை பாத்துகிட்டே பேசும் போது, அந்த ரெண்டு பசங்களும் ஏதோ discuss பண்ணிக்கிட்டு இருந்தாங்க. கொஞ்ச நேரம் கழிச்சு, என்னோட சிஷ்யன் ஏதோ சைகை செய்ய, அவன் நண்பன் வண்டிய ஸ்டார்ட் பண்ணான். "அப்பறம் பேசறேன் sir"னு போன் லைன கட் பண்ணிட்டு, கவனிச்சேன்.

கேமராவும் கையுமா, பின்னாடி உட்கார்ந்த சிஷ்யன், அப்படியே ரெகார்ட் பண்ண ஆரம்பிச்சான். எனக்கு என்ன shoot பண்ண போறாங்கன்னு புரிஞ்சிடுச்சு. நான் பார்த்த அவங்க பாக்கல. சிரிச்சுகிட்டே மறுபடியும் உள்ள போனேன்.

அடுத்த நாள்.

டக்... டக்... டக்... மறுபடியும் சிஷ்யன். "வாங்கப்பா உள்ள, உங்கள கதவு தட்ட வேணாம்னு எவ்வளவு தடவ சொல்றது". ரெண்டு பேரும் உள்ள வந்தாங்க. ஆனா இப்ப எதுவும் பேசாம, என் கைல கேமரா குடுத்துட்டு உட்கார்ந்தாங்க. "எப்படியும் என்ன shoot பண்ணேன்னு சொல்ல மாட்டீங்க, சரி குடுங்க"னு கேமரா வாங்கி play பண்ணேன். நான் நினைச்ச மாதிரியே, வண்டியில் உட்கார்ந்துகிட்டே, வர டிராபிக் எல்லாத்தையும் shoot பண்ணிருந்தாங்க. சிரிச்சிகிட்டே சொன்னேன், "நான் அப்பவே நினச்சேன், நீங்க இப்படிதான் shoot பண்ணுவீங்கனு. எதுக்கும் fulla பாக்கறேன்".

Footage ஓட ஆரம்பிச்சது. போகும்போது இவங்க பேசுனதும் ரெகார்ட் ஆகி இருந்தது. ஒரு அஞ்சு நிமிஷத்துக்கு அப்பறம் போர் அடிக்க ஆரம்பிச்சது. கரெக்டா, அத சொல்லலாம்னு நினைக்கும் போது, ஒரு அதிர்ச்சி. இவங்க வண்டிய நோக்கி ஒரு லாரி வேகமா வர, இவங்க அத கவனிக்கல போல. லாரி வண்டிய மோத, அதுவும் ரெகார்ட் ஆகியிருந்தது. திடீர் சுவாரஸ்யம் தாங்காம பாத்துகிட்டே இருந்தேன். கேமரா கொஞ்சம் நேரம் blank ஆகி, மறுபடியும் உயிர்வரும்போது, கேமராசுத்தி, இல்ல, இவங்கள சுத்தி ஒரு கூட்டம்.

கூட்டத்துல ஒருத்தருக்கொருத்தர் ஏதோ பேச, ஆனா யாரும் எதுவும் உதவி செய்ய முன் வரல. அவங்கள்ல ஒருத்தன், இந்த கேமரா பாத்து அத எடுக்க கைய வெக்க, casseette முடிஞ்சு static வர ஆரம்பித்தது. எனக்கு ஒண்ணும் புரியல. குழப்பத்தோட, கேமரா கீழ வெச்சிட்டு, "என்னப்பா எடுத்திருக்கீங்க"னு கேட்டேன். ரெண்டு பேரும் சிரிச்சுகிட்டே ஒருத்தர ஒருத்தர் பாத்து சிரிச்சிகிட்டாங்க. அப்பறம், மெதுவா காத்துல மறஞ்சிடாங்க.

நிஜமாவே காத்துல மறஞ்சிடாங்க.

அதிர்ச்சியோட, கீழ இருந்த கேமரா பார்த்தா , அதுவும் அங்க இல்ல.
அடுத்த வினாடி,

டக்... டக்... டக்... கதவு தட்டப்பட்டது....

-------------------------------------------------------------------------------------------------

First person narrative was kind of easy to me. So wrote it that way. but the film was not taken as FPN. Here is the video of the short film. I dont have previous experience both in writing short story and taking a short film. So, please excuse me.... thank you...



Sunday, December 21, 2008

கதை பண்றது....Part-2

First part படிக்காத நேயர்கள், -- இங்கே -- போய் படிச்சிட்டு தொடரலாம்...

ரொம்ப கஷ்டப்பட்டு யோசிச்சிகிட்டு இருந்தேன். சில மாதங்களுக்கு முன்ன, "BLOW-UP" அப்படின்னு ஒரு இங்கிலீஷ் படத்த பற்றி, ஆனந்த விகடன்ல படிச்சு, கதை வித்தியாசமா இருந்ததால, டவுன்லோட் செஞ்சு பார்த்தேன். அது ஒரு free-end ஸ்டோரி. அதாவது படத்தோட முடிவை, audience எப்படி வேணும்னாலும் assume பண்ணிக்கலாம். Ok, நாமளும் இத மாதிரி ஏதாவது வித்தியாசமா யோசிப்போம்னு அப்பவே முடிவு பண்ணேன்.

இந்த கதை யோசிப்பு நாட்களுக்கு, சில வாரங்கள் முன்னாடி, விஜய் குமார் அண்ணா, ஒரு பேய் கதை சொன்னாரு. நானும் அவரும் ஒரு நாள் பைக்ல போகும் போது, நான் பின்னாடி உட்கார்ந்துகிட்டே, வழியில வர எல்லாத்தையும் shoot பண்ணேன். அப்ப அண்ணா என்ன சொன்னாரு, "இப்ப நமக்கு accident ஆய்டும், நாளைக்கு நம்மளோட ஆவி, பாலா அண்ணாவுக்கு இந்த படத்த போட்டு காமிக்கும். இந்த accident சீன் அதுல record ஆகியிருக்கும். அந்த சீன் பாத்துட்டு, அண்ணா shockingaa நம்மள பாப்பாரு. நாம சிரிச்சிகிட்டே, புகைல மறந்சிடுவோம். சூப்பரா இருக்கும்ல".

அண்ணா சொன்னது என்னமோ நகைச்சுவைக்காக. ஆனா நான், இத short filma, எடுக்கலாம்னு அப்போ சொல்லி வெச்சிருந்தேன். So, சட்டுனு அந்த கதை ஞாபகம் வந்துச்சு. அதையும் இந்த BLOW-UP கதையையும், மிக்ஸ் பண்ணி, இந்த accident கதைய, ஒரு காமெடி கதையா இல்லாம, ஒரு super natural free-end கதையா மாத்தினேன். ஆனா, இந்த கதைய கேட்ட, 90% மக்களுக்கு, கான்செப்ட் புரியல. மனம் தளராம, நான் explain பண்ண அப்பறம், நல்லா இருக்குன்னு சொல்லுவாங்க.

எங்க சாருக்கும், explain பண்ணினேன். அவரு வேற கதை யோசிக்க சொன்னாரு. ஆனா நான் விடாப்பிடியா, இந்த கதையதான் கடைசில எடுத்தேன். ஆனா நான் நினச்சது போல படம் வரல. So எனக்கு திருப்தி இல்ல. இருந்தாலும், முதல் கதை/short பிலிம், ரொம்பக் கேவலமா இல்லாம, நல்லாவே வந்துச்சுன்னு சொல்லிக்கிற அளவுக்கு எடுத்திருந்தேன். இந்தப் படம் எடுக்கும் போது பல வாழ்கைப் பாடங்கள் கெடச்சுது. So, இப்படியாகத்தானே, நான் எனது முதல் கதையை யோசித்து, முதல் குறும் படத்தையும் (வெற்றிகரமாக) எடுத்து முடித்தேன். முக்கியமான விஷயம், இந்த படத்தோட முடிவு, பல சுஜாதா கதைகளோட பாதிப்புனால....

இந்த பதிவோட அடுத்த பாகத்துல, அந்த கதையும், படமும், உங்க பார்வைக்கு...

ஓபன் பண்ணவுடனே.......

Tuesday, December 16, 2008

எண்ணிப் பார்த்தேன் - 2

அடுத்த அஞ்சு பாட்டு... முக்கியமான விஷயம், இந்த பாடல்களோட எண்கள், அதனோட தரவரிசைய குறிப்பிடல.. சும்மா எண்றதுக்காக போட்டிருக்கேன்...

6. பாடல் - ஆவாரம் பூவுக்கும்...
படம் - அறை என் 305ல் கடவுள்...
பாடியது - ஸ்ரேயா கோஷல்..
இசை - வித்யாசாகர்...

நான் படம் பார்க்கும்போது இந்தப் பாடல் படத்துல இல்லை.. இளையராஜா music மாதிரி இருக்கும்.. நல்ல மெலடி...

Get this widget | Track details | eSnips Social DNA


7. பாடல் - ஒரு நாயகன் (ரீமிக்ஸ்)
படம் - தோழா...
பாடியவர்கள் - பிரேம் ஜி, வெங்கட் பிரபு & S.P.B சரண்...
இசை - பிரேம்ஜி அமரன்...

எதிர்பார்க்காத, புத்திசாலித்தனமான ரீமிக்ஸ். music டைரக்டர் என்ன பண்ணிருக்கார்னா, "இளமை இதோ இதோ" orchestavum - "ஒரு நாயகன்" பாட்டோட டியூனும் கலந்து, ஒரு பாட்டு குடுத்துருக்கார்.. நல்ல பாடல்களோட சாபக்கேடே, ஒழுங்கான picturisation அமையாததுதான். இந்த பாட்டும் அதே மாதிரிதான்.. :(

Get this widget | Track details | eSnips Social DNA


8. பாடல் - புதுப் புது...
படம் - தாம் தூம்...
பாடியவர்கள் - பென்னி தயால், குணா, சுசித்ரா...
இசை - ஹாரிஸ் ஜெயராஜ்...

"First impression is the best impression" - அப்படீன்னு சொல்லுவாங்களே, அது மாதிரி, இந்த படத்தோட ஆடியோ ரிலீஸ் ஆனாவுடனே, நான் கெட்ட மொத பாட்டு இது. அப்பவே நெனச்சேன் இந்த பாட்டு பெரிய ஹிட் ஆகும்னு. ஆனா நினைச்ச அளவு ஹிட் ஆகலனாலும், ஏதோ சுமாரா ஹிட் ஆச்சு.. இந்த படத்துல வர, யாரோ மனதிலே and அன்பே என் அன்பே பாடல்களும் நல்லா இருக்கும். ஆனா எனக்குபிடிச்சது இதுதான்...

Pudhu Pudhu.mp3


9. பாடல் - கோடான கோடி...
படம் - சரோஜா...
பாடியவர்கள் - ரனினா, கவி & அஸ்லாம்...
இசை - யுவன் ஷங்கர் ராஜா...

என்னத்த சொல்றது.. இந்த படத்துல எல்லா பாட்டுமே நல்லா இருக்கும். எந்த பாட்ட include பண்றதுன்னு தெரியல. ஆனா இந்த பாட்டும் (and picturisation too ;) படத்தோட வெற்றிக்கு ஒரு காரணமா இருந்துச்சு - அப்படீங்கற காரணத்துனால, மத்த பாட்டோட இதுக்கு கொஞ்சம் value ஜாஸ்தி ஆய்டுச்சு...

Kodana Kodi.mp3


10. பாடல் - அவ என்ன என்ன...
படம் - வாரணம் ஆயிரம்...
பாடியவர்கள் - கார்த்திக் (நான் இல்லை ;) & குழுவினர்...
இசை - ஹாரிஸ் ஜெயராஜ்...

சரோஜா படம் மாதிரியே, இந்த படத்துலயும் எல்லா பாடல்களும் நல்லா இருக்கும். ஒரு ரெண்டு மாசமா என் playlistla அனல் மேலே, ஏத்தி ஏத்தி and இந்த பாட்டு தொடர்ந்து இருக்கு. எனக்கு எந்த லவ்வும் இல்ல, தோல்வியும் இல்ல. இருந்தாலும் இந்த பாட்டு ரொம்ப பிடிச்சிருக்கு. நல்ல lyrics + நல்ல choreo + நல்ல வாய்ஸ் and finally நல்ல execution by சூர்யா.. எனக்கு தெரிஞ்சு, சிவாஜிக்கு அப்பறம், பாடல்லயும் நல்லா நடிக்கிற ஆள் சூர்யாதான்.. நான் எந்த பாட்டுக்கும் ரேங்க் குடுக்கல, இருந்தாலும் என் personal opinionஇந்த பாட்டுக்குதான் முதல் இடம்.

Ava Enna.mp3


So, இதுதான் எனக்கு இந்த வருடம் வந்ததுலயே, ரொம்ப பிடிச்ச song லிஸ்ட். முக்கியமான விஷயம், இந்த வருடம் நவம்பர் வரைக்கும் வந்த படங்கள் and பாடல்கள் மட்டும்தான் லிஸ்ட் out பண்ணிருக்கேன். அதே மாதிரி, ஆடியோ மட்டும் இல்லாம படமும் ரிலீஸ் ஆகியிருந்தா மட்டுமே என் playlistla இடம் கிடைக்கும். (இன்னா பாலிசி) இந்த countdownla include பண்ண முடியாத, கடைசி நிமிஷத்துல விடுபட்டு போன பாடல்களும் சிலது இருக்கு. அவை,
நிமிர்ந்து நில் - சரோஜா, டாக்ஸி டாக்ஸி - சக்கரகட்டி, பாலக்காட்டு - யாரடி நீ மோகினி, where is the பார்ட்டி - சிலம்பாட்டம்...

அவ்ளோதான்... அடுத்து, படத்தோட countdownல சந்திப்போமா...


ஏய் டண்டணக்கா ..டணக்குடக்கா..டிக்கான் டிக்கான் டிஷ்...

Monday, December 15, 2008

எண்ணிப் பார்த்தேன் - 1

என்னுடைய countdownla முதல்ல சொல்லப்போறது, பாடல்கள பத்தி.. வழக்கம் போல நிறைய படங்களும், நிறைய பாடல்களும் வந்த வருடம். இந்த வருடம் இசைக்கு ஒரு பெரிய மைல்கல்லா அமைஞ்சுதுனு சொல்றா மாதிரி எதுவும் நடந்ததா எனக்கு ஞாபகம் இல்ல... இங்க நான் குடுக்குற லிஸ்ட்ல சில நல்ல பாடல்கள் விட்டு போயிருக்கலாம்.. ஆனா இந்த பாடல்கள் எல்லாமே, என் ஞாபக சக்திய சோதிக்காத வகைல, நினைச்ச உடனே நினைவுக்கு வந்தவை.. மொத்தம் பத்து, இப்ப பைவ் மட்டும்... பாடல்கள் பற்றி விலாவரியா சொல்ல எனக்கு தெரியாது. ஜஸ்ட் ஒண்ணு ரெண்டு லைன்ல சொல்றேன்...

1. பாடல் - கண்டேன் கண்டேன்...
படம் - பிரிவோம் சந்திப்போம்...
பாடியவர்கள் - கார்த்திக், ஸ்வேதா..
இசை - வித்யாசாகர்...
ஏன்??? - ஏதோ இந்த ராகத்துல (வசந்தா) வந்த பாடல்கள் எல்லாமே நல்லா இருக்கு... இதே ராகத்துல இன்னொரு பாட்டு, ராஜ பார்வைல வர அந்தி மழை பொழிகிறது...


Get this widget | Track details | eSnips Social DNA


2. பாடல் - கண்ணதாசன் காரைக்குடி...
படம் - அஞ்சாதே...
பாடியவர்கள் - மிஷ்கின் & கோரஸ்...
இசை - சுந்தர்.c.பாபு ...

ஏன்??? - இந்த பாடல் ஒரு வகைல என்னை ஆச்சர்யப்படுத்தியது.. படம் வரதுக்கு முன்னாடி ஹிட்டானது என்னமோ "கத்தாழ கண்ணால".. எனக்கு அந்த பாட்டும் புடிக்கும்.. ஆனா இந்த பாட்டு, better than that.. + excellent choreo...

Get this widget | Track details | eSnips Social DNA


3. பாடல் - ஹாப்பி நியூ இயர் ...
படம் - குருவி...
பாடியவர்கள் - சுனிதி சௌஹான், யோகி-b, burn...
இசை - வித்யாசாகர்...

ஏன்??? இந்த படத்துல எனக்கு பிடிச்ச ஒரே பாடல்.. முதல் முறை கேட்டவுடனே நல்லா இருந்துச்சு.. இன்னும் கேட்டுகிட்டே இருக்கேன்.. சுனிதி சௌஹான் குரலும் சூப்பரா இருக்கும்...

Get this widget | Track details | eSnips Social DNA


4. பாடல் - கண்கள் இரண்டால்...
படம் - சுப்பிரமணியபுரம்...
பாடியவர்கள் - பெல்லி ராஜ், தீபா மரியம்...
இசை - ஜேம்ஸ் வசந்தன்...

ஏன்??? - பார்த்த முதல் நாளேவ தொடர்ந்து ஹிட்டான அடுத்த கிறிஸ்டியன் choir பாட்டு. இதுவும் நல்லா ராகம் (ரீதி கௌளை). கேட்கும்போது, "சின்னக் கண்ணன் அழைக்கிறான்" பாடல் ஞாபகத்துக்கு வரும்...

Get this widget | Track details | eSnips Social DNA


5. பாடல் - நான் வரைந்து வைத்த...
படம் - ஜெயம்கொண்டான் ...
பாடியவர்கள் - ஹரிஹரன், மதுஸ்ரீ...
இசை - வித்யாசாகர்...

ஏன்??? - Trademark வித்யாசாகர் மெலடி.... வேற என்ன சொல்ல...

Get this widget | Track details | eSnips Social DNA



symbolica சொல்றேன்
வி வில் மீட்...
வில் மீட்...
மீட்...

Saturday, December 13, 2008

டிசம்பர் சீசனா....

டிசம்பர் மாதம், உலகம் முழுக்க follow பண்ற Gregorian காலெண்டர்ல கடைசி மாதம்.. asusual எல்லா டிவி சேனலும் countdown ஆரம்பிச்சிருவாங்க. சில ப்ளாக்ளையும் ஆரம்பிச்சிருவாங்க... இது என்னோட முதல் டிசம்பர் blog என்பதனால, நானும் அந்த ஆட்டைல குதிக்கலாம்னு பாக்கறேன்..... நான் ரொம்ப வெட்டிப் பையன் என்கிற காரணத்துனால, ஒவ்வொரு categoryla ஒவ்வொரு countdown சொல்லலாம்னு முடிவு பண்ணிருக்கேன்... அந்த அஞ்சு கோடி பேர்களும், alt+f4 அமுக்க ரெடியா இருங்க....

கஷ்டப்பட்டு படிக்கிற அந்த அஞ்சு பேரும், அஞ்சு கோடில இருக்காங்க, அதான்... :)

Friday, December 12, 2008

கதை பண்றது....Part-1

கதை பண்றதுனா என்னான்னு உங்களுக்கு தெரிஞ்சிருக்கலாம், இருந்தாலும் சொல்றேன். சும்மா வேலை செய்யாமலே செய்யறாப் போல பாவ்லா பண்றதுதான் கதை பண்றது. உதாரணத்துக்கு, நம்ம வடிவேல் காமெடி ஒண்ணுத்துல, ஒரு ஆள் பஸ் தள்ளாமையே "ஹே தள்ளு தள்ளு தள்ளு"னு கதை பண்ணுவார். இத மாதிரி பல பேர் இருக்காங்க. ஆனா நான் சொல்லவந்தது இந்த கதை பண்றதப் பத்தி இல்ல, இது நெஜமாவே ஒரு சிறுகதையோ, தொடர்கதையோ, சினிமாவுக்கான கதையோ பண்றதப் பத்தி....

கதை எழுதனும்னு நான் எப்பவும் முயற்சி பண்ணது இல்ல. ஆனா சின்ன வயசிலேர்ந்தே நிறைய படிச்சிருக்கேன். அப்பெல்லாம் மாலைமதினு ஒரு novel + வாரப் பத்திரிக்கை ஒண்ணு வரும். அதுல வர கதைகள் பல, குப்பையா இருந்தாலும், சும்மா படிக்கற பழக்கதுக்காக வீட்ல வாங்குவாங்க. என் அம்மாவும் நிறைய படிப்பாங்க. கதை கவிதை எல்லாம் எழுதுவாங்க. அவங்களுக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்காததுனால ஆர்வம் குறைஞ்சுடுச்சு. ஆனா அவங்களால எனக்கும் நிறைய படிக்கற பழக்கம் வந்தது. (ஆனா எனக்கு கவிதை ரசிக்கவும் எழுதவும் தெரியாது)...

நான் முதல்ல ஒரு முழு novel படிச்சது ஒரு ரயில் பயணதப்போ. அப்ப நான் 3rd ஸ்டாண்டர்ட் படிச்சிகிட்டு இருந்தேன். கதையோட பேர்கூட காவல் கல்யாணம். கதை செரியா ஞாபகம் இல்ல. அதெல்லாம் விடுங்க, இப்ப என்ன சொல்ல வரேன்னா, நான் நெறைய கதை பண்ணிருக்கேன்/படிச்சிருக்கேன் அப்படீங்கறதுதான். இதோட, லைப்ரரி மெம்பெர் வேற. கேக்கணுமா, ஒரே கதைதான் (ஒன்லி தமிழ் கதைகள், நோ peters). இப்படியாக போய்கிட்டு இருந்த கதைல, சுஜாதா சார் கதைகள் என்னை ரொம்ப influence பண்ணிச்சு. ஒரு கதை எப்படி இருக்கணும்னு நான் அவரோட பல கதைகள படிச்சுதான் கத்துகிட்டேன்.

என்னோட இளங்கலை பட்டப் படிப்பு (அதான் UG) ரெண்டு semesterlayum, ஒரு படம் எடுக்கணும். முன்ன ஒரு பதிவுல சொன்னா மாதிரி, எடுத்த படம் ஒண்ணு. கடைசி ஸெம்ல ஒரு குறும் படம் (ஷார்ட் பிலிம்) எடுக்கணும். அதுக்கான கதைய ரெடி பண்ண சொன்னாரு எங்க சார். எனக்கு ரொம்ப நாளாவே சுஜாதவின் சிறுகதைகள்ல ஏதாவது ஒண்ண எடுக்கனும்னு ஆசை. ஆனா கூட இருக்குற என்னோட ஒரு நண்பன் சுஜாதா கதைகள்ல ஒண்ண எடுக்கப்போராத சொன்னதுனால நான் என்னோட திட்டத்த கை விட்டேன். எனக்கு ஒரு பெரிய problem. என்னால ஒரு பழைய conceptku புதுசா பல modifications பண்ணி/ improvise பண்ணி நாசம் பண்ண தெரியும். ஆனா புதுசா ஒரு கான்செப்ட் யோசிச்சு கெடுக்க பல நாள் டைம் வேணும்.

ஆனா, எங்களுக்கு இருந்ததோ ரொம்ப கம்மியான டைம். அதனால என்ன பண்ணலாம்னு யோசிச்சிகிட்டு இருந்தேன். நீங்களும் யோசிச்சுகிட்டே இருங்க, மீதிய அடுத்த பதிவுல சொல்றேன்.......


இத தான காலங்காலமா பண்றேன்.....

p.s.இது lancelot போட்ட பதிவுனால பாதிப்பு அடைஞ்சு எழுதுன பதிவு இல்ல. இத நான் ஒரு 20 நாளாவே draftla save பண்ணி வெச்சுருக்கேன்...

Tuesday, December 9, 2008

ஒரு சர்தார்ஜி கதை...

இந்த தலைப்ப பார்த்து, நான் ஏதோ ஒரு ஜோக் சொல்லப்போறதா பலபேர் நினைச்சிருக்கலாம். ஆனா இது நிஜாமவே ஒரு நல்ல கதை. சர்தார்ஜிகள அவமானப்படுத்தி நிறைய ஜோக் வந்திருக்கு. நாமும் படிச்சிருப்போம். ஆனா நிஜாமவே, அவங்களோட இன்னொரு பக்கம் பல பேருக்கு தெரியாது. இந்த கதை, அவங்களோட உழைப்புக்கும், உலகத்துல எங்க போய் இருந்தாலும் அவங்க எப்படி வசதியா இருக்காங்க - அப்படீங்கரதுக்கும் ஒரு எடுத்துக்காட்டு. எனக்கு வந்த forward e-mail, உங்க எல்லாருக்கும் சொல்லனும்னு தோணிச்சு. கதையல்ல நிஜம்...

-------------------------------------------------------------------------------------------------
e-mail ஆரம்பம்...
என் நண்பன் சொன்ன கதை. "போன விடுமுறை நாட்கள்ல, நண்பர்கள் நாங்க டெல்லி போனோம். ஊர் சுத்தி பார்க்க ஒரு டாக்ஸி வாடகைக்கு எடுத்தோம். அந்த டிரைவர் ஒரு (கொஞ்சம்) வயசான சர்தார்ஜி. ஏறி உட்கார்ந்த நாங்க, அவர வெறுப்பேத்த சர்தார்ஜி ஜோக்ஸ் நிறைய சொல்லிகிட்டும் சிரிச்சுகிட்டும் வந்தோம் . ஆனா நினச்சது போல அந்த டிரைவர் ஒண்ணும் பேசல. அமைதியா வண்டி ஓட்டிகிட்டு வந்தாரு.

கடைசில, எல்லா முடிஞ்சு இறங்க வேண்டிய இடம் வந்த அப்பறம், அந்த பயணத்துக்கான காச கொடுத்தோம். மீதி சில்லறைய குடுத்த அந்த சர்தார்ஜி டிரைவர், தலைக்கு ஒரு ரூபாய் வீதம் எல்லா நண்பர்களுக்கும் கொடுத்துட்டு சொன்னார், "பசங்களா, காலைலேர்ந்து நீங்க பேசுன எல்லாத்தையும் நான் கேட்டேன். அதுல சிலது ரொம்பவே மோசமாகவும் இருந்துச்சு. ஆனா அப்பாவும் நான் எதுவும் பேசல ஏன்னா நீங்க எல்லாரும் சின்னப் பசங்க, உலகம் தெரியாதவங்க. நான் உங்ககிட்ட கேட்கறதெல்லாம் ஒண்ணே ஒண்ணுதான். உங்ககிட்ட இப்ப நான் குடுத்த ஒரு ரூபாய, இந்த ஊர்லயோ இல்ல ஏதாவது ஒரு ஊர்லயோ, உங்க கண்ல தென்படுற முதல் சர்தார்ஜி பிச்சைகாரனுக்கு போடுங்க" அப்படீன்னாரு.

என் நண்பன் தொடர்ந்தான். "அந்த ஒரு ரூபாய் இன்னும் என்கிட்டதான் இருக்கு. நான் இன்னும் ஒரு பிச்சை எடுக்குற சர்தார்ஜிய கூட பார்க்கல"னு சொல்லி முடிச்சான்-------------

சர்தார்ஜிஸ் எந்த வேலையும் செய்ய தயங்கரதில்லை. எந்த வேலைய செஞ்சாலும் முழு ஈடுபாடோட செய்வாங்க. கஷ்டபடுற சர்தார்ஜிஸ், ஹைவேஸ்ல ஒரு dhaba, இல்ல ஒரு ஜூஸ் கடை, இல்ல ஒரு டிரைவர் வேலை இப்படி ஏதாவது செஞ்சு பொழச்சிப்பாங்களே தவிர, பிச்சை எடுக்கமாட்டாங்க.
நிஜமாவே சிந்தனைய தூண்டுற விஷயம்தான்...

e-mail முற்றும்....
-------------------------------------------------------------------------------------------------
எப்படி நாமமும் கோவிந்தாவும் ஏமாற்றுவதற்கான அடையாளங்களா தப்பா மாற்றப்பட்டதோ, அதே மாதிரி தான் சர்தார்ஜினு சொன்னாலே முட்டாளாதான் இருப்பாங்கனு நினைக்கறதும். இனிமேலாவது இந்த விஷயங்கள மாற்ற முயற்சிப்போம். சர்தார்ஜிகள ஏளனம் செய்யாம இருப்போம். இந்தத் தருணத்துல, அவங்கள புத்திசாலிய சித்தரிச்ச ஒரு கார்டூன நான் ப்ளோகியிருந்தேன், அதையும் போய் பாருங்க...

Friday, December 5, 2008

Butterfly Effect....ச்சே... sorry.... award..

யாரோ எங்கயோ ஆரம்பிச்ச ஒரு விஷயம், இப்ப இங்க வந்துருக்கு.. இதுக்கு முன்னாடியே நான் ஒண்ணு - ரெண்டு - மூணு - tag ஏத்துகிட்டேன்... இப்ப அடுத்ததா விருதுனு சொல்லி ஒரு tag அனுப்பிருக்காரு தோழர் (கம்யூனிஸ்ட் இல்ல) அருண்குமார்... என் ப்லோக் ரொம்ப படிச்சு, (பித்து) புடிச்சு போய் எனக்கு இந்த அவார்ட் குடுத்திருக்கார்... அவரோட ப்ளோக்ல என்ன சொல்லிருக்கார்னா...
"நண்பா நமக்குள் நிறைய ஒற்றுமைகள் (உருவத்தை தவிர)...உன் ப்லோக்கிற்கு நிறைய பேர் வருகை தருகிறார்கள் அதனால் சில சமூக கருத்துக்களை தெரிவிப்பாயானால் இன்னும் நன்றாக இருக்கும். நீ தன்னடக்கம் உள்ளவன் என்று எனக்கு தெரியும் இருந்தாலும் இந்த அவார்டை ஏற்று கொள்ளுமாறு 50வது வட்டத்தின் சார்பாக பணிவண்புடன் கேட்டு கொண்டு, வாய்ப்பளித்தமைக்கு நன்றி கூறி விடை பெறுகிறேன். தம்பியின் நாமம் வாழ்க ! வீரத்தளபதி நாமம் வாழ்க ! !"

தலைவா, தங்களது நம்பிக்கைக்கும் பாராட்டிற்கும் நன்றி.. நான் ஆரம்பத்திலேயே கூறியது போல், சமுதாயத்திற்கு கருத்துக்கள் தெரிவிக்க எனக்கு விருப்பமும் அனுபவமும் இல்லை. அதோடல்லாமல் அதைப் போன்ற ப்ளோகுகள் வலையில் ஏராளம். இருந்தாலும், சமுதாயத்தை கெடுக்கும் அளவிற்கு எனது பதிவுகள் இருக்காது என உறுதியளிக்கிறேன். என் ப்ளோகிற்கு நிறைய வாசகர்கள் இருப்பதைப்ப் போன்ற புரளிகளை கிளப்ப வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

வீரத் தளபதி என்ற பட்டம், அண்ணன் ரித்தீஷ் அவர்களயே சாரும் எனவே, எனக்கு வேறு ஒரு பட்டம் யோசிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். செந்தமிழ் கொஞ்சம் கஷ்டமா கீது. இப்ப சாதா"ரணமா" சொல்றேன். நண்பர் சொன்னது போல எனக்கும் அவருக்கும் பல ஒற்றுமைகள் இருக்கு. நான் இவர சந்திச்சது முதல் முதல ஒர்குட்ல "copy cat filmmakers" அப்படீங்கற communityla. ஹாரி பாட்டர் vs நம்ம ஊர் புராணம் மாதிரி ஒரு தலைப்புல, ரெண்டு பேருமே நம்ம ஊர் புராணத்துக்கு சப்போர்ட் பண்ணி பேசுனோம்.

அங்க ஆரம்பிச்சது எங்க நட்பு இப்ப இங்க வந்துருக்கு. வேற வழியில்லாமாதன் எனக்கு இந்த அவார்ட் குடுக்குராரோனு கூட தோணுது. நண்பா any sarcasm here??? ஏதோ விடுங்க, குடுத்துட்டாரு. இந்த அவார்ட் வாங்குனவங்க செய்ய வேண்டிய காரியங்கள் சிலது கீது, அது இன்னானா...
  • Put the logo on your blog.
  • Link the person who awarded it to you.
  • Link the bloggers you are about to honor.
எனவே பாருங்க, இடது பக்கம் மேல லோகோ போட்டுட்டேன். Already நம்ம தல என் "அக்கம் பக்கம்" லிஸ்ட்ல இருக்காரு. வலது பக்கம் "lancelot"னு இருக்கு பாருங்க. அடுத்து நான் யாருக்கு இந்த அவார்ட் தரப்போறேன்னா என் ஜூனியர் சுவாதிக்கு . பொண்ணோட language செம்ம ஷார்ப், அதே மாதிரி தான் பதிவுகளும். மேடமுக்கு வருது பாருங்க கோவம், நீங்களே போய் படிச்சு பாருங்க. வாழ்த்துக்கள் சுவாதி. என்னதான் என் அறிவுரையின் பேர்ல நீ ப்ளோக் பண்றதா இருந்தாலும், உனக்கு குரு என்கிற விதத்துல உன்னை பாராட்ட வேண்டியது என் கடமை. All the best, keep blogging. (try to divide paragraphs in ur blog)

அவ்வளவே, எனது கடைமை இப்போதைக்கு முடிந்தது. நான் வரேன். அண்ணன் அருணிற்கு மீண்டும் எனது நன்றி.