Sunday, June 19, 2011

அவன் இவன் - ப.வி

”அவனப் பத்தி நான் பாடப்போறேன்,
இவனப் பத்தி நான் பாடப்போறேன்.
அவனும் சரியில்லை, இவனும்தான் சரியில்லை,
 யாரப்பத்தி நான் பாடப்போறேன்”

படம் பாத்துட்டு, பாடலாசிரியரும், இசையமைப்பாளரும் போட்ட பாட்டு தான் இது. இதை விட இரத்தின சுருக்கமா இந்த படத்தைப் பத்தி சொல்லமுடியாது. உயிரக்கொடுத்து நடிச்சிருக்குற விஷாலும், ஜி.எம். குமாரும், வேற ஒரு நல்ல படத்துக்கு இந்த உழைப்பை தந்திருக்கலாம். எனக்கு தெரிஞ்சு, இந்தப் படத்துக்காக மட்டும்தான், பாலா, தியேட்டர்ல நிறைய திட்டு வாங்கிருக்காரு. வழக்கமான ஒரு ”பாலா கிளைமாக்ஸ” யோசிச்சிட்டு, அதை சுத்தி ஒரு படம் பண்ணிருக்காரு. ஒண்ணே முக்கால் மணி நேரம், படத்துல என்ன நடக்குதுன்னே புரியலை. யுவனின் இசையும் பெருசா சொல்லிக்கறா மாதிரி இல்லை.

இன்னும் பாலா தந்த அதிர்ச்சி என்னை விட்டு போகலை. விடுங்க, இதுக்கு மேல டைப் பண்ணா, மரியாதை குறைவா எதாவது சொல்லிடுவேன். விஷால், குமாரைத் தாண்டி படத்துல கவனிக்க வைக்கற ரெண்டு பேர், அந்த குண்டு பையனும், அம்பிகாவும். மத்தபடி, பாலாவை நம்பின விஷால், ஜி.எம்.குமார் + என்னை மாதிரி கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு,  பாலா, பெரிய நம்பிக்கைத் திரோகம் பண்ணிட்டாருனு தோணுது. போங்கய்யா, போய் புள்ளைகுட்டிங்களை படிக்க வைங்க, வந்துட்டாங்க, அவன் இவன்னு. !@#$%^*

4 comments:

Thamizhi said...

oh Karthick, i am so looking fwd to see this movie but after reading ur review, i think i am setting myself up for a big disappointment!

கா.கி said...

@bhar
ya, jus lik i did..

Anonymous said...

//அவன் இவன்னு. !@#$%^*//

கெட்ட வார்த்தைல திட்ட என்ன மிச்சம் இருக்கு. அதைத்தான் அவன் இவனும், ஆரண்ய காண்டமும் இப்ப லீசுக்கு எடுத்து இருக்காங்களே. என்னடா இது கோடம்பாக்கத்துக்கு வந்த சோதனை......

கா.கி said...

@சிவகுமார்.

சும்மா ட்ரெண்டுக்கு ஏத்தா மாதிரி நானும் ட்ரை பண்றேன்.. :)
ஆனா இந்த ரெண்டு படங்கள்ளையுமே, அதுல இருந்த கெட்ட வார்த்தைகள்னால எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை...