Saturday, January 30, 2010

GO-வா??? Comeமா??

யப்பாடா, ரொம்ப நாள் கழிச்சு பதிவு போட ஒரு மேட்டரும், ரொம்ப நாள் கழிச்சு, நல்லா பொழுதை கழிக்க ஒரு படமும் கிடைச்சது. படம் அட்டகாசமா இல்லைனாலும், அமர்க்களமா கீது. வேற யார் சொன்னாலும் கேட்காதீங்க. முக்கயமா, காசு வாங்கிட்டு review எழுதற, sify மற்றும் rediff மாதிரி வெப்சைட்ஸ நம்பாதீங்க. ஏன், கேபிளாரே படம் நல்லா இல்லைன்னு சொன்னாலும் ஏத்துக்காதீங்க. உங்களுக்கு சென்னை 28, சரோஜா புடிச்சிருந்தா, இந்த படம் 198% பிடிக்கும். அந்த மீதி இரண்டு சதவீதம் எங்க போச்சுன்னு போகப் போக சொல்றேன்.

எல்லாரும் நினைச்ச, வெங்கட்பிரபு சொன்ன கதைதான். மூணு பொரம்போக்கு பசங்க, பாரின் பிகர உஷார் பண்ணி, பாரின்ல செட்டில் ஆகலாம்னு கனவோட கோவா போய், அங்க பண்ற விஷயங்கள்தான் கதை. இந்தப் படம், கதைன்னு சொல்றதை விட, சம்பவங்களோட தொகுப்புன்னு சொல்றது பொருத்தமா இருக்கும். படத்தை மூணு பகுதிகளா பிரிக்கலாம்..

1. மூணு பசங்க, அவங்க வாழ்க்கை, அவங்க கோவா போறது
2. கோவால அவங்க அவங்களுக்கு ஏத்தமாதிரி பொண்ணுங்கள கரெக்ட் பண்றது (கூடவே அந்த சம்பத்-அரவிந்த்-பிரேம்ஜி காதலும்)
3. கடைசியா, சினேஹா எபிசொட். அவங்ககிட்டேர்ந்து திருடறது.

படத்துல பல பிளஸ்களும், சில மைனஸ்களும் இருக்கு. ஆனா, படம் முடிஞ்சு வெங்கட்பிரபு பெயர் வரும்போது, ரசிகர்களோட கைத்தட்டல், அவங்க அந்த மைனஸ்கள ஒரு பொருட்டா எடுத்துக்கலைன்னு காமிக்குது. முதல் இருபது நிமிஷமும், தமிழ் படத்துக்கு வந்துட்டமோன்னு  சந்தேகப் படவைக்குது. தமிழ் சினிமால வர, கிராமத்து அத்தியாயங்களை அநியாயத்துக்கு கலாச்சிருக்காங்க. அப்பறம் வர எல்லாம் நமக்கு பழக்கப்பட்ட விஷயங்களா இருந்தாலும், நகைச்சுவையான முறைல, புதுமையா ப்ரெசென்ட் பண்ணிருக்காங்க. படத்துல அங்கங்க வர சின்னச் சின்ன கிராபிக்ஸ் சூப்பர்.

நடிப்புன்னு பார்த்தா, மூணு ஹீரோவுக்குமே சரிசமமா முக்கியத்துவம் கொடுத்திருந்தாலும், ஒண்ணு ரெண்டு இடங்கள்ல, பிரேம்ஜி ஸ்கோர் பண்றாரு. அந்த புலி உறுமுது பைட் வரும்போது, தியேட்டரே சிரிப்புல உறுமுது. ஜெய்யோட ஓட்டை இங்க்லீஷ், வைபவ்வோட சின்ன வீடு ரீ ரிக்கார்டிங் ரியாக்ஷன்ஸ், எல்லாமே காமெடி. அது ஏன் வைபவுக்கு மட்டும், படத்தோட கடைசி frame வரை ஜோடி சேர்க்க தயங்குராங்கன்னு தெரியலை. இந்த படத்துல வர பல புதுமையான விஷயங்கள்ல, நான் குறிப்பா நோட் பண்ணினது, ஒரு குண்டான ஆள் ஒருத்தர்.

 அவர் குண்டா இருக்கறது புதுமை இல்ல. அவரே, படம் முழுக்க, எக்கச்சக்கமான ரோல்கள் பண்ணிருக்கார். எல்லாமே அருமை. இந்த விஷயத்தை ஏதோ ஒரு இங்கிலீஷ் படத்துல பார்த்தா மாதிரி நியாபகம். ஆனா சரியா நினைவுல இல்லை. சம்பத்தும் அரவிந்த் ஆகாஷும், நாம நினைச்சா மாதிரி "அவிங்க" தான். ஆனா, ஒரு ஆபாசம் இல்லாம, விரசம் இல்லாம, கொச்சைப் படுத்தாம, நகைச்சுவையா அவங்க உறவை சித்தரிச்ச்சதுக்கு, ஒரு சபாஷ். முக்கியமா சம்பத்தின் நடிப்பு, டாப் கிளாஸ். படத்துல வர மத்த நடிகர்களும், அவங்களோட பங்குகளை மிகச்சரியா செஞ்சிருக்காங்க.

பிரசன்னா, சிம்பு, நயன்தாரா மற்றும் வெங்கட்பிரபுவோட கவுரவ தோற்றங்களும் திணிப்பா தெரியாமா, படத்தோட ஒத்துப் போயிருக்கு. மியூசிக், காமெரா, எடிட்டிங். ஆர்ட் எல்லாமே நல்லா பொருந்தியிருக்கு.படத்துல பல டிவிஸ்ட் இருக்கு. ரொம்ப சீரியஸா போகும்னு நினைக்கற பல விஷயங்கள செம்ம காமெடியா முடிச்சிருப்பாங்க. எதிர்பார்ப்பு மொக்கையானுலும், கண்டிப்பா நம்மால ரசிக்க முடியும். அடுத்து, முதல்ல விட்டுப்போன அந்த ரெண்டு பெர்சென்ட் எங்க போச்சுன்னா, தேவையில்லாத இரண்டு பாடல்கள் (இடை வழி, அடிடா நையாண்டிய), ரெண்டு மூணு தடவைக்கு மேல அலுத்துப்போகும் பிரேம்ஜி - கண்கள் இரண்டால் காமெடி.

ரொம்ப சீரியஸா போகும்னு நினைக்கற சில விஷயங்கள் செம்ம காமெடியா முடிச்சிருப்பாங்கனு சொன்னேன் இல்லையா, அதையே சில பேர் மொக்கைனு எடுத்து, படத்தை வெறுக்கலாம். எது எப்படியோ, எனக்கு படம் ரொம்ப பிடிச்சிருந்துது. இன்னொரு முறையும் பார்க்க போறேன். ரொம்ப என்ஜாய் பண்ணேன். கண்டிப்பா நண்பர்களோட பாருங்க, நீங்களும் நல்லா என்ஜாய் பண்ணுவீங்க. So, படம் கண்டிப்பா கோ-வா தான். அதாங்க, எல்லாரும் போயிட்டு வரலாம். ஜரகண்டி ஜரகண்டி ஜரகண்டி.

p.s.சென்சார் மேல மறுபடியும் எனக்கு சந்தேகம் வருது. என்ன ஹேருக்காக இந்த படத்துக்கு A குடுத்தாங்கன்னு இன்னும் புரியலை. அந்த gay தீம் மட்டும் தான் காரணம்னா, நான் ஒண்ணு கேட்க விரும்பறேன். Shriya, Almost அவுத்துப்போட்டு ஆடுன கந்தசாமி படத்துக்கு எதனால U குடுத்தீங்க?? ஒருவேளை homo-sexual தீம் மட்டும்தான் பிரச்னை போல. Straighta இருந்தா U குடுப்பாங்களோ????

p.s.2 - இல்லை. சினேகா பிகினில வரலை..

பெத்த கல்லு, சின்ன லாபமு, சின்ன பிலிமு பெத்த லாபமு...

Saturday, January 9, 2010

2 புத்தகங்கள், 2 திரைப்படங்கள், 21 பாடல்கள்...

புது வருஷத்துக்கு முன்னாடியும் பின்னாடியும், பார்த்த, கேட்ட, படித்த சில விஷயங்களைப் பற்றி சொல்ல விரும்பறேன். முதல்ல அந்த இரண்டு புத்தகங்கள்..

முதலில் படித்தது, சேட்டன் பகத் எழுதின "2 STATES". ஒரு மசாலா காதல் கதை. முக்கால்வாசி, நகைச்சுவை கலந்து எழுதியிருக்கார். ஒரு ஹிந்தி/தெலுங்கு படம் பார்த்தாமாதிரி இருக்கு. தமிழர்கள ரொம்பவே நாசூக்கா கிண்டல் பண்ணிருக்கார். அதுக்கு சமமா, பஞ்சாபி அம்மாக்களையும். நடுவுல ரெண்டு தூய "சென்"தமிழ் கெட்ட வார்த்தைகள் வேற வருது (ஆனா தப்பா ஸ்பெல் பண்ணிருக்கார்;) எளிமையான மொழி நடைல, எனக்கே புரியறா மாதிரி எழுதியிருக்கறது, சிறப்பு. ஒரு முறைக்கு மேல படிக்கமுடியல. கதைல எனக்கு கொஞ்சம் ஷாக்கிங்கா இருந்தது, அந்த ஒரு லைன் தான். காதலித்த ரெண்டாவது வாரத்துல வருது இந்த dialogue. "one thing led to another and within two weeks we had sex". அடப்பாவி மக்கா. ஏதொ சமோசா சாப்டா மாதிரி அசால்டா சொல்றானேன்னு இருந்துச்சு. நான் இன்னும் அவ்வளவு பக்குவப்படலை. (நான் கொஞ்சம் கன்ஸர்வேடிவாக்கும்).

இரண்டாவது புத்தகம், பத்ரி சேஷாத்ரியின் அருமையான மொழிபெயர்ப்புல வந்திருக்குற ஷெர்லாக் ஹோம்ஸ் புத்தகம். எனக்கென்னமோ, சுஜாதா தமிழாக்கம் செஞ்சது மாதிரி இருந்தது. தேவையில்லாத வார்த்தைகள போடாம, போர் அடிக்காம இருக்கு. ஆனா, சில இடங்கள்ல, வாண்டுமாமா காமிக்ஸ் படிக்கறா மாதிரி, சின்னபிள்ளைத்தனமா இருந்தது. ரொம்ப நாளா ஷெர்லாக் ஹோம்ஸ் படிக்கணும்னு காத்துகிட்டிருந்த என்ன மாதிரி ஆளுங்க மிஸ் பண்ண கூடாத புத்தகம். கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்காங்க. முடிஞ்சா படிங்க.

அடுத்து பார்த்த இரண்டு படங்களும், அனிமேஷன் படங்கள். kung-fu panda & Bolt. அதென்னமோ, பிக்ஸார் படங்கள ரசிக்கற அளவுக்கு, வேற எந்த அனிமேஷன் படங்களையும் ரசிக்க முடியலை. இந்த bias முன்னாடியே இருந்தாலும், அத ஒதுக்கி வெச்சிட்டு, எப்படியாவது இந்த படங்களை பிடிக்க வெச்சிக்கணும்னு நெனச்சேன். ஆனா என்ன செய்ய, நான் அவ்வளவா இம்ப்ரெஸ் ஆகலை. Bolt படம், truman show படத்தோட animated வெர்ஷன்னு சொல்லலாம். kung-fu panda கிளைமாக்ஸ் மட்டும் புடிச்சிருந்தது. இரண்டு படங்கள்லயும் vfx நல்லா இருந்தாலும், திரைக்கதைல கொஞ்சம் தொய்வு. ரொம்ப மோசம் இல்லை. ரொம்ப சூப்பரும் இல்லை.

புதுசா ரிலீசாகியிருக்குற புதுப்படப் பாடல்கள் எல்லாமே நல்லா இருக்குறா மாதிரி இருக்கு. முதல்ல வந்தது, தமிழ் பட பாடல்கள். ஒரு சாதாரண விஜய் படத்தோட பாடல்கள் எப்படியிருக்குமோ அப்படியிருக்கு. சின்சியரா பண்ணியிருக்காங்க. பாடல் வரிகள் இன்னும் தமாசு. கண்டிப்பா கேளுங்க. எனக்கு பிடித்த பாடல்கள், பச்சை மஞ்ச, குத்து விளக்கு, ஓ மஹாசீயா...

அடுத்து வந்த அசல் பாடல்கள், அஜித் ரசிகர்கள திருப்தி படுத்தல. (என் அண்ணனுக்கு பிடிக்கலை) காலேஜ் விட்டு, வீட்டுக்கு வந்ததுமே என் அண்ணன் புலம்பினத கேட்டேன்.
என்னதான் முயற்சி பண்ணாலும், ஒரு prejudiced opinion வந்து உட்காந்துருச்சு. ஆனா, அவ்வளவு மோசம் இல்லை பாடல்கள். நல்லாதான் கீது. தன்னோட வழக்கமான பாணிய விட்டுக்கொடுக்காம, அதே சமயம், புதுசாவும் முயற்ச்சி பண்ணிருக்கார் பரத்வாஜ். ஆனா, அவர் பாடின பாடல் மட்டும் எனக்கு பிடிக்கலை. அவர் குரல் எனக்கு புடிக்காததும் ஒரு காரணமா இருக்கலாம். ஒரு வேளை, படம் வந்த அப்பறம் பாடல்கள் ஹிட் ஆகலாம். வரலாறவிட மோசமான பாடல்கள் இதுல இல்லைன்னு நினைக்கறேன். எனக்கு பிடித்த பாடல்கள், ஹே துஷ்யந்தா, குதிரைக்கு தெரியும் (கவிப்பேரரசின் பலான வரிகளில்) & டொட்டடொய்ங் (கண்டிப்பா குழந்தைகளுக்கு பிடிக்கும்)...                  

கோவா..................... என்ன சொல்றதுனே தெரியலை. எல்லாரும் ரசிக்கிற மாதிரி கண்டிப்பா ஒரு பாட்டாவது இருக்கு இந்த படத்துல. எனக்கு almost எல்லா பாடல்களுமே பிடிச்சிருக்கு. ஏழேழு தலைமுறை பாடலுக்கு இசை, ராஜாவா, யுவனான்னு சொல்ல முடியாத அளவு இருக்கு. இது வரை பாடல், முத்திரை படப் பாடல நினைவு படுத்தினாலும், கேட்க அழகாயிருக்கு. இடை வழி பாடல், வித்தியாசமான, ரசிக்ககூடிய முயற்சி. பென்னி தயாள் மட்டும் கொஞ்சம் ஓவரா பாடுறார். விவகாரமான வரிகள் இருக்குற வாலிபா வா வா பாடலோட இரண்டாவது சரணத்துல வர்ற அந்த ரீதி கௌளை fusion அட்டகாசம் (பார்ரா). அடிரா நையாண்டிய, கண்டிப்பா பட்டி தொட்டி எங்கும் ஒலிக்கக்கூடிய இசை. அதிசயமா, தீம் சாங் என்னை அவ்வளவா ஈர்க்கலை. மொத்தத்துல, வெங்கட் பிரபு-யுவன் கூட்டணியில, மற்றுமொரு வெற்றிகரமான இசை.

p.s. இந்த மூணு படத்துலயும் மொத்தமா 21 பாடல்கள் இருக்கு.
p.s.2 அவதார் 3d படத்துக்கு இன்னும் டிக்கெட் கிடைக்கலை :(
p.s.3 மறுபடியும் முதல்லேர்ந்து படிங்க...

 வேட்டைகாரன்னு இதே மாதிரி ஒரு படம் வந்துருக்கு...

Friday, January 1, 2010

எண்ணிப் பார்த்தேன் - 2009 (பாகம் 2 )

முதல் பாகம் கொஞ்சம் scroll down பண்ணா பார்க்கலாம். இல்ல இங்க கிளிக்குங்க.

ரசித்த பாடல்கள்
உன் மேல ஆசைதான் - ஆயிரத்தில் ஒருவன்
புலி உறுமுது - வேட்டைக்காரன்
சுத்துது சுத்துது - கண்டேன் காதலை
அது ஒரு காலம் - அதே நேரம் அதே இடம்
ஒரு தேவதை - வாமனன்
ஏறத்தாழ ஏழு மணி - பேராண்மை
ஆடுங்கடா - நாடோடிகள்
பச்சை மஞ்ச - தமிழ் படம்
வாடா மாப்புள - வில்லு
நான் தருமண்டா - குங்குமப்பூவும் கொஞ்சும்புறாவும் 

பிற மொழிகளில்
Hindi

Chiggy Wiggy - Blue
Masakali - Delhi 6
Dhan te dan - Kaminey        
Hichki Hichki - Paa   
Telugu
Evade Subramaniam - koncham Ishtam koncham Kashtam
Edho Edho - Sasirekha Parinayam
English
We Made you - Relapse (eminem)  

மொக்கை வாங்கியப் படங்கள்

வில்லு - விமர்சனம்
படிக்காதவன் - விமர்சனம்
கந்தசாமி - விமர்சனம் --> இங்க
மாசிலாமணி  - விமர்சனம் --> இங்க
மோதி விளையாடு - விமர்சனம் --> இங்க
ஆதவன் - விமர்சனம் --> இங்க
வேட்டைக்காரன் - விமர்சனம் --> இங்க

SPECIAL MENTIONS

பள பளக்குற, விழி மூடி - அயன் 
ஹசிலி பிசிலி - ஆதவன்
கரிகாலன், நான் அடிச்சா - வேட்டைக்காரன்
முத்தம்மா - அழகர் மலை
வெள்ளைகாரி, பாதி காதல் - மோதி விளையாடு
ஓ மஹாசியா, குத்து விளக்கு - தமிழ் படம்
ஓம் ஷாந்தி ஓம் - முத்திரை
சீர்மேவும் கூவத்திலே - யோகி
வானம் எல்லை - உன்னைப்போல் ஒருவன்
நினைத்தும், பார்க்க முடியாம போன படங்கள் - அவதார், ஈரம், வெண்ணிலா கபடி குழு, மகதீரா, பேராண்மை, ரேணிகுண்டா, நான் கடவுள், சர்வம்...

இந்த வருடம் என் பதிவுலகத்துல மறக்க முடியாத வருடம்னு சொல்லலாம். என்னையும் நம்பி ஒரு 25 followers கிடைச்சாங்க. நிறைய புதிய பதிவர்கள், பதிவுகளப் பற்றி தெரிஞ்சுகிட்டேன். பதிவுலகத்துல நடக்கற கருத்து மோதல்கள் பற்றியும், சீரியஸா பதிவு எழுதற சிரிப்பு போலிஸ் பதிவர்களையும் பாத்து நல்லா சிரிச்சேன். பதிவுகள்னு பார்த்தா, அவ்வளவா டைம் கிடைக்காம, கொஞ்சம் கஷ்டப்பட்டேன்னே சொல்லணும். போன பதிவுல சொன்ன மாதிரி, கொஞ்சம் கமேர்ஷியலா சிந்திக்க ஆரம்பிச்சு இப்போ திருத்திகிட்டேன். புது வருடத்துல செந்தமிழ்ல எழுத ஆரம்பிக்கலாம்னு இருக்கேன். பார்ப்போம். 

என் வாழ்க்கைலன்னு பார்த்தா, இந்த வருடம் முக்கியமான ஒரு விஷயம் நடந்தது. எங்க காலேஜ் music ட்ரூப்ல சேர்ந்தேன். ஜெயா டிவி சகலகலா கல்லூரி overall trophy ஜெயிச்சோம். நானும் ஒரு பாடகன்னு எங்க காலேஜ்ல நம்ப ஆரம்பிச்சாங்க. முதல் முறையா ஒரு industrial visit போனேன். மூணு செமஸ்டரும் வெற்றிகரமா clear பண்ணிட்டேன். இன்னும் ஒண்ணு தான். அதுக்கு அப்புறம் வேலைக்கு போகணும். முதல் முறையா சிறந்த சில நண்பர்களும் நண்பிகளும் கிடைச்சாங்க. இப்படி நிறைய முதல்கள் இந்த வருஷம். சுத்தி இருக்குற மனுஷங்ககிட்டேர்ந்து நிறைய கத்துகிட்டேன். சில விஷயங்கள், திரும்ப திரும்ப prove ஆச்சு. சில பேர் அத prove பண்ணாங்க. இன்னொரு முக்கியமான விஷயம், வருடம் ஆரம்பம் ஆகும்போது கொட்ட ஆரம்பிச்ச முடி, இன்னும் நிக்கல. கடவுள் புண்ணியத்துல சொட்டையாகாம இருக்கேன். நல்ல டாக்டர போய் பாக்கணும். இப்போதைக்கு அவ்வளவே. பாருங்க, போன வருஷம் எழுத ஆரம்பிச்ச பதிவு, இந்த வருஷம் வந்துருச்சு. நான் ஜகா வாங்கிக்கறேன். அடுத்த வாரம் மீட்டலாம்..