Friday, December 31, 2010

எண்ணிப் பார்த்தேன் - 2010

போன வருஷங்கள்ல நான் எழுதின எண்ணிப்பார்த்தேன் பதிவுகளுக்கு மக்கள் கொடுத்த  அமோக (!!!!) வரவேற்ப்பை முன்னிட்டு. இந்த வருஷக் கடைசியிலும் வழக்கம் போல, 2010ல் எனக்கு பிடிச்ச, படங்கள் + பாடல்கள் பற்றிய ஒரு பதிவு... இந்தப் படங்கள் பிடிக்க பெரிய காரணங்கள் என்ன இருந்திடப் போகுது. அதனால, ரொம்ப நீட்டி முழக்காம, பெயர்களையும், சில படங்களுக்கு நான் எழுதின விமர்சனங்களோட லிங்கையும் கொடுத்திருக்கேன்.

பிடித்த படங்கள்
 • ஆயிரத்தில் ஒருவன்
  நிறைய பேர் வறுத்தெடுத்தாலும், இந்தப் படம் நல்ல அனுபவம். ரசிகர்கள்னு பொதுவா சொல்ல முடியல, ஆனா படத்துக்கான மனநிலைய எனக்கு சரியா செட் பண்ணிச்சு... விமர்சனம் --> இங்க முதல் பத்தியில.
 • கோவா
  மறுபடியும், ஊர் ஆயிரம் சொன்னாலும், எனக்கும், என் நண்பர்களுக்கும் ரொம்ப பிடிச்ச படம். செம்ம கலாட்டா... விமர்சனம் --> இங்க
 • விண்ணைதாண்டி வருவாயா
  மூணு தடவை தியேட்டர்லையே பாத்தேன். இதுக்கு மேல எதாவது சொல்லணுமா?? சிம்பு பேர், கார்த்திக்னு இருந்தது முக்கியமான காரணம்...
 • சிங்கம்
  இந்த வருஷத்தோட சிறந்த மாஸ்னு சொல்லலாம். எந்திரனைவிட செம்ம மாஸ்.
 • பாஸ் என்கிற பாஸ்கரன்
  நோ நான்சென்ஸ் படம்னு சொல்லலாம். ரொம்ப light-hearted, feel good படம். விமர்சனம் -->இங்க ஆறாவது பத்தியில ரெண்டே லைன்..
 • எந்திரன்
  தலைவரோட மேஹ்........ ப்ளாக் ஷீப் சீனுக்காகவே ரெண்டு தடவை தியேட்டர்ல பார்த்தேன். இன்னொருமுறை பார்க்கலாமான்னு யோசிக்கறேன். ஷங்கர் என்கிற ஒற்றை ஆளோட சாதனை. மேக்கிங் பார்த்த அப்பறம், இன்னமும் பிடிச்சுது... விமர்சனம் --> இங்க
உலக அளவுல நான் ரசிச்ச படங்கள்
 • இன்ஸெப்ஷன்
  (இதை பத்தி நான் எழுத்திய சில உரைநடை விளக்கப் பதிவுகள்
  இங்க --> ஒண்ணு - இன்னொன்னு - இன்ன்ன்னொன்னு - கடைசியா ஒண்ணு)
 • ஹாரி பாட்டர் 7
  நான் பாட்டர் fan. அதை விட எம்மா வாட்ஸன் fan. இதுக்கு மேலையுமா காரணங்கள் தேவை??
 • UnStoppable
  படம் நல்லா விறு விறுனு இருக்குனு சொல்லுவாங்களே. அப்படி இருந்துச்சு...
 • டாய் ஸ்டோரி 3 - விமர்சனம் --> இங்க
 • ஷட்டர் ஐலாண்ட்
 • கராதே கிட்
 • How to Train your Dragon
 • Kick - Ass
 • Easy A .. விமர்சனம் --> இங்க  ரெண்டாவது பத்தி
 • The Social Network.. விமர்சனம் --> இங்க  மூணாவது பத்தி
மொக்கை கொடுத்த/வாங்கிய படங்கள்
 • தமிழ் படம் - விமர்சனம் ---> இங்க மூணாவது பத்தியில.
 • கச்சேரி ஆரம்பம் - விமர்சனம் --> இங்க
 • பையா - விமர்சனம் --> இங்க
 • ராவணன் - விமர்சனம் --> இங்க
 • இனிது இனிது
  ஒரிஜினல்ல இருந்த எளிமை, இதுல இல்லாதது பெரிய குறை. பெருசா ஒன்றமுடியலை.
 • நந்தலாலா
  மிஷ்கினின் திமிருக்கும், கர்வத்துக்கும் கிடைச்ச சரியான் அடி. ரொம்ப ஸ்லோ.
  நான் பெரிய அறிவாளி இல்லை. அதனால் கூட இந்தப் படம் பிடிக்காம இருந்திருக்கலாம்...
 • ரத்த சரித்திரம்
  ரத்தம் மட்டும்தான் இருந்தது.. சரித்தரம் ஒண்ணுத்தையும் காணோம்.
 • ஈசன் - விமர்சனம் --> இங்க  முதல் பத்தியில
 • Owl - Guardian - விமர்சனம் --> இங்க  மூணாவது பத்தியில
 • அவதார்
  மொக்கை வியட்னாம் காலனி கதைய, ரீ மாடல் பண்ணி கொடுத்து ஊரை ஏமாத்திட்டாங்க். டெக்னிகலா நிஜமாவே மிரட்டலான படம். ஆனா கதை திரைக்கதையெல்லாம் அப்படியே ஒரு மொக்கை தமிழ் படம் மாதிரி இருந்த்து எனக்கு பெரிய disappointment.
 • மன்மதன் அம்பு - விமர்சனம் ----> இங்க கடைசி பத்தியில
ரசித்த பாடல்கள்
கொஞ்சம் பெரிய லிஸ்டு. ஓவரா வர்ணிக்காம பெயர்களை மட்டும் எழுதறேன்...
 • ஆரோமலே (கலெக்டர்ஸ் எடிஷன்ல இருக்கற ஸ்ரேயா கோஷல் வெர்ஷனும் சேர்த்து) - விண்ணைத்தாண்டி வருவாயா
 •  ஹே துஷ்யந்தா - அசல்
 • இது வரை -கோவா
 •  என் காதல் சொல்ல - பையா
 • தாக்குதே - பாணா காத்தாடி
 • அடடா மழைடா - பையா
 • அம்மா தல்லே - புலி (தெலுங்கு)
 • பெஹெனே தே - ராவண் (இந்தி)
 • கிளிமஞ்சாரோ - எந்திரன்
 • ஊத்து தண்ணி - மகிழ்ச்சி
 • உன்னை கண் தேடுதே - வ கு.க
 • அய்யய்யோ நெஞ்சு - ஆடுகளம்
 • இமைத்தூதனே - இளைஞன்
 • நெஞ்சில் நெஞ்சில் - எங்கேயும் காதல்
 • Love the Way you Lie - Eminem ft Rihaana - Recovery
விட்டுப்போனவை
 • என் நெஞ்சில் - பாணா காத்தாடி
 • ஏழேழு தலைமுறைக்கும் - கோவா
 • சிரிக்கிறேன் - பலே பாண்டியா
 • Dhochey, பவர் ஸ்டார் - புலி (தெலுங்கு)
 • அரிமா அரிமா - எந்திரன் - அருமையான picturization.
 • உச்சுக் கொட்ட - மகிழ்ச்சி
 • உஸ்ஸுமலரசே - உத்தம்புத்திரன்
 • காதல் வந்தாலே - சிங்கம்
 • தகிடுதத்தோம் - மன்மதன் அம்பு
 • தோழா வானம் - இளைஞன்
 • நாங்கை - எங்கேயும் காதல்
பொதுவா நான் சிறந்த படம், பாட்டுனு அவார்ட் எல்லாம் கொடுக்க மாட்டேன். ஆனா, இந்த வருஷம் கொடுக்கலாமோன்னு தோணுது... அதனால,
என்னை பொறுத்த வரைக்கும், இந்த வருஷத்தோட
சிறந்த பாடல் கோவா படத்துல வர இது வரை,
சிறந்த படம் - விண்ணைத்தாண்டி வருவாயா...
சிறந்த இசையமைப்பாளர் - யுவன்
எல்லாருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் :)

Thursday, December 30, 2010

மற்றும் பல (30/12/2010)

கடைசி ரெண்டு மூணு வாரத்துல, நிறைய சினிமா ஆட்களைப் பார்த்துட்டேன். கிடைக்கற சாக்குல ஃபோட்டோவும் எடுத்து, சும்மா ஸீனுக்கு ஃபேஸ்புக்கல போடறேன். சும்மா சொல்லக்கூடாது, நல்ல வரவேற்பு...
 ------------------------------------------------------------------------------------------------------------------
மன்மதன் அம்பின் சர்ச்சைக்குரிய பாடலை நீக்க மாட்டேன்னு அறிவிச்ச அன்னைக்கு சாயங்காலமே நீக்கப்படும்னு அறிவிச்சது செம்ம காமெடி. கமலை கண்மூடித்தனமாக ஆதரிக்கும் ரசிகர்களும், அடுத்த எலெக்‌ஷன்ல திமுகவுக்கு ஓட்டு போடற ஆட்களும் ஒரே மாதிரிதான். இவங்க ரெண்டு பேருக்குமே என்ன சொன்னாலும் புரியாது, உரைக்காது. அதனால, இப்படிப்பட்ட ஆட்களோட விவாதத்துல இறங்காதீங்க.
------------------------------------------------------------------------------------------------------------------
 இப்பவே சிறந்த படத்துக்கான ஆஸ்கார் எந்தப் படத்துக்குப் போகும்னு பேச ஆரம்பிச்சுட்டாங்க. சமீபத்துல வந்த ப்ளாக் ஸ்வான் அப்படிங்கற படத்துக்கும் வாய்ப்பு இருக்கறதா பேசிக்கறாங்க. எனக்கென்னமோ இன்செப்ஷன் படத்துக்கு கொடுக்கலாம்னு தோணுது. ஏற்கனவே இருக்கறத வெச்சி ஒண்ணும் பண்ணாம, புதுசா ஒரு விஷயத்தை உருவாக்கி, அதை சிக்கலாக்கி, மக்களுக்கு புரியறாமாதிரி தந்து, அவங்களை யோசிக்கவும் வெச்ச படம் இது. வேற என்ன தகுதி எதிர்பார்க்கறாங்கன்னு தெரியலை. ஆஸ்கார் கமிட்டிக்கும், இயக்குனர் நோலனுக்கும் ஆகாதுன்னு வேற பேசிக்கறாங்க. ம்ம்ம், பொறுத்திருந்து பார்ப்போம்.
------------------------------------------------------------------------------------------------------------------
இயக்குனர் சங்க விழா ஒண்ணு வெச்சாங்க. மொக்கையா டான்ஸ், பாட்டுனு போய்கிட்டு இருந்த விழாவுல, அப்பப்போ யாராவது வந்து கலகலப்பாக்குனாங்க. ஆனா, ராஜாவும், பாராதிராஜாவும் பேசினது, சகிக்கலை. ராஜா இன்னும் ஒரு குழந்தை மாதிரியே சண்டை போடுறத பார்க்கும்போது மகேந்திரன் சார் சொன்னது தான் ஞாபகம் வருது. பாரதிராஜாவும் சளைக்காம சண்டை போட்டாரு. ரெண்டு பெரிய மனுஷங்க இப்படி பண்ணது, நல்லாவே இல்லை. அதே நேரத்துல, யுவன், வெங்கட் பிரபு, லிங்குசாமி, விஷ்ணுவர்த்தன் மேடைல ஜாலியா பேசிகிட்டதைப் பார்க்க நல்லா இருந்த்துச்சு. Little Girls are wiser than men அப்படிங்கற கதையும் ஞாபகம் வந்துது. கடைசி வரைக்கும் ரஜினி இண்டர்வியூவை போடாம ஏமாத்திட்டாங்க. :(
------------------------------------------------------------------------------------------------------------------
புதுசா ஆரம்பிச்சிருக்கற தேவியின் டால்பி 3டி, டிக்கெட் காசு போக 30ஓவாயும் கண்ணாடிக்கு கொடுக்கணுமாம். அங்க எந்த 3டி படமும் பார்க்க வேணாம்னு இருக்கேன்.
------------------------------------------------------------------------------------------------------------------
டிஸ்னியின் Tangled படம், இந்தியாவுல எப்போ ரிலீஸ் ஆகும்னு யாராவது கேட்டு சொல்லுங்க.
------------------------------------------------------------------------------------------------------------------
சினிமா மாதிரியே, சீரியலும் எடுத்தா நல்லா இருக்கும்னு பல காலமா சொல்லிகிட்டு இருக்கேன். அதுவும் பிலிம்ல எடுத்து, அதே தரத்துல கொடுத்தா கண்டிப்பா வரவேற்பு இருக்கும்னு நினைச்சேன். நான் நினைச்சதை, இயக்குனர் கவுதம் மேனன் பண்ணப்போறாரு. சமீபத்துல கொடுத்த ஒரு பேட்டிலதான் இத சொன்னாரு. அவருடைய ஃபோட்டான் கதாஸ் நிறுவனமே தயாரிக்கற இந்த டி வி சீரிஸ், ஏ ஆர் ரகுமானின் இசைல இருக்கப்போகுது. இன்னும் எந்த சேனல்னு முடிவு பண்ணலியாம். CSI, Friends ரேஞ்சுல, தமிழ்ல ஒரு சீரியல்னு நினைக்கவே நல்லா இருக்கு.
------------------------------------------------------------------------------------------------------------------
நண்பர்கள் சேர்ந்து  http://sa-pa-sa.blogspot.com/ அப்படின்னு, ஒரு இசை சம்பந்தப்பட்ட blog ஆரம்பிச்சிருக்கோம். படிச்சுப் பாருங்க..

Wednesday, December 29, 2010

நாலு படம் - நாலு பத்தி

இந்த மாதம் பார்த்த நான்கு படங்களைப் பற்றிய என் எண்ணங்கள்...

ஈசன்
எதிர்பார்ப்பு இல்லாமல் பார்த்திருந்தால் நன்றாக இருந்திருக்குமோ என்று பார்த்த பிறகு நினைத்தேன். சுப்ரமணியபுரம் பார்க்கும்போதும், கிளைமாக்ஸ் வரை, என்ன ஒரே வெட்டு குத்து, என சலித்துக்கொண்டேன். கிளைமாக்ஸ் உண்மையாகவே அதிர்ச்சியடைய வைத்தது. இந்தப் படத்திலும் அப்படி எதாவது இருக்குமென, ஐந்து வயது குழந்தைகூட யூகிக்க்கூடிய வகையில் அமைந்திருந்த கதையை, பார்த்துக் காத்திருந்தேன். கடைசி வரை ஒன்றும் வரவில்லை. பழிவாங்கும் ஆள் மட்டும் புதுசே தவிர, காரணங்கள் எல்லாம் ஒன்று தான். ஒரு சில வசனங்களைத் தவிர்த்துப் பார்த்தால், (எனக்கு) ஏமாற்றமே.

Easy A
தன இமேஜை காப்பாற்றிக்கொள்ள, ஹீரோயினி, தான் ஒருவனோடு டேட்டிங் போனதாக தன நண்பியிடம் சொல்ல, அதை ஒட்டுக் கேட்கும் இன்னொரு பெண், பள்ளி முழுவதும் அதைப் பற்றி பரப்ப, பிறகு தனது gay நண்பனின் இமேஜைக் காப்பாற்ற, ஒரு பார்டியில், மூடிய கதவிற்கு அந்தப்பக்கம், அவனோட செக்ஸ் வைத்துக்கொளவது போல் பாவனை செய்ய (பாய்ஸ்), இமேஜைக் காப்பாற்றிக் கொள்ள நினைக்கும் அத்தனை பையன்களும், இவளுடன் செக்ஸ் வைத்துக்கொண்டதாய், சிலர் இவளின் ஒப்புதலுடனும், சிலர் பொய்யும் சொல்ல ஆரம்பிக்க, இவளின் இமேஜ் என்னவாகிறது என்பதை, நிறைய நகைச்சுவை, கொஞ்சம் செண்டிமெண்ட் + கொஞ்சம் ரொமான்ஸ் கலந்து சொல்லியிருக்கிறார்கள். ஹீரோயினி எம்மா ஸ்டோனின் தெளிவான நடிப்பு, படத்தைக் காப்பாற்றுகிறது. நல்ல பொழுதுபோக்கு.

The Social Network
இந்தப் படம், பேஸ்புக்கை கண்டுபிடித்த மார்க் ஸுக்கர்பெர்கின் கதை என சொல்லப்படுகிறது. ஸுக்கர்பெர்கின் ஒன்றிரண்டு பேட்டிகளைப் பார்த்த பிறகு, இந்தப் படத்தைப் பார்க்கும் ஆவல் அதிகமானது. ஆரம்பம் முதல், முடிவு வரை, படம் எந்த விதத் தோய்வும் இன்றிச் செல்கிறது. பைட் கிளப் இயக்குனர் ஃபிஞ்சரின் மேல் வைத்திருந்த நம்பிக்கை வீணாகவில்லை. நடித்த அனைவருமே மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்கள். முக்கியமாய் ஹீரோ ஜெஸ்ஸி ஐஸன்பெர்க், கிட்டத்தட்ட அப்படியே ஸுக்கர்பெர்கின் உடல் மொழியை வெளிப்படுத்தியிருக்கிறார். ஜஸ்டின் டிம்பர்லேக் மற்றும் கார்பீல்டும் நன்றாகவே நடித்திருந்தார்கள். அருமையான திரைக்கதை, வசனங்கள். (ஸப்டைடில்ஸாய நமஹ:) நல்ல திரைப்படங்களைப் பார்க்க விரும்பும் அனைவரும் பார்க்க வேண்டிய படம்.

மன்மதன் சொம்பு
உலகநாயகன், கலைஞானியின் படைப்பை விமர்சனம் செய்யும் அளவு எனக்குத் தகுதியிருக்கிறதா எனத்தெரியவில்லை. அதனால், எதுவும் சொல்வதற்கில்லை..
என்ன சார், ஃபர்ஸ்ட் காபி பார்த்தே உஷார் ஆகிட்டீங்க போல??

Monday, December 20, 2010

பட்டாம்பூச்சித் தருணங்கள்..

தலைப்பைப் பார்த்தவுடனே, ஏதோ ரொமாண்டிக்கா சொல்ல போறேன்னு தப்பு கணக்கு போடாதீங்க. butterfly effect பத்தி உங்கள்ல நிறைய பேருக்கு தெரிஞ்சிருக்கும். தெரியாதவங்களுக்கு, சுருக்கமா சொல்லனும்னா, உங்களோட சின்ன சின்ன செயல்கள், வாழ்க்கைல பெரிய அளவு மாற்றங்கள ஏற்படுத்தலாம். இதான் butterfly effect. அதுக்கு உதாரணம் சொல்லனும்னா சொல்லிகிட்டே இருக்கலாம். இந்த மொத்த பதிவையும் படிங்க. உங்களுக்கே எளிமையா புரியும்.

நான் முதல்வரானால், நான் டாக்டரானால், நான் நானானால்னு பள்ளிகூடத்துல படிக்கும்போது நிறைய கட்டுரைகள் எழுதிருப்போம். அந்த விக்கெட் மட்டும் எடுத்திருந்தா கண்டிப்பா வின் பண்ணிருக்கலாம்னு நிறைய போட்டிகளைப் பார்த்து சொல்லிருப்போம். அப்படி ஒரு சில "லாம்" தான் நான் சொல்லப் போறதும். நம் வாழ்க்கையோட ஒரு சில நேரங்களை நினைச்சு பார்க்கும்போது, "ச்சே, இப்படி நடந்திருந்தா நம்ம வாழ்க்கையே மாறியிருக்குமே" அப்படின்னு நினைப்போம்  இல்லையா. அப்படிப்பட்ட தருணங்களைப் பத்திதான் நான் இப்போ சொல்ல போறேன்.

1. என்னை எல்.கே.ஜி லேர்ந்து யூ.கே.ஜி, வேற பள்ளிக்கு மாத்தினாங்க. ஆனா, அந்த புது பள்ளியில, மறுபடியும் எல்.கே.ஜி படிச்சாதான் சேர்த்துப்போம்னு சொல்லிட்டாங்க. அதனால, மறுபடியும் எல்.கே.ஜி படிச்சேன். ஒரு வேளை அன்னைக்கு நான் அப்படி மறுபடியும் எல்.கே.ஜி படிக்காம இருந்திருந்தா, இன்னைக்கு நிறைய மாறியிருக்கலாம். நினைச்சு பாருங்க. எவ்வளவு பேரை சந்திச்சிருக்க மாட்டேன் / சந்திச்சிருப்பேன். என் வாழ்க்கைல எவ்வளவு மாறியிருக்கும்னு.... நினைச்சே பார்க்க முடியலை.. அதனால நினைக்கலை...

2. தொடர்ந்து புது பள்ளியில படிச்சிட்டு வந்தேன். திடீர்னு என் அப்பா அம்மாவுக்கு, பையன் ஒரு வருஷம் பின் தங்கியிருக்கானே, ஏன் டபுள் ப்ரோமோஷன் ட்ரை பண்ணக்கூடாதுன்னு, நாலாவது முடிஞ்சவுடனே, ஆறாவது நுழைவுத்தேர்வு எழுத வெச்சாங்க. விதி செய்த சதி பாருங்க, நான் பாஸ் பண்ணிட்டாலும், எனக்கு கொடுக்கப்பட்ட பிரான்ச், ஆள் நடமாட்டமே இல்லாத இடத்துல இருந்திச்சு. பையனை அவ்வளவு தூரம் அனுப்பி கஷ்டப்படுத்த வேணாம்னு, தொடர்ந்து அஞ்சாவதே படிக்க வெச்சாங்க. ஒரு வேளை, நான் ஆறாவது தாவியிருந்தா?? இந்த நாட்டோட தலையெழுத்தே மாறியிருக்கும்.

3. அடுத்து, ஆறாவது படிச்சு முடிச்ச அப்பறம், வீட்ல கொஞ்சம் நிதி நெருக்கடி. அதனால, மெட்ரிக் பள்ளியிலிருந்து, நானே கேட்டு, என் அண்ணன் படிச்சிகிட்டு இருந்த, தி கிரேட் இந்து மேனிலைப் பள்ளிக்கு மாறினேன். ஒரு வேளை, எங்க அப்பா அம்மா நான் சொன்னத கேட்காம மெட்ரிக் பள்ளியிலே படிக்க வெச்சிருந்தா??

4. அடுத்து, பள்ளி முடிஞ்சு, காலேஜ் சேர முயற்சி பண்ணிக்கிட்டு இருந்தேன். லயோலா கல்லூரில, விஸ்.காம் நுழைவுத் தேர்வு எழுதினேன். அங்க முக்கால்வாசி சீட் ரெகமண்டேஷன். எங்க அப்பாவும் கஷ்டப்பட்டு ஒருத்தரை புடிச்சாரு. ஆனா அவரு காலை வாரிட்டாறு. அதனால, கிடைக்கலை. அண்ணா யூனிவர்சிடியில எழுதினேன். அங்கயும் கிடைக்கலை. வேற வழியில்லாம, குரு நானக் கல்லூரியில சேர்ந்தேன். ஒரு வேளை எனக்கு ரெகமண்டேஷன் ஒழுங்கா கிடைச்சு, லயோலாவுல சேர்ந்திருந்தா, இந்த நேரத்துல தமிழ் 3 இடியட்ஸ் படத்துக்கு ஒரு புது ஹீரோ கிடைச்சிருப்பாறு.

5. பி.எஸ்.ஸி முடிச்சு, எங்கேயாவது வேலைக்கு போகலாம்னு நினைச்சப்போ, அம்மா, எம்.எஸ்.ஸி அண்ணா யூனிவர்சிடீல முயற்சி பண்ணு, கிடைக்குதான்னு பார்க்கலாம்னு சொன்னாங்க. சத்தியமா கிடைக்காது, அவங்க ஆசைக்கு சும்மா முயற்சி பண்ணலாம்னு பார்த்தா, கிடைச்சிருச்சு. இதனால இப்போ பி பி சி வேலை. என்னான்னு சொல்ல. கிடைக்காம இருந்திருந்தா, என் வாழ்க்கைல பல நல்ல, கேட்ட விஷயங்கள் நடந்திருக்காது. எதாவது ஒரு மொக்கை டைரக்டருக்கு, அசிஸ்டண்டா இருந்திருப்பேன். இப்போ இங்க இந்த பதிவெல்லாம் எழுதிகிட்டு இருக்க மாட்டேன்.

மேல நான் சொன்ன எல்லா தருணங்களுமே, என்னோட கட்டுபாட்ல இருந்த தருணங்கள். நான் நினைச்சிருந்தா வேற மாதிரி முடிவு எடுத்திருக்கலாம். ஆனா அப்படி ஆகலை. நாம நினைக்கரது எங்க நடக்குது. ம்ம்ம்... கீழ இருக்கற பாட்டை கேளுங்க. அதுக்கும் இந்த பதிவுக்கும் என்ன சம்மந்தம்னு கேட்காதீங்க. இதுவும் கடந்து போகும். இதை ஒரு தொடர் பதிவா மாத்தலாம்னு பாக்கறேன். என்னோட followers எல்லாரையும் இந்த தொடர் பதிவுக்கு அழிக்கறேன். முக்கியமா லொள்ளு கார்த்தி, லான்ஸ் அருண், பிலாசபி, எஸ் கே இவங்கெல்லாம். கேபிள் சார், முடிஞ்சா நீங்களும் எழுதுங்க. மீதி எல்லாரும்தான். பதிவை போட்டுட்டு, கண்டிப்பா சொல்லுங்க. அதோட சேர்த்து, வேற யார் இந்த தலைப்புல எழுதனும்னு நினைச்சாலும், அவங்களும் எழுதுங்க..

    

Monday, December 13, 2010

PLAYLIST - November

ரொம்ப நாளைக்கு பொறவு, மறுபடியும் களத்துல நம்ம வழக்கமான ப்ளேலிஸ்டோட குதிக்கறேன்...

இந்த டாப் டென்ல எல்லாம் சொல்றா மாதிரி, எதாவது சொல்லி ஆரம்பிக்க்லாம்னு பாக்கறேன். ஒண்ணும் மாட்ட மாட்டேங்குது. :(.. சரி சரி... ரொம்ப வருத்தப்படாம, ப்ளேலிஸ்டை பார்ப்போம்....
-->இங்க<-- கொடுத்துருக்கற பாடல்கள்ல, வ படத்தோட உன்னைக் கண் தேடுதே, உத்தமபுத்திரனின் (காபியான) உஸ்ஸுமுலரஸே, மகிழ்ச்சியில் ஊத்துத் தண்ணி ஆகிய பாடல்கள் இப்பவும் இடம் பிடிக்குது.. புதுசா லிஸ்டுக்கு வர பாடல்கள்,

விண்ணைத்தாண்டி வருவாயா - இந்த படத்தோட collectors edition பாடல்கள் ரிலீஸ் பண்ணிருக்காங்க. இதுல, எக்ஸ்ட்ரா ரெண்டு பாட்டு இருக்கு. Jessie's Landனு ஒரு பாடல். ரொம்ப சுமாரா இருக்கு. ஆனா மற்றொரு பாடலான, ஆரோமலே sad, முதல்ல இருக்கற ஆரோமலேவ விட நல்லா இருக்கு. ஷ்ரேயா கோஷல் வழக்கம் போல நல்லா பாடிருக்காங்க. படத்துல்லையும் இது, அங்க அங்க பிண்ணனில வரும். Great Rendition. 
  
ஆடுகளம் - வழக்கம் போல, எல்லாருக்கும் பிடித்த யாத்தே யாத்தே என்னை அவ்வளவா இம்ப்ரெஸ் பண்ணலை, ஆனா அய்யயோ பாடல் மட்டுமே இந்த படத்துக்கு போதும். இந்த மாதிரி எஸ்.பி.பி பாடி கேட்டு ரொம்ப நாள் ஆச்சு. மனுசன் இந்த வயசுலையும் இன்னாமா பாடுறாரு. பாட்டு மொத்தமும் ஒரு மாதிரி சிரிச்சிகிட்டே பாடி,  பின்னி பெடலெடுக்கறாரு. ஜி.வி இப்படி ஒரு நல்ல பாட்டு கொடுப்பாருன்னு எதிர்பார்க்கலை. பாட்டோட beat இஞ்சி இடுப்பழகி பாடலை ஞாபகப்படுத்தினாலும், கண்டிப்பா இந்த வருஷத்துல ஒரு ஹிட் பாடல்.

மன்மதன் அம்பு - தேவிஸ்ரீபிராசத்தின் வழக்கமான இசை. போர். தகிடுதத்தோம் பாடல் கொஞ்சம் பரவாயில்லை.

இளைஞன் - படத்தோட ஹீரோவா இருந்து, பாடல்களும் எழுதிருக்கற பா.விஜய் (பேரை சேர்த்துபடிக்காதீங்க) சொன்னாரு, அவருக்கு பிடிச்சது இமைத்தூதனே அப்படின்னு ஒரு பாட்டாம். வித்யாசாகர், நிஜமாவே வித்தியாச சாகரா மாறி, மேற்கத்திய இசைல ஒரு தமிழ் மெலடி கொடுத்திருக்காரு. சின்மயி பாடிருக்காங்க. choir  எல்லாம் வெச்சு, ரொம்ப grand ah இருக்கு பாட்டு. அதே சமயத்துல இரைச்சலா இல்லாம, ரொம்ப இனிமையான பாட்டு. படத்துல மத்த பாடல்களும் இதே ஸ்டைல்ல, நல்லா இருந்தாலும், இது என்னோட pick.

எங்கேயும் காதல் - நாங்கை - வரிகள் ஒரு எழவும் புரியலைன்னாலும், நம்க்கு இயல்புலையே துள்ளலிசை பாடல்கள் மேல ஒரு ஈர்ப்பு இருக்கர்தால, அப்படியே ஒட்டிகிச்சு. அதுவும் மைக்கல் ஜாக்ஸனோட பாடலின் beat loopஐ அப்படியே உருவி, ஹாரிஸ், வேற டியூன் போட்டு கொடுத்திருக்காரு. ஆனாலும் நல்ல ஜாலியா இருக்கு. சரணம் முடியர இடத்துல வர குத்து ஸடைல், நல்ல ஐடியா..
நெஞ்சில் நெஞ்சில் -  ரொம்ப நாளக்கப்பறம் சூப்பர் சாருகேசி ராக சினிமா பாட்டு. ஒரு semi-classical பாட்டுன்னே சொல்லலாம். அதுவும், பல்லவி நடுவுல மிருதங்கம் சேருதே, செம்ம இடம். பாட்டு முழுக்கவே நல்ல கட்டமைப்பு.
படங்களோட பேரை க்ளிக்கினா பாட்டு கேட்கலாம்...

p.s. 1. சமீபத்துல கூட, மதராசபட்டினம் படத்துல, ஜி.வி ஒரு சாருகேசி ட்ரை பண்ணிருந்தாரு (ஆருயிரே), அதுவும் ரஹ்மானை காப்பியடிச்சு (ஏதோ ஏதோ ஒன்று). சல்பெடுக்கலை (ரெண்டும்)...

p.s.2. சாருகேசி ராகத்துல, உங்களுக்கும் தெரிஞ்ச, எனக்கும் பிடித்த சில பாடல்கள்

வாத்தியார் வீட்டு பிள்ளை - மணமாலையும் மஞ்சளும்
உதயா - உதயா உதயா
ஹரிதாஸ் - மன்மத லீலையை வென்றார்
ஸ்ரீ ராகவேந்திரா - ஆடல் கலையே
திருட்டு பயலே - தையத்தா
சிங்காரவேலன் - தூது செல்வதாரடி..
ரைட்டு, இப்போத்தைக்கு அப்பீட்டு.... டாடா...
விருதகிரி வாழ்க...