Sunday, October 11, 2009

அதாகப்பட்டது சார்....

வாணி அக்கா (நான் ரொம்ப சின்ன பையனாக்கும் ;) ஒரு tag கொடுத்துருக்காங்க. அதாவது, என் வாழ்க்கைல, நான் உபயோகப்படுத்தற, பிரபலமான brands பத்தி. எவ்வளவு வேணும்னாலும் சொல்லலாம். இருந்தாலும், கொஞ்சம் லிமிட்டிக்கறேன்...

காலைல எழுந்ததுமே, முதல்ல பல்லு தேய்க்கணும். அதுக்கு நான் பயன்படுத்துவது, உங்கள் ஹிமாலாயா டூத் பேஸ்ட். பல பேர் கேள்விப் பட்டிருக்கவே மாட்டீங்க. இனிமே கேள்விப் படுவீங்க. இதை நான் வாங்க இரண்டு காரணங்கள். 1. இது ஒரு சுதேசி product. 2. நிஜமாவே நல்லாத்தான் இருக்கு.

அடுத்ததா குளிக்க use பண்றது, godrej Cinthol soap. டாக்டர் பல பேர் இததான் recommend பண்ணாங்க. அடுத்து, இதுவும் சுதேசி product.

பயன் படுத்தற கைப்பேசி, சோனி எரிக்சன் k810i. முதல்ல நோக்கியா வெச்சிருந்தேன். அது செத்துப் போனதால, இப்ப சோனி. பேரு தான் சோனி, (என்னை மாதிரி ;) ஆனா நல்லா உழைக்குது (இதுவும் என்னை மாதிரி). உள்ள இருக்குற சிம் கார்டு, airtel.

அடுத்ததா, நான் சாப்பிடுவது, அம்மா பிராண்ட் சமையல். அதாவது எங்கம்மா கையால சமைச்சுப் போடுறத சாப்பிடுவேன். ரொம்ப நாளா பயன்படுத்தரேனே, அதனால, இதுவும் எனக்கு பிராண்ட் மாதிரி தான். (வேறு எங்கும் கிடைக்காது :)

தினமும் சாப்பிடற, நோவர்டிஸ் கம்பெனியோட trioptal மாத்திரைகள். என் நிதானத்திருக்கும், தெளிவிற்கும், இதுவே காரணம்.   
   
இது தவிர, நிறைய பேர் பயன்படுத்தற விண்டோஸ், மோசெர் பேயர் cd, ஹீரோ ஹோண்டா வண்டின்னு என் வாழ்க்கைல பல பிராண்டுகளின் பங்கு கீது.

இந்த நேரத்துல, நான் உங்க கிட்ட கேக்கறது ஒண்ணே ஒண்ணு தான். முடிஞ்ச வரை, இந்தியால தயாரிக்கற பொருட்களையே பயன் படுத்துங்க. தரம் சரியில்லைனு நினைக்கற ஆளுங்க, அட்லீஸ்ட், உங்க அன்றாட வாழ்க்கைல, ஒரு பொருளையாவது, சுதேசி பொருளா மாத்துங்க. கீழ, இருக்குற சுதேசி பொருட்களோட விவரங்களை தரேன், மற்றவங்களுக்கும் குடுங்க. இது, இந்திய பொருளாதாரம் வளரவும் ஒரு பெரிய உதவியா இருக்கும். மறுபடியும் சொல்றேன், அட்லீஸ்ட் ஒரு பொருளையாவது தொடர்ந்து வாங்குங்க. அகிம்சைல மட்டும் இல்லாம, இந்த விஷயத்துலையும் காந்திய follow பண்ணுங்க. இதுல எவ்வளவு பொருட்களை நீங்க அன்றாடம் பயன்படுத்தறீங்கன்னு பாருங்க. ஜெய்ஹிந்த்

BATHING SOAP:
USE   - CINTHOL & OTHER GODREJ BRANDS, SANTOOR, WIPRO SHIKAKAI, MYSORE SANDAL, MARGO, NEEM, EVITA, MEDIMIX, GANGA , NIRMA BATH & CHANDRIKA
INSTEAD OF - LUX, LIFEBOY, REXONA, LIRIL, DOVE, PEARS, HAMAM, LESANCY, CAMAY, PALMOLIVETOOTH PASTE:
USE   - NEEM, BABOOL, PROMISE, VICO VAJRADANTI, PRUDENT, DABUR PRODUCTS, MISWAK
INSTEAD OF - COLGATE, CLOSE UP, PEPSODENT, CIBACA, FORHANS, MENTADENT  


TOOTH BRUSH:
USE - PRUDENT, AJANTA , PROMISE

INSTEAD OF - COLGATE, CLOSE UP, PEPSODENT, FORHANS, ORAL-B 


SHAVING CREAM:
USE - GODREJ, EMANI
INSTEAD OF - PALMOLIVE, OLD SPICE, GILLETEBLADE:
USE - SUPERMAX, TOPAZ, LAZER, ASHOKA
INSTEAD OF - SEVEN-O -CLOCK, 365 , GILLETTE


TALCUM POWDER:
USE - SANTOOR, GOKUL, CINTHOL, WIPRO BABY POWDER, BOROPLUS
INSTEAD OF - PONDS, OLD SPICE, JOHNSON BABY POWDER, SHOWER TO SHOWERMILK POWDER:
USE - INDIANA , AMUL, AMULYA
INSTEAD OF - ANIKSPRAY, MILKANA, EVERYDAY MILK, MILKMAID. 


SHAMPOO:
USE - LAKME, NIRMA, VELVET
INSTEAD OF - HALO, ALL CLEAR, NYLE, SUNSILK, HEAD AND SHOULDERS, PANTENE MOBILE CONNECTIONS
USE - BSNL, AIRTEL
INSTEAD OF - HUTCH


இந்த tagஐ சர்வேசன் அண்ணனுக்கும் (நீங்க எங்க இருக்கீங்கன்னு தெரியும் இருந்தாலும்....), கனகு அண்ணனுக்கும், தம்பி கிருஷ்ணா குமாருக்கும், கார்த்திக் தம்பிக்கும், பூர்ணா மேடமுக்கும் பாஸறேன்......


Nandri வாணி அவர்களே. உங்களால எனக்கு ஒரு நல்லா விஷயம் சொல்ல வாய்ப்பு கிடைத்தது....

8 comments:

SurveySan said...

interesting concept :)

////தினமும் சாப்பிடற மாத்திர, நோவர்டிஸ் கம்பெனியோட trioptal மாத்திரைகள். என் நிதானத்திருக்கும், தெளிவிற்கும், இதுவே காரணம். ////

avoid medicines.

will do my post later this week.

Anonymous said...

Ungalukulla ippadi oru desa patra ? Well done ..

Karthick Krishna said...

@survey
nandri :)....
andha medicine kandippaa naan eduthukkanum... wil post the reason this month end ;)...


@vani
Nandri :)

kanagu said...

nalla panni irukeenga Kaki... :)

naanum neraya porulgala suthesi-nu theriyama than payanpaduthitu irukken...

neenga sonnathula cool drinkaayum add panni irundha nalla irundhurukkum.. yenna.. athu than makkal adigama vaanguranga.. bovonto unmayaave nalla irukku coke ah compare pannum podhu...

apram enna tag pannathuku nandri.. seekrame poduren :)

apram yen 'anna' apdinu ellam solli enoda vayasa kannapinna nu yethureenga... kanagu-ne kopdalam :)

Krishna Kumar said...

What Do now...??

Karthick Krishna CS said...

@kanagu - vayasula periyavarnu anna solren... actuala neenga enna panreenga????

kanagu said...

software engineer thalaiva.. infosys la..

Karthick Krishna CS said...

Neengalum Itah?? righttu....