வழக்கம் போல அப்படியே சோம்பேறித்தனத்துல இங்க
எதுவும் எழுதாம விட்டுட்டேன். என்னோட பழைய பதிவுகளை கொஞ்சம் பார்க்கலாம்னு
நினைச்சா, கடைசியா எழுதின 10 பதிவுகளுமே விமர்சனங்களாவே இருக்கு. சங்கடமா
போச்சு. இனிமேலாவது ஒழுங்கா அப்டேட் பண்ண முயற்சி பண்ணனும். தட்டிக் கேட்க ஆள்
இல்லாம போச்சுல. அதான்.. :)
-----------------------------------------------------------------------
-----------------------------------------------------------------------
பிபிசி வேலையை விட்டுட்டேன். என் மேல அக்கறை இருக்கற எல்லாரும் என்னை
திட்டியாச்சு. உங்க அக்கறைக்கு நன்றி மக்களே :) ஆனா என்னை புரிஞ்சிகிட்ட யாரும்
எதுவும் சொல்லல. அதுவே சந்தோஷமா இருக்கு. பிபிசில வேலை செஞ்ச இந்த ஒரு வருஷம்
எப்படி போச்சுனே தெரியலை. எக்கச்சக்க நண்பர்கள், புரிஞ்சிகிட்ட விஷயங்கள், புதுப்புது
அனுபவங்கள்னு மிக வேகமான ஒரு வருஷம். நான் எங்கெல்லாம் போக முடியாதுன்னு நினைச்சனோ, யாரையெல்லாம் பார்க்க முடியாதுன்னு நினைச்சனோ, எல்லாமே நடந்துச்சு. (என்னோட facebook ஆல்பம பார்த்தா உங்களுக்கு புரியும் :P) சம்பந்தமே
இல்லாத இடங்களுக்கும் போனேன். இந்த முதல் வேலை அனுபவம் கண்டிப்பா என்னோட எல்லா
எதிர்கால வேலைகள்லையும் எதிரொலிக்கும்னு நம்பறேன். நன்றி டு பிபிசி :) அடுத்து
என்னான்னு கேட்காதீங்க. இன்னும் யோசிச்சிக்கிட்டுதான் இருக்கேன் :)
-----------------------------------------------------------------------
ராக் ஸ்டார் மற்றும் ரா ஒன் படத்தோட பாடல்கள்
கொஞ்சம் ஈர்த்திருக்கு.
முதல்ல, ராக் ஸ்டார்.....
முதல்ல, ராக் ஸ்டார்.....
படத்துக்கு, ரஹ்மான், சூப்பர்லேடிவா
இசை அமைச்சிருக்கர்தா இசை விமர்சகர்கள் நிறைய பேர் சொல்றாங்க. பாடல்கள் நல்லா
இருந்தாலும் நம்ம நேட்டிவிட்டி இருந்தாதான ஓட்டும். அது எனக்கு கஷ்டம். டில்லி 6க்கு
அப்பறம், ஹிந்தில ரஹ்மானோட பெஸ்ட்டுன்னு சில பேர் சொல்றாங்க. நமக்கு
ஒண்ணும் புரியல. என்னதான் இருந்தாலும் ரஹ்மானுக்கு மற்றுமொரு வெற்றிப் படம்.
அடுத்து ரா ஒன் பத்தி சொல்லனும்னா, சம்மக் சல்லோ பாடல் மட்டுமே நிறைய பேரை கவனிக்க வெச்சிருக்கு. அதோட மேக்கிங் வீடியோ பாத்திருப்பீங்க. ஏகான் ஹிந்தி பாடினது ஆச்சர்யம்னா, பாடல்ல தமிழ் வரிகள் இருக்கறது அடுத்த ஆச்சர்யம். ஆனா படத்தோட ட்ரைலர பார்க்கும்போது ஆச்சரியப்பட முடியலை. ஷாருக் ஒவ்வொரு தெரு முனைல நின்னும் படத்துக்கு பிரமோஷன் பண்றாரு. படம் எப்படி இருக்குனு பார்க்கலாம். தலைவர் வேற வராரே.
அடுத்து ரா ஒன் பத்தி சொல்லனும்னா, சம்மக் சல்லோ பாடல் மட்டுமே நிறைய பேரை கவனிக்க வெச்சிருக்கு. அதோட மேக்கிங் வீடியோ பாத்திருப்பீங்க. ஏகான் ஹிந்தி பாடினது ஆச்சர்யம்னா, பாடல்ல தமிழ் வரிகள் இருக்கறது அடுத்த ஆச்சர்யம். ஆனா படத்தோட ட்ரைலர பார்க்கும்போது ஆச்சரியப்பட முடியலை. ஷாருக் ஒவ்வொரு தெரு முனைல நின்னும் படத்துக்கு பிரமோஷன் பண்றாரு. படம் எப்படி இருக்குனு பார்க்கலாம். தலைவர் வேற வராரே.
-----------------------------------------------------------------------
குறுஞ்செய்தி என்கின்ற எஸ்.எம்.எஸ்க்கு
கட்டுப்பாடு விதிச்சிருக்காங்க மாண்புமிகு ட்ராய். அதுக்கு அவங்க சொல்ற காரணம், டெலி
மார்க்கெட்டிங் ஆளுங்களை கட்டுப்படுத்தவாம். அதுக்கு எதுக்கு நம்ம மடில கை
வெக்கணும்னு தெரியலை? நிறைய பேர் இந்தக் கட்டுப்பாடை ஆதரிக்கறாங்க.
தேவையில்லாத எஸ்.எம்.எஸ் வராதுன்னு. இவ்வளவு கோடி மக்களை
கட்டுப்படுத்த முடியரவனுக்கு, நூறு டெலி மார்க்கெட்டிங் கம்பெனிகளை
கட்டுப்படுத்த முடியாதா? இல்லை வேற ஏதாவது காரணங்களா? நான்
காசு குடுக்கறேன். ஒரு நாளைக்கு எவ்வளவு எஸ்.எம்.எஸ் அனுப்பறதுன்னு நான் முடிவு
பண்ணிக்கறேன். இவனுங்க யாரு அதை கட்டுப்படுத்த? இன்னைக்கு
இதுல கட்டுப்படுத்தரவனுங்க, நாளைக்கு "நீ இவ்ளோதான் பேசணும், இதுக்கு
மேல பேசகூடாது"னு கட்டுப்படுத்தினா?? இதுல ஆச்சர்யம் என்னான்னா, இதுக்கு
எதிரா, காதுல விழறா மாதிரி எந்தக் குரலும் வரலை. அவ்வளவு கூடவா
யோசிக்க திராணி இல்லாம ஆகிட்டோம்?
-----------------------------------------------------------------------
ரெண்டு பாட்டுக்காகவே சதுரங்கம் படம்
பார்த்தேன். கிளைமேக்சை தவிர படம் சுவாரசியமாத்தான் இருந்துச்சு. சோனியா
அகர்வாலைப் பத்தி நிறைய கமெண்ட்ஸ் சொல்லிட்டே படம் பார்த்தோம் நானும் என்
நண்பனும். நல்ல வேளை சத்தமா சொல்லலை. பின்னாடி ரோல சோனியாவே உட்கார்ந்திருந்தாங்க.
படம் முடிஞ்சா பின்னாடி, வெளிய கரு பழனியப்பன் நின்னுகிட்டு இருந்தாரு.
போய் என்ன பேசறதுன்னு தெரியலை. அப்படியே வந்துட்டேன்.
-----------------------------------------------------------------------
முரண் படமும் நல்லா இருந்துச்சு. ஆனா கொஞ்சம்
யோசிச்சா படத்தோட எல்லா டிவிஸ்டயும் பத்தாம் கிளாஸ் பையனே / பொண்ணே (நான்
ஆணாதிக்கவாதி இல்லீங்கோ :P )
கண்டுபிடிக்கறா மாதிரி இருந்துச்சு. பிரசன்னா
ரொம்ப நல்லா நடிச்சிருக்காரு. சேரனுக்கு, எதையோ முழுங்கிட்டு வயித்துல
சங்கடம் பண்றா மாதிரியான அதே லுக்கை, படம் முழுக்க மெய்ன்டெய்ன் பண்ணாரு. அவருக்கு ஏத்த ரோல். ஆனா, படம்
நல்லா ஓடலைன்னு கேள்விப்பட்டேன். pity. பாட்டு
எல்லாம் மொக்கை.
6 comments:
அடுத்த பதிவும் விமர்சனம்தான் வரும்னு நினைச்சேன்:-)
எஸ்எம்எஸ் கட்டுப்பாட்டை விதிச்சுட்டு தீபாவளி அன்னைக்கு எவ்வளவு வேணா அனுப்பலாம் ஆனா காசு ஜாஸ்தினு சொன்னதா ஒரு நண்பர் சொன்னாரு. என்னதான் செய்யறாங்கன்னே தெரியலை!
@எஸ்.கே
அன்னைக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பினா ட்ராய்க்கு ஏதோ கமிஷன் தராங்க போல.. என்ன செய்யறாங்கன்னும் தெரியலை, என்ன செய்யனும்னும் தெரியலை...
//தட்டிக் கேட்க ஆள் இல்லாம போச்சுல. அதான்//
பாஸ் இனிமே நாங்க கேக்குறோம். ஒழுங்கா அடிக்கடி எழுதுங்க. :)
@prasanna
கண்டிப்பா :)
இனிமே மொக்கை எஸ்.எம்.எஸ் அனுப்புற பசங்க / பொண்ணுங்களோட (நானும் ஆணாதிக்கவாதி இல்லைங்கோ) தொல்லை குறையும்...
@phil
நீங்க இதை சப்போர்ட் பண்றீங்களா??
Post a Comment