Monday, August 24, 2009

The கிரேட் கந்தசாமி challenge ...

நீங்க கந்தசாமி படம் பார்த்து நொந்த ஆளா?? குறைந்தது, அந்த படத்த பற்றி கேள்விப்பட்ட ஆளா?? அப்ப இந்த challenge உங்களுக்குதான். கீழ, என்னுடைய ரசனையின் அடிப்படையில், ஒரு match the following இருக்கு. அதுக்கு கீழ, ஒவ்வொரு வார்த்தைக்கும் equivalent வார்த்தையும் இருக்கு. உங்களால கரிக்டா match பண்ண முடியுதான்னு பார்க்கலாம். பின்னூட்டத்துல உங்க பதிலைப் போடுங்க.

for ex - கந்தசாமி -

1. தெரு முனையில் டீக்கடை வைத்திருப்பவர்
2. சுசி கணேசனின் கலைப் படைப்பு
3. வீணாக உழைத்து நொந்த சாமி ஆனவர்

இதுக்கு சரியான தேர்வு 1
got it??? இப்ப விளையாடுவோமா ??
கவலைப் படாதீங்க, ரொம்ப ஈசியாதான் இருக்கும்.

படம் நல்லா வரணும்னு சீட்டெழுதி போட்டிருக்கலாமோ???

The கிரேட் கந்தசாமி challenge ...

கந்தசாமி - 1
விக்ரம் -
ஸ்ரேயா -
சுசி கணேசன் -
தாணு -
படத்தில் பாடல்கள் -
படத்தில் பின்னணி இசை -
படத்தின் திரைக்கதை -
வடிவேலுவின் காமெடி -
தெலுங்கு சூப்பர் ஸ்டாரின் நடிப்ஸ் -
பிரபு -
என் பேரு மீனா குமாரி பாடல் -
எடிட்டிங்/எடிட்டர் -
காமிரா/காமிராமேன் -
சுசித்ரா -
மறுபடியும் விக்ரம் -
மறுபடியும் ஸ்ரேயா -
சென்சார் போர்ட் -
சத்யம் தியேட்டர் -
செல்வராகவன் -
கார்த்திக் கிருஷ்ணா -

பதில்கள்
  1. தெரு முனையில் டீக்கடை வைத்திருப்பவர்
  2. கணேசனின் கலைப் படைப்பு
  3. வீணாக உழைத்து நொந்த சாமி ஆனவர்
  4. மூன்று வருடங்களுக்கு ஒரு படம் நடித்து மொக்கை வாங்குபவர்
  5. தனி ஆளாக படத்தை காப்பாற்றுபவர்
  6. தான் பார்த்த/நடித்த பழைய படங்களை மறப்பவர்
  7. ராவணன் கைவிட்டால், காப்பற்ற இருக்கும் ஒரே ஆள்
  8. கந்தசாமி பார்த்துவிட்டு யோசிப்பவர்
  9. எந்த ஒரு மொக்கை படத்தையும் சுமாராக ஆக்கும் இடம்
  10. கேலிக்கூத்து
  11. குடுத்த பணத்திற்கு ஏற்றார் போல் வேலை செய்வது
  12. ஸ்ரேயா ஆடியிருந்தால் இன்னும் நன்றாக அமைந்திருக்கும்
  13. கொக்கரக்கோ கோழி
  14. தேவையில்லாமல் வந்து போவது
  15. மன ஆறுதலை தரும் ஒரே விஷயம்
  16. city of god படத்தை நிறைய முறை பார்த்தவர்
  17. இப்பொழுதுதான் தொழிலை கற்றுக்கொள்பவர்
  18. கொஞ்சம் கமெர்சியலா பண்றோம்
  19. எல்லா காட்சிகளிலும் தண்ணி அடித்தது போல் பேசுபவர்
  20. படத்திற்கு உறுதுணையாக இருப்பது
  21. நம் மண்டையை பிளப்பது
  22. பட்ஜெட்டில் துண்டு
  23. எவ்வளவு மொக்கை வாங்கினாலும் ஸ்டெடியாக இருப்பவர்
  24. பதிவு போடவே படம் பார்க்கும் கேசு
  25. அடுத்தடுத்து ஆப்புகளை பெறுபவர்
  26. தூக்கக் கலக்கத்தில் பேசுபவர்
  27. சில காட்சிகளில் நினைவிற்கு வந்து upset ஆக்குபவர்
  28. கருப்பு பணத்தை வெள்ளையாக்குபவர்
  29. மஞ்ச மாக்கான்
  30. வெளிப்படையாக நடிப்பவர்
  31. பல்காக இருப்பவர்
  32. பிள்ளையின் மானத்தை வாங்குபவர்
  33. பல்ராம் நாயுடுவிற்கு போட்டி
  34. தேடினாலும் கிடைக்காது
  35. மனதில் ஹிட்ச்காக் என்று நினைத்து கொள்பவர்
  36. எப்பொழுதும் மர்மமான ரோலில் நடிப்பவர்
  37. என்ன கொடுமை சரவணன் இது
  38. சூப்பரப்பு
  39. உரிச்ச கோழி
  40. அப்படின்னா??
ஒரு கேள்விக்கு பல பதில்கள் இருப்ப்பது போல இருக்கும். உங்களுக்கு எது சரின்னு படுதோ, அத செலக்ட் பண்ணுங்க...

மச்சான் ஒருத்தன் சிக்கிருக்காண்டா, வரியா படம் எடுப்போம்?? நான் உளவுத்துறை போலீசா நடிக்கிறேன்..

Monday, August 17, 2009

சிகாமணியின் சின்னபிள்ளைத்தனமான கதைகள் -3 (அவ்ளோதான்)

சி.சி.கதை 1 --> இங்க
சி.சி.கதை 2 --> இங்க

விடாம தொடர்ந்தான் சிகாமணி, "என்னதான் producer இளிச்சவாயா இருந்தாலும், நமக்கும் கொஞ்சம் நேர்மை வேணும்டா. அதனால, பாவப்பட்ட producer யாருவேனாலும் இந்த கதைய எடுத்துக்கலாம்"

"நீ கதைய முதல்ல சொல்லு" என நான் அவசரப்படுத்த,

"அவசரப்படாத, நம்ம ஹீரோ ஒரு ஏழை. அவருக்கு அப்பா இல்லை, அம்மா மட்டும்தான். அதோட ஒரு தங்கச்சி வேற, அந்த தங்கச்சிக்கு வயசு 4",

நான் மறுபடியும் குறுக்கிட்டு, "அது எப்படி மச்சான்???"

"அட, இரண்டு குழந்தைக்கு நடுவுல ஒரு இடைவேளைனு வெச்சிக்க, கதைய கேளு, நம்ம ஹீரோவுக்கு ஒரே ஒரு வேலைதான் தெரியும், அதாவது அப்பளம் விக்கறது. நம்ம அம்மா செஞ்சு தருவாங்க, ஹீரோ வித்துட்டு வருவாரு"

"முதல் சீன்ல, நம்ம ஹீரோ, தான் தூங்கியெழுந்த கிழிஞ்ச படுக்கைய மடிக்கராறு, அப்பறமா பல்லு வெளக்கி தண்ணி குடுக்கிறாரு, அப்புறம் குளிக்கராறு, அப்புறம்........." நான் பொறுமையிழந்து, "கொட்டிகிராறு, ஜீரணம் ஆவுது, ஏப்பம் விடுவாரு, இதெல்லாம் விடு, நீ கதைய மட்டு சொல்லு" என எரிச்சலாக, அவன் தொடர்ந்தான்,

"இருக்குற அப்பளத்தை எடுத்திட்டு போறாரு. ஆனா அந்த அப்பளத்த யாருமே வாங்கலை. இந்த இடத்துல, நம்ம சமுதயாம் எப்படி அப்பளம்னு ஒரு அயிட்டம் இருக்கறதையே மறந்து, pizza வெறி பிடிச்சி அலையராங்கன்னு, montagela காமிக்கறோம். சாயங்காலம் வரை எதுவுமே போனி ஆகாம, நம்ம ஹீரோ வீட்டுக்கு வராரு"

"வீட்டுக்குள்ள நுழையும்போதே கவனிக்கராறு. ஹீரோவோட தங்கச்சி பாப்பா ஒரு பக்கம் அழுவுது, இன்னொரு பக்கம் அம்மா சோகமா இருக்காங்க. வீட்டு நடுவுல ஒரு மெழுகுவர்த்திய கொளுத்தி வெச்சிருக்காங்க. கரெண்ட் இல்லையே.
அம்மா ஹீரோவா பார்த்து கேட்கறாங்க, "பாப்பாவுக்கு ரொம்ப பசிக்கிது. வீட்ல எதுவுமே இல்லை. அப்பளம் வித்த காசுல ஏதாவது வாங்கிட்டு வாப்பா"னு.

நம்ம ஹீரோவுக்கோ பயங்கர குழப்பம். "கைல காசு இல்லை, தங்கைக்கு பசிக்குது, வீட்ல ஒண்ணும் இல்லை. என்ன செய்ய"னு think பண்றாரு. தங்கைய பாக்குறாரு, விளக்க பாக்குறாரு, அம்மாவ பாக்குறாரு, தன் கைல இருக்குற அப்பளத்தை பாக்குறாரு. அப்பளத்தை பாக்குறாரு, அம்மாவ பாக்குறாரு, விளக்க பாக்குறாரு, தங்கைய பாக்குறாரு"

"டேய் போதும் சொல்லுடா"

"இப்படி மாறி மாறி பார்த்து என்ன பண்றாருன்னா.........." என கண்கலங்க ஆரம்பித்தான். நான் பதறிப் போய் "டேய் கதைய சொல்லிட்டு feel பண்ணுடா" என்றேன். அவன், "சொல்றேன் மச்சான். அப்புறம் என்ன பண்றாருன்னா, தன் கைல இருக்குற அப்பளக் கட்டுலேர்ந்து ஒரே ஒரு அப்பளத்தை எடுத்து, அந்த விளக்குல சுட்டு, தங்கச்சிக்கு குடுக்கறாரு பாரு........."

நான் அந்த இடத்தை விட்டு ஓட ஆரம்பித்தேன்.

தூரத்தில் அவன் குரல் கேட்டது, "டேய் அடுத்த முறை முழு கதைய சொல்லாம விட மாட்டேன். இப்ப பொழச்சிப் போ".....

அவனை நான் இன்னொரு முறை பார்ப்பதாக இல்லை......

சிகாமணியின் சேட்டைகள், இப்போதைக்கு முற்றும்...

Thursday, August 13, 2009

வருக வருக...

நம்ம பதிவுலகத்திலே மற்றுமொரு புதுவரவு. அண்ணன் விஜய குமார் அவர்கள்...
நான் வெட்டியா இருக்கும்போது தான் வித்தியாசமா யோசிப்பேன், அண்ணனோ வெட்டியா இருக்கும்போது தான் சாதா"ரணமா" யோசிப்பாரு. நான் லூசு, அவரு என்னை விட...... கொஞ்சம் ஓவரா புகழறேனோ??? சரி, எப்படியோ, என் inspirationல அவர் ஆரம்பித்த ப்ளோக், லட்சக்கணக்கான ஆதரவாளர்களை பெற்று, பல ஆயிரம் அமுக்கிகளை (hits) பெற வேண்டும் என, இறைவனை வேண்டிக் கொண்டு, இத்துடன் என் உரையை பொத்திக் கொள்கிறேன். நன்றி. வணக்கம்....

லிங்க்: http://boreadikudhu.blogspot.com/


சொல்லிகுடுக்கறேன்னு சொன்ன இந்த காக்கி எங்க???


(சொல்லுங்க விஜய் அண்ணா, என்ன doubt????)