Showing posts with label Peter films. Show all posts
Showing posts with label Peter films. Show all posts

Wednesday, July 18, 2012

மீள் பதிவும், நோலனும்

கடைசியாக நான் பதிவெழுதி 3 மாதம் 15 நாட்கள் ஆகிறது. உருப்படியாக எதுவும் எழுதவில்லையென்றாலும், எழுதும் பழக்கம் விட்டுப்போகக் கூடாது என்பதே நான் பதிவெழுத ஆரம்பித்தக் காரணம். "Writer's Block" இதை தமிழ்பெயர்ப்பது எப்படி எனத் தெரியவில்லை. ஆனால், இந்த மூன்றரை மாத இடைவேளைக்கு காரணம் அதுவே. இந்தப் பதிவிலும் உருப்படியாக எழுத ஒன்றுமில்லை. ஆனால், எழுதத் தூண்டியது, கிறிஸ்டோஃபர் நோலன் என்ற அதி அற்புதமான இயக்குனர். 

டார்க் நைட் ரைஸஸ் படத்தின் விளம்பரங்களைப் பார்க்கும் போது, நோலனின் கடைசி படமான இன்செப்ஷனைப் பற்றி நான் எழுதிய பதிவுகளும், அதற்கு கிடைத்த வரவேற்பும் நினைவிற்கு வந்தது. அவ்வளவு உற்சாகத்துடன் பதிவு எழுதிய கார்த்திக் எங்கே என்று தேடிக் கொண்டிருந்தேன், கிடைத்ததால் இப்போது எழுதிக்கொண்டிருக்கிறேன்.

830px-Thefirerises.jpg (595×363)

பல வலைதளங்களில், பதிவுகளில், கிறிஸ்டோஃபர் நோலன் என்கிற 
இயக்குனரைப் பற்றி நீங்கள் படித்திருக்கலாம். கூகுளில் கிறிஸ்டோஃபர் நோலன் என்று தமிழில் தேடினாலே, எக்கச்சக்க தள இணைப்புகள் உங்களுக்கு கிடக்கும். அவரது மெமண்டோவைப் முழுதாகப் பார்க்கும் தைரியம், இன்னும் எனக்கு வரவில்லை. கவனிக்கவும், பொறுமை என்று சொல்லவில்லை, தைரியம்தான் வரவில்லை. “என்னடா நமக்கு புரியாம ஒரு படமா, ஒரு வேளை இந்த படம் நமக்கு புரியாமலே போய்டுமோ” என்ற பயமே. எப்படியும் இன்னும் ஒரு வருடத்தில் பார்த்துவிடும் நம்பிக்கை வரும் என நினைக்கிறேன். இவரது படங்களில், வசனங்களுக்கும், காட்சியமைப்புகளுக்கும், ஆக்‌ஷன் காட்சிகளுக்கும் சரியான விகிதத்தில் முக்கியத்துவம் இருக்கும் என்பதால், வரப்போகும் புதிய பேட்மன் படத்தை சத்தியமாக சப்டைட்டில்ஸ் இல்லாமல் பார்த்தால் புரியாது. தமிழில் பார்க்கலாமென்றால், வெளியாகும் திரையரங்குகளின் தரம், சத்யம் திரையரங்க கழிவறைகளின் தரத்திற்கு கூட ஈடாகாது. எது எப்படியோ, புரியாவிட்டாலும், இரண்டு வாரங்களில் அந்தப் படத்தை சத்தியத்தில் பார்ப்பது என தீர்மானித்தாகிவிட்டது. 

என்னை மீண்டும் பதிவெழுதத் தூண்டிய கிறிஸ்டோஃபர் நோலனிற்கு நன்றி. 
டார்க் நைட் ரைஸஸ் வெளியாகப்போகும் இந்த வேளையில், இன்செப்ஷனைப் பற்றிய என் பழைய பதிவுகளுக்கு ஒரு சின்ன விளம்பரம் :)



Monday, May 2, 2011

SOURCE CODE - ப.வி

கொஞ்சம் குழப்பமான, யோசிக்க வைக்கற படங்கள்னா எனக்கு ஆர்வம் ஜாஸ்தியாகிடும். இந்த படத்தோட ட்ரைலர் பார்க்கும்போதே, படத்தை பார்க்கணும்னு  முடிவு பண்ணிட்டேன். எதிர்பார்த்த அளவு சூப்பரா இல்லைனாலும், கொடுத்த காசுக்கு மோசமில்லாம இருந்துச்சு.

ஹீரோ ஸ்டீவன்ஸ் ஒரு ட்ரைன்ல கண்ணு முழிக்கறாரு, அவருக்கு முன்னாடி ஒரு மிடில் ஏஜ் பிகர் உட்கார்ந்துகிட்டு “தாங்கஸ் ஷான், உன் அட்வைஸ நான் எடுத்துகிட்டேன்”னு சொல்றா, ஆனா ஹீரோவுக்கு, அந்த பொண்ணு யாரு, தான் எப்படி இங்க வந்தோம்னு ஒண்ணும் ஞாபகம் இல்லை. குழப்பத்துல, அந்த ட்ரைன் சூழல்ல நடக்கற சில விஷயங்கள நோட்டம் விட்டுட்டே பாத்ரூம் போறாரு. கண்ணாடில வேற உருவம் தெரியுது. மறுபடியும் மண்டை காஞ்சு போய் வெளிய வராரு, அந்த பிகர் நிக்குது, பக்கத்து ட்ராக்ல இன்னொரு ட்ரைன் போகுது, பாம் வெடிச்சு, ரெண்டு ட்ரைனும் காலி. இப்போ மறுபடியும் ஹீரோ ஸ்டீவன்ஸ் அதே ட்ரைன்ல கண்ணு முழிக்கறாரு, எல்லா விஷயமும் மறுபடி நடக்குது. இதெல்லாம் என்னா மேட்டர்னு குழப்பத்தோட ஹீரோ கண்டுபிடிக்கறதை, சைன்ஸ் ஃபிக்‌ஷன் கலந்து பதில் சொல்லிருக்காங்க.

படம், கிராபிக்ஸ், எடிட்டிங், காமெரானு டெக்னிக்கலாவும் சூப்பர், நடிச்சவங்களும் நல்லா நடிச்சிருக்காங்க. நம்ம ரஸல் பீட்டர்ஸும் ஒரு சின்ன ரோல் பண்ணிருக்காரு. ஹீரோயின் கொஞ்சம் முத்தின கேஸ்தான், இருந்தாலும் இந்த படத்துக்கு பரவாயில்லை. ஹீரோ ஜேக், ஒவ்வொரு கட்டத்துல ஒவ்வொரு விஷயம் தெரியவந்து தெளிவாகறதை, நல்லா வேறுபடுத்தி நடிச்சிருக்காரு. இந்த மாதிரி ஜானர் படங்கள் விரும்பறவங்க, கண்டிப்பா பார்க்கலாம். இன்ஸெப்ஷன் அளவு இல்லைனாலும், நல்லாதான் இருக்கு. படம் புரியாதவங்க பின்னூட்டத்துல கேளுங்க, விளக்கறேன் :)

Wednesday, December 29, 2010

நாலு படம் - நாலு பத்தி

இந்த மாதம் பார்த்த நான்கு படங்களைப் பற்றிய என் எண்ணங்கள்...

ஈசன்
எதிர்பார்ப்பு இல்லாமல் பார்த்திருந்தால் நன்றாக இருந்திருக்குமோ என்று பார்த்த பிறகு நினைத்தேன். சுப்ரமணியபுரம் பார்க்கும்போதும், கிளைமாக்ஸ் வரை, என்ன ஒரே வெட்டு குத்து, என சலித்துக்கொண்டேன். கிளைமாக்ஸ் உண்மையாகவே அதிர்ச்சியடைய வைத்தது. இந்தப் படத்திலும் அப்படி எதாவது இருக்குமென, ஐந்து வயது குழந்தைகூட யூகிக்க்கூடிய வகையில் அமைந்திருந்த கதையை, பார்த்துக் காத்திருந்தேன். கடைசி வரை ஒன்றும் வரவில்லை. பழிவாங்கும் ஆள் மட்டும் புதுசே தவிர, காரணங்கள் எல்லாம் ஒன்று தான். ஒரு சில வசனங்களைத் தவிர்த்துப் பார்த்தால், (எனக்கு) ஏமாற்றமே.

Easy A
தன இமேஜை காப்பாற்றிக்கொள்ள, ஹீரோயினி, தான் ஒருவனோடு டேட்டிங் போனதாக தன நண்பியிடம் சொல்ல, அதை ஒட்டுக் கேட்கும் இன்னொரு பெண், பள்ளி முழுவதும் அதைப் பற்றி பரப்ப, பிறகு தனது gay நண்பனின் இமேஜைக் காப்பாற்ற, ஒரு பார்டியில், மூடிய கதவிற்கு அந்தப்பக்கம், அவனோட செக்ஸ் வைத்துக்கொளவது போல் பாவனை செய்ய (பாய்ஸ்), இமேஜைக் காப்பாற்றிக் கொள்ள நினைக்கும் அத்தனை பையன்களும், இவளுடன் செக்ஸ் வைத்துக்கொண்டதாய், சிலர் இவளின் ஒப்புதலுடனும், சிலர் பொய்யும் சொல்ல ஆரம்பிக்க, இவளின் இமேஜ் என்னவாகிறது என்பதை, நிறைய நகைச்சுவை, கொஞ்சம் செண்டிமெண்ட் + கொஞ்சம் ரொமான்ஸ் கலந்து சொல்லியிருக்கிறார்கள். ஹீரோயினி எம்மா ஸ்டோனின் தெளிவான நடிப்பு, படத்தைக் காப்பாற்றுகிறது. நல்ல பொழுதுபோக்கு.

The Social Network
இந்தப் படம், பேஸ்புக்கை கண்டுபிடித்த மார்க் ஸுக்கர்பெர்கின் கதை என சொல்லப்படுகிறது. ஸுக்கர்பெர்கின் ஒன்றிரண்டு பேட்டிகளைப் பார்த்த பிறகு, இந்தப் படத்தைப் பார்க்கும் ஆவல் அதிகமானது. ஆரம்பம் முதல், முடிவு வரை, படம் எந்த விதத் தோய்வும் இன்றிச் செல்கிறது. பைட் கிளப் இயக்குனர் ஃபிஞ்சரின் மேல் வைத்திருந்த நம்பிக்கை வீணாகவில்லை. நடித்த அனைவருமே மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்கள். முக்கியமாய் ஹீரோ ஜெஸ்ஸி ஐஸன்பெர்க், கிட்டத்தட்ட அப்படியே ஸுக்கர்பெர்கின் உடல் மொழியை வெளிப்படுத்தியிருக்கிறார். ஜஸ்டின் டிம்பர்லேக் மற்றும் கார்பீல்டும் நன்றாகவே நடித்திருந்தார்கள். அருமையான திரைக்கதை, வசனங்கள். (ஸப்டைடில்ஸாய நமஹ:) நல்ல திரைப்படங்களைப் பார்க்க விரும்பும் அனைவரும் பார்க்க வேண்டிய படம்.

மன்மதன் சொம்பு
உலகநாயகன், கலைஞானியின் படைப்பை விமர்சனம் செய்யும் அளவு எனக்குத் தகுதியிருக்கிறதா எனத்தெரியவில்லை. அதனால், எதுவும் சொல்வதற்கில்லை..
என்ன சார், ஃபர்ஸ்ட் காபி பார்த்தே உஷார் ஆகிட்டீங்க போல??

Saturday, September 4, 2010

Inception - கடைசியா ஒரு தடவை கதை சொல்லட்டா????

போன மாசம் மொத்தமுமே இன்செப்ஷன் படத்தை வெச்சி பதிவு ஒப்பேத்தியாச்சு. இதுக்கு மேல மாவ அரைக்க முடியாது. அதனால, போன பதிவுல சொன்னா மாதிரி, நண்பர் பத்மநாபன் கேட்டதற்காக, கதையை, முடிஞ்ச வரைக்கும் எளிமையா சொல்ல முயற்சி பண்றேன். இது என்னோட புரிதலுக்கு ஏற்ப, என்னோட பார்வைல கதை. அதனால, "சொல்லப் படுகிறது, இருக்கலாம்" மாதிரியான வார்த்தைகள் இருக்காது.. நான் நம்பறத, உங்களுக்கு சொல்றேன்..

கதை

மு.கு - extraction - ஒருத்தரோட சப் கன்ஷியஸ்லேர்ந்து ஒரு நினைவை, ரகசியத்தை திருடுவது.
inception - ஒருத்தரோட சப் கான்ஷியஸ்ல ஒரு நினைவை விதைப்பது...

படம் ஆரம்பிப்பது லிம்போல. கடற்கரைல ஒரு ஆள் 
ஒதுங்கராறு. அது நம்ம ஹீரோ காப் (டிகாப்ரியோ), அங்க தன்னோட குழந்தைகள் மணல்ல விளையாடறத பாக்கறாரு. (இந்த காட்சிய, படம் முழுக்க,  அவர் பல முறை பாக்கறாரு) நாலு பேர் தூக்கி கொண்டு போய், தொண்டு கிழமான ஒரு சைனாகாரர் (சைடோ) முன்னாடி அவரை ஒக்கார வெக்கறாங்க. காப் கிட்டேர்ந்து ஒரு சின்ன பம்பரம் மாதிரி உள்ள பொருளை பாத்து, இதே மாதிரி ஒண்ணு, எனக்கு தெரிஞ்ச ஒருத்தர் கிட்டயும் இருந்துதுனு அந்த கிழவர் சொல்றாரு. 

CUT TO

அடுத்த காட்சி, காப், இளமையான சைடோ, ஆர்தர் மூணு பேரும் ஒரு எடத்துல பேசிகிட்டு இருக்காங்க. காப், சைட்டோகிட்ட, அவரோட சப் கான்ஷியாஸின்  பாதுகாப்பு அவசியம்னும், அதுக்கு தன்னால உதவ முடியும்னு சொல்றாரு. யோசனை பண்ணி சொல்றேன்னு சைட்டோ அந்த எடத்த விட்டு கிளம்பறாரு..

அது சைட்டோவோட கனவுன்னும், அங்க காப், ஏதோ ரகசியத்த திருட முயற்சி பண்றாருன்னும் 
அப்பறம் நமக்கு தெரிய வருது . அங்கேயே, மால் அப்படிங்கற ஒரு பெண்ணையும் சந்திக்கறார். அவங்க காட்டி கொடுக்கறதுனால, கனவுக்குள்ள கனவுன்னு, ரெண்டு லேயர்ல திட்டம் போட்டும், காபோட முயற்சி வீணாகுது. (இங்க இன்னொரு முக்கியமான விஷயம், மால், ஆர்தரோட கால்ல ஷூட் பண்றதுக்கு முன்னாடி, கனவுல ஒருத்தர கொலை பண்றதுனால நிஜத்துல அவங்க கண்ணு முழிச்சிருவாங்க. ஆனா, காயப்படுத்தினா, அந்த வலி ரொம்ப பயங்கரமானதா இருக்கும்னு சொல்லிட்டு சுடறாங்க)

அந்த முயற்சி தோல்வி அடையறதுனால, காபுக்கு வேலை கொடுத்தவங்க அவரை கொலை செய்யலாம்னு பயந்து, காப், தலைமறைவாக யோசிக்கறாரு. (காப், ஏதோ ஒரு குற்றத்துக்காக, தன்னோட ரெண்டு குழந்தைகள பிரிஞ்சு, அமெரிக்காவுலேர்ந்து தலை மறைவா இருக்கார்னு 
அப்போ நமக்கு தெரிய வருது). 

காப் தலைமறைவாகறதுக்கு முன்னாட், சைட்டோ அவரை சந்திச்சு, இன்செப்ஷன் பண்ணனும்னு சொல்றாரு. அப்படி வெற்றிகரமா பண்ணிட்டா, தன்னோட செல்வாக்கை பயன்படுத்தி, காப, அமெரிக்கவுல இருக்கற அவரோட குழந்தைகளோட சேர்த்து வேக்கறேன்னு வாக்கு கொடுக்கறாரு. ஆர்தர், இன்செப்ஷன் பண்றது ரொம்ப கஷ்டம்னு சொன்னாலும், காப், தன்னால பண்ண முடியும்னு ஒத்துக்கராறு.

காப், இன்செப்ஷன் செய்ய ஒரு அணியை திரட்டராறு. இதுல, அரியாட்னே - கனவுகளை வடிவமைக்கரவங்க (architect), இயாம்ஸ் - சித்தரிப்பாளன்னு  சொல்லலாமா?? பாவனை பண்றவர்னு சொல்லலாமா???(forger),  ஆர்தர் - ஆராய்ச்சியாளர் (point man) நம்ம காப் - களவாடப்போறவர்.. (extractor) (களவானின்னு சொல்லலாமா??), அப்பறம் யூசுப் - இவர்தான் மயக்க மருந்துக்கு பொறுப்பு (chemist) கூடவே சைட்டோ, இவங்க செய்யறத கண்காணிக்க வரார்.


திட்டம் போடும்போது, அப்படியே புது ஆளான அரியாட்னேவுக்கும் பயிற்சி கொடுக்கறாங்க. அப்படி ஒரு பயிற்சியப்போ, அரியாட்னே மால் பத்தின விஷயத்தை தெரிஞ்சிக்கறாங்க.  மால், காபோட இறந்து போன மனைவி. ஏதோ ஒரு பிரச்சனைனால, காபோட எல்லா கனவுகள்ளையும் மால் வந்து சதி பண்ணிடறாங்க. இதனாலேயே, காப் கனவுகள வடிவமைக்கரத நிறுத்திக்கராறு. ஏன்னா, அவருக்கு தெரிஞ்சா, அவரோட நினைவுகள்ல இருக்கற மாலுக்கும் எல்லாம் தெரிஞ்சிடும். அவங்க அங்க வந்து திட்டத்தை கெடுத்துடுவாங்க. 

இதனால கனவோட வடிவமைப்ப பத்தி தெரிஞ்சிக்கறதயும் நிறுத்திக்கராறு. இதைப் பத்தி, அணில இருக்கற மத்தவங்களுக்கும் அரியாட்னே சொல்ல சொல்றாங்க , ஆனா காப் இது அவ்வளவு சீரியஸ் பிரச்னை இல்லை. அதனால அவங்களுக்கு தெரிய வேணாம்னு மழுப்பிடராறு.

இந்த பயிற்சியில டாட்டம்னு ஒரு விஷயத்தைப் பத்தியும் சொல்றாங்க. எல்லார் கிட்டயும் ஒரு டாட்டம் இருக்கும். அதை வெச்சி, அவங்கவங்க, தான் கனவுல இருக்'கோமா', நிஜத்துல இருக்கோமான்னு கண்டுபுடிச்சிப்பாங்க. அப்படியொரு டாட்டம்தான், முதல் காட்சில காப் கைல இருக்கற பம்பரம். அது காபோட டாட்டம். அதை சுத்தி பார்த்து, விழுந்தா நிஜம்னும், சுத்திகிட்டே இருந்தா கனவுன்னும் காப் தெரிஞ்சிப்பாறு. 
இதை படத்துல பல முறை அவர் செஞ்சி பாக்கறாரு. 

அடுத்து கிக். ஒரு கனவுலேர்ந்து முழிக்க, நிஜத்துல கிக்குனு ஒரு விஷயத்தை பயன்படுத்தறாங்க. ஒரு இடத்துலேர்ந்து, எந்த பிடிமானமும் இல்லாம கீழ விழறது (freefall) தான் கிக். உதாரணத்துக்கு நாற்காலிலேர்ந்து பின்னாடி சாஞ்சு விழறது. அப்படி கனவுலகத்துல விழுந்தா, நிஜத்துல முழிக்கலாம்.

இவங்க இன்செப்ஷன் செய்ய வேண்டியது பிஷர்னு ஒரு இளம் தொழிலதிபரோட தலைக்குள்ள. செத்துப்போகப்போற தன்னோட அப்பாவின் மூலமா வர தொழில் சாம்ராஜ்யத்தை அவரே உடைக்கரா மாதிரி யோசனைய விதைக்கனும். அதுக்கு இன்செப்ஷன் பண்ணனும். இந்த வேலைக்காக பிஷர பத்தின எல்லா தகவலையும் சேகரிக்கறாங்க. இறந்த அப்பாவ பார்க்க, பிஷர் விமானத்துல போகும்போது, இன்செப்ஷன் பண்ணலாம்னு முடிவெடுக்கறாங்க.  


இங்க இன்னொரு முக்கியமான விஷயம். இன்செப்ஷன் செய்ய மூணு லேயர்னு முடிவு பண்ணி திட்டம் போடறாங்க. அடுத்தது, நிஜ உலகத்துல பத்து மணி நேரம்னா, கனவுல ஒரு வாரம், கனவோட ரெண்டாவது லேயர்ல ஆறு மாசம் அப்பறம் மூணாவது லேயர்ல பத்து வருஷம்னு கணக்கு மாறும். 

இதுல, லிம்போனு, நம்மூரு அரசியல்வாதி மாதிரி இன்னொரு சார்பற்ற லேயர் இருக்கு. இந்த லேயர் யாருக்கும் சொந்தமில்லை. இங்க இருக்கும்போது, நிஜமா கனவான்னு எந்த சந்தேகமும் வராது. ஆயுசுக்கும் அங்கேயே கெடக்க வேண்டியதுதான். நிஜவுலகத்துல முழிக்கவும் மாட்டாங்க. கோமா மாதிரி ஆகிடும்.

ஒரு சக்தி வாய்ந்த மயக்க மருந்து கொடுத்து பிஷர தூக்கத்துல ஆழ்த்தி, பிஷரோட ஆழ்மனசுல போக இன்செப்ஷன ஆரம்பிக்கறாங்க. 


முதல் லேயர், யூசுப்போட கனவு.

இயாம்ஸும்  சைட்டோவும், ஆர்தரோட சேர்ந்து பிஷர ஒரு வேன்ல கடத்தி கொண்டு போறாங்க. 
போற வழியில பல பேர் இவங்கள தாக்கறாங்க. காப், அதெல்லாம் பிஷரோட மனசுல அவரே ஏற்படுத்தி வெச்சிருக்கற தற்காப்பு. இந்த மாதிரி இன்செப்ஷன் பண்ணுவாங்கன்னு தெரிஞ்சு யார்கிட்டையோ பயிற்சி எடுத்துட்டுகிட்டு இருக்காருன்னு விளக்காராறு.

நடு ரோட்ல திடீர்னு ஒரு ரயில் வேற வருது. அது எப்படின்னு யாருக்கும் புரியல. எப்படியோ கஷ்டப்பட்டு, பின்னி மில் மாதிரி ஒரு எடத்துக்கு வராங்க. ஆனா சைட்டோ உடம்புல ஒரு குண்டு பாஞ்சிருக்கு. இதுக்கு மேல இவரால மேற்கொண்டு தொடர முடியாது. அதனால அவரை சுட்டு, நிஜ உலகத்துல முழிக்க வெச்சிடலாம்னு ஆர்தர் சைட்டோவ சுட முயற்ச்சி பண்றாரு. 

ஆனா, இவ்வளவு பவர்புல்லான மயக்க மருந்தோட வீரியம் குறையறதுக்கு முன்னாடியே, கனவுல இறந்து போனா, அவங்க லிம்போவுக்குதான் போவாங்க, முழிக்க மாட்டாங்கன்னு, காப் ஆர்தரை தடுக்கராறு. அரியாட்னே, ரயில் பத்தி காப் கிட்ட கேட்கும்போது, அது மால்னால தான் வந்துச்சுன்னு ஒத்துக்கராறு. அதை பத்தின முழு கதைய சொல்றாரு.

FLASHBACK

காப் மால் ரெண்டு பேருமே இந்த மாதிரி கனவுல திருடர வேலைல ஈடுபடறவங்க. ஒரு முறை இதை வெச்சி பரிசோதிச்சு பார்க்கும்போது, எக்கு தப்பா ரெண்டு பேரும் லிம்போவுக்கு போயிடறாங்க. காப், லிம்போ உண்மையில்ல, கனவுன்னு மால் கிட்ட சொல்லியும் அவங்க அங்கேர்ந்து வர மறுக்கறாங்க. அம்பது வருஷம் லிம்போவுலையே சந்தோஷமா இருக்காங்க.


கடைசியா எப்படியோ காப், மால்-ஐ நிஜ உலகத்துக்கு வர சம்மதிக்கவெக்கராறு. ஒரு ரயில் தண்டவாளத்துல ரெண்டு பேரும் தலையவெச்சி, இறந்து போய், நிஜவுலகத்துக்கு திரும்ப வராங்க. ஆனா அந்த லிம்போவோட தாக்கம் அதிகமா இருக்கறதுனால, நிஜ உலகத்துக்கு வந்த அப்பறமும், மால், அதுதான் கனவுன்னும், அங்க இறந்துபோனா நிஜவுலகத்துக்கு போகலாம்னும் நினைக்க ஆரம்பிக்கறாங்க. 

இதனால, அவங்களோட கல்யாண நாள் அன்னிக்கி, அவங்க எப்பவும் கொண்டாடுற ஹோட்டல் ரூம்லேர்ந்து மால் கீழ விழுந்து, தான் நிஜ உலகத்துக்கு போகனும்னு தற்கொலை பண்ணிக்கறாங்க. அதுக்கு முன்னாடியே, தன்னோட லாயர் கிட்ட, காப் தன்னை கொல்ல முயற்சி பன்றார்னும் சொல்லிடறாங்க. அப்போதான், தன் கூடவே காப் வருவார்னு அப்படி பண்றாங்க. இதனால, அவங்க இறந்த அப்பறம், கொலை பழி காப் மேல விழ, காப் அந்த நாட்டை விட்டு ஓடறாரு. 

Back to கனவு

இங்க முதல் லேயர்ல, இயாம்ஸ், பிஷரோட காட்பாதர் பிரவுனிங் மாதிரி வேஷம் போட்டு, தன்னை யாரோ டார்ச்சர் பண்றா மாதிரி கத்தறாரு. ஆர்தரும் காபும், பிஷர்கிட்ட ஒரு கஜானாவை திறக்கத் தேவையான நம்பர் கேட்ட்கறாங்க.
ஆனா அவருக்கு ஒண்ணும் தெரியலை. பக்கத்துல பிரவுநிங்கோட கத்தல் வேற.. பிஷர், பிரவுனிங்கோட பேசி பார்க்கறேன்னு சொல்றாரு. 

பிரவுனிங்கும் (இயாம்ஸ்) பிஷரும் பேசும்போது, பிஷர் அப்பா எழுதுன ரெண்டாவது உயில் பத்தி பிரவுனிங் சொல்றாரு. அது வெளிய வந்தா, மொத்த சாம்ராஜ்யமும் ஒண்ணுமில்லாம ஆகிடும், பிஷர் தேவைப்பட்டா அதை பயன்படுத்திக்கலாம். பிஷர், தான் எதுக்கு மொத்த சாம்ராஜ்யத்தையும் அழிக்கணும்னு கேட்கும்போது, "ஒரு வேளை உன் அப்பா, நீ உன்னோட சொந்த முயற்சில பெரிய ஆளா வரணும்னு நினைச்சிருக்கலாம்"னு பிரவுனிங் சொல்றாரு.

இதே நேரத்துல, பிஷரோட (கனவுலக) பாடிகார்ட்ஸ் அந்த இடத்தை நெருங்கறாங்க. அந்த இடத்தை காலி பண்றதுக்கு முன்னாடி, பிஷர் கிட்ட மறுபடியும் 
காபும் ஆர்தரும் கஜானா நம்பர கேட்கறாங்க . ஆனா பிஷர் தெரியாதுன்னு சொல்ல, ஏதொ ஒரு நம்பர சொல்லுனு அவங்க மிரட்ட, பிஷர், வாய்க்கு வந்த நம்பர சொல்றாரு. அங்கேர்ந்து ஒரு வேன்ல எல்லாரும் போறாங்க. அதுலையே மயக்க மருந்து கொடுத்து, அடுத்த லேயர் கனவுக்குப் போறாங்க. வண்டிய யூசுப் ஓட்டறாரு. 

ரெண்டாவது லேயர் ஆர்தரோட கனவு . 
(முதல் லேயர்ல கிக், வேனோட, எல்லாரும் ஒரு பாலத்துலேர்ந்து, தண்ணியில விழறது)

ரெண்டாவது லேயர்ல, ஒரு ஹோட்டல்ல, காப், பிஷர் கிட்ட வந்து, தான் அவரோட பாதுகாப்பு அதிகாரி சார்லஸ்னு அறிமுகப்படுத்திக்கராறு. அவர் இருக்கறது கனவுன்னும் நம்பவைக்கராறு. பிரவுன்ங்கை நம்பாதீங்க, அவர் கொஞ்சம் சரியில்லைனு ஒரு விஷயத்தையும் சொல்லி வைக்கறாரு. கொஞ்சம் கொஞ்சமா பிஷரோட மனசே பிரவுனிங்க கெட்டவரா சித்தரிக்குது. காப் இன்னும் பல விஷயங்கள் பேசலாம்னு பிஷரை ஒரு ரூமுக்கு கூட்டிட்டு போறாரு. அங்க இருக்கற பிரவுனிங் (forger) , தான் தப்பு பண்ணதா பிஷர் கிட்ட ஒத்துகிட்டு, இவ்வளவு வருஷமா உழைச்ச குடும்பம், ரெண்டாவது உயில்னால உடையறதை விரும்பாம அப்படி செஞ்சதா சொல்றாரு.. 


இந்த நேரத்துல, காப், பிரவுனிங் மனசுல இருக்கற ரகசியத்தை தெரிஞ்சிக்கிட்டுதான் ஆகணும்னு பிஷர சம்மதிக்க வெச்சி, அவரோட கனவுக்குள்ள போறாங்க. ரெண்டாவது லெவல்ல காவல் ஆர்தர். இதே நேரத்துல, பிஷரோட தற்காப்புகள், ஆர்த்தர தாக்க வர, அவர் அவங்கள அடிச்சி வீழ்திட்டு, இவங்க இருக்கற ரூமுக்கு வரும்போது, முதல் லெவல்ல கிக் ஆரம்பிக்குது. 

வேன் மேலேர்ந்து கீழ விழர்தால, ரெண்டாவது லெவெல்ல புவியீர்ப்பு விசை இல்லாம போகுது. இப்படி இருந்தா கிக்  கொடுக்கறது கஷ்டம்னு உணர்ற ஆர்தர், இருக்கற எல்லாரையும் எடுத்து கொண்டு போய், லிப்டோட கட்ராறு.

மூணாவது லேயர் (பிஷரின் கனவு), 


ஒரு பனி மலைல எல்லாரும் இருக்காங்க. அங்க ஒரு கட்டிடத்த நிறைய பேர் பாதுகாக்கறாங்க. காப், பிஷர்கிட்ட, அதுதான் பிரவுனிங் ரகசியத்தை வெச்சிருக்கற இடம்னு சொல்லி. அங்க போக சொல்றாரு. எல்லாரும் பிரிஞ்சு, அங்க இருக்கறவங்க கிட்ட சண்டை போட்டு, எப்படியோ பிஷர் அந்த கட்டிடத்தோட முக்கியமான பகுதிய அடைய உதவி பண்றாங்க. 

இதுக்கு நடுவுல, ஒரு குறுக்கு வழிய அரியாட்னே சைட்டோகிட்ட சொல்லும்போது, காபும் அதை கேட்டுடறாரு. இதனால, பிஷர் அந்த ரகசிய அறையை திறக்கதுக்கு முன்னாலேயே மால் அங்க வராங்க. தூரத்துலேர்ந்து இதை பாத்திக்கிட்டு இருக்கற அரியாட்னே, கூட இருக்கற காபை, சுட சொல்றாங்க. தன்னோட மனைவிய சுட தயங்கற அந்த நேரத்துல, மால் பிஷர சுட்டுடறாங்க. அப்பறம் காப் மாலை சுட்ராறு.

எல்லாரு பிஷர் விழுந்துருக்கற எடத்துக்கு வராங்க. சைட்டோவும் இறந்து போகராறு. பிஷர் இன்னும் இறந்து போகலைன்னும், அவர் காபோட லிம்போவுலதான் இருக்கனும்னும் அரியாட்னே சொல்றாங்க. ஏன்னா, காப் தன்னை தேடி வர, மால், அங்க தான் பிஷர வெச்சிருப்பாங்கன்னு சொல்றாங்க. இதுல முக்கியமான விஷயம், மால் காபோட குற்ற உணர்வின் பிரதிபலிப்புதான்.


இயாம்சை, பிஷருக்கு ட்ரீட்மென்ட் கொடுக்க சொல்லிட்டு, அரியாட்னேவும் காபும், அம்பது வருஷம் காப் - மால் வாழ்ந்த காபோட லிம்போவுக்கு போறாங்க. அங்க ஒரு வீட்ல மால் இருக்காங்க. அவங்க, காப், வயசாற வரைக்கும் பிரிய மாட்டோம்னு கொடுத்த தன்னோட வாக்குறுதிய காப்பத்தலைன்னு குத்தம் சொல்றாங்க. காப் குழப்பத்துல இருக்கார்னும், லிம்போதான் நிஜம்னும் சொல்றாங்க. இங்க காப் இன்னொரு பிளாஷ்பாக் சொல்றாரு.

முன்னாடி லிம்போவுல இருக்கும்போது, மால், அவங்களோட டாட்டம், அதாவது இப்போ காப் பயன்படுத்தற பம்பரத்தை, எடுத்து ஒழிச்சு வெச்சிடறாங்க. காப் இதை கண்டுபுடிச்சு, மால் இருக்கறது நிஜ உலகம் இல்லைன்னு 
மாலுக்கே ஒரு இன்செப்ஷனை செய்யறாரு. இதனால்தன், மால் காப் சொல்றதை கேட்டு, ரயிலுக்கடியில தலை வெக்கறாங்க. ஆனா நிஜத்துல வந்த அப்பறமும், இது கனவுன்னு காப் விதைச்ச எண்ணம் அவங்களவிட்டு போகாததுனால,  அவங்க தற்கொலை பண்ணிக்கறாங்க. இதனால்தான், இன்செப்ஷன் சாத்தியம்னும் காபுக்கு தெரிய வருது. 

மறுபடியும், இங்க லிம்போவுல, பிஷர கண்டு புடிக்கறாங்க. காப், தான் சைட்டோவ கண்டுபுடிக்கனும்னு சொல்றாரு. இதனால, அரியாட்னே, பிஷர கீழ தள்ளிவிட்டு, தானும் கீழ விழறாங்க. மூணாவது லேயர்ல இயாம்ஸ் கொடுக்கற ஷாக்கோடா, இந்த கிக்கு வேலை செஞ்சி, மூணாவது லேயர்க்கு போறாங்க. பிஷர் உயிரோட வராரு. அந்த ரகசிய அறைல இருக்கற விஷயத்தையும் தெரிஞ்சிக்கராறு.


இதே நேரத்துல, அந்த கட்டிடம் தகர்க்கப்பட்டு, எல்லாரும் அஸ்திவாரத்துக்குள்ள விழறாங்க, அதே நேரத்துல ரெண்டாவது லேயர்ல இருக்கற லிப்டுல ஏதொ செஞ்சி, ஆர்தர் அதை ப்ரீஃபால் ஆக்கராறு , அப்படியே முதல் லேயர்ல கரெக்டா வேன் தண்ணில விழுது. எல்லா கிக்கும் சரியா வேலை செய்ய, எல்லாரும் கரெக்டா கண்ணு முழிக்கறாங்க. இன்செப்ஷன் வெற்றிகரமா முடியுது.

மறுபடியும் முதல் காட்சி வருது. காப், லிம்போவுல பார்க்கற அந்த கிழட்டு சைனா காரரு நம்ம சைட்டோதான். காப் அவர் கிட்ட பேசி, ரெண்டு பேரும் சுட்டுகிட்டு, நிஜத்துக்கு வராங்க. வாக்கு கொடுத்தா மாதிரி, சைட்டோ, தன்னோட செல்வாக்கை பயன்படுத்தி, காபை அமெரிக்காவுக்குள்ள எந்த பிரச்சனையும் இல்லாம நுழைய வெக்கறாரு. 


காப் தன்னோட வீட்டுக்கு வந்து, எப்பவும் குழந்தைகள் விளையாடுற அந்த காட்சிய பாக்கறாரு. இது கனவா நிஜமான்னு தெரிஞ்சக்க, டாட்டம எடுத்து சுத்தராறு,  ஆனா இந்த முறை, குழந்தைகள் முகத்தை காமிக்கறாங்க. அப்பாகிட்ட ஓடி வராங்க. காபும், சுத்தி விட்ட பம்பரத்தை மறந்து, அவங்க கிட்ட ஓட, கேமரா சுத்திகிட்டு இருக்கற பம்பரத்த காமிக்குது. அது இன்னும் சுத்திகிட்டே இருந்து, விழறா மாதிரி நிலை தடுமாற, படம் முடியுது.



ங்கொக்கா மக்கா... ஒரு வழியா சொல்லிட்டேண்டா சாமி... 
ரொம்ப சொதப்பலைன்னு நினைக்கறேன். 
மறுபடியும் எல்லாருக்கும் நண்ணி...


வெற்றி வெற்றி வெற்றி.. சொல்லி முடிச்சிட்டேன்...

Wednesday, August 18, 2010

Inception பதில்கள் - 3

இன்னும் தொடருது...

@ஜெய்
//படத்துல புரியாதது காட்டாதது எல்லாமே ஓபன் எண்ட்-ஆ ஒத்துக்க முடியலைங்க... //
 கண்டிப்பா அப்படி இல்லை...

//நாம எல்லாருமே புரியாத விஷயங்களையும் ஓபன் எண்ட்-னு நினைச்சுகிட்டு,
நமக்கு பிடிச்சா மாதிரி புரிஞ்சுக்கறோம்னு நினைக்கிறேன்... //
இருக்கலாம்... ஆனா நூறு சதவீதம் அப்படியேன்னு நினைக்கவும் முடியாதே...

//இந்த முக்கியமான விஷயங்களை ரெண்டு பக்கமும் argue பண்ணதான் படத்துல அங்கங்க வேணும்னே ரெண்டு பக்கத்துக்கும் argument points வச்சுருக்காங்க இல்லையா... //
நோலனுக்கு வேற வேலையே இல்லைங்க. வாங்க ஆர்க்யூ பண்ணுவோம் :)

//முடிவு நிஜம்னு சொல்லணும்னா, க்ளைமாக்ஸ்ல குழந்தைகள் வளர்ந்து இருக்கது, ஹீரோ கையில மோதிரம் இல்லாதது, (படம் பேர் போட்டு முடிச்சவுடனே டோட்டம் கீழே விழற சத்தம் கேக்குதாமே!!!) //
அப்படி எதுவும் கேட்கலை. புரளிகளை நம்பாதீர்...

//முடிவு கனவுன்னு சொல்லணும்னா.......அதே இடத்துல விளையாடறது, இந்த மாதிரி arguments சொல்லலாம்...//
எனக்கு அதே மாதிரி டிரெஸ்னு தான் தோணுது..

//குழப்பத்துல இருக்கதே பெட்டர்னு நினைக்கிறேன்... //
நீங்களும் காப் மாதிரியே பேசறீங்களே...

//ஒவ்வொருத்தருக்கும் ஒரு லிம்போ இருக்கும்... நாலாவ்து லெவல் ஃபிஷருக்குதான் லிம்போ...//
கண்டிப்பா அது  ஃபிஷருக்குதான் லிம்போ, ஆனா அவரை கண்டெடுக்கறது காபோட லிம்போவுல. ஏன்னா அங்க தான் அவரை மால் புடிச்சு வெச்சிருக்காங்க.

//அப்பறமா, ஹீரோ வேன் லெவல்ல தண்ணிக்குள்ள இருக்கதால செத்துப்போய் சைட்டோவோட லிம்போவுக்கு போய் அவரை காப்பாத்தறாரு.. :)//
இதை ரெண்டு விதமா சொல்லலாம். அவர் தண்ணிக்குள்ள மயக்கத்துல இருக்கார்னும், ஏற்கனவே லிம்போல இருக்கறதால, அங்கேர்ந்தே சைட்டோவா தேடற வேலைய தொடங்கரார்னும் வெச்சுக்கலாம். ஏன்னா, ஃபிஷர காப்பாத்தின அப்பறம், அவர் எந்த கிக்கும் பயன்படுத்தலை

//ஃபிஷர் சாகவே இல்ல... குண்டடி பட்டு மயக்கம் ஆகிடறான்............
மால் செத்துட்டதால, அவங்க சுட்ட புல்லட் காயம் போயிடுச்சு... :)//
இது என்னோட புரிதல் கூடவும் கொஞ்சம் ஒத்துப்போகுது. ஃபிஷர் செத்ததா முடிவு பண்ணவே இல்லை. இயாம்ச ட்ரீட்மென்ட் கொடுக்க சொல்லிட்டுதான் அவங்க லிம்போவுக்கு போறாங்க.

//நாலாவது லெவல் காப்-ன் சப்கான்ஷியஸ்.....அதான் அவனை கூட்டிட்டு வர அங்க போறாங்க... //
அது லிம்போதாங்கர்துல இன்னும் என்னக்கு எந்த டவுட்டும் வரலை. இனிமேலும் வராதுன்னு நினைக்கறேன்.

//இப்படி நிறைய... இதெல்லாம் தப்புன்னு என்னால சொல்ல முடியல... ஆனா, சரின்னும் ஒத்துக்கமுடியல... //
அதுதான் டைரக்டரும் எதிர்பார்க்கறார்...
 
//மால்-ம், சைட்டோ-வும் ஒரே மாதிரி சொல்லற “take a leap of faith" டயலாக்....... தாத்தா சொல்லற "they come here only to sleep again. dream is their real world. who are you to say otherwise?" டயலாக்... இதெல்லாம் முக்கியமான விஷயங்கள்னு தோணுது எனக்கு... ஏன்னா ஹீரோ க்ளைமாக்ஸ் கனவுதான்னு புரிஞ்சே அதுல வாழ தயாராகுறானா?//
இந்த இடத்துல, இன்னொரு interpretationஉம் சில பேர் முன்வைக்கறாங்க. இயாம்சொட இடத்துல போயிட்டு, அந்த செடேஷன பரிசோதிக்கற இடத்துலேர்ந்து (தாத்தா டயலாக் அப்பறம்) எல்லாமே காபோட கனவுன்னும் சொல்றாங்க.

//Is there a final truth to MEMENTO? Christopher Nolan claims there is one.//
படத்தோட கிரானலாஜிகல் வெர்ஷன பார்த்த அப்பறம், முடிவு இருக்குனுதான் தோணுது.

@பாலி
//நான் திரும்ப படம் பார்க்கும்போது கன்ஃபர்ம் பண்ணிகிட்டேன். வேறு உடைகள்.//
தல, அதே செட் உடைகள் தான். நான் அதுக்காகவே நூத்தி இருவது ரூவா செலவழிச்சு பார்த்தேன். இன்னொரு தடவையும் பார்க்க ரெடி.

//ஆக்சுவலி இந்த மேட்டரையெல்லாம்.. நான் கி.மு 200-லயே தினமும் 12-16 மணிநேரமா படிச்சி வந்திருந்தேன்.//
தல, நானும் கனடா கபோதிக்கு, பத்து வருஷத்துக்கு முன்னாடியே உங்கள refer பண்ணி, இதைப் பத்தி எழுதி, ஒரு மெயில் அனுப்பினேன். பப்ளிஷ் பண்ணலை. இலக்கியவாதிகள மதிக்கத் தெரியாத கம்மனாட்டி பசங்க.. இதைப் பத்தி, ராணி முத்துல வேலை செய்யற என்னோட தோழிகிட்ட கூட, டப்ளிங்க்ல ஒக்காந்து பேசியிருக்கேன்.

@ஜெய் 
//நாட்டுல இவ்ளோ குழப்பம், சண்டை, சச்சரவு வருமா?//
கலைஞர்களுக்குள்ள இதெல்லாம் சகஜம் ....

@ஜெய் + பாலி
ஸ்வேதா யாரு??

அடுத்த பதிவுல, நண்பர் பத்மநாபன் கேட்டா மாதிரி, படத்தோட கதைய முடிஞ்சவரைக்கும் சிம்பிளா எழுதறேன்.. மறுபடியும் எல்லாருக்கும் நன்றி.. :)
கேள்விகள் இல்லாமையே பதில் சொன்னா அதுக்கு என்ன பேரு???

Thursday, August 12, 2010

Inception பதில்கள் - 2

போன பதிவுல சொன்ன பதில்களுக்கான சந்தேகங்களுக்கு பதில் சொல்லலாம்னு பார்த்தா, அதுவே கமெண்ட் பேஜ்ல நிறைய வந்துருச்சு. அதனால தனிப்பதிவா போட்டு, கல்லா கட்டலாம்னு பாக்கறேன் :P

@எஸ் கே -
மிக்க நன்றி :)

@பாலி -
தல, நீங்க வேற ஒரு முக்கியமான வேலைல இருந்தாதால உங்க வேலை பளுவ குறைக்க முயற்சி செஞ்சேன் :)
கிளைமாக்ஸ்ல வரதும் அதே செட் உடைகள் மாதிரி தான் தெரியுது. இத மாதிரி ரெண்டு மூணு சந்தேகங்களுக்காகவே ரெண்டு முறை படத்தை பார்த்தேன்...
அண்ட்மன்னிக்கவும், முதல் கேள்விய ஒழுங்கா படிக்காம பதில் சொல்லிட்டேன். ஓபன் எண்டிங்னு சொன்னது முடிவ. ஆரம்பம் லிம்போதான்..
ஏன், விளையாட்டுக்கு வரலைன்னு சொன்னீங்க??? இங்க கண்டிப்பா வேற யாரும் வந்து பிரச்சனை பண்ண மாட்டாங்க. கவலைபடாதீங்க.

@சர்வேசன்
//லிஃப்ட்ல மயக்கத்துல இருக்கரவங்களை எழுப்பினா போதுமே, பனிமலை வேட்டு வச்சு ஏன் சாகப் பாக்கணும்?//
எனக்கு நிஜமாவே உங்க கேள்வி புரியலைன்னுதான் சொல்லணும் :(
இருந்தாலும் கொஞ்சம் விளக்கிடறேன்.
முதல் லெவல் -  யூசுபின் கனவு - அங்க கிக் அந்த தண்ணில விழற வண்டி
இரண்டாவது லெவல் -  ஆர்தரின் கனவு - அங்க கிக் லிப்ட்டு
மூணாவது லெவல் - இயாம்ஸோட கனவு - அங்க கிக் அந்த இடம் தகர்க்கபடுவது, அப்போதான் எல்லாரும் அப்படியே கீழ இருக்கற அஸ்திவார பள்ளத்துல விழுவாங்க.
நாலாவது லெவல் - யாரோட கனவும் இல்லை, லிம்போ - அங்க கிக் எப்படியாவது நாம லிம்போல இருக்கோம்னு உணர்ந்து, சாவறது or free fallaa கீழ விழறது...

@ஜெய்
//அதுனாலயே முதல்ல ஃபாலோவர் ஆயிட்டேன்... //
மிக்க நன்றி :)

//இன்னைக்கு இந்த படத்தை புரிஞ்சுக்காம கிளம்பப்போறதில்லை...//
வாங்க பழகலாம் :))

//நியூயார்க் டைம்ஸ் படிக்கிற தோழி இல்லாம இருக்கணும்னு வேண்டிகிட்டு, கமெண்டறேன்...//
எனக்கு பாம்பே டைம்ஸ் படிக்கற தோழி கூட இல்லை... யாராச்சும் இருந்தா சொல்லுங்க.. :(
நான் சென்னை டைம்ஸ் படிப்பேன் :P

// கமெண்ட் டெம்ப்ளேட் கொஞ்சம் அகலமா//
மொத்த டெம்ப்ளேட் தான் மாத்தணும் தல ;(

//முதல் காட்சி ரியல் இல்லைதானே?//
மறுபடியும் மன்னிச்சு.. கேள்விய ஒழுங்கா பார்க்கலை..அது ரியல் இல்லை. லிம்போ

//இது எங்கேயும் சொல்லப்படற மாதிரி தெரியல/?
நேரடியா எங்கயும் சொல்லல. ஆனா சில டயலாக் imply பண்ணுது. அதனாலதான் சொன்னேன்.

// எல்லாரும் செத்தா லிம்போவுக்கு போவோம்னு தெரிஞ்சதும் அவ்வளவு டென்ஷன் ஆகறாங்க...?//
ஃபிஷர் போனது காபின் லிம்போவுக்கு. அதனால அவரை ஈசியா கண்டுபுடிக்கறாங்க. முதல்ல டென்ஷன் ஆவர்துக்கான காரணம், அவங்க அவங்களோட லிம்போவுல காணாம போயிடுவாங்கன்னு காரணத்துனால. சைட்டோவ காப்பத்த காபுக்கு எவ்வளவு காலம் புடிச்சிதுனு படத்துல சொல்லல. ஆனா அவர் சைட்டோவை கண்டு புடிக்கும்போது,  சைட்டோ தொண்டுக்கெழமா இருக்கறாரு. காபிற்க்கும் ஒரு 40-50 வயசு இருக்கறா மாதிரி முடி எல்லாம் நரைச்சிருக்கு.

//ஹீரோவே மூணாவது லெவல்ல(பனிமலை) இருக்கப்ப, ஹீரோவோட மனைவி எப்படி லிம்போல இருப்பாங்க??//
மால் அங்க வரக்கூடாதுன்னு தான், கனவுகளோட ஆர்க்கிடேக்ச்சர காப் தெரிஞ்சிக்காம இருக்காரு. ஆனா, அரியாட்னே எமேர்ஜன்சி என்ட்ரி பத்தி சொல்லும்போது காபும் அதை கேட்டுடறார். அதனால மாலுக்கும் இப்போ அங்க எப்படி போறதுன்னு தெரியும். அப்படிதான் மால் அங்க வராங்க. ஹீரோவின்  மனைவி எப்பவுமே லிம்போலதான் இருக்காங்க. காபுக்காக வெயிட் பண்றாங்க. இங்க முக்கியாமான விஷயம், லிம்போல இருக்கறதும், ஒவ்வொவொரு முறையும் பிளான கெடுக்கர்தும் காபோட குற்ற உணர்வின் பிரதிபலிப்புதான்.

//மூணாவ்து லெவல்ல குண்டடி பட்டு, திரும்ப மூணாவ்து லெவலே வந்தா?//
திருத்தம், மூணாவது லெவல்ல அடிபட்டு, நாலாவது லிம்போவுக்கு போயிட்டு, மறுபடியும் மூணாவது லெவலுக்கு வரார். வீரியம் குறைஞ்சு போய், திரும்ப defibrillatorஅ கிக்கோடா சின்கரனைஸ் பண்ணி அவர உயிரோட கொண்டு வராங்க.

//சைடோவை கண்டுபிடிக்க காப் லிம்போல இருந்தாதானே முடியும்? //
அதானால்தான் அரியாட்னே சுட வரும்போது தடுத்து, அவர் லிம்போலயே இருக்காரு.

//அவங்க பாட்டுக்கு சுட்டுட்டு காப் நிஜ உலகத்துக்கு போயிட்டா, சைட்டோவை யாரு காப்பாத்தறது?//
அவங்க ஒரு பதட்டத்துல சுட வரும் போதுதான் காப் சொல்லுவாரு, சைட்டோ இந்த நேரத்துக்கு இறந்துருப்பாறு, அதனால அவர தேடி கூப்ட்டுட்டு வரேன்னு.

//மோதிரம் போடலைன்னு சொன்னேங்க...//
நான் கவனிக்கலை. ஒரு யூகத்துலதான் சொன்னேன்.

//ஏன் ரெண்டு பேர் பார்வையில காட்சி அமைக்கணும்? அப்படி என்ன significance அதுக்கு?//
முன்னாடியே சொன்னா மாதிரி, இதுக்கு எந்த significanceஉம் இருக்கணும்னு அவசியம் இல்லை. நாம கொஞ்சம் ஓவராவே யோசிக்கறோம் ;)

// நான் ஏதாவது தப்பா புரிஞ்சுட்டாலும்//
இத மாதிரி ஓபன் எண்டிங் படங்கள்ல, தப்பு எது, ரைட்டு எதுன்னு சொல்லவே முடியாது.

 மறுபடியும் கேள்வி கேட்ட எல்லாருக்கும் நன்றி. இன்னும் இருந்தாலும் கேளுங்க. எதையும் தாங்கும் 'இதையும்'.. :)

இன்னுமா நான் யாருன்னு தெரில??? ஹா ஹா ஹா

Inception பதில்கள்

என்னடா சின்னப் பையனாச்சேன்னு யாரும் கேள்வி கேட்காம விட்டுருவாங்களோன்னு நினைச்சேன். இருந்தாலும், என்னையும் மதிச்சு சில கேள்விகள் கேட்ட அந்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி. இப்போ பதில்களுக்கு போவோம்.

திரு பத்மநாபனின் கேள்வி
  • please explain the story na?
முதல்லையே போட்டாரு பாருங்க ஒரு போடு. கண்டிப்பா சொல்றேன். அதுக்கு முன்னாடிச் சின்ன கேள்விகளுக்கு பதில் சொல்லிட்டு வந்துடறேன்.

திரு ரமியின் கேள்விகள்

  • Is the movie is begin in dream or real?
 அது டைரக்டர் நம்ம கற்பனைக்கே விட்டுடறாரு. open ending.
  • Actually what is the climax in this movie?
பாசிடிவா சொல்லனும்னா, அவங்க வெற்றிகரமா வேலைய முடிச்சிட்டு, நாயகன் காப் தன்னோட குழந்தைங்களோட இணையராருனு வெச்சிக்கலாம். இல்லை, நெகடிவா போனா, காப் வேலையை சரியா முடிக்காம, லிம்போல மாட்டிகிட்டாருனு வெச்சிக்கலாம். இல்ல, ஒரு தரப்பினர் சொல்றா மாதிரி, படம் முழுக்கவே, காபோட கனவா இருக்கலாம். இதுக்கு பதில் இல்லைனு சொல்றதுதான் உண்மையான பதிலா இருக்கும். 
  • Different between extraction and inception?
ரொம்ப சிம்பிள். Extraction - சப் கான்ஷியஸ்ல / மண்டைல இருக்கற ஒரு விஷயத்தை திருடறது. Inception - அப்படியே உல்டா. அவங்க சப் கான்ஷியஸ்ல, அவங்களுக்கே தோணுவது மாதிரி ஒரு எண்ணத்த விதைப்பது. இதுல, Inception தான் ரொம்பக் கடினமான வேலை, ஏன்னா, விதைக்கற எண்ணம் அந்நியமா இல்லாம, அவங்களே யோசிச்சா மாதிரி இருக்கணும். 
  • Is there any explanation in movie that these are all possible or not?
இது ஒரு சைன்ஸ் ஃபிக்ஷன். இதெல்லாம் சாத்தியமா இல்லையான்னு இந்தப் படத்துல எங்கயும் ஆதாரத்தோட காமிக்கல.

திரு ஜெய்யின் கேள்விகள்
  • அந்த நாலாவது லெவல் லிம்போவா இல்லையா?

    அது லிம்போதான்..
  • அதிக மயக்கமருந்து எடுத்துகிட்டபின் கனவுல செத்தாதான் லிம்போ-க்கு போகமுடியும், அங்க செத்தா ரியாலிடிக்கு வரமுடியும்னு சொல்லறாங்க இல்லையா? ஆனா ஹீரோவும் அரியாட்னியும் நாலாவது லெவலுக்கு சாகாமலே போறாங்க... அரியாட்னியும் ஃபிஷரும் ஜாலியா கிக் மூலமாவே திரும்ப வர்றாங்க... அதுனால அது லிம்போவா இருக்க முடியாது இல்லையா? 
                  அது லிம்போதான்னு நான் சொல்றதுக்கான காரணங்கள். லிம்போ யாரோட கனவும் கிடையாது. அது ஒரு பொரம்போக்கு நிலம் மாதிரி. அங்க ஏற்கனவே போயிட்டு வந்தவங்களால சுலபமா அங்க போக முடியும். தெரிஞ்ச இடத்துக்கு நாம ஈசியா மத்தவங்கள கூட்டிட்டு போறதில்லியா, அது மாதிரி. ஹீரோவும் அரியாட்னேயும், ஹீரோவோட கனவுல இருக்கற லிம்போவுக்கு போறாங்க. ஏன்னா, ஹீரோவுக்கு தெரியும், தன்னோட மனைவி, அங்க தான் ஃபிஷர ஒழிச்சு வெச்சிருப்பாங்கன்னு. ஏன்னா, அவங்களோட முதல் + கடைசி விருப்பம் காபோட எப்பவும் ஒண்ணா இருக்கனும்ங்கறது மட்டுமே. அரியாட்னேயும் ஃபிஷரும் ஜாலியா கிக் மூலமாவே திரும்பி வரதுதான் நீங்க கேட்ட கேள்விக்கு பதிலே. லிம்போ கொஞ்சம் கொஞ்சமா அழிஞ்சிகிட்டு வராத பாக்கற அர்யாட்னே, மேல உள்ள லெவல்ல கிக் ஆரம்பமானதா உணர்ந்து, ஃபிஷர கீழ தள்ளி விட்டுட்டு, தானும் குதிக்கறாங்க.
  • ஆனா, அது லிம்போ இல்லைன்னா செத்துப்போன ஃபிஷர் எப்படி அங்க இருக்காரு? ஃபிஷர் திரும்ப மூணவது லெவலுக்கு வந்தபின் ஏன் குண்டடி பட்ட வலி இல்லை?
அது லிம்போதான். காபோட சப் கான்ஷியாசின் பிரதிபலிப்பான அவரோட மனைவி மால், காப் தன்னைத் தேடி வந்து, தன கூடவே இருக்கணும்னு, அவரை அங்கே ஒழிச்சு வெச்சிருக்காங்க. ஃபிஷரின் வலியின்மைக்கான காரணங்கள், என்னோட யூகத்தின் அடிப்படைல சொல்லனும்னா,  ஃபிஷர் லிம்போவுக்கு போயிட்டு திரும்ப வந்ததுனால இருக்கலாம். ஏன்னா, வீரியம் கம்மியான அடுத்த லெவலுக்கு போயிட்டு, திரும்ப வராரு இல்லையா. அதனால அவர் வலியை உணராம இருக்கலாம்.
  • ஒருவேளை நாலாவ்து லெவல், ஹீரோவோட சப்கான்ஷியஸ் லெவல்னு வச்சுகிட்டா, அங்க ஃபிஷரோட ப்ரொஜக்‌ஷன் (மால் மாதிரி) இருக்கலாம்... ஆனா ஃபிஷரே எப்படி இருக்க முடியும்? அந்த லெவலுக்கு ஹீரோவும் அரியாட்னியும் போரதுக்கு முன்னாடி கொஞ்ச நேரம் செத்துப்பொன ஃபிஷர் எங்க இருந்தாரு? 
செத்துப்போனவுடனே  ஃபிஷர் லிம்போவுக்கு போயிட்டாரு. உடனே, மாலும் சுடப்படறாங்க. முன்னாடியே சொன்னா மாதிரி, லிம்போவுக்கு போயிட்டு வந்தவங்களால, மறுபடியும் அதுக்குள்ள சுலபமா போக முடியும். போன பதில்ல சொன்னா மாதிரி, காபுக்காக ஃபிஷர பணயக்கைதி மாதிரி ஒழிச்சு வெக்கறாங்க மால். இதுல முக்கியமான விஷயம், இது எல்லாமே, காபையும் அறியாம, அவரோட குற்றஉணர்வின் பிரதிபலிப்பான மால் செய்யறாங்க. உண்மையான மால் எப்பவோ இறந்து போய்ட்டாங்க.
  • முக்கியமான விஷயம்... நாலாவது லெவல் முடியறப்போ, அரியாட்னி கீழே குதிக்கும் முன், ஹீரோகிட்ட “சைடோ லிம்போல இருக்காரு... போய் அவரைக்காப்பாத்து”-ன்னு சொல்லி துப்பாக்கி எடுத்து ஹீரோவை சுட பார்க்கிறாங்க... (அப்படின்னா நாலாவது லெவல் லிம்போ இல்லைதானே?)
இது சொல்ல வந்த காண்டக்ஸ்ட்ல நீங்க எடுத்துக்கலைன்னு நினைக்கறேன். அவங்க லிம்போலதான் இருக்காங்க. நீங்க படத்தை தமிழ்ல பாத்துருக்கலாம். ஆங்கிலத்துல வர டயலாக் இதுதான், "Don't lose yourself!! Find Saito and bring him back!"  . அவங்க துப்பாக்கி எடுத்து ஹீரோவா சுடப் பாக்கறது, அவரை மால் நினைவுலேர்ந்து காப்பாத்தி, நிஜ உலகத்துல கண் முழிக்க வெக்க.
  • ஹீரோவும் அவ்ர் மனைவியும் 50 வருஷம் வாழ்ந்ததா சொல்லற இடத்துல ஒரு ஷாட்ல அவங்களை பின்பக்கத்துல இருந்து காண்பிக்கறாங்க... அவங்க ரெண்டு பேரோட கையும் சுருங்கி வயசாகி இருக்காங்க... ஆனா, அதுக்கப்பறம் தற்கொலை பண்ணிக்கறப்போ இளமையா இருக்காங்களே? 50 வாழ்ந்தது பல லெவல் கனவுக்குள்ளா? இல்ல லிம்போலயா?
ஹீரோவும் அவர் மனைவியும் ஐம்பது வருஷம் நிஜமாவே லிம்போல கழிக்கறாங்க. ஆனா இந்தக் கதைய கேட்கற அரியாட்னேவோட காட்சியமைப்புலதான் நாம பாக்கறோம். அதனாலதான் ரெண்டு பேரும் இளமையாவே இருக்காங்க. இன்னொரு முறை காப் அதைப் பற்றி பேசும்போது, வயதான அவர்களோட காட்சிகள் வரும். ஏன்னா அதுதான் உண்மையான அவரோட காட்சியமைப்பு.

  • முடிவு ஓபன் எண்ட்தானே? ஒருவேளை மொத்த படமும் கனவுன்னு ஒரு argument இருந்தா எப்படி அதுக்கு முன்னாடி ரெண்டு வாட்டி எப்படி டோட்டம் விழுந்துச்சு?
கண்டிப்பா ஓபன் எண்டு தான். ரெண்டு வாட்டி டோட்டம் விழுந்ததற்கான காரணம் ரொம்ப சிம்பிள்னுதான் நான் நினைக்கறேன். அதோட சரியான வடிவமைப்பும், எடையும், எப்படி வேலை செய்யும்னும்  காபுக்கு நல்லாவே தெரியும். அது ஏன் அவர் கனவுல ஒழுங்க வேலை செய்யக்கூடாது. முக்கியமா, டோட்டம், நாம மத்தவங்க கனவுல இருக்கோமா இல்லையாங்கறத சொல்லுமே தவற, நம்மலோடதுல இல்லை.
  • க்ளைமாக்ஸ் கனவா/நிஜமா? படம் முழுக்க கனவா?, ஏன் குழந்தைகள் அதே இடத்துல இருக்காங்க(ஆனா க்ளைமாக்ஸ்ல வர்றது வேற செட் குழந்தகளாம்...!!), 
முன்னாடியே sollitten. ஓபன் எண்டு.
  • ஏன் டோட்டம் சுத்தறப்போ ஒரு தடவை சைட்டோவும், க்ளைமாக்ஸில் மைக்கேல் கெயினும் வந்து டிஸ்டர்ப் பண்ணறாங்க?, அப்படின்னா அவங்க ஹீரோவுக்கு பண்ணற இன்செப்ஷனா இது? அதுக்கு அரியாட்னி உதவியா? (அந்த பொண்ணுதான் முக்கியமான எதிர்பாராத பல விஷயங்கள் பண்ணுது படத்துல) இல்ல ஹீரோவே அவருக்கே இன்செப்ஷன் பண்ணிக்கறாரா? (to get rid of his guilt) ஏன்னா மெமெண்டோவும் ஒரு வகையில இதேதான்... மனைவி தற்கொலைக்கு ஹீரோ காரணமா இருந்து, அந்த குற்ற உணர்ச்சியை போக்க ஹீரோ பண்ணற கிறுக்குத்தனமான விஷயங்கள்தான் மொத்த படமே.
அப்படியும் ஷட்டர் ஐலாண்ட் மாதிரி யோசிக்கலாம். ஒப்பன் எண்டு தான்
  • ஹீரோ ஏன் கனவுல மட்டும் திருமண மோதிரம் போட்டு இருக்காரு, க்ளைமாக்ஸ்ல போடலையே? (அதை க்ளோஸ் அப்ல வேற காண்பிக்கறாங்க) அப்ப க்ளைமாக்ஸ் நிஜமா? மால் சொல்லற அதே “take a leap of faith” டயலாக் ஏன் சைடோ சொல்லறாரு? சம்பந்தமே இல்லாம நோலன் க்ளைமாக்ஸையே (speaking with saito in limbo) முதல் காட்சியா காண்பிப்பாருன்னு தோணலை... அதுக்கு ஏதாச்சும் காரணம் இருக்கா?
சில நேரங்கள்ல, டைரக்டர் சொல்ல வராத விஷயங்களைக் கூட நாமே புரிஞ்சிப்போம். அப்படியே தான் நீங்க கேட்கறதும் இருக்கு, அதனால, அதே மாதிரியே பதிலும் சொல்றேன்.  ஹீரோ, தன்னோட குற்ற உணர்ச்சிய போக்கிட்டதுநாளா கிளைமாக்ஸ்ல திரும்பவும் மோதிரத்தை போட்டிக்கிட்டு இருக்கலாம். நிஜத்துல அதுவரை அவர் போடாததுக்கு காரணம், தன்னோட மனைவியோட நியாபகங்களும், அது தர குற்ற உணர்வும் தான். கிளைமாக்ஸ்தான் படத்தோட முதல் காட்சி. அப்படி அது வேற காட்சியா இருந்தா, படம் முழுக்கவே ஒரு சைக்கிள் மாதிரி எடுத்துக்கலாம். ஷட்டர் ஐலாண்ட் தியரிய அடிப்படையா வெச்சு, ஹீரோ தன்னோட குற்ற உணர்வ போக்க, இதையே திரும்ப திரும்ப செய்யறாருன்னு வெச்சிக்கலாம்.

திரு சர்வேசன் கேட்ட கேள்வி
  • பனிமலை ஏன் குண்டு வச்சு தகர்க்கப்பட்டுது?
நீங்க முதல்ல வர பனிச்சரிவ  சொல்றீங்கன்னு நினைக்கறேன். அது, அவங்க முதல் லெவல்ல வர van நிலை தடுமாறி ஒரு ரோலிங் அடிச்சிட்டு நிக்கர்துனால ஏற்படுவது. அது நல்ல வேளையா கிக்கா மாறாம, எல்லாரும் அதை மிஸ் பண்ணிடறாங்க. அந்த  அதிர்வு, பனிச் சரிவோட போய்டுது.இரண்டாவதா தகர்க்கப்படுவது கிக்குக்காக. (தில்லாலங்கடி கிக்கு இல்லை)

இன்னும் கேள்விகள் இருந்தா பின்னூட்டத்துல போடுங்க, அதுக்கு பார்ட் 2 பதிவு போட்டுடலாம். திரு பத்மநாபன் கேட்டா மாதிரி, வேற ஒரு பதிவுல, முழுக்கதையும் சொல்றேன். ஒரு வேளை நான் சொன்னதும், என்னோட புரிதலும் தப்பா இருந்தா திருத்துங்க. கேள்வி கேட்ட அன்பர்களுக்கு மீண்டும் ஒரு முறை நன்றி.. :)



இப்படி கேட்ட கேள்விக்கெல்லாம், அடடே, ஆச்சர்யக்குறி ரேஞ்சுக்கு பதில் சொல்லிட்டனோ??


Friday, July 2, 2010

டாய் ஸ்டோரி 3 (பத்தி விமர்சனம்)

மு.கு. படத்தோட கதையை பத்தி எதுவும் சொல்ல மாட்டேன். சரின்னா தொடர்ந்து படிங்க...

பிக்ஸாரின் ஒவ்வொரு படம் வரும்போதும் கேட்கற வழக்கமான கேள்விதான் இந்தப் படம் முடிஞ்ச அப்பறமும் கேட்கத் தோணுது.

"இத விட அருமையான படம் எப்படி கொடுக்க முடியும்???"

இன்னொரு முறை, அனிமேஷன் படங்கள் எடுக்கறதுல, அவங்களுக்கு நிகர் அவங்களேதான்னு நிரூபிச்சுருக்காங்க. கதைக்களம், கதையோட ஓட்டம்னு  எல்லாமே நமக்கு பழக்கப்பட்ட விஷயங்களா இருந்தாலும், நம்மால யூகிக்க முடியாத மாதிரி இருக்கு. ஒரு வினாடி கூட வீணடிக்காம, மக்களோட மூளைக்கும், மனசுக்கும், ஒரே சமயத்துல வேலை கொடுத்து பிரமாதமா, ரொம்பத் தெளிவா திரைக்கதை அமைச்சிருக்காங்க. ரொம்ப நுணுக்கமான விஷயங்கள்லேர்ந்து, பிரம்மாண்டமான விஷயங்கள் வரைக்கும், செதுக்கிருக்காங்க. அந்த உழைப்பு, படத்தோட ஒவ்வொரு இடத்துலையும் தெரியுது. ஒரே ஒரு பிரச்னை என்னன்னா, இந்த படத்துக்கு 3d பெரிய வித்தியாசத்தை கொடுத்திடலை. ஏதொ சம்பிரதாயத்துக்கு 3dனு ரிலீஸ் பண்ணிருப்பாங்க போல. ஆனா இதை விடுங்க. இந்த மாதிரி படங்கள் வர்றதே ரொம்ப கஷ்டம். மொழி புரியலைனாலும் கண்டிப்பா பாருங்க. உங்களுக்கு பிடிக்கும்.   

Saturday, January 9, 2010

2 புத்தகங்கள், 2 திரைப்படங்கள், 21 பாடல்கள்...

புது வருஷத்துக்கு முன்னாடியும் பின்னாடியும், பார்த்த, கேட்ட, படித்த சில விஷயங்களைப் பற்றி சொல்ல விரும்பறேன். முதல்ல அந்த இரண்டு புத்தகங்கள்..

முதலில் படித்தது, சேட்டன் பகத் எழுதின "2 STATES". ஒரு மசாலா காதல் கதை. முக்கால்வாசி, நகைச்சுவை கலந்து எழுதியிருக்கார். ஒரு ஹிந்தி/தெலுங்கு படம் பார்த்தாமாதிரி இருக்கு. தமிழர்கள ரொம்பவே நாசூக்கா கிண்டல் பண்ணிருக்கார். அதுக்கு சமமா, பஞ்சாபி அம்மாக்களையும். நடுவுல ரெண்டு தூய "சென்"தமிழ் கெட்ட வார்த்தைகள் வேற வருது (ஆனா தப்பா ஸ்பெல் பண்ணிருக்கார்;) எளிமையான மொழி நடைல, எனக்கே புரியறா மாதிரி எழுதியிருக்கறது, சிறப்பு. ஒரு முறைக்கு மேல படிக்கமுடியல. கதைல எனக்கு கொஞ்சம் ஷாக்கிங்கா இருந்தது, அந்த ஒரு லைன் தான். காதலித்த ரெண்டாவது வாரத்துல வருது இந்த dialogue. "one thing led to another and within two weeks we had sex". அடப்பாவி மக்கா. ஏதொ சமோசா சாப்டா மாதிரி அசால்டா சொல்றானேன்னு இருந்துச்சு. நான் இன்னும் அவ்வளவு பக்குவப்படலை. (நான் கொஞ்சம் கன்ஸர்வேடிவாக்கும்).

இரண்டாவது புத்தகம், பத்ரி சேஷாத்ரியின் அருமையான மொழிபெயர்ப்புல வந்திருக்குற ஷெர்லாக் ஹோம்ஸ் புத்தகம். எனக்கென்னமோ, சுஜாதா தமிழாக்கம் செஞ்சது மாதிரி இருந்தது. தேவையில்லாத வார்த்தைகள போடாம, போர் அடிக்காம இருக்கு. ஆனா, சில இடங்கள்ல, வாண்டுமாமா காமிக்ஸ் படிக்கறா மாதிரி, சின்னபிள்ளைத்தனமா இருந்தது. ரொம்ப நாளா ஷெர்லாக் ஹோம்ஸ் படிக்கணும்னு காத்துகிட்டிருந்த என்ன மாதிரி ஆளுங்க மிஸ் பண்ண கூடாத புத்தகம். கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்காங்க. முடிஞ்சா படிங்க.

அடுத்து பார்த்த இரண்டு படங்களும், அனிமேஷன் படங்கள். kung-fu panda & Bolt. அதென்னமோ, பிக்ஸார் படங்கள ரசிக்கற அளவுக்கு, வேற எந்த அனிமேஷன் படங்களையும் ரசிக்க முடியலை. இந்த bias முன்னாடியே இருந்தாலும், அத ஒதுக்கி வெச்சிட்டு, எப்படியாவது இந்த படங்களை பிடிக்க வெச்சிக்கணும்னு நெனச்சேன். ஆனா என்ன செய்ய, நான் அவ்வளவா இம்ப்ரெஸ் ஆகலை. Bolt படம், truman show படத்தோட animated வெர்ஷன்னு சொல்லலாம். kung-fu panda கிளைமாக்ஸ் மட்டும் புடிச்சிருந்தது. இரண்டு படங்கள்லயும் vfx நல்லா இருந்தாலும், திரைக்கதைல கொஞ்சம் தொய்வு. ரொம்ப மோசம் இல்லை. ரொம்ப சூப்பரும் இல்லை.

புதுசா ரிலீசாகியிருக்குற புதுப்படப் பாடல்கள் எல்லாமே நல்லா இருக்குறா மாதிரி இருக்கு. முதல்ல வந்தது, தமிழ் பட பாடல்கள். ஒரு சாதாரண விஜய் படத்தோட பாடல்கள் எப்படியிருக்குமோ அப்படியிருக்கு. சின்சியரா பண்ணியிருக்காங்க. பாடல் வரிகள் இன்னும் தமாசு. கண்டிப்பா கேளுங்க. எனக்கு பிடித்த பாடல்கள், பச்சை மஞ்ச, குத்து விளக்கு, ஓ மஹாசீயா...

அடுத்து வந்த அசல் பாடல்கள், அஜித் ரசிகர்கள திருப்தி படுத்தல. (என் அண்ணனுக்கு பிடிக்கலை) காலேஜ் விட்டு, வீட்டுக்கு வந்ததுமே என் அண்ணன் புலம்பினத கேட்டேன்.
என்னதான் முயற்சி பண்ணாலும், ஒரு prejudiced opinion வந்து உட்காந்துருச்சு. ஆனா, அவ்வளவு மோசம் இல்லை பாடல்கள். நல்லாதான் கீது. தன்னோட வழக்கமான பாணிய விட்டுக்கொடுக்காம, அதே சமயம், புதுசாவும் முயற்ச்சி பண்ணிருக்கார் பரத்வாஜ். ஆனா, அவர் பாடின பாடல் மட்டும் எனக்கு பிடிக்கலை. அவர் குரல் எனக்கு புடிக்காததும் ஒரு காரணமா இருக்கலாம். ஒரு வேளை, படம் வந்த அப்பறம் பாடல்கள் ஹிட் ஆகலாம். வரலாறவிட மோசமான பாடல்கள் இதுல இல்லைன்னு நினைக்கறேன். எனக்கு பிடித்த பாடல்கள், ஹே துஷ்யந்தா, குதிரைக்கு தெரியும் (கவிப்பேரரசின் பலான வரிகளில்) & டொட்டடொய்ங் (கண்டிப்பா குழந்தைகளுக்கு பிடிக்கும்)...                  

கோவா..................... என்ன சொல்றதுனே தெரியலை. எல்லாரும் ரசிக்கிற மாதிரி கண்டிப்பா ஒரு பாட்டாவது இருக்கு இந்த படத்துல. எனக்கு almost எல்லா பாடல்களுமே பிடிச்சிருக்கு. ஏழேழு தலைமுறை பாடலுக்கு இசை, ராஜாவா, யுவனான்னு சொல்ல முடியாத அளவு இருக்கு. இது வரை பாடல், முத்திரை படப் பாடல நினைவு படுத்தினாலும், கேட்க அழகாயிருக்கு. இடை வழி பாடல், வித்தியாசமான, ரசிக்ககூடிய முயற்சி. பென்னி தயாள் மட்டும் கொஞ்சம் ஓவரா பாடுறார். விவகாரமான வரிகள் இருக்குற வாலிபா வா வா பாடலோட இரண்டாவது சரணத்துல வர்ற அந்த ரீதி கௌளை fusion அட்டகாசம் (பார்ரா). அடிரா நையாண்டிய, கண்டிப்பா பட்டி தொட்டி எங்கும் ஒலிக்கக்கூடிய இசை. அதிசயமா, தீம் சாங் என்னை அவ்வளவா ஈர்க்கலை. மொத்தத்துல, வெங்கட் பிரபு-யுவன் கூட்டணியில, மற்றுமொரு வெற்றிகரமான இசை.

p.s. இந்த மூணு படத்துலயும் மொத்தமா 21 பாடல்கள் இருக்கு.
p.s.2 அவதார் 3d படத்துக்கு இன்னும் டிக்கெட் கிடைக்கலை :(
p.s.3 மறுபடியும் முதல்லேர்ந்து படிங்க...

 வேட்டைகாரன்னு இதே மாதிரி ஒரு படம் வந்துருக்கு...

Sunday, November 15, 2009

உலகம் சூப்பரா அழியுதுடோய்.....

அவங்களால எவ்வளவு முடியுமோ, அவ்வளவு அழகா உலகத்தை அழிக்கறாங்க பாருங்க. கண்கொள்ளா காட்சி. அட அட அட.சொல்ல வார்த்தையே இல்லை. கிராபிக்ஸ்ல விளையாடியிருக்காங்க. இந்த மாதிரி ஒரு படம் வந்ததில்லை. வருமான்னும் தெரியலை. என்ன, இந்த டைரக்டரோட The Day After Tomorrow பார்க்கும்போதும் நான் இப்படிதான் நினைச்சேன். Raising the bar அப்படின்னு சொல்லுவாங்களே, அது மாதிரி, அந்த படத்தை விட, இந்த படம் ஒரு விஷுவல் விருந்து. 2012 படத்துலதான் இந்த கூத்தெல்லாம்.

கதைனு பார்த்தா..... இந்த மாதிரி படத்துக்கு கதை ரொம்ப அவசியமா?? இங்க கதைன்னு பார்த்தோம்னா, இத மாதிரி படத்துக்கு இருக்குற ஒரு default கதைக்களம்தான். உலகம் அழியுது. ஒருத்தர் அத தொலைநோக்கராறு. அதுக்கான ஏற்பாட, அரசாங்க உதவியோட செய்யறாரு. நினைச்சத விட சீக்கிரமாவே அந்த அழிவு வர, பல மக்கள் மண்டையப் போட, சில மக்கள் தப்பிக்கறாங்க. இதுக்கு நடுவுல, நம்ம ஹீரோ, அவரோட மனைவி மக்களோட எப்படி தப்பிக்கராருன்னு, லைட்டா ஊறுகா மாதிரி செண்டிமென்ட தொட்டுகிட்டு, காமிக்கறாங்க.

முழுக்க முழுக்க VFX ஆதிக்கம்தான். படம் பார்க்கும்போது வேற ஒண்ணும் யோசிக்கவே தோணாது. கலிபோர்னியா அழியும்போது, வெள்ளை மாளிகை நொறுங்கும்போது, yellow stone எரிமலை உருவாகும்போது, ஹிமயமலைல கடலலை வரும்போது இப்படி பல காட்சிகள் இன்னும் கண்ணுலேயே நிக்குது. தமிழ் சினிமா மாதிரி, இந்த படத்துலயும், ஹீரோவுக்கு எதுவுமே ஆகாம, கடைசி வரை, அவர் பல மயிறிழைகள்ல தப்பிக்கராறு. அதுலயும் ஒரு சீன், விஜய் படம் பாக்கறா மாதிரியே இருந்துச்சு. ஒரு சில டச்சிங்கான சீன்கள் இருந்தாலும், அதனால பெரிய பாதிப்பு எதுவும் இல்ல.   

படத்துல முதல்ல ஒரு இந்தியர்தான் ஆபத்தை கண்டுபுடிச்சு சொல்றாரு. தப்பிக்கறதுக்கு கட்டற பெரிய நோவா ஆர்க் கப்பலுக்கு போக, அவருக்கு பிளைட் அனுப்பறாரு அவர் நண்பர், ஆனா அது அவரை பிக் அப் பண்ணாம, கடைசியில தன குடும்பத்தோட அவர் இறந்துபோராறு. எல்லா விஷயமும் இந்தியாவிலிருந்து போய், அது நமக்கே ரிவர்ஸ்ல ஆப்பா மாறுதுன்னு ரொம்ப அழகா காமிச்சிருக்கார் இயக்குனர். (அவர் அப்படி நினைக்கலைன்னா என்ன, நான் சொல்லுவேன். எப்படி நம்ம நுண்ணரசியல் கண்டுபிடிப்பு??)

என்னதான் இருந்தாலும், இது போல ஒரு படத்தை எடுத்ததுக்காக, டைரக்டர் Roland Emmerich மற்றும் கொலம்பியா பிக்ச்சர்சுக்கும், முக்கியமா கிராபிக்ஸ் பண்ண Uncharted Territory, Digital Domain, Double Negative, Scanline, Sony Pictures Imageworks ஆகிய நிறுவனங்களுக்கு மூன்றாவது வட்டம் சார்பாகவும், என் ரசிகர் மன்றம் சார்பாகவும், மனமார்ந்த பாராட்டுகள். படத்தை கண்டிப்பா ஒரு பெர்ய ஸ்க்ரீன்ல, நல்ல சவுண்டோட பாருங்க. என்னுடைய ஆதரவு தேவி மற்றும் சத்யம் திரையரங்குகளுக்கு. அடுத்ததா நான் எதிர்பார்க்கும் படம், ஜேம்ஸ் கேமரூனோட "அவ்தார்". Lets Wait......


விஜய் படம் பாத்து உலகம் அழியராப்போல ஒரு கான்செப்ட் இருக்கு. நடிக்கறீங்களா??

Thursday, November 5, 2009

Eagle Eye

ஸ்பீல்பெர்கின் ட்ரீம்வொர்க்ஸ் நிறுவனத்தோட படம் தான் இந்த ஈகிள் ஐ. படம் ரிலீஸ் ஆகி ஒரு வருஷம் ஆனாலும், இப்பதான் பார்க்க முடிஞ்சுது. நான் எந்த இங்கிலீஷ் படம் பார்த்தாலும், மொக்கையோ, நல்ல படமோ, எதுவா இருந்தாலும், விகிபீடியால அந்தப் படத்தை பத்தி பாத்துட்டு, rottentomatoesla அதோட சில ரிவ்யூவ படிச்சிட்டு, அப்பறம் தான் பார்ப்பேன். இந்தப் படமும் அப்படிதான் பார்த்தேன். எதிர்பார்த்த ஹிட் ஆகலைனாலும், ஏதொ சுமாரான வெற்றி பெற்றிருக்கும் படம் இது.

படத்தோட ஹீரோ வழக்கம் போல ஒரு உதவாக்கரை. சரியா படிக்காம, சாதாரண வேலைல, நண்பர்களோட சீட்டு ஆடிட்டு, வாடகைக்கு காசு இல்லாம, அப்பா அம்மாவ பிரிஞ்சு இருக்குற ஒரு ஆள். இரட்டை பிறவியான இவரோட அண்ணா, ஆர்மியில, வேலைல இறந்து போக, அதுக்கு அடுத்த நாள் இவரோட பிச்சைகார அக்கவுண்ட்ல பல்லாயிரம் டாலர்கள் இருக்கு. யார், என்ன, எப்போ, எப்படின்னு ஒண்ணும் புரியாம, காச எடுத்துகிட்டு, வீட்டுக்கு வர. உள்ள வெடி மருந்துகள், துப்பாகிகள்னு ஏகப்பட்ட விவகாரமான சமாசாரம் குவிஞ்சு கெடக்க, ஹீரோவுக்கு ஒரு போன் வருது.

அதுல ஒரு பெண் குரல், இன்னும் 30 secsல FBI உன்னை அரஸ்ட் பண்ண வரப்போவுது, தப்பிச்சிருன்னு சொல்ல, ஹீரோ குழப்பமா என்ன பண்றதுன்னு தெரியாம முழிக்க, FBI வந்து அவரை அதிரடியா அரெஸ்ட் பண்ணுது. அங்கிருந்தும் தப்பிக்க, இந்த பெண் போன் குரலே வழி சொல்ல, ஹீரோ அங்கிருந்து தப்பிக்க.கூடவே, இன்னொரு காரெக்டரும் இருக்காங்க. அவங்கதான் ஹீரோயினி. இவங்களோட மகனை கடத்தி வெச்சிகிட்டு, அதே பெண் குரல், போன் மூலமா மட்டும் இவங்களை ஆட்டிப் படைக்குது. ஹீரோயினியும் ஹீரோவும், ஓடுறாங்க ஓடுறாங்க ஓடுறாங்க, அமெரிக்காவோட ஓரத்துக்கே ஓடுறாங்க. 

அந்தப் பெண் குரல் யாரு. இவங்க ரெண்டுபேரையும் ஏன் அந்த குரல் இப்படி கலாய்க்குது. அதுக்கு அப்படி என்ன காரியம்தான் ஆகணும். இப்படிப்பட்ட கேள்விகளுக்கு நீங்க படத்தை பார்த்து விடை தெரிஞ்சுக்கோங்க. படம் ஆரம்பிச்சு, படம் முடியும் ஒரு 20 நிமிடங்கள் முன்னாடி வரைக்கும் அப்படியொரு வேகம். ஹீரோ ஹீரோயினோட நாமளும் அவ்வளவு வேகமா போறோம். அருமையான திரைக்கதை. கிளைமாக்ஸ் மட்டும் கொஞ்சம் காமெடியா இருக்கு. அதை தவிர எனக்கு படத்துல வேற எந்த குறையும் தெரியல. ஹாலிவுட் படங்கள்ல ஒரு நல்லா விஷயமா நான் நினைக்கறது என்னன்னா, ஓடாத flop படத்துலயும், திரைக்கதை நல்லாவே இருக்கும். நம்ம ஆளுங்க அந்த வித்தையை எப்படியாவது கத்துகிட்டா நல்லா இருக்கும்.

எனவே மக்களே, நான் பார்த்த சமீபத்திய திரைப்படங்கள்ல, ஈகிள் ஐ ஒரு அருமையான, ஹாலிவுட், கமர்ஷியல், மசாலா படம். மிஸ் பண்ணிறாதீங்க. என்னடா, படத்தோட ஹீரோ, டைரக்டார் பத்தி வேற எதுவும் சொல்லலியேன்னு நினைக்கற ஆளுங்க -->ங்க<-- போய் படிச்சிக்கோங்க. Torrent சுலபமா கிடைக்குது. வர்டா....


 இந்த நேரத்துல யாருப்பா மிஸ்டு கால் குடுக்கறது...
 

p.s. யூ ட்யூப்ல படத்தோட alternate கிளைமாக்ஸ் கீது. முடிஞ்சா அதையும் பாருங்க. கொஞ்சம் சுமார்தான்.

Wednesday, July 22, 2009

நாடோடிகளும் அரை ரத்த இளவரசனும்

நாடோடிகள்

நான் என்ன பெரிய விமர்சனம் எழுதறது. எனக்கு முன்னாடியே, பல நல்லவர்கள், படத்தை பார்த்து எழுதித் தள்ளிட்டாங்க, எனக்கு மிச்சம் வைக்காம. இது, எதை மாதிரியான படம்னு வரையறுக்க முடியலை. எந்த மாதிரி வேணாலும் புரிஞ்சிக்கலாம். வேறு வேறு விதமான நண்பர்களுக்குள்ள நடக்கும் கதையாகவும் பார்க்கலாம், வேறு வேறு விதமான தந்தைகளைப் பற்றிய படமாகவும் எடுத்துக்கலாம், வேறு வேறு பெண்களை/காதலிகளை/அம்மாக்களைப் பற்றிய படமாகவும் பார்க்கலாம்னு, இந்தப் படத்திற்கு, எக்கச்சக்க கோணங்கள். ஒரு தேவையில்லாத பாடலைத் தவிர (யக்கா யக்கா) படம் வேறு எங்கயுமே போர் அடிக்கல. திரைக்கதை அப்படி.

அருமையான ஒளிப்பதிவு, எடிட்டிங், வசனம், நடிப்புன்னு படம் நெடுக ஒரே positives மட்டுமே. இருந்தும் எனக்கு, மூன்று முறை பார்க்கும் போதும், கண்ணை உறுத்திய சில விஷயங்கள். முன்னமே சொன்னது போல அந்த யக்கா யக்கா பாடல். பாட்டும் சுமார்தான், அதில் ஒளிப்பதிவு, ரொம்பக் கீழ்த் தரம், நிறைய low angles. தேவையில்லாத திணிப்பு. சசிகுமாரின் amateur நடிப்பு. அவருக்கு ஹீரோ வேஷம் பொருந்தினாலும், பல இடங்களில் அவர் நடிக்கக் கஷ்டப்படுவது தெரிகிறது. மொக்கை பின்னணி இசை. அந்தக் கடத்தல் இடத்துல வரும் இசையைத் தவிர, வேற எங்கையும் பெருசா ஒட்டலை. பல இடங்களில், ஒரே இசையை மீண்டும் மீண்டும் போட்டு, வெறுப்பேத்தறாங்க.

மற்றபடி இது கன கச்சிதமான படம்.

இப்படி கை தூக்கினவங்க எல்லாம் என்ன ஆனாங்க தெரியுமா...

ஹாரி பாட்டர்

இது வரை வந்த ஹாரி பாட்டர் படங்கள்லேயே, இது தான் உன்னதமான படைப்புன்னு வந்த பல நூறு விமர்சனங்களை பார்த்து, வழக்கம் போல ஏமாறாம, என் எதிர்பார்ப்புகளை கொஞ்சம் கட்டுப்படுத்திக்கிட்டு, படம் பார்க்க போனேன். முதல் நாளே பார்க்கனும்னு இருந்தேன், ஆனா என்னை விட பல ஆர்வக் கோளாறுகள் இருந்ததால, அவங்க முந்திகிட்டாங்க. ஒரு வழியா நாலாவது நாள் நைட் ஷோ, சத்யம் தியேட்டர்ல, நடு சென்டர் ஸீட்டாப் பார்த்து புக் பண்ணேன்.

படம் பெருசா ஒண்ணும் ஏமாத்தலை. ஆனா புத்தகத்தை படிச்சவங்களுக்கு கொஞ்சம் ஏமாற்றமாகவே இருக்கும். நான் இந்தப் படத்தை தூற்றவும் இல்லை, போற்றவும் இல்லை. கிடைத்த 2.5 மணி நேரத்துல, முடிந்த வரை, பரபரப்பா கதை சொல்லிருக்காங்க. திரைக்கதை நல்ல வேகம். ஆனா, தேவையே இல்லாம, புத்தகத்துல இல்லாத ஒரு fight சீன் படத்துல இருக்கு. படத்துல சில பல இடங்கள், செம்ம humorous. நடிப்புன்னு பார்த்தா, இந்த படத்துல, dumbledore பாத்திரத்துல வர michael gambon நல்லா நடிச்சிருக்கார். daniel, படத்துல பெரிய வேலை ஒண்ணும் இல்லாம வரார். rupert grint நல்ல காமெடி நடிகரா வருவார்னு நினைக்கறேன். அவரோட reactions எல்லாம் செம்மக் காமெடி.

நம்ம emma watson, வழக்கம் போல நல்லாவே நடிச்சிருக்காங்க. அவங்க எதுக்கு நடிக்கணும். சும்மா வந்து நின்னா போதும். அட அட அட. அதுவும் RDX ஸ்க்ரீன்ல இன்னும் அழகா இருக்காங்க. alan rickman, tom felton, எல்லாருமே கிடைச்ச ஸ்க்ரீன் டைம்ல, நல்லா நடிச்சிருக்காங்க. படத்துக்கு முக்கியமான பலம், கிராபிக்ஸ், கேமரா & எடிட்டிங். எல்லாமே உச்சக்கட்டம். Almost, படத்தோட எல்லா காட்சியிலுமே கிராபிக்ஸ் இருக்கு. அதுவும் சிறந்த தரத்தோட. மொத்ததுல, படம் நல்ல பொழுதுபோக்கு. ஆனா, வந்த படங்கள்லேயே சூப்பர்னு எல்லாம் சொல்ல முடியாது. நான் புத்தகங்களை முன்னமே படிச்துனால இருக்கலாம்.

அடுத்த படத்தை நான் பெருசா ஒண்ணும் எதிர் பார்க்கலை. ஆனா, அடுத்த படத்துல நம்ம emma watsonku இன்னும் கொஞ்சம் ஸ்க்ரீன் டைம் கொடுத்தா நல்லா இருக்கும். மற்றபடி, இது, பாட்டர் படங்களில், மற்றுமொரு வெற்றிப் படம்.
படத்தை, சத்யம் தியேட்டர்ல மட்டும் பாருங்க.

இதப் பாரு. கிருஷ்ணா ரொம்ப நல்லவன்னு போட்டிருக்கு...

(பி.கு. இந்த அரை ரத்த இளவரசன் என்கிற மொழி மாற்றம், நான் முன்னமே யோசிச்சது. அதனால, நண்பர் lancelot ராயல்டி கேட்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன்)

Friday, January 2, 2009

முதல் multiple போஸ்ட்

NEWYEAR
ஜனவரி 1 பெரிய ஆர்பாட்டம் எதுவும் இல்லாம போச்சு. நான் ஆங்கில புத்தாண்டு கொண்டாடுற ஆள் இல்ல. வர wish எல்லாத்துக்கும், தேங்க்ஸ், நன்றி மட்டும் சொன்னேன். நான் விஷ் பண்ணல. இனிமே pseudo-seculara இருக்குற ஆளுங்க wish பண்ணா, பாலா அண்ணா மாதிரி, "Shame to U" சொல்லப்போறேன். எனக்கு ஒரு மாசம் ஆரம்பிக்கிறா மாதிரி தான் ஒரு வருடத்தோட ஆரம்பமும். எல்லாரும் கடந்த வருடத்துல, அவங்க செஞ்சத அசை போட ஆரம்பிச்சிருக்காங்க. எனக்கு எதுவும் தோணலை. போன வருஷம் பண்ண தப்புகளை, இந்த வருஷம் பண்ணக் கூடாதுன்னு நினைச்சிகிட்டு இருக்கேன். பார்க்கலாம்.

எந்திரன் ரிலீஸ் ஆவுமா??

ஹைதராபாத்
சும்மா ஓய்வு எடுக்க நான் இப்ப ஹைதராபாத்ல, என் பெரியம்மா வீட்ல இருக்கேன். தினமும் சாப்பிட்டு சாப்பிட்டு தூங்கறே. அவ்வளவே. இங்க "கிங்", "Neninthe" அப்பறம் "Polar express 3d" (in imax) பார்த்தேன். கிங் படம், தமிழ் விஜய் படங்களுக்கு போட்டி. செம்ம காமெடி. ஹீரோ ஆவேசமான டயலாக் பேசினாலும் எனக்கு சிப்பு வந்துருச்சு (எனக்கு தெலுங்கு நல்லா புரியும், கொஞ்சம் பேசுவேன்). அடுத்த படம் கனவு தொழிற்சாலை மாதிரி, சினிமா உலகத்தப் பற்றி சொல்ற படம். கொஞ்சம் மசாலா நெடியோட நல்ல இருந்துச்சு. Polar express பழைய படமா இருந்தாலும், imaxபாக்கனும்னு பார்த்தேன். நல்ல அனுபவம். ஸ்க்ரீன் ஒரு மாதிரி பெருசா, சதுரமா இருந்துச்சு. அந்த ஸ்க்ரீன்குசேலன் கூட நல்லா இருக்கும்னு தோணிச்சு. நம்ம ஊர்ல ஒண்ணு ஆரம்பிச்சா நல்லா இருக்கும்.
imax வாசல்ல

Harry Potter
இங்க படிக்கலாம்னு, HP பார்ட் 6 & 7 எடுத்துட்டு வந்தேன். கழுதை எத்தனை தடவ படிச்சாலும் போர் அடிக்கல. 7th பார்ட்ல நிறைய cinematic situations. இருந்தாலும் படிக்க நல்லா இருக்கு. குறிப்பா எனக்கு பிடிச்சது, 7th பார்ட்ல அந்த house-elf dobby இறந்து போகற இடம் & "King's Cross" chapter. Almost எல்லா கேள்விகளுக்கும் விளக்கம் குடுக்குற இடம். தசாவதாரம் டயலாக் மாதிரி, கடைசில கொஞ்சம் குழப்பவும் தவறாத chapter. ஆனா, சின்ன பசங்களுக்காக எழுதப்பட்டா மாதிரி இல்ல. நிறைய கொலைகள் + வன்முறை. ஏதோ நீதி சொல்ற மாதிரி இருந்தாலும், கடைசில மனசுல நிக்கறது என்னமோ அந்த adventuresதான். முடிஞ்சா படிச்சு பாருங்க.

கன்னித்தீவு எப்படி இருக்கும்???


ok, ippatiki idhi chaalu. சென்னை reach aina tharavaathaa, malli meet audhaam.
எப்படி நம்ம தெலுங்கு?? புரியலன்னா, பக்கத்துல தெலுங்கு தெரிஞ்ச யாரையாவது கேளுங்க.... vartaa....

Saturday, November 15, 2008

வாரணம் ஆயிரம் = ஆட்டோகிராப் + தவமிருந்து

இந்த வருஷத்த "ரொம்ப எதிர்பார்த்தா ஏமாந்து போய்டுவீங்க" வருஷம்னு கொண்டாடலாம் OR "தமிழ் சினிமா ரசிகர்கள் பல்பு வாங்கின வருடம்"னு கொண்டாடலாம். பீமா, குருவி, குசேலன், ஏகன் வரிசைல அடுத்து வாரணம் ஆயிரம். நேத்து (nov 14) இந்த படத்த, கமலா தியேட்டர்ல என் அண்ணாத்த + his friends கூட பாத்தேன்.. தியேட்டர்ல sound effect நல்ல இருந்துச்சு. A/C off பண்ணிட்டு fan போட்டது நல்லா technique.

கதைனு பெருசா ஒன்னும் இல்ல. ராணுவத்துல வேலை செய்யற (ஒரு rescue operationku helicopeterla பயணம் பண்ணிக்கிட்டு இருக்குற) ஜூனியர் சூர்யாவுக்கு அவர் அப்பா (சீனியர்) சூர்யா இறந்துட்டார்னு தகவல் வருது. கண்ணீரோட தன் அப்பாவ பற்றிய நினைவுகள அசை போடுறார் ஜூனியர் சூர்யா. இந்த படத்த நிஜமாவே முழு நீ............ள...... படம்னு சொல்லலாம். மொத்தம் மூணு மணி நேரம்.

கதைய பத்தி சொல்றத விட்டுட்டு, மத்த விஷயங்கள சொல்றேன். மொத்த படமும் சூர்யா தான். சூப்பரா நடிச்சிருக்காரு. குறிப்பிட்டு சொல்லனும்னா, அப்பாவா வர எல்லா காட்சிகளும் and மகனா வரும்போது, போன்ல அழுதுகிட்டே தன் காதலிய பற்றி சொல்லும்போது + drugs addict ஆனா அப்பறம் தன் அப்பா அம்மாகிட்ட கெஞ்சும்போது and trainla first time சமீராரெட்டிய பாக்கும்போது.

அடுத்து யாரு நல்லா நடிச்சிருக்காங்கன்னு பார்த்தா, சிம்ரன். வயசு உணர்ந்து [;)] நடிச்சிருக்காங்க. Exacta சொல்லனும்னா முதிர்ந்த நடிப்பு. யாருமே over the topனு சொல்றா மாதிரி இல்ல. எல்லாருமே நல்லா பண்ணிருக்காங்க. படத்துக்கு தேவையில்லாத விஷயம்னு பார்த்தா நிறைய இருக்கு.. First half நல்லா இருக்கு. But second half எங்கெங்கயோ போகுது.

படத்துல வர ரெண்டு resue operation, ரொம்ப நீளமா இருக்கு. கடைசில அப்பா கேரக்டர் இறந்த அப்பறம் டக்குனு படத்த முடிப்பாங்கனு பார்த்தா, அதுக்கு அப்பறமும் ஒரு பெரிய action sequence. தியேட்டர்ல பல பேர் பொறுமையே இல்லாம கமெண்ட்ஸ் அடிச்சிகிட்டே இருந்தாங்க.படத்துல நிறைகள்னு பார்க்கும்போது ஒளிப்பதிவு, Realistic சண்டை காட்சிகள் and superb songs. எல்லா பாட்டுமே semma choreo + picturisation. Especially ஏத்தி ஏத்தி and அஞ்சல songs. அனல் மேலே பாட்டு மட்டும் நம்ம பொறுமைய சோதிக்குது.

Double action காட்சிகள் எல்லாமே, excellentaa shoot பண்ணிருக்காங்க. நல்லா இருக்கு. அந்த கால சென்னைய ரொம்பவே அக்கறை எடுத்து காட்டிருக்காங்க. படத்துக்கு இசை ஹாரிஸ் இளையராஜ்னு சொல்ற அளவுக்கு, படத்துல நிறைய pop-culture reference. இளையராஜாவா ரொம்ப பெருமைபடுத்திருக்காரு கௌதம். ஆனா இந்த படத்துக்கு இவ்ளோ நீளம் தேவையான்னு தெரியல. Post-interval, theatre முழுக்க எக்கச்சக்க கொட்டாவீஸ் அண்ட் நிறைய கமெண்ட்ஸ்.

பாட்டு மட்டும் இல்லனா ரொம்பவே போர் அடிச்சிருக்கும். படம் ரிலீஸ் முன்னாடியே டைரக்டர், இந்த படம் தவமாய் தவமிருந்து மாதிரி இருக்கும். சேரன் எனக்கு ரொம்ப புடிச்ச டைரக்டர்னு எல்லாம் alibi create பண்ணிகிட்டாறு. அதுக்காக அதே type of narration வெச்சு பண்ணிருக்க வேண்டாம். த.தவமிருந்து மட்டுமில்ல, ஆட்டோகிராப், 7gனு பல படங்களோட பாதிப்பு தெரியுது.

படம் முடிஞ்ச அப்பறம், படத்த, கௌதம், அவரோட அப்பாவுக்கு dedicate பண்றாரு. அது ஏன் மத்தவங்க காசுல எடுத்த படத்த, தன்னோட அப்பாவுக்கு dedicate பண்றாருனு தெரியல. கடைசில போனா போகுதுன்னு படத்தோட தலைப்புக்கான அர்த்தத்த, வாரணம் ஆயிரம்னு தொடங்குற திருப்பாவை பாசுரத்த வெச்சு சொல்லிகிறாங்க.

Overall, இசைக்காகவும், சூர்யாவோட உழைப்புக்காகவும், நடிப்புக்காகவும் படத்த பார்க்கலாம். மத்தபடி எல்லாம் average. கடவுள்தான் படத்த காப்பாத்தனும்...


http://im.sify.com/sifycmsimg/nov2007/Entertainment/Movies/Tamil/14568385_vaaranam7a.jpg
இனிமே நீங்கதான் mujik போடுவீங்களா???

Wednesday, October 1, 2008

SeveN - The movie that makes you sick

சில படங்கள் பாக்கும்போது, " ஆஹா, செம்ம படம்யா.. கட்டயாம் இன்னொரு தடவ பாக்கணும்" (சரோஜா) , அப்படின்னு தோணும். சில படங்கள் பாக்கும்போது, "சீ, இதெல்லாம் ஒரு படமா" (குருவி) , அப்படின்னு தோணும். ஆனா குறிப்பிட்ட சில படங்கள் பாக்கும்போது, படம் நல்லா இருந்தாலும், "இத ஏன் பாத்து தொலைச்சோம்னு"(சேது) இருக்கும். அப்படிப்பட்ட ஒரு படத்த பாத்து தொலைச்சேன்...

படம் - Seven (ஆங்கிலம்-1995)
நடிப்பு - Brad pitt, Morgan Freeman & Kevin Spacey..
இயக்கம் - David Fincher (Fight Club புகழ்)

இந்த படத்த நான் பார்க்க காரணம், டைரக்டர் ஷங்கர். ஏன்னா, அவர் எடுத்த அந்நியன் படம் இதோட தழுவல் தான். விஷயம் கேள்விப்பட்ட நிமிஷமே, டவுன்லோட் பண்ணேன் (oct-2006), ஆனா அப்ப எனக்கு ஒரு accident நடந்ததுனால என்னால பார்க்க முடியல. So, போன மாசத்துல ஒருநாள் திடீர்னு ஞாபகம் வந்து, இன்னொரு தடவ டவுன்லோட் செஞ்சு - பாத்தேன்.

கதை சுருக்கம்: பெயர் தெரியாத ஒரு நகரத்துல, யாரோ ஒரு ஆள், ரொம்ப விகாரமான முறைல கொலைகள் செய்யறான். ஒவ்வொரு கொலை நடந்த இடத்துலயும், "GREED", "GLUTTONY" அப்படின்னு (Seven deadly sins) எழுதிட்டு வரான். இந்த கொலைகள விசாரணை செய்யற detectives brad pitt and Morgan Freeman. இவங்க ரெண்டு பேரும் சேர்ந்து எப்படி கொலையாளிய புடிக்கராங்கனு, ரொம்ப நிதானமா, அறை வெளிச்சத்துல/இருட்டுல சொல்லிருக்காங்க..

படத்தை பற்றி: First 1 hour ரொம்ப மெதுவா போகுது. படம் ஆரம்பிச்ச 1 hour கழிச்சு வர chasing சீனுக்கு அப்பறம்தான் படம் சூடு புடிக்குது. அனுபவமுள்ள போலீஸ் அதிகாரியா வர Morgan Freeman நடிப்பு அருமை (ஒவ்வொரு அசைவுலையும்). brad pitt நடிப்பு கொஞ்சம் மொக்கை தான், இருந்தாலும் ஒரு துடிப்புள்ள புது போலீஸ் officer வேஷம் அவருக்கு நல்லாவே பொருந்துது. கடைசி 30 nimidangal மட்டுமே வந்தாலும், Kevin Spacey நல்லா பண்ணிருக்காரு. ஒவ்வொரு கொலைய சித்தரிச்ச விதம் அருமை. ஆனா அந்த இடங்கள்ல நமக்கு தான் கொஞ்சம் stomach upset ஆவுது...

படம் முழுக்க டைரக்டர் ஒரு அழுக்கு லுக் + dim lighting maintain பண்றாரு.. படம் பார்க்கும்போது இந்த lighting தான் ரசிகர்கள படத்துல ஆழ்த்துது.. படம் முடிஞ்ச அப்பறம் ஒரு மாதிரி பேஜாரா கீது...கொஞ்ச நேரம் கழிச்சு யோசிச்சா, "சொல்ல வந்த விஷயத்த ரொம்ப அழுத்தம் இல்லாம சொல்லிருக்காங்க, மனசுல அவ்வளவா பதியல", அப்படின்னு தோணுது.. பொதுவாகவே எனக்கு இத மாதிரி படங்கள் அவ்வளவா புடிக்காது.. இது போல இருக்குற படங்கள நான் "sick movies"னு சொல்றது வழக்கம்.. இந்த வகையறாக்களே நல்லா படமாகவும் இருக்கறது உண்டு (saw, Seven, sin city, etc...), மோசமான படமாகவும் இருக்கறது உண்டு (hostel, wolf creek, final destination2, etc...)

படம் பாக்கறது பொழுது போக்குக்காக. அதுலயும் கொலை, கொள்ளை, சாவு, ரத்தம் மாதிரி விஷயங்கள் இருக்கும் போதுதான் கொஞ்சம் புடிக்காம போய்டுது.. எனக்கு எப்பவுமே happy ending கதை தான் புடிக்கும். இந்த Seven படத்த நம்ம ஊரு அந்நியன் கூட ஒப்பிடும்போது, அந்நியன் எவ்வளவோ betterனு படுது. ரொம்பவே சுவாரசியமா, ஜனரஞ்சகமா எடுத்துருக்காரு ஷங்கர். இந்த ரெண்டு படங்களுக்கும் இருக்குற ஒரே ஒற்றுமை, கொலையாளிகள், மத கோட்பாடுகள
அடிப்படையா வெச்சு கொலை செய்யராங்கங்கறது மட்டுமே...

Seven படத்த எழுதிய Kevin walker, ஒரு பேட்டியில சொல்லிருக்காரு, அவர் நியூயார்க் நகரத்துல தங்கிருக்கும்போதுதான் இந்த படத்துக்கான கதை கரு தோணிச்சாம். அந்த நகரத்து மேலயும், அதன் மக்கள் மேலயும் இருந்த வெறுப்புலதான் இத எழுதினாராம்.. அவர் வார்த்தைகள்ல சொல்லனும்னா,

"I didn't like my time in New York, but it's true that if I hadn't lived there I probably wouldn't have written Seven.i wanted to show a city that is dirty, violent, polluted, often depressing. Visually and stylistically, that's how we wanted to portray this world. Everything needed to be as authentic and raw as possible.We created a setting that reflects the moral decay of the people in it,Everything is falling apart, and nothing is working properly"...

இதமாதிரி தான் ஷங்கரும் நெனச்சிருப்பாரோ??.. Seven படத்துக்கு ஒரு பெஸ்ட் editing ஆஸ்கார் விருதும் குடுத்திருக்காங்க... நல்ல ஒளிப்பதிவுக்காகவும், நடிப்புகாகவும் இந்த படத்த கட்டாயம் பாக்கலாம்.. மேலும் விவரங்களுக்கு கீழ இருக்குற linka கிளிக்குங்க...

--- படத்தை பற்றி

--- அவுங்க ஊரு விமர்சனம்

http://www.moviefreak.com/dvd/images/seven6.jpg
அகூன் பதம், அன்பு இதம், காதல் சுகம், ah .....