Sunday, December 21, 2008

கதை பண்றது....Part-2

First part படிக்காத நேயர்கள், -- இங்கே -- போய் படிச்சிட்டு தொடரலாம்...

ரொம்ப கஷ்டப்பட்டு யோசிச்சிகிட்டு இருந்தேன். சில மாதங்களுக்கு முன்ன, "BLOW-UP" அப்படின்னு ஒரு இங்கிலீஷ் படத்த பற்றி, ஆனந்த விகடன்ல படிச்சு, கதை வித்தியாசமா இருந்ததால, டவுன்லோட் செஞ்சு பார்த்தேன். அது ஒரு free-end ஸ்டோரி. அதாவது படத்தோட முடிவை, audience எப்படி வேணும்னாலும் assume பண்ணிக்கலாம். Ok, நாமளும் இத மாதிரி ஏதாவது வித்தியாசமா யோசிப்போம்னு அப்பவே முடிவு பண்ணேன்.

இந்த கதை யோசிப்பு நாட்களுக்கு, சில வாரங்கள் முன்னாடி, விஜய் குமார் அண்ணா, ஒரு பேய் கதை சொன்னாரு. நானும் அவரும் ஒரு நாள் பைக்ல போகும் போது, நான் பின்னாடி உட்கார்ந்துகிட்டே, வழியில வர எல்லாத்தையும் shoot பண்ணேன். அப்ப அண்ணா என்ன சொன்னாரு, "இப்ப நமக்கு accident ஆய்டும், நாளைக்கு நம்மளோட ஆவி, பாலா அண்ணாவுக்கு இந்த படத்த போட்டு காமிக்கும். இந்த accident சீன் அதுல record ஆகியிருக்கும். அந்த சீன் பாத்துட்டு, அண்ணா shockingaa நம்மள பாப்பாரு. நாம சிரிச்சிகிட்டே, புகைல மறந்சிடுவோம். சூப்பரா இருக்கும்ல".

அண்ணா சொன்னது என்னமோ நகைச்சுவைக்காக. ஆனா நான், இத short filma, எடுக்கலாம்னு அப்போ சொல்லி வெச்சிருந்தேன். So, சட்டுனு அந்த கதை ஞாபகம் வந்துச்சு. அதையும் இந்த BLOW-UP கதையையும், மிக்ஸ் பண்ணி, இந்த accident கதைய, ஒரு காமெடி கதையா இல்லாம, ஒரு super natural free-end கதையா மாத்தினேன். ஆனா, இந்த கதைய கேட்ட, 90% மக்களுக்கு, கான்செப்ட் புரியல. மனம் தளராம, நான் explain பண்ண அப்பறம், நல்லா இருக்குன்னு சொல்லுவாங்க.

எங்க சாருக்கும், explain பண்ணினேன். அவரு வேற கதை யோசிக்க சொன்னாரு. ஆனா நான் விடாப்பிடியா, இந்த கதையதான் கடைசில எடுத்தேன். ஆனா நான் நினச்சது போல படம் வரல. So எனக்கு திருப்தி இல்ல. இருந்தாலும், முதல் கதை/short பிலிம், ரொம்பக் கேவலமா இல்லாம, நல்லாவே வந்துச்சுன்னு சொல்லிக்கிற அளவுக்கு எடுத்திருந்தேன். இந்தப் படம் எடுக்கும் போது பல வாழ்கைப் பாடங்கள் கெடச்சுது. So, இப்படியாகத்தானே, நான் எனது முதல் கதையை யோசித்து, முதல் குறும் படத்தையும் (வெற்றிகரமாக) எடுத்து முடித்தேன். முக்கியமான விஷயம், இந்த படத்தோட முடிவு, பல சுஜாதா கதைகளோட பாதிப்புனால....

இந்த பதிவோட அடுத்த பாகத்துல, அந்த கதையும், படமும், உங்க பார்வைக்கு...

ஓபன் பண்ணவுடனே.......

12 comments:

Karthik said...

I'm writing the review for the film!! By tomorrow i'll mail you.. before that chk ma blog! U've been tagged!!!

http://nxgmobz.blogspot.com/2008/12/seven-wit-ties-in-film-kitties.html

Lancelot said...

intha padam patriya vimarsanangalai naama ponna varame parthathunaallla adutha padathukku povom... (oops sun tv top 10 movies effect)...


antha video va podunga boss...antha inspirationla naan oru Ghost story posting today...

கா.கி said...

@karthik
lance sollitara??

@lance
perusa onnum padikkaradhilla, irundhaalum konjam tight schedulea running.. will post once the xam gets over...

Lancelot said...

I jsut gave him the link dint give my review..

கா.கி said...

@lancelot
okey..

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

நன்றி கார்த்திக் கிருஷ்ணா,

//ஏ ஆர் ரகுமானுக்கு என்னாச்சு?//

முதல் வருகையாக என் வலைக்கு வந்து கருத்து சொன்னதற்கு நன்றி.

/இன்றைய இளைஞர்கள் (என் வயசு 20 ;), எப்படி//

என் மகன் (வயது 11)”காற்றில் எந்தன் கீதம்” பாட்டின் இரண்டு interlude கேட்டு ஆடிபோய் விட்டான்.

நான் கானாபிரபா வலையில் போட்ட ஒரு மறுமொழி.

//"அழகி" பட பின்னணி இசை கிழே உள்ள வலையில் No.7 "end credits" closing Title music http://www.dhool.com/sotd2/152.html No.9 Beginning Music http://www.dhool.com/sotd2/153.html

வயலின் கொஞ்சுவார். இன்னும் நெறைய BGM இருக்கு

இப்ப இருக்கிற இசைஅமைப்பாளர்கள் தினமும் மார்கழி மாசம் நாலு மணிக்கு எழுந்து காதுல HEADPHONE மாட்டிகிட்டு கழுத்தளவு சில் தண்ணிரில நின்னுகிட்டு இதெல்லாம் கேட்டு சாதகம் பண்ணனும்.//

அடுத்து சர்தார்ஜி. பிச்சைக் காரர்களில் மலையாளிபிச்சையை கூட பார்ப்பது அரிது.

அடுத்து சிறு கதை எழுதுவதுப்பற்றி:- கிழ் உள்ள வலையில் பார்க்கவும். http://raviaditya.blogspot.com/2008/12/blog-post_06.html

//சிறு கதை எழுதுவது எப்படி?பதிவர்களே படியுங்கள்//

என் சிறுகதைகளையும் படித்து கருத்துச்சொல்லாம்.

ஒரு வேண்டுகோள்:

வேர்டு வெரிஃபிகேஷனை எடுத்து விடுங்கள்.தொல்லை என்று நினைத்து மறுமொழி டாமல்போய்விடுவார்கள்.

20 வயதில் உங்கள் எழுத்தில் நல்ல முதிர்ச்சி.

வாழ்த்துக்கள்!

நன்றி

கா.கி said...

@கே.ரவிஷங்கர்

உங்க மொத வருகைக்கும், பின்னூட்டத்திற்கும், பாராட்டிற்கும் நன்றி...

//கிழ் உள்ள வலையில் பார்க்கவும்//
பார்த்தேன் உபயோகமாக இருந்தது..

//வேர்டு வெரிஃபிகேஷனை எடுத்து விடுங்கள்//
ஸாரி, என்னன்னு புரியலை..

Unknown said...

கார்த்திக்,

//வேர்டு வெரிஃபிகேஷனை எடுத்து விடுங்கள்//
கமெண்ட் போடுவதற்கு முன் நாங்கள்
கிழ் உள்ள process செய்துவிட்டுதான்
கமெண்ட் போட முடியும். It irriates bloggers.

அந்த Process:

This blog does not allow anonymous comments.
WORD VERIFICATION
Type the characters you see in the picture above.

How to remove word verification:

நீங்கள் settings >comments >Show word verification for comments? Yes அல்ல்து No வரும்.
No வை click செய்யவும்.

நன்றி

கா.கி said...

ok, sure...

swathi paul(dew drop) said...

Why did you take such a long time to write a post on your movie?????whats your next project?????

கா.கி said...

@karthik
nandri...



@swathi
long time in the sense????

wat project??