Wednesday, July 22, 2009

நாடோடிகளும் அரை ரத்த இளவரசனும்

நாடோடிகள்

நான் என்ன பெரிய விமர்சனம் எழுதறது. எனக்கு முன்னாடியே, பல நல்லவர்கள், படத்தை பார்த்து எழுதித் தள்ளிட்டாங்க, எனக்கு மிச்சம் வைக்காம. இது, எதை மாதிரியான படம்னு வரையறுக்க முடியலை. எந்த மாதிரி வேணாலும் புரிஞ்சிக்கலாம். வேறு வேறு விதமான நண்பர்களுக்குள்ள நடக்கும் கதையாகவும் பார்க்கலாம், வேறு வேறு விதமான தந்தைகளைப் பற்றிய படமாகவும் எடுத்துக்கலாம், வேறு வேறு பெண்களை/காதலிகளை/அம்மாக்களைப் பற்றிய படமாகவும் பார்க்கலாம்னு, இந்தப் படத்திற்கு, எக்கச்சக்க கோணங்கள். ஒரு தேவையில்லாத பாடலைத் தவிர (யக்கா யக்கா) படம் வேறு எங்கயுமே போர் அடிக்கல. திரைக்கதை அப்படி.

அருமையான ஒளிப்பதிவு, எடிட்டிங், வசனம், நடிப்புன்னு படம் நெடுக ஒரே positives மட்டுமே. இருந்தும் எனக்கு, மூன்று முறை பார்க்கும் போதும், கண்ணை உறுத்திய சில விஷயங்கள். முன்னமே சொன்னது போல அந்த யக்கா யக்கா பாடல். பாட்டும் சுமார்தான், அதில் ஒளிப்பதிவு, ரொம்பக் கீழ்த் தரம், நிறைய low angles. தேவையில்லாத திணிப்பு. சசிகுமாரின் amateur நடிப்பு. அவருக்கு ஹீரோ வேஷம் பொருந்தினாலும், பல இடங்களில் அவர் நடிக்கக் கஷ்டப்படுவது தெரிகிறது. மொக்கை பின்னணி இசை. அந்தக் கடத்தல் இடத்துல வரும் இசையைத் தவிர, வேற எங்கையும் பெருசா ஒட்டலை. பல இடங்களில், ஒரே இசையை மீண்டும் மீண்டும் போட்டு, வெறுப்பேத்தறாங்க.

மற்றபடி இது கன கச்சிதமான படம்.

இப்படி கை தூக்கினவங்க எல்லாம் என்ன ஆனாங்க தெரியுமா...

ஹாரி பாட்டர்

இது வரை வந்த ஹாரி பாட்டர் படங்கள்லேயே, இது தான் உன்னதமான படைப்புன்னு வந்த பல நூறு விமர்சனங்களை பார்த்து, வழக்கம் போல ஏமாறாம, என் எதிர்பார்ப்புகளை கொஞ்சம் கட்டுப்படுத்திக்கிட்டு, படம் பார்க்க போனேன். முதல் நாளே பார்க்கனும்னு இருந்தேன், ஆனா என்னை விட பல ஆர்வக் கோளாறுகள் இருந்ததால, அவங்க முந்திகிட்டாங்க. ஒரு வழியா நாலாவது நாள் நைட் ஷோ, சத்யம் தியேட்டர்ல, நடு சென்டர் ஸீட்டாப் பார்த்து புக் பண்ணேன்.

படம் பெருசா ஒண்ணும் ஏமாத்தலை. ஆனா புத்தகத்தை படிச்சவங்களுக்கு கொஞ்சம் ஏமாற்றமாகவே இருக்கும். நான் இந்தப் படத்தை தூற்றவும் இல்லை, போற்றவும் இல்லை. கிடைத்த 2.5 மணி நேரத்துல, முடிந்த வரை, பரபரப்பா கதை சொல்லிருக்காங்க. திரைக்கதை நல்ல வேகம். ஆனா, தேவையே இல்லாம, புத்தகத்துல இல்லாத ஒரு fight சீன் படத்துல இருக்கு. படத்துல சில பல இடங்கள், செம்ம humorous. நடிப்புன்னு பார்த்தா, இந்த படத்துல, dumbledore பாத்திரத்துல வர michael gambon நல்லா நடிச்சிருக்கார். daniel, படத்துல பெரிய வேலை ஒண்ணும் இல்லாம வரார். rupert grint நல்ல காமெடி நடிகரா வருவார்னு நினைக்கறேன். அவரோட reactions எல்லாம் செம்மக் காமெடி.

நம்ம emma watson, வழக்கம் போல நல்லாவே நடிச்சிருக்காங்க. அவங்க எதுக்கு நடிக்கணும். சும்மா வந்து நின்னா போதும். அட அட அட. அதுவும் RDX ஸ்க்ரீன்ல இன்னும் அழகா இருக்காங்க. alan rickman, tom felton, எல்லாருமே கிடைச்ச ஸ்க்ரீன் டைம்ல, நல்லா நடிச்சிருக்காங்க. படத்துக்கு முக்கியமான பலம், கிராபிக்ஸ், கேமரா & எடிட்டிங். எல்லாமே உச்சக்கட்டம். Almost, படத்தோட எல்லா காட்சியிலுமே கிராபிக்ஸ் இருக்கு. அதுவும் சிறந்த தரத்தோட. மொத்ததுல, படம் நல்ல பொழுதுபோக்கு. ஆனா, வந்த படங்கள்லேயே சூப்பர்னு எல்லாம் சொல்ல முடியாது. நான் புத்தகங்களை முன்னமே படிச்துனால இருக்கலாம்.

அடுத்த படத்தை நான் பெருசா ஒண்ணும் எதிர் பார்க்கலை. ஆனா, அடுத்த படத்துல நம்ம emma watsonku இன்னும் கொஞ்சம் ஸ்க்ரீன் டைம் கொடுத்தா நல்லா இருக்கும். மற்றபடி, இது, பாட்டர் படங்களில், மற்றுமொரு வெற்றிப் படம்.
படத்தை, சத்யம் தியேட்டர்ல மட்டும் பாருங்க.

இதப் பாரு. கிருஷ்ணா ரொம்ப நல்லவன்னு போட்டிருக்கு...

(பி.கு. இந்த அரை ரத்த இளவரசன் என்கிற மொழி மாற்றம், நான் முன்னமே யோசிச்சது. அதனால, நண்பர் lancelot ராயல்டி கேட்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன்)

14 comments:

kanagu said...

Vimarsan ellam super... HP6 nalaiku than pakka porom... neenga vareengala?

Karthick Krishna CS said...

@kanagu
naan already 2nd timeku aal pudichitten.. neenga enzaay pannunga...

Anonymous said...

vimarsanam nalla iruku... aana nadodigal vimarsanathula 'Pavithra' character la nadicha 'Abhinaya' ah mention pannirukalam anna...!!! Pl...

Karthick Krishna CS said...

@ak
nandri... abinyava patri niraya sollittaanaga. tats wy...

Anonymous said...

unga style la konjam sollungalen na..!!

Karthick Krishna CS said...

@ak
adada. sir, neenga ennai romba vekkappada vekkareenga...ennudaya style ah?? adha enga kandu pudicheenga.. irundhaalum, neen ennai nammmmmmmbi keattadhaala idho,
//தங்கையாக நடித்திருக்கும் அபினயாவுக்கு, நிஜத்தில் கேட்பதிலும் பேசுவதிலும் குறை இருந்தாலும், அது தெரியாத அளவிற்கு, நன்றாகவே நடித்துள்ளார்.. இங்க நம்ம ஊர்ல, எல்லாம் இருந்தும், வேலைக்கே ஆகாத ஹீரோயின்கள் மத்தியில், இவர் எப்படி தான் குப்பை கொட்ட போறார்னு தெரியலை. அந்த இன்னொரு ஹீரோயினும் சிறந்த தேர்வு. Warm Welcome to both these heroines...//

Anonymous said...

Awwwesoommmmeee...!!!!! Idha idha idha dan edhirpaathen!!! Mikka nandri..

Karthick Krishna CS said...

@ak
welcome.. aana konjam overaave pugazhareenga...

S said...

ஹூம்ம்... ஆசை யார விட்டுது. வோகேய்! அப்டீனா இத்த கண்டு புடி பாப்போம்!

What is common between the following?

Otto,
Stagecoach,
Pauline,
Constellation,
Pea,
Duerre,
Heyman,
fly-fishing,
Dragon School

டக்குன்னு பதில் சொல்லி, பல்பு குடுப்பெங்கர டேய்ன்ஜர் இருந்தாலும் பரவால்லன்னு கேக்குறேன்.

Karthick Krishna CS said...

@s
எல்லாத்துக்கும் ஒரே பொதுவான விஷயம், "எதைப்பற்றியுமே எனக்கு தெரியாது"

//டக்குன்னு பதில் சொல்லி//
ஆனாலும் உங்களுக்கு ரொம்பதான் குசும்பு...

S said...

அடேய்! என் தம்பி, உடனே பதில் சொல்லி என் பெற காப்பாதிடுவான்னு நிஜமாவே எதிர்பாதேனே.

இப்படி என்ன ஏமாத்திட்டியே! :( அப்புறம் நீ என்ன பெரிய மீடியா ஸ்டூடண்டு? என்ன பெரிய எம்மா விசிறி?

Karthick Krishna CS said...

@s
நல்ல கிlue...
இதோ புடிங்க...
Otto and Constellation- emma vaangina awards
Stagecoach - emma's training center
Pauline - her role in ballet shoes
Pea - the tale of despereauxla emma voice kudutha char name
Duerre - avanga appaaru name???
Heyman - select panna puuniyavaan
fly-fishing - one of her hobby
Dragon School - emma attend panna school

but, நீங்க எதுக்கு தேவையில்லாம இதெல்லாம் தெரிஞ்சு வெச்சிருக்கீங்க... போட்டிக்கு வராதீங்க...

S said...

பதில சொன்னதுக்கப்புரமுன்னாலும், இப்பவாவது கண்டு புடிச்சியே!

இன்னிக்கு முடியுமான்னு தெரியலே, ஆனா next time meet பண்ணும்போது உனக்கு ஒரு மிட்டாய் வாங்கி தாரேன்! :-D

Take care of the program today. Will catch up wid ye later

S said...

One small correction - Duerre is the name of her French Grandmother :)