Sunday, May 30, 2010

மற்றும் பல...

இனிமே, பதிவு எழுத நேரமே இல்லைன்னு சொன்னா, அடுத்த நிமிஷமே மக்கள், "ஆமா, நீங்க ரொம்ப பிஸி, அதான, அட போயா"னு கத்தறாங்க. அதனால, இனிமே அப்படி சொல்ல வேணாம்னு பாக்கறேன். இருந்தாலும், திடீர் திடீர்னு காணாம போறதுக்கு காரணம் இருக்கணும் இல்லையா, அதுவும் இல்லாம என் ரசிகப் பெருமக்கள் வேற வருத்தப்படுவாங்களா, அதனாலா ஒரு சின்ன விளக்கம் கொடுக்க கடமை பட்டிருக்கேன்..

பதிவு எழுதாம இருக்கா இப்போ ரெண்டு காரணங்கள் இருக்கு. ஒண்ணு, சின்னதா நான் ஒரு internship பண்ணிக்கிட்டு இருக்கேன். அடுத்து, i just run of ideas a bit fast. தொரை இங்கிலீஷ் எல்லாம் பேசுதேன்னு நினைக்காதீங்க, தமிழ்ல கரிக்டா சொல்ல முடில. மனசுல இருக்கறத, சரியா பதிவு வடிவத்துக்கு மாத்த முடியல. வேற சில பிரச்சனைகளும் இருக்கு. ஆனா, அதெல்லாம் ஒரு நாலு வருஷம் கழிச்சு சொல்றேன், ஞாபகப்படுத்துங்க.
------------------------------------------------------------------------------------------------------------------
திரை விமர்சனப் பதிவுகள், ரொம்பவே clicheவா ஆகிட்டு வருது. வார்த்தைப் பிரயோகம், பாராட்டும்/திட்டும் விதம், எல்லாமே ஒரே மாதிரியா இருக்கு. என்னோட சில விமர்சனங்களும் அப்படி மாறி வர்றத உணர்ந்து தான், ஒரு பத்தில விமர்சனம் பண்ணலாம்னு முடிவுக்கு வந்தேன். இருந்தாலும், இன்னமும் நம்ம கேபிள் ஷங்கர் சாரோட பதிவுகளுக்கு, ஹிட்ஸ் குவியுது. அவர், சத்யம் தியேட்டர், சன் டிவி, ஏ.ஆர்.ரகுமான் மாதிரி ஆகிட்டார்.
------------------------------------------------------------------------------------------------------------------
சுறாவோட தாக்குதல்ல இருந்து தப்பிச்சிட்டேன். வழக்கம் போல விஜய், "படம் ஹிட்டு"ன்னு பெட்டி குடுக்க, அடுத்த நாளே ரெட் கார்ட் போடப் போறாங்கன்னு செய்தி வருது. இதையே படமா எடுத்துருக்கலாம், செம்ம காமெடியா இருந்திருக்கும் and இரும்புகோட்டை முரட்டு சிங்கம், எனக்கும் ரொம்ப புடிச்சுது. முக்கியமா, அந்த translator சாம்ஸ் மற்றும் பாஸ்கர், காட்சிக்கு காட்சி கோல் அடிக்கறாங்க. பாடல்கள் ஒண்ணும் வேலைக்கு ஆகல. மறுபடியும், ஜி.வி.பிரகாஷ்சுமார் தான். முக்கியமா, குழந்தைகள் படத்துல, அந்த லக்ஷ்மி ராய் பாட்டு, totally irrelevant...
------------------------------------------------------------------------------------------------------------------
இதுக்கு முன்னாடி, என் ஆங்கில அறிவுக்கு வந்த சோதனையைப் பத்தி எழுதியிருந்தேன். ஆனா, இப்போ யோசிச்சுப் பார்க்கும் போது, இந்த இரண்டு வருடங்கள்ல, என் ஆங்கிலம் கொஞ்சம் நல்லாவே improve ஆகிருக்குன்னு நினைக்கறேன். சில வார்த்தைகள், வாக்கியங்கள், பீட்டர்ல மட்டுமே சிந்திக்க வருது. முக்கியமா, சில ஆங்கில வார்த்தைகளுக்கு இணையான தமிழ் வார்த்தை கிடைக்கவே மாட்டேங்குது. (and vice-versa). எப்படியோ, நானும், பீட்டர்ல கொஞ்சம் சீன் போட முடியும்னு நம்பிக்கை வந்திருக்கு. பார்க்கலாம், 'எதாவது' நடக்குதான்னு... ;)
------------------------------------------------------------------------------------------------------------------
வேலை இன்னும் கிடைக்கல, கிடைச்ச அப்பறம் கண்டிப்பா சொல்றேன்.
------------------------------------------------------------------------------------------------------------------
"உன் பிரச்சனைக்கு அவன் காரணமா, இல்ல இவன் காரணமா இல்ல அந்த பொண்ணு காரணமா"னு கேள்வி கேட்ட என் நண்பன் கிட்ட, சமீபத்தில் நான் உதிர்த்த தத்துவம்.. "நடந்தது, நடப்பது, நடக்கப் போவது, எல்லாத்துக்கும் என் எண்ணமும் செயலும் மட்டுமே காரணம். வேற யாரும் இல்லை. அதனால FV". (fv means freeya vidu). கரெக்டாதன சொல்லிருக்கேன். Sometime i get too philosophical you see.. :P..

இந்த நேரத்துல, வேற ஒரு காமெடி நினைவுக்கு வருது. போன வருஷம், என் பேரைச் சொல்லி, எடை பாக்கற மெஷின்ல, என் நண்பிகள் சில பேரு, சீட்டு எடுத்தாங்க, (என்ன பாசம் பாருங்க) அதுல என்ன போட்டிருந்துதுனா, "நீங்கள் சிந்தித்து கொண்டே இருப்பாதால், உங்களால் வாழ்க்கையில் முன்னேற முடியாது". இப்போ நினைக்கறேன், "So true"
------------------------------------------------------------------------------------------------------------------
நிறைய விஷயம் சொல்லிட்டேன்னு நினைக்கறேன். அடுத்த பதிவுக்கு கொஞ்சம் மிச்சம் வெக்கறேன். மீண்டும், மீண்டு வருக... இப்போதைக்கு நான் ஜூட்டு...

எங்க போயி சொல்லுவேன், என்னான்னு சொல்லுவேன்...

Monday, May 17, 2010

இனி....

நம்ம வாழ்க்கைல, பல தடவை, இனி என்ன பண்ண போறோம்னு, கேள்வி, நமக்குள்ள எழுந்துகிட்டே இருக்கும். இப்போ எனக்கும் அப்படியே. முதல் முறை அந்த கேள்வி வந்தது, டென்த் முடிச்ச உடனே.. இனி எந்த க்ரூப் செலக்ட் பண்ணி, எப்படி படிக்கறதுன்னு. அதுவும் ஒரு வழியா முடிஞ்சு, அடுத்து +2. இப்படி ஒவ்வொரு கட்டத்துலையுமே, எல்லாருக்கும் வர "இ.எ.ப.போ" கேள்வி வந்துகிட்டேதான் இருந்துச்சு.

இப்போ, என்னோட முதுகலை பட்டபடிப்பு என்கிற PG முடிஞ்சு போச்சு. இது நாள் வரை வந்த 'இனி' கேள்விகளோட, இப்போ வந்துருக்குற கேள்வி ரொம்பவே முக்கியமானதா படுது. மனசுக்கு பிடிச்ச வேலை கிடைச்சு, ஒழுங்கா வேலை செஞ்சு சம்பாதிக்கணும். விட்ருந்தா UG முடிஞ்சவுடனேயே வேலைக்கு போயிருப்பேன். ஆனா வீட்ல இருக்கறவங்களோட ஆசையை பூர்த்தி செய்யவே இந்த PG. சேரும் பொது பெரிய எதிர்பார்ப்பு இல்லைனாலும், என்னோட வாழ்க்கைல மிக முக்கியமான ரெண்டு வருடங்கள் வரப்போகுதுன்னு எனக்கு அப்போ தெரியலை.

நிஜமான காலேஜ் வாழ்கையை நான் இந்த ரெண்டு வருஷத்துல தான் அனுபவிச்சேன். என்னோட UGல கூட படித்தவர்கள் ரொம்ப கம்மி (மொத்தம் 10). காலேஜ் போனதே இப்போ எனக்கு சரியா நினைவில்லை (நடுவுல நடந்த ஆக்சிடென்ட் காரணமோ??). அங்கே கிடைச்ச சில நல்ல நண்பர்களோட சகவாசம் இன்னும் தொடருது. இருந்தாலும், இந்த சினிமா பாத்து கெட்டுப் போன நல்லுகத்தைச் சேர்ந்த ஆளுங்கற முறைல, காலேஜ் வாழ்க்கை மேல சில எதிர்பார்ப்புகள் இருந்துச்சு. அது எதுவுமே நடக்கலை. இந்த பழம் நிஜமாவே புளிக்கும்னு நினைச்சு, ஒரு கட்டத்துல வெறுத்தே போயிட்டேன்.

இப்படிதான் PG படிப்பும் இருக்கும்னுதான் நினைச்சேன். ஆனா, அதுக்கும் இதுக்கும் சம்மந்தமே இல்லை. எக்கச்சக்க நண்பர்கள், நண்பிகள். சிறப்பா பல தருணங்கள்னு சரியான கொண்டாட்டம். முக்கியமா, முன்னெல்லாம் நான், போட்டோ எடுக்கும்போது, முடிஞ்ச வரை போஸே குடுக்க மாட்டேன், இல்லை ஏதாவது லைட் கம்மியான இடத்துல நிப்பேன். எப்படி நின்னு போஸ் குடுத்தாலும், நல்லா விழ மாட்டேன்னு ஒரு காம்ப்ளெக்ஸ். இன்னிவரைக்கும் அந்த காம்ப்ளெக்ஸ் இருந்தாலும், இந்த போட்டோ போஸ் காம்ப்ளெக்ஸ், இந்த ரெண்டு வருஷத்துல காணாம போச்சு. எச்ச்சகச்சமான கிளிக்ஸ். கிட்டத்தட்ட ஒரு 40gb அளவுக்கு எங்க புகைப்படங்கள் மட்டுமே இருக்கு.

அடுத்து, என் பாடும் விருப்பத்திற்கு தீனி போட்ட ரெண்டு வருடங்கள். எங்க காலேஜ் லைட் மியூசிக் ட்ரூப்ல, லீட் சிங்கரா தேர்ந்தெடுக்கப்பட்டு, (அவங்களுக்கும் வேற வழியில்லை, பாவம்) நிறைய மேடைகள்ல பாடி, இன்னும் புதுசா நிறைய விஷயங்களை கத்துகிட்டேன். எங்க ப்ராக்டிஸ் நாட்கள் எல்லாம் இன்னும் நினைவுல இருக்கு. நினைச்சு பார்க்கும்போது கொஞ்சம் கஷ்டமாகவும் இருக்கு. இப்படி, என் வாழ்க்கைல நடக்கவே நடக்காதுன்னு நினைச்ச பல விஷயங்கள், இந்த ரெண்டு வருடங்கள்ள நடந்துருக்கு.

ஆனா, என் நிலைன்னு சொல்லனும்னா, UG முடிக்கும்போது என்ன மாதிரி மனநிலைல இருந்தேனோ, அதே மாதிரி மன நிலைலதான் இப்பவும் இருக்கேன். அடுத்து என்ன பண்ண போறேன்னு தெரியாம. ஆனா, இப்போ கொஞ்சம் பக்குவும் வந்துருக்கர்த நானே உணர்றேன். கொஞ்சம் பொறுப்பும் கூடியிருக்கரா மாதிரி தோணுது. முக்கியமா, இந்த ரெண்டு வருடங்கள்ள நடந்த சில விஷயங்களால, லாங் டைம் effect இருக்கும்னு தோணுது. எது எப்படியோ, நமக்கும், நம்மை சுத்தி இருக்கறவங்களுக்கும் நல்லது நடந்தா சரி. அடுத்த 'இனி' கேள்வி வருமான்னு தெரியல, வந்தா, அப்போ மறுபடியும் இதே தலைப்புல ஒரு பதிவு நிச்சயம்... ரெடியா இருங்க...    


இப்படி ஏதாவது ஹெல்ப் பண்ணாங்கன்னா நல்லா இருக்கும்...

பி.கு. இதைப் படித்துக் கொண்டிருக்கும் என் நண்பர், நண்பிகளுக்கு. இந்த ரெண்டு வருஷத்துல, உங்கள புண்படுத்தரா மாதிரி, மனசுக் கஷ்டப்படறா மாதிரி ஏதாவது சொல்லிருந்தேன்னா, பண்ணிருந்தேன்னா மன்னிச்சிருங்க. இந்த நாட்கள்ல, என் வாழ்க்கைல ஒரு அங்கமா இருந்ததுக்கு உங்களுக்கு கோடான கோடி நன்றி... thanks for the wonderful experience.

Thursday, May 6, 2010

PLAYLIST

மு.கு - இவ்வளவு நாளா பதிவு போடாததுக்கு, உங்க வீட்டு பிள்ளையா நெனச்சு, என்னை மன்னிச்சு விட்டுருங்க...

கடைசியா போட்ட playlist , ஜனவரி மாசத்தோடது. அதுக்கு அப்பறம், என் சிஸ்டம்லயும் நான் எதுவும் playlist உருவாக்கல. ஏன்னா, என் ப்ராஜக்ட் வேலைல கொஞ்சம் பிஸி ஆகிட்டேன். இப்போ வெற்றிகரமா முடிச்சிட்டேன், அதனால நாம் நம் கலைச் சேவையை தொடருவோம்னு வந்துட்டேன். இந்த மூணு மாசத்துல, அப்டி இப்டி, ஒரு 15 படங்களோட பாடல்கள் வந்துருக்கு. அதுல நான் ஒழுங்கா கேட்டது, நாலஞ்சு படப் பாடல்கள் மட்டுமே. அதனால, இந்த லிஸ்ட்ல, உங்க கணிப்பு ஏதாவது விட்டு போயிருந்தா, அதுக்கு கம்பெனி பொறுப்பாகாது. இந்த எந்த மாசத்து லிஸ்டுன்னு கேட்காதீங்க. மூணு மாசத்துக்கும் சேர்த்துதான்.

போன லிஸ்ட்லேர்ந்து இன்னும் இருக்குற பாடல்கள்னு பார்த்தீங்கன்னா / கேட்டீங்கன்னா

அசல் - ஹே துஷ்யந்தா,
கோவா - ஏழேழு தலைமுறைக்கும்,
(பாட்டுக்காக மட்டுமே ஓடற) பையா - என் காதல் சொல்ல...

இப்போ புது லிஸ்டுக்கு வந்தீங்கன்னா,

பானா காத்தாடி அப்படின்னு ஒரு படம் (அட அட அட.... வரி விலக்கு குடுக்க வேண்டிய டைட்டில்) நம்ம சின்ன தல யுவன் தான் இசை. அதுல "என் நெஞ்சில்" னு ஒரு பாடல். சாதனா சர்கம் சூப்பரா பாடிருக்காங்க.
(கர்நாடக சங்கீதத்தை பற்றி, கவலை இல்லாதவங்க, அடுத்த பத்திக்கு தாவிடுங்க)
 எங்கேயோ கேட்டா மாதிரி இருக்கேன்னு, நம்ம இசை அறிவ கொஞ்ச நோண்டி, கூகிள் உதவியோட, ஒரு மேட்டர கண்டுபுடிச்சேன். இந்த பாடலோட ராகத்தின் பேரு, கௌரி மனோஹரி. இந்த ராகத்துல, இதுக்கு முன்னாடியே, நம்ம யுவன், ராம் படத்துல, ஆராரிராரோ, அப்படின்னு ஒரு பாடல போட்டிருக்கார். நம்ம பெரிய தலை ராஜா சார், இந்த ராகத்துல விளையாடிருக்கார். அது சில பாடல்கள், கிளி பேச்சு கேட்கவா படத்துல வர, அன்பே வா அருகிலே, தூறல் நின்னு போச்சு படத்துல வர, பூபாளம் இசைக்கும், நிழல்கள் படத்துல வர தூரத்தில் நான் கண்ட உன் முகம் (படத்துல இந்த பாடல் கிடையாது). இப்படி பலப் பல சிசுவேஷன்களுக்கு இந்த பாடலை போட்டிருக்கார், ராஜா. குத்து பாட்டு  ஸ்டைல்ல கூட ஒரு பாட்டு போட்டிருக்கார் - வாத்தியார் வீட்டு பிள்ளை படத்துல வர, வாழ்க்கையிலே கஷ்டம் வந்து...

ஆரோமலே - வி.தா.வ..

சுறா  - நான் நடந்தால் அதிரடி. இந்த பாட்டோட ஒரிஜினல் வெர்ஷன் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதனாலதான் இதுவும். வழக்கம் போல மொக்கை லிரிக்ஸ்.

முன்னாடியே வந்த கச்சேரி ஆரம்பம் படத்துல, peppy ஸாங்க்ஸ் ரெண்டு இருக்கு. கச்சேரி கச்சேரி + வாடா வாடா.. பெருசா அலசர்துக்கு ஒண்ணும் இல்லைனாலும், இந்த ரெண்டு பாட்டு எனக்கு புடிச்சிருக்கு.

கடைசியா, ராவண் or ராவணன்.ரொம்ப நாள் கழிச்சு, ரஹ்மான், தன்னோட பாணியில ஒரு படம் பண்ணிருக்கார். எப்பவும் ரஹ்மான் பாடல்கள், முதல் தடவை கேட்கும்போது புடிக்காதுன்னு சொல்லுவாங்க. ஆனா, இந்த படத்துல வர, ராஞ்சா ராஞ்சா பாடல், முதல் தடவை கேட்டவுடனே எனக்கு புடிச்சுப் போச்சு. பெஹனே தே பாடலோட ரெண்டாவது interlude கொஞ்சம் இழுவை, but ஓவரால் பாட்டு ஓகே. மத்த பாடல்கள் ஒண்ணும் பெருசா ஈர்க்கலை. இதோட தமிழ் வெர்ஷன்ல, வரிகள் எல்லாம் செம்ம காமெடி. டி ராஜேந்தர் assistants எழுதினா மாதிரி இருக்கு. காட்டு சிறுக்கி, உசுரே போகுதேன்னு செம்ம காமெடி பண்ணிருக்காங்க. எனக்கு "எங்கடா உங்க MLA", "கழட்டுடா அமைச்சர் வேட்டிய"னு தெலுங்கு டப்பிங் பட டைட்டில் எல்லாம் ஞாபகத்துல வந்துச்சு. வசனமும் இதே மாதிரி ஜுனூன் தமிழ்ல translate பண்ணிருந்தாங்கன்னா, படம், சுறாவுக்கு பெரிய போட்டி ஆகிடும். கிளம்பட்டா நான் இப்போ... சந்திக்கலாம் அப்பறமா நாம் எல்லாரும்...


நான் பாடின பாட்டை கேட்டாலே இப்படிதான்...