Friday, November 5, 2010

மற்றும் பல (05/11/2010)

ஒரு பேட்டிக்காக, இயக்குனர் மகேந்திரனை சந்திக்க நேரிட்டது. ரொம்பவே எளிமையான ஆளாக இருக்கிறார். பேட்டி முடிந்தும் ஒரு அரை மணி நேரம், என்னையெல்லாம் மதித்து, பேசிக்கொண்டிருந்தார். தமிழ் சினிமா டூயட்டுகளால்தான் அழிகிறது எனக் கவலைப்பட்டார். ஹோம் சினிமா என்ற புதிய முறையில் படம் எடுப்பதாகவும், அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது என்றும் சொன்னனர். கேபிளார் சொன்னது நினைவிற்கு வந்து, மௌனராகம் - நெஞ்சத்தை கிள்ளாதே படங்களைப் பற்றி கேட்டேன். மணிரத்னம், இவரிடம் ஒப்புதல் பெற்ற பிறகே, திரைக்கதையை எடுத்துக் கையாண்டதாகச் சொன்னார். வாசல் வரை வந்து வழியனுப்பிவிட்டு, நேரம் கிடைத்தால் அவ்வபோது வீட்டிற்கு வருமாறு சொன்னார்.
நல்ல மனிதர்...

------------------------------------------------------------------------------------------------------------------
 என் வேலை, முக்கால்வாசி பேட்டிகளைச் சார்ந்தே இருப்பாதால், நிறைய மனிதர்களை சந்திக்க நேரிடுகிறது. பெரும்பாலானோர் பேசுவதில் அவ்வளவாக தயக்கம் காட்டுவதில்லை. சிலர் மைக்கைப் பார்த்தாலே வெட்கப்படுகிறார்கள். சிலர் அதிகமாகவே பேசுகிறார்கள். பேசும்போதே நிறைய பேருக்கு, முழுத் தமிழா, ஆங்கில கலப்பு இருக்கலாமா, செந்தமிழா, சென்னைத்தமிழா எனப் பல குழப்பங்கள் இருக்கிறது.  இதில் முக்கியமாக, சில அரசாங்க அதிகாரிகள், பேசுவதற்கு நிறையவே தயங்குகிறார்கள் / பயப்படுகிறார்கள்.
கருத்து சுதந்திரம்.
------------------------------------------------------------------------------------------------------------------
Legend of the Guardians: The Owls of Ga'Hoole என்கிற படத்தைப் பார்க்க நேரிட்டது. டிரைலரைப் பார்த்து ஏமாந்து போனேன். ரொம்பவே சுமாரான குழந்தைகள் படம். குழந்தைகளும் ரசிப்பார்களா எனத் தெரியவில்லை. மழையில் நனைந்து, ஐஸ்க்ரீம் சாப்பிட்டு, குதித்து விளையாடும் குறும்புக்கார ஹீரோயினி நினைப்பில் இருக்கும் பெண்களுக்கு பிடிக்கலாம் (oh!!!!!!!!!!!!! so cute la?!?!?!?!?!?!?!?!). படத்தில் எனக்கு பிடித்த ஒரே விஷயம், வெகு சில இடங்களில் இருக்கும் நல்ல வசனங்கள். (Just because it is sung, it is not a song). சப்டைடில்ஸ் வேறு போட்டார்கள். கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. சம்பிராதய 3டியால், திரை மங்கலானதுதான் மிச்சம்.
படத்திற்கு Rs. 135  (ஆன்லைன் புக்கிங்) +
3d கண்ணாடி Rs.20 +
பார்க்கிங் (கொள்ளை) Rs. 40 -
ஆக மொத்தம் Rs. 195 காலி.
வீண் செலவு
------------------------------------------------------------------------------------------------------------------
____த்தனையாவது முறையாக, நான் எழுதலாம் என்று நினைத்ததை அண்ணன் கேபிளார் எழுதியிருக்கிறார். மழையால் சாலைகள் பாதிக்கப்படுவதைப் பற்றி எழுதலாம் என நினைத்தேன். முந்திக்கொண்டார், வழக்கம் போல. தினமும் கண்டிப்பாக செய்திகள் பார்க்க வேண்டியிருப்பதால், இந்த மழை - சாலை செய்தியை பல நாட்கள் தினசரிகளில் பார்த்தேன். மேயர், வீராப்பாக, இந்தப் பருவ மழைக்காலத்தை எதிர்கொள்ள அனைத்து சாலைகளும் நன்றாக தயார் செய்யப்படும் என பல பேட்டிகள் அளித்து வந்தார். எதுவும் செய்தார்ப் போல் தெரியவில்லை. வண்டி ஓட்டும்போது, எழுத வேண்டும் என நினைத்தாலே பேனா முனை உடைகிறது. அவ்வளவு மேடு பள்ளம்.
கூட்டத்தில் கூடி நின்று, கூவிப்பிதற்றலன்றி.

------------------------------------------------------------------------------------------------------------------
நோக்கியா தொழிற்சாலையில் இறந்து போன ஒரு பெண்ணைப் பற்றிய செய்தியை படிக்கும்போது அவ்வளவு கோபம் வந்தது. இயந்திரத்தில் சிக்கிய பெண்மணி, கிட்டத்தட்ட அரைமணிநேரம் அதிலேயே தவித்திருக்கிறார், உற்பத்தி பாதிக்கப்படும் என்பதால், சுற்று முடிந்த பிறகே இயந்திரம் நிறுத்தப்பட்டது. இங்கே என்ன நடக்கிறது என்று புரியவில்லை. வழக்கம் போல இந்த சம்பவம் மூடி மறைக்கப்படும்.
கலி
------------------------------------------------------------------------------------------------------------------
இரண்டு பதிவுகளுக்கிடையில் இருக்கும் இடைவேளை அதிகமாகிக்கொண்டே போகிறது. அடிக்கடி பதிவ முடியாமல் போவதில் வருத்தம்தான். இருந்தாலும், என்ன செய்ய. என் வேலை அப்படி. என் 47 தொடர் ரசிகர்களிடமும் + ஆயிரக்கணக்கான தொடராத ரசிகர்களிடமும் மன்னிப்பினைக் கோருகிறேன். என் எழுத்துக்களைத் தொடர்ந்து வாசிப்பதற்கு மிக்க நன்றி.
------------------------------------------------------------------------------------------------------------------
ஹாலிவுட் பாலாவைக் காணவில்லை.
காந்திய சுட்டுட்டாங்க.

4 comments:

எஸ்.கே said...

மகேந்திரன் அவர்களின் படங்கள் மிக நன்றாக இருக்கும்.
இப்போதெல்லாம் டிரெய்லரை பார்த்து நிறைய தடவை ஏமாற வேண்டி இருக்கிறது.
மேடு பள்ளம் இல்லாவிட்டால் அது சாலையில்லை என நினைத்து விட்டார்களோ. மழை வந்தால் கடும் பிரச்சினைதான்.
ஒருவர் இறந்ததை விட தொழில் முக்கியம் என்றால் அப்படிப்பட்ட தொழில்....
நீங்கள் எப்போது பதிவு போட்டாலும் ரசிக்கும் வாசகர்களில் நானும் ஒருவன். நேரம் கிடைக்கும்போது எழுதுங்கள். வேலை மேலும் இனிதாக செல்ல வாழ்த்துக்கள்.
அப்புறம் காந்தி மீண்டும் வருவார் என நினைக்கிறேன்!!!!!!!!!!!!

கா.கி said...

@எஸ்.கே
//காந்தி மீண்டும் வருவார்//
வந்தால் நன்றாகத்தான் இருக்கும்


//ரசிக்கும் வாசகர்களில் நானும் ஒருவன்//
மிக்க நன்றி... பாராட்டுவதற்க்கும் நல்ல மனது வேண்டும் :)
கண்டிப்பாக நேரம் கிடைக்கும்போது எழுதுகிறேன்....

செங்கோவி said...

அவர் வருவாரா? அவர் வருவாரா?
உடைந்துபோன நம் நெஞ்சை ஓட்ட வைக்க தல வருவாரா?

அன்புடன்
செங்கோவி

கா.கி said...

@செங்கோவி

அவர் ப்ளோக் டெலிட் பண்ணிட்டாரு :(