இந்த தலைப்ப பார்த்து, நான் ஏதோ ஒரு ஜோக் சொல்லப்போறதா பலபேர் நினைச்சிருக்கலாம். ஆனா இது நிஜாமவே ஒரு நல்ல கதை. சர்தார்ஜிகள அவமானப்படுத்தி நிறைய ஜோக் வந்திருக்கு. நாமும் படிச்சிருப்போம். ஆனா நிஜாமவே, அவங்களோட இன்னொரு பக்கம் பல பேருக்கு தெரியாது. இந்த கதை, அவங்களோட உழைப்புக்கும், உலகத்துல எங்க போய் இருந்தாலும் அவங்க எப்படி வசதியா இருக்காங்க - அப்படீங்கரதுக்கும் ஒரு எடுத்துக்காட்டு. எனக்கு வந்த forward e-mail, உங்க எல்லாருக்கும் சொல்லனும்னு தோணிச்சு. கதையல்ல நிஜம்...
-------------------------------------------------------------------------------------------------
e-mail ஆரம்பம்...
என் நண்பன் சொன்ன கதை. "போன விடுமுறை நாட்கள்ல, நண்பர்கள் நாங்க டெல்லி போனோம். ஊர் சுத்தி பார்க்க ஒரு டாக்ஸி வாடகைக்கு எடுத்தோம். அந்த டிரைவர் ஒரு (கொஞ்சம்) வயசான சர்தார்ஜி. ஏறி உட்கார்ந்த நாங்க, அவர வெறுப்பேத்த சர்தார்ஜி ஜோக்ஸ் நிறைய சொல்லிகிட்டும் சிரிச்சுகிட்டும் வந்தோம் . ஆனா நினச்சது போல அந்த டிரைவர் ஒண்ணும் பேசல. அமைதியா வண்டி ஓட்டிகிட்டு வந்தாரு.
கடைசில, எல்லா முடிஞ்சு இறங்க வேண்டிய இடம் வந்த அப்பறம், அந்த பயணத்துக்கான காச கொடுத்தோம். மீதி சில்லறைய குடுத்த அந்த சர்தார்ஜி டிரைவர், தலைக்கு ஒரு ரூபாய் வீதம் எல்லா நண்பர்களுக்கும் கொடுத்துட்டு சொன்னார், "பசங்களா, காலைலேர்ந்து நீங்க பேசுன எல்லாத்தையும் நான் கேட்டேன். அதுல சிலது ரொம்பவே மோசமாகவும் இருந்துச்சு. ஆனா அப்பாவும் நான் எதுவும் பேசல ஏன்னா நீங்க எல்லாரும் சின்னப் பசங்க, உலகம் தெரியாதவங்க. நான் உங்ககிட்ட கேட்கறதெல்லாம் ஒண்ணே ஒண்ணுதான். உங்ககிட்ட இப்ப நான் குடுத்த ஒரு ரூபாய, இந்த ஊர்லயோ இல்ல ஏதாவது ஒரு ஊர்லயோ, உங்க கண்ல தென்படுற முதல் சர்தார்ஜி பிச்சைகாரனுக்கு போடுங்க" அப்படீன்னாரு.
என் நண்பன் தொடர்ந்தான். "அந்த ஒரு ரூபாய் இன்னும் என்கிட்டதான் இருக்கு. நான் இன்னும் ஒரு பிச்சை எடுக்குற சர்தார்ஜிய கூட பார்க்கல"னு சொல்லி முடிச்சான்-------------
சர்தார்ஜிஸ் எந்த வேலையும் செய்ய தயங்கரதில்லை. எந்த வேலைய செஞ்சாலும் முழு ஈடுபாடோட செய்வாங்க. கஷ்டபடுற சர்தார்ஜிஸ், ஹைவேஸ்ல ஒரு dhaba, இல்ல ஒரு ஜூஸ் கடை, இல்ல ஒரு டிரைவர் வேலை இப்படி ஏதாவது செஞ்சு பொழச்சிப்பாங்களே தவிர, பிச்சை எடுக்கமாட்டாங்க.
நிஜமாவே சிந்தனைய தூண்டுற விஷயம்தான்...
e-mail முற்றும்....
-------------------------------------------------------------------------------------------------
எப்படி நாமமும் கோவிந்தாவும் ஏமாற்றுவதற்கான அடையாளங்களா தப்பா மாற்றப்பட்டதோ, அதே மாதிரி தான் சர்தார்ஜினு சொன்னாலே முட்டாளாதான் இருப்பாங்கனு நினைக்கறதும். இனிமேலாவது இந்த விஷயங்கள மாற்ற முயற்சிப்போம். சர்தார்ஜிகள ஏளனம் செய்யாம இருப்போம். இந்தத் தருணத்துல, அவங்கள புத்திசாலிய சித்தரிச்ச ஒரு கார்டூன நான்
ப்ளோகியிருந்தேன், அதையும் போய் பாருங்க...