Monday, November 30, 2009

மேல் படிப்பு

மு.கு. நகைச்சுவை உணர்வு இல்லாத பொண்ணுங்க, தயவு செஞ்சு கெளம்புங்க, காத்து வரட்டும்...
  
நீங்க நினைக்கற மேல் படிப்பு இல்லைங்க இது. நான் சொல்லப் போறது Male, அதாவது பசங்க படிக்கற படிப்பு பத்தி. 'அதென்ன படிப்புல male படிப்பு female படிப்பு. எல்லாம் ஒண்ணுதான. இதுல என்ன பெரிய ஆராய்ச்சி பதிவு வேண்டி கெடக்கு', இதான உங்க டவுட்டு. கண்டிப்பா வித்தியாசம் இருக்குங்க. எல்.கே.ஜில ஆரம்பிச்சு, இப்போ post graduation வரைக்கும் நான் இந்த வித்தியாசத்தை பாத்துகிட்டு இருக்கேங்க. எஸ்.ஜே சூர்யா சொல்றாப்போல, சில சமயங்கள்ல, பொண்ணுங்க படிக்கறத பார்த்தா, எனக்கு தலையே வெடிச்சிடும் போல இருக்கும். பசங்களுக்கு, Pass - Fail, இப்படி ரெண்டு  மேட்டர் தான் முக்கியம். ஆனா பொண்ணுங்களுக்கு???????????  வாங்க அலசுவோம்.

எப்பவும், படிச்சிகிட்டே இருந்து, எப்பாவாச்சும் சும்மா இருப்பாங்கல்ல, அப்போ, மத்த விஷயங்களை யோசிக்கறவங்க பொண்ணுங்க. ஆனா பசங்க, அப்படியே ரிவர்சு. வேற வேலையே இல்லாமா, பொழுது போகலன்னா, லைட்டா படிப்பாங்க. சத்தியமா நான் அப்படிதாங்க. ஆனா, சில பசங்களும் பொண்ணுங்க மாதிரி படிக்கற கேசு தான். இந்த farmville விளையாடுற பசங்க மாதிரி. ஆனா அவங்க எண்ணிக்கைல ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப கம்மி. அவங்களை நான் பசங்களாவே பாக்கறதில்லை. அவங்கெல்லாம் IITல இருப்பாங்க,  இல்லைனா அண்ணா universityல இன்ஜினியரிங் படிச்சிகிட்டு இருப்பாங்க.

இந்த பசங்க பொண்ணுங்க வித்தியாசம், பரீட்சை சமயங்கள்ல பாத்தீங்கன்னா அப்பட்டமா தெரியும். எனக்கு தெரிஞ்சு, முக்கால் வாசி பசங்க (என்னையும் சேர்த்து), பரீட்சைக்கு முன்னாடி நாள்தான் படிக்க ஆரம்பிக்கறதே. அதுவும் மனப்பாடம் பண்றதெல்லாம் இல்லை. சும்மா, அப்டீ திருப்பி பாக்கறது. அப்படி பார்க்கும்போதுதான், நம்மகிட்ட சில நோட்ஸ் இல்லைன்னே தெரியவரும். சரி, நம்ம தோஸ்து எவனாவது வெச்சிருப்பானான்னு மெசெஜோ, காலோ பண்ணா, அவன் "மச்சான், படிக்க ஆரம்பிச்சுட்டியா?? கேடி நாய்டா நீ. எதுவும் படிக்கலை படிக்கலை சொல்லியே நிறைய மார்க் வாங்கிருவ. ஒ*!@ உன்னை நம்பவே கூடாதுடா". இதுல நோட் பண்ண வேண்டிய விஷயம் என்னன்னா, அந்த நாயும் அங்க புக்க வெச்சிகிட்டு முக்கிட்ருப்பான்.                                          

எதுக்கு phone பண்ணமோ, அதில்லாம, வெட்டியா வேற ஏதாவது பேசிட்டு வெச்சிருவோம். சரி, பரவாயில்லைன்னு, வெக்கத்தை விட்டு பொண்ணுங்க யாருக்காவது phone பண்ணுவோம். அவங்க விடுவாங்க பாருங்க ரீலு. "ஹே, நான் சத்தியமா படிக்கலபா. Group study பண்ணலாம்னு நினைச்சோம், ஆனா முடியலை. காலைல அம்மாகூட வெளியில போயிட்டேன். அப்பறம் வீட்ல ஒரே வேலை (சாஞ்சிகிட்டு TV பாக்கறது ஒரு வேலையா) கொஞ்ச நேரம் முன்னாடிதான் புக்கை கையில எடுத்தேன், கரெக்டா நீ கால் பண்ற". அடுத்த முக்கியமான விஷயம், அந்த பொண்ணு எப்பவோ இதெல்லாம் படிச்சிருக்கும். சும்மா ஒரு தடவை பார்த்தாலே அதுக்கு எல்லாம் ஞாபகத்துல வந்துரும்.

சில பொண்ணுங்க, ஹாரி பாட்டர் hermione மாதிரி, புத்தகத்துல இருக்கறத வார்த்தைக்கு வார்த்தை மனபாடம் செஞ்சு ஒப்பிபாங்க. நான் பல முறை இந்த மாதிரி பொண்ணுங்களை பார்த்து, அடங்கொக்கா மக்கான்னு ஷாக் ஆகிருக்கேன். சில நல்ல பொண்ணுங்க, எக்ஸாம் ஹால்ல நமக்கு சொல்லியும் தரதுண்டு. அவங்கெல்லாம் வாழ்க. சிலதுங்க, அப்படியே எழுதற ஷீட் மேல படுத்துகிட்டு எழுதுங்க. உள்ள இறங்கி தூர் வாருதோன்னு சந்தேகம் கூட நமக்கு வரு. என்ன சிக்னல் குடுத்தாலும் திரும்பாம இருந்து பல்பு குடுத்துருவாங்க. இடி இடிச்சா கூட "யாரோ கடுகு தாளிக்கரான்களோ" reaction தான் கிடைக்கும்.

வெளியில வந்து, ஏன் திரும்பியே பார்க்கலைன்னு கேட்டா, "நீ கூப்டியா???" அப்படின்னு கேப்பாங்க. இதெல்லாம் இருக்கட்டும். அந்த எக்ஸாம் பேப்பர் குடுக்கும்போது வரும் பாருங்க reactions. வாய்ப்பே இல்ல. எவ்வளவு மார்க் போட்டாலும், குடுத்த ஆள் கிட்ட போய், "சார், இதுல மார்க் கம்மி, இதுல total கம்மி, இங்க நான் நல்லாதான எழுதியிருக்கேன் ஏன் இப்படி மார்க் போட்டுருக்கீங்க??" அப்டி இப்டி ஏதாவது நொட்டு சொல்லி, வாத்தியாருக்கே அவர் படிச்ச படிப்பு மேல சந்தேகம் வர அளவுக்கு நச்சரிச்சு, குறைந்தபட்சம் அரை மார்க்காவது கூடுதலா வாங்கிட்டு, வெற்றி களிப்புல ஒரு இளிப்பு வேற இருக்கும் பாருங்க......

பசங்க பாவமா, என்ன மார்க், என்ன கேள்வி, என்ன பதில்னு புரியாம இருப்பானுங்க. முடிஞ்ச வரைக்கும், கரெக்ஷன் பண்ண பேப்பர்ல சந்தேகம் எதுவும் கேக்காம கமுக்கமா இருப்பாங்க. ஏன்னா நம்மாளுக்குதான் கேள்வியே ஒழுங்கா தெரியாதே. எங்க ஏதாவது  ஏடாகூடமா கேட்டு இருக்குற மார்க்கும் போய்டுமோன்னு ஒரு கிலி இருக்கும். குடுத்து முடிச்சிட்டு போன அப்புறம், பொண்ணுங்க மத்தியில, அத பத்தி ஒரு மணி நேரம் விவாதம் வேற நடக்கும். "அந்த சாருக்கு என்னை பிடிக்கலை, அதான் மார்க் கம்மி. அன்னிக்கு நான் அந்த மேடமுக்கு குட் மார்னிங் சொல்லல, அந்த காண்டுல சரியா கரெக்ஷன் பண்ணலை"னு புதுப் புது காரணமா, கும்பலா, கண்டுபுடிச்சிகிட்டிருப்பாங்க.

பொறவு யார் highest மார்க் அப்படின்னு calculation வேற நடக்கும். "நீ என்னைவிட ஜஸ்ட் மூன்றை மார்க் ஜாஸ்தி. பரவாயில்லை, நான் fail ஆயிருவேன்னு நினைச்சேன்"னு மனசாட்சியே இல்லாம பேசுவாங்க. ஒருத்தி 98, இன்னொருத்தி 95 வாங்கிருப்பா. எந்த பொண்ணுங்களையும் அசிங்கப் படுத்த நான் இந்த பதிவை போடலைங்க. எல்லாம் ஒரு பொறாமைலதான். என்னுடைய இஸ்கூல் படிப்புலேர்ந்து, இப்போ PG வரைக்கும் இதே கதை தாங்க. என்ன, இப்போ சில பொண்ணுங்க பீட்டர்ல feel பண்றாங்க. பெரிய வித்தியாசம் ஒண்ணுமில்லை. பொண்ணுங்க இப்படிதான் எப்பவுமேவா, இல்லை எப்பவுமே இப்படிதானான்னு எனக்கு ஒரே குழப்பம்.

வேணும்னா நான் சொன்னதை டெஸ்ட்டு பண்ணி பாக்கலாம். இந்த பதிவை நீங்க படிச்சிட்டு, பொறவு வேற ஒரு பொண்ணை படிக்க சொல்லுங்க. அந்த பொண்ணு படிச்சிட்டு, "அதெல்லாம் ஒண்ணும் இல்லை. நாங்க அப்படி கிடையாது, நீங்க தப்பா புரிஞ்சுண்டேள்" அப்படின்னு சொல்லிச்சுன்னா, அதுவே என் பதிவுக்கு கிடைச்ச வெற்றி. நான் கடைசில "HENCE PROVED" அப்படின்னு சேத்துக்கறேன். :))))
வேலைக்கு சேர்ந்த அப்புறமாவது திருந்துவாங்களா??

21 comments:

Devaki said...

chanceeh ille.. ana nee konja nalaiku thalaimariava irukarathu nalathu... yenna thambi neenga agmark unmaiya eluthi irukinga ...

Karthick Krishna CS said...

@dev
thanks a lot.. this is jus for humor. anyone who is taking this seriously wil be severely punished..

iswarya said...
This comment has been removed by the author.
iswarya said...

Its really really gud... u knw i laughed lik anythin whn i read this :) :) amazing da ... bt Ithu sari illa ....ellarayum manasula vechi eluthirkka pola ...ritu vidu :) anyway super ah irunthuthu :)bt ella girls um apdi illa... some girls r lik that only.... even naanum apdi thaan :)

iswarya said...
This comment has been removed by the author.
Karthick Krishna CS said...

@iswarya
thanks for ur (first) visit and comment...

//ellarayum manasula vechi eluthirkka pola//

ya, all the gals i've met in school, ug and now...

//even naanum apdi thaan//
naan sollala.. hence proved.. ;)

visit often :)

Devaki said...

hence proved...

ச.பிரேம்குமார் said...

ஜீப்பர் பதிவு கார்த்திக்

//வேலைக்கு சேர்ந்த அப்புறமாவது திருந்துவாங்களா??
//

அதாவது ITன்னா வேலைக்கு சேர்ந்ததும் சில பல மாதங்கள் Classroom sessions இருக்கும். அதுலயும் இந்த அக்கப்போர் தொடரும் ;-)

Karthick Krishna CS said...

@பிரேம்குமார்
marupadiyum modhallerndhaa???

kanagu said...

paathu suthaanama irupa... thirumbi college poganum nee :P

Karthick Krishna CS said...

@kanagu
ippadiyellaam thoondi vidap padaadhu

velsurya said...

:D real blog...
mostly ela girlsm ipdi thaan...!!
apdiyae elaa pasangalum appadi thaan...

ethana vaati call panirkein machi padchitiyaa nu... :D

still teachin friends fr their arrears... missin college days kaki..
nice post.. :)

Karthick Krishna CS said...

@vel
thanks a lot for ur visit and comment :)

//missin college days kaki//
i'l miss in anothr 6 months....
and wher did u get that kaki???

do visit often :)

கனவுகள் said...

ஏனுங் மாமா என் மனசுல இருக்குறத
அப்படியே சொல்லி போட்டீங்,
இந்த பொண்ணுங்களே இப்படி தானுங்,
கவல படாதீங்...
கல்யாணம் பண்ணிட்டீங்கனா அவுளுங்க
நம்ம காலையே சுத்தி சுத்தி வருவாங்க....

Karthick Krishna CS said...

@கனவுகள் - வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி...
கல்யாணத்தை பற்றி நான் இன்னும் எதுவும் யோசிக்கலை..

M Vijay said...

"ஆனா பசங்க, அப்படியே ரிவர்சு. வேற வேலையே இல்லாமா, பொழுது போகலன்னா, லைட்டா படிப்பாங்க. சத்தியமா நான் அப்படிதாங்க. ஆனா, சில பசங்களும் பொண்ணுங்க மாதிரி படிக்கற கேசு தான். இந்த farmville விளையாடுற பசங்க மாதிரி. ஆனா அவங்க எண்ணிக்கைல ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப கம்மி. அவங்களை நான் பசங்களாவே பாக்கறதில்லை. அவங்கெல்லாம் IITல இருப்பாங்க, இல்லைனா அண்ணா universityல இன்ஜினியரிங் படிச்சிகிட்டு இருப்பாங்க."


Ippadi oruthar sollirukkumbodhu, avaroda split personality paarunga..Semester'la 83%, Farmville'la 23 levels mudichu vecchurukku! Idhu ulaga nadippuda saami!!! :)

Karthick Krishna CS said...

@vk anna
இந்த மாதிரி குற்றச்சாட்டு வரும்னு எனக்கு தெரியும். போர் அடிக்கும்போது உச்சகட்டமா சில பேர் தண்ணி அடிப்பாங்க இல்ல தம் அடிப்பாங்க (உங்கள சொல்லல), நான் வேற வழியே இல்லாம farmville விளையாடுனேன். செமஸ்டர் மார்க் பத்தி நான் என்ன சொன்னாலும் நீங்க நம்பபோரதில்லை. இந்த போஸ்ட்ல சொல்லிருக்கரா மாதிரி, எங்க கிளாஸ்ல படிச்சா பொண்ணுங்க எல்லாருமே 85% மேல வாங்கிருக்காங்க....

jasmine said...

was very funny... Inda "exam scene" attitude la naanum baadikka patrukken...aanaalum neenga ivlo unmai pesa koodadu...ungalukku nalladillai!!!

Karthick Krishna CS said...

@jasmine
again, hence proved.. thanks for accepting the truth

ippadikku murugan said...

பொண்ணுங்களை பத்தி வர ரெண்டு லட்சத்தி முப்பத்தி ஏழாவது ப்ளாக் இது. உருப்படியா எதாவது யோசி மவனே.

கா.கி said...

@bala anna

எங்க கிளாஸ் பொண்ணுங்களை நேர ஒண்ணும் சொல்லமுடியாம, ப்ளோக்ல சொல்லிருக்கேன்... உருப்படியா எதையும் எதிர்பார்க்காதீங்க :P