பிடித்த படங்கள்
- ஆயிரத்தில் ஒருவன்
நிறைய பேர் வறுத்தெடுத்தாலும், இந்தப் படம் நல்ல அனுபவம். ரசிகர்கள்னு பொதுவா சொல்ல முடியல, ஆனா படத்துக்கான மனநிலைய எனக்கு சரியா செட் பண்ணிச்சு... விமர்சனம் --> இங்க முதல் பத்தியில.
- கோவா
மறுபடியும், ஊர் ஆயிரம் சொன்னாலும், எனக்கும், என் நண்பர்களுக்கும் ரொம்ப பிடிச்ச படம். செம்ம கலாட்டா... விமர்சனம் --> இங்க
- விண்ணைதாண்டி வருவாயா
மூணு தடவை தியேட்டர்லையே பாத்தேன். இதுக்கு மேல எதாவது சொல்லணுமா?? சிம்பு பேர், கார்த்திக்னு இருந்தது முக்கியமான காரணம்...
- சிங்கம்
இந்த வருஷத்தோட சிறந்த மாஸ்னு சொல்லலாம். எந்திரனைவிட செம்ம மாஸ்.
- பாஸ் என்கிற பாஸ்கரன்
நோ நான்சென்ஸ் படம்னு சொல்லலாம். ரொம்ப light-hearted, feel good படம். விமர்சனம் -->இங்க ஆறாவது பத்தியில ரெண்டே லைன்..
- எந்திரன்
தலைவரோட மேஹ்........ ப்ளாக் ஷீப் சீனுக்காகவே ரெண்டு தடவை தியேட்டர்ல பார்த்தேன். இன்னொருமுறை பார்க்கலாமான்னு யோசிக்கறேன். ஷங்கர் என்கிற ஒற்றை ஆளோட சாதனை. மேக்கிங் பார்த்த அப்பறம், இன்னமும் பிடிச்சுது... விமர்சனம் --> இங்க
- இன்ஸெப்ஷன்
(இதை பத்தி நான் எழுத்திய சில உரைநடை விளக்கப் பதிவுகள்
இங்க --> ஒண்ணு - இன்னொன்னு - இன்ன்ன்னொன்னு - கடைசியா ஒண்ணு) - ஹாரி பாட்டர் 7
நான் பாட்டர் fan. அதை விட எம்மா வாட்ஸன் fan. இதுக்கு மேலையுமா காரணங்கள் தேவை?? - UnStoppable
படம் நல்லா விறு விறுனு இருக்குனு சொல்லுவாங்களே. அப்படி இருந்துச்சு... - டாய் ஸ்டோரி 3 - விமர்சனம் --> இங்க
- ஷட்டர் ஐலாண்ட்
- கராதே கிட்
- How to Train your Dragon
- Kick - Ass
- Easy A .. விமர்சனம் --> இங்க ரெண்டாவது பத்தி
- The Social Network.. விமர்சனம் --> இங்க மூணாவது பத்தி
- தமிழ் படம் - விமர்சனம் ---> இங்க மூணாவது பத்தியில.
- கச்சேரி ஆரம்பம் - விமர்சனம் --> இங்க
- பையா - விமர்சனம் --> இங்க
- ராவணன் - விமர்சனம் --> இங்க
- இனிது இனிது
ஒரிஜினல்ல இருந்த எளிமை, இதுல இல்லாதது பெரிய குறை. பெருசா ஒன்றமுடியலை. - நந்தலாலா
மிஷ்கினின் திமிருக்கும், கர்வத்துக்கும் கிடைச்ச சரியான் அடி. ரொம்ப ஸ்லோ.
நான் பெரிய அறிவாளி இல்லை. அதனால் கூட இந்தப் படம் பிடிக்காம இருந்திருக்கலாம்... - ரத்த சரித்திரம்
ரத்தம் மட்டும்தான் இருந்தது.. சரித்தரம் ஒண்ணுத்தையும் காணோம். - ஈசன் - விமர்சனம் --> இங்க முதல் பத்தியில
- Owl - Guardian - விமர்சனம் --> இங்க மூணாவது பத்தியில
- அவதார்
மொக்கை வியட்னாம் காலனி கதைய, ரீ மாடல் பண்ணி கொடுத்து ஊரை ஏமாத்திட்டாங்க். டெக்னிகலா நிஜமாவே மிரட்டலான படம். ஆனா கதை திரைக்கதையெல்லாம் அப்படியே ஒரு மொக்கை தமிழ் படம் மாதிரி இருந்த்து எனக்கு பெரிய disappointment. - மன்மதன் அம்பு - விமர்சனம் ----> இங்க கடைசி பத்தியில
கொஞ்சம் பெரிய லிஸ்டு. ஓவரா வர்ணிக்காம பெயர்களை மட்டும் எழுதறேன்...
- ஆரோமலே (கலெக்டர்ஸ் எடிஷன்ல இருக்கற ஸ்ரேயா கோஷல் வெர்ஷனும் சேர்த்து) - விண்ணைத்தாண்டி வருவாயா
- ஹே துஷ்யந்தா - அசல்
- இது வரை -கோவா
- என் காதல் சொல்ல - பையா
- தாக்குதே - பாணா காத்தாடி
- அடடா மழைடா - பையா
- அம்மா தல்லே - புலி (தெலுங்கு)
- பெஹெனே தே - ராவண் (இந்தி)
- கிளிமஞ்சாரோ - எந்திரன்
- ஊத்து தண்ணி - மகிழ்ச்சி
- உன்னை கண் தேடுதே - வ கு.க
- அய்யய்யோ நெஞ்சு - ஆடுகளம்
- இமைத்தூதனே - இளைஞன்
- நெஞ்சில் நெஞ்சில் - எங்கேயும் காதல்
- Love the Way you Lie - Eminem ft Rihaana - Recovery
- என் நெஞ்சில் - பாணா காத்தாடி
- ஏழேழு தலைமுறைக்கும் - கோவா
- சிரிக்கிறேன் - பலே பாண்டியா
- Dhochey, பவர் ஸ்டார் - புலி (தெலுங்கு)
- அரிமா அரிமா - எந்திரன் - அருமையான picturization.
- உச்சுக் கொட்ட - மகிழ்ச்சி
- உஸ்ஸுமலரசே - உத்தம்புத்திரன்
- காதல் வந்தாலே - சிங்கம்
- தகிடுதத்தோம் - மன்மதன் அம்பு
- தோழா வானம் - இளைஞன்
- நாங்கை - எங்கேயும் காதல்
என்னை பொறுத்த வரைக்கும், இந்த வருஷத்தோட
சிறந்த பாடல் கோவா படத்துல வர இது வரை,
சிறந்த படம் - விண்ணைத்தாண்டி வருவாயா...
சிறந்த இசையமைப்பாளர் - யுவன்
எல்லாருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் :)
4 comments:
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! வரும் வருடம் பல இனிய நிகழ்வுகளை அளிக்கட்டும்!
நன்றி :)
நல்ல தொகுப்பு கா.கி :) ‘நான் மகான் அல்ல’ உங்களுக்கு புடிக்கலயா???
@kanagu
அப்படி இல்ல. ஆனா, அவ்வளவா மனசுல நிக்கலை.. கண்டிப்பா மோசமான படம் இல்லை.. ஏதோ நினச்சுப்பார்க்கும்போது நினைவுக்கு வர அளவுக்கு இல்லை...
Post a Comment