Friday, February 19, 2010

மற்றும் பல... (cinema special)

ஆயிரத்தில் ஒருவன் படத்தை நான் முதல் நாளே பாத்தாலும், அதற்கான விமர்சனம் எழுதனுன்னு எனக்கு தோணவே இல்லை. வழக்கம் போல நம்ம பதிவுலகத்துல, படத்தை பல பேர் கிழிச்சி தொங்க போட்டாலும், சில பேர் வாயார வாழ்த்தினாங்க. எல்லாருமே பொதுவா சொன்ன ஒரு விஷயம், இப்படி வித்தியாசமா சிந்திச்சு ஒரு படத்தை எடுத்த செல்வராகவனை பாராட்டியே ஆகணும்னு. எனக்குப் படம் ரொம்ப பிடிச்சிருந்துது. படம் ஆரம்பிச்ச அஞ்சாவது நிமிஷமே நம்மை படத்துக்குள்ள, டைரக்டர் எடுத்துட்டுப் போய்ட்டார். மொக்க சவுண்ட் இருக்குற சங்கம் தியேட்டர்லையே இப்படினா, சத்யம் தியேட்டர்ல இன்னும் நல்லா இருந்திருக்கும். முதல் பாதி வேகம், ரெண்டாவது பாதி சொதப்பல்னு நான் எந்த குறையும் சொல்லப் போறதில்லை. சில குறைகள் இருந்தாலும், எனக்குப் படம் மொத்தமுமே பிடிச்சிருந்துது.
------------------------------------------------------------------------------------------------------------------
அடுத்து, மறுபடியும், நான் ரொம்பவே ரசிச்ச, கோவா பத்தி பேச வேண்டியிருக்கு. படம் பார்த்து முடிச்ச உடனே சொன்னேன், வயசான ஆளுங்களுக்கு இந்த படம் பிடிக்காதுன்னு.  அதேமாதிரி, பல பதிவர்களுக்கு இந்த படம் பிடிக்கல. என்ன குறைய கண்டாங்கன்னு தெரியலை. படத்தை கண்டபடி கண்டம் பண்ணாங்க. வெங்கட் பிரபு, சவுந்தர்யா காசுல கூத்தடிச்சிருக்காரு, ரெண்டாவது பாதி சரியில்லை, blah blah blah. படம் பார்க்கும்போது எந்த குறையும் தெரியலை. எனக்கு மட்டும்தான் இப்படியான்னு பார்த்தா, என் நண்பர்கள் எல்லாருக்குமே படம் ரொம்ப பிடிச்சிருந்துது. முக்கியமா சில பொண்ணுங்களுக்கு, சம்பத் கேரக்டர் ரொம்ப பிடிச்சிருந்துது. ஒரு வேளை எங்களுக்கு படம் பார்க்க தெரியலியோ???
------------------------------------------------------------------------------------------------------------------
தமிழ் படம்னு ஒரு படம் வந்துருக்கு இல்லையா. எல்லாருமே சிலாகிச்சு, தலைல தூக்கி வெச்சு கொண்டாடினாங்க. நானும் ரொம்பவே எதிர்பார்த்தேன். நேத்து அந்த படத்தை பார்த்தேன். Surprisingly, என்னை அவ்வளவா இம்ப்ரெஸ் பண்ணலை. முதல் பாதி நல்லா இருந்துச்சு. இரண்டாவது பாதி ரொம்ப இழுவை. அதுவும் கிளைமாக்ஸ்ல, ஒவ்வொரு தடையா தாண்டி போறது, ரொம்ப மொக்கை. கண்டிப்பா படம் மோசம் இல்லை. நிஜமாவே பாராட்டப் படவேண்டிய முயற்சி தான். எல்லாருக்கும் செம்ம தில்லுதான். ஆனா, என்னால புரண்டு புரண்டு சிரிக்க முடியலை. சில காட்சிகள் எல்லாம், கண்டிப்பா இந்த படத்தை கலாய்ச்சே ஆகணும்னு திணிச்சா மாதிரி இருக்கு. இதோட பார்ட்-2 வந்தா எப்படி இருக்குன்னு பார்க்கணும். (வரவிடுவாங்களா, நான் எடுக்கறேன்...:)
------------------------------------------------------------------------------------------------------------------
இன்னிக்கு காலேஜ் டூர் விஷயமா டெல்லி போறேன். வர ஒரு பத்து நாள் ஆகும். ஏதாவது சுவாரசியமா நடந்தா, வந்து பதிவரேன். அதுவரை உங்களிடமிருந்து விடை பெறுகிறேன்... டாட்டா..... :)

  
ஒரு வேளை நகசுத்தியோ????

Wednesday, February 10, 2010

PLAYLIST - JANUARY

ஒரு மிகப்பெரிய ஆச்சர்யம். புது வருடத்துல வந்த பாடல்கள் எதுவும் என்னை அவ்வளவா கவரலை. முக்கியமா விண்ணைத்தாண்டி வருவாயா பாடல்கள் எதுவுமே என்னை ஈர்க்கலை. ஹோசன்னா பாடல் மட்டும் கொஞ்சம் பரவாயில்லை போல இருந்துது. ஆனா பல்லவி முடிஞ்சு மறுபடியும் அதே டியூன் வந்து, ரைம்ஸ் மாதிரி ஆகிடுச்சு. ஆனா, வழக்கம் போல, ரகுமான் ரசிகர்கள் பாடல்களை சிலாகிச்சு, ஆஹா ஓஹோன்னு தள்ளியிருக்காங்க. ஒரு வேளை, காட்சியமைப்போட பார்த்தா எனக்கு புடிக்கும்ம்னு நினைக்கறேன். மத்தபடி, ரகுமானுக்கு மற்றுமொரு வெற்றி படம்.

டிசம்பர் மாசம் playlist எதுவும் போடலை, ஏன்னா எண்ணிப்பார்த்தேன் பதிவுல, playlist பாடல்களையும் சேர்த்து சொல்லிட்டேன். இப்போ, ஜனவரி மாத playlist பார்த்தீங்கன்னா, போன மாசம் சொன்னா மாதிரி, கோவா, தமிழ் படம் & அசல், மூணு படப்பாடல்களும் எனக்கு பிடிச்சிருந்துது.  அதனால,

அசல்
1. குதிரைக்கு தெரியும் - Typical பரத்வாஜ் பாட்டு. படத்துல மொத்தம் ரெண்டு நிமிஷம்தான் வருதுன்னு கேள்விப்பட்டேன். இந்த பாட்டோட வரிகளுக்கே X இல்ல A rating குடுத்துருக்கணும். But நல்ல ரிதம்.

2. டொட்டொடொய்ங் - செம்ம காமெடி லிரிக்ஸ். எப்பவும் விஜய் பாட்டுலதான் இத மாதிரி அர்த்தமே இல்லாம, அதே சமயம், சட்டுன்னு யார் வேணும்னாலும் பாடறா மாதிரி பாடல்களும், வரிகளும் இருக்கும். இப்போ அஜித் பாடலும். முகேஷ் பாடிருக்காரு. ஒண்ணு கவனிச்சீங்களா. அவர் பாடற எல்லா பாடல்களிலுமே இந்த மாதிரி ஏதாவது ஒரு சேட்டை இருக்கு. 
 
3. ஹே துஷ்யந்தா - pick of the album. ரீமிக்ஸ்னும் சொல்ல முடியாது, மெட்லினும் சொல்ல முடியாது. பார்த்த ஞாபகம் இல்லையோ பாடலை அழகா பிட் அடிச்சு, jab we met படத்துல வர ஒரு பாட்டோட beat loop மட்டும் சுட்டு, சூப்பரா assemble பண்ணிருக்காங்க. picturisation சொதப்பாம இருந்தா சரி.

கோவா
4, 5, 6. ஏழேழு தலைமுறைக்கும் - சந்தைக்கு வந்த கிளி பாட்டு ஞாபகத்துக்கு வந்தாலும், very pleasant. கொடுத்து வெச்ச ஆளுங்க. யாருக்கு இத மாதிரி ஒரு வாய்ப்பு கிடைக்கும். அதுவும், போன தலைமுறை உயிரோட இருக்கும்போதே, அவங்களைப் பற்றி புகழ்ந்து பாடறதுக்கு.

இது வரை - படத்துல இந்த பாடல் placement அழகா இருந்துது. ஆனா எதுக்கு அந்த முத்தக் காட்சின்னு தெரியலை. கமல்ஹாசனுக்கு அடுத்து, இங்க யாருக்கும் ஒழுங்கா முத்தம் குடுக்கவும் தெரியலை. என்ன இருந்தாலும், சூப்பர் மெலடி.

வாலிபா வா வா - செம்ம ஜாலி பாடல். நினைச்சு பாக்க முடியாத situation. நல்ல picturisation. ரொம்ப நாள் கழிச்சு, spb இளையராஜாவோட சேர்ந்து பாடிருக்காரு. (தனித் தனியா ரெகார்ட் பண்ணிருப்பாங்களோ). ரெண்டாவது interlude அட்டகாசம்.

தமிழ் படம்
7, 8. பச்சை......... - நல்ல கருத்துள்ள பாடல். முதல்ல, விஜய் ரசிகர்கள், சுறா பட பாடல்னு நினைச்சு, ரொம்ப ரசிச்சாங்கன்னு கேள்விப் பட்டேன். படத்துல பார்த்த அப்பறம், செம்ம காண்டுல இருக்காங்கன்னும் கேள்விப்பட்டேன். மறுபடியும் முகேஷ்.

குத்து விளக்கு - ஒரு அமைதியான குத்து பாடல். oxymoron மாதிரி இருக்கோ?? ஆனாலும் பாட்டு அப்டிதான். கஸ்தூரி இந்த பாடலுக்கு ஆடுறத நினைச்சு கூட பாக்க முடியலை. (பட டிக்கெட் இன்னும் கிடைக்கலை)

9. ஒடைக்கணும் ஒடைக்கணும் - புகைப்படம்.
 இந்த பாடல் எனக்குப் பிடிக்க ஒரே காரணம், இது ஷண்முகப்ரியா ராகத்துல இருக்கு. இந்த ராகங்கள் கண்டுபுடிக்கறது, ரொம்ப சுவாரசியமா இருக்கும். அதுவும் எனக்கு தெரிஞ்ச ஒண்ணு ரெண்டு ராகங்களை நான் ஈசியா கண்டுபிடிக்கும்போது, எனக்கு அந்த பாடல்களை, அதுக்காகவே பிடிக்கும். ரொம்ப நாள் கழிச்சு, கங்கை அமரன் இசையமைச்ச பாடல். ஆரம்பத்துல வர ஓட்டை தமிழ் டயலாக் தவிர, பெரிய குறை ஒண்ணும் இல்லை. ஏற்கனவே கேட்டா மாதிரி இருந்தா, நீங்க நாட்டு சரக்கு பாடலை இன்னும் மறக்கலைன்னு அர்த்தம். (அதுவும் ஷண்முகப்ரியா!!)

10. என் காதல் சொல்ல - பையா
வழக்கம் போல, யுவன் ஷங்கர் ராஜா மட்டுமே பாடக்கொடிய, ஸாரி, பாடக்கூடிய பாடல். குழப்பமில்லாத, simple டியூன். இந்த படத்துல வர, எல்லாருக்கும் பிடிச்ச, துளி துளி பாடலை விட, இந்த பாடல் எனக்கு புடிச்சிருக்கு. (முதல்ல வி.வ, இப்போ இது. எனக்கு ஏதாவது பிரச்சனையா???)

p.s. இவ்வளவு நாள் கழிச்சும், அவதார் பட டிக்கெட் கிடைக்கலை :(

p.s.2 - ரிசர்ச் வேலைல கொஞ்சம் பிஸி. ரெகுலரா பதிவலைன்னா தப்பா நினைக்காதீங்க.

என் பையனும் உன் மியூசிக் கேட்டு கெட்டுப்போய்ட்டான் ...