Monday, March 29, 2010

கச்சேரி ஆரம்பம் - போலிகள் ஜாக்கிரதை...

நீங்க இன்னுமா திருந்தலைன்னு மக்களை கேள்வி கேட்க வெக்கற, புரட்சிகரமான படம் தான் இந்த கச்சேரி ஆரம்பம். இந்த படம் ரிலீஸ் ஆகறதுக்கு முன்னால நடந்த ஒரு விஷயத்தோட, சின்ன flashback...

இடம்: ஆர். பி. சௌத்ரி ஆபிஸ்..
இருப்பவர்கள்: இயக்குனர் திரைவாணன், சௌத்ரி, ஜீவா..
சௌ: இப்போ என்ன செய்ய. நாம எடுத்த படமும், இப்போ வந்துருக்குற படமும் ஒரே மாதிரி இருக்கு. இந்த படம் கண்டிப்பா ஹிட். இத பாத்தவங்க, நம்ம படத்தை மதிப்பாங்களா.. ஒழுங்கா விக்ரமன வெச்சு, காரைக்குடில ஒரே ஒரு வீட்ல ஒரு full படத்தை, ல ல லா ரீரிக்கார்டிங் போட்டு,  ஹிட் பண்ணிருப்பேன்..ச்சே.. என் காசெல்லாம் இப்படியா போகணும்...

ஜி: அப்பா, சும்மா பொலம்பாத. நானும் எப்போ மாஸ் ஹீரோவா ஆகறது. இந்த டைரக்டர் விஜய்க்கு சொல்லிருந்த கதைய, கையையும் காலயும் புடிச்சு, நான் கேட்டு, ஓகே பண்ணி படத்தை எடுத்தா, இப்போ இப்படி ஆகிடுச்சு. மாத்து வழி யோசிப்பியா, இப்படி பேசுறியே..

தி: சார், நம்ம கால்குலேஷன் ஜஸ்ட் மிஸ், நாம கொஞ்சம் முன்னாடியே ரிலீஸ் பண்ணிருந்தா இந்த பிரச்சனை வந்திருக்காது... அதாவது துப்பாக்கில இருக்குற தோட்டா....
சௌ: டேய், நீ ஒண்ணும் பேசாத. நான் ஒரு ஐடியா சொல்றேன். அத மட்டும் செய். இந்த "தமிழ் படத்துல" எல்லா தமிழ் படத்தையும் கலாய்க்கரா மாதிரி, நம்ம படத்துலயும் கலாய்ப்போம்.

ஜி: ஐயோ அப்பா, fullaa ரீ ஷூட் பண்ணப் போறோமா??

சௌ: அது வேறயா.. சத்தியமா இந்த டைரக்டர நம்பி ரீ ஷூட் எல்லாம் பண்ண முடியாது.  10 ஷாட்ல, எப்படியாவது இந்த படத்தை, தமிழ் படம் மாதிரி spoof படமா மாத்துங்க. மவனே நீ அதை மட்டும், மறுபடியும் சொதப்பி வை, என் கம்பெனியோட எல்லா படத்தையும் மூணு தடவ, கட்டி போட்டு, பாக்க வெப்பேன்.

தி: அயயோ.. நீங்க எனக்கு ஒரு வாரம் time குடுங்க. படத்தையே மாத்தி காமிக்கறேன். இந்த மாதிரி கொடுமையான தண்டனை எல்லாம் வேண்டாம்.

ஜி: ஏதொ, எனக்கு நல்ல பேர் வந்தா சரி..

இப்படி தான் ஏதாவது நடந்திருக்கும். என்ன சொல்ல வந்தாங்கன்னு அவங்களுக்கும் புரியல, எனக்கும் புரியலை. தர மொக்கையா ஒரு படம்.ரெண்டு மூணு காட்சிகள் மட்டும் spoof படம் மாதிரி எடுத்துட்டு, மக்கள் ஏத்துப்பாங்கன்னு  நெனச்சு காமெடி பண்ணிருக்காங்க. பொறுமை போயே போச்சு. எப்போடா படம் முடியும்னு ஆகி, பக்கத்துல இருந்த ரமேஷ் அண்ணா கிட்ட "அண்ணா, என்ன அடிங்க ணா.. என்ன அடிங்க" னு புலம்பிகிட்டு இருந்தேன்..

நல்லா இருந்தா ஜீவாவும் இப்படி மொக்க ஆகிட்டார். j.d.சக்கரவர்த்தி இந்த படத்துல என்னத்தை கண்டாருனு தெர்ல. அப்படியே இம்ப்ரெஸ் ஆகி வில்லனா நடிக்க சம்மதிச்சாரம். முருகா.. வடிவேல் காமெடியும் ஒண்ணும் சிறப்பா இல்லை. மொத்தத்துல, இது ஒரு கேவலமான...... அட ச்சய், இந்த வார்த்தையே எனக்கு க்ளிஷேவா இருக்கு... தமிழ் படம் மாதிரி spoof னு சொன்னா ஏமாந்துராதீங்க. உஷாரய்யா உஷாரு.

p.s.தேவிபாலா திரையரங்கு.. சீட்டெல்லாம் மொக்கை. அந்த சின்ன தியேட்டர்க்கு 85, 95 ரூவா டிக்கெட்டெல்லாம் ஓவர். அதுவும் நடு நடுவுல, ஸ்க்ரீன் dim ஆகி dim ஆகி bright ஆச்சு. ஏசி ஒண்ணும் அவ்வளவா உரைக்கல. கவனிப்பார்களா???

அடுத்து நீங்களா?? தலைய சிலிப்பிடாதீங்க. வெட்டிருவாங்க..

Sunday, March 21, 2010

குழப்பMATICAL

மு.கு - தலைப்பு கொடுத்து உதவிய பாலா அண்ணாவிற்கு நன்றி...

என்ன எழுதறது, எப்படி எழுதறதுன்னு ஒண்ணுமே புரியல. ஆனா, எழுத மட்டும் நிறைய விஷயம் இருக்கு. நான் பார்த்த விண்ணைத்தாண்டி வருவாயா, 3 இடியட்ஸ், படங்களை பத்தி எழுதறதா, இல்ல IPL பத்தி எழுதறதா, இல்ல சாரு நித்யானந்தா, சாரி, சாரு நிவேதிதா பத்தி எழுதறதா, இல்ல பதிவுலகத்துல பல முறை பதிவப்படுற ராஜா-ரஹ்மான், அஜித்-விஜய், ஆத்திகம்-நாத்திகம் மாதிரியான விஷயங்கள் பற்றிய என்னோட எண்ணங்களை எழுதறதா, இல்ல என் ரிசர்ச் பத்தி எழுதறதானு, இப்படி பத்தி பத்தியா எழுத விஷயம் இருந்தும், அவகாசமும்  இல்ல, பொறுமையும் கொஞ்சம் கொஞ்சமா என்னை விட்டு போய்கிட்டே இருக்கு.

போஸ்ட் எழுதுவது எப்படின்னு நான் பல பேருக்கு அட்வைஸ் பண்ண காலம் போய், இப்போ நானே திருவிழாவுல தொலஞ்ச குழந்தை மாதிரி திரு திருனு முழிச்சிகிட்டிருக்கேன். ஆனாலும், பாடின வாயும், ஆடின காலும், எழுதுன கையும் சும்மா இருக்காதுன்னு சொல்றா மாதிரி, வந்துட்டு சும்மா போகக் கூடாது இல்லையா, அதனால ஒரு சில விஷயங்களை சொல்லிட்டு போறேன். என் முதுகலைப் பட்டப் படிப்பு இன்னும் இரண்டு மாதங்கள்ல நிறைவடையுது. என் மேல அக்கறையுள்ள பல பேர், அடுத்து என்ன பண்ண போறேன்னு பார்க்கும்போதெல்லாம் விசாரிக்கறாங்க. ஆனா, சாமி சத்தியமா சொல்றேன், அடுத்து என்ன பண்றதுன்னு நான் இன்னும் முடிவு பண்ணலை. எனக்கு எல்லாமே குழப்பமாதான் இருக்கு. நான் இளங்கலை (UG) சேரும்போதே எந்த திட்டமும் போட்டு சேரலை. எல்லாரும் படிக்கறா மாதிரி என்னால ஒரு இடத்துல உட்கார்ந்து, மனப்பாடம் பண்ணி ஒப்பிக்க முடியாது.

என் அண்ணன், "உன்னை மாதிரி ஆளுங்களுக்குனே விஸ் காம், எலக்ட்ரானிக் மீடியா படிப்பு இருக்கு. அப்ளை பண்ணு"னு சொல்லவே, நானும் விண்ணப்பிச்சு, ஒரு வழியா படிச்சும் முடிச்சேன். அப்பவே எங்க வூட்ல சொன்னேன், வேலைக்கு போறேன்னு. ஆனா, வீட்ல ஒரு முதுகலை பட்டதாரி கூட இல்லையே, நீ முயற்சி பண்ணலாமேன்னு சொல்ல, அண்ணா யுனிவர்சிடீல நமக்கெல்லாம் கிடைக்காதுன்னு அசைக்க முடியாத நம்பிக்கையோட நானும் விளையாட்ட அப்ளிக்க, அது வினையாகி, நான் நுழைவுத் தேர்வுல செலக்ட் ஆகி, இப்போ இப்டி பதிவிகிட்டு இருக்கேன். அடுத்து ஏதாவது டி.வி சேனல்ல வேலைக்கு முயற்சி பண்ணலாமான்னு யோசனை பண்ணிகிட்டிருக்கேன்.

ரொம்ப தெனாவட்டா பேசறதா நினைக்காதீங்க. என் நிலைமை அப்படி... இருந்தாலும், ஏதாவது பண்ணிருவேன்னு ஒரு நம்பிக்கை இருக்கு. ஏன்னா இது வரை என் வாழ்க்கைல எதுவுமே நான் பிளான் பண்ணதில்லை. ஆனாலும் நான் பெருசா எதுவும் கவலை இல்லாம, நல்லாதான் இருக்கேன். இனிமேலும் அப்படியே தான் இருப்பேன்னு நினைக்கறேன். பழகிடுச்சுல்ல. பாக்கலாம் ஏதாவது நடக்காமலா போயிரும். அதானால, என்னுடைய இந்த குழப்பமான மன நிலைய புரிஞ்சிகிட்டு, ரெகுலரா பதிவலைன்னா, உங்க வீடு பிள்ளையா நெனச்சு என்ன மன்னிச்சு விட்டுருங்க. வரட்டா... டாட்டா...  
                    
நீங்க சொல்லுங்க. இப்போ நான் என்ன செய்ய...

Wednesday, March 3, 2010

டில்லி - பயணானுபவங்கள்

விலாவரியா ஒண்ணும் விவரிக்க போறதில்லை. அதனாலா தைரியமா படிங்க.

காலேஜ்ல Industrial Visitனு (I.V) ஒரு விஷயம் இல்லன்னா, ரொம்பவே மொக்கையா இருக்கும். ஊர் சுத்த அது ஒரு சாக்கு. சாதரணமாவே நண்பர்களோட சுற்றுவேன்னாலும், I.Vனு சொல்லிட்டு போறது கொஞ்சம் எக்ஸ்ட்ரா த்ரில். போறதுக்கு முன்னாடி பலப் பிரச்சனைகள். நான் வரலை, நீ வரலை. நீ போகாதே. டிக்கெட் கிடைக்காது. டில்லில பனி, சிம்லால சனி, இப்படி எச்சகச்ச தடைகள் இருந்தாலும், ஒரு வழியா, 21 பேரோட கிளம்பினோம். போகும்போது RAC. அதனால, TTRஅ கரெக்ட் பண்ணி (ஏதொ பாத்து செஞ்சீங்கனா......), அல்மோஸ்ட் எல்லாருக்கும் பெர்த் ஏற்பாடு பண்ணிட்டு. ரெண்டு தியாகிகள் மட்டும் ஒரே பெர்த்ல அட்ஜஸ்ட் பண்ணிகிட்டோம்.            

மதுரா கிருஷ்ணர் கோவில் இல்லாம, வழக்கம் போல, எல்லாரும் சுற்றி பார்க்கும் இடங்களான, தாஜ் மஹால், பிர்லா கோயில், குதுப்மினார், அக்ஷர்தாம் கோவில் (உள்ள பெரிய imax கீது),  இந்தியா கேட் (எகிறி குதிக்க முடில), கொஞ்சம் பொறுப்புணர்ச்சியோட ஜீ டிவி, அப்பறம் சிம்லா (யப்பா இன்னா குளுரு. டாப் டு பாட்டம் ப்ரீஸ்) அங்க ரெண்டு மலை உச்சி, பொறவு மறுபடியும் டில்லி வந்து ஷாப்பிங்க்னு நான் ஸ்டாப் பயணம். சிம்லா குளிர் எனக்கு ரொம்ப புதுசு. வந்த எல்லாரும், ஷூ, கைலயும் கால்லயும் ஸாக்ஸ், ரெண்டு ஜெர்கின், ஸ்வெட்டர்னு ரெடியா வந்திருந்தாங்க. நான் மட்டும் கேவலமா ஒரே ஒரு ஜெர்கினோட, ஜெர்க்கு விட்டுகிட்டிருந்தேன். ஸ்வெட்டர், ஷூ, ஸாக்ஸ் எதுவுமே இல்லாம.

இருந்தாலும், அசராம, ரெண்டு மலை உச்சியும் (குதிரை பயணம்) தொட்டுட்டுதான் இறங்கினேன். ட்ரிப் முழுக்க மூணு வேளையும் சப்பாத்தி. தொட்டுக்க, பனீர் கலந்த ஏதாவது இரு டிஷ். சோறு இருந்தாலும் ஒரு பருக்கை உள்ள போகலை. அவங்க ஊர் ஹோட்டல் எங்கயுமே நம்ம ஊர் சாப்பாடு நல்லா இல்லை. விலையும் ஜாஸ்தி. டில்லி அவ்வளவு குளிர் இல்லை. நம்ம ஊர் பொண்ணுங்களை, அங்க இருக்குற பசங்க, முழுங்கரா மாதிரியே பாக்கறானுங்க. சில தைரியசாலிகள் வந்து இடிக்கவும் செய்யறாங்க.

இதுல முக்கியமான விஷயம் இன்னானா, எனக்கு டில்லி சுத்தமா புடிக்கலை. ஊரு முழுக்கவே, ஏதொ எல்லாரும் வேற வழி இல்லாம இருக்கறா மாதிரி, சூன்யமா இருக்கு. எல்லாரோட பார்வைலயும் ஒரு விரோதம் இருக்கு. கட்டாயத் தாலி கட்டினா மாதிரியே அலையறாங்க. ஒருத்தருக்கும், எனக்கு தெரிஞ்ச அளவு கூட இங்க்லீஷ் தெர்ல. எல்லாரும் இந்திலயே குளிக்கறாங்க (mein hindi 'bath' kartheen hoon). பொண்ணுங்க, மைதா மாவுல புடிச்சு வெச்சா மாதிரி இருக்காங்க. சரியா சைட் அடிக்க கூட முடியலை. நல்ல டிராபிக். பொண்ணுங்க ஷாப்பிங் பண்ண எக்கச்சக்கமா கொட்டிகிடக்கு. பசங்களுக்கு ரொம்பவே கொஞ்சம் தான். பைய தூக்கிட்டு, பின்னாடியே போக வேண்டியதுதான்.

மத்தபடி பெருசா நான் ஒண்ணும் கவனிக்கலை. ரயில் பயணத்துல பெரிய தொல்லை ஒண்ணு இருக்கு. திருநங்கைகள் கும்பலா வந்து, பசங்கள மிரட்டி காசு புடுங்கறாங்க. காசு குடுக்காதவங்களுக்கு என்ன ஆகும்னு என்னால இங்க 'ஓபனா' விவரிக்க முடியாது. போலீஸ் இருந்தும் கண்டுக்கலை. இப்படி டிரைன்ல வர (திரு)நங்கைகள் தன்னை தானே கேவலப்படுத்திகிட்டு ஏன் இப்படி மட்டமா நடந்துக்கராங்கன்னு தெரியலை. இதுக்கெல்லாமும் அரசாங்கத்தையே குற்றம் சொல்றது வேலைக்கு ஆகாது.

ஓட்டு மொத்தத்துல, என்னுடைய இந்த முதல் வட இந்திய பயணம், இனிதே நிறைவடைந்தது. பெர்சனலா எனக்கு இது மறக்க முடியாத அனுபவம். எக்கச்சக்க படங்கள் க்ளிக்கினோம். ஒரு நல்ல காமெரா இல்லாம, டில்லிய சுற்றி பாக்கறது வேஸ்ட். இதெல்லாத்தையும் விட, நிறைய விஷயங்களை புரிஞ்சிகிட்டேன், தெரிஞ்சிகிட்டேன்.  முக்கியமா ஒரு நாலு வார்த்தை கத்துக்கோங்க. "முஜே ஹிந்தி நஹி மாலூம்".. ரொம்ப வசதியா இருக்கும். இப்போதைக்கு இவ்ளோதான். வர்டா....


ஷாஜஹான் இவ்ளோ பெரிய சின்ன வீடு கட்டிருக்காரு...இது காதல் சின்னமாம். ஏன் அவரை இப்டி அசிங்கப் படுத்தறீங்க....