Wednesday, April 29, 2009

டைரியின் கைதி...

இந்த வருடம், என் வாழ்வில் மறக்க முடியாத ஒன்றாக ஆகிறது. என் நினைவில் வைத்துக்கொள்ளக்கூடிய அளவில், நிறைய நல்ல விஷயங்கள். So, இதை மறக்காமல், டைரியில் பதிவு செய்தே ஆக வேண்டும் என்று தோன்றியது. நம்மில் நிறைய பேருக்கு டைரி எழுதும் பழக்கம் இருக்கும். எனக்கில்லை. ஏற்கனவே இரு முறை முயற்சி செய்து, தோல்வியுற்றேன். இப்பொழுது எழுத உட்காரும்போது, ஆரம்பத்தில் சிறிது கடினமாகவே இருந்தாலும், போகப் போக வேகம் பிடித்து, இந்த நான்கு மாதங்களில் நடந்ததை, சிரமத்துடன் நினைவுகூர்ந்து, ஒரு வழியாக 47 பக்கங்களில் எழுதிவிட்டேன்.

5 நாட்களில், தினம், இரண்டு அல்லது மூன்று மணிநேரம் உட்கார்ந்து, எழுதினேன். யார் எழுதும் டைரியையும், ஏதாவது ஒரு காலத்தில், வேறொருவர் படிப்பார் என்பது திண்ணம். என்னுடையதும் அப்படியே. ஆனால், முடிந்த வரை, எனக்கென இருக்கும் ஞாபகங்களை, எண்ணங்களை, (i.e. exclusive thoughts and memories of mine) யாரிடமும் பகிர்ந்து கொள்ள நான் விரும்பவில்லை. So, நான் மொத்தமாக எதையும் எழுதப் போவதில்லை. இங்கே, என் டைரியின் முதல் பக்கத்தை மட்டும் கொடுக்கிறேன். படித்துவிட்டு எப்படி இருக்கிறதென்று (உண்மையை மட்டும்) சொல்லுங்கள். முக்கியமான விஷயம், இதற்கு மேல் என் டைரியிலிருந்து வேறெந்த பக்கங்களும், ப்ளோகில் வராது...

-------------------------------------------------------------------------------------------------
23 ஏப்ரல், 00:18am
"இது, கடந்த நான்கு மாதங்களாக (ஜனவரி 09 - ஏப்ரல் 09), என் வாழ்வில் நடந்தவைகளைப் பற்றிய, என் நினைவில் நின்ற, நான் இனி மறக்க முடியாத, மறக்கக் கூடாத, மறக்க விரும்பாத சம்பவங்களைப் பற்றியவை. இவ்வளவு நாள், டைரி எழுதும் பழக்கம் எனக்கில்லை. இரண்டு முறை முயற்சித்து, சோம்பேறித்தனத்தினாலும், பயத்தினாலும், தொடர்ந்து எழுத முடியாமல் போனது. கடந்த ஒரு வாரமாகவே, டைரி எழுதும்படி என் instinct சொல்லிக்கொண்டிருக்கிறது. அதனாலேயே, இந்த அகால வேளையில், நிறைய யோசித்ததின் விளைவாகவும், பழைய நினைவுகளின் தொல்லைகளாலும், எழுதிக்கொண்டிருக்கிறேன்.

ஒருவேளை
, இதை நானல்லாது, வேறு யாரேனும் படித்துக் கொண்டிருப்பீர்களேயானால், தயவு செய்து இத்துடன் நிறுத்திக் கொள்ளவும். மற்றவர்களது டைரியை படிக்கும் ஆர்வம் எத்தகையது என்பதை நானும் அறிவேன். நான் இங்கே கேட்டுக் கொண்டாலும், அலட்சியம் செய்துவிட்டுப் படிக்கத் தொடர்வீர்கள் எனவும் தெரியும். அப்படிப் பட்டவர்களிடம் நான் கேட்டுக்கொள்வது, இனி வரும் பக்கங்களை படித்து விட்டு, என் மேல் உங்களுக்கிருந்த அபிப்பிராயம், நல்லதோ கெட்டதோ, மாறினால், அதற்கு நான் பொறுப்பல்ல. இதை டைரியை நீங்கள் படித்துவிட்டது எனக்கு தெரிந்தாலும், உங்களிடம் எப்போதும் பழகுவது போலவே பழகுவேன். முடிந்தவரை, படித்ததை, வேறு யாரிடமும் சொல்ல வேண்டாமெனக் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

-------------------------------------------------------------------------------------------------

இதற்குப் பிறகே, விஷயங்களை எழுத ஆரம்பித்தேன். என்னுடைய எழுத்து நடை, ப்ளோகின் உதவியால், சிறிது முன்னேறி இருப்பதாக, எழுதி முடித்ததைப், படித்துப் பார்த்ததில் தெரிந்தது. அதை நானே சொல்லிக் கொள்ளக் கூடாதல்லவா, அதனாலேயே, ஒரு சோறு பதமாக, முதல் பக்கம் இங்கே. நன்றாக இருக்கிறதா என்று சொல்லுங்கள். நன்றி...

Saturday, April 25, 2009

கமெண்டுங்க....

login பண்ணி, கமெண்ட் செய்ய சோம்பேறித்தனப் பட்டவர்களுக்கு ஒரு முக்கியமான விஷயம்.. இனிமே யார் வேணும்னாலும், என் ப்ளோக்ல கமெண்ட் பண்ணலாம்.. இதுவரை, ஜிமெயில் id இருந்தா மட்டுமே கமெண்ட் பண்ணலாம், இனிமே, நீங்க ஜஸ்ட்,

Gmail
OpenID LiveJournal WordPress TypePad AOL
Anonymous

இந்த மூணுத்துல, ஏதாவது ஒண்ணை செலக்ட் பண்ணி கமெண்ட் பண்ணலாம்... ம்ம்ம் இனியாவது ஏதாவது புது ஆளுங்க கமெண்ட் பண்றாங்களான்னு பார்ப்போம்...

pic: நன்றி luckylook...

Sunday, April 19, 2009

SMSku அப்புறம் அயன்

(மறுபடியும்) ரொம்ப நாள் கழிச்சு ரெண்டு படம்s பார்த்தேன் (எனக்கு, ரெண்டு வார இடைவேளை ஒரே பெரிய gap தான்). முதல்ல பார்த்த படம் SMS, அதாவது சிவா மனசுல சக்தி. ரொம்ப சுமாரான படம். எல்லாப் படங்களையும் பயங்கரமா விமர்சனம் பண்ற விகடன், தரமான படமா எடுப்பாங்கன்னு பார்த்தா, ஏமாத்திட்டாங்க. 4-5 scenes மட்டுமே நல்லா இருந்துச்சு.

சந்தானம் காமெடி, சில இடங்கள்ல ஓகே. heroine ஆக்டிங் கோர்ஸ் படிச்சவங்களாம். அநேகமா நிறைய arrears இருக்கும்னு நினைக்கறேன். ஜீவா தன்னோட "ஈ" பட நடிப்ப, ஒரு மாதிரி modify செஞ்சு நடிச்சிருக்கார். என்னை பொருத்த வரை, படத்துல சூப்பரா நடிச்சது, ஊர்வசி மட்டுமே. சரியான timing. அவங்க வர சீன் எல்லாத்துலயும் அவங்க மட்டுமே goal அடிக்கறாங்க. ஒரு மாதிரி ஓகேவான படம். விகடன், அவங்களோட விமர்சனக் குழுவை பக்கத்துல வெச்சுகிட்டு படம் எடுத்துருக்கலாம். முடிஞ்சா பாருங்க. பாத்துட்டு யோசிக்கலாம், யோசிச்சிட்டு பார்க்க முடியாதது....

ஆக்டிங் கோர்ஸ் பண்ணேன்னு சொல்றியே, வெட்கமாயில்லை???

------------------------------------------------------------------------------------------------

அடுத்ததா பார்த்த படம் அயன். செம்ம மசாலா படம். ஆனா டைரக்டர் ஆனந்த் மட்டும், "இந்த படத்த மசாலா படம்னு சொல்லாதீங்க"னு எல்லார்கிட்டயும் கெஞ்சறார். ரொம்பத் தரமான படம்னு சொல்ல முடியாது. இருந்தாலும், நல்ல படம்தான். அதுவும், ரொம்ப நாள் கழிச்சு (சிவாஜிக்கு அப்புர்ரம்) வர, ஒரு நல்ல மசாலா படம்*.

நிறைய ஆங்கிலப் படங்கள்ல இருந்து சுட்ட action scenes. நல்லாவே இருந்துச்சு. particularly, Congo chase + climax fight. வேகத்தை மட்டும் நம்பாம, நிறைய இடங்கள்ல, விவேகத்தையும் நம்பிருக்காங்க. படம் கொஞ்சம் informativeகூட. தமன்னாவுக்கு எப்படி சான்ஸ் வருதுன்னே தெரியல. நடிக்கவும் வராம, டான்சும் வராம ரொம்ப பாடுபடறாங்க + படுத்தறாங்க. பாட்டு எல்லாம், தனியாக கேட்க மட்டுமே நல்லா இருக்கு. படத்தோட பார்க்கும் போது எந்த பாடலுமே ஒட்டலை. எல்லாப் பாடல்களும் வேகத்தடை மாதிரியே இருக்கு. பாடல்கள் இல்லைனா, படம் இன்னும் நல்லா இருந்திருக்கும்.

வேற நல்ல வில்லன் கிடைக்கல போல, காமெடியா ஒரு ஆள். அவருக்கு டப்பிங் குடுக்க, நம்ம கோலங்கள் அப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பி ஆதி. ஒரு மசாலா படத்துல எப்பவுமே ஹீரோ மட்டும் தனியா தெரிவார், ஆனா இந்த படத்துல அப்படியில்லை. சூர்யாவோட (நல்ல) இமேஜ் இதுக்கு காரணம்னு நினைக்கறேன். அவரோட சேர்ந்து, பிரபு, ரேணுகா, ஜகன், பொன்வண்ணன் எல்லாருமே நல்லா நடிச்சிருக்காங்க. முக்கியமா, படம் முடிஞ்சு வரும்போது எல்லாருமே, நினைவுல இருக்காங்க. நல்ல விஷயம்தானே. லாஜிக் மீறல்கள் ரொம்ப சில, இருந்தாலும், On the whole, Its entertaining.

p.s. * "நல்ல மசாலா படம்" - ஒரு oxymorona???
p.s.2 - சங்கம் theatre sound system, செம்ம மொக்கை. ஒண்ணுமே ஒழுங்கா கேட்கலை. எங்க வீட்டு creative speakerslaye, sound, அவ்ளோ சூப்பரா இருக்கும். நிர்வாகம் என்ன பண்ணுதுன்னு தெரியல. அவங்களுக்கு feedback குடுக்கலாம்னு பார்த்தா, sitela எந்த லிங்கும் இல்லை.

superstar racela கண்டிப்பா நீங்க இருக்கீங்க...

Tuesday, April 14, 2009

ரீமிக்ஸ்....நல்லா கீது பா....

வீடியோவ பாருங்க, பாட்டை கேளுங்க.. எனக்கென்னமோ, ஒரிஜினல விட, இது நல்லா இருக்குன்னு தோணுது...

நன்றி: Rahmanism

Sunday, April 12, 2009

ஆனந்தம், மகிழ்ச்சி, சந்தோஷம்...

வேற என்ன வார்த்தையெல்லாம் இருக்கோ, எல்லாத்தையும் சேர்த்துக்கோங்க.
நிஜமாவே, வார்த்தையால விவரிக்க முடியாத தருணம்னு என் வாழ்க்கைல இதுவரை, எதுவமே இருந்ததில்லை. இப்ப இருக்கு....

ஜெயா டிவி நிகழ்ச்சியில, நாங்க championship வாங்கிட்டோம்.

இவ்வளவு நாள் உழைத்த, உழைப்போட பலனை அனுபவிக்கும்போது......................... .................................................. என்ன சொல்றதுன்னே தெரியல போங்க.... :)

மனசுக்குள்ள இன்னும் வெடிச்சிகிட்டே இருக்கேன்...

Friday, April 10, 2009

மற்றும் பல...

வழக்கம் போல, காலேஜ் அலுவல்கள். நல்லா மாட்டிக்கிட்டேன். இந்த மாச கடைசில செமஸ்டர் எக்ஸாம் வருது. அதுக்கும் கொஞ்சமாவது படிக்கணும். அதனால, blog பக்கம், ஏன், வீட்டுப் பக்கமே வர முடியல. வழக்கம் போல என்னை மன்னிச்சு, கொஞ்சம் பொறுமையா இருந்து, படிச்சிட்டு போங்க.

----------------------------------------------------------------------------------------------------

முடிஞ்சா, வாரா வாரம் ஞாயிற்று கிழமை, ஜெயா டிவி பாருங்க. மதியம் 12-1.

----------------------------------------------------------------------------------------------------

குங்குமப்பூவும், கொஞ்சும் புறாவும், படத்துல, ரெண்டு பாட்டு நல்லாயிருக்கு. "சின்னஞ்சிறுசு" and "நான் தருமண்டா". கேட்டுட்டு, எப்படி இருக்குன்னு சொல்லுங்க

Wednesday, April 1, 2009

கார்த்திக் குடுத்த tag

கார்த்திக் தம்பி, டிசம்பர் மாசம், குடுத்த tag இது. முதல்ல எனக்கு மேட்டர் சரியா புரியல. அப்பறம் விளங்கிருச்சு. அந்த tag இன்னானா, .... அதாவது, படம் போக/பார்க்க சொல்லோ, நான் செய்யற 6 விஷயம். tag மேட்டருக்கு முன்னாடி சில விஷயங்கள். நமக்கு படம் பார்க்கறது சல்பி மேட்டர். எப்போ தோணுதோ, அப்பவே படம் பார்க்கற case நான். நான் முதல்ல, தனியா, படம் பார்க்க ஆரம்பிச்சது, 8th STD படிக்கும்போது. தனியா பார்த்த முதல் படம், "மம்மி returns" @ Woodlands Theatre.

பள்ளி நாட்கள்ல, நிறைய முறை, நண்பர்களோட, 10 ரூபாய் டிக்கெட்ல படம் பார்த்துருக்கேன். 2-3 மணி நேரம் queuela நின்னு படம் பார்த்ததெல்லாம், சூப்பர் அனுபவம்ஸ். இப்ப நான் படிக்கறதும், மீடியா தொடர்பான படிப்பா, அதனால எச்சகச்ச படங்கள். படம் நல்லா இருந்தா போதும். மொழி முக்கியமில்லை. இப்ப tag...

1. முடிஞ்ச வரை, டிக்கெட்ட ரிசர்வ் பண்ணிட்டு, அப்பறம் தான் போவேன். எனக்கு, அங்க போய், queuela நின்னு, படம் பார்க்கும் பொறுமை இல்லை.

2. டிக்கெட் வாங்கும்போது, "சார், கொஞ்சம் பின்னாடி, சென்டரா பார்த்து seat குடுங்க", அப்படின்னு கேட்டு வாங்கிப்பேன். ஏன்னா, சென்டர்ல உட்கார்ந்தாதான், sound panning கரெக்டா கேட்கும்.

3. படம் பர்ர்க்க நிறைய கூட்டம் சேர்க்க மாட்டேன். முடிஞ்சா வரை தனியாகஇரண்டு பேராக மட்டுமே போவோம்/வேன்

4. தமிழ் படங்களை வெள்ளித்திரையிலும், மற்ற மொழிப் படங்களை வீட்டிலும் பார்ப்பேன். அதுவும், இங்கிலீஷ் படங்கள் சில தியேட்டர்ல மட்டுமே பார்ப்பேன்.

5. ஒரு படத்த ஆரம்பம் முதல், முடிவு வரை, பார்த்தா மட்டுமே எனக்கு திருப்தியா இருக்கும். ஒரு வேளை, டைட்டில் கார்டு மிஸ் பண்ணிட்டேன்னா, மறுபடியும் அந்தப் படத்த பார்த்தே ஆகணும். End credits முடியும் வரை, பார்த்துட்டுதான் வருவேன்.

6. படம் எவ்வளவு மொக்கையா இருந்தாலும், பொறுத்திருந்து, fulla பார்த்துட்டுதான் வருவேன். நான் பாதியில எழுந்து வந்ததா சரித்திரமே இல்லை.

இவையே, இப்ப நினைத்து பார்க்கும்போது, நினைவுல வந்த 6 விஷயம்ஸ். இன்னும் நிறைய இருக்கு. ஆனா இது போதும்னு நினைக்கறேன். ஒரு படத்தை தியேட்டர்ல பார்ப்பதே அருமையான அனுபவம். மக்களோட direct response தெரியவரும். அந்த அனுபவத்திற்காகவே, நான் தியேட்டர்ல படம் பார்ப்பது வழக்கம். எப்பவும் எனக்கு, ஒரு படம் பார்க்க கிளம்பிட்டேன்னா, கட்டாயமா பார்த்தே ஆகணும். எப்பாடு பட்டாவது. அப்படியொரு வெறி. என்ன செய்ய, கலை ஆர்வம். இந்த taga யாருக்கு பாஸ் பண்ணறதுன்னு தெரியல, உங்களுக்கு பிடிச்சிருந்தா, ஒரு கமெண்ட போட்டுட்டு, நீங்களே எடுத்துக்கங்க. இப்ப நான் அபீட்டு...

இதெல்லாம் வாங்க நம்ம கைல எப்பவுமே காசு இருக்காது :(
(pop-corna சொன்னேன் ;)