Sunday, March 21, 2010

குழப்பMATICAL

மு.கு - தலைப்பு கொடுத்து உதவிய பாலா அண்ணாவிற்கு நன்றி...

என்ன எழுதறது, எப்படி எழுதறதுன்னு ஒண்ணுமே புரியல. ஆனா, எழுத மட்டும் நிறைய விஷயம் இருக்கு. நான் பார்த்த விண்ணைத்தாண்டி வருவாயா, 3 இடியட்ஸ், படங்களை பத்தி எழுதறதா, இல்ல IPL பத்தி எழுதறதா, இல்ல சாரு நித்யானந்தா, சாரி, சாரு நிவேதிதா பத்தி எழுதறதா, இல்ல பதிவுலகத்துல பல முறை பதிவப்படுற ராஜா-ரஹ்மான், அஜித்-விஜய், ஆத்திகம்-நாத்திகம் மாதிரியான விஷயங்கள் பற்றிய என்னோட எண்ணங்களை எழுதறதா, இல்ல என் ரிசர்ச் பத்தி எழுதறதானு, இப்படி பத்தி பத்தியா எழுத விஷயம் இருந்தும், அவகாசமும்  இல்ல, பொறுமையும் கொஞ்சம் கொஞ்சமா என்னை விட்டு போய்கிட்டே இருக்கு.

போஸ்ட் எழுதுவது எப்படின்னு நான் பல பேருக்கு அட்வைஸ் பண்ண காலம் போய், இப்போ நானே திருவிழாவுல தொலஞ்ச குழந்தை மாதிரி திரு திருனு முழிச்சிகிட்டிருக்கேன். ஆனாலும், பாடின வாயும், ஆடின காலும், எழுதுன கையும் சும்மா இருக்காதுன்னு சொல்றா மாதிரி, வந்துட்டு சும்மா போகக் கூடாது இல்லையா, அதனால ஒரு சில விஷயங்களை சொல்லிட்டு போறேன். என் முதுகலைப் பட்டப் படிப்பு இன்னும் இரண்டு மாதங்கள்ல நிறைவடையுது. என் மேல அக்கறையுள்ள பல பேர், அடுத்து என்ன பண்ண போறேன்னு பார்க்கும்போதெல்லாம் விசாரிக்கறாங்க. ஆனா, சாமி சத்தியமா சொல்றேன், அடுத்து என்ன பண்றதுன்னு நான் இன்னும் முடிவு பண்ணலை. எனக்கு எல்லாமே குழப்பமாதான் இருக்கு. நான் இளங்கலை (UG) சேரும்போதே எந்த திட்டமும் போட்டு சேரலை. எல்லாரும் படிக்கறா மாதிரி என்னால ஒரு இடத்துல உட்கார்ந்து, மனப்பாடம் பண்ணி ஒப்பிக்க முடியாது.

என் அண்ணன், "உன்னை மாதிரி ஆளுங்களுக்குனே விஸ் காம், எலக்ட்ரானிக் மீடியா படிப்பு இருக்கு. அப்ளை பண்ணு"னு சொல்லவே, நானும் விண்ணப்பிச்சு, ஒரு வழியா படிச்சும் முடிச்சேன். அப்பவே எங்க வூட்ல சொன்னேன், வேலைக்கு போறேன்னு. ஆனா, வீட்ல ஒரு முதுகலை பட்டதாரி கூட இல்லையே, நீ முயற்சி பண்ணலாமேன்னு சொல்ல, அண்ணா யுனிவர்சிடீல நமக்கெல்லாம் கிடைக்காதுன்னு அசைக்க முடியாத நம்பிக்கையோட நானும் விளையாட்ட அப்ளிக்க, அது வினையாகி, நான் நுழைவுத் தேர்வுல செலக்ட் ஆகி, இப்போ இப்டி பதிவிகிட்டு இருக்கேன். அடுத்து ஏதாவது டி.வி சேனல்ல வேலைக்கு முயற்சி பண்ணலாமான்னு யோசனை பண்ணிகிட்டிருக்கேன்.

ரொம்ப தெனாவட்டா பேசறதா நினைக்காதீங்க. என் நிலைமை அப்படி... இருந்தாலும், ஏதாவது பண்ணிருவேன்னு ஒரு நம்பிக்கை இருக்கு. ஏன்னா இது வரை என் வாழ்க்கைல எதுவுமே நான் பிளான் பண்ணதில்லை. ஆனாலும் நான் பெருசா எதுவும் கவலை இல்லாம, நல்லாதான் இருக்கேன். இனிமேலும் அப்படியே தான் இருப்பேன்னு நினைக்கறேன். பழகிடுச்சுல்ல. பாக்கலாம் ஏதாவது நடக்காமலா போயிரும். அதானால, என்னுடைய இந்த குழப்பமான மன நிலைய புரிஞ்சிகிட்டு, ரெகுலரா பதிவலைன்னா, உங்க வீடு பிள்ளையா நெனச்சு என்ன மன்னிச்சு விட்டுருங்க. வரட்டா... டாட்டா...  
                    
நீங்க சொல்லுங்க. இப்போ நான் என்ன செய்ய...

4 comments:

அண்ணாமலையான் said...

கஷ்டம்தான்

Karthick Krishna CS said...

@annamalaiyan

எதைச் சொல்றீங்க???

இராகவன் நைஜிரியா said...

// நீங்க சொல்லுங்க. இப்போ நான் என்ன செய்ய... //

எதாவது பண்ணுங்க... எது பண்ணாலும் நல்லாதா நாலு பேருக்கு உதவற மாதிரி பண்ணுங்க..

Karthick Krishna CS said...

@ragavan

என்னை நாயகன் கமல் ரேஞ்சுக்கு பீல் பண்ண வெக்கறீங்க.... but சொல்லிட்டீங்க, ட்ரை பண்றேன்...