Tuesday, December 22, 2009

எல்லாம் முடிஞ்சுபோச்ச்ச்.....

ஒவ்வொரு மொக்கை படம் தியேட்டர்ல முடியும்போதும், இப்படிதான் நான் சொல்லிகிட்டிருப்பேன். பதிவுலகத்துல வேட்டைக்காரன் இப்படி ஒரு phenomenon ஆகும்னு நினைச்சே பார்க்கலை. tamilsh.கம, வேட்டைக்காரன் பற்றிய பதிவுகளை சேர்க்க, தனியா ஒரு லிங்கே உருவாக்கியிருக்காங்க. பெருசா என்னால விமர்சனம் எதுவும் எழுத முடியாது, ஏன்னா ஏற்கனவே படத்தை pre-mortem, post-mortem எல்லாம் செஞ்சு தொங்கபோட்டுட்டாங்க. ஒரே ஒரு விஷயம் சொல்லனும்னா, இந்த விமர்சனப் பதிவுகள்ள எவ்வளவு மொக்கைனு போட்டுருக்காங்களோ, அதைவிட படம் மொக்கை.              
விஜய் ரசிகர்களே தியேட்டர்ல கமென்ட் அடிச்சு கலாய்க்கறாங்க. Assembled கம்ப்யூட்டர் பார்த்துருப்பீங்க. இது ஒரு assembled படம். அங்க கொஞ்சம், இங்க கொஞ்சம்னு இஷ்டத்துக்கு உருவி ஒரு படம். காறிதுப்பக் கூட நாக்குல எச்சில் இல்லை. அவரும் அவர் பையனும் ஆடும்போது, சிம்புவும் டி.ஆரும் நியாபகத்துல வராங்க. பாடல்கள் கேட்க மட்டுமே நல்லா இருக்கு. நடன அமைப்பு ரொம்பவே amateur. அனுஷ்காவுக்காகவும் படத்தை பார்க்க முடியாது. அவங்களுக்கு முதல் தமிழ் படம்னு தனியா தெரியுது. அவங்க தெலுங்கு படங்கள்ல இருக்குறா மாதிரி இல்லாம ரொம்ப செயற்க்கைத்தனமா இருக்கு அவங்க நடிப்பும் ஆட்டமும். விஜயவிட நாலு இன்ச் உயரம் வேற.   

இதுக்கு மேல நான் என்ன எழுதினாலும் cliche ஆகிடும். இத்தோட நிறுத்திக்கறேன். வழக்கம் போல சன் டிவி அவங்களோட propaganda ஆரம்பிச்சிட்டாங்க. மெகா ஹிட்டாம். வசூல் சாதனையாம். கோபாலபுரத்துல மட்டும் நல்லா ஓடுது போல. இங்க சென்னைல நேத்து வரைல, சத்யம் தவிர எல்லா அரங்குலையும், எல்லா ஷோவுக்கும், இந்த வாரம் முழுக்க டிக்கெட் இருக்கு. எப்படி சன் டிவில எந்த படம் போட்டாலும் பார்ப்பமோ, அது மாதிரி தான் சத்யம் தியேட்டரும். நான் பார்த்த தியேட்டர்ல பால்கனில இருக்குற 100 சீட்டும் full. கீழ இருந்த 500+ சீட்டுகள் காலி. அதை போட்டோ எடுக்க விடலை.    

சில படங்களை விமர்சனத்துல கொஞ்சம் ஓவராவே கலாய்ப்பாங்க. அந்த தியேட்டர் பக்கம் போயிறாதீங்க. போஸ்டர் கூட பாத்துறாதீங்கன்னெல்லாம் சொல்லுவாங்க. இந்த பட விமர்சனத்துக்கு அதை விட மோசமா ஏதாவது சொல்லனும்னு பார்த்தா, சரியா எதுவும் மாட்டலை. மக்களை இவ்வளவு தூரம் முட்டளா பார்க்குற படங்கள் வர்றது இதுவே கடைசியா இருக்கணும். ஆனா, இந்த படத்தை ஹிட்டாக்க இன்னொரு நல்லா விஷயம் பண்ணிருக்கலாம். ஒரு சில காட்சிகளை மாத்திட்டு, ஒரு குழந்தைங்க படமா இதை மார்கெடிங் பண்ணிருந்தா, படம் கண்டிப்பா சூப்பர் ஹிட் ஆகிருக்கும். என்ன நான் சொல்றது??? 

விஜய்: புலி உறுமுது புலி உறுமுது....
மக்கள்: கொட்டை எடுத்ததா எடுக்காததா???
...
p.s.ஆயிரத்தில் ஒருவன் டிரைலர் போட்டாங்க. எடுத்தவுடனேயே, ரீமா சென்னும் ஆண்ட்ரியாவும் பச்சை மஞ்சள்னு கலர் கலரா திட்டிக்கறாங்க. கட் பண்ணா A SELVARAGHAVAN FILMனு வருது. டைரக்டர் டச்???

9 comments:

சங்கர் said...

//ஆண்ட்ரியாவும் பச்சை மஞ்சள்னு கலர் கலரா திட்டிக்கறாங்க. கட் பண்ணா A SELVARAGHAVAN FILMனு வருது. டைரக்டர் டச்???//

யார டச் பண்றாரு?

கா.கி said...

@shankar
ellaarayumdhan...

இராகவன் நைஜிரியா said...

இதுக்கு மேலே மட்டமா படம் எடுக்க முடியாது என்ற அளவுக்கு எடுத்து இருக்காங்கன்னு நினைக்கிறேன்.

எல்லா விமர்சனத்தையும் படிச்சே ஜுரம் வர மாதிரி இருக்கு. தியேட்டரில் போய் படம் பார்த்தவங்க நிலைமையை நினைச்சுக்கூடப் பார்க்க முடியவில்லை. அய்யோ பாவம்.

கா.கி said...

@இராகவன்

எல்லாத்தையும் படிச்சிட்டும் நான் போனேன் பாருங்க. எனக்கு நல்ல வேணும்..

அஹோரி said...

//கோபாலபுரத்துல மட்டும் நல்லா ஓடுது போல.//
ஹி ஹி ஹி ...

Prasanna said...

விஜய்: புலி உறுமுது புலி உறுமுது....

Gounder: Puli nakkunale nee sethu poiduva. Unakkellam puli urumuthunnu oru patta da thooku satti thalaya:P

கா.கி said...

@pras
lol.. semma punch..

Meera said...

padam evalvu mattam ma irrunthalum theatre la poi pakkara paru nee romba navaen anna

கா.கி said...

@meera - enna seyya. ellam en vidhi