அங்க படம் பார்க்கற அனுபவமே அலாதியானது. அவ்வை ஷண்முகி, வாலி, முத்து, சிட்டிசன், தூள், கில்லி, மன்மதன், காக்க காக்க இன்னும் எவ்வளவோ படங்களை நான் அங்க பாத்துருக்கேன். மேல நான் சொன்னதுல சில படங்கள்,மக்கள் மத்தியில படம் பார்க்கற அந்த அனுபவத்துக்காகவே ரெண்டு மூணு முறை பாத்துருக்கேன். தூள் படத்தோட கடைசி பாடல் வரும்போது, தியேட்டரே எழுந்து நின்னு ஆடினது இன்னும் கண்ணுலேயே இருக்கு. எம்மாம் பெரிய ஸ்க்ரீனு, இன்னா சவுண்டு. செம்ம ஸீனா இருக்கும். ப்ளாக் டிக்கெட் பிரச்சனைகள் இருந்தாலும், மற்றபடி எந்த பிரச்சனையும் இருந்ததில்லை. இங்கதான் முதல் முறையா DTS, Dolby advertisements பார்த்தேன்.
ஆனா, கடந்த 3-4 வருடங்களாகவே, தேவி தியேட்டர் சரியா பராமரிக்கப்படாம நாசமாகிட்டே வந்தது. ஓனர் பீல் பன்னிருப்பாரோ இல்லையோ, நான் ரொம்ப பீல் பண்ண ஆரம்பிச்சேன். தேவியோட வீழ்ச்சியில, கொஞ்சம் கொஞ்சமா சத்யம் வளர ஆரம்பிச்சுது. இப்ப ஒரு அசைக்க முடியாத இடத்துல இருக்கு. சில படங்கள் சத்யம்ல பார்க்கும்போது கூட, "இதே படத்தை தேவில பார்த்தா எப்படி இருக்கும்"னு யோசிச்சிப் பாத்துருக்கேன். கொஞ்ச நாள் கழிச்சு (கேடி படம் வந்த சமயம்னு நினைக்கறேன்), தேவி தியேட்டர் புதுப்பிக்கப் போறாங்கன்னு கேள்விப் பட்டு ரொம்ப சந்தோஷப்பட்டேன்.
ஆனா வேலை ஒண்ணும் நடக்கறா மாதிரியே தெரியலை. அஞ்சாதே, தசாவதாரம், குருவி மாதிரி படங்கள் பார்க்கும்போதும் வேலை நடந்துகிட்டேடடடடடடடடடட தான் இருந்துச்சு. அங்க மறுபடியும், முன்ன மாதிரி படம் பார்க்க முடியாதுன்னே முடிவு பண்ண சமயத்துலதான். கந்தசாமி அங்க ரிலீஸ் பண்ணப் போறதா செய்தி வந்தது. அரங்கத்த நல்லா ஆக்கிட்டாங்கன்னும் தெரிய வந்தது. ஆனா கந்தசாமி அங்க ரிலீஸ் ஆகலை. மறுபடியும் பல்பு. ஆனா, இப்ப தீபாவளிக்கு திறக்கப் போறாங்கன்னு உறுத்திய செய்தி வந்துச்சு. ஒரு வழியா, தியேட்டர சோப்பரா ஆக்கிட்டாங்க.(வெளிய பார்க்கும்போது அப்படிதான் இருக்கு). ஆன்லைன் புக்கிங் வேற. முதல் நாளே டிக்கெட் எடுத்துட்டேன்.
மறுபடியும் அங்க போய் படம் பார்க்கறத நினைச்சா நிஜமாவே ரொம்ப சந்தோஷமா இருக்கு. இத மாதிரி எந்த கிறுக்கனாவது இருப்பானான்னு நீங்க நினைக்கறது என் காதுல விழுது. அப்படி நினைக்கறதுல தப்பே இல்லை. நான் அப்படி ஒரு சினிமா கிறுக்கன்தான். ஆனா, தியேட்டர் ஆளுங்க ரொம்ப யோசிச்சு, ஆர்வக்கோளாரா ஒரு வேளை செஞ்சிருக்காங்க. பத்து ரூவா டிக்கெட்டுக்கு ஆன்லைன் புக்கிங் வெச்சிருக்காங்க. இப்படி வெச்சா, அதை நம்பியே கவுண்டருக்கு வர ஏழைங்க கதி என்ன ஆகறது??? படம் பார்க்கனும்னு வெறியில இருக்குற என்னை மாதிரி ரசிகர்கள், ஆன்லைன்ல எந்த டிக்கெட் கெடைச்சாலும் பரவாயில்லைனு அதையும் புக் பண்ணிடுவாங்கல்ல..
இருக்கட்டும், facebookல கமெண்ட்ஸ் சொல்லிருக்கேன். இன்னும் சில பேரும் இதையே சொல்லிருக்காங்க. என்ன பண்றாங்கன்னு பார்ப்போம். எப்படியோ, சென்னையோட ஒரு கலாசார அடையாளத்துக்கு (!?!?!?!) மறுபடியும் உயிர் வந்துருக்கு. மிக்க மகிழ்ச்சி. போயிட்டு வந்துட்டு, உள்ளார எப்படி இருக்குன்னு சொல்றேன்.
இங்க ஒரு பெரிய தட்டு வந்து, டப்பு டப்புன்னு ஒடையும். அதுக்கே 10 ரூவா போய்டும்....
எல்லாருக்கும் தீவாளி நல்வாழ்த்துக்கள்...
8 comments:
enakkum devi than pidicha theatre...
naan innum online booking open pannave illanu nenachitu irundhen :(
Aadhavan padam kandippa anga than.. :)
poitu vandhu epdi irukkunu sollunga.. :)
@kanagu - kandippa. ennoda sevai, unga ellarukkum thevai ;)
//படம் பார்க்கனும்னு வெறியில இருக்குற என்னை மாதிரி ரசிகர்கள், //
Appa Olungaa padikkurathillaiyaa??? :-))
@rad - enakku padam dhan paadam...
ஒரு காலத்தில சென்னையில் முதல் zeon லேம்ப் ப்ரொஷக்ஷன் தேவில மட்டுமே.. அதுமட்டுமில்லாம.. அது ரெனவேஷனுக்கு மூடிற வரைக்கும் கூட சென்னையில் சூப்பர் கலெக்ஷன் செண்டர் அதுதான். தேவியும், தேவி பாரடைசையும் அடிச்சிக்க முடியாம் இருந்ததது.. ஒரு காலத்தில நான் புளூ பார்க்க அங்க தான் போகப்போறேன்.
@cable - thanks for the info sir.. mudinja appadiye, chennaila irukkura theatregala patri oru padhivu podunga....
Your blog post captures my thoughts about Devi. Glad to hear that after renovation theatre looks good. Hopefully mgmt maintains the complex properly.
How is the new Devi screen ? In the pics I saw the screen looks smaller than the old one. Miss that big concave screen. That is one of their big plus points.
>>ஓனர் பீல் பன்னிருப்பாரோ இல்லையோ, நான் ரொம்ப பீல் பண்ண ஆரம்பிச்சேன்.
You are not alone. Although I have moved abroad few years back, I still follow news about Chennai cinema halls. If you tell a movie name that was released in last 10 years, then I can tell you whether it is released in Devi complex or not. Such a fanatic ;)
@saravanan
thanks for ur comment...
the screen is still the same size and ya it is still concave...
gud to see another devi fanatic...
drop in regularly.. :)
Post a Comment