Showing posts with label Night show. Show all posts
Showing posts with label Night show. Show all posts

Tuesday, April 3, 2012

3

கொலைவெறி இவ்வளவு பெரிய ஹிட்டானவுடனே எல்லாருக்குமே படம் சுமாராதான் இருக்கும்னு ஒரு பொதுப்படையான அபிப்ராயம் வந்துடுச்சு. இருந்தாலும் படத்துக்கு ஒரு ஒப்பனிங் வந்துதுக்கு காரணம்னு நான் நினைக்கரது, கொலைவெறியத் தாண்டி, மத்த பாடல்களும் நல்லா இருந்து ஹிட்டானதுனால, தனுஷோட நடிப்பு எப்படி இருக்கும்னு  பார்க்க , முக்கியமா ஐஸ்வர்யா தனுஷ் என்ன பண்ணிருக்காங்கன்னு பார்க்க. இதையெல்லாம் எதிர்பார்த்து வந்த மக்கள், முக்கியமான கடைசி மேட்டர்ல ஏமாந்துட்டாங்கன்னே சொல்லணும். செல்வராகவன் எழுதிகொடுத்த கதைய, தனுஷ் டைரக்ட் பண்ணி, ஐஸ்வர்யா பேர் மட்டும் போட்டுகிட்டாங்களோன்னு பலபேருக்கு சந்தேகம் வருது.

எனக்குத் தெரிஞ்ச படத்தோட ப்ளஸ், தனுஷோட அனாயாசமான நடிப்பு. பழக்கப்பட்ட கேரக்டர்ல நடிக்க வெச்சதால, பின்னிட்டாருன்னு நினைக்கறேன். அடுத்து இசை + பின்னணி இசை. பின்பாதில பல இடங்கள்ள ரெண்டு மூணு பீஸை திரும்ப திரும்ப வாசிச்சாலும், போர் அடிக்காம செட் ஆகிருக்கு. அனிருத் அடுத்த படத்துல என்ன பண்ணுவாருன்னு எதிர்பார்க்கறேன். முதல் பாதி ஸ்கூல் காட்சிகள். அதுல வர சிவ கார்திகேயனோட பன்ச், ரெண்டாவது பாதில நண்பனா வர சுந்தரோட பாத்திரம்.  தனுஷ், ஸ்ருதி ரொமான்ஸ். இப்படி சில விஷயங்கள சொல்லலாம்.

மைனஸ், மெதுவா நகர்ற திரைக்கதை, சுவாரசியமில்லாத ரெண்டாவது பாதி, பைபோலர் டிஸ்ஆர்டர்னு சொல்லிட்ட அப்பறமா, அதை வெச்சே கடைசி முக்கால் மணி நேரத்தை ஓட்றது,  ஈசியா சொல்லி புரியவேச்சிருக்கலாமேனு எல்லாருமே கேள்வி கேட்கற லாஜிக் ஓட்டை. அவருக்கு எதனால, எங்க அந்த பிரச்சனை ஆரம்பிச்சுது, அந்த சாமியார், குழந்தை உருவங்கள் யாருன்னு நிறைய கேள்விகளுக்கு விடை இல்ல. பெரிய மனசு பண்ணி, முதல் படத்துக்கு பரவால்லைன்னு சொல்ற பக்குவம் எனக்கில்ல. எல்லாரையும் அழகா ஆழ வெச்சிருக்க வேண்டிய வாய்ப்பை மிஸ் பண்ணி அழ வெச்சிட்டாங்க ஐஸ்வர்யா. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.

பி.கு - ஸ்ருதிஹாசன் ஏழாம் அறிவு படத்தைவிட இதுல நல்லாவே நடிச்சிருக்காங்க and தனுஷுக்கு இன்னொரு தேசிய விருது கிடச்சிருமோ. அந்த கிளைமாக்ஸ் நடிப்பு, சான்ஸே இல்ல.

பி.கு 2 - படம் பார்த்த அப்பறம், கண்ணழகா பாட்டு இன்னும் நல்லா இருக்கு

பி.கு 3 - சங்கம் தியேட்டருக்கு எதிரா கேஸ் போடலாம்னு இருக்கேன். டயலாக் ஒரு எழவும் சரியா காதுல விழல. சில காட்சிகள் கட் வேற பண்ணிட்டாங்க. தேவில பார்த்த அப்பறம்தான் விமர்சனமா போஸ்டனும்னு இப்போ போஸ்ட் பண்றேன். தேவி தியேட்டர் சவுண்டை அடிச்சிக்க முடியாது. சங்கம் தியேட்டர் ஆளுங்கள புடிச்சு ஜெயில்ல போடுங்க சார். 

Sunday, September 18, 2011

எங்கேயும் எப்போதும் - ப.வி

பொதுவா எனக்கு இந்த மாதிரி படங்கள் பிடிக்கறதில்லை. பொழுதுபோக்குக்கு படம் பார்க்க போய், எதுக்கு பாரமான மனசோட வெளிய வரனும்னு ஒரு எண்ணம். எங்கேயும் எப்போதும் அப்படி ஒரு படம்தான். நம்ம முகத்துல அறையரா மாதிரியான மெசேஜ் ஆனா எங்கேயும், யாரையும் அட்வைஸ் டயலாக் பேச விடலை. ஜெய், அஞ்சலி, அனன்யா, ஷர்வானந்த் + படத்துல ஒண்ணு ரெண்டு சீன்ல வர நடிகர்கள் கூட நல்லா நடிச்சிருக்காங்க. சூப்பரான காமெரா, எடிட்டிங். இசை படத்தோட மிகப்பெரிய பலம். அந்த விபத்து காட்சி, ஆடியன்ஸுக்கு தேவையான தாக்கத்தைவிட அதிகமாவே கொடுத்துருக்கு. ஸ்டண்ட் சூப்பர் சுப்பராயன்னு நினைக்கறேன். அசத்திட்டீங்க சார்.

ஆனா படத்துக்கு எப்படி U கொடுத்தாங்கன்னு தெரியலை. கண்டிப்பா சின்ன பசங்களும், இளகிய மனசுக்காரங்களும் பார்க்காதீங்க. ரெண்டு சிம்பிளான காதல் கதைகள், அதை நகைச்சுவையோட சொல்லிருக்கற விதம், நிஜமாவே ஒரு விபத்தை பார்க்கறா மாதிரி / விபத்துல இருக்கறா மாதிரி நடக்கற விபத்து, இப்படி, டைரக்டரோட திறமை படத்துல எங்கேயும் எப்பவும் தெரியுது. கண்டிப்பா பாருங்கனு சொல்ல மாட்டேன், ஆனா கண்டிப்பா பார்க்கலாம். படம் பார்த்து முடிச்சிட்டு, இனிமே பஸ்ல போக போகனுமான்னு நினைச்சீங்கன்னா, அதான் டைரக்டரோட வெற்றி. வாழ்த்துக்கள் சரவணன் சார். இப்படி ஒரு படத்தை எடுக்க முன்வந்ததுக்கு, Hats off முருகதாஸ் + ஃபாக்ஸ் ஸ்டார். 

p.s. - அந்த accident scene, final destination படத்தை நியாபகப்படுத்தினாலும், இன்னும் சிறப்பா எடுத்திருந்தா, இதைவிட பெரிய தாக்கம் ஏற்பட்டிருக்கும். ஆனாலும், நம்ம ஊருக்கு, இந்த மாதிரி படம், ரொம்ப ரொம்ப புதுசு..

Saturday, September 17, 2011

வந்தான் வென்றான் - ப.வி

மங்காத்தா படம் எதனால ஓடுதுன்னே தெரியலைன்னு சொல்றவங்க, தயவு செஞ்சு வந்தான் வென்றான் படத்தைப் பாருங்க, தெரியும். என்னடா முதல் நாளே படம் ஃபுல் ஆகலியேன்னு நினைச்சேன். செய்தி முன்னாடியே பரவி, எல்லாரும் உஷார் ஆகிட்டாங்க போல. உள்ள நுழையும்போதே சில யூத் வார்னிங் பண்ணாங்க. ஆனா என் கிரகம். போய் மாட்டிகிட்டேன். படம் முடிய 30நிமிஷம் இருக்கும்போதே, நிறைய பேர் கிளம்பிட்டாங்க. அவ்வளவு மொக்கை. இல்லை இல்லை, மொக்கைங்கற வார்த்தை கரெக்டா விஷயத்தை கன்வே பண்ணலை. வேற வார்த்தை இருந்தா சொல்லுங்க.

எந்த விஷயத்தைப் பார்த்து இந்த படத்தை ஜீவா ஒத்துகிட்டாருனு தெரியலை. அவருக்கு பெருசா ஒண்ணும் ஸ்கோப் இல்லை. டம்மி. சந்தானமும் இந்த முறை சல்பெடுக்கலை. (அந்த குரல் மாத்தி பேசற காமெடி மட்டும் பரவாயில்லை). டாப்ஸி, டோண்ட் ஸீ. நந்தா படம் முழுக்க ஒரே ரியாக்‌ஷன். வேதநாயகம்னா, ஸாரி ஸாரி, ரமணாணா, பயம். எனக்கு வயத்த வலி, இந்த ரெண்டு டயலாகையும் ஒரே மாடுலேஷன்ல சொல்றாரு. தமனோட இசையும், படத்துல பெரிய நசைதான். ஆக மொத்ததில், இதற்கு மேல் எப்படி கழுவி ஊற்றுவது என்று தெரியவில்லை. விழித்துக்கொள்ளுங்கள் மக்களே. ஜீவாவின் கோ படத்தை மறந்து, அதற்கு முன் நடித்த, சிங்கம் புலி, கச்சேரி ஆரம்பம், தெனவட்டு ஆகிய படங்களை, நினைவு கூறுமாறு, தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

ஒரே ஒரு வருத்தம்தான், இந்த படத்துக்காக, சொட்ட சொட்ட மழைல நனைஞ்சிகிட்டு போனேன். என்னை மாதிரியே நிறைய பேர் ஈரமான மனசோட வந்திருந்தாங்க. படம் முடிஞ்ச அப்பறம்தான் தெரிஞ்சுது, எங்களை பலி கொடுக்க, ஆண்டவனே குளிப்பாட்டிருக்கான்னு. முடியலடா முருகா....

Saturday, July 9, 2011

வேங்கை - ப.வி

வழக்கமான ஹரியின் படம். இதைச் சொல்லி சொல்லியே போர் அடிக்குது. ஏய், நான் இப்படித்தான், என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோனு, எல்லாருக்கும் சவால் விட்டிருக்காரு ஹரி. ஆரண்ய காண்டம் பார்த்த கண்ணோட, மூளையோட, மனசோட இந்த படத்தை பாத்தீங்கன்னா,  சத்தியமா பிடிக்காது. நான் எதையும் எதிர்பார்க்கல, ஜாலியா என்ஜாய் பண்ணிட்டு வந்தேன். ரெண்டரை மணி நேரம், எனக்கும் என் நண்பனுக்கும் நல்லா பொழுது போச்சு.

தனுஷ், தன்னால முடிஞ்ச வரைக்கும் அந்த கேரக்டருக்கு ஜஸ்டிஃபை பண்ண முயற்சி பண்றாரு. மத்தபடி, எல்லா ஹரி படத்துலையும் வர கதாபாத்திரங்கள், அங்க இங்க கொஞ்சம் இடம் மாறி இருக்கு. அவ்வளவே. பிரகாஷ்ராஜ் இந்த படத்துக்காக தனியா நடிச்சாரா இல்லை, சிங்கம் படம் எடுக்கும்போதே சேர்த்து ஷூட் பண்ணிட்டாங்களான்னு தெரியலை. தமன்னா இல்லாம, வேற யாராவது நடிச்சிருந்தாலும் நல்லா இருந்திருக்கும். தமன்னா நண்பியும், தனுஷோட தங்கையும், நல்லா இருக்காங்க.. ஹி ஹி... இசை ஓகே.

மறுபடியும் சொல்றேன், இவர் இப்படிதான்னு தெரிஞ்சுகிட்டே எதையும் எதிர்பார்க்காம படம் பாருங்க, நிச்சயம் நல்ல டைம் பாஸ். நாம சுறாவையே தாங்கின இதயங்களாச்சே. வேங்கையெல்லாம் வெங்காயம் சாப்பிடறா மாதிரி :) எப்படி நம்ம ஹரி ஸ்டைல் பன்ச். அப்பறம் சந்திப்போமா. ஆனா இப்படியே போனா, அடுத்த ஹரி படத்தோட விமர்சனம் ரெண்டு வார்த்தைதான் இருக்கும். “ஹரி படம்”

யோவ், இது சாமி படத்துல யூஸ் பண்ணதாம், புதுசா ஒண்ணு வாங்குங்கயா..

Sunday, June 19, 2011

அவன் இவன் - ப.வி

”அவனப் பத்தி நான் பாடப்போறேன்,
இவனப் பத்தி நான் பாடப்போறேன்.
அவனும் சரியில்லை, இவனும்தான் சரியில்லை,
 யாரப்பத்தி நான் பாடப்போறேன்”

படம் பாத்துட்டு, பாடலாசிரியரும், இசையமைப்பாளரும் போட்ட பாட்டு தான் இது. இதை விட இரத்தின சுருக்கமா இந்த படத்தைப் பத்தி சொல்லமுடியாது. உயிரக்கொடுத்து நடிச்சிருக்குற விஷாலும், ஜி.எம். குமாரும், வேற ஒரு நல்ல படத்துக்கு இந்த உழைப்பை தந்திருக்கலாம். எனக்கு தெரிஞ்சு, இந்தப் படத்துக்காக மட்டும்தான், பாலா, தியேட்டர்ல நிறைய திட்டு வாங்கிருக்காரு. வழக்கமான ஒரு ”பாலா கிளைமாக்ஸ” யோசிச்சிட்டு, அதை சுத்தி ஒரு படம் பண்ணிருக்காரு. ஒண்ணே முக்கால் மணி நேரம், படத்துல என்ன நடக்குதுன்னே புரியலை. யுவனின் இசையும் பெருசா சொல்லிக்கறா மாதிரி இல்லை.

இன்னும் பாலா தந்த அதிர்ச்சி என்னை விட்டு போகலை. விடுங்க, இதுக்கு மேல டைப் பண்ணா, மரியாதை குறைவா எதாவது சொல்லிடுவேன். விஷால், குமாரைத் தாண்டி படத்துல கவனிக்க வைக்கற ரெண்டு பேர், அந்த குண்டு பையனும், அம்பிகாவும். மத்தபடி, பாலாவை நம்பின விஷால், ஜி.எம்.குமார் + என்னை மாதிரி கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு,  பாலா, பெரிய நம்பிக்கைத் திரோகம் பண்ணிட்டாருனு தோணுது. போங்கய்யா, போய் புள்ளைகுட்டிங்களை படிக்க வைங்க, வந்துட்டாங்க, அவன் இவன்னு. !@#$%^*

Sunday, May 8, 2011

எங்கேயும் காதல் - ப.வி

சனிக்கிழமை நைட் படத்துக்கு புக் பண்ணிருந்தேன். அதனால, வெள்ளிக்கிழமைலேர்ந்தே படத்துக்கு பாதகமான விமர்சனம் வர ஆரம்பிச்சு, எல்லாத்துக்கும் ரெடி ஆகிட்டுதான் படத்துக்கு போனேன். சும்மா சொல்லகூடாது, செதுக்கு செதுக்கனு செதுக்கிருக்காரு டைரக்டர் பிரபுதேவா. கதையும் காணோம், திரைக்கதையும் காணோம். படத்துல வர சுமன் மாதிரி, டிடெக்டிவ் வெச்சு தேடினாலும், திரைக்கதைங்கற அம்சம் கிடைக்காது. ரெண்டு மணி நேர மியூசிக் வீடியோல, பாட்டுக்கு நடுவுல சீன் வெச்சா மாதிரி படா டமாஷு.

ஜெயம் ரவி, டைரக்டர் சொன்னதை செஞ்சிருக்காரு. நல்லா டான்ஸ் ஆடறாரு. ஹன்ஸிகா ஒரு தினுசா இருக்காங்க. கொஞ்சம் ஓவர் ஆக்‌ஷன் வருது. ஆனா சாதரணமா நடிக்க வரலை. சுமன் ஒகே. ராஜூ சுந்தரம் கடுப்பேத்தறாரு. படத்துல ப்ளஸ், படம் ரெண்டே மணி நேரம், அமர்க்களமான கேமரா, லொகேஷன், நாங்கை பாட்டு படமாக்கப்பட்ட விதம். வெள்ளைக்காரங்க தமிழ்ல் லிப் மூவ்மெண்ட் கொடுக்கும்போது, புல்லரிக்குது. ஹன்ஸிகாவுக்கே நிறைய இடங்கள்ல sync ஆகலை. என்னடா கடைசியா பார்த்த ரெண்டு படமும் மொக்கையா இல்லையேனு, நானும் ரமேஷ் அண்ணாவும், எங்களுக்கே கண்ணு வெச்சுகிட்டதுனாலதான், இந்தப் படம் இப்படினு நினைக்கறேன். எங்கேயும் காதல், வெங்காயம் மாதிரி. உரிக்க உரிக்க ஒண்ணும் இல்லை.
நன்றி ரமேஷ் அண்ணா...

Sunday, May 1, 2011

வானம் - ப.வி

படத்தோட டைட்டிலை படிக்கும்போதே, நிறைய பேர் ’வேணாம்’னுதான் படிக்கறாங்க. அவ்வளவு மோசமான படமில்லை. ஆனா சூப்பர் படமும் இல்லை. ஒரே நேரத்துல நாலு பேரலல் கதைகளை சொல்றது தமிழ் சினிமாவுக்கு புதுசுதான், ஆனாலும் இன்னமும் கொஞ்சம் சிரத்தை எடுத்து சுவாரசியமா சொல்லிருக்கலாம். இடைவேளை வரை, என்ன சொல்லவராங்கன்னே பிடிபடலை. அனுஷ்காவோட கதைய, தெலுங்குலேர்ந்து அப்படியே டப்பிருக்காங்க, கொஞ்சம் கூட ஒட்டலை. நல்லா இருந்த பாடல்களோட காட்சிகளும், சொதப்பல் ரகம்தான். சில பாடல்கள் தேவையே இல்லை.

படத்துல ஹைலைட், வழக்கம்போல சந்தானம் காமெடி, முக்கியமா சில இடங்கள்ல சிம்புவோட நடிப்பு, சரண்யா + அந்த தாத்தா நடிப்பு. ஒரு மத-நல்லிணக்க மெசேஜ சுத்தி கதையா, இல்லை, நாலு கதைக்கும் ஒரே கிளைமாக்ஸா இப்படி ஒரு மெசேஜ் சொல்லி முடிக்க வந்தாங்களான்னு, பத்து கெட்டெப் தசாவதாரம் மாதிரி ஒண்ணும் புரியலை. மெசேஜும், சுதந்திர தினத்துக்கு போடற ஸ்கூல் டிராமா மாதிரி இருந்துச்சு. ரொம்ப மேலோட்டமான, அரைவேக்காட்டுத்தனமான மெசேஜ். யாருமே பார்க்ககூடாத, மொக்கை படமில்லை. பட், இன்னும் கூட நல்லா இருந்திருக்கலாம். முடிஞ்சா பாருங்க.

பி.கு - போன பதிவுல, தேவி தியேட்டர்ல சவுண்டு நல்லா இல்லைனு எழுதிருந்தேன். ஆனா, வானம் படம் பாரடைஸ்ல பார்த்தேன். சவுண்டு வழக்கம் போல சூப்பர். கோ படத்துல தான் ஏதோ பிரச்சனையோ??

Monday, April 25, 2011

கோ - ப.வி

சாதரணமா கேட்கும்போது நம்ப முடியாத கதையா இருக்கறத, நம்பறா மாதிரி, கொஞ்சம் மசாலா தூவி எடுத்திருக்காங்க. ரொம்ப தோண்டினா, முதல் பாதி கொஞ்சம் நீளம், தேவையில்லாத வெண்பனி, அமளி துமளி பாடல்கள் மாதிரி சில குறைகள் தெரியலாம். ஆனா, ரெண்டே முக்கால் மணி நேரமுமே நல்ல எண்டெர்டெயின்மெண்ட். ஜீவா, அஜ்மல், (கொஞ்ச நேரமே வந்தாலும் பிரகாஷ்ராஜ்,) அந்த எடிட்டர், பியா, சிறகுகள் அணி, இப்படி எல்லாருமே கச்சிதமா நடிச்சிருக்காங்க. ஹீரோயின் கார்த்திகாவை தவிர. பாவம் நடிக்கவும் வரலை, அவ்வளவு சூப்பராவும் இல்லை. ஓவர் மேக்கப். அயன் மாதிரியே, இதுலையும், விட்டு போன குட்டி குட்டி டீடெய்ல்ஸை, ஃப்ளாஷ்பாக்ல சொல்றது, டெக்னாலஜிய யூஸ் பண்றதுனு சில விஷயங்கள் இருக்கு. நல்ல திருப்பங்களோட, வசனங்களோட சுறுசுறுப்பான படம். கண்டிப்பா பாருங்க. மிஸ் பண்ணாதீங்க.

எப்பவும் தேவி தியேட்டர்ல சவுண்டு சும்மா பட்டைய கிளப்பும். ஆனா, கோ பார்க்கும்போது ரொம்ப மோசமா இருந்துச்சு. முக்கியமா பாட்டும், பிண்ணனியும் ஒழுங்கா sync ஆகாம, செம்ம கடுப்பு. யார் கண் பட்டுதோ. வேற தியேட்டர்ல பாருங்க.

Monday, January 17, 2011

ஆடுகளம்

வந்த பொங்கல் படங்களில் odd one out. முழுக்க கமெர்ஷியல் படம்னும் சொல்ல முடியலை. அவார்டு படம்னும் சொல்ல முடியலை. நல்லா இருந்துச்சா இல்லையான்னு கேட்டா, கண்டிப்பா நல்லா இருந்துச்சு. ரொம்பவே தரமான படம். ஆனா, படம் பார்த்து முடிச்ச அப்பறம் ஏதோ ஒண்ணு நெருடுது. என்னான்னு சொல்லத் தெரியலை. திரைக்கு முன்னால, பின்னால, எல்லா விஷயமுமே ரொம்ப நல்லா இருக்கு. ஜெயபாலன், தனுஷ், கிஷோர், தப்சி எல்லாருமே சிறப்பா நடிச்சிருக்காங்க. ராதாரவி + சமுத்திரக்கனியோட டப்பிங் அருமையா இருக்கு. புதுசான ஒரு களத்தை காமிச்சு, நம்மை அதுல ஒன்ற வெச்சதுலையே டைரக்டர் பாதி ஜெயிச்சுட்டார். செவல் சண்டைகள் கிராபிக்ஸ் பல இடங்கள்ள கண்டுபிடிக்க முடியலை. நிறைய விஷயங்களை ரொம்ப டீடெய்லா காமிச்சது, டைரக்டரோட ஸின்சியாரிட்டிய காமிக்குது. ஆனாலும், முதல் பாதியோட momentum, ரெண்டாம் பாதில குறைஞ்சிடுது.


ஹீரோவோட அம்மா இறந்ததால மட்டுமே ஹீரோயின் காதலிக்கறாங்கன்னு நம்ப முடியலை. பேட்டைக்கரரோட கதாபாத்திரம், படத்தோட ஆரம்பத்துல ரொம்ப பக்குவமா நடந்துக்கராமாதிரி காமிச்சிட்டு, பிற்பாதில, பொறாமையோட திரியாருன்னு காமிச்சது, அப்படி இருந்தவரே பொறாமைல இப்படி ஆகிட்டாருன்னு உணர்த்தவானு தெரியலை. ரொம்பவே இயல்பான வசனங்கள், காட்சியமைப்பு, ரொம்ப நாள் கழிச்சு ஒரு புத்திசாலி ஹீரோயின் கதாபாத்திரம்னு படத்துல நிறைய ப்ளஸ்தான். இருந்தாலும், முதல்ல சொன்னாமாதிரி, ஏதோ ஒண்ணு இடிக்குது. கண்டிப்பா பாருங்க. நல்ல சினிமா அனுபவமா இருக்கும். ஒரு சில அவார்டு வாங்கினாலும் ஆச்சரியப்படுறதுக்கில்லை.
வெற்றிமாறன் நிறைய நம்பிக்கை கொடுக்கறாரு. பார்க்கலாம்.

p.s.ஹீரோ ஹீரோயின் சேர்ந்திட்டாலும், இது Happy Ending படமான்னு சொல்ல முடியலை..

p.s.2 தைரியமா filmography போட்ட நம்ம வெற்றிமாறனுக்கு ஒரு ஓ போடுங்க.

Sunday, January 16, 2011

காவலன்

இந்தப் பொங்கலின் இன்ப அதிர்ச்சி காவலன். நினைச்சே பார்க்கலை. இப்படி ஒரு விஜய் காணாம போயிட்டாருன்னு நினைச்சிகிட்டு இருந்தேன். ஆனா,  கலக்கிட்டாரு. இதைதானைய்யா பண்ணணும்னு இவ்வளவு நாள் சொல்லிகிட்டு இருந்தோம். இப்பவாச்சும் உரைச்சுதே. ரொம்ப சிம்பிளான, அழகான கதை. தன் ஹீரோயிஸத்தை சண்டைக் காட்சிகள்ள மட்டும் வெச்சிட்டு, மீதி நேரம் மொத்தமும், மனுஷன் நிஜமாவே நடிச்சிருக்காரு. அசின் ஒட்டலை. ரொம்ப மேலோட்டமா நடிச்சிருக்காங்க. வடிவேல் ஒரு சில இடங்கள்ல சிரிக்க வைக்கிறாரு. மத்தவங்க எல்லாம் கொடுத்த வேலையை செஞ்சிருக்காங்க. பாடல்கள் நல்லா இருக்கு. பிண்ணனி இசை பரவாயில்லை. மறுபடியும் விஜய் பற்றி சொல்லனும்னா, ரொம்பவே அடக்கி வாசிச்சிருக்காரு. அருமையான உடல் மொழி. தாய்மார்களுக்கு நிச்சயம் பிடிக்கும். விஜய் ரசிகர்களுக்கு பிடிக்குமான்னு சந்தேகமா இருக்கு. நான் இன்னொரு முறை பார்க்கலாமான்னு யோசிச்சிகிட்டு இருக்கேன். வித்தியாசமான கிளைமாக்ஸ். கண்டிப்பா குடும்பத்தோட பாருங்க..
Simply superb feel good movie...

p.s.1 - அபிராமி தியேட்டர்ல கடைசி வரிசைல உட்கார்ந்து பார்த்தேன். பாட்டெல்லாம் sound pan ஒழுங்கா இல்லாம, sync ஆகாம, ரொம்பவே படுத்திருச்சு. நல்ல பாடல்கள் எல்லாம் கேட்க மோசமா இருந்துச்சு... disappointing... யாராச்சும் அவங்ககிட்ட சொல்லுங்கப்பா...

Saturday, January 15, 2011

சிறுத்தை

பெருசா சொல்ல ஒண்ணும் இல்லை. ஒரு டபுள் ஆக்‌ஷன் மசாலா படத்துல என்னவெல்லாம் இருக்கும்னு நினைக்கறீங்களோ, என்னவெல்லாம் நடக்கும்னு நினைக்கறீங்களோ, அதெல்லாம் அட்சரம் பிசகாம நடக்குது. போக்கிரி ஹீரோ, அவனோட அல்லக்கை காமெடியன், லூசு ஹீரோயின், அவளோட தாராள கவர்ச்சி, இன்டெர்வல் ட்விஸ்டு, குழந்தை செண்டிமெண்டு, வில்லன் வீட்ல ஐடம் பாட்டு, கிளைமாக்ஸ்க்கு முன்னாடி வர குத்து பாட்டுனு இப்படி நிறைய. என்னதான் தமிழுக்கு ஏத்தா மாதிரி மாத்திருக்கோம்னு வழக்கம்போல சொல்லிகிட்டாலும்,பலத்த தெலுங்கு வாடை படம் முழுக்க இருக்கு. இந்த மாதிரி படமெல்லாம் இன்னும் எடுக்கறாங்களான்னு அதிசயமா கூட இருந்துச்சு. கார்த்தியின் நல்ல நடிப்பு, சந்தானத்தின் சூப்பர் காமெடி மட்டுமே படத்துல எனக்கு புடிச்ச விஷயம். கூட பார்த்த என் நண்பன், B, C சென்டர்ஸ்ல ஓடிரும்னு சொன்னான். அவங்க கூட இப்பெல்லாம் இந்த மாதிரி படம் பார்க்கறாங்காளான்னு தெரியலை. உங்களுக்கு மசாலா படங்கள் பிடிக்கும்னா, கண்டிப்பா பாருங்க, படம் போர் அடிக்கலை. ஆனா பார்த்த திருப்தி எனக்கில்லை. முதலுக்கு மோசமில்லாம ஓடிரும்னு நினைக்கறேன்.ரொம்ப வெட்டியா இருந்தா முயற்சி பண்ணுங்க...

p.s. படத்தை விஜய் டிவி வாங்கிட்டாங்க

p.s.2 - ரிப்பீட்டு - சந்தானம் காமெடி சூப்பரோ சூப்பர்.

Tuesday, June 22, 2010

ராவணன் பற்றி, ரெண்டே பத்தி...

வழக்கம் போல, பதிவுலகத்திற்கு இந்த வாரம் நல்ல தீனி. அடிச்சு புடிச்சு டிக்கெட் வாங்கி படத்தை பார்த்தா, மகா சொதப்பல். கதை கருமம் எல்லாம் உங்களுக்கு ஏற்கனவே தெரிஞ்சிருக்கும். அதனால நேரா விஷயத்துக்கு வரேன். இந்த characterization characterization அப்படின்னு ஒண்ணு சொல்லுவாங்க. அதுல தான் பெரிய சிக்கலே. மக்களால, யாரு பக்கம் நியாயம் இருக்குன்னு முடிவுக்கே வர முடியல. விக்ரமுக்கு, ஐஸ பார்த்தவுடனே லவ்வு வந்துருதா?? ஏன்னா, முதல்லையே உசுரே போகுதே பாட்டு வரும். ஒரு எழவும் வெளங்கல. போலீஸ் எதனால விக்ரம அவ்வளவு தீவிரமா தேடறாங்கன்னு காரணமும் சரியா விளங்கல. (அந்த ரெண்டு லைன் வாய்ஸ் ஓவர் போதும், மக்களே புரிஞ்சிக்கணும்னு டைரக்டர் நினைச்சிருப்பாரோ). விக்ரம், மணிரத்னம் படத்துல நடிக்கரோம்னு பிரம்மிப்புலையே நடிச்சிருப்பாருன்னு நினைக்கறேன்.

படத்துல யார் நடிப்பையும் குறை சொல்ல முடியாது. ஆனா, மோசமான திரைக்கதை + குழப்பமான characterization படத்தை காலி பண்ணிடுச்சு. வழக்கம் போல, இந்த மணிரத்னம் படமும், டெக்னிகலா சூப்பர். இருந்தும், பல காட்சிகள்ல, ஐஸ்'வரியா'ராய கொஞ்சம் 'கமர்ஷியலா' காமிச்சிருக்க வேண்டாம். ஏதொ, அத நம்பியே படம் எடுத்தா மாதிரி இருக்கு. ஹிட்டான பாட்டேல்லாம் பாதி பாதி வெட்டி, காலி பண்ணிட்டாங்க. கோடு போட்டா + கெடா கெடா பாடல்கள் மட்டும் ஓகே. ரீ ரிக்கார்டிங்கும் அவ்வளவு சிறப்பா இல்லை. சில பல அறிவு ஜீவிகள், மணிரத்னம் சொல்லாத விஷயங்கள கூட புரிஞ்சுகிட்டு, படம் ஆஹா ஓஹோன்னு சொல்றாங்க. ஆனா, என்னை மாதிரி பாமர மக்களுக்கு, பெரிய let down. பத்துத் தலைல ஒண்ணு கூட நல்லா இல்லை. விக்ரம் சொல்றா மாதிரி, படம், டன் டன் டன் டண்டணக்கா டன் டன் டன்....    

ஐயையோ, இந்த சீன படத்துல எடுக்கவே இல்லையே...     

Monday, March 29, 2010

கச்சேரி ஆரம்பம் - போலிகள் ஜாக்கிரதை...

நீங்க இன்னுமா திருந்தலைன்னு மக்களை கேள்வி கேட்க வெக்கற, புரட்சிகரமான படம் தான் இந்த கச்சேரி ஆரம்பம். இந்த படம் ரிலீஸ் ஆகறதுக்கு முன்னால நடந்த ஒரு விஷயத்தோட, சின்ன flashback...

இடம்: ஆர். பி. சௌத்ரி ஆபிஸ்..
இருப்பவர்கள்: இயக்குனர் திரைவாணன், சௌத்ரி, ஜீவா..
சௌ: இப்போ என்ன செய்ய. நாம எடுத்த படமும், இப்போ வந்துருக்குற படமும் ஒரே மாதிரி இருக்கு. இந்த படம் கண்டிப்பா ஹிட். இத பாத்தவங்க, நம்ம படத்தை மதிப்பாங்களா.. ஒழுங்கா விக்ரமன வெச்சு, காரைக்குடில ஒரே ஒரு வீட்ல ஒரு full படத்தை, ல ல லா ரீரிக்கார்டிங் போட்டு,  ஹிட் பண்ணிருப்பேன்..ச்சே.. என் காசெல்லாம் இப்படியா போகணும்...

ஜி: அப்பா, சும்மா பொலம்பாத. நானும் எப்போ மாஸ் ஹீரோவா ஆகறது. இந்த டைரக்டர் விஜய்க்கு சொல்லிருந்த கதைய, கையையும் காலயும் புடிச்சு, நான் கேட்டு, ஓகே பண்ணி படத்தை எடுத்தா, இப்போ இப்படி ஆகிடுச்சு. மாத்து வழி யோசிப்பியா, இப்படி பேசுறியே..

தி: சார், நம்ம கால்குலேஷன் ஜஸ்ட் மிஸ், நாம கொஞ்சம் முன்னாடியே ரிலீஸ் பண்ணிருந்தா இந்த பிரச்சனை வந்திருக்காது... அதாவது துப்பாக்கில இருக்குற தோட்டா....
சௌ: டேய், நீ ஒண்ணும் பேசாத. நான் ஒரு ஐடியா சொல்றேன். அத மட்டும் செய். இந்த "தமிழ் படத்துல" எல்லா தமிழ் படத்தையும் கலாய்க்கரா மாதிரி, நம்ம படத்துலயும் கலாய்ப்போம்.

ஜி: ஐயோ அப்பா, fullaa ரீ ஷூட் பண்ணப் போறோமா??

சௌ: அது வேறயா.. சத்தியமா இந்த டைரக்டர நம்பி ரீ ஷூட் எல்லாம் பண்ண முடியாது.  10 ஷாட்ல, எப்படியாவது இந்த படத்தை, தமிழ் படம் மாதிரி spoof படமா மாத்துங்க. மவனே நீ அதை மட்டும், மறுபடியும் சொதப்பி வை, என் கம்பெனியோட எல்லா படத்தையும் மூணு தடவ, கட்டி போட்டு, பாக்க வெப்பேன்.

தி: அயயோ.. நீங்க எனக்கு ஒரு வாரம் time குடுங்க. படத்தையே மாத்தி காமிக்கறேன். இந்த மாதிரி கொடுமையான தண்டனை எல்லாம் வேண்டாம்.

ஜி: ஏதொ, எனக்கு நல்ல பேர் வந்தா சரி..

இப்படி தான் ஏதாவது நடந்திருக்கும். என்ன சொல்ல வந்தாங்கன்னு அவங்களுக்கும் புரியல, எனக்கும் புரியலை. தர மொக்கையா ஒரு படம்.ரெண்டு மூணு காட்சிகள் மட்டும் spoof படம் மாதிரி எடுத்துட்டு, மக்கள் ஏத்துப்பாங்கன்னு  நெனச்சு காமெடி பண்ணிருக்காங்க. பொறுமை போயே போச்சு. எப்போடா படம் முடியும்னு ஆகி, பக்கத்துல இருந்த ரமேஷ் அண்ணா கிட்ட "அண்ணா, என்ன அடிங்க ணா.. என்ன அடிங்க" னு புலம்பிகிட்டு இருந்தேன்..

நல்லா இருந்தா ஜீவாவும் இப்படி மொக்க ஆகிட்டார். j.d.சக்கரவர்த்தி இந்த படத்துல என்னத்தை கண்டாருனு தெர்ல. அப்படியே இம்ப்ரெஸ் ஆகி வில்லனா நடிக்க சம்மதிச்சாரம். முருகா.. வடிவேல் காமெடியும் ஒண்ணும் சிறப்பா இல்லை. மொத்தத்துல, இது ஒரு கேவலமான...... அட ச்சய், இந்த வார்த்தையே எனக்கு க்ளிஷேவா இருக்கு... தமிழ் படம் மாதிரி spoof னு சொன்னா ஏமாந்துராதீங்க. உஷாரய்யா உஷாரு.

p.s.தேவிபாலா திரையரங்கு.. சீட்டெல்லாம் மொக்கை. அந்த சின்ன தியேட்டர்க்கு 85, 95 ரூவா டிக்கெட்டெல்லாம் ஓவர். அதுவும் நடு நடுவுல, ஸ்க்ரீன் dim ஆகி dim ஆகி bright ஆச்சு. ஏசி ஒண்ணும் அவ்வளவா உரைக்கல. கவனிப்பார்களா???

அடுத்து நீங்களா?? தலைய சிலிப்பிடாதீங்க. வெட்டிருவாங்க..

Sunday, November 15, 2009

உலகம் சூப்பரா அழியுதுடோய்.....

அவங்களால எவ்வளவு முடியுமோ, அவ்வளவு அழகா உலகத்தை அழிக்கறாங்க பாருங்க. கண்கொள்ளா காட்சி. அட அட அட.சொல்ல வார்த்தையே இல்லை. கிராபிக்ஸ்ல விளையாடியிருக்காங்க. இந்த மாதிரி ஒரு படம் வந்ததில்லை. வருமான்னும் தெரியலை. என்ன, இந்த டைரக்டரோட The Day After Tomorrow பார்க்கும்போதும் நான் இப்படிதான் நினைச்சேன். Raising the bar அப்படின்னு சொல்லுவாங்களே, அது மாதிரி, அந்த படத்தை விட, இந்த படம் ஒரு விஷுவல் விருந்து. 2012 படத்துலதான் இந்த கூத்தெல்லாம்.

கதைனு பார்த்தா..... இந்த மாதிரி படத்துக்கு கதை ரொம்ப அவசியமா?? இங்க கதைன்னு பார்த்தோம்னா, இத மாதிரி படத்துக்கு இருக்குற ஒரு default கதைக்களம்தான். உலகம் அழியுது. ஒருத்தர் அத தொலைநோக்கராறு. அதுக்கான ஏற்பாட, அரசாங்க உதவியோட செய்யறாரு. நினைச்சத விட சீக்கிரமாவே அந்த அழிவு வர, பல மக்கள் மண்டையப் போட, சில மக்கள் தப்பிக்கறாங்க. இதுக்கு நடுவுல, நம்ம ஹீரோ, அவரோட மனைவி மக்களோட எப்படி தப்பிக்கராருன்னு, லைட்டா ஊறுகா மாதிரி செண்டிமென்ட தொட்டுகிட்டு, காமிக்கறாங்க.

முழுக்க முழுக்க VFX ஆதிக்கம்தான். படம் பார்க்கும்போது வேற ஒண்ணும் யோசிக்கவே தோணாது. கலிபோர்னியா அழியும்போது, வெள்ளை மாளிகை நொறுங்கும்போது, yellow stone எரிமலை உருவாகும்போது, ஹிமயமலைல கடலலை வரும்போது இப்படி பல காட்சிகள் இன்னும் கண்ணுலேயே நிக்குது. தமிழ் சினிமா மாதிரி, இந்த படத்துலயும், ஹீரோவுக்கு எதுவுமே ஆகாம, கடைசி வரை, அவர் பல மயிறிழைகள்ல தப்பிக்கராறு. அதுலயும் ஒரு சீன், விஜய் படம் பாக்கறா மாதிரியே இருந்துச்சு. ஒரு சில டச்சிங்கான சீன்கள் இருந்தாலும், அதனால பெரிய பாதிப்பு எதுவும் இல்ல.   

படத்துல முதல்ல ஒரு இந்தியர்தான் ஆபத்தை கண்டுபுடிச்சு சொல்றாரு. தப்பிக்கறதுக்கு கட்டற பெரிய நோவா ஆர்க் கப்பலுக்கு போக, அவருக்கு பிளைட் அனுப்பறாரு அவர் நண்பர், ஆனா அது அவரை பிக் அப் பண்ணாம, கடைசியில தன குடும்பத்தோட அவர் இறந்துபோராறு. எல்லா விஷயமும் இந்தியாவிலிருந்து போய், அது நமக்கே ரிவர்ஸ்ல ஆப்பா மாறுதுன்னு ரொம்ப அழகா காமிச்சிருக்கார் இயக்குனர். (அவர் அப்படி நினைக்கலைன்னா என்ன, நான் சொல்லுவேன். எப்படி நம்ம நுண்ணரசியல் கண்டுபிடிப்பு??)

என்னதான் இருந்தாலும், இது போல ஒரு படத்தை எடுத்ததுக்காக, டைரக்டர் Roland Emmerich மற்றும் கொலம்பியா பிக்ச்சர்சுக்கும், முக்கியமா கிராபிக்ஸ் பண்ண Uncharted Territory, Digital Domain, Double Negative, Scanline, Sony Pictures Imageworks ஆகிய நிறுவனங்களுக்கு மூன்றாவது வட்டம் சார்பாகவும், என் ரசிகர் மன்றம் சார்பாகவும், மனமார்ந்த பாராட்டுகள். படத்தை கண்டிப்பா ஒரு பெர்ய ஸ்க்ரீன்ல, நல்ல சவுண்டோட பாருங்க. என்னுடைய ஆதரவு தேவி மற்றும் சத்யம் திரையரங்குகளுக்கு. அடுத்ததா நான் எதிர்பார்க்கும் படம், ஜேம்ஸ் கேமரூனோட "அவ்தார்". Lets Wait......


விஜய் படம் பாத்து உலகம் அழியராப்போல ஒரு கான்செப்ட் இருக்கு. நடிக்கறீங்களா??

Wednesday, July 22, 2009

நாடோடிகளும் அரை ரத்த இளவரசனும்

நாடோடிகள்

நான் என்ன பெரிய விமர்சனம் எழுதறது. எனக்கு முன்னாடியே, பல நல்லவர்கள், படத்தை பார்த்து எழுதித் தள்ளிட்டாங்க, எனக்கு மிச்சம் வைக்காம. இது, எதை மாதிரியான படம்னு வரையறுக்க முடியலை. எந்த மாதிரி வேணாலும் புரிஞ்சிக்கலாம். வேறு வேறு விதமான நண்பர்களுக்குள்ள நடக்கும் கதையாகவும் பார்க்கலாம், வேறு வேறு விதமான தந்தைகளைப் பற்றிய படமாகவும் எடுத்துக்கலாம், வேறு வேறு பெண்களை/காதலிகளை/அம்மாக்களைப் பற்றிய படமாகவும் பார்க்கலாம்னு, இந்தப் படத்திற்கு, எக்கச்சக்க கோணங்கள். ஒரு தேவையில்லாத பாடலைத் தவிர (யக்கா யக்கா) படம் வேறு எங்கயுமே போர் அடிக்கல. திரைக்கதை அப்படி.

அருமையான ஒளிப்பதிவு, எடிட்டிங், வசனம், நடிப்புன்னு படம் நெடுக ஒரே positives மட்டுமே. இருந்தும் எனக்கு, மூன்று முறை பார்க்கும் போதும், கண்ணை உறுத்திய சில விஷயங்கள். முன்னமே சொன்னது போல அந்த யக்கா யக்கா பாடல். பாட்டும் சுமார்தான், அதில் ஒளிப்பதிவு, ரொம்பக் கீழ்த் தரம், நிறைய low angles. தேவையில்லாத திணிப்பு. சசிகுமாரின் amateur நடிப்பு. அவருக்கு ஹீரோ வேஷம் பொருந்தினாலும், பல இடங்களில் அவர் நடிக்கக் கஷ்டப்படுவது தெரிகிறது. மொக்கை பின்னணி இசை. அந்தக் கடத்தல் இடத்துல வரும் இசையைத் தவிர, வேற எங்கையும் பெருசா ஒட்டலை. பல இடங்களில், ஒரே இசையை மீண்டும் மீண்டும் போட்டு, வெறுப்பேத்தறாங்க.

மற்றபடி இது கன கச்சிதமான படம்.

இப்படி கை தூக்கினவங்க எல்லாம் என்ன ஆனாங்க தெரியுமா...

ஹாரி பாட்டர்

இது வரை வந்த ஹாரி பாட்டர் படங்கள்லேயே, இது தான் உன்னதமான படைப்புன்னு வந்த பல நூறு விமர்சனங்களை பார்த்து, வழக்கம் போல ஏமாறாம, என் எதிர்பார்ப்புகளை கொஞ்சம் கட்டுப்படுத்திக்கிட்டு, படம் பார்க்க போனேன். முதல் நாளே பார்க்கனும்னு இருந்தேன், ஆனா என்னை விட பல ஆர்வக் கோளாறுகள் இருந்ததால, அவங்க முந்திகிட்டாங்க. ஒரு வழியா நாலாவது நாள் நைட் ஷோ, சத்யம் தியேட்டர்ல, நடு சென்டர் ஸீட்டாப் பார்த்து புக் பண்ணேன்.

படம் பெருசா ஒண்ணும் ஏமாத்தலை. ஆனா புத்தகத்தை படிச்சவங்களுக்கு கொஞ்சம் ஏமாற்றமாகவே இருக்கும். நான் இந்தப் படத்தை தூற்றவும் இல்லை, போற்றவும் இல்லை. கிடைத்த 2.5 மணி நேரத்துல, முடிந்த வரை, பரபரப்பா கதை சொல்லிருக்காங்க. திரைக்கதை நல்ல வேகம். ஆனா, தேவையே இல்லாம, புத்தகத்துல இல்லாத ஒரு fight சீன் படத்துல இருக்கு. படத்துல சில பல இடங்கள், செம்ம humorous. நடிப்புன்னு பார்த்தா, இந்த படத்துல, dumbledore பாத்திரத்துல வர michael gambon நல்லா நடிச்சிருக்கார். daniel, படத்துல பெரிய வேலை ஒண்ணும் இல்லாம வரார். rupert grint நல்ல காமெடி நடிகரா வருவார்னு நினைக்கறேன். அவரோட reactions எல்லாம் செம்மக் காமெடி.

நம்ம emma watson, வழக்கம் போல நல்லாவே நடிச்சிருக்காங்க. அவங்க எதுக்கு நடிக்கணும். சும்மா வந்து நின்னா போதும். அட அட அட. அதுவும் RDX ஸ்க்ரீன்ல இன்னும் அழகா இருக்காங்க. alan rickman, tom felton, எல்லாருமே கிடைச்ச ஸ்க்ரீன் டைம்ல, நல்லா நடிச்சிருக்காங்க. படத்துக்கு முக்கியமான பலம், கிராபிக்ஸ், கேமரா & எடிட்டிங். எல்லாமே உச்சக்கட்டம். Almost, படத்தோட எல்லா காட்சியிலுமே கிராபிக்ஸ் இருக்கு. அதுவும் சிறந்த தரத்தோட. மொத்ததுல, படம் நல்ல பொழுதுபோக்கு. ஆனா, வந்த படங்கள்லேயே சூப்பர்னு எல்லாம் சொல்ல முடியாது. நான் புத்தகங்களை முன்னமே படிச்துனால இருக்கலாம்.

அடுத்த படத்தை நான் பெருசா ஒண்ணும் எதிர் பார்க்கலை. ஆனா, அடுத்த படத்துல நம்ம emma watsonku இன்னும் கொஞ்சம் ஸ்க்ரீன் டைம் கொடுத்தா நல்லா இருக்கும். மற்றபடி, இது, பாட்டர் படங்களில், மற்றுமொரு வெற்றிப் படம்.
படத்தை, சத்யம் தியேட்டர்ல மட்டும் பாருங்க.

இதப் பாரு. கிருஷ்ணா ரொம்ப நல்லவன்னு போட்டிருக்கு...

(பி.கு. இந்த அரை ரத்த இளவரசன் என்கிற மொழி மாற்றம், நான் முன்னமே யோசிச்சது. அதனால, நண்பர் lancelot ராயல்டி கேட்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன்)

Sunday, July 12, 2009

மற்றும் பல...

ஆரம்பிச்சிட்டாங்க...

கல்லூரி திறந்தாச்சு. இந்த முறை பாடங்கள் கொஞ்சம் வித்தியாசமா இருக்கு. நான் எதிர்பார்த்தா மாதிரி, practical வேலைகள் கொஞ்சம் நிறையவே இருக்கும்னு நினைக்கறேன். அதானால, நிறைய ப்ளோக முடியாதுன்னும் நினைக்கறேன். எங்க music band மீட்டிங்கும் நடந்தது. புதுசா நாலைந்து பேர் தேவைப்படறாங்க. இப்பதான் கவுன்சிலிங் நடக்குது. லைன்ல நிக்கற பசங்களையும், அப்பா அம்மாக்களையும் பார்க்க கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கு. நாம என்ன செய்ய முடியும்...

நாடோடிகள்

நாடோடிகள் பட விமர்சனத்தை எழுதச் சொல்லி, என் நண்பர்கள் சில பேர் கேட்டாங்க. 3 முறை அந்த படத்தை பார்த்துட்டேன். இதுக்கு மேல அதை பற்றி வேற என்ன சொல்ல. இருந்தும், அவர்களோட விருப்பத்திற்கு இணங்க, வரும் வாரம், எழுதுகிறேன். (உங்க தலை விதி அப்படி)

பைக்

புது பைக் ஒன்னு வாங்கினேன். (paasion plus). நான், ஏன் அண்ணனோட வண்டி (discover) ஓட்டி பழகியதால, புது வண்டியில, இன்னும் gear pattern பழகல. ரொம்ப பேஜாரா கீது. அதனால, என் அண்ணனோட வண்டியவே இன்னும் ஓட்டிங். ஏன் தலை விதி பாருங்க, புது பைக் இருந்தும், ஓட்ட தெரிஞ்சும், ஆண்டவன் இப்படி பண்ணிட்டான். இருந்தும், பொங்கி எழுந்து, பழகிக் கொண்டு, ஏன் பைக்கை ஓட்டுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.

வரும் வாரம், படம் ரிலீஸ். பார்க்க நான் ரெடி, நீங்க ரெடியா??

Friday, June 26, 2009

MASS - இல்லா - mani

வழக்கம் போல, இந்த வாரமும் ஏதாவது படம் பார்க்கணுமே, So, வழக்கம் போல ரமேஷ் அண்ணாவ இட்டுகுனு, அண்ணா theatre பக்கம் போனேன். அங்க, முத்திரை படம் ரிலீஸ். படம் கொஞ்சம் சுமாரா இருப்பதாகவே கேள்விப்பட்டதனாலதான் போனேன். ஆனா டிக்கெட் கிடைக்கல. நாமதான் ஒரு தடவ முடிவு பண்ணிட்டா யார் பேச்சையுமே கேட்கமாட்டோமே, படம் பார்க்கறதுன்னு முடிவு பண்ணிட்டா, பார்த்தே தீரணும். அண்ணா கிட்ட, "வேற வழியில்லை, மாசிலாமணி பார்ப்போமா"னு கேட்டேன். அவரும் "எதுவா இருந்தாலும் ஓகே" அப்படின்னாரு. அங்கேர்ந்து ஆல்பர்ட் theatre. டிக்கெட் வாங்கிட்டு (85ஓவா) உள்ள போனோம்.

வழக்கம் போல, படம் செம்ம மொக்கை. அதாவது நீங்க எவ்வளவு மொக்கைனு நினைக்கறீங்களோ, அத விட மொக்கை. வழக்கம் போல, நானும் அண்ணாவும் அடுத்தடுத்து வர காட்சிகள யூகிச்சிட்டே வரோம், அதே மாதிரி வந்துகினே இருக்கு. நாங்களும் எவ்வளவு தான் யூகிக்கறது. ஒரு கட்டத்துல, நாங்க சொல்றது எல்லாமே வந்ததால, போர் அடிக்க ஆரம்பிச்சிடிச்சு. ஹீரோ முகத்த தியேட்டர்ல அவ்வளவு பெரிய ஸ்க்ரீன்ல பார்க்க முடியல. ஹீரோயினயாவது கொஞ்சம் கமர்ஷியலா காமிச்சிருக்கலாம், அவங்க என்ன வெச்சிகிட்டா வஞ்சனை பண்றாங்க. அதனால, அதுவும் தேறலை. அவங்க டான்ஸராமா, சங்கமம் விந்தியா கிட்ட கத்துகிட்டாங்கன்னு நினைக்கறேன். இடைவேளைக்கு அப்பறம், நாங்களாகவே சில சீனுக்கு கை தட்டி, சின்ன தம்பி கவுண்டமணி மாதிரி, "சூப்பரப்பு" அப்படின்னு சொல்லிக்கிட்டு இருந்தோம். காமெடி track இருந்ததா வெளிய பேசிக்கறாங்க, எங்களுக்கு ஒண்ணும் தெரியல.

கிளைமாக்ஸ்ல, ஹீரோ சண்டை போடுறப்போ, எனக்கு பசங்க படம் டயலாக் ஞாபகத்துல வர, நானே சத்தமா "அய்யய்யோ, மாசி கைய முறிக்கிட்டானே, அவனுக்கு கோவம் வந்துருச்சே, இப்ப பல்லக் கடிப்பான் பாரு"னு சத்தமா கமெண்ட் விட்டேன். அந்த ஹீரோவும் அதே மாதிரி செய்யறாரு. ஷப்பா, முடியல. 2.5 மணி நேரம், மூச்சுத் திணறத் திணற மொக்கை வாங்கி வீட்டுக்கு வந்தோம். படம் நல்லா இல்லைன்னு அவங்களுக்கே தெரியும் போல. அதனாலேயே படத்துல அவங்களே "சூப்பரூ"அப்படின்னு ஒரு பாட்டு பாடிக்கறாங்க. சன் டிவிக்கு மட்டும் மற்றொமொரு வெற்றிப் படம். எங்களுக்கு வழக்கம் போல, ஒரு நாள் தூக்கம் + 100 ரூவா காலி. எவ்வளவு மொக்கை படம் வந்தாலும் பார்க்கராணுங்கடா, இவனுங்க ரொம்ப நல்லவங்கனு நீங்க சொல்றது எனக்கு காதுல விழுது. என்ன செய்ய.

மீண்டும், மீண்டு வந்து, அடுத்து ஒரு படத்த பார்த்து, பதிவறேன். வர்ட்டா....


அய்யயோ, ஸாரி, ஸ்டில் மாறிடிச்சு. விடுங்க, எல்லாம் ஒண்ணுதான்.

Monday, June 1, 2009

Each Action...

நானும் ரமேஷ் அண்ணாவும் படம் போகலாம்னு பிளான் போட்டவுடனே எனக்கு தோணிய படம், newtonin மூன்றாம் விதி. ஏன்னா, படத்துக்கான review பல இடங்கள்ல நல்லாவே எழுதியிருந்தாங்க and எங்க வீட்ல இருக்கறவங்களும் பார்த்துட்டு, நல்ல இருக்குன்னே சொன்னாங்க. ஆனா, ரமேஷ் அண்ணாவுக்கு அவ்வளவு விருப்பம் இல்லை. "s.j.சூர்யா மூஞ்ச அவ்வளவு பெரிய screenla பார்க்க முடியாதுடா, நீ angels and demons book பண்ணு, பார்க்கலாம்"னு சொன்னாரு. ஆனா, நான் என்னமோ படத்தோட producer மாதிரி, "அண்ணா, இல்லை, படம் சூப்பரா இருக்காம், s.j.சூர்யா ரொம்பவே அடக்கி வாசிச்சிருக்கானாம், அதுவும் அந்த வில்லன் ரோல் பண்ணவன் செம்மையா நடிச்சிருக்கானாம், நல்லாதான் இருக்கும், வாங்க போலாம்"னு சொன்னேன்.

பசங்க படத்த அவர் already பார்த்துவிட்டதால, வேற பெரிய சாய்ஸ் எதுவும் இல்லை. So, ok சொன்னாரு. நான் என் அக்கா பையன அனுப்பி, டிக்கெட் book பண்ண சொன்னேன். பக்கத்துல இருக்குற எல்லா முக்கியமான தியேட்டர்லயும் அந்த படத்தை எடுத்துட்டதால (!!!!), வேற வழியில்லாம, சாந்தி தியேட்டர்ல புக் பண்ண சொன்னேன். அங்க போயிட்டு எனக்கு போன் பண்ணி, "மாமா, டிக்கெட் புக் பண்ணிட்டேன், இங்க வேற யாருமே இல்லை. நான் மட்டும்தான் counterla டிக்கெட் ரிசர்வ் பண்றேன்"னு சொன்னான். இங்க ஒரு பல்பு வெடிச்சாலும், அத சமாளிச்சு, "ஓகே, தேங்க்ஸ், வந்து சேரு"னு சொல்லி phonea வெச்சேன்.

பத்து மணிக்கு தியேட்டர் உள்ள போறோம், யாருமே இல்லை. ஒரே ஒரு ஆள், வெளிய உட்கார்ந்துகிட்டு இருந்தார். உள்ள பொய் உட்கார்ந்த அப்பறம், இன்னும் ஒரு நாலு பேர் வந்தாங்க. நான், ரமேஷ் அண்ணாகிட்ட, "படம் ரொம்ப த்ரில்லிங்கா, பயம்ம்மா இருக்கும் போல"னு சொல்ல, அவரோ, "பாவம், s.j.சூர்யாவுக்கு இந்த நிலைமை வந்துருக்கக் கூடாது. வந்து பார்த்தா ரொம்ப பீல் பண்ணுவான்". ஒரு வழியா படம் ஆரம்பிச்ச கொஞ்ச நேரத்துக்கெல்லாம், வேற படத்துக்கு டிக்கெட் கிடைக்காத சில ஆட்கள், இங்க வந்து சேர்ந்தாங்க. Reasonable crowd சேர்ந்தது.

படத்தைப் பற்றி சொல்லனும்னா, இன்னும் நல்லா மார்க்கெட்டிங் பண்ணி, கொஞ்சம் star value இருந்திருந்தா, நிஜமாவே ஒரு வெற்றிப் படமா இருந்திருக்கும். s.j.சூர்யா வழக்கம் போல இல்லாம, கொஞ்சம் நல்லாவே நடிச்சிருந்தார். அந்த heroine, ஐயோ ராமா, சகிக்கல. நடிப்புன்னு சொல்லி அவங்க குடுக்கற reactions, சீரியஸ்ஸான இடத்துலயும் சிரிப்புதான் வருது. வழக்கமான படங்கள் போல இல்லாம, வில்லனுக்கும் இதுல equal importance குடுத்து, நல்லாவே எடுத்துருக்காங்க. பாட்டு இல்லேன்னா, படம் இன்னும் நல்லா இருந்திருக்கும். ஆனாலும், கடைசில, நான் கொடுத்த வாக்கு பலிச்சு, ரமேஷ் அண்ணாவுக்கே படம் பிடிச்சிருந்தது. எனக்கும்தான்.

p.s. இன்னைக்கு சத்யம்ல பசங்க படமும் பார்த்துட்டேன். ரொம்ப ஜாலியான, அழகான படம். கொஞ்சம் "little rascals" படத்தோட ஞாபகம் வந்தாலும், ரொம்ப நல்லா இருந்துச்சு. எல்லாரும் அவசியம் பாருங்க. எல்லாரும் படத்த தேவையான அளவு அலசியதால், இங்க p.s.ல மட்டும்.

சே...ஒழுங்கா, ராஜாதி ராஜ படத்துல கமிட் ஆயிருந்தா,
நமக்கேத்த பிட்டு ஏதாவது தேறியிருக்கும்....

Sunday, April 19, 2009

SMSku அப்புறம் அயன்

(மறுபடியும்) ரொம்ப நாள் கழிச்சு ரெண்டு படம்s பார்த்தேன் (எனக்கு, ரெண்டு வார இடைவேளை ஒரே பெரிய gap தான்). முதல்ல பார்த்த படம் SMS, அதாவது சிவா மனசுல சக்தி. ரொம்ப சுமாரான படம். எல்லாப் படங்களையும் பயங்கரமா விமர்சனம் பண்ற விகடன், தரமான படமா எடுப்பாங்கன்னு பார்த்தா, ஏமாத்திட்டாங்க. 4-5 scenes மட்டுமே நல்லா இருந்துச்சு.

சந்தானம் காமெடி, சில இடங்கள்ல ஓகே. heroine ஆக்டிங் கோர்ஸ் படிச்சவங்களாம். அநேகமா நிறைய arrears இருக்கும்னு நினைக்கறேன். ஜீவா தன்னோட "ஈ" பட நடிப்ப, ஒரு மாதிரி modify செஞ்சு நடிச்சிருக்கார். என்னை பொருத்த வரை, படத்துல சூப்பரா நடிச்சது, ஊர்வசி மட்டுமே. சரியான timing. அவங்க வர சீன் எல்லாத்துலயும் அவங்க மட்டுமே goal அடிக்கறாங்க. ஒரு மாதிரி ஓகேவான படம். விகடன், அவங்களோட விமர்சனக் குழுவை பக்கத்துல வெச்சுகிட்டு படம் எடுத்துருக்கலாம். முடிஞ்சா பாருங்க. பாத்துட்டு யோசிக்கலாம், யோசிச்சிட்டு பார்க்க முடியாதது....

ஆக்டிங் கோர்ஸ் பண்ணேன்னு சொல்றியே, வெட்கமாயில்லை???

------------------------------------------------------------------------------------------------

அடுத்ததா பார்த்த படம் அயன். செம்ம மசாலா படம். ஆனா டைரக்டர் ஆனந்த் மட்டும், "இந்த படத்த மசாலா படம்னு சொல்லாதீங்க"னு எல்லார்கிட்டயும் கெஞ்சறார். ரொம்பத் தரமான படம்னு சொல்ல முடியாது. இருந்தாலும், நல்ல படம்தான். அதுவும், ரொம்ப நாள் கழிச்சு (சிவாஜிக்கு அப்புர்ரம்) வர, ஒரு நல்ல மசாலா படம்*.

நிறைய ஆங்கிலப் படங்கள்ல இருந்து சுட்ட action scenes. நல்லாவே இருந்துச்சு. particularly, Congo chase + climax fight. வேகத்தை மட்டும் நம்பாம, நிறைய இடங்கள்ல, விவேகத்தையும் நம்பிருக்காங்க. படம் கொஞ்சம் informativeகூட. தமன்னாவுக்கு எப்படி சான்ஸ் வருதுன்னே தெரியல. நடிக்கவும் வராம, டான்சும் வராம ரொம்ப பாடுபடறாங்க + படுத்தறாங்க. பாட்டு எல்லாம், தனியாக கேட்க மட்டுமே நல்லா இருக்கு. படத்தோட பார்க்கும் போது எந்த பாடலுமே ஒட்டலை. எல்லாப் பாடல்களும் வேகத்தடை மாதிரியே இருக்கு. பாடல்கள் இல்லைனா, படம் இன்னும் நல்லா இருந்திருக்கும்.

வேற நல்ல வில்லன் கிடைக்கல போல, காமெடியா ஒரு ஆள். அவருக்கு டப்பிங் குடுக்க, நம்ம கோலங்கள் அப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பி ஆதி. ஒரு மசாலா படத்துல எப்பவுமே ஹீரோ மட்டும் தனியா தெரிவார், ஆனா இந்த படத்துல அப்படியில்லை. சூர்யாவோட (நல்ல) இமேஜ் இதுக்கு காரணம்னு நினைக்கறேன். அவரோட சேர்ந்து, பிரபு, ரேணுகா, ஜகன், பொன்வண்ணன் எல்லாருமே நல்லா நடிச்சிருக்காங்க. முக்கியமா, படம் முடிஞ்சு வரும்போது எல்லாருமே, நினைவுல இருக்காங்க. நல்ல விஷயம்தானே. லாஜிக் மீறல்கள் ரொம்ப சில, இருந்தாலும், On the whole, Its entertaining.

p.s. * "நல்ல மசாலா படம்" - ஒரு oxymorona???
p.s.2 - சங்கம் theatre sound system, செம்ம மொக்கை. ஒண்ணுமே ஒழுங்கா கேட்கலை. எங்க வீட்டு creative speakerslaye, sound, அவ்ளோ சூப்பரா இருக்கும். நிர்வாகம் என்ன பண்ணுதுன்னு தெரியல. அவங்களுக்கு feedback குடுக்கலாம்னு பார்த்தா, sitela எந்த லிங்கும் இல்லை.

superstar racela கண்டிப்பா நீங்க இருக்கீங்க...

Wednesday, April 1, 2009

கார்த்திக் குடுத்த tag

கார்த்திக் தம்பி, டிசம்பர் மாசம், குடுத்த tag இது. முதல்ல எனக்கு மேட்டர் சரியா புரியல. அப்பறம் விளங்கிருச்சு. அந்த tag இன்னானா, .... அதாவது, படம் போக/பார்க்க சொல்லோ, நான் செய்யற 6 விஷயம். tag மேட்டருக்கு முன்னாடி சில விஷயங்கள். நமக்கு படம் பார்க்கறது சல்பி மேட்டர். எப்போ தோணுதோ, அப்பவே படம் பார்க்கற case நான். நான் முதல்ல, தனியா, படம் பார்க்க ஆரம்பிச்சது, 8th STD படிக்கும்போது. தனியா பார்த்த முதல் படம், "மம்மி returns" @ Woodlands Theatre.

பள்ளி நாட்கள்ல, நிறைய முறை, நண்பர்களோட, 10 ரூபாய் டிக்கெட்ல படம் பார்த்துருக்கேன். 2-3 மணி நேரம் queuela நின்னு படம் பார்த்ததெல்லாம், சூப்பர் அனுபவம்ஸ். இப்ப நான் படிக்கறதும், மீடியா தொடர்பான படிப்பா, அதனால எச்சகச்ச படங்கள். படம் நல்லா இருந்தா போதும். மொழி முக்கியமில்லை. இப்ப tag...

1. முடிஞ்ச வரை, டிக்கெட்ட ரிசர்வ் பண்ணிட்டு, அப்பறம் தான் போவேன். எனக்கு, அங்க போய், queuela நின்னு, படம் பார்க்கும் பொறுமை இல்லை.

2. டிக்கெட் வாங்கும்போது, "சார், கொஞ்சம் பின்னாடி, சென்டரா பார்த்து seat குடுங்க", அப்படின்னு கேட்டு வாங்கிப்பேன். ஏன்னா, சென்டர்ல உட்கார்ந்தாதான், sound panning கரெக்டா கேட்கும்.

3. படம் பர்ர்க்க நிறைய கூட்டம் சேர்க்க மாட்டேன். முடிஞ்சா வரை தனியாகஇரண்டு பேராக மட்டுமே போவோம்/வேன்

4. தமிழ் படங்களை வெள்ளித்திரையிலும், மற்ற மொழிப் படங்களை வீட்டிலும் பார்ப்பேன். அதுவும், இங்கிலீஷ் படங்கள் சில தியேட்டர்ல மட்டுமே பார்ப்பேன்.

5. ஒரு படத்த ஆரம்பம் முதல், முடிவு வரை, பார்த்தா மட்டுமே எனக்கு திருப்தியா இருக்கும். ஒரு வேளை, டைட்டில் கார்டு மிஸ் பண்ணிட்டேன்னா, மறுபடியும் அந்தப் படத்த பார்த்தே ஆகணும். End credits முடியும் வரை, பார்த்துட்டுதான் வருவேன்.

6. படம் எவ்வளவு மொக்கையா இருந்தாலும், பொறுத்திருந்து, fulla பார்த்துட்டுதான் வருவேன். நான் பாதியில எழுந்து வந்ததா சரித்திரமே இல்லை.

இவையே, இப்ப நினைத்து பார்க்கும்போது, நினைவுல வந்த 6 விஷயம்ஸ். இன்னும் நிறைய இருக்கு. ஆனா இது போதும்னு நினைக்கறேன். ஒரு படத்தை தியேட்டர்ல பார்ப்பதே அருமையான அனுபவம். மக்களோட direct response தெரியவரும். அந்த அனுபவத்திற்காகவே, நான் தியேட்டர்ல படம் பார்ப்பது வழக்கம். எப்பவும் எனக்கு, ஒரு படம் பார்க்க கிளம்பிட்டேன்னா, கட்டாயமா பார்த்தே ஆகணும். எப்பாடு பட்டாவது. அப்படியொரு வெறி. என்ன செய்ய, கலை ஆர்வம். இந்த taga யாருக்கு பாஸ் பண்ணறதுன்னு தெரியல, உங்களுக்கு பிடிச்சிருந்தா, ஒரு கமெண்ட போட்டுட்டு, நீங்களே எடுத்துக்கங்க. இப்ப நான் அபீட்டு...

இதெல்லாம் வாங்க நம்ம கைல எப்பவுமே காசு இருக்காது :(
(pop-corna சொன்னேன் ;)