Saturday, January 15, 2011

சிறுத்தை

பெருசா சொல்ல ஒண்ணும் இல்லை. ஒரு டபுள் ஆக்‌ஷன் மசாலா படத்துல என்னவெல்லாம் இருக்கும்னு நினைக்கறீங்களோ, என்னவெல்லாம் நடக்கும்னு நினைக்கறீங்களோ, அதெல்லாம் அட்சரம் பிசகாம நடக்குது. போக்கிரி ஹீரோ, அவனோட அல்லக்கை காமெடியன், லூசு ஹீரோயின், அவளோட தாராள கவர்ச்சி, இன்டெர்வல் ட்விஸ்டு, குழந்தை செண்டிமெண்டு, வில்லன் வீட்ல ஐடம் பாட்டு, கிளைமாக்ஸ்க்கு முன்னாடி வர குத்து பாட்டுனு இப்படி நிறைய. என்னதான் தமிழுக்கு ஏத்தா மாதிரி மாத்திருக்கோம்னு வழக்கம்போல சொல்லிகிட்டாலும்,பலத்த தெலுங்கு வாடை படம் முழுக்க இருக்கு. இந்த மாதிரி படமெல்லாம் இன்னும் எடுக்கறாங்களான்னு அதிசயமா கூட இருந்துச்சு. கார்த்தியின் நல்ல நடிப்பு, சந்தானத்தின் சூப்பர் காமெடி மட்டுமே படத்துல எனக்கு புடிச்ச விஷயம். கூட பார்த்த என் நண்பன், B, C சென்டர்ஸ்ல ஓடிரும்னு சொன்னான். அவங்க கூட இப்பெல்லாம் இந்த மாதிரி படம் பார்க்கறாங்காளான்னு தெரியலை. உங்களுக்கு மசாலா படங்கள் பிடிக்கும்னா, கண்டிப்பா பாருங்க, படம் போர் அடிக்கலை. ஆனா பார்த்த திருப்தி எனக்கில்லை. முதலுக்கு மோசமில்லாம ஓடிரும்னு நினைக்கறேன்.ரொம்ப வெட்டியா இருந்தா முயற்சி பண்ணுங்க...

p.s. படத்தை விஜய் டிவி வாங்கிட்டாங்க

p.s.2 - ரிப்பீட்டு - சந்தானம் காமெடி சூப்பரோ சூப்பர்.

4 comments:

Philosophy Prabhakaran said...

வள வலன்னு இழுக்காம சொல்ல வந்த மேட்டரை சுருக்குன்னு சொல்லிட்டீங்க... படம் இப்படித்தான் இருக்கும்னு எனக்கு முன்னாடியே தெரியும்...

கா.கி said...

@phil
வர வர எல்லாருக்கும் படிக்கற பொறுமையும், எனக்கு எழுதற பொறுமையும் கம்மி ஆகிட்டே வருதா, அதான்... நானும் டிரைலர் பார்த்தவுடனே முடிவு பண்ணிட்டேன்.. அதனால மொக்கை வாங்கல...

@மதி
நன்றி - இனிய பொங்கள் நல்வாழ்த்துக்கள் நண்பா :)

எஸ்.கே said...

இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்!

கா.கி said...

@எஸ்.கே
மிக்க நன்றி... உங்களுக்கும் என் இனிய பொங்கள் வாழ்த்துக்கள் :D