Saturday, July 25, 2009

மோதி, உடைந்தோம்.....

எனக்கு மட்டும்தான் நேரம் சரியில்லைனு நினைச்சேன். என் நண்பர்களுக்கும் சரியில்லை. ஏன், தமிழ் சினிமாவுக்கே நேரம் சரியில்லை. நம்மாளுங்க, நல்ல படம் எடுக்க போட்டி போடறாங்களோ இல்லையோ, யார் மோசமான படம் எடுக்கறதுன்னு நல்லாவே மோதி விளையாடறாங்க. நல்ல production values மட்டுமே, ஒரு படத்தை காப்பாற்ற முடியாதுன்னு மறுபடியும் நிரூபிக்கற படம்தான் மோதி விளையாடு...

மொத்தம் எட்டு பேர், 2.5 மணி நேரம், தலைக்கு 50 ரூவா, மூச்சுத் திணறத் திணற மொக்கை வாங்கினோம் பாருங்க. மாசிலமணியவிட ஒரு மொக்கையான படம் வராதுன்னு நினைச்சேன் (குருவி பார்க்கும்போதும் same பீலிங்க்ஸ்), ஆனா இந்தப் படம் 15 முறை ATM படத்தை பார்த்த effect தருது. கதை நல்லாத்தான் இருக்கு. எடுத்த விதம் தான் why blood same blood. நான் பெற்ற இன்பமோ / துன்பமோ, பெருக இவ்வையகம். So, கதைய நான் சொல்ல மாட்டேன். தைரியம் இருந்தா நீங்களே பார்த்து தெரிஞ்சிக்கங்க.

நடிப்புகள பார்க்கும் போது, நம்ம கலாபவன் மணிய, குழந்தையப் போட்டு தாண்டி, கற்பூரம் அடிச்சு சத்தியம் பண்ணி சொன்னாலும், கொடீஸ்வரர்னு நம்பமுடியலை. வினய் பணக்கார வீட்டுப் பையன் வேஷத்துக்கு நல்லாவே போருந்தறார். ஆனா, ஏன்யா உனக்கு இந்த கொலை வெறி. தலைகீழாகத்தான் குதிக்கப்போகிறேன்னு சொல்றா மாதிரி, சொந்தக் குரல்லதான் பேசுவேன்னு பேசி, டோட்டல் damage பண்ணிட்டார். சகிக்கலை. ஹீரோயினி வழக்கம் போல, வராங்க, பாடுறாங்க, ஆடுறாங்க, ஹீரோவா உற்சாகப் படுத்தறாங்க, போறாங்க.

படத்துல நிஜமான relief, சந்தனாம், மயில்சாமி & ஹனீ ஃபா. மூணு பேருமே காமடியில கலக்காறாங்க. தியேட்டர்ல வந்த 3 விசில் சத்தங்கள்ள, ஒண்ணு, சந்தானம் காமடிக்கு, ரெண்டு, மயில்சாமி காமடிக்கு, மூணு, மோதி விளையாடு பாட்டுல வர தேவாவுக்கு. அழகான காமிராவைக் கூட, மோசமான திரைக்கதை பின்னுக்குத் தள்ளுது. எடிட்டிங், சில இடங்களில் நல்லா இருந்தாலும், பெருசா சொல்லிக்கறா மாதிரி ஒண்ணும் இல்லை. பாடல்கள் சுமார் ரகம். படத்தோட லோகேஷங்கள்ள பயங்கர குழப்பம். சென்னைனு சொல்லி பாண்டிச்சேரிய காட்டலாம், மலேசியாவ காட்டலாமோ???

இந்தப் படத்துக்குப் போகலாம்னு சொன்னதால என் மேல தான் என் நண்பர்கள் எல்லாருக்கும் காண்டு. படம் ஆரம்பிச்ச 20 நிமிடத்தில் ஒருத்தன் தூங்கிட்டான். இரண்டாவது பாதியின் நடுவிலேயே இன்னும் ரெண்டு பேரு கிளம்பிட்டாங்க. ஆனா நான் அசருவனா, வில்லு படத்தையே பார்த்த ஆளாச்சே. மன தைரியத்தோட, முழுசையும் பார்த்துட்டுதான் வந்தேன். இல்லைனா உங்க எல்லாரையும் காப்பாற்ற முடியாதே. வீட்டுக்கு வந்ததும், முதல் வேலையா, தலைல சொட்டை விழுந்துருக்கான்னு கண்ணாடியில பார்த்தேன். நல்ல வேளை, எதுவும் இல்லை.

ஆகவே, மக்களே, ரொம்ப போர் அடிச்சா, சன் டிவியில போடுற டப்பிங் படத்த கண் கொட்டாம பார்த்துட்டு, குப்புற படுத்துக்கங்க. நான் இவ்வளவு சொல்லியும், "இல்லை, நீங்க தப்பா புரிஞ்சுண்டேள், படம் அப்படியெல்லாம் இல்லை"னு யாரவது சொன்னீங்க, உங்க வீட்டுக்கு, ஷேர் ஆட்டோல, ATM, ஏகன், வில்லு, குருவி, கீதை, உதயா, ஆஞ்சநேயா, ஜனா படங்கள் அடங்கிய DVD, தேடி வரும்.....

இவர் பேரு வினய். இந்தப் படத்தப் பார்த்தது நான் செஞ்ச வினை.....

11 comments:

kanagu said...

செம விமர்சனம்... சரண் படிச்சா செத்தார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

சரண் படம் கொஞ்சம் நல்லா இருக்கும்னு எதிர்பார்த்தேன்.. சொதபிட்டார் போல இருக்கே..

கடைசி பத்தி கலக்கல் :)

Cable சங்கர் said...

நல்லா எழுதறீங்க..வாழ்த்துக்கள்.

உங்கள் ராட் மாதவ் said...

விமர்சனம் நன்றாக இருக்கின்றது. வாழ்த்துக்கள்.

Unknown said...

இந்த படத்தை பார்த்து படம் பாக்கற ஆசையே போச்சு....

கா.கி said...

@kanagu - நன்றி... நன்றி... நன்றி... தலைய என்ன பண்ணுவாரோ

@cable sankar - வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி...:)

கா.கி said...

@rad - நன்றி...

@saranya - ஹய்யா, எனக்கும் ஒண்ணும் ஆகலியே...

Blogeswari said...

Wonderful post - loving this blog

Thanks for correcting me on my post buddy

கா.கி said...

@blogeswari
Nandri... :)

u r welcome... :))

Karthik said...

Ajith Saar... Ushaara irundukonga.. ippa kooda kethu pogala... Cancel pannitu vandudunga!! :D

Aparajita said...

I couldn't read any of this...I don't even know what language this is, but I visited your blog to say this:
Thank you for visitng the blog of the ABC Club. But I wonder what would make the ABC club different from thousands of other publications and websites out there in the world if we were to do plain reviews and overviews of books.Do not expect a review there. The ABC Club focuses on discussions or critiques of books, not on reviews. Reviews can be read anywhere, but critical, analytical discussions are what that blog specialises in. Maybe we don't do them good enough, but at least we try to be different. Hope you keep visiting us.

கா.கி said...

@ aprajitha
hi, the language is tamil, tats wy u couldnt read any of it.

Plain reviews and overviews doesnt really make any blog stand out from others, but u can do it in ur special way (if u r interested and if u can) tak for instance, We can see so many reviews and overviews abt films in web but we will hav some of our favs. tats wat i was trying to say. ur post looked lik a teaser. there is nothing much abt the book itself. u gav a glimpse of it so that new readers wil start reading it. Ur initiative is different and i want the 'different' thing to be on all aspects, tats wy i commented. All the best and thanks for ur visit. :))