Wednesday, July 18, 2012

மீள் பதிவும், நோலனும்

கடைசியாக நான் பதிவெழுதி 3 மாதம் 15 நாட்கள் ஆகிறது. உருப்படியாக எதுவும் எழுதவில்லையென்றாலும், எழுதும் பழக்கம் விட்டுப்போகக் கூடாது என்பதே நான் பதிவெழுத ஆரம்பித்தக் காரணம். "Writer's Block" இதை தமிழ்பெயர்ப்பது எப்படி எனத் தெரியவில்லை. ஆனால், இந்த மூன்றரை மாத இடைவேளைக்கு காரணம் அதுவே. இந்தப் பதிவிலும் உருப்படியாக எழுத ஒன்றுமில்லை. ஆனால், எழுதத் தூண்டியது, கிறிஸ்டோஃபர் நோலன் என்ற அதி அற்புதமான இயக்குனர். 

டார்க் நைட் ரைஸஸ் படத்தின் விளம்பரங்களைப் பார்க்கும் போது, நோலனின் கடைசி படமான இன்செப்ஷனைப் பற்றி நான் எழுதிய பதிவுகளும், அதற்கு கிடைத்த வரவேற்பும் நினைவிற்கு வந்தது. அவ்வளவு உற்சாகத்துடன் பதிவு எழுதிய கார்த்திக் எங்கே என்று தேடிக் கொண்டிருந்தேன், கிடைத்ததால் இப்போது எழுதிக்கொண்டிருக்கிறேன்.

830px-Thefirerises.jpg (595×363)

பல வலைதளங்களில், பதிவுகளில், கிறிஸ்டோஃபர் நோலன் என்கிற 
இயக்குனரைப் பற்றி நீங்கள் படித்திருக்கலாம். கூகுளில் கிறிஸ்டோஃபர் நோலன் என்று தமிழில் தேடினாலே, எக்கச்சக்க தள இணைப்புகள் உங்களுக்கு கிடக்கும். அவரது மெமண்டோவைப் முழுதாகப் பார்க்கும் தைரியம், இன்னும் எனக்கு வரவில்லை. கவனிக்கவும், பொறுமை என்று சொல்லவில்லை, தைரியம்தான் வரவில்லை. “என்னடா நமக்கு புரியாம ஒரு படமா, ஒரு வேளை இந்த படம் நமக்கு புரியாமலே போய்டுமோ” என்ற பயமே. எப்படியும் இன்னும் ஒரு வருடத்தில் பார்த்துவிடும் நம்பிக்கை வரும் என நினைக்கிறேன். இவரது படங்களில், வசனங்களுக்கும், காட்சியமைப்புகளுக்கும், ஆக்‌ஷன் காட்சிகளுக்கும் சரியான விகிதத்தில் முக்கியத்துவம் இருக்கும் என்பதால், வரப்போகும் புதிய பேட்மன் படத்தை சத்தியமாக சப்டைட்டில்ஸ் இல்லாமல் பார்த்தால் புரியாது. தமிழில் பார்க்கலாமென்றால், வெளியாகும் திரையரங்குகளின் தரம், சத்யம் திரையரங்க கழிவறைகளின் தரத்திற்கு கூட ஈடாகாது. எது எப்படியோ, புரியாவிட்டாலும், இரண்டு வாரங்களில் அந்தப் படத்தை சத்தியத்தில் பார்ப்பது என தீர்மானித்தாகிவிட்டது. 

என்னை மீண்டும் பதிவெழுதத் தூண்டிய கிறிஸ்டோஃபர் நோலனிற்கு நன்றி. 
டார்க் நைட் ரைஸஸ் வெளியாகப்போகும் இந்த வேளையில், இன்செப்ஷனைப் பற்றிய என் பழைய பதிவுகளுக்கு ஒரு சின்ன விளம்பரம் :)



2 comments:

ஹாலிவுட்ரசிகன் said...

நோலனின் படங்களில் நீங்க சொன்னது போல வசனங்கள் பெரும் பங்கு வகிக்கும். தமிழ்ல டப்பிங் பண்ணும்போது வேற ஏதாச்சு சொல்லி நாறிடுவாங்க. அதனால முதல்ல Englishல பாருங்க. புரியலைன்னா தமிழ்ல மீண்டும் பாருங்க.

Unknown said...

நண்பர்களே உங்களுக்காக ஒரு தமிழ் இணையதளம் http://www.valaitamil.com/