Showing posts with label கதை. Show all posts
Showing posts with label கதை. Show all posts

Wednesday, May 14, 2014

நான் எவ்வளவு பெரிய முட்டாள்???

நிறைய யோசிப்பவர்கள் நிறைய கோட்டை விடுவார்களோ என்ற சந்தேகம் எனக்கு பலமுறை வந்ததுண்டு. ஊரே, "ஆஹா, என்ன அறிவாளிப்பா நீ.. உன்ன மாதிரி ஒரு புள்ள கெடைக்குமா" என்று போற்றப்படும் ஆட்கள் எல்லாம் கண்டிப்பாக சில்லித்தனமான முறையில் தங்களது முட்டாள்தனத்தை காட்டுவார்கள் என்றே நினைக்கிறேன். இதற்கு உதாரணமாக, ஒரு உண்மைச் சம்பவமும், ஒரு கதையும் கைவசம் உள்ளது. முதலில் கதை

பிரபலமான விஞ்ஞானி ஒருவர் தனது ஆராய்ச்சிக் கூடத்தில் அடிக்கடி இரண்டு பூனைகள் வந்து செல்வதைக் கண்டார். பெரிய அறிவு ஜீவியாக இருந்தாலும் சில தொல்லைகளை பொருத்துக் கொள்ள முடியாதோ என்னவோ. பெரியது ஒன்று, சிறியது ஒன்று என அந்தப் பூனைகள் போடும் அட்டாகசங்கள் தாள முடியவில்லை. முக்கியமாக அவை கூடத்திற்குள் வர முயற்சிக்கும்போது ஏற்படுத்தும் சேதாரங்களே அதிகம். அவற்றை விரட்ட முடியவில்லை என்பதால், உள்ளே வருவதில் தானே பிரச்சனை, அதற்கு ஒரு வழி செய்யலாம் என முடிவு செய்து, தனது கூடத்தின் கதவில் ஓட்டை போட முடிவு செய்தார்.

பெரிய பூனைக்கு பெரிய ஓட்டையும், சிறிய பூனைக்கு சிறிய ஓட்டையும் !!!!!

படித்ததும் புரிந்தவர்கள், சிறிது யோசித்து "அட" என நினைத்து புரிந்தவர்கள், இன்னமும் புரியாதவர்கள் எல்லாரும் அடுத்து சம்பவத்தைப் படிக்கலாம்.

ஒவ்வொரும் மாதமும் என் சம்பளத்தில் ஒரு பகுதியை வீட்டிற்கு தருவது வழக்கம். அந்த மாதம் சம்பளம் வந்த பிறகும் ஏதோ காரணங்களால் ஏடிஎம் சென்று எடுத்து வர முடியவில்லை. என் அண்ணன் மகளுக்கு நெட் பாங்கிங் முறையில் தான் ஃபீஸ் கட்ட வேண்டும் என்பதால் எனது அக்கவுண்டிலிருந்து கட்டிவிட்டேன். பதிலாக என் அண்ணன், காசை என் கையில் கொடுத்து விட்டான். இந்தப் பணமும், வீட்டிற்கு தரும் பங்கும் ஏறக்குறைய ஒரே அளவுதான். சரி, கத்தையாகப் பணம் வீட்டில் இருந்தால் செலவாகிவிடும் என்பதால் அதை எனது அக்கவுண்டில் டெபாஸிட் செய்துவிட்டு, வீட்டிற்கு தேவையான காசை எடுக்கலாம் என முடிவு செய்தேன். பேங்க் புறப்படும் வரை யாரும் எனது முட்டாள்தனத்தை சுட்டிக் காட்டவில்லை. 

பேங்கிற்கு சென்று, வரிசையில் நின்று, அக்கவுண்டில் பணத்தை செலுத்திவிட்டு, கீழே வந்து ஏடிஎம் மில் வீட்டிற்காக காசு எடுக்கலாம் என நினைக்கும்போது தான் உறைத்தது. நான் எவ்வளவு பெரிய முட்டாள் என்று !!!

இன்னமும் உறைக்காதவர்கள் எனக்குப் போட்டியாக வரலாம், புரிந்தவர்கள் புரியாதவர்களுக்கு புரிய வைக்கலாம்..  எனக்கும் அந்த விஞ்ஞானிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. அவ்வளவே.. 

Friday, December 26, 2008

கதை பண்றது....Part-3

போன பாகம் --->இங்கே<--- இப்ப, சிறுகதை, எழுத்தில்....

------------------------------------------------------------------------------------------------
ஒரு சின்ன short film ...


டக்.... டக்... டக்....கதவு தட்டும் சத்தம் கேட்டுது.

நான்
என்னோட ஆபீஸ்ல பெருசா வேலை எதுவும் இல்லாம உட்கார்ந்துகிட்டு இருந்தேன். மறுபடியும் கதவு தட்டப்பட்டது. அந்த பசங்கதான் வராங்கன்னு தெரியும். மறுபடியும் டக்... டக்... டக்... எவ்வளவு முறை சொன்னாலும் கேக்கமாட்டனுங்க. சத்தமா "போதும்பா கதவ தட்டுனது உள்ள வா" அப்படின்னேன். உள்ள வரும்போதே "நாங்க தான்னு முன்னாடியே தெரியுமா சார்?"னு கேட்டுகிட்டேதான் வந்தான் ரெண்டு பேர்ல ஒருத்தன்.

"இந்த காலத்துல யாருடா கதவ தட்டிட்டு உள்ள வராங்க, வர எல்லாரும், உள்ள வந்துட்டு, அப்பறம் excuse me சார், may i enter sirனு கேக்கறாங்க. நீங்க மட்டும்தான் கதவ தட்டிட்டு வரீங்க. சரி, இன்னிக்கு என்ன shoot பண்ணிருக்கீங்க?". "நீங்களே பாருங்க sir"னு சொல்லிட்டு, தோள்ல மாட்டிருந்த handy cam baga ஓபன் பண்ணி, கேமரா குடுத்தான், பதில் சொன்னவன். அதுல LCD screena ஓபன் பண்ணி play பண்ணேன்.

வழக்கம் போல ஏதோ நியூஸ் ரீல் மாதிரி ஒரு டாகுமெண்டரி. எடிட் பண்ணாத அந்த footage ஓடிச்சு. இந்த ரெண்டு பசங்கள பத்தி சொல்ல மறந்துட்டனே. இந்த கேமரா குடுத்த பையன், என்னோட சிஷ்யன் மாதிரி. நல்ல creativity இருக்குற, கஷ்ட்டப்படுற பையன். நான்தான் financiala கொஞ்சம் ஹெல்ப் பண்ணி, Visual Communication படிக்க சொன்னேன். கடந்த ஒரு வாரமா, அவனோட நண்பனோட, காலேஜ்ல ஏதோ போட்டிக்காக, ஒவ்வொரு படமா எடுத்து, என்கிட்ட opinion கேட்க வந்துகிட்டு இருக்கான். நானும், அவன வெறுப்பேத்த, எதுவும் நல்லா இல்லன்னு சொல்லிகிட்டே இருக்கேன்.

இந்த படம் முடிஞ்ச அப்பறமும், கேமரா வழக்கம் போல கீழ வெச்சிட்டு, "அப்பறம் சொல்லுங்கப்பா"னு சகஜமா ஆரம்பிச்சேன்.

அவன் - "என்ன sir அப்பறம், எப்படி இருக்குன்னு சொல்லுங்க".

நான் - "எப்பவும் போலதான், ஒரே மாதிரி montage, interview and ஒரே மாதிரி சாதாரணமா இருக்கு".

அவன் - "இதுக்கு மேல எப்படி sir எடுக்க முடியும்"

நான் - "என்னை கேட்டா எப்படி, நீ தான vis com student. நீதான் வித்தியாசமா யோசிக்கணும். இத கொண்டு போய் காலேஜ்ல குடுத்த, அப்படியே எடுத்து ஓரமா வெச்சிட்டு, போயிட்டுவான்னு அனுப்பிருவாங்க"

ரெண்டு பேரும் ஒருத்துர ஒருத்தர் குழப்பமா பாத்துகிட்டாங்க. அப்பறம் அவன், "ஓகே sir, நாளைக்கு நாங்க ஒண்ணு shoot பண்ணிக்கிட்டு வரோம், அத பாத்து நீங்க கட்டாயம் ஷாக் ஆகப் போறீங்க பாருங்க"னு சொன்னான்

"பாக்கலாம் பாக்கலாம். சரி, நீங்க இப்ப கிளம்புங்க, எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு"னு அவங்கள கிளப்பினேன்.

"சரி sir"னு சொல்லிட்டு அவங்க போன நேரம், எனக்கு ஒரு போன் வந்தது. கொஞ்ச நேரம் பேசுன அப்பறம், சரியா சிக்னல் கிடைக்கல, அதனால, "கொஞ்சம் இருங்க sir"னு போன்ல சொல்லிகிட்டே, கதவை திறந்து, balcony வந்து, பேச ஆரம்பிச்சேன். கீழ வேடிக்கை பாத்துகிட்டே பேசும் போது, அந்த ரெண்டு பசங்களும் ஏதோ discuss பண்ணிக்கிட்டு இருந்தாங்க. கொஞ்ச நேரம் கழிச்சு, என்னோட சிஷ்யன் ஏதோ சைகை செய்ய, அவன் நண்பன் வண்டிய ஸ்டார்ட் பண்ணான். "அப்பறம் பேசறேன் sir"னு போன் லைன கட் பண்ணிட்டு, கவனிச்சேன்.

கேமராவும் கையுமா, பின்னாடி உட்கார்ந்த சிஷ்யன், அப்படியே ரெகார்ட் பண்ண ஆரம்பிச்சான். எனக்கு என்ன shoot பண்ண போறாங்கன்னு புரிஞ்சிடுச்சு. நான் பார்த்த அவங்க பாக்கல. சிரிச்சுகிட்டே மறுபடியும் உள்ள போனேன்.

அடுத்த நாள்.

டக்... டக்... டக்... மறுபடியும் சிஷ்யன். "வாங்கப்பா உள்ள, உங்கள கதவு தட்ட வேணாம்னு எவ்வளவு தடவ சொல்றது". ரெண்டு பேரும் உள்ள வந்தாங்க. ஆனா இப்ப எதுவும் பேசாம, என் கைல கேமரா குடுத்துட்டு உட்கார்ந்தாங்க. "எப்படியும் என்ன shoot பண்ணேன்னு சொல்ல மாட்டீங்க, சரி குடுங்க"னு கேமரா வாங்கி play பண்ணேன். நான் நினைச்ச மாதிரியே, வண்டியில் உட்கார்ந்துகிட்டே, வர டிராபிக் எல்லாத்தையும் shoot பண்ணிருந்தாங்க. சிரிச்சிகிட்டே சொன்னேன், "நான் அப்பவே நினச்சேன், நீங்க இப்படிதான் shoot பண்ணுவீங்கனு. எதுக்கும் fulla பாக்கறேன்".

Footage ஓட ஆரம்பிச்சது. போகும்போது இவங்க பேசுனதும் ரெகார்ட் ஆகி இருந்தது. ஒரு அஞ்சு நிமிஷத்துக்கு அப்பறம் போர் அடிக்க ஆரம்பிச்சது. கரெக்டா, அத சொல்லலாம்னு நினைக்கும் போது, ஒரு அதிர்ச்சி. இவங்க வண்டிய நோக்கி ஒரு லாரி வேகமா வர, இவங்க அத கவனிக்கல போல. லாரி வண்டிய மோத, அதுவும் ரெகார்ட் ஆகியிருந்தது. திடீர் சுவாரஸ்யம் தாங்காம பாத்துகிட்டே இருந்தேன். கேமரா கொஞ்சம் நேரம் blank ஆகி, மறுபடியும் உயிர்வரும்போது, கேமராசுத்தி, இல்ல, இவங்கள சுத்தி ஒரு கூட்டம்.

கூட்டத்துல ஒருத்தருக்கொருத்தர் ஏதோ பேச, ஆனா யாரும் எதுவும் உதவி செய்ய முன் வரல. அவங்கள்ல ஒருத்தன், இந்த கேமரா பாத்து அத எடுக்க கைய வெக்க, casseette முடிஞ்சு static வர ஆரம்பித்தது. எனக்கு ஒண்ணும் புரியல. குழப்பத்தோட, கேமரா கீழ வெச்சிட்டு, "என்னப்பா எடுத்திருக்கீங்க"னு கேட்டேன். ரெண்டு பேரும் சிரிச்சுகிட்டே ஒருத்தர ஒருத்தர் பாத்து சிரிச்சிகிட்டாங்க. அப்பறம், மெதுவா காத்துல மறஞ்சிடாங்க.

நிஜமாவே காத்துல மறஞ்சிடாங்க.

அதிர்ச்சியோட, கீழ இருந்த கேமரா பார்த்தா , அதுவும் அங்க இல்ல.
அடுத்த வினாடி,

டக்... டக்... டக்... கதவு தட்டப்பட்டது....

-------------------------------------------------------------------------------------------------

First person narrative was kind of easy to me. So wrote it that way. but the film was not taken as FPN. Here is the video of the short film. I dont have previous experience both in writing short story and taking a short film. So, please excuse me.... thank you...