Sunday, September 18, 2011

எங்கேயும் எப்போதும் - ப.வி

பொதுவா எனக்கு இந்த மாதிரி படங்கள் பிடிக்கறதில்லை. பொழுதுபோக்குக்கு படம் பார்க்க போய், எதுக்கு பாரமான மனசோட வெளிய வரனும்னு ஒரு எண்ணம். எங்கேயும் எப்போதும் அப்படி ஒரு படம்தான். நம்ம முகத்துல அறையரா மாதிரியான மெசேஜ் ஆனா எங்கேயும், யாரையும் அட்வைஸ் டயலாக் பேச விடலை. ஜெய், அஞ்சலி, அனன்யா, ஷர்வானந்த் + படத்துல ஒண்ணு ரெண்டு சீன்ல வர நடிகர்கள் கூட நல்லா நடிச்சிருக்காங்க. சூப்பரான காமெரா, எடிட்டிங். இசை படத்தோட மிகப்பெரிய பலம். அந்த விபத்து காட்சி, ஆடியன்ஸுக்கு தேவையான தாக்கத்தைவிட அதிகமாவே கொடுத்துருக்கு. ஸ்டண்ட் சூப்பர் சுப்பராயன்னு நினைக்கறேன். அசத்திட்டீங்க சார்.

ஆனா படத்துக்கு எப்படி U கொடுத்தாங்கன்னு தெரியலை. கண்டிப்பா சின்ன பசங்களும், இளகிய மனசுக்காரங்களும் பார்க்காதீங்க. ரெண்டு சிம்பிளான காதல் கதைகள், அதை நகைச்சுவையோட சொல்லிருக்கற விதம், நிஜமாவே ஒரு விபத்தை பார்க்கறா மாதிரி / விபத்துல இருக்கறா மாதிரி நடக்கற விபத்து, இப்படி, டைரக்டரோட திறமை படத்துல எங்கேயும் எப்பவும் தெரியுது. கண்டிப்பா பாருங்கனு சொல்ல மாட்டேன், ஆனா கண்டிப்பா பார்க்கலாம். படம் பார்த்து முடிச்சிட்டு, இனிமே பஸ்ல போக போகனுமான்னு நினைச்சீங்கன்னா, அதான் டைரக்டரோட வெற்றி. வாழ்த்துக்கள் சரவணன் சார். இப்படி ஒரு படத்தை எடுக்க முன்வந்ததுக்கு, Hats off முருகதாஸ் + ஃபாக்ஸ் ஸ்டார். 

p.s. - அந்த accident scene, final destination படத்தை நியாபகப்படுத்தினாலும், இன்னும் சிறப்பா எடுத்திருந்தா, இதைவிட பெரிய தாக்கம் ஏற்பட்டிருக்கும். ஆனாலும், நம்ம ஊருக்கு, இந்த மாதிரி படம், ரொம்ப ரொம்ப புதுசு..

Saturday, September 17, 2011

வந்தான் வென்றான் - ப.வி

மங்காத்தா படம் எதனால ஓடுதுன்னே தெரியலைன்னு சொல்றவங்க, தயவு செஞ்சு வந்தான் வென்றான் படத்தைப் பாருங்க, தெரியும். என்னடா முதல் நாளே படம் ஃபுல் ஆகலியேன்னு நினைச்சேன். செய்தி முன்னாடியே பரவி, எல்லாரும் உஷார் ஆகிட்டாங்க போல. உள்ள நுழையும்போதே சில யூத் வார்னிங் பண்ணாங்க. ஆனா என் கிரகம். போய் மாட்டிகிட்டேன். படம் முடிய 30நிமிஷம் இருக்கும்போதே, நிறைய பேர் கிளம்பிட்டாங்க. அவ்வளவு மொக்கை. இல்லை இல்லை, மொக்கைங்கற வார்த்தை கரெக்டா விஷயத்தை கன்வே பண்ணலை. வேற வார்த்தை இருந்தா சொல்லுங்க.

எந்த விஷயத்தைப் பார்த்து இந்த படத்தை ஜீவா ஒத்துகிட்டாருனு தெரியலை. அவருக்கு பெருசா ஒண்ணும் ஸ்கோப் இல்லை. டம்மி. சந்தானமும் இந்த முறை சல்பெடுக்கலை. (அந்த குரல் மாத்தி பேசற காமெடி மட்டும் பரவாயில்லை). டாப்ஸி, டோண்ட் ஸீ. நந்தா படம் முழுக்க ஒரே ரியாக்‌ஷன். வேதநாயகம்னா, ஸாரி ஸாரி, ரமணாணா, பயம். எனக்கு வயத்த வலி, இந்த ரெண்டு டயலாகையும் ஒரே மாடுலேஷன்ல சொல்றாரு. தமனோட இசையும், படத்துல பெரிய நசைதான். ஆக மொத்ததில், இதற்கு மேல் எப்படி கழுவி ஊற்றுவது என்று தெரியவில்லை. விழித்துக்கொள்ளுங்கள் மக்களே. ஜீவாவின் கோ படத்தை மறந்து, அதற்கு முன் நடித்த, சிங்கம் புலி, கச்சேரி ஆரம்பம், தெனவட்டு ஆகிய படங்களை, நினைவு கூறுமாறு, தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

ஒரே ஒரு வருத்தம்தான், இந்த படத்துக்காக, சொட்ட சொட்ட மழைல நனைஞ்சிகிட்டு போனேன். என்னை மாதிரியே நிறைய பேர் ஈரமான மனசோட வந்திருந்தாங்க. படம் முடிஞ்ச அப்பறம்தான் தெரிஞ்சுது, எங்களை பலி கொடுக்க, ஆண்டவனே குளிப்பாட்டிருக்கான்னு. முடியலடா முருகா....