Sunday, October 18, 2009

குருவிக்கு மேல, அயனுக்குக் கீழ

 நீங்க நினைக்கறது கரிக்டு. ஆதவன் படத்தை பத்தின கமெண்ட் தான் தலைப்பு. படம் ஆவரேஜ் தான். சூர்யா ரசிகர்களை ஏமாத்தும். கே எஸ் ரவிக்குமார் ரசிகர்கள், சாமி சத்தியமா ஏமாறமாட்டாங்க. சூர்யாவுக்கு இது முதல் முழு நீள மசாலா படம்னு நினைக்கறேன். படத்துல ரெண்டு ஹைலைட். சூர்யா & வடிவேலு. இவங்க இரண்டு பேர் மட்டுமே படத்தை காப்பாத்தறாங்க. அதுவும் முதல் பாதி அட்டகாசமா இருக்கு. சண்டைக் காட்சிகள் + ஒளிப்பதிவும் டக்கர். இதெல்லாம் படத்துல இருக்குற ப்ளஸ்.

இரண்டாவது பாதிதான் கொஞ்சம் வலுவிழக்குது. நாம நினைக்கறா மாதிரியே கதையும் போகுது. மோசமான கிராபிக்ஸ். அதுவும் அந்த பத்து வயசு சூர்யா பெருசா ஒண்ணும் ஆச்சரியப்படுத்தலை. குறைஞ்சது மூணு பாடல்களை தவிர்த்திருக்கலாம். பாடல்கள் placementம் சரியில்லை.கிளைமாக்ஸ்ல சண்டை நல்லா இருக்கு, ஆனா அந்த ராக்கெட் மேட்டர் காமெடி. திரைக்கதையின் வேகமும், இரண்டாம் பாதில அடி வாங்குது. நயன்தாராவ பத்த தப்பா சொல்லக் கூட எதுவும் இல்லை. இதெல்லாம் மைனஸ்.

இந்த டைரக்டரிடமிருந்து நான் கலைப் படைப்பு எதையும் எதிர்பார்க்கலை. போனமா, ஒரு ரெண்டரை மணி நேரம் பொழுது போச்சா. அவ்வளவே. அதனால எனக்கு பெரிய ஏமாற்றம் ஒண்ணும் இல்லை. எதுவும் எதிர்பார்க்காம போனீங்கன்னா கண்டிப்பா மொக்கை வாங்க மாட்டீங்க. சூர்யாவுக்கு மட்டும் ஒரு எச்சரிக்கை. இந்தப் படம் ஓகே. b&c சென்டர்கள்ல  ஓடும்னு நம்பறேன். ஆனா, இதே மாதிரி ரெண்டு படம் கொடுத்தார்னா, விஜய்க்கு நேர்ந்த கதிதான் உங்களுக்கும். சாக்கிரதை. சொல்லிப்புட்டேன். மத்தபடி, இது மற்றுமொரு 50நாள் வெற்றி படம். போட்ட காசுக்கு மேலேயே எடுப்பாங்க.



  உதய்: அந்த ஆடு அந்த அருவா, இந்த மனுஷன் இந்த மாலை. ரெண்டும் ஒரே மாதிரி இல்லை??
 KSR: இல்லை...
-----------------------------------------------------------------------------------------------------------------------------

Update: தியேட்டர் அந்தர் quality. சவுண்டும் லுக்கும் ஸூபர். சத்யமா விட சவுண்ட் நல்லா கீது. ஒவ்வொரு சீட்டுக்கும் அழகா space விட்டுருக்காங்க. டிஜிட்டல் ப்ரோஜக்ஷன் பண்ணா, அவ்ளோ பெரிய ஸ்க்ரீன்ல இன்னும் நல்லா இருக்கும்னு தோணுது. அதுவும், முதல்ல போட்ட 2012 படத்தோட trailer, கெத்து. கண்டிப்பா அந்த படத்தை, தேவில மட்டுமே பாருங்க. இருக்குற ஒரே பிரச்சனை, பார்க்கிங். மேட்னீ ஷோ முடிஞ்சு, பார்க்கிங் பிரச்சனைகள்னால, 6.30 மணி ஈவினிங் ஷோ 7.15ku தான் ஆரம்பிச்சாங்க. அப்படி ஒரு குழப்பம். சாந்தி தியேட்டர் வரை வாகனங்கள், உள்ள நுழைய, வரிசை கட்டி நின்னுச்சு. இந்த ஒரு மேட்டர கரக்ட் பண்ணாக்கா, தேவிய அடிச்சிக்க ஆள் இல்ல. (நன்றி கனகு அண்ணன் for reminder)


பார்க்கிங்க்னால ஏற்பட்டக் குழப்பக் கூட்டம்...

5 comments:

Unknown said...

appo nan tvle ye pathukuren...

கா.கி said...

@devaki
apparam unga ishtam

kanagu said...

theatre ah pathi sollave illaye???

padam masala va than irukkum.. KSR athula than specialist..

கா.கி said...

@kanagu - sorry, update pannitten...

kanagu said...

update ku thanksu... :)

naan indha Monday poren... :)

English padam ellam potta innum thaaru maara irukkum..

atlast Devi is back to form.. :)