Friday, October 31, 2008

தூக்க கலக்கம்

இப்ப டைம் 1.20... நான் இப்ப உக்காந்துகிட்டு என்னோட record எழுதிகிட்டு இருக்கேன்.. நான் PG படிக்கறது உங்கள்ள எவ்வளவு பேருக்கு தெரியும்னு எனக்கு தெரியாது.. ya, PG படிச்சிகிட்டு, கஷ்டப்பட்டு, ராவும் பகலுமா உக்காந்து, எழுதறேன் ..எனக்கே கஷ்டமா இருக்கு, இந்த லெவல் வந்த அப்பறம், practicala ஏதாவது வேலை குடுப்பாங்கன்னு பார்த்தா, எழுத சொல்லிட்டாங்க.. அதுவும் ரொம்ப stricta...இப்படி எழுதிகிட்டே இருக்கும்போது தான், நானே ஒரு QUOTE யோசிச்சேன்... அத உங்க எல்லார்கிட்டயும் சொல்லதான், இந்த அகால வேளைல, blogging... அது என்னான்னா...

" Students mature every year,
but teachers remain the same... wherever they go..."

தமிழ்ல, அவ்ளோ நல்ல வராது, இருந்தாலும்......

"மாணவர்கள் ஒவ்வொரு வருடமும் பக்குவமடைவார்கள்...
ஆசிரியர்கள், எங்கு சென்றாலும் மாறுவதில்லை..."

நல்லா கீதா?? இன்னிக்கு ஒளரினது போதும்னு நினைக்கறேன், டாட்டா....

Tuesday, October 28, 2008

ஏகன் - சுமார்

இப்பதான் "ஏகன்" படம் பாத்துட்டு வரேன். படத்தை பத்தி ரொம்ப இழுக்காம, சுருக்கமா சொல்றேன். படம் சுமாரா இருந்துச்சு. கதைய theatre இருட்டுல தேடிக்கிட்டே இருந்தேன், கிடைக்கல. அஜித் மட்டுமே படத்தை காப்பாத்தறாரு. நயன்தாரா literally stripped. வேற யாருக்கும் அவ்ளோ வேலை இல்ல. ரெண்டு பாட்டு நல்லா இருக்கு. ஒளிப்பதிவு சூப்பர். ஒரு முறை பார்க்கலாம். போர் அடிக்கல.
அவ்ளோதான்....

http://www.extramirchi.com/wp-content/uploads/2008/03/aegan_ajithkumar1.jpg
பயந்தவன் படத்துக்கு போகமாட்டான்....

Monday, October 27, 2008

பீட்டரும் நானும்...Part 2

இங்கிலிஷ் பேசறதுக்கு எவ்ளோ உரிமை இருக்கோ, அதே அளவு, பேசாம இருக்குறதுக்கும் உரிமை இருக்குன்னு நம்பர ஆள் நான். இங்கிலீஷ் பேசறதுல எனக்கு இருந்த பிரச்சனைய போன பதிவுல சொல்லியிருந்தேன். அதன் தொடர்ச்சி.

என்ன சோதனைனா, என்னோட இந்த semesterla "language lab" அப்படின்னு ஒரு practical பேப்பர் இருக்கு.. அதுக்கான தேர்வு மாதிரி சிலது நடக்கும், அதுல, group discussion, online test மற்றும் Presentation இருக்கு.. group discussion and online test முன்னாடியே முடிஞ்சிருச்சு.. மிச்சம் இருக்கறது Presentation மட்டுமே. நான் சொன்ன சோதனை இந்த இடத்துல தான். Presentation மொத்தமும் இங்கிலிஷ்லதான் இருக்கணும். எப்பவுமே தர்மதுக்குதான் சங்கடம் வரும், அதனாலதான் அதுக்கு தர்மசங்கடம்னு பேர் வெச்சிருக்காங்க.

எனக்கு குடுக்கப்பட்ட/எடுத்துக்கொண்ட topic, "Moral values in today's society". பத்து நிமிஷம் present பண்ண தோதான தலைப்புதான், இருந்தாலும் அந்த பத்து நிமிஷமும் பீட்டர்லதான்பேசனும்னா நமக்கு கொஞ்சம் ஒதைக்கும். இருந்தாலும், இரண்டாவது முறையா, விவேகானந்தரோட "face the brute" ஞாபகம் வந்து உதவிச்சு. So, ரமேஷ் அண்ணா உதவியோட, நானும் சில points சேர்த்து, ஒரு powerpoint Presentation பண்ணேன். என்னை பொருத்த வரை, முதல் Presentation அப்படிங்கற பார்வைல பார்க்கும்போது, நான் நல்லாவே பண்ணேன்னு தோணுது.

பீட்டர்ல எனக்கு பொதுவான பிரச்சனை(கள்) என்னனா, ஒரு மொழிய பேசனும்னா, அந்த மொழில சிந்திக்க ஆரம்பிக்கணும், ஆனா தமிழவிட வேற எந்த மொழிலயும் சிறப்பாக சிந்தக்கமுடியாதுங்கர என்னோட கருத்துனால, என்னால இங்கிலிஷ்ல சிந்திச்சு பேச முடியாது. நான் எல்லார்கிட்டயும் சொல்றது என்னன்னா, "i dont speak english, i just translate". அதுவும் ஒரு formal speakingnu வரும்போது, ரொம்பவே தடுமாறிடுவேன். Informal speakingla பொளந்து கட்டுவனான்னு கேக்காதீங்க, அது ஓரளவு சுமாராவே வரும்.

இங்கிலிஷ் grammar சுமாரா தெரியும்ங்கரதனால, பேசும்போது, வார்த்தைல தப்பு வந்துரக்கூடாதுன்னு, ரொம்பவே ஜாக்கிரதையா நிதானமா பேசுவேன். அதுவே தடுமாற்றத்துக்கு எடுத்துட்டு போய்டும். சீ சீ இந்த பழம் புளிக்கும் போல இல்லாம, இயல்பாவே எனக்கு இங்கிலிஷ் புடிக்காம போய்டுச்சு, இது போல சோதனைகளால இன்னும் புடிக்கல. ஆனா இத மாதிரி பிரச்சனைகளால, தனியா பாத்ரூம் போய் அழுவற பார்ட்டி நான் இல்ல. நமக்கு எல்லாமே "face the brute தான்".

எதிர்காலத்துல, கண்டிப்பா இவ்ளோ தடங்கல் இல்லாம, இங்கிலிஷ் பேசுவேன்னு நம்பிக்கை இருக்கு. சொல்லப்போனா, இன்னொரு Presentation வெச்சா கூட, அதுல முன்னைவிட நல்லா பண்ணுவேன்னு நினைக்கறேன். என்னுடைய இந்த Presentation முடிஞ்ச அப்பறம் வந்த feedbacks தெரியனும்னா கேளுங்க, தனியா மெயில் பண்றேன். இதுபோன்ற சமயங்கள்ல எனக்கு நானே சொல்லிகறது, "விட்ரா, அப்துல் கலாமே கடைசி பென்ச்லதான் உட்கார்ந்தாரு"!!!

பீட்டரும் நானும் முற்றும்....

http://content.pimp-my-profile.com/userpics/funny_pictures/random_sign.jpg
இதவிட மோசமாவா இருந்துரமுடியும்
(படங்கள் - போனபதிவும் இந்தபதிவும், ஜப்பான்லேர்ந்து)

Wednesday, October 22, 2008

பீட்டரும் நானும்...Part 1

பீட்டர் என் friend இல்ல. ஆங்கிலத்துல பேசறதுக்கு நான்(ங்க) பீட்டர்னு சொல்றது வழக்கம். நான் LKG படிச்ச காலத்துலேர்ந்தே இங்கிலீஷ் மீடியம். ஆறாவது வரை நான் படிச்சது, christian matriculation ஸ்கூல்ல, so அங்க, இங்கிலிஷ்ல பேசறது ஒரு வகைல கட்டாயம். ஆறாவது படிக்கும்போது பல வகைல கட்டாயம். இங்கிலிஷ்ல பேசலைனா கண்டிப்பாங்க. நான் நல்லாத்தான் பேசிகிட்டும் இருந்தேன். சில சமயங்கள்ல என் class நண்பர்களுக்கு நான்தான் Mediator. அவங்க தமிழ்ல சொல்ற விஷயத்த, டீச்சர் கிட்ட இங்கிலிஷ்ல சொல்லுவேன் (class லீடர்னா இந்த வேலையெல்லாம் செய்யணும்!!!)...

என் வீட்ல இருந்த financial பிரச்சனைகளால ஏழாவது படிக்க ஒரு ஸ்டேட் போர்டு ஸ்கூலுக்கு மாறினேன். The great HIndu Higher Secondary School, Triplicane, சென்னைதான் அந்த School. என் அண்ணாத்தையும் அந்த ஸ்கூல்லதான் படிச்சாரு. School மாறுன அப்பறம், இங்கிலிஷ்ல பேசறதுக்கான அவசியம் இல்லாம போச்சு. இருந்தாலும் இங்கிலிஷ்ல எழுதவேண்டிய கட்டாயம் இருக்கே, so என் எழுத்துக்கள்ள இங்கிலீஷ் உயிரோட இருந்தது. அதுக்கு அப்பறம் என் பள்ளிப் படிப்பு fulla அங்கதான். அதுக்கப்பறம் காலேஜ் போனேன்...

சில காலேஜ்ல பீட்டர்லதான் பேசனும்னு enforce பண்ணுவாங்கனு கேள்விபட்டிருக்கேன், so கொஞ்சம் பயத்தோட தான் காலேஜ் சேர்ந்தேன். அந்த bayam எதனாலன்னா, இங்கிலீஷ் பேசுற பழக்கத்த விட்டதனால, என்னுடைய பீட்டர் பேசும் திறன் ரொம்பக் கேவலமா இருந்துச்சு, அதுவுமில்லாமா என் இங்கிலீஷ் vocabularyla வார்த்தைகள் ரொம்பக் கம்மி, tats wy. ஆனா நான் பயந்த அளவுக்கு என் ஆங்கில அறிவுக்கு சோதனை வரல. பேசறதுக்கு வந்த ஒன்னு ரெண்டு சமயத்துலயும், சுமாரா சமாளிச்சிட்டேன். இது போல bayam இருந்தாலும், நான் எப்பவுமே இங்கிலீஷ் கத்துக்க பிரயத்தனப் பட்டதில்ல...

ஆங்கில படங்கள் அடிக்கடி பாத்துகிட்டேதான் இருந்தேன். so இங்கிலீஷ் எனக்கு எப்பவுமே புரியாம இருந்ததில்ல, அதுவுமில்லாமா, இங்கிலீஷ் grammarல எனக்கு தப்பு வராது.. அதனால எழுதவும் நல்லா வரும். இப்படியாக போய்கிட்டு இருந்த என் (பீட்டர்) வாழ்க்கைல ஒரு வாரம் முன்னாடி ஒரு சோதனை வந்தது.. அத அடுத்த partla blogaren...
to be continued....


என் இங்கிலீஷ் இவ்ளோ மோசம் இல்ல

Saturday, October 18, 2008

அடங்கொன்னியா.... tagged again & again & again


Tagged my blogger brother again (3rd time) ... this time another set of questions... dei thambi, pudhusa edhavadhu blogger tag panni, expand ur circle.. dnt tag the same person again and again....

RULE #1 People who have been tagged must write their answers on their blogs and replace any question that they dislike with a new question formulated by themselves.

RULE #2 Tag 6 (im tagging 2) people to do this quiz and those who are tagged cannot refuse. These people must state who they were tagged by and cannot tag the person whom they were tagged by continue this game by sending it to other people.

1. If your lover betrayed you, what’ll be your reaction?

first let me get one and then see who betrays.. ;)

2. If you can have a dream come true, what would it be?

tat i should become a good director/singer/actor tat too with some extra skin in my body...

3. Whose butt would you like to kick?

any senior politician's will do...

4. Why do you blog?

veru pani leka... vera velai illama....actually i need a place to pour my thoughts over... i think if anyone gets a good company to share their thoughts, they'l stop blogging...

5. Will you fall in love with your best friend?

may be...

6. Which is more blessed: Loving someone or being loved by someone.

Both, but the other way around

7. How long do you intend to wait for someone you love?

dunno

8. If the person you secretly like is attached, what will you do?

cant understand the question really...

9. If you could root for one social cause what would it be?

self-discipline...

10. What takes you down the fastest?

wat???

11. What resurrects you the fastest?

My will... i think its in my genes...

12. What’s your strength?

the way i speak?!?!?!?... (வாயுள்ள புள்ளை பொழைக்கும்)

13. What kind of person do you think the person who tagged you is?

already told.... nalla thambi....

14. Would you rather be single and rich or married and poor?

No idea

15. Whats the purpose of such Tags?

to know more blogs and bloggers

16. If you fall in love with two people simultaneously, who will you pick?

ha ha... good question, next question pls...

17. Would you give all in a relationship?

Not always....

18. Would you forgive and forget someone no matter how horrible a thing he has done?

ya, if he/she regrets...or i'l make them feel it...

19. Do you prefer being single or in a relationship?

no one can be single.....

20. Tag 2 people

My Junior Swathi

and

My Orkut Friend thiru.lancelot a.k.a Arun Kumar

Mr.சர்வேசன் tag பண்ணா அடிக்க வந்துருவாரு...


Thursday, October 9, 2008

பொம்மை கொலு


prelogue - "Ofcourse, கொலூல பொம்மைதான் வெப்பாங்க, நீ என்ன புதுசா சொல்லிட" அப்படின்னு நீங்க நெனைக்கபோறதா, நானே assume பண்ணிக்கிட்டு, அதுக்கு ஒரு reply குடுக்கறேன்... அதாவது நான் என்ன சொல்ல வரேன்னா, கல்யாணத்துக்கும் - பொம்மை கல்யாணத்துக்கும் எவ்ளோ வித்தியாசம் இருக்கோ, அதே மாதிரி தான், கொலு பொம்மைக்கும் - பொம்மை கொலுவுக்கும்.

எப்பவும் நவராத்ரி timela நெறைய "ஆத்துல" கொலு வெப்பாங்க... சரஸ்வதி பூஜை அன்னிக்கு booksa பூஜைல வெச்சு, விஜயதசமிக்கு எடுத்து படிப்பாங்க (கரெக்ட் தான??)... இது போல பண்டிகைகள் கொண்டாட நெஜமாவே நல்ல காரணங்கள் இருக்கு, இருந்தாலும், குடும்பத்துல இருக்குற எல்லாரையும் ஒண்ணா கூட்ட, இது போல பண்டிகைகள் ஹெல்ப் பண்றதா நான் நெனைக்கறேன் (நான் ஆத்திகன் தான்).. இந்த முறையும் நவராத்திரிக்கு எங்க ஆத்துல (வூட்ல) கொலு வெச்சாங்க... ஆனா எப்பவும் இருக்குற ஜோர் இல்ல..

ஏதோ ஸாஸ்த்ரதுக்கு வெச்சா போல ஆய்டுச்சு.. நானும், என் அண்ணனும் செரியா பங்கு எடுத்துக்கல. என் அப்பாவும் அம்மாவும் கஷ்டப்பட்டு எல்லாத்தையும் செஞ்சாங்க. இந்த முறைன்னு இல்ல, கடந்த 2-3 வருஷமாகவே இதே கதைதான். கொஞ்சம் வளர்ந்துட்டதா நாங்களே நெனசிக்கிட்டதாலும், சோம்பேறித்தனத்தாலும் இது போல செரியா கலந்துக்க முடியறதில்ல.
இந்த முறை,
  • நான் எழுந்தது 8 மணிக்கு,
  • முன்னாடி நாள் அப்பாகிட்ட எல்லாத்தையும் clean பண்றதா குடுத்த வாக்க காப்பாத்தமுடியல
  • என் வண்டிய clean பண்ணல
  • so overall நான் ஒண்ணுமே பண்ணல.
  • இது போன வருஷத்த விட மோசம்.
Because போன வருஷம் அட்லீஸ்ட் நான் இந்த cleaning processla ஹெல்ப் பண்ணேன். அப்பாவோட கவலை என்னன்னா, அடுத்த வருஷம் எனக்கு இதெல்லாம் ஞாபகம் இருக்குமாங்கரதுதான். இது போல வர பண்டிகைகளையும், நம்ம கலாச்சாரத்தையும் (நெஜமாகவே) மதிக்கிற எனக்கு, இது ஒரு பெரிய அவமானம்.. so எனக்கு நானே சொல்லிக்கிற சமாதானம் என்னன்னா

// நடந்தவை நடந்தவைகளாகவே இருக்கட்டும், நடப்பவை நல்லவைகளாகவே இருக்கட்டும். அடுத்து வரப்போற விசேஷங்கள்ள நம்மளோட sinceritya காமிப்போம்//

என் அப்பா இத படிக்கப்போரதில்ல, இருந்தாலும், for the sake of commitment, சொல்லிக்கறேன்... வாழ்க ஜனநாயகம் ...

Thursday, October 2, 2008

நன்றி சர்வேசன்...

என்னுடைய -->இந்த<-- பதிவுல, surveysan அப்படிங்கரவர, tag பண்ணிருந்தேன்.. அவரும் பெரிய மனசு பண்ணி நம்ம tag ஏத்துகிட்டாரு... surveysan யாருங்கறத பத்தி அவ்வளவா தெரியல.. ஆனா அவரோட blog ரொம்ப சுவாரசியமாகவும், ஜனரஞ்சகமாகவும் இருக்கு... நான் தொடர்ந்து follow பண்ண ஆரம்பிச்சுட்டேன்..
tag ஏற்றுக்கொண்டதற்கு நன்றி survey சார்... வாழ்க உமது சேவை...

Wednesday, October 1, 2008

SeveN - The movie that makes you sick

சில படங்கள் பாக்கும்போது, " ஆஹா, செம்ம படம்யா.. கட்டயாம் இன்னொரு தடவ பாக்கணும்" (சரோஜா) , அப்படின்னு தோணும். சில படங்கள் பாக்கும்போது, "சீ, இதெல்லாம் ஒரு படமா" (குருவி) , அப்படின்னு தோணும். ஆனா குறிப்பிட்ட சில படங்கள் பாக்கும்போது, படம் நல்லா இருந்தாலும், "இத ஏன் பாத்து தொலைச்சோம்னு"(சேது) இருக்கும். அப்படிப்பட்ட ஒரு படத்த பாத்து தொலைச்சேன்...

படம் - Seven (ஆங்கிலம்-1995)
நடிப்பு - Brad pitt, Morgan Freeman & Kevin Spacey..
இயக்கம் - David Fincher (Fight Club புகழ்)

இந்த படத்த நான் பார்க்க காரணம், டைரக்டர் ஷங்கர். ஏன்னா, அவர் எடுத்த அந்நியன் படம் இதோட தழுவல் தான். விஷயம் கேள்விப்பட்ட நிமிஷமே, டவுன்லோட் பண்ணேன் (oct-2006), ஆனா அப்ப எனக்கு ஒரு accident நடந்ததுனால என்னால பார்க்க முடியல. So, போன மாசத்துல ஒருநாள் திடீர்னு ஞாபகம் வந்து, இன்னொரு தடவ டவுன்லோட் செஞ்சு - பாத்தேன்.

கதை சுருக்கம்: பெயர் தெரியாத ஒரு நகரத்துல, யாரோ ஒரு ஆள், ரொம்ப விகாரமான முறைல கொலைகள் செய்யறான். ஒவ்வொரு கொலை நடந்த இடத்துலயும், "GREED", "GLUTTONY" அப்படின்னு (Seven deadly sins) எழுதிட்டு வரான். இந்த கொலைகள விசாரணை செய்யற detectives brad pitt and Morgan Freeman. இவங்க ரெண்டு பேரும் சேர்ந்து எப்படி கொலையாளிய புடிக்கராங்கனு, ரொம்ப நிதானமா, அறை வெளிச்சத்துல/இருட்டுல சொல்லிருக்காங்க..

படத்தை பற்றி: First 1 hour ரொம்ப மெதுவா போகுது. படம் ஆரம்பிச்ச 1 hour கழிச்சு வர chasing சீனுக்கு அப்பறம்தான் படம் சூடு புடிக்குது. அனுபவமுள்ள போலீஸ் அதிகாரியா வர Morgan Freeman நடிப்பு அருமை (ஒவ்வொரு அசைவுலையும்). brad pitt நடிப்பு கொஞ்சம் மொக்கை தான், இருந்தாலும் ஒரு துடிப்புள்ள புது போலீஸ் officer வேஷம் அவருக்கு நல்லாவே பொருந்துது. கடைசி 30 nimidangal மட்டுமே வந்தாலும், Kevin Spacey நல்லா பண்ணிருக்காரு. ஒவ்வொரு கொலைய சித்தரிச்ச விதம் அருமை. ஆனா அந்த இடங்கள்ல நமக்கு தான் கொஞ்சம் stomach upset ஆவுது...

படம் முழுக்க டைரக்டர் ஒரு அழுக்கு லுக் + dim lighting maintain பண்றாரு.. படம் பார்க்கும்போது இந்த lighting தான் ரசிகர்கள படத்துல ஆழ்த்துது.. படம் முடிஞ்ச அப்பறம் ஒரு மாதிரி பேஜாரா கீது...கொஞ்ச நேரம் கழிச்சு யோசிச்சா, "சொல்ல வந்த விஷயத்த ரொம்ப அழுத்தம் இல்லாம சொல்லிருக்காங்க, மனசுல அவ்வளவா பதியல", அப்படின்னு தோணுது.. பொதுவாகவே எனக்கு இத மாதிரி படங்கள் அவ்வளவா புடிக்காது.. இது போல இருக்குற படங்கள நான் "sick movies"னு சொல்றது வழக்கம்.. இந்த வகையறாக்களே நல்லா படமாகவும் இருக்கறது உண்டு (saw, Seven, sin city, etc...), மோசமான படமாகவும் இருக்கறது உண்டு (hostel, wolf creek, final destination2, etc...)

படம் பாக்கறது பொழுது போக்குக்காக. அதுலயும் கொலை, கொள்ளை, சாவு, ரத்தம் மாதிரி விஷயங்கள் இருக்கும் போதுதான் கொஞ்சம் புடிக்காம போய்டுது.. எனக்கு எப்பவுமே happy ending கதை தான் புடிக்கும். இந்த Seven படத்த நம்ம ஊரு அந்நியன் கூட ஒப்பிடும்போது, அந்நியன் எவ்வளவோ betterனு படுது. ரொம்பவே சுவாரசியமா, ஜனரஞ்சகமா எடுத்துருக்காரு ஷங்கர். இந்த ரெண்டு படங்களுக்கும் இருக்குற ஒரே ஒற்றுமை, கொலையாளிகள், மத கோட்பாடுகள
அடிப்படையா வெச்சு கொலை செய்யராங்கங்கறது மட்டுமே...

Seven படத்த எழுதிய Kevin walker, ஒரு பேட்டியில சொல்லிருக்காரு, அவர் நியூயார்க் நகரத்துல தங்கிருக்கும்போதுதான் இந்த படத்துக்கான கதை கரு தோணிச்சாம். அந்த நகரத்து மேலயும், அதன் மக்கள் மேலயும் இருந்த வெறுப்புலதான் இத எழுதினாராம்.. அவர் வார்த்தைகள்ல சொல்லனும்னா,

"I didn't like my time in New York, but it's true that if I hadn't lived there I probably wouldn't have written Seven.i wanted to show a city that is dirty, violent, polluted, often depressing. Visually and stylistically, that's how we wanted to portray this world. Everything needed to be as authentic and raw as possible.We created a setting that reflects the moral decay of the people in it,Everything is falling apart, and nothing is working properly"...

இதமாதிரி தான் ஷங்கரும் நெனச்சிருப்பாரோ??.. Seven படத்துக்கு ஒரு பெஸ்ட் editing ஆஸ்கார் விருதும் குடுத்திருக்காங்க... நல்ல ஒளிப்பதிவுக்காகவும், நடிப்புகாகவும் இந்த படத்த கட்டாயம் பாக்கலாம்.. மேலும் விவரங்களுக்கு கீழ இருக்குற linka கிளிக்குங்க...

--- படத்தை பற்றி

--- அவுங்க ஊரு விமர்சனம்

http://www.moviefreak.com/dvd/images/seven6.jpg
அகூன் பதம், அன்பு இதம், காதல் சுகம், ah .....