கொலைவெறி இவ்வளவு பெரிய ஹிட்டானவுடனே எல்லாருக்குமே படம் சுமாராதான் இருக்கும்னு ஒரு பொதுப்படையான அபிப்ராயம் வந்துடுச்சு. இருந்தாலும் படத்துக்கு ஒரு ஒப்பனிங் வந்துதுக்கு காரணம்னு நான் நினைக்கரது, கொலைவெறியத் தாண்டி, மத்த பாடல்களும் நல்லா இருந்து ஹிட்டானதுனால, தனுஷோட நடிப்பு எப்படி இருக்கும்னு
பார்க்க , முக்கியமா ஐஸ்வர்யா தனுஷ் என்ன பண்ணிருக்காங்கன்னு பார்க்க. இதையெல்லாம் எதிர்பார்த்து வந்த மக்கள், முக்கியமான கடைசி மேட்டர்ல ஏமாந்துட்டாங்கன்னே சொல்லணும். செல்வராகவன் எழுதிகொடுத்த கதைய, தனுஷ் டைரக்ட் பண்ணி, ஐஸ்வர்யா பேர் மட்டும் போட்டுகிட்டாங்களோன்னு பலபேருக்கு சந்தேகம் வருது.
எனக்குத் தெரிஞ்ச படத்தோட ப்ளஸ், தனுஷோட அனாயாசமான நடிப்பு. பழக்கப்பட்ட கேரக்டர்ல நடிக்க வெச்சதால, பின்னிட்டாருன்னு நினைக்கறேன். அடுத்து இசை + பின்னணி இசை. பின்பாதில பல இடங்கள்ள ரெண்டு மூணு பீஸை திரும்ப திரும்ப வாசிச்சாலும், போர் அடிக்காம செட் ஆகிருக்கு. அனிருத் அடுத்த படத்துல என்ன பண்ணுவாருன்னு எதிர்பார்க்கறேன். முதல் பாதி ஸ்கூல் காட்சிகள். அதுல வர சிவ கார்திகேயனோட பன்ச், ரெண்டாவது பாதில நண்பனா வர சுந்தரோட பாத்திரம். தனுஷ், ஸ்ருதி ரொமான்ஸ். இப்படி சில விஷயங்கள சொல்லலாம்.
மைனஸ், மெதுவா நகர்ற திரைக்கதை, சுவாரசியமில்லாத ரெண்டாவது பாதி, பைபோலர் டிஸ்ஆர்டர்னு சொல்லிட்ட அப்பறமா, அதை வெச்சே கடைசி முக்கால் மணி நேரத்தை ஓட்றது, ஈசியா சொல்லி புரியவேச்சிருக்கலாமேனு எல்லாருமே கேள்வி கேட்கற லாஜிக் ஓட்டை. அவருக்கு எதனால, எங்க அந்த பிரச்சனை ஆரம்பிச்சுது, அந்த சாமியார், குழந்தை உருவங்கள் யாருன்னு நிறைய கேள்விகளுக்கு விடை இல்ல. பெரிய மனசு பண்ணி, முதல் படத்துக்கு பரவால்லைன்னு சொல்ற பக்குவம் எனக்கில்ல. எல்லாரையும் அழகா ஆழ வெச்சிருக்க வேண்டிய வாய்ப்பை மிஸ் பண்ணி அழ வெச்சிட்டாங்க ஐஸ்வர்யா. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.
பி.கு - ஸ்ருதிஹாசன் ஏழாம் அறிவு படத்தைவிட இதுல நல்லாவே நடிச்சிருக்காங்க and தனுஷுக்கு இன்னொரு தேசிய விருது கிடச்சிருமோ. அந்த கிளைமாக்ஸ் நடிப்பு, சான்ஸே இல்ல.
பி.கு 2 - படம் பார்த்த அப்பறம், கண்ணழகா பாட்டு இன்னும் நல்லா இருக்கு
பி.கு 3 - சங்கம் தியேட்டருக்கு எதிரா கேஸ் போடலாம்னு இருக்கேன். டயலாக் ஒரு எழவும் சரியா காதுல விழல. சில காட்சிகள் கட் வேற பண்ணிட்டாங்க. தேவில பார்த்த அப்பறம்தான் விமர்சனமா போஸ்டனும்னு இப்போ போஸ்ட் பண்றேன். தேவி தியேட்டர் சவுண்டை அடிச்சிக்க முடியாது. சங்கம் தியேட்டர் ஆளுங்கள புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்.

No comments:
Post a Comment