Wednesday, November 17, 2010

PLAYLIST - September, October

வழக்கம் போல, போன ப்ளேலிஸ்ட் மாதிரியே, இந்த லிஸ்ட்டும் லேட்டாகிடுச்சு. தப்பா நெனச்சிக்காமா, பதிவ படிச்சிட்டு, பாட்டை கேட்டுட்டு, கமெண்ட்டும் போட்ருங்க.

போன முறை, எந்திரன், புலி, மகிழ்ச்சி, பாஸ் மற்றும் வ படத்தோட பாடல்கள் இடம் பெற்ற ப்ளேலிஸ்ட்ல, இப்போ அதுலேர்ந்து சில பாடல்கள்தான் இந்த முறை.

ஊத்து தண்ணி + உச்சு கொட்ட - மகிழ்ச்சி. முதல் பாட்டை விட, ரெண்டாவது மெலடி பாடல் நல்லா இருக்கறா மாதிரி இருந்தாலும், ரெண்டுமே எனக்கு புடிச்சிருக்கு.

படத்துல, சார்ப்பு சார்ர்ப்பு ஜி பாடலை தப்பான இடத்துல வெச்சதோட மட்டுமில்லாம, picturisation சொதப்பிட்டாங்க. பாட்டு கேட்கற மூடே போயிருச்சு. அதானால, அந்த படத்துலேர்ந்து தப்பிச்ச ஒரே பாடல், உன்னை கண் தேடுதே. (சவுதி பாஷா பாடல்ல வர நடனம் கொஞ்சம் கிளுகிளுப்பா இருந்தாலும், நம்ம லிஸ்டுக்கு தேவையான மசாலா இல்ல)

பாஸ் படத்தின் "யாரிந்த பெண்" பாடல அடிக்கடி ரேடியோல கேட்கறேன். ஒரு சேனல் மாத்தி அடுத்த சேனலுக்கு போனாலும் அதே பாடல். நிஜமாவே அடிக்கு அடி. எனக்கு அவ்வளவா புடிக்கலை. தத்தித்தாவும் பாடல், போன லிஸ்ட்டுல இருந்தாலும், இந்த மாசம் வரைக்கும் தாக்கு புடிக்கல.                       

மந்திரப் புன்னகை
படப் பாடல்களை முழுசாவே கேட்க நேரம் வரலை. எதாவது ஒண்ணு வந்து distract பண்ணுது. இருந்தாலும், கிடைச்ச நேரத்துல கேட்ட "தண்ணி போட வாப்பா" சுமாரா இருந்துச்சு. ஒரு மாதிரி மெதுவான குத்து பாடல்னு சொல்லலாம். பாடகர் கார்த்திக்கோட குரல், ரொம்ப ஒழுங்கா இருக்கறதால, இந்த மாதிரி சில பாடல்களுக்கு, அவர் குரல் செட் ஆகலை. என்ன நான் சொல்றது.

உத்தம புத்திரன் படத்துல வர "உஸ்ஸுமுலரசே" கேட்க நல்லா ஜாலியா இருக்கு. வழக்கமான விஜய் ஆண்டனி ஸ்டைல்ல, அவரோட குரல்ல, திணிக்கப்பட்ட, விசித்திரமான உளறல் வார்த்தைகளோட, நல்ல குத்து பாட்டு. என்னடா இவர் திடீர்னு ஒரு நல்ல மாஸ் பாட்டு குடுத்துருக்காறேன்னு பாத்தா, பய புள்ள, hangover படத்துல வர ஒரு பாட்ட சுட்டு, புரட்டி போட்டு குடுத்திருக்கு. (கொஞ்சம் சிங்கம் படத்தோட "காதல் வந்தாலே பாடலோட rap மாதிரியும் இருக்கு) மூணு பாட்டோட சாம்பில்களும், கீழ.

உஸ்ஸுமுலரசே


You Spin My Headசிங்கம்


சிக்கு புக்கு பட பாடல்கள் எதுவும் கேட்க சகிக்கலை. ஒரு வேளை படம் வந்த அப்பறம், பாடல்கள் புடிக்கலாம்.

சமீபத்துல வந்த எங்கேயும் காதல், ஆடுகளம் +  விண்ணைத்தாண்டி வருவாயா கலெக்டர்ஸ் எடிஷன் பாடல்கள், நவம்பர் மாச ப்ளேலிஸ்ட்ல வரும்.

பொறுமையோடு இருக்கும் உள்ளங்களுக்கு என் நன்றி.
படத்தோட பேரை க்ளிக்கினா பாட்டு கேட்கலாம்

8 comments:

எஸ்.கே said...

நீங்க கொடுத்த பாட்டெல்லாம் நல்லா இருக்குங்க.

ஆனா இப்ப வர நிறைய பாடல்கள் கேட்க நல்லாயிருந்தாலும் எடுக்கிற விதம்/picturisationல சொதப்பிடுறாங்க.

கா.கி said...

@எஸ்.கே

picturisation ஒரு தனி கலை. அது நம்ம ஊர்ல நிறைய பேருக்கு வராது

vinu said...

"nagaram marupakkam" songs paththiyum oru vari elluthippodungaa

கா.கி said...

@vinu

Try panren boss :)

philosophy prabhakaran said...

இன்ட்லியின் மூலமாக உங்கள் பழைய பதிவு ஒன்றை படிக்கும் வாய்ப்பு கிட்டியது... செம எழுத்து நடை... கலக்கியிருக்கீங்க,....

கா.கி said...

@philosophy
வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி :)))

Karthik said...

HP review? @ above pic sema ;)

கா.கி said...

@karthik

waitees for HP review... which pic???