Showing posts with label வாழ்க்கைப்பாடம். Show all posts
Showing posts with label வாழ்க்கைப்பாடம். Show all posts

Thursday, November 12, 2015

சகிப்பின்மை - விமர்சனங்கள் - ரசனை



கமல்ஹாசனின் தூங்காவனம் படத்துக்கு கிடைத்து வரும் கலவையான விமர்சனங்கள் குறித்து அவரே கவலைப்படுவாரா என்பது சந்தேகம். ஆனால் உலக நாயகனின் ரசிகக் கண்மணிகள் என்று சொல்லிக் கொள்பவர்கள் போடும் ஆட்டம் தாங்க முடியவில்லை. 

வழக்கம் போல, படம் பிடிக்காதவர்களை தேடிச் சென்று உனக்கு ரசனையில்லை, ஹாலிவுட் தர படத்தை குறை சொல்லக் கூடாது, எதிர்காலத்தில் இந்தப் படம் பாராட்டப்படும்  என்று சாஃப்டாக சொல்வதிலிருந்து, சாஃப்ட் போர்ன் ரேஞ்சுக்கு கெட்ட வார்த்தைகள் போட்டு திட்டுவது வரை இணையத்தில் போராட்டம் செய்து வருகிறார்கள்.

இதில் வேதாளம் படத்தின் முதல் நாள் வசூல் சாதனை படைத்துள்ளது என்ற செய்தி கண்டிப்பாக அவர்களை இன்னும் நோகடித்திருக்கும்.

தமிழ் சினிமாவுக்கு வேதாளங்கள் தேவையா, தூங்காவனங்கள் தேவையா என்றெல்லாம் பேச ஆரம்பித்தால், முதலில் தமிழ்நாட்டுக்கு சினிமாவே தேவையா என்பதிலிருந்தே விவாதத்தை ஆரம்பிக்க வேண்டும்.

சினிமாவால் எந்த சமுதாயமும் இதுவரை திருந்தியதாகத் தெரியவில்லை. ஆனால் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைத்து தரப்பினரும் சினிமாவைப் பார்த்து தவறான முன்னுதாரணங்களால் மறைமுகமாகவோ, நேரடியாகவோ பாதிக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

திரையரங்கில் சென்று படம் பார்க்கும் போது அந்தப் படம் என் கலை ரசனையை மேம்படுத்த வேண்டாம், உலகத் தரத்துக்கு என் பார்வையை உயர்த்த வேண்டாம். அதற்கு நான் புத்தகங்களையும், சினிமா அல்லாத மற்ற ஊடகங்களையும் நாடித் தெரிந்து, தெளிந்து கொள்கிறேன்.

இன்றைய நிலையில் கொடுத்த 120+35+30 ரூபாய்க்கு எனக்கு பொழுதுபோக்கு மட்டுமே போதும். படம் போரடிக்காமல் இருந்தால் நன்று, அது சற்று தரமான பொழுதுபோக்காக இருக்கும் பட்சத்தில் இன்னும் சிறப்பு. அவ்வளவே.

உலகத் தரப் படத்தை ரசிக்கத் தெரியவில்லை, புதிய முயற்சிகளை பாராட்டவில்லை என்று, குறைந்த பட்சம் ஓ!@#$ என்ற கெட்ட வார்த்தையோடு ஆரம்பித்து மற்றவர்களை திட்டும், மேம்பட்ட படைப்புகளை மட்டுமே ரசிப்பவர்கள், முதலில் மற்றவர்களது ரசனையை குறை கூறுவது அநாகரிகம், அசிங்கம் என்று உணர்வார்களாக.

மற்றவர்களது கருத்தை மதிக்கத் தெரியாதவர்கள், ஏற்றுக் கொள்ளத் தெரியாதவர்கள் எந்த கருத்தை சொல்லவும் தகுதியற்றவர்களே. இதுவும் ஒரு வகையில் சகிப்பின்மையே.

பி.கு. மன்னிக்கவும், திருப்பிக் கொடுக்க கையில் விருதுகள் இல்லை.

#சகிப்பின்மை
#சகிப்புத்தன்மை
#intolerance 

Sunday, March 29, 2015

மற்றும் பல - 29/03/2015

உத்தமவில்லன் படத்தின் நடனக் காட்சி ஒன்றை பார்க்க நேர்ந்தது.. கமலின் கொள்கைகளில் என்றைக்குமே ஒத்துப்போகாத ஆளாக இருந்தாலும் கமல் நடிப்பில் பெரிய குறை என எதையும் கண்டதில்லை. ஆனால் இந்த நடனக் காட்சி, சத்தியமாக அவுட் டேடட்... ஒரு கிரேஸ் இல்லாமல், நடனம் தெரியாத ஒரு ஆள் ஆடுவதைப் போல், கடைசியில், கடந்த 25 வருடங்களாக ஆடும் இரண்டு கால்களை தூக்கி குதிக்கும் அந்த ஒரு ஸ்டெப் வேறு... ஆண்டவா....
ஒரே ஆறுதல், முதிர்ந்த வயதில் இளம் ஹீரோவைப் போல காண்பித்துக் கொள்ள முயல்வதைப் போலவே, பூஜா குமார் என்ற முதிர் கன்னி ஒருவரையும் சமமாக கூடவே ஆடவைக்கிறார் கமல்..
அங்கு கலை சமநிலையை எட்டிவிட்டது 

-----------------------------------------------------------------------


நேற்று ஏதொ தந்தி தொலைக்காட்சியில் பேட்டி வந்ததாம்... பார்க்க முடியாமல் போனது. காலையிலிருந்து ஃபேஸ்புக் நியூஸ் ஃபீடில் முக்கால்வாசி பதிவுகள் அதைப் பற்றியே... அந்தப் பக்கத்து கொள்கைகள் என்றைக்குமே நடுநிலையை எட்டியதில்லை.. எவ்வளவோ கோவில்களுக்கு எதிரில் பார்த்த பெரியார் சிலைகளைப் போல, எந்த மசூதிக்கு எதிரிலும் இதுவரை பார்த்ததில்லை. அப்படியே இருந்தாலும் “கடவுள் இல்லை, இல்லவே இல்லை” போன்ற அரும்பெரும் வார்த்தைகளெல்லாம் அந்த சிலையின் கீழ் பொறிக்கப்பட்டிருக்கமா எனத் தெரியவில்லை.. இந்து மத எதிர்ப்பு, முக்கியமாக பிராமண / பார்ப்பன எதிர்ப்பு மட்டுமே அவர்களின் உயரிய கொள்கையாக, காலங்காலமாக இருந்து வருகிறது. 

இதில் பாண்டே ஏதோ கேள்வி கேட்டு மடக்கிவிட்டாராம், எதிரிலிருந்தவர் முழித்து மாட்டிக்கொண்டாராம்.. இதனால் நடக்கப்போவது என்ன? தந்தி ஒரு பார்ப்பன ஆதரவு ஊடகம், பாண்டே ஒரு பார்ப்பன வெறியன், இவர்களுகெல்லாம் கேள்வி கேட்கத் தெரியாது, மீசையில் எதுவும் ஒட்டவில்லை என்றே அந்தப் பக்கத்திலிருந்து எதிர்வினைகள் வரும். (ஏற்கனவே பல மண் ஒட்டவில்லை பதிவுகள் வந்துகொண்டிருக்கின்றன)
யார் என்ன நிரூபித்தாலும் ஆரியன் / திராவிடன் / பார்ப்பனன் / ஜாதி வெறி என அரைத்த மாவையே அரைத்து வெறுப்பை மட்டுமேதான் அவர்களால் பரப்ப முடியும். இதில் பகுத்தறிவதுதான் அவர்கள் நோக்கமாம்.. வெங்காயம்

யூடியூபில் இருக்கும் ஒரு கமெண்டில் வேறு, இஸ்லாமியர் ஒருவர் வந்து, இந்து மதத்தில் ஜாதி இருக்கிறது, பலருக்கு கோயிலில் நுழைய அனுமதியில்லை, மசூதியிலெல்லாம் அப்படியில்லை என்று தன் பங்கிற்கு சம்மந்தமே இல்லாமல் ஆஜராகி சர்வமத வழிபாட்டை நடத்தியுள்ளார். 
இதில் இருக்கும் நகை முரண் நான் விளக்கித் தெரியவேண்டியதில்லை. ஒரே ஆறுதல், இந்த முறை அவர்கள் வாங்கிய மொக்கையும் பலரால் பகிரப்பட்டு வருகிறது. உங்களயெல்லாம் உம்மாச்சிதான் காப்பாத்தனும்.. 

-----------------------------------------------------------------------

வலியவன் என்றொரு காவியத்தைக் காண நேர்ந்தது. எங்கேயும் எப்போதும் இயக்குநர் சரவணனை, படத்தில் எங்கேயும், எப்போதும் காண முடியவில்லை. கால்ஷீட் கிடைத்து, கதையே இல்லாமல், 15 கோடி பட்ஜெட்டில் அவசர கதியில் படம் தொடங்கப்பட்டதாகக் கேள்விப்பட்டேன். ஷூட்டிங் ஆரம்பிக்க பூசணிக்காய் உடைத்ததிலிருந்து யோசித்திருந்தால் கூட ஒரு மாதத்தில் கதை என்று ஏதோ ஒன்று கிடைத்திருக்கும். இவ்வளவு மொன்னையான முதல் பாதியை அண்மையில் எந்தப் படத்திலும் பார்க்கவில்லை. திரைப்படங்கள் பார்ப்பதில் உலக மகா பொறுமைசாலியான நானே சீட்டில் நெளிய ஆரம்பித்துவிட்டேன். அண்ணாசாலை சப்வேயில் அத்தனை கூட்டத்தை, அதுவும் ரிச் கேர்ள்ஸ் கூட்டத்தையும் என் வாழ்க்கையில் என்றைக்குமே பார்த்ததில்லை. படத்தில் ஒரே ஆறுதலான ஆண்ட்ரியாவுக்கு ஹீரோவை நினைத்து ஏங்கும் ஒரு (ஹீரோ ஜெய் என்பது முக்கியச் செய்தி) சோலோ பாடல் வேறு. கலி மேலும் முத்திப்போச்சு.. 

-----------------------------------------------------------------------

உலகக் கோப்பை ஒருவழியாக முடிந்து, ஆஸ்திரேலியா வெற்றியும் பெற்றாகிவிட்டது. இன்னமும் தோனி, கண்ணீர், பிறந்த குழந்தை, கோலி, அனுஷ்கா சர்மா, நக்மா, கங்குலி, யுவராஜ் சிங் என தேசப்பற்று மிக்க இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் புலம்பல்கள் தாங்கவில்லை. இதில் பலர் ஃபேஸ்புக் போராளிகள் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. இது ஒருபக்கம் இருக்க, ஃபைனலில் ஆஸ்திரெலியாவை ஆதரிக்க ஒரு கூட்டமும், இந்தியாவை வீழ்த்திய ஆஸி.யை எப்படி ஆதரிக்கலாம் என ஒரு கூட்டமும் ஒரே நேரத்தில் கிளம்பியது. நம் நாட்டில் இன்னமும் விளையாட்டை விளையாட்டாகவும், சினிமாவை சினிமாவாகவும் பார்க்கும் பக்குவம் பெரும்பான்மை பொது ஜனத்துக்கு வரவில்லை. வர எவ்வளவு காலம் ஆகுமோ தெரியவில்லை. இதில் படிப்பறிவுள்ள, ஃபேஸ்புக் பயன்படுத்தத் தெரிந்த கும்பல் அதிகம் என்பது கவலையளிக்ககூடிய விஷயம். 

It is a thousand times better to have common sense without education than to have education without common sense என ராபெர்ட் கிரீன் இங்கர்சால் கூறியதைப் போல..........

Sunday, August 17, 2014

'எடை'யப்பா


ரயில் நிலையங்களில் இருக்கும் எடை பார்க்கும் இயந்தரங்களின் மேல், சிறு வயது முதலே எல்லா சிறுவர்களையும் போல ஒரு ஈர்ப்பு. இன்று வரை அதன் தொழில்நுட்பம் புரியாமல் இருப்பதால், இன்று வரை அதன் மீதான சுவாரசியமும் குறையவில்லை. பல முறை எடை பார்த்திருக்கிறேன். காலுக்கு கீழே வைத்துப் பார்க்கும் சிறிய அளவிலான எடை பார்க்கும் இயந்திரமாக இருந்தாலும் விட்டதில்லை. ஏறி நின்று (எடை) பார்த்து விட்டுதான் மறுவேலை. 

என்றுமே எடையைக் கூட்டவோ, குறைக்கவோ பெரிய அளவில் நான் முயற்சி செய்ததில்லை. சிறு வயது முதலே ஒல்லியான தோற்றம் என்பதால், அவ்வபோது பாதாம் ட்ரிங், பால், தேன், pedia sure, complan என பல கட்டங்களைத் தாண்டி, நிச்சயமாக எதுவும் தேறாது என முடிவுசெய்து முயற்சிகளை கைவிட்டேன். ஆனாலும் அவ்வபோது எடை பார்த்து, அந்த நொடிக்கு மட்டும் வருத்தமடைந்த சந்தர்ப்பங்கள் வந்தன. முதுகலையில் சேரும்போதும் 49 கிலோ மட்டுமே இருந்தேன். முடியும் போது 52. ஆனால் அடுத்த ஒரு வருடத்தில் என்ன ஆனதோ தெரியவில்லை, 10 கிலோ வரை ஏறினேன். "ஒரு வழியா டீசண்டான வெயிட் வந்துட்டோம்" என மனதில் தோன்றியதால், முன்பு போல எடை பார்ப்பதை நிறுத்தி விட்டேன். 

பெசண்ட் நகரில் முருகன் இட்லி கடைக்கு நண்பர்களுடன் சென்றிருந்தேன். எடை பார்த்து ஒரு சில மாதங்கள் ஆகியிருந்ததால், அங்கிருக்கும் எடை பார்க்கும் நவீன இயந்திரத்தைப் பார்த்தவுடன், காலும் கையும் குறுகுறுக, ஆசை பீறிட, சில்லறை கடன் வாங்கிக் கொண்டு, இயந்திரத்தில் நின்றேன். 76.3 என வர, என் இதயம் ஒரு முறை நின்றது. அதற்கு முக்கியக் காரணம், சில மாதங்கள் முன்பு நான் இதை விட 10 கிலோ குறைவாக இருந்தேன். 

ஒரு காலத்தில் நான் 50 கிலோ வருவதற்கே அரும்பாடு பட்டுள்ளேன். வேலைக்கு போக ஆரம்பித்த பின், தானாக, இயற்கையாக எடை கூடியதால், பெரிதாக கவலைப் பட்டதில்லை. ஆனால், ஒரேடியாக இந்த 10 கிலோ ஏற்றத்தை மனம் ஏற்க மறுத்தது. மீண்டும் சில்லைற மாற்றி, மீண்டும் முயற்சித்தேன், இம்முறை 77. 

நின்று போன இதயம் வெடித்தது. கண்கள் கண்ட காட்சியை, மூளை ஏற்க மறுத்தது. நண்பர்களிடம் புலம்பிவிட்டு, வீட்டிற்கு வந்தேன். பேச்சு வாக்கில் அப்பாவிடம் சொல்ல, அவரும் அதிர்ச்சி ஆனார். தலைக்கனத்தினால் உடல் எடை உயர்ந்ததாக சரித்திரத்தில் இல்லை. அதனால் அப்பாவுக்கும் குழப்பம். "எக்சர்சைஸ் பண்ணு. இவ்ளோ இருக்க கூடாது. வீட்ல எதாவது வேலை செஞ்சாதான" என்று அவர் பங்கிற்கு ஏற்றிவிட, மேலும் கடுப்பானேன். வழக்கம் போல அம்மா மட்டுமே, இந்த வயதிற்கு இது சரியான எடை தான். கவலைப்பட வேண்டாம் என ஆறுதல் சொன்னார். ஆனால் மனம் ஆறவில்லை. எப்படி 10 கிலோ, எப்படி 10 கிலோ என அதீதமான யோசனை.

சில நாட்களுக்கு முன காதி கிராப்ட் கடையில் இருக்கும் இயந்திரத்தில் எடை பார்த்தேன். பழைய எடையான 67-ஐ காண்பித்தது. அபோதுதான் மனதின் பாரமும் இறங்கியது. மு.இ.கடையில் இருக்கும் இயந்திரம் கோளாறு என முடிவு செய்தேன். இப்போது ஒரு வகையில் நிம்மதியாக இருக்கிறது. நீங்கள் யாரும் மு.இ. கடை இயந்திரத்தை நம்ப வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். வாழ்க அரசாங்க இயந்திரம் !!

Wednesday, May 14, 2014

நான் எவ்வளவு பெரிய முட்டாள்???

நிறைய யோசிப்பவர்கள் நிறைய கோட்டை விடுவார்களோ என்ற சந்தேகம் எனக்கு பலமுறை வந்ததுண்டு. ஊரே, "ஆஹா, என்ன அறிவாளிப்பா நீ.. உன்ன மாதிரி ஒரு புள்ள கெடைக்குமா" என்று போற்றப்படும் ஆட்கள் எல்லாம் கண்டிப்பாக சில்லித்தனமான முறையில் தங்களது முட்டாள்தனத்தை காட்டுவார்கள் என்றே நினைக்கிறேன். இதற்கு உதாரணமாக, ஒரு உண்மைச் சம்பவமும், ஒரு கதையும் கைவசம் உள்ளது. முதலில் கதை

பிரபலமான விஞ்ஞானி ஒருவர் தனது ஆராய்ச்சிக் கூடத்தில் அடிக்கடி இரண்டு பூனைகள் வந்து செல்வதைக் கண்டார். பெரிய அறிவு ஜீவியாக இருந்தாலும் சில தொல்லைகளை பொருத்துக் கொள்ள முடியாதோ என்னவோ. பெரியது ஒன்று, சிறியது ஒன்று என அந்தப் பூனைகள் போடும் அட்டாகசங்கள் தாள முடியவில்லை. முக்கியமாக அவை கூடத்திற்குள் வர முயற்சிக்கும்போது ஏற்படுத்தும் சேதாரங்களே அதிகம். அவற்றை விரட்ட முடியவில்லை என்பதால், உள்ளே வருவதில் தானே பிரச்சனை, அதற்கு ஒரு வழி செய்யலாம் என முடிவு செய்து, தனது கூடத்தின் கதவில் ஓட்டை போட முடிவு செய்தார்.

பெரிய பூனைக்கு பெரிய ஓட்டையும், சிறிய பூனைக்கு சிறிய ஓட்டையும் !!!!!

படித்ததும் புரிந்தவர்கள், சிறிது யோசித்து "அட" என நினைத்து புரிந்தவர்கள், இன்னமும் புரியாதவர்கள் எல்லாரும் அடுத்து சம்பவத்தைப் படிக்கலாம்.

ஒவ்வொரும் மாதமும் என் சம்பளத்தில் ஒரு பகுதியை வீட்டிற்கு தருவது வழக்கம். அந்த மாதம் சம்பளம் வந்த பிறகும் ஏதோ காரணங்களால் ஏடிஎம் சென்று எடுத்து வர முடியவில்லை. என் அண்ணன் மகளுக்கு நெட் பாங்கிங் முறையில் தான் ஃபீஸ் கட்ட வேண்டும் என்பதால் எனது அக்கவுண்டிலிருந்து கட்டிவிட்டேன். பதிலாக என் அண்ணன், காசை என் கையில் கொடுத்து விட்டான். இந்தப் பணமும், வீட்டிற்கு தரும் பங்கும் ஏறக்குறைய ஒரே அளவுதான். சரி, கத்தையாகப் பணம் வீட்டில் இருந்தால் செலவாகிவிடும் என்பதால் அதை எனது அக்கவுண்டில் டெபாஸிட் செய்துவிட்டு, வீட்டிற்கு தேவையான காசை எடுக்கலாம் என முடிவு செய்தேன். பேங்க் புறப்படும் வரை யாரும் எனது முட்டாள்தனத்தை சுட்டிக் காட்டவில்லை. 

பேங்கிற்கு சென்று, வரிசையில் நின்று, அக்கவுண்டில் பணத்தை செலுத்திவிட்டு, கீழே வந்து ஏடிஎம் மில் வீட்டிற்காக காசு எடுக்கலாம் என நினைக்கும்போது தான் உறைத்தது. நான் எவ்வளவு பெரிய முட்டாள் என்று !!!

இன்னமும் உறைக்காதவர்கள் எனக்குப் போட்டியாக வரலாம், புரிந்தவர்கள் புரியாதவர்களுக்கு புரிய வைக்கலாம்..  எனக்கும் அந்த விஞ்ஞானிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. அவ்வளவே.. 

Saturday, July 27, 2013

EA - சில அலட்சியங்கள்....


ஃபேஸ்புக்கில், நண்பர் கேபிளாரும், சுரேகா அவர்களும் ஆரம்பித்த குழுமம், கேட்டால் கிடைக்கும். வாடிக்கையாளர் உரிமை பற்றிய விழிப்புணர்வை, வெகு சிறப்பாக செய்து வருகிறார்கள். இன்று, அந்த குழுமத்தில் இருக்கும் பலர், அவர்கள் கேட்டுப் பெற்ற அனுபவங்களையும், சந்தேகங்களையும் பகிர்ந்து கொள்கின்றனர். சில பதிவுகளைப் பார்த்து, நானும் பல புதிய தகவல்களை மண்டையில் ஏற்றியிருக்கிறேன். இன்று, எனக்கு நேர்ந்த அனுபவத்தினால், சில சந்தேகங்கள் ஏற்பட்டது. அவற்றை அங்கே பதிவிட்டு, இங்கே காபி பேஸ்டுகிறேன். இதைப் படிக்கும் அன்பர்கள், இப்பதிவை முடிந்த வரை, மற்றவரிடத்தில் பகிருங்கள். நன்றி.  
//இங்கு பலர், எக்ஸ்பிரஸ் அவென்யூவில், அவர்கள் அனுபவித்த கசப்பான அனுபவங்களைப் பற்றியும், அங்கு கேட்டு கிடைத்த சம்பவங்களைப் பற்றியும் பகிர்ந்துள்ளனர். இதோ, இன்று என் முறை.

புதிதாக ஆடை வாங்க, பல நாட்களாக திட்டமிட்டு, முடியாமல், வேறு வழியில்லாமல், நேரமின்மையால், பக்கத்தில் இருக்கும் EAவிற்கு செல்லலாம் என நானும் நண்பரும் முடிவெடுத்தோம். நண்பருக்கு, பசித்ததால், முதலில், அங்கு பேஸ்மன்ட் 1ல் இருக்கும் பிட் ஸ்டாப் எனும் கடைக்குச் சென்றோம்.


1. நண்பர் சாப்பிட்டார். நான் தண்ணீர் கேட்கப் போக, வழக்கம் போல, தண்ணீர் கொடுப்பதில்லை என்றும், பாட்டில் தான் வாங்க வேண்டும் என்றும், கிளிப்பிள்ளை போலக் கூறினார் கல்லாவில் இருந்த அப்பாவி இளைஞர். “வர கஸ்டமருக்கு ஃப்ரீயா தண்ணி தர வேண்டியது உங்க கடமை, உங்க மேனஜருக்கு சொல்லுங்க” என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றோம். கண்டிப்பாக வேறொரு சந்தர்பத்தில், கேட்டு வாங்க வேண்டுமென நினைத்துக் கொண்டேன் (என் பிரச்சனை, நேரமின்மை). அடுத்து, இரண்டாவது தளத்தில் இருக்கும் மேக்ஸ் என்ற கடைக்குச் சென்றோம்.

2. 2000 ரூபாய்க்கு ஆடைகள் வாங்கிவிட்டு, வெளியே வரும்போது, அங்கிருந்த ஃப்ளெக்ஸில், 1400 ரூபாய்க்கு மேல் வாங்குவோர்க்கு 200 மதிப்புள்ள வவுச்சர் தரப்படும் என்ற விளம்பரம் இருந்தது. மீண்டும் நான் உள்ளே சென்று, கவுண்டரில் இருந்தவரிடம் “வவுச்சர் இருக்குன்னு போட்டிருக்கீங்க, எதுவும் தரலியே”

“அது maxx ப்ராடக்ட்ல மட்டும்தான் சார்”

“ஆமாம், பாருங்க, நான் வாங்கினது எல்லாம் உங்க பிராண்ட் தான்” என எடுத்த ஆடைகளை எடுத்து காமிக்க. எனக்கு பில் போட்ட நபரைக் கூப்பிட்டு, “சரியா பார்க்க மாட்டியா, எடுத்து குடு” என சொல்ல, அவர் வவுச்சர் எடுக்க சென்றார்.
நான் விடாமல் அவரிடம் “ஏன் சார், கஸ்டமருக்கு சொல்ல வேண்டியது உங்க கடமைதான, அவங்க வந்து கேட்கற அளவுக்கு வெச்சீப்பீங்களா”

”நாங்க செக் பண்றோம் சார், இந்த வாட்டி மிஸ் ஆயிடுச்சு, சாரி” என சொல்லிவிட்டு, தன் வேலையைத் தொடர்ந்தார். கேட்டு கிடைத்த வவுச்சருடன் திரும்பினோம்..
 
 3. அடுத்து, பார்க்கிங்க் கட்டணம் செலுத்தும் கவுன்டரில் இருந்த நபர்

“70rs சார்” என்றார்.

நான் “எவ்வளவு நேரம் ஆகிருக்கு” என கேட்க

“3rd hourல வெளிய வந்துருக்கீங்க” என பதில் வந்தது

"அதுக்கு 50rs தான? weekendலதான 70” என கேட்டேன்.

“ஆமா சார், 50 ரூபாதான்” என சொல்லிவிட்டு, கொடுத்த 100 ரூபாய்க்கு, 50 ரூபாய் மிச்சம் தந்தார். வாங்கிக்கொண்டு கிளம்பினோம்.

1. இதில் எவ்வளவு வாடிக்கையாளர்கள், தண்ணீர் கொடுக்க வேண்டியது உணவகத்தின் பொறுப்பு என்பதைத் தெரியாமல் இருப்பார்கள்? இருக்கிறார்கள்? இன்றும் அவர்கள் ஏமாற்றிக் கொண்டுதானே இருக்கிறார்கள்?

2. என்னைப் போல, பார்த்து கேட்காமல் போனவர்களால், மேக்ஸ் நிறுவனத்திற்கு, எவ்வளவு 200 ரூபாய் வவுச்சர்கள் லாபத்தில் சேர்ந்திருக்கும்?

3. எப்படியும் மால்களில் பார்க்கிங்க் கட்டணம் அதிகம் தான் என்ற எண்ணத்தில் இருக்கும் எவ்வளவோ நண்பர்கள், சரியாகப் பார்க்காமல், 70 ரூபாயை கொடுத்து விட்டு வந்திருக்கலாமே?

கேட்டால் கிடைக்கும் என்பது ஒரு பக்கம் இருந்தாலும், எப்படி கேட்பது, எதையெல்லாம் கேட்பது என்பது பற்றிய விழிப்புணர்வு, பெரும்பாலனவர்களுக்கு இன்னும் வரவில்லை. இந்த குழுமத்தில் இருக்கும் சக உறுப்பினர்கள், அவர்களைச் சார்ந்தவர்கள் என, ஒரு குறுகிய வட்டத்திலேயே விழிப்புணர்வு இருப்பதாகத் தெரிகிறது. அடிப்படை வாடிக்கையாளர் விழிப்புணர்வு பற்றிய தகவல்களை, இன்னும் பல்லாயிரம் பேருக்குத் தெரிவிக்க, வேறேதேனும் வழியுள்ளதா? ஃபேஸ்புக் பயன்படுத்தாத பெரும்பான்மையினருக்கு இதைக் கொண்டு செல்வது எப்படி? இதைப் பற்றி ஏற்கனவே யாராவது இங்கு பேசியிருக்கிறார்களா ? அதற்கான தீர்வு ஏதேனும் கிடைத்ததா?
//

Saturday, July 20, 2013

மரியான்


வழக்கமான எதிர்பார்ப்போட, வழக்கமான தேவி தியேட்டர் நடு செண்டர்ல சீட்டு புக் பண்ணி, வழக்கம் போல உட்கார்ந்தா, வழக்கம் போல அழ வெச்சு அனுப்பிய பெரும்பாலான படங்களில் இன்னொரு படம்தான் மரியான்.


கடல் ராசாவா வாழ்ந்துட்டு வர தனுஷ், காதலிக்காக சூடன் நாட்டுக்கு வேலைக்கு போய், ரெண்டு வருஷம் கழிச்சு, திரும்பி வர ரெடியா இருக்கற நாள்ல, அங்குள்ள உள்ளூர் தீவிரவாதிகளால கடத்தடப்படறார் (நம்ம ஊர் ரவுடிகளுக்கு டாடா சுமோ மாதிரி, அவங்க ஊர்ல ஜீப்னு நினைக்கறேன். அயன் படத்துலையும் இப்படிதான் வந்துச்சு) அவர் பத்திரமா ஊர் திரும்பினாரா, காதலர்கள் ஒண்ணா சேர்ந்தாங்களான்னு, டிக்கெட்டுக்கு காசு இருந்தா போய் பாருங்க.


படத்துல தனுஷ், பார்வதி மேனன், ரெண்டு பேரும் போட்டி போட்டுட்டு நடிச்சிருக்காங்க. இதனாலயே பார்வதி நிறைய படங்கள்ல நடிக்கறதில்லைன்னு நினைக்கறேன். மற்றபடி, படத்துக்கு தேவையான பாத்திரங்கள் எல்லாம், டைரக்டர் சொன்னதை செஞ்சிருக்காங்க. முதல் பாதி கொஞ்சம் சுவாரசியமா இருந்தாலும், நிறைய பழக்கப்பட்ட காட்சிகள். எப்படியும் தனுஷ் லவ் பண்ணிடுவாருன்னு தியேட்டர்ல இருக்கற 900+ ஆட்களுக்கும் தெரிஞ்சிருக்கு. இருந்தாலும், ஹீரோயின் கொஞ்சம் சூப்பரா இருக்கறதுனால, மக்கள் கொஞ்சம் பொறுமையோடதான் பாக்கறாங்க. இதையும் மீறி, எல்லாருமே பொறுமையிழந்தது, ரெண்டாவது பாதில. சுவாரசியமே இல்லாத திரைக்கதை. தனுஷ் மணல்ல உருண்டு விழறா மாதிரி, பொத்துனு விழுது, எந்திரிக்கவே இல்லை. வெளிநாட்டு கேமராமேனோட முத்திரை எதுவும் தெரியலை. நம்ம ஊர் ஆட்களே இதை பண்ணிருக்கலாம். மத்த விமர்சனங்கள்ல சிலாகிக்கறா மாதிரி ரஹ்மான் பாடல்கள், பி.இசை ஒண்ணும் படத்துல ஒட்டவே இல்லை. ஆனா, எப்பவும் போல, எல்லா பாட்டுலையும் பல்லவி மட்டும் நல்லா இருக்கு. தனுஷ், பார்வதியோட Top Notch நடிப்பைத் தாண்டி, படத்துலையே நான் ரொம்ப ரசிச்ச காட்சி, தனுஷ் வில்லனை கொல்றது. ”கடல் டா, கடல்” அப்படின்னு மணிரத்னம் சார் படத்தோட பேரை சொல்ல மிரட்ட, அங்கயே வில்லன் பாதி செத்துற்றான்.

இதுக்கு மேல சொல்லி உங்க நேரத்தை வீணாக்க விரும்பலை. தனுஷோட நடிப்பையும், தமிழ் சினிமால ஒரு ஹீரோயின் சூப்பரா நடிக்கறதையும் பார்க்கணும்னு ஆசை பட்டா, இந்த படத்தை, எதாச்சு ஒரு மல்டிப்ளெக்ஸ்ல பாருங்க. ஏன்னா, விசிலடிச்சான் குஞ்சுகளுக்கு இது சுத்தமா ஒத்து வராத படம். எனக்கு மரிYAAAAAAWN....

ஐய்யயோ, இந்தப் பையன் விமர்சனம் எழுதறான். கடல் ஆத்தா, காப்பாத்து

Friday, February 1, 2013

கடல்


எப்படியோ வருஷத்தோட ஆரம்பத்துல வந்த முதல் கண்டமான அலெக்ஸ் பாண்டியன் கிட்டேர்ந்து தப்பிச்சிட்டோமேனு சந்தோஷத்துல இருந்தேன். அதுல யார் கண்ணு பட்டுச்சோ தெரியலை, என்னை கடல்ல தள்ளி விட்டுட்டாங்க .Taking for grantedனு ஆங்கிலத்துல சொல்லுவாங்க. அப்படி, மணிரத்னம், தனக்குனு வர ரசிகர்கள், எதை எடுத்தாலும் பாராட்டிடுவாங்கனு குருட்டு நம்பிக்கைல, எதையோ எடுத்து தொலைக்க, இதுக்கு பேசாம தடை வாங்கிருக்கலாமேனு தோணிணதுதான் மிச்சம் ( நான் மணிரத்னம் ரசிகன் இல்லை)

 “இந்த படத்தில் வரும் பெயர்கள் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே”னு போடற இடத்துலேர்ந்தே ஜெயமோகன் கண்ணுக்கு தெரியராரு. ஏன்னா, அதுவும் படிக்க சிக்கலாதான் இருந்துது. அதை ஏன் மாத்தினாங்கன்னு தெரியலை. அடுத்து, டைட்டில்ஸ்ல வர மகுடி பாட்டு, யாருக்கு மகுடி, எதுக்கு மகுடி, என்ன மகுடினு நம்மளை நல்லா சிந்திக்க வைக்குது. கதைனு ஏதோ கதை பண்ணிருக்காங்க. திரைக்கதை செம்ம உதை வாங்கிருக்கு. நடிப்புனு பார்த்தா, கௌதம் கார்த்திக் நம்பிக்கை தராறு. எல்லா தமிழ் படங்கள்ளையும் அரை லூசா வர ஹீரோயின் பாத்திரத்துக்கு, இந்த படத்துல, அவங்களுக்கு மனநலம் கொஞ்சம் பாதிப்புனு justification சொல்லிருக்காங்க. அதுக்காக அந்த பொண்ணு நல்லா நடிச்சிருக்குனு சொல்ல வரலை. அரவிந்த்சாமி, அர்ஜுன் நடிப்பை பத்தி சொல்ல ஒண்ணும் இல்லை. ஒருத்தர் தியாகத்தோட மறுவுருவம், அடுத்தவர், நேரெதிர். மற்றும் பலர், மற்றும் பலர் மாதிரியே நடிச்சிருக்காங்க.

ஏதோ வெனிஸ்ல இருக்கறா மாதிரி, எப்ப பார்த்தாலும், எல்லாரும் படகுலதான் பயணப்பட்றாங்க. பாடல்கள் ப்டத்துல வந்த விதம், எடுக்கப்பட்ட விதம், ரெண்டுமே மெகா சைஸ் கொட்டாவீஸ். ”நெஞ்சுக்குள்ள” பாட்டுல, ஹீரோயின், வடிவேலு மாதிரி, அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்னு பண்ணுவாங்க பாருங்க, தியேட்டரே ஒத்த வார்த்தைல ஒரு சவுண்டு விட்டுச்சு. இதுல ”அடியே” பாட்டுதான் உச்சகட்டம். இடுப்பே இல்லாத பொண்ணுக்கு, பெல்லி டான்ஸ் ஸ்டெப் வேற. பிண்ணனி இசைல நீங்க இன்னும் வளரணும் சார். ராஜீவ் மேனனோட ஒளிப்பதிவு, சில இடங்கள்ள நல்லா இருக்கு. பல இடங்கள்ள, image quality அடி வாங்குது. இன்னும் சில காட்சிகள்ல out of focus. கிராபிக்ஸ், வழக்கம் போல தமிழ் சினிமா தரம். கடைசில வர ஆலேலூயா பாட்டுக்கு அடக்க முடியாம சிரிச்சிட்டேன், அதுலயும், அரவிந்த்சாமி ஏதோ பாப் சாங் ரேஞ்சுக்கு ஃபீல் பண்ணி வாயசச்சிட்டு வருவாரு பாருங்க. priceless. கடல், பெயர் காரணம் கூறுகனு சொன்னா, டைரக்டர்கே தெரியாதுனு நினைக்கறேன். ஸ்தோத்திரம், தொம்மை, டாம், மகுடி, டாம் அண்ட் ஜெர்ரி, இப்படி பல டைட்டில்ஸ் இருக்க, இதை ஏன் வெச்சாருனு தெரியலை.

இந்த படத்தோட ஒரே ப்ளஸ், புது வருஷத்துல என்னை பதிவு எழுத வெச்சதுதான். நீச்சல் தெரிஞ்ச என் நண்பனும், இந்தக் கடல்ல ரொம்ப கஷ்டப்பட்டான். மொத்தத்துல பன்ச் மாதிரி சொல்லனும்னா இது கDULL.


பி.கு எனது வயற்றெரிச்சலை செம்மையாகக் கொட்டிக்கொண்ட மணிசார், என் money sir?? அதுக்கும் ஸ்தோத்திரமா?? 

Tuesday, January 24, 2012

எண்ணிப் பார்த்தேன் - 2011 - 4

போன வருஷம் நான் பார்த்து ரசிச்ச படங்கள், பாடல்களோட லிஸ்ட் இது.
எதுவும் மிஸ் பண்ணலை. உங்க ரசனையோட ஒத்து போகலன்னா ரொம்ப அலட்டிக்காதீங்க. என்னடா இதெல்லாம் நல்லா இருக்குன்னு சொல்றானேன்னு கமெண்ட் பண்ண வேணாம்.

படங்கள்
சரியா எண்ணி பார்த்தா, போன வருஷம்தான் நான் நிறைய படங்கள் பார்த்திருப்பேன்னு நினைக்கறேன். ரசனையும் கொஞ்சம் liberalஆ மாறிருக்குன்னு தோணுது. லிஸ்ட் போட்டா அது பெருசா மளிகை சாமான் லிஸ்ட் மாதிரி போகுது. கொஞ்சம் கூட்டி குறைச்சு, இங்க ஃபைனல் லிஸ்டை கொடுக்கறேன்.

ஜாலியா ரசிச்ச படங்கள் - தமிழ்

  • ஆடுகளம்
  • காவலன்
  • யுத்தம் செய்
  • பயணம்
  • கோ
  • பயணம்
  • அழகர்சாமியின் குதிரை
  • எங்கேயும் எப்போதும்
  • ஆரண்ய காண்டம்
  • வேங்கை
  • தெய்வத் திருமகள்
  • மங்காத்தா
  • முரண்
  • வேலாயுதம்
  • மயக்கம் என்ன
  • ஒஸ்தி
  • போராளி

இதுல சூப்பர்
ஆடுகளம், காவலன், யுத்தம் செய், கோ, அழகர்சாமியின் குதிரை, எங்கேயும் எப்போதும், ஆரண்ய காண்டம், முரண்

இதுல என்னோட PICK
ஆரண்ய காண்டம்

நான் மொக்கை வாங்கிய படங்கள்

  • சிறுத்தை (first half + சந்தானம் காமெடி மட்டுமே ரசிச்ச விஷயங்கள்), 
  • நடுநிசி நாயகள்
  • எங்கேயும் காதல்
  • அவன் இவன்
  • வந்தான் வென்றான்
  • வாகை சூட வா
  • 7ஆம் அறிவு (ஓவர் ஹைப் ஒடம்புக்கு ஆவாது), 
  • ராஜ பாட்டை
  • வானம்
இந்த லிஸ்ட்ல, மங்காத்தவையும், தெய்வத் திருமகள் படத்தையும் சேர்க்கலாம். மங்காத்தா புத்திசாலித்தனமா இருக்கறா மாதிரி ஏமாத்தின ஒரு படம். முதல் முறை அஜீத்தும் பாட்டும் படத்தை காப்பாத்தினாலும், ரெண்டாவது தடவை தியேட்டர்ல உட்கார முடியலை. மொக்கையான மேட்டரை நல்லா மூடி மறைச்சு, ஹைப் பண்ணி மக்களை ஏமாத்திருக்காங்கன்னே தோணிச்சு. கோவா படத்துல தெரிஞ்ச சின்ன சின்ன ஸ்மார்டான விஷயங்கள் கூட இதுல இல்லை. தெய்வத் திருமகள், காபி அடிச்ச படம்னு கடைசி வரைக்கும் படத்தோட சம்பந்தபட்டவங்க ஒத்துக்கவே இல்லை. அதுவே எனக்கு செம்ம கடுப்பு. இதுதான் என்னோட இன்ஸ்பிரேஷன்னு சொல்றது அவ்வளவு கஷ்டமா? விக்ரமும் நல்லா ஒப்பேத்தினாரு.

பார்க்க முடியாமல் போன படங்கள்
180, காஞ்சனா, வெப்பம், பட்டா பட்டி, மௌன குரு

இந்திய அளவுல ரசிச்ச படங்கள்
Telugu - Alaa Modalaindhi,
Hindi - Pyaar ka Punchnama, Delhi Belly, Dirty Picture

பார்க்க முடியாமல் போனது
Telugu - Dookudu, Sri Rama Rajyam, 100% love, Golconda High School,
Hindi - No one killed jessica, Stanley ka dabba, Shaitan, Buddha Hoga tera Baap, Aarakshan, That girl in yellow boots

மொக்கை
Ra - One - வலிக்காம அடிச்ச படம். அப்பறம் எல்லாம் ஊமை காயம்.

இதுல டெல்லி பெல்லி படத்துக்கும், தமிழ்ல வந்த ஓரம் போ படத்துக்கும் சில ஒற்றுமைகளை பார்க்க முடிஞ்சுது. ஹிந்தி அளவுக்கு இல்லைனாலும், தமிழ்ல வசனம் கொஞ்சம் வெளிப்படையா இருந்துச்சு. அதே மாதிரி, வைர கடத்தல் மேட்டரும்.

உலக அளவுல நான் ரசிச்ச படங்கள்
சில படங்கள் பத்தி, சில வரிகள்.
  • Harry Poter Final Part - கண்ணீர் மல்க விடை கொடுக்கலாம்னு நினைச்சேன். தனியா படம் பார்த்ததுனால அழ முடியலை :P
  • Kungfu Panda 2 - முதல் பார்ட் அளவு இல்லைனாலும் enjoyable.
  • Hangover 2 - அதே டெய்லர், அதே வாடகை, ட்ரெஸ் கலர் மட்டும் வேற. நல்லா யோசிக்கறாங்க ரூம் போட்டு.
  • Ides Of March - எவ்வளவு பேருக்கு தெரிஞ்சிருக்கும்னு தெரியலை. சரியான பொலிடிகல் த்ரில்லர் படம்
  • Source Code - கொஞ்சம் குழப்பறா மாதிரி எடுத்த படம். ஆனா அப்படி ஒண்ணும் இல்லை. 
  • Bridesmaids - பெண்கள் மட்டுமே முக்கிய பாத்திரங்கள்ள இருக்கற இந்த படத்தை எழுதினதும் ஒரு பெண்தான். அவங்களுக்குள்ள இருக்கற பாசம், நேசம், ஈகோ இப்படி நிறைய விஷயங்களை எந்த சப்பைகட்டும் இல்லாம சொல்லிருக்காங்க.
  • X Men First Class - இன்னா கிராபிக்ஸ். இன்னா ஸ்க்ரீன்ப்ளே.
  • Super 8 - momentum எப்படி கொஞ்சம் கொஞ்சமா ஏத்தறதுனு கண்டிப்பா அவங்க ஊருக்கு போய் ஒழுங்கா படிச்சிட்டு வரணும். சாதாரண சின்ன பசங்க கதைய, ஏலியன் இன்வேஷனோட முடிச்சு போட்டு, அட்டகாசமா present பண்ணிருந்தாங்க. என்னதான் இருந்தாலும் நம்ம ஸ்பீல்பெர்க் தயாரிப்பாச்சே.
  • Bad Teacher
  • Horrible Bosses
  • Crazy, Stupid Love
  • Rise Of Planet Of Apes - இந்த படத்துக்காவது Andu Serkisகு ஒரு ஆஸ்கர் கொடுத்தா நல்லா இருக்கும். சீஸர்னு மனித குரங்கா அவர் நடிச்சிருந்த விதம் எனக்கு தெரிஞ்சு வேற யாருமே பண்ண முடியாத ஒரு விஷயம். 
  • Johny English Reborn
  • MI 4 - Brad Bird மேல வெச்ச நம்பிக்கை வீண் போகலை. பின்னு பெடல் எடுத்திருந்தாரு
  • Tin Tin
  • Tangled

பார்க்க முடியாமல் போனது
Fast Five, Cars 2, Rio, Rango, Transformers, Attack the Block, Sherlock Holmes

இந்த படங்களோட என்னை யோசிக்க வெச்ச இன்னொரு முக்கியமான விஷயம் டிக்கேட் ரேட். ரேட் ஃபிக்ஸ் பண்ண சட்டம் இருக்குனு தெரியும். ஆனா நம்ம கேபிள் அண்ணாச்சி சொன்ன அப்பறம்தான் டிக்கேட்டோட ரேட் இவ்வளவுனு தெரிஞ்சுகிட்டேன். முடிஞ்ச வரைக்கும் சூப்பரான சத்யம்ல பாக்கறதுனால அவங்களுக்கு கொடுத்தா பரவாயில்லைனு தோணுது. ஆனா 
டிக்கேட் மட்டும் இல்லாம, பார்க்கிங் + காண்டீன் சமாச்சாரங்கள்ல மத்த தியேட்டர்கள் அடிக்கற கொள்ளை, யாரும் கண்டுகிட்டா மாதிரி தெரியலை. 


ரசித்த பாடல்கள்

அய்யய்யயோ நெஞ்சு - ஆடுகளம்
யாரது - காவலன்
நான் ரொம்ப ரொம்ப - சிறுத்தை
கன்னித்தீவு பொண்ணா - யுத்தம் செய்
என்னமோ ஏதோ, அக நக - கோ
வாடா பின்லேடா - மங்காத்தா
கொலைகாரி, நேற்று இல்லை - தம்பு வெட்டோத்தி சுந்தரம்
நெஞ்சில் நெஞ்சில், நாங்கை - எங்கேயும் காதல்
சந்திக்காத, ஊசெல்லா, நியாலமே - 180
காற்றில் ஈரம் - வெப்பம்
சர சர - வாகை சூட வா
சில்லாக்ஸ் - வேலாயுதம்
காதல் என் காதல் - மயக்கம் என்ன
வில்லாதி வில்லன் - ராஜ பாட்டை
ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் - கழுகு
Kutta - Pyar ka punchnama
Kalaya Nijama - Sri Rama Rajyam

எனவே, இப்படித்தான் எனது 2011 சினிமா வாழ்க்கை கழிந்தது. 2012ல் மேலும் நிறைய ரூபாய்களையும், சக்தியையும் செலவழித்து, படங்கள் பார்த்து மக்களுக்கு உதவுவேன் என்று உறுதியளிக்கிறேன். இப்போதைக்கு டாடா :)

Monday, January 23, 2012

எண்ணிப் பார்த்தேன் - 2011 - 3

புது வருஷம் பொறந்து ஒரு மாசம் முடியப்போகுது, இன்னும் என்ன எண்ணிப் பாக்கறதுனு சில பேர் கேட்கலாம். என்ன செய்ய. ஏற்கனவே யோசிச்சு, ஹின்ட்ஸ் வேற எழுதி பதிவுல ஏத்தாம போறதில்லைனு முடிவு பண்ணிட்டேன். அதனால பொறுமையா படிச்சிருங்க. இதுக்கப்பறம் இன்னும் ஒரே ஒரு பதிவுதான். அப்பறம் வழக்கம் போல மொக்கை பதிவுகளை ஆரம்பிக்கறேன்.

பதிவிட முடியாமல் போன சில random விஷயங்களை பத்தின தொடர்ச்சி... முடிவு

கன்னத்தில் குத்துவிட்டால்


நவம்பர் மாசம் விவாசயத்துறை அமைச்சர் சரத் பவார் வாங்கின அறையோட சத்தம் இந்தியா முழுக்க கேட்டுது. ஹர்விந்தர் சிங்னு ஒரு சீக்கிய இளைஞர் அத்தியாவசிய பொருட்களோட விலையேற்றத்துல காண்டாகி, நம்மளை மாதிரி பதிவு மட்டும் போடாம அமைச்சரோட கன்னத்துல ஒரு அறையும் போட்டாரு. 
அடிச்சு முடிச்சிட்டு, ஊழல் அரசியல்வாதிகளுக்கு இது என்னோட பதில்னு கையில கத்திய வெச்சிகிட்டே சத்தமும் போட்டாரு. இதுக்கப்பறம் இன்னும் நிறைய பேர் அடி வாங்குவாங்கன்னு நினைச்சேன், ஆனா நடக்கலை. still, கொஞ்சம் சந்தோஷமா இருந்துச்சு. மக்கள் கொஞ்சம் கொஞ்சமா பொறுமையிழந்துட்டு வராங்கன்னு நினைக்கறேன். மாட்டிக்கமாட்டேன்னா கண்டிப்பா நானும் உதை கொடுக்க தயார் :)


கால்-திண்டாட்டம்


அடுத்த அதிர்ச்சி இண்டோர் நகரத்துலேர்ந்து வந்த செய்தி. அந்த ஊர் கால்பந்தாட்ட வீரர்கள் தங்களோட விளையாட்டுக்கான செலவுகளை பார்த்துக்க, கிரிக்கேட் ஸ்டேடியத்தை சுத்தம் பண்ணாங்களாம். என்ன கருமமோ. இந்த ஒரு செய்தியே, இந்தியால மற்ற விளையாட்டுகளோட நிலைமையையும்,  கிரிக்கேட்டுக்கு நாம தர தேவையில்லாத முக்கியத்துவத்தையும் காட்டிச்சு. தங்களோட கிழிஞ்ச ஷூக்களையும், விளையாட தேவையான பழைய பொருட்களையும் மாத்த இந்த காசு உதவும்னு அந்த வீரர்கள் சொல்லிருக்காங்க. இந்த நிலைமை அந்த மாநிலத்தில மட்டும்தானா இல்லை எல்லா இடத்துலையுமானு தெரியலை. ஒழுங்கா விளையாட தெரிஞ்சதா சொல்லிக்கற கிரிக்கேட்லையும் மரண அடி வாங்கிட்டு இருக்கோம். இதுக்கு செலவழிக்கற பணத்துல கால்வாசிய மத்த விளையாட்டுக்கும் கொடுத்தா நல்லா இருக்கும். இந்த மாதிரி ஐடியாக்களை லட்சம் பேர் சொல்லிருப்பாங்க. என்ன நடந்துச்சு. எல்லாரும் ஒரு அறை கொடுத்தா சரியா வரும்னு நினைக்கறேன். 


குடிவெறி


கொலைவெறி ஹிட்டான கையோட தமன்னாவோட பர்த்டே பார்டில தனுஷ் போதைல பாடின கொலைவெறிக்கும் நல்ல ஹிட்ஸ் வந்துச்சு. கூடவே நல்ல போதைல தமன்னாவும் பூனம் பாஜ்வாவும் இருக்காங்க. வேற யாரெல்லாம் இருந்திருப்பாங்க்ன்னு ஊகிக்க முடியுது. இதை பார்த்த அப்பறம் நம்ம தமிழ் கூறும் நல்லுலகம் ஒண்ணும் திருந்திடப்போறதில்லைனு நினைக்கறேன். தொடர்ந்து நடிகர்களுக்கு ராஜ மரியாதை கொடுப்போம். பாலாபிஷேகம் பண்ணுவோம். கோயில் கட்டுவோம். வாழ்க பாரதம்.

அடுத்த பதிவுல. இன்னும் ரெண்டு மூணு விஷயங்கள்,  2011 பாடல்கள் + படங்களை பத்தி சொல்லிட்டு, இந்த வருட எண்ணிப்பார்த்தேனை முடிச்சிக்கறேன்.. நன்றி :)

Saturday, January 7, 2012

எண்ணிப் பார்த்தேன் - 2011 - 2

பதிவிட முடியாமல் போன சில random விஷயங்களை பத்தின தொடர்ச்சி..

ஆயிரம் பித்தலாட்டம் பண்ண அபூர்வ சேனல்

நியூஸ் சேனல்கள் எவ்வளவு தூரம் தரம் இறங்க முடியும்னு (இதுக்கு முன்னாடியும் பெரிய தரம் இருந்ததா தெரியலை) போன வருஷம் மறுபடியும் தெரிஞ்சுது. CNN IBN சேனல், art of living ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் பேட்டில பண்ண தகிடுதத்தம் வெளிய வந்துச்சு. முன்னாடியே எடுத்த பேட்டிய, லைவ்னு சொல்லி, அவர் ஏதோ கேள்விக்கு பதில் சொல்லாம சமாளிக்கறா மாதிரி டெலிகாஸ்ட் பண்ணாங்க. ஆனா, அந்த பேட்டி ஒளிபரப்பான நாளே, அது பொய்னு தெரிய வந்து, வலைமனைல  பல இடங்கள்ள விவாதம் பண்ணாங்க. நிகழ்ச்சிய தொகுத்து வழங்கின சகரிகா கோஸ் (அந்த கோஸ் இல்லை), முதல்ல, இந்த மாதிரி பண்றதெல்லாம் எல்லா சேனல்லயும்  சகஜம்னு சொல்ல, ட்விட்டர்ல மக்கள் சகட்டு மேனிக்கு அவங்களை திட்ட, அப்பறம் வேற வழி இல்லாம, போலியா மன்னிப்பெல்லாம் கேட்டாங்க.  இப்படி ஒரு கேடுகட்ட விஷயத்தை பண்ணிட்டு இன்னும் அந்த சேனல் ஒளிபரப்பாகிட்டுதான் இருக்கு. மக்கள் எங்கயும் பொங்கி எழல. பாதிக்கப்பட்டவங்க யாரும் எந்த வழக்கும் தொடரலை. இன்னும் நிறைய பேர் அந்த சேனலை விசுவாசமா பாத்துட்டுதான் இருக்காங்க. இன்னொரு முக்கியமான விஷயம், இந்த சேனல் முன்னாடியே போலியான ட்விட்டர் அக்கவுண்ட்ல ட்வீட் பண்ணி கேவலமா மாட்டிகிட்டாங்க. இது மாதிரியே நிறைய குற்றச்சாட்டு அந்த சேனல் மேல இருக்கு. வாழ்க ஜனநாயகம் #it only happens in india

டின் டின்

சின்ன வயசுல படிச்ச டின் டின் காமிக்ஸ், கார்டூன் நெட்வொர்க்ல வரும்போதே ரொம்ப ஆர்வத்தோட பார்த்த ஆள் நான். அதை ஸ்பீல்பெர்க் படமா எடுக்க போறாருன்னு ரெண்டு வருஷம் முன்னாடி அறிவிப்பு வந்தவுடனேயே எதிர்பார்க்க ஆரம்பிச்சிட்டேன். ஏற்கனவே கதை தெரிஞ்சிருந்ததுனால படம் பெருசா சுவாரசியப்படுத்தல. ஆனா, அற்புதமான மேக்கிங். performance capture டெக்னாலஜியோட உச்சத்தை தொட்டிருக்காங்க. முக்கியமா, ஒரே ஷாட்ல வர சேஸிங் சீன். அதுல கொடுத்துருக்கற டீடைலிங். அதுக்காகவே படத்தை பல தடவை பார்க்கலாம். அடுத்த பார்ட், டின் டின் ஸீரிஸ்லையே எனக்கு புடிச்ச ரெண்டு கதை. பீட்டர் ஜாக்சன் எடுக்கராராம். அதுக்கும் ஆர்வத்தோட வெய்டிங்.

கொலைவெறி

2010௦ல மாமனாரோட எந்திரன் மாதிரி, 2011ல மாப்பிள்ளையோட கொலைவெறி. ஆடுகளத்தை தவிர சொல்லிக்கறா மாதிரி வேற எந்த படமும் வராத நிலைல (மயக்கம் என்ன லிஸ்ட்ல சேர்க்கலாமா வேணாமானு தெரியலை), இந்தியா மொத்தமும் கொண்டாடற ஸ்டாரா தனுஷ் மாறினதுக்கு ஒரே காரணம்.. இந்த பாட்டை வெச்சு நிறைய case study பண்றதா கூட கேள்விபட்டேன். பாட்டு இப்படி ஆரம்பிச்சா, இப்படிதான் முடியும்னு, ரொம்ப நாளா பாட்டு கேட்கற யார் வேணாலும் சொல்லக்கூடிய predictable டியூன். ஆனா அதுதான் பாட்டோட வெற்றிக்கு காரணம்னு நினைக்கறேன். நிறைய பாராட்டுகளோட, நிறைய குற்றச்சாட்டும் வந்திருக்கு. இந்த பாட்டை பாபுலரைஸ் பண்ண நிறைய காசு செலவழிசாங்க. இவ்வளவு ஹிட்ஸ் வரவேயில்லைன்னு நிறைய சொல்றாங்க. எவ்வளவோ கொடிகள் கொடுத்து மார்க்கெட்டிங் பண்ண ரா ஒன் படத்தோட சம்மக் சல்லோ பாடல் இவ்வளவு வெற்றி அடையலை. விஷயம் இல்லாம எந்த பாட்டுமே இவ்வளவு தூரம் ரீச் ஆகாதுங்கறது என் கருத்து. தினமும் கொலைவெறி பாடலோட தாக்கத்துல, அட்லீஸ்ட் ரெண்டு வீடியோவாவது யூடியூப்ல யாராவது அப்லோட் பண்றதா சொல்றாங்க. அவ்வளவு பேருக்கும் காசு கொடுத்துருப்பாங்களான்னு தெரியலை.

தற்கொலை


தினமும் நிறைய தற்கொலை செய்திகளை படிக்கறோம். தற்கொலைக்கான காரணத்தை பாத்துட்டு, எதாவது கமெண்ட் பண்ணிட்டு போறோம். ஆனா, அக்டோபர் மாசம் நான் படிச்ச ஒரு தற்கொலை நியூஸ், உண்மையிலேயே சுஜாதா கதைல வரா மாதிரி இருந்துது. கோவால, ஐ.டில வேலை செய்யற, லட்சக்கணக்குல சம்பாதிக்கற புருஷன் பொண்டாட்டி, ஆனந்த், தீபா தூக்குல தொங்கிட்டாங்க. தற்கொலைக்கு முன்னாடி ஒரு லெட்டர் வேற எழுதி வெச்சிருக்காங்க. அதுல “ நாங்க எங்க வாழ்க்கைய பரிபூரணமா வாழ்ந்துட்டோம். உலகம் முழுக்க சுத்தியாச்சு. பல இடங்களை பாத்தாச்சு. நாங்க நினைச்சே பார்க்க முடியாத அளவுக்கு சம்பாதிச்சாச்சு. எங்க உயிர் எங்களுக்கு மட்டும்தான் சொந்தம்ங்கற தத்துவத்துல எங்களுக்கு நம்பிக்கை இருக்கு. எவ்வளவு தூரம் வாழ உரிமை இருக்கோ, அதே அளவு சாகவும் எங்களுக்கு உரிமை இருக்கு”னு எழுதி வெச்சிருக்காங்க. படிக்கும்போதே எனக்கு ஒரு அமானுஷ்ய ஃபீல் இருந்துச்சு. இதொட, அவங்களோட இறுதி சடங்குக்கு பணமும். அவங்களோட சொத்துக்கள் யார் யாருக்கு போகனும்னும், தெளிவா, கைபட எழுதி வெச்சிட்டு செத்துருக்காங்க. இந்த தற்கொலைய விட, இந்த காரணம்தான் என்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணிச்சு. இப்போ பதிவு போடற வரைக்கும் பாதிச்சிருக்குனா பாருங்களேன். எதனால இந்த மாதிரி எண்ணங்கள் வருதுனு நினைக்கறீங்க?? கமென்ட்ல எழுதுங்க. அதை பத்தி தனியா வேற பதிவுல பேசலாம்.

தொடரும்....

Sunday, October 23, 2011

மற்றும் பல - 23/10/2011

வழக்கம் போல அப்படியே சோம்பேறித்தனத்துல இங்க எதுவும் எழுதாம விட்டுட்டேன். என்னோட பழைய பதிவுகளை கொஞ்சம் பார்க்கலாம்னு நினைச்சா, கடைசியா எழுதின 10 பதிவுகளுமே விமர்சனங்களாவே இருக்கு. சங்கடமா போச்சு. இனிமேலாவது ஒழுங்கா அப்டேட் பண்ண முயற்சி பண்ணனும். தட்டிக் கேட்க ஆள் இல்லாம போச்சுல. அதான்.. :)
-----------------------------------------------------------------------
பிபிசி வேலையை விட்டுட்டேன். என் மேல அக்கறை இருக்கற எல்லாரும் என்னை திட்டியாச்சு. உங்க அக்கறைக்கு நன்றி மக்களே :) ஆனா என்னை புரிஞ்சிகிட்ட யாரும் எதுவும் சொல்லல. அதுவே சந்தோஷமா இருக்கு. பிபிசில வேலை செஞ்ச இந்த ஒரு வருஷம் எப்படி போச்சுனே தெரியலை. எக்கச்சக்க நண்பர்கள், புரிஞ்சிகிட்ட விஷயங்கள், புதுப்புது அனுபவங்கள்னு மிக வேகமான ஒரு வருஷம். நான் எங்கெல்லாம் போக முடியாதுன்னு நினைச்சனோ, யாரையெல்லாம் பார்க்க முடியாதுன்னு நினைச்சனோ, எல்லாமே நடந்துச்சு. (என்னோட facebook ஆல்பம பார்த்தா உங்களுக்கு புரியும் :P) சம்பந்தமே இல்லாத இடங்களுக்கும் போனேன். இந்த முதல் வேலை அனுபவம் கண்டிப்பா என்னோட எல்லா எதிர்கால வேலைகள்லையும் எதிரொலிக்கும்னு நம்பறேன். நன்றி டு பிபிசி :) அடுத்து என்னான்னு கேட்காதீங்க. இன்னும் யோசிச்சிக்கிட்டுதான் இருக்கேன் :) 
-----------------------------------------------------------------------
ராக் ஸ்டார் மற்றும் ரா ஒன் படத்தோட பாடல்கள் கொஞ்சம் ஈர்த்திருக்கு.
முதல்ல
, ராக் ஸ்டார்..... 
படத்துக்கு, ரஹ்மான், சூப்பர்லேடிவா இசை அமைச்சிருக்கர்தா இசை விமர்சகர்கள் நிறைய பேர் சொல்றாங்க. பாடல்கள் நல்லா இருந்தாலும் நம்ம நேட்டிவிட்டி இருந்தாதான ஓட்டும். அது எனக்கு கஷ்டம். டில்லி 6க்கு அப்பறம், ஹிந்தில ரஹ்மானோட பெஸ்ட்டுன்னு சில பேர் சொல்றாங்க. நமக்கு ஒண்ணும் புரியல. என்னதான் இருந்தாலும் ரஹ்மானுக்கு மற்றுமொரு வெற்றிப் படம்.
அடுத்து ரா ஒன் பத்தி சொல்லனும்னா, சம்மக் சல்லோ பாடல் மட்டுமே நிறைய பேரை கவனிக்க வெச்சிருக்கு. அதோட மேக்கிங் வீடியோ பாத்திருப்பீங்க. ஏகான் ஹிந்தி பாடினது ஆச்சர்யம்னா, பாடல்ல தமிழ் வரிகள் இருக்கறது அடுத்த ஆச்சர்யம். ஆனா படத்தோட ட்ரைலர பார்க்கும்போது ஆச்சரியப்பட முடியலை. ஷாருக் ஒவ்வொரு தெரு முனைல நின்னும் படத்துக்கு பிரமோஷன் பண்றாரு. படம் எப்படி இருக்குனு பார்க்கலாம். தலைவர் வேற வராரே.
-----------------------------------------------------------------------
குறுஞ்செய்தி என்கின்ற எஸ்.எம்.எஸ்க்கு கட்டுப்பாடு விதிச்சிருக்காங்க மாண்புமிகு ட்ராய். அதுக்கு அவங்க சொல்ற காரணம், டெலி மார்க்கெட்டிங் ஆளுங்களை கட்டுப்படுத்தவாம். அதுக்கு எதுக்கு நம்ம மடில கை வெக்கணும்னு தெரியலைநிறைய பேர் இந்தக் கட்டுப்பாடை ஆதரிக்கறாங்க. தேவையில்லாத  எஸ்.எம்.எஸ் வராதுன்னு. இவ்வளவு கோடி மக்களை கட்டுப்படுத்த முடியரவனுக்கு, நூறு டெலி மார்க்கெட்டிங் கம்பெனிகளை கட்டுப்படுத்த முடியாதா? இல்லை வேற ஏதாவது காரணங்களாநான் காசு குடுக்கறேன். ஒரு நாளைக்கு எவ்வளவு  எஸ்.எம்.எஸ் அனுப்பறதுன்னு நான் முடிவு பண்ணிக்கறேன். இவனுங்க யாரு அதை கட்டுப்படுத்த? இன்னைக்கு இதுல கட்டுப்படுத்தரவனுங்க, நாளைக்கு "நீ இவ்ளோதான் பேசணும், இதுக்கு மேல பேசகூடாது"னு கட்டுப்படுத்தினா?? இதுல ஆச்சர்யம் என்னான்னா, இதுக்கு எதிரா, காதுல விழறா மாதிரி எந்தக் குரலும் வரலை. அவ்வளவு கூடவா யோசிக்க திராணி இல்லாம ஆகிட்டோம்? 
-----------------------------------------------------------------------
ரெண்டு பாட்டுக்காகவே சதுரங்கம் படம் பார்த்தேன். கிளைமேக்சை தவிர படம் சுவாரசியமாத்தான் இருந்துச்சு. சோனியா அகர்வாலைப் பத்தி நிறைய கமெண்ட்ஸ் சொல்லிட்டே படம் பார்த்தோம் நானும் என் நண்பனும். நல்ல வேளை சத்தமா சொல்லலை. பின்னாடி ரோல சோனியாவே உட்கார்ந்திருந்தாங்க. படம் முடிஞ்சா பின்னாடி, வெளிய கரு பழனியப்பன் நின்னுகிட்டு இருந்தாரு. போய் என்ன பேசறதுன்னு தெரியலை. அப்படியே வந்துட்டேன். 
-----------------------------------------------------------------------
முரண் படமும் நல்லா இருந்துச்சு. ஆனா கொஞ்சம் யோசிச்சா படத்தோட எல்லா டிவிஸ்டயும் பத்தாம் கிளாஸ் பையனே / பொண்ணே (நான் ஆணாதிக்கவாதி இல்லீங்கோ :P ) கண்டுபிடிக்கறா மாதிரி இருந்துச்சு. பிரசன்னா ரொம்ப நல்லா நடிச்சிருக்காரு. சேரனுக்கு, எதையோ முழுங்கிட்டு வயித்துல சங்கடம் பண்றா மாதிரியான அதே லுக்கை, படம் முழுக்க மெய்ன்டெய்ன் பண்ணாரு. அவருக்கு ஏத்த ரோல். ஆனா, படம் நல்லா ஓடலைன்னு  கேள்விப்பட்டேன். pity. பாட்டு எல்லாம் மொக்கை. 

Thursday, April 14, 2011

மற்றும் பல (14/04/2011)

ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டா, சித்திரை ஒண்ணானு காவலன் வடிவேல் மாதிரி சில பேர் கன்பீஸ் ஆகிருக்காங்க. நிறைய பேர் தெளிவாதான் இருக்காங்க.  தமிழ் புத்தாண்டு வாழ்த்தை சொல்லிகிட்டுதான் இருக்காங்க. காலங்காலமா அதை தமிழ் புத்தாண்டா கொண்டாடிட்டு, ஒரு தனியாளோட விருப்பத்துக்கு / சுயநலத்துக்கு ஏத்தா மாதிரி மாத்தினதை யாரும் பெருசா எடுத்தக்கலை. இந்த நாள்ல ஒண்ணுமே பண்ணாமா இருக்கறவங்களுக்கு பெரிய வித்தியாசம் இல்லை. அவங்களுக்கு லீவு கிடைச்சா போதும். 
------------------------------------------------------------------------------------------------------------------
எப்பவுமே ஸ்டேடியம் போய் மேட்ச் பாக்கறது எனக்கு பிடிக்காது. இருந்தாலும் என் தொழிலுக்காக அப்படி பார்க்க வேண்டியிருந்தது. சேப்பாக்கம்  மைதானத்துல நான் பார்த்த முதல் மேட்ச், இந்த ஐ.பி.எல்ல சென்னை-கொல்கத்தா ஆடின மேட்ச். அதுவும் மீடியா பாக்ஸ்ல, ஏசில உட்கார்ந்து பார்த்தது நல்ல அனுபவம். ஆனா, இந்த முறை ஐ.பி.எல் மோகம் கொஞ்சம் கம்மி ஆகிருக்கரா மாதிரி தெரியிது. நானும் பெருசா ஒன்னும் ஃபாலோ பண்ணலை. நிறைய ஆட்டம் ஃபிக்சிங் மாதிரியே வேற இருக்கு. என்ன எழவோ.
------------------------------------------------------------------------------------------------------------------
விவேக்கை பெட்டி எடுக்கும்போது சுவாரசியமான விஷயம் ஒண்ணு சொன்னாரு. காதலுக்கு மரியாதைல, விஜயோட ஃபிரெண்டா, இவர்தான் முதல்ல கூப்டான்கலாம். ஆனா, அந்த சமயத்துல, காதல் மன்னன் படத்துக்காக இவர் உதவி செஞ்சிகிட்டு இருந்ததால இவரால நடிக்க முடியலியாம். அடுத்து அழகிய தீயே படத்துல, இவர்தான் கதாநாயகனா நடிக்க வேண்டியதாம். சில கருத்து வேறுபாடுனால நடிக்க முடியாம போய், இன்னிவரைக்கும் ராதா மோகன் படங்களை மிஸ் பண்ணிக்கிட்டு இருக்கறதா வருத்தப்பட்டார்.
------------------------------------------------------------------------------------------------------------------
ஒன்னரை மாசமா எதுவும் எழுதலை. வழக்கம் போல வேலைகள். சோம்பேறித்தனம். writers block. இப்படி நிறைய காரணங்கள். 
------------------------------------------------------------------------------------------------------------------
180 படத்தோட ஆடியோ ரிலிஸ், சம்பிரதாயமா, சத்யம் தியேட்டர்ல நடந்துச்சு. வழக்கம் போல, மேடைல பாடினவங்க, பாடலை, வாய் அசைச்சாங்க. வாசிச்சவங்க கை அசைச்சாங்க. ஃபான்டம் காமெரால 2500fpsல ஷூட் பண்ணிருக்காங்க. விஷுவலா நல்லா இருக்கு. டிரைலர் பெரிய எதிர்பார்ப்பு எதையும் உருவாக்கலை. ஒரு பாடல்ல சித்தார்த்தும் பிரியா ஆனந்தும் நெருக்கமா இருந்தது, ஆர்யாவை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணிருச்சு போல. அவர் பேசும்போது, அத பத்தியே சொல்லிக்கிட்டு இருந்தாரு. வர வர இந்த மாதிரி நிகழ்ச்சியெல்லாம் ரொம்ப கடியாயிருக்கு. 
------------------------------------------------------------------------------------------------------------------
நண்பர்கள் எல்லாம் சேர்ந்து ஒரு மொக்கை ஷார்ட் பிலிம் எடுத்திருக்கோம். எடிட்டிங் போய்கிட்டு இருக்கு. 
-----------------------------------------------------------------------------------------------------------------
நிறைய பரபரப்புக்கு மத்தியலா எலெக்ஷன் முடிஞ்சு போச்சு, யாருக்குமே மெஜாரிட்டி கிடைக்காதுன்னு நினைக்கறேன். முதல் முறையா ஓட்டு போட்டேன். சல்பியா முடிஞ்சிருச்சு. 
------------------------------------------------------------------------------------------------------------------
பாலாவோட அவன் இவன் படத்துல, சூப்பர் சிங்கர்ல பாடின பிரியங்கா, ஸ்ரீ நிஷா, நித்தியஸ்ரீ மூணு பேரையும் ஒரு பாட்டுல, பாட வெச்சிருக்காங்க. பாட்டோட பிரிவியூ amazon.comல இருக்கு. இப்போதைக்கு பிரியங்கா குரல் மட்டும்தான் கேட்குது. பொண்ணு மிரட்டிருக்கு. கேட்டுப் பாருங்க.

Wednesday, February 23, 2011

நடுநிசி நாய்கள் - edge of the seat

இரு கோடுகள் லாஜிக்க நான் பல சமயங்கள்ல நண்பர்கள் கிட்ட சொல்றதுண்டு. இந்தப் படம் பார்க்கும்போதும் அதுதான் தோணிச்சு. எப்படின்னு சொல்றேன். இந்தப் படத்தை பத்தி ஒரு பக்கம் என்னடான்னா "இதெல்லாம் ஒரு படமா, கவுதம் மேனன் என்ன நினைச்சிகிட்டு இருக்காரு, இவ்வளவு வக்கிரமான படம் பார்த்தா அப்பாவி மக்கள் கெட்டுப் போய்ட மாட்டாங்களா, ச்சே ச்சே அபசாரம் அபசாரம்"னு கூவிக்கிட்டு இருக்காங்க. இன்னொரு பக்கம், "அவரு அப்படி என்ன சொல்லிட்டாரு.இருக்கர்ததான சொல்லிருக்காரு, இதுல என்ன கெட்டுப்  போச்சு, கரை நல்லது"னு சப்போர்ட் பண்ணிக்கிட்டு இருக்காங்க. எனக்கு படம் அப்படி வக்கிரமா, டிஸ்டர்பிங்கா தெரியல. ஏன்? ஏன்னா நான் இத விட வக்கிரமான, வயலன்டான, இன்டேன்ஸோட இருக்கற படம் பாத்துருக்கேன். அதான் இரு கோடுகள் லாஜிக்.

படத்தைப் பத்தி சொல்லனும்னா, ஒரு புது முயற்சி, அப்படிங்கற ஒரு ப்ளஸ் பாயின்ட்ட தவிர, வேற ஒண்ணும் சொல்லிக்கறா மாதிரி இல்ல. படம் ஆரம்பிக்கும்போதே, வீரா மாட்டிகிட்டு, வாக்குமூலம் தரா மாதிரிஇருக்கர்தால, அதான் மாட்டிகிட்டாரே, எப்படி மாட்டிகிட்டாருன்னு பார்க்கலாம்னு புஸ் ஆயிருச்சு. அப்படி காமிக்கப் பட்ட விஷயமும் ஒண்ணும் சுவாரசியமா இல்லை. ரொம்ப predictable. படத்துல நல்ல விஷயங்கள்னு பார்த்தா, டெக்னிக்கலா நல்லா இருந்துது. இசை இல்லாத மாட்டேர் சொல்லலைன்னா தெரிஞ்சிருக்காது. மீனாட்சி அம்மாவா வந்த ஸ்வப்னா ஆபிரகாமின் நடிப்பு கொஞ்சம் நல்லா இருந்துச்சு. முடிவா என்ன சொல்ல விரும்பறேன்னா, சாரி கவுதம் சார். ஏமாத்திட்டீங்க. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.


பி.கு. ஆது என்ன edge of the seatனு சொல்லிருக்கேன்னா, நிறைய பேரு படம் 
எப்ப முடியும், கிளம்பலாம்னு edge of the seatla ரெடியா இருந்தாங்க. அதான்

Wednesday, January 26, 2011

மற்றும் பல (26/01/2011)

பொங்கலுக்கு வந்த படங்கள்ல, ஆடுகளமும் காவலனும் பிடிச்சிருந்துது. சிறுத்தைல காமெடி நல்லா இருந்துச்சு. ஆனா tiring. ஒரு கட்டத்துக்கு மேல அந்த சில்லறைத்தனங்களை பொறுத்துக்க முடியலை. காவலன், விஜயோட நடிப்புக்காகவே ரெண்டாம் முறை பார்த்தேன். இதுவரைக்கும் எந்த விஜய் படத்தையும் ரெண்டு முறை தியேட்டர்ல பார்த்த்ததில்லை. முக்கியமா அந்த பார்க் சீன், "எனக்காக கொஞ்சம் வேண்டிக்குங்கனு சொல்லும்போது, ஆல் தி பெஸ்ட் சொல்ல மாட்டீங்களா"ன்னு கேட்கும்போதும், நிஜமாவே நல்லா இருந்துச்சு. (காவலனின் கோ.பா.சே ரேஞ்சுக்கு மாறிட்டனோ??)
------------------------------------------------------------------------------------------------------------------
யுத்தம் செய் படத்துல இருக்கற அந்த ஒரே ஒரு பாடலை ஒளிபரப்பும்போது பார்த்தேன். அமீர் செம்மையா ஆடிருக்காரு. இவருக்குள்ள இப்படியொரு டான்சாரானு ஆச்சரியமா இருந்துச்சு. அடுத்த ஹிட்டு பாட்டு ரெடி. செவ்வாய் கிரக புகழ் சாரு அவர்கள், மொத்தம் அஞ்சு செகண்ட் வராரு. அவரோட விரல் நல்லா டான்ஸ் ஆடிருக்கு.
------------------------------------------------------------------------------------------------------------------
 ரொம்ப கஷ்டப்பட்டு, நேரம் ஒதுக்கி, ஒரு வழியா, கடைசி நாள், புத்தக கண்காட்சிக்கு போயிட்டு வந்தேன். என்னோட ஒரே நோக்கம், சுஜாதாவோட எல்லா புத்தகங்களையும் கொஞ்சம் கொஞ்சமா வாங்கணும்ங்கறது. இந்த முறை குறு நாவல்கள் இரண்டு, மூணாம் தொகுதிகள், எப்போதும் பெண், ரத்தம் ஒரே நிறம், (என் தொலஞ்சு போன) கனவுத் தொழிற்சாலை மற்றும் திரைக்கதை எழுதுவது எப்படி புத்தகங்களை வாங்கினேன். நம்ம கேபிளாரோட சினிமா வியாபாரம், ரொம்ப நேரம் தேடிகிட்டு இருந்தேன். நமக்கு தான் பார்வை கீழயே போகாதே ;). அந்த புத்தகம், கீழ் வரிசைல, கடைசில அடுக்கிருந்தாங்க. வாங்கினேன். என் அண்ணன் சுவாரசியாம படிச்சிகிட்டு இருக்கான்.
------------------------------------------------------------------------------------------------------------------
சில சினிமா சம்மந்தப்பட்ட ஆட்களை பேட்டிக்காக சந்திச்சேன்... அங்க கிடைச்ச tidbits
  • பாரதிராஜா அடுத்து, தென்கிழக்கு சீமையிலே ஒரு அப்பனும் ஆத்தாளும், அப்படின்னு ஒரு படம் எடுக்க போறாராம். அவருடைய கனவு படம், குற்ற பரம்பரையை கண்டிப்பா எடுப்பேன்னும் சொன்னார்
  • காவலன் படத்தோட இன்னொரு கதாநாயகி மித்ரா குரியன், நல்லாவே தமிழ் பேசறாங்க. ரொம்ப அப்பாவியா, வெள்ளந்தியா இருக்காங்க. இன்னும் எவ்வளவு நாளைக்குன்னு பார்க்கலாம்.
  • நடிகை ராதாவோட மகள் கிருத்திகா, 12ஆம் வகுப்பாம். பார்த்தா அப்படி தெரியலை. 
  • 3 இடியட்ஸ் பத்தின கேள்விகளுக்கு, டைரக்டர் ஷங்கர், ரொம்ப மழுப்பாலனா பதில்களே தந்தார். என்ன நடக்குதுன்னு புரியலை.
  • வைரமுத்துவோட வீடு, அடேங்கப்பானு இருக்கு. விவரிக்க வார்த்தையே இல்லை. ரொம்ப நல்லா பேசினார்.
  • பிரபல புகைப்படக் கலைஞர் ஜி வெங்கட்ராமன், காலேண்டர்னு ஒண்ணு போட்டுருக்காரு. நடிகர், நடிகைகள, அந்தக் கால வண்டிகளோட சேர்த்து போட்டோ எடுத்துருக்கார். இவ்வளவு கவனிச்சஅவங்க, காலெண்டர்ல வெறும் தேதிகள் மட்டும்தான் இருக்குனு கவனிக்காம விட்டுட்டாங்க. நாட்கள் இல்லவே இல்லை. அப்பறம் என்ன ______கு இதை காலேண்டர்னு சொல்றாங்க???
 ------------------------------------------------------------------------------------------------------------------
ஐபிஎல்  ஏலம் ரொம்ப சுவாரசியமா இருந்துச்சு. ஏலம் விட்ட ரிசர்ட் ஹாட்லி பிரமாதாமா கொண்டு போனாரு. பார்க்கும்போது இருந்த ஒரே ஒரு வயத்தெரிச்சல், இந்த காசெல்லாம் எதாவது நல்ல காரியத்துக்கு பயன்படுத்தாம, இப்படி கேவலமா செலவழிக்கராங்களேன்னு தான். ஒரு பக்கம் இந்திய ஏழை நாடுன்னு வேற காமெடி பண்ணிக்கிட்டு இருக்காங்க. எங்கடா வெச்சிருக்கீங்க எல்லா காசையும்??
------------------------------------------------------------------------------------------------------------------
 இந்த முறையும் ஆஸ்கர் பந்தயத்துல, நோலனை ஒத்துக்கிட்டாங்க. சிறந்த படத்துக்கான ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப் பட்டாலும், சிறந்த இயக்குனர்னு, நோலன் ப.படலை. என்ன டகால்டி நடக்குதுன்னு புரியலை. அட்லீஸ்ட் நோலனுக்கு, திரைக்கதைக்கும், படத்துக்குமான அவார்டாவது கிடைக்கணும். ஜெய் ஜக்கம்மா.
------------------------------------------------------------------------------------------------------------------
நண்பன் ஒருத்தன் ரொம்ப சின்சியரா காதலிச்சிகிட்டு இருந்தான். ரெண்டு பேருமே பயங்கர அன்யோன்யமா இருந்தாங்க. ரெகுலரா முகபுத்தகத்துல, நிறைய புகைப்படங்கள், வீடியோக்கள்னு போய்கிட்டு இருந்துச்சு. யார் கண்ணு பட்டதோ தெரியலை, இப்போ பிரிஞ்சிட்டாங்க. அதுல ரொம்பவே மனம் நொந்து போன நண்பன், அந்த பெண்ணை திட்டி நிறைய ஸ்டேட்டஸ் அப்டேட் பண்ணிக்கிட்டு இருக்கான். இதை பார்த்த அப்பறம், நான் அடிக்கடி பாக்கற ஒரு பிரபல sms தான் நினைவுக்கு வந்துச்சு


காதலில் தோற்ற ஆணின் மனதின் புண்பட்ட வார்த்தைகள்
அவ ஒரு தேவ____ மச்சி....

நான் இப்போதைக்கு அப்பீட்டு...
     

Monday, January 17, 2011

ஆடுகளம்

வந்த பொங்கல் படங்களில் odd one out. முழுக்க கமெர்ஷியல் படம்னும் சொல்ல முடியலை. அவார்டு படம்னும் சொல்ல முடியலை. நல்லா இருந்துச்சா இல்லையான்னு கேட்டா, கண்டிப்பா நல்லா இருந்துச்சு. ரொம்பவே தரமான படம். ஆனா, படம் பார்த்து முடிச்ச அப்பறம் ஏதோ ஒண்ணு நெருடுது. என்னான்னு சொல்லத் தெரியலை. திரைக்கு முன்னால, பின்னால, எல்லா விஷயமுமே ரொம்ப நல்லா இருக்கு. ஜெயபாலன், தனுஷ், கிஷோர், தப்சி எல்லாருமே சிறப்பா நடிச்சிருக்காங்க. ராதாரவி + சமுத்திரக்கனியோட டப்பிங் அருமையா இருக்கு. புதுசான ஒரு களத்தை காமிச்சு, நம்மை அதுல ஒன்ற வெச்சதுலையே டைரக்டர் பாதி ஜெயிச்சுட்டார். செவல் சண்டைகள் கிராபிக்ஸ் பல இடங்கள்ள கண்டுபிடிக்க முடியலை. நிறைய விஷயங்களை ரொம்ப டீடெய்லா காமிச்சது, டைரக்டரோட ஸின்சியாரிட்டிய காமிக்குது. ஆனாலும், முதல் பாதியோட momentum, ரெண்டாம் பாதில குறைஞ்சிடுது.


ஹீரோவோட அம்மா இறந்ததால மட்டுமே ஹீரோயின் காதலிக்கறாங்கன்னு நம்ப முடியலை. பேட்டைக்கரரோட கதாபாத்திரம், படத்தோட ஆரம்பத்துல ரொம்ப பக்குவமா நடந்துக்கராமாதிரி காமிச்சிட்டு, பிற்பாதில, பொறாமையோட திரியாருன்னு காமிச்சது, அப்படி இருந்தவரே பொறாமைல இப்படி ஆகிட்டாருன்னு உணர்த்தவானு தெரியலை. ரொம்பவே இயல்பான வசனங்கள், காட்சியமைப்பு, ரொம்ப நாள் கழிச்சு ஒரு புத்திசாலி ஹீரோயின் கதாபாத்திரம்னு படத்துல நிறைய ப்ளஸ்தான். இருந்தாலும், முதல்ல சொன்னாமாதிரி, ஏதோ ஒண்ணு இடிக்குது. கண்டிப்பா பாருங்க. நல்ல சினிமா அனுபவமா இருக்கும். ஒரு சில அவார்டு வாங்கினாலும் ஆச்சரியப்படுறதுக்கில்லை.
வெற்றிமாறன் நிறைய நம்பிக்கை கொடுக்கறாரு. பார்க்கலாம்.

p.s.ஹீரோ ஹீரோயின் சேர்ந்திட்டாலும், இது Happy Ending படமான்னு சொல்ல முடியலை..

p.s.2 தைரியமா filmography போட்ட நம்ம வெற்றிமாறனுக்கு ஒரு ஓ போடுங்க.

Sunday, January 16, 2011

காவலன்

இந்தப் பொங்கலின் இன்ப அதிர்ச்சி காவலன். நினைச்சே பார்க்கலை. இப்படி ஒரு விஜய் காணாம போயிட்டாருன்னு நினைச்சிகிட்டு இருந்தேன். ஆனா,  கலக்கிட்டாரு. இதைதானைய்யா பண்ணணும்னு இவ்வளவு நாள் சொல்லிகிட்டு இருந்தோம். இப்பவாச்சும் உரைச்சுதே. ரொம்ப சிம்பிளான, அழகான கதை. தன் ஹீரோயிஸத்தை சண்டைக் காட்சிகள்ள மட்டும் வெச்சிட்டு, மீதி நேரம் மொத்தமும், மனுஷன் நிஜமாவே நடிச்சிருக்காரு. அசின் ஒட்டலை. ரொம்ப மேலோட்டமா நடிச்சிருக்காங்க. வடிவேல் ஒரு சில இடங்கள்ல சிரிக்க வைக்கிறாரு. மத்தவங்க எல்லாம் கொடுத்த வேலையை செஞ்சிருக்காங்க. பாடல்கள் நல்லா இருக்கு. பிண்ணனி இசை பரவாயில்லை. மறுபடியும் விஜய் பற்றி சொல்லனும்னா, ரொம்பவே அடக்கி வாசிச்சிருக்காரு. அருமையான உடல் மொழி. தாய்மார்களுக்கு நிச்சயம் பிடிக்கும். விஜய் ரசிகர்களுக்கு பிடிக்குமான்னு சந்தேகமா இருக்கு. நான் இன்னொரு முறை பார்க்கலாமான்னு யோசிச்சிகிட்டு இருக்கேன். வித்தியாசமான கிளைமாக்ஸ். கண்டிப்பா குடும்பத்தோட பாருங்க..
Simply superb feel good movie...

p.s.1 - அபிராமி தியேட்டர்ல கடைசி வரிசைல உட்கார்ந்து பார்த்தேன். பாட்டெல்லாம் sound pan ஒழுங்கா இல்லாம, sync ஆகாம, ரொம்பவே படுத்திருச்சு. நல்ல பாடல்கள் எல்லாம் கேட்க மோசமா இருந்துச்சு... disappointing... யாராச்சும் அவங்ககிட்ட சொல்லுங்கப்பா...

Saturday, January 15, 2011

சிறுத்தை

பெருசா சொல்ல ஒண்ணும் இல்லை. ஒரு டபுள் ஆக்‌ஷன் மசாலா படத்துல என்னவெல்லாம் இருக்கும்னு நினைக்கறீங்களோ, என்னவெல்லாம் நடக்கும்னு நினைக்கறீங்களோ, அதெல்லாம் அட்சரம் பிசகாம நடக்குது. போக்கிரி ஹீரோ, அவனோட அல்லக்கை காமெடியன், லூசு ஹீரோயின், அவளோட தாராள கவர்ச்சி, இன்டெர்வல் ட்விஸ்டு, குழந்தை செண்டிமெண்டு, வில்லன் வீட்ல ஐடம் பாட்டு, கிளைமாக்ஸ்க்கு முன்னாடி வர குத்து பாட்டுனு இப்படி நிறைய. என்னதான் தமிழுக்கு ஏத்தா மாதிரி மாத்திருக்கோம்னு வழக்கம்போல சொல்லிகிட்டாலும்,பலத்த தெலுங்கு வாடை படம் முழுக்க இருக்கு. இந்த மாதிரி படமெல்லாம் இன்னும் எடுக்கறாங்களான்னு அதிசயமா கூட இருந்துச்சு. கார்த்தியின் நல்ல நடிப்பு, சந்தானத்தின் சூப்பர் காமெடி மட்டுமே படத்துல எனக்கு புடிச்ச விஷயம். கூட பார்த்த என் நண்பன், B, C சென்டர்ஸ்ல ஓடிரும்னு சொன்னான். அவங்க கூட இப்பெல்லாம் இந்த மாதிரி படம் பார்க்கறாங்காளான்னு தெரியலை. உங்களுக்கு மசாலா படங்கள் பிடிக்கும்னா, கண்டிப்பா பாருங்க, படம் போர் அடிக்கலை. ஆனா பார்த்த திருப்தி எனக்கில்லை. முதலுக்கு மோசமில்லாம ஓடிரும்னு நினைக்கறேன்.ரொம்ப வெட்டியா இருந்தா முயற்சி பண்ணுங்க...

p.s. படத்தை விஜய் டிவி வாங்கிட்டாங்க

p.s.2 - ரிப்பீட்டு - சந்தானம் காமெடி சூப்பரோ சூப்பர்.

Thursday, December 30, 2010

மற்றும் பல (30/12/2010)

கடைசி ரெண்டு மூணு வாரத்துல, நிறைய சினிமா ஆட்களைப் பார்த்துட்டேன். கிடைக்கற சாக்குல ஃபோட்டோவும் எடுத்து, சும்மா ஸீனுக்கு ஃபேஸ்புக்கல போடறேன். சும்மா சொல்லக்கூடாது, நல்ல வரவேற்பு...
 ------------------------------------------------------------------------------------------------------------------
மன்மதன் அம்பின் சர்ச்சைக்குரிய பாடலை நீக்க மாட்டேன்னு அறிவிச்ச அன்னைக்கு சாயங்காலமே நீக்கப்படும்னு அறிவிச்சது செம்ம காமெடி. கமலை கண்மூடித்தனமாக ஆதரிக்கும் ரசிகர்களும், அடுத்த எலெக்‌ஷன்ல திமுகவுக்கு ஓட்டு போடற ஆட்களும் ஒரே மாதிரிதான். இவங்க ரெண்டு பேருக்குமே என்ன சொன்னாலும் புரியாது, உரைக்காது. அதனால, இப்படிப்பட்ட ஆட்களோட விவாதத்துல இறங்காதீங்க.
------------------------------------------------------------------------------------------------------------------
 இப்பவே சிறந்த படத்துக்கான ஆஸ்கார் எந்தப் படத்துக்குப் போகும்னு பேச ஆரம்பிச்சுட்டாங்க. சமீபத்துல வந்த ப்ளாக் ஸ்வான் அப்படிங்கற படத்துக்கும் வாய்ப்பு இருக்கறதா பேசிக்கறாங்க. எனக்கென்னமோ இன்செப்ஷன் படத்துக்கு கொடுக்கலாம்னு தோணுது. ஏற்கனவே இருக்கறத வெச்சி ஒண்ணும் பண்ணாம, புதுசா ஒரு விஷயத்தை உருவாக்கி, அதை சிக்கலாக்கி, மக்களுக்கு புரியறாமாதிரி தந்து, அவங்களை யோசிக்கவும் வெச்ச படம் இது. வேற என்ன தகுதி எதிர்பார்க்கறாங்கன்னு தெரியலை. ஆஸ்கார் கமிட்டிக்கும், இயக்குனர் நோலனுக்கும் ஆகாதுன்னு வேற பேசிக்கறாங்க. ம்ம்ம், பொறுத்திருந்து பார்ப்போம்.
------------------------------------------------------------------------------------------------------------------
இயக்குனர் சங்க விழா ஒண்ணு வெச்சாங்க. மொக்கையா டான்ஸ், பாட்டுனு போய்கிட்டு இருந்த விழாவுல, அப்பப்போ யாராவது வந்து கலகலப்பாக்குனாங்க. ஆனா, ராஜாவும், பாராதிராஜாவும் பேசினது, சகிக்கலை. ராஜா இன்னும் ஒரு குழந்தை மாதிரியே சண்டை போடுறத பார்க்கும்போது மகேந்திரன் சார் சொன்னது தான் ஞாபகம் வருது. பாரதிராஜாவும் சளைக்காம சண்டை போட்டாரு. ரெண்டு பெரிய மனுஷங்க இப்படி பண்ணது, நல்லாவே இல்லை. அதே நேரத்துல, யுவன், வெங்கட் பிரபு, லிங்குசாமி, விஷ்ணுவர்த்தன் மேடைல ஜாலியா பேசிகிட்டதைப் பார்க்க நல்லா இருந்த்துச்சு. Little Girls are wiser than men அப்படிங்கற கதையும் ஞாபகம் வந்துது. கடைசி வரைக்கும் ரஜினி இண்டர்வியூவை போடாம ஏமாத்திட்டாங்க. :(
------------------------------------------------------------------------------------------------------------------
புதுசா ஆரம்பிச்சிருக்கற தேவியின் டால்பி 3டி, டிக்கெட் காசு போக 30ஓவாயும் கண்ணாடிக்கு கொடுக்கணுமாம். அங்க எந்த 3டி படமும் பார்க்க வேணாம்னு இருக்கேன்.
------------------------------------------------------------------------------------------------------------------
டிஸ்னியின் Tangled படம், இந்தியாவுல எப்போ ரிலீஸ் ஆகும்னு யாராவது கேட்டு சொல்லுங்க.
------------------------------------------------------------------------------------------------------------------
சினிமா மாதிரியே, சீரியலும் எடுத்தா நல்லா இருக்கும்னு பல காலமா சொல்லிகிட்டு இருக்கேன். அதுவும் பிலிம்ல எடுத்து, அதே தரத்துல கொடுத்தா கண்டிப்பா வரவேற்பு இருக்கும்னு நினைச்சேன். நான் நினைச்சதை, இயக்குனர் கவுதம் மேனன் பண்ணப்போறாரு. சமீபத்துல கொடுத்த ஒரு பேட்டிலதான் இத சொன்னாரு. அவருடைய ஃபோட்டான் கதாஸ் நிறுவனமே தயாரிக்கற இந்த டி வி சீரிஸ், ஏ ஆர் ரகுமானின் இசைல இருக்கப்போகுது. இன்னும் எந்த சேனல்னு முடிவு பண்ணலியாம். CSI, Friends ரேஞ்சுல, தமிழ்ல ஒரு சீரியல்னு நினைக்கவே நல்லா இருக்கு.
------------------------------------------------------------------------------------------------------------------
நண்பர்கள் சேர்ந்து  http://sa-pa-sa.blogspot.com/ அப்படின்னு, ஒரு இசை சம்பந்தப்பட்ட blog ஆரம்பிச்சிருக்கோம். படிச்சுப் பாருங்க..

Wednesday, December 29, 2010

நாலு படம் - நாலு பத்தி

இந்த மாதம் பார்த்த நான்கு படங்களைப் பற்றிய என் எண்ணங்கள்...

ஈசன்
எதிர்பார்ப்பு இல்லாமல் பார்த்திருந்தால் நன்றாக இருந்திருக்குமோ என்று பார்த்த பிறகு நினைத்தேன். சுப்ரமணியபுரம் பார்க்கும்போதும், கிளைமாக்ஸ் வரை, என்ன ஒரே வெட்டு குத்து, என சலித்துக்கொண்டேன். கிளைமாக்ஸ் உண்மையாகவே அதிர்ச்சியடைய வைத்தது. இந்தப் படத்திலும் அப்படி எதாவது இருக்குமென, ஐந்து வயது குழந்தைகூட யூகிக்க்கூடிய வகையில் அமைந்திருந்த கதையை, பார்த்துக் காத்திருந்தேன். கடைசி வரை ஒன்றும் வரவில்லை. பழிவாங்கும் ஆள் மட்டும் புதுசே தவிர, காரணங்கள் எல்லாம் ஒன்று தான். ஒரு சில வசனங்களைத் தவிர்த்துப் பார்த்தால், (எனக்கு) ஏமாற்றமே.

Easy A
தன இமேஜை காப்பாற்றிக்கொள்ள, ஹீரோயினி, தான் ஒருவனோடு டேட்டிங் போனதாக தன நண்பியிடம் சொல்ல, அதை ஒட்டுக் கேட்கும் இன்னொரு பெண், பள்ளி முழுவதும் அதைப் பற்றி பரப்ப, பிறகு தனது gay நண்பனின் இமேஜைக் காப்பாற்ற, ஒரு பார்டியில், மூடிய கதவிற்கு அந்தப்பக்கம், அவனோட செக்ஸ் வைத்துக்கொளவது போல் பாவனை செய்ய (பாய்ஸ்), இமேஜைக் காப்பாற்றிக் கொள்ள நினைக்கும் அத்தனை பையன்களும், இவளுடன் செக்ஸ் வைத்துக்கொண்டதாய், சிலர் இவளின் ஒப்புதலுடனும், சிலர் பொய்யும் சொல்ல ஆரம்பிக்க, இவளின் இமேஜ் என்னவாகிறது என்பதை, நிறைய நகைச்சுவை, கொஞ்சம் செண்டிமெண்ட் + கொஞ்சம் ரொமான்ஸ் கலந்து சொல்லியிருக்கிறார்கள். ஹீரோயினி எம்மா ஸ்டோனின் தெளிவான நடிப்பு, படத்தைக் காப்பாற்றுகிறது. நல்ல பொழுதுபோக்கு.

The Social Network
இந்தப் படம், பேஸ்புக்கை கண்டுபிடித்த மார்க் ஸுக்கர்பெர்கின் கதை என சொல்லப்படுகிறது. ஸுக்கர்பெர்கின் ஒன்றிரண்டு பேட்டிகளைப் பார்த்த பிறகு, இந்தப் படத்தைப் பார்க்கும் ஆவல் அதிகமானது. ஆரம்பம் முதல், முடிவு வரை, படம் எந்த விதத் தோய்வும் இன்றிச் செல்கிறது. பைட் கிளப் இயக்குனர் ஃபிஞ்சரின் மேல் வைத்திருந்த நம்பிக்கை வீணாகவில்லை. நடித்த அனைவருமே மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்கள். முக்கியமாய் ஹீரோ ஜெஸ்ஸி ஐஸன்பெர்க், கிட்டத்தட்ட அப்படியே ஸுக்கர்பெர்கின் உடல் மொழியை வெளிப்படுத்தியிருக்கிறார். ஜஸ்டின் டிம்பர்லேக் மற்றும் கார்பீல்டும் நன்றாகவே நடித்திருந்தார்கள். அருமையான திரைக்கதை, வசனங்கள். (ஸப்டைடில்ஸாய நமஹ:) நல்ல திரைப்படங்களைப் பார்க்க விரும்பும் அனைவரும் பார்க்க வேண்டிய படம்.

மன்மதன் சொம்பு
உலகநாயகன், கலைஞானியின் படைப்பை விமர்சனம் செய்யும் அளவு எனக்குத் தகுதியிருக்கிறதா எனத்தெரியவில்லை. அதனால், எதுவும் சொல்வதற்கில்லை..
என்ன சார், ஃபர்ஸ்ட் காபி பார்த்தே உஷார் ஆகிட்டீங்க போல??

Monday, December 20, 2010

பட்டாம்பூச்சித் தருணங்கள்..

தலைப்பைப் பார்த்தவுடனே, ஏதோ ரொமாண்டிக்கா சொல்ல போறேன்னு தப்பு கணக்கு போடாதீங்க. butterfly effect பத்தி உங்கள்ல நிறைய பேருக்கு தெரிஞ்சிருக்கும். தெரியாதவங்களுக்கு, சுருக்கமா சொல்லனும்னா, உங்களோட சின்ன சின்ன செயல்கள், வாழ்க்கைல பெரிய அளவு மாற்றங்கள ஏற்படுத்தலாம். இதான் butterfly effect. அதுக்கு உதாரணம் சொல்லனும்னா சொல்லிகிட்டே இருக்கலாம். இந்த மொத்த பதிவையும் படிங்க. உங்களுக்கே எளிமையா புரியும்.

நான் முதல்வரானால், நான் டாக்டரானால், நான் நானானால்னு பள்ளிகூடத்துல படிக்கும்போது நிறைய கட்டுரைகள் எழுதிருப்போம். அந்த விக்கெட் மட்டும் எடுத்திருந்தா கண்டிப்பா வின் பண்ணிருக்கலாம்னு நிறைய போட்டிகளைப் பார்த்து சொல்லிருப்போம். அப்படி ஒரு சில "லாம்" தான் நான் சொல்லப் போறதும். நம் வாழ்க்கையோட ஒரு சில நேரங்களை நினைச்சு பார்க்கும்போது, "ச்சே, இப்படி நடந்திருந்தா நம்ம வாழ்க்கையே மாறியிருக்குமே" அப்படின்னு நினைப்போம்  இல்லையா. அப்படிப்பட்ட தருணங்களைப் பத்திதான் நான் இப்போ சொல்ல போறேன்.

1. என்னை எல்.கே.ஜி லேர்ந்து யூ.கே.ஜி, வேற பள்ளிக்கு மாத்தினாங்க. ஆனா, அந்த புது பள்ளியில, மறுபடியும் எல்.கே.ஜி படிச்சாதான் சேர்த்துப்போம்னு சொல்லிட்டாங்க. அதனால, மறுபடியும் எல்.கே.ஜி படிச்சேன். ஒரு வேளை அன்னைக்கு நான் அப்படி மறுபடியும் எல்.கே.ஜி படிக்காம இருந்திருந்தா, இன்னைக்கு நிறைய மாறியிருக்கலாம். நினைச்சு பாருங்க. எவ்வளவு பேரை சந்திச்சிருக்க மாட்டேன் / சந்திச்சிருப்பேன். என் வாழ்க்கைல எவ்வளவு மாறியிருக்கும்னு.... நினைச்சே பார்க்க முடியலை.. அதனால நினைக்கலை...

2. தொடர்ந்து புது பள்ளியில படிச்சிட்டு வந்தேன். திடீர்னு என் அப்பா அம்மாவுக்கு, பையன் ஒரு வருஷம் பின் தங்கியிருக்கானே, ஏன் டபுள் ப்ரோமோஷன் ட்ரை பண்ணக்கூடாதுன்னு, நாலாவது முடிஞ்சவுடனே, ஆறாவது நுழைவுத்தேர்வு எழுத வெச்சாங்க. விதி செய்த சதி பாருங்க, நான் பாஸ் பண்ணிட்டாலும், எனக்கு கொடுக்கப்பட்ட பிரான்ச், ஆள் நடமாட்டமே இல்லாத இடத்துல இருந்திச்சு. பையனை அவ்வளவு தூரம் அனுப்பி கஷ்டப்படுத்த வேணாம்னு, தொடர்ந்து அஞ்சாவதே படிக்க வெச்சாங்க. ஒரு வேளை, நான் ஆறாவது தாவியிருந்தா?? இந்த நாட்டோட தலையெழுத்தே மாறியிருக்கும்.

3. அடுத்து, ஆறாவது படிச்சு முடிச்ச அப்பறம், வீட்ல கொஞ்சம் நிதி நெருக்கடி. அதனால, மெட்ரிக் பள்ளியிலிருந்து, நானே கேட்டு, என் அண்ணன் படிச்சிகிட்டு இருந்த, தி கிரேட் இந்து மேனிலைப் பள்ளிக்கு மாறினேன். ஒரு வேளை, எங்க அப்பா அம்மா நான் சொன்னத கேட்காம மெட்ரிக் பள்ளியிலே படிக்க வெச்சிருந்தா??

4. அடுத்து, பள்ளி முடிஞ்சு, காலேஜ் சேர முயற்சி பண்ணிக்கிட்டு இருந்தேன். லயோலா கல்லூரில, விஸ்.காம் நுழைவுத் தேர்வு எழுதினேன். அங்க முக்கால்வாசி சீட் ரெகமண்டேஷன். எங்க அப்பாவும் கஷ்டப்பட்டு ஒருத்தரை புடிச்சாரு. ஆனா அவரு காலை வாரிட்டாறு. அதனால, கிடைக்கலை. அண்ணா யூனிவர்சிடியில எழுதினேன். அங்கயும் கிடைக்கலை. வேற வழியில்லாம, குரு நானக் கல்லூரியில சேர்ந்தேன். ஒரு வேளை எனக்கு ரெகமண்டேஷன் ஒழுங்கா கிடைச்சு, லயோலாவுல சேர்ந்திருந்தா, இந்த நேரத்துல தமிழ் 3 இடியட்ஸ் படத்துக்கு ஒரு புது ஹீரோ கிடைச்சிருப்பாறு.

5. பி.எஸ்.ஸி முடிச்சு, எங்கேயாவது வேலைக்கு போகலாம்னு நினைச்சப்போ, அம்மா, எம்.எஸ்.ஸி அண்ணா யூனிவர்சிடீல முயற்சி பண்ணு, கிடைக்குதான்னு பார்க்கலாம்னு சொன்னாங்க. சத்தியமா கிடைக்காது, அவங்க ஆசைக்கு சும்மா முயற்சி பண்ணலாம்னு பார்த்தா, கிடைச்சிருச்சு. இதனால இப்போ பி பி சி வேலை. என்னான்னு சொல்ல. கிடைக்காம இருந்திருந்தா, என் வாழ்க்கைல பல நல்ல, கேட்ட விஷயங்கள் நடந்திருக்காது. எதாவது ஒரு மொக்கை டைரக்டருக்கு, அசிஸ்டண்டா இருந்திருப்பேன். இப்போ இங்க இந்த பதிவெல்லாம் எழுதிகிட்டு இருக்க மாட்டேன்.

மேல நான் சொன்ன எல்லா தருணங்களுமே, என்னோட கட்டுபாட்ல இருந்த தருணங்கள். நான் நினைச்சிருந்தா வேற மாதிரி முடிவு எடுத்திருக்கலாம். ஆனா அப்படி ஆகலை. நாம நினைக்கரது எங்க நடக்குது. ம்ம்ம்... கீழ இருக்கற பாட்டை கேளுங்க. அதுக்கும் இந்த பதிவுக்கும் என்ன சம்மந்தம்னு கேட்காதீங்க. இதுவும் கடந்து போகும். இதை ஒரு தொடர் பதிவா மாத்தலாம்னு பாக்கறேன். என்னோட followers எல்லாரையும் இந்த தொடர் பதிவுக்கு அழிக்கறேன். முக்கியமா லொள்ளு கார்த்தி, லான்ஸ் அருண், பிலாசபி, எஸ் கே இவங்கெல்லாம். கேபிள் சார், முடிஞ்சா நீங்களும் எழுதுங்க. மீதி எல்லாரும்தான். பதிவை போட்டுட்டு, கண்டிப்பா சொல்லுங்க. அதோட சேர்த்து, வேற யார் இந்த தலைப்புல எழுதனும்னு நினைச்சாலும், அவங்களும் எழுதுங்க..