Friday, December 26, 2008

கதை பண்றது....Part-3

போன பாகம் --->இங்கே<--- இப்ப, சிறுகதை, எழுத்தில்....

------------------------------------------------------------------------------------------------
ஒரு சின்ன short film ...


டக்.... டக்... டக்....கதவு தட்டும் சத்தம் கேட்டுது.

நான்
என்னோட ஆபீஸ்ல பெருசா வேலை எதுவும் இல்லாம உட்கார்ந்துகிட்டு இருந்தேன். மறுபடியும் கதவு தட்டப்பட்டது. அந்த பசங்கதான் வராங்கன்னு தெரியும். மறுபடியும் டக்... டக்... டக்... எவ்வளவு முறை சொன்னாலும் கேக்கமாட்டனுங்க. சத்தமா "போதும்பா கதவ தட்டுனது உள்ள வா" அப்படின்னேன். உள்ள வரும்போதே "நாங்க தான்னு முன்னாடியே தெரியுமா சார்?"னு கேட்டுகிட்டேதான் வந்தான் ரெண்டு பேர்ல ஒருத்தன்.

"இந்த காலத்துல யாருடா கதவ தட்டிட்டு உள்ள வராங்க, வர எல்லாரும், உள்ள வந்துட்டு, அப்பறம் excuse me சார், may i enter sirனு கேக்கறாங்க. நீங்க மட்டும்தான் கதவ தட்டிட்டு வரீங்க. சரி, இன்னிக்கு என்ன shoot பண்ணிருக்கீங்க?". "நீங்களே பாருங்க sir"னு சொல்லிட்டு, தோள்ல மாட்டிருந்த handy cam baga ஓபன் பண்ணி, கேமரா குடுத்தான், பதில் சொன்னவன். அதுல LCD screena ஓபன் பண்ணி play பண்ணேன்.

வழக்கம் போல ஏதோ நியூஸ் ரீல் மாதிரி ஒரு டாகுமெண்டரி. எடிட் பண்ணாத அந்த footage ஓடிச்சு. இந்த ரெண்டு பசங்கள பத்தி சொல்ல மறந்துட்டனே. இந்த கேமரா குடுத்த பையன், என்னோட சிஷ்யன் மாதிரி. நல்ல creativity இருக்குற, கஷ்ட்டப்படுற பையன். நான்தான் financiala கொஞ்சம் ஹெல்ப் பண்ணி, Visual Communication படிக்க சொன்னேன். கடந்த ஒரு வாரமா, அவனோட நண்பனோட, காலேஜ்ல ஏதோ போட்டிக்காக, ஒவ்வொரு படமா எடுத்து, என்கிட்ட opinion கேட்க வந்துகிட்டு இருக்கான். நானும், அவன வெறுப்பேத்த, எதுவும் நல்லா இல்லன்னு சொல்லிகிட்டே இருக்கேன்.

இந்த படம் முடிஞ்ச அப்பறமும், கேமரா வழக்கம் போல கீழ வெச்சிட்டு, "அப்பறம் சொல்லுங்கப்பா"னு சகஜமா ஆரம்பிச்சேன்.

அவன் - "என்ன sir அப்பறம், எப்படி இருக்குன்னு சொல்லுங்க".

நான் - "எப்பவும் போலதான், ஒரே மாதிரி montage, interview and ஒரே மாதிரி சாதாரணமா இருக்கு".

அவன் - "இதுக்கு மேல எப்படி sir எடுக்க முடியும்"

நான் - "என்னை கேட்டா எப்படி, நீ தான vis com student. நீதான் வித்தியாசமா யோசிக்கணும். இத கொண்டு போய் காலேஜ்ல குடுத்த, அப்படியே எடுத்து ஓரமா வெச்சிட்டு, போயிட்டுவான்னு அனுப்பிருவாங்க"

ரெண்டு பேரும் ஒருத்துர ஒருத்தர் குழப்பமா பாத்துகிட்டாங்க. அப்பறம் அவன், "ஓகே sir, நாளைக்கு நாங்க ஒண்ணு shoot பண்ணிக்கிட்டு வரோம், அத பாத்து நீங்க கட்டாயம் ஷாக் ஆகப் போறீங்க பாருங்க"னு சொன்னான்

"பாக்கலாம் பாக்கலாம். சரி, நீங்க இப்ப கிளம்புங்க, எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு"னு அவங்கள கிளப்பினேன்.

"சரி sir"னு சொல்லிட்டு அவங்க போன நேரம், எனக்கு ஒரு போன் வந்தது. கொஞ்ச நேரம் பேசுன அப்பறம், சரியா சிக்னல் கிடைக்கல, அதனால, "கொஞ்சம் இருங்க sir"னு போன்ல சொல்லிகிட்டே, கதவை திறந்து, balcony வந்து, பேச ஆரம்பிச்சேன். கீழ வேடிக்கை பாத்துகிட்டே பேசும் போது, அந்த ரெண்டு பசங்களும் ஏதோ discuss பண்ணிக்கிட்டு இருந்தாங்க. கொஞ்ச நேரம் கழிச்சு, என்னோட சிஷ்யன் ஏதோ சைகை செய்ய, அவன் நண்பன் வண்டிய ஸ்டார்ட் பண்ணான். "அப்பறம் பேசறேன் sir"னு போன் லைன கட் பண்ணிட்டு, கவனிச்சேன்.

கேமராவும் கையுமா, பின்னாடி உட்கார்ந்த சிஷ்யன், அப்படியே ரெகார்ட் பண்ண ஆரம்பிச்சான். எனக்கு என்ன shoot பண்ண போறாங்கன்னு புரிஞ்சிடுச்சு. நான் பார்த்த அவங்க பாக்கல. சிரிச்சுகிட்டே மறுபடியும் உள்ள போனேன்.

அடுத்த நாள்.

டக்... டக்... டக்... மறுபடியும் சிஷ்யன். "வாங்கப்பா உள்ள, உங்கள கதவு தட்ட வேணாம்னு எவ்வளவு தடவ சொல்றது". ரெண்டு பேரும் உள்ள வந்தாங்க. ஆனா இப்ப எதுவும் பேசாம, என் கைல கேமரா குடுத்துட்டு உட்கார்ந்தாங்க. "எப்படியும் என்ன shoot பண்ணேன்னு சொல்ல மாட்டீங்க, சரி குடுங்க"னு கேமரா வாங்கி play பண்ணேன். நான் நினைச்ச மாதிரியே, வண்டியில் உட்கார்ந்துகிட்டே, வர டிராபிக் எல்லாத்தையும் shoot பண்ணிருந்தாங்க. சிரிச்சிகிட்டே சொன்னேன், "நான் அப்பவே நினச்சேன், நீங்க இப்படிதான் shoot பண்ணுவீங்கனு. எதுக்கும் fulla பாக்கறேன்".

Footage ஓட ஆரம்பிச்சது. போகும்போது இவங்க பேசுனதும் ரெகார்ட் ஆகி இருந்தது. ஒரு அஞ்சு நிமிஷத்துக்கு அப்பறம் போர் அடிக்க ஆரம்பிச்சது. கரெக்டா, அத சொல்லலாம்னு நினைக்கும் போது, ஒரு அதிர்ச்சி. இவங்க வண்டிய நோக்கி ஒரு லாரி வேகமா வர, இவங்க அத கவனிக்கல போல. லாரி வண்டிய மோத, அதுவும் ரெகார்ட் ஆகியிருந்தது. திடீர் சுவாரஸ்யம் தாங்காம பாத்துகிட்டே இருந்தேன். கேமரா கொஞ்சம் நேரம் blank ஆகி, மறுபடியும் உயிர்வரும்போது, கேமராசுத்தி, இல்ல, இவங்கள சுத்தி ஒரு கூட்டம்.

கூட்டத்துல ஒருத்தருக்கொருத்தர் ஏதோ பேச, ஆனா யாரும் எதுவும் உதவி செய்ய முன் வரல. அவங்கள்ல ஒருத்தன், இந்த கேமரா பாத்து அத எடுக்க கைய வெக்க, casseette முடிஞ்சு static வர ஆரம்பித்தது. எனக்கு ஒண்ணும் புரியல. குழப்பத்தோட, கேமரா கீழ வெச்சிட்டு, "என்னப்பா எடுத்திருக்கீங்க"னு கேட்டேன். ரெண்டு பேரும் சிரிச்சுகிட்டே ஒருத்தர ஒருத்தர் பாத்து சிரிச்சிகிட்டாங்க. அப்பறம், மெதுவா காத்துல மறஞ்சிடாங்க.

நிஜமாவே காத்துல மறஞ்சிடாங்க.

அதிர்ச்சியோட, கீழ இருந்த கேமரா பார்த்தா , அதுவும் அங்க இல்ல.
அடுத்த வினாடி,

டக்... டக்... டக்... கதவு தட்டப்பட்டது....

-------------------------------------------------------------------------------------------------

First person narrative was kind of easy to me. So wrote it that way. but the film was not taken as FPN. Here is the video of the short film. I dont have previous experience both in writing short story and taking a short film. So, please excuse me.... thank you...



16 comments:

Lancelot said...

intha padathaa pathinaa review va naan erkanave ungaluku sonnathunalla...athaaa inga poda venamnu nenaikiren...neenga enna ninaikiringaa thalai?

கா.கி said...

@arun
vazhimozhikiren

Unknown said...

கார்த்திக்,
கதை கரு நல்ல இருக்கு.அறிவியல் புனை கதை மாதிரி.

//நிஜமாவே காத்துல மறஞ்சிடாங்க//
இந்த பெரிய எழுத்து தேவையில்ல.
இது கோனார் நோட்ஸ் மாதிரி இருக்கு.திகில குறைக்குது. ஒருமையில் கதை சொல்லுவதால் விறு விறுப்பு கம்மி.


//பாத்து சிரிச்சிகிட்டாங்க//
மேல் வரும் வரிக்கு பிறகு வரும் வரிகளை எடுத்து விட்டு கிழ் உள்ளதை
போட்டுப்பர்ருங்க்.
”மறுபடியும் சிரிச்சிச்சுகிட்டே..இந்த படத்த சரியா முடிக்க முடியில.அதுக்குள்ள நாங்க செத்துப்போயிடோம்.”
நான் நிமிர்ந்து பார்த்தேன். இருவரையும் காணவில்லை.

மறுபடியும்.....

டக்... டக்... டக்... கதவு தட்டப்பட்டது...

படம்

நல்லா இருக்கு.ஒருவர் “தனுஷ்” மாதிரி இருக்கிறார்.கடைசியில் ஆக்சிடெண்ட் சீனில் வரும் பொது மக்கள் ஏன் எல்லோரும் “மேன்ஷன்”
வாசிகள் போல் இருக்கிறார்கள்?budget?

நல்ல முதல் முயற்சி

வாழ்த்துக்கள்.

கா.கி said...

//இது கோனார் நோட்ஸ் மாதிரி//
hmmm... as its first person narrative, thought it would convey the shock of the narrator...

//other corrections//
will correct it in the later editions ;)

//ஒருவர் “தனுஷ்” மாதிரி இருக்கிறார்//
தனுஷ் தான் இவர மாதிரி இருக்கார்... ;)

//“மேன்ஷன்”
வாசிகள் போல் இருக்கிறார்கள்//
அது எங்க காலேஜ் hostel வாசல்ல, நண்பர்கள் பங்கேற்ப்போட எடுத்தது... ஹி ஹி... பட்ஜெட்டும் முக்கியமான காரணம்..

//நல்ல முதல் முயற்சி//
மிக்க நன்றி

Karthik said...

தமிழ் சினிமாவின் விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு தாங்கள் வரவு புரிந்து, சிலவிருதுகளை வழங்கும் படி கேட்டு கொள்கிறேன்... இதோ உங்களுக்கானஅழைப்பிதழ்..


http://lollum-nakkalum.blogspot.com/2008/12/blog-post_26.html


மறக்காம வாங்க... அழைப்பிதழில் உங்கள் பெயர் போட்டாச்சு... அப்றோம்நிலவரம் கலவரம் ஆயிடும்... சொல்லி புத்தேன்....


PS: Post perusssssssu!! Viral reagigal pathiram!!! Padhikum pothu glows pothu padikavum!!!!

Karthik said...

Chk this site thala

www.tamizhstudio.com

Hope u'll find it useful

கா.கி said...

@karthik
chkd the site months before... forgot the URL... thanks for reminding

Lancelot said...

u have been awarded please check

http://lancelot-oneofakind.blogspot.com/

Meera said...

Brother now only saw this video.
I thought the person in chair to be
old be he was young.
டக்... டக்... டக்... கதவு தட்டப்பட்டது
After that?

கா.கி said...

@meera
unakku story puriyala...

Cable சங்கர் said...

நைஸ்.. கார்த்திக்..

கா.கி said...

@cable
பெரிய heart பண்ணி, வந்து கமெண்டியதிர்க்கு நன்றி :)

Sabarinathan Arthanari said...

நல்லா இருக்குங்க

வாழ்த்துக்கள்.

முடிவிலி said...

ம்ம்ம்... நல்ல முயற்சி ... வசனத்தில் ஏதோ ஒரு செயற்கைத்தனம் இழையோட வில்லை ...? கடைசி காட்சியில் இன்னும் மெனக்கெட்டு இருக்கலாம் இசையிலும் .. உங்கள் முக உணர்ச்சியிலும் .. வாழ்த்துக்கள் .... இன்னொரு நல்ல படைப்பை எதிர்பார்கிறேன் ..

கா.கி said...

@sabari
nandri :)

கா.கி said...

@முடிவிலி
nandri.. அடுத்தமுறை கண்டிப்பாக கவனிக்கிறேன்... :)