Showing posts with label Series. Show all posts
Showing posts with label Series. Show all posts

Tuesday, January 24, 2012

எண்ணிப் பார்த்தேன் - 2011 - 4

போன வருஷம் நான் பார்த்து ரசிச்ச படங்கள், பாடல்களோட லிஸ்ட் இது.
எதுவும் மிஸ் பண்ணலை. உங்க ரசனையோட ஒத்து போகலன்னா ரொம்ப அலட்டிக்காதீங்க. என்னடா இதெல்லாம் நல்லா இருக்குன்னு சொல்றானேன்னு கமெண்ட் பண்ண வேணாம்.

படங்கள்
சரியா எண்ணி பார்த்தா, போன வருஷம்தான் நான் நிறைய படங்கள் பார்த்திருப்பேன்னு நினைக்கறேன். ரசனையும் கொஞ்சம் liberalஆ மாறிருக்குன்னு தோணுது. லிஸ்ட் போட்டா அது பெருசா மளிகை சாமான் லிஸ்ட் மாதிரி போகுது. கொஞ்சம் கூட்டி குறைச்சு, இங்க ஃபைனல் லிஸ்டை கொடுக்கறேன்.

ஜாலியா ரசிச்ச படங்கள் - தமிழ்

  • ஆடுகளம்
  • காவலன்
  • யுத்தம் செய்
  • பயணம்
  • கோ
  • பயணம்
  • அழகர்சாமியின் குதிரை
  • எங்கேயும் எப்போதும்
  • ஆரண்ய காண்டம்
  • வேங்கை
  • தெய்வத் திருமகள்
  • மங்காத்தா
  • முரண்
  • வேலாயுதம்
  • மயக்கம் என்ன
  • ஒஸ்தி
  • போராளி

இதுல சூப்பர்
ஆடுகளம், காவலன், யுத்தம் செய், கோ, அழகர்சாமியின் குதிரை, எங்கேயும் எப்போதும், ஆரண்ய காண்டம், முரண்

இதுல என்னோட PICK
ஆரண்ய காண்டம்

நான் மொக்கை வாங்கிய படங்கள்

  • சிறுத்தை (first half + சந்தானம் காமெடி மட்டுமே ரசிச்ச விஷயங்கள்), 
  • நடுநிசி நாயகள்
  • எங்கேயும் காதல்
  • அவன் இவன்
  • வந்தான் வென்றான்
  • வாகை சூட வா
  • 7ஆம் அறிவு (ஓவர் ஹைப் ஒடம்புக்கு ஆவாது), 
  • ராஜ பாட்டை
  • வானம்
இந்த லிஸ்ட்ல, மங்காத்தவையும், தெய்வத் திருமகள் படத்தையும் சேர்க்கலாம். மங்காத்தா புத்திசாலித்தனமா இருக்கறா மாதிரி ஏமாத்தின ஒரு படம். முதல் முறை அஜீத்தும் பாட்டும் படத்தை காப்பாத்தினாலும், ரெண்டாவது தடவை தியேட்டர்ல உட்கார முடியலை. மொக்கையான மேட்டரை நல்லா மூடி மறைச்சு, ஹைப் பண்ணி மக்களை ஏமாத்திருக்காங்கன்னே தோணிச்சு. கோவா படத்துல தெரிஞ்ச சின்ன சின்ன ஸ்மார்டான விஷயங்கள் கூட இதுல இல்லை. தெய்வத் திருமகள், காபி அடிச்ச படம்னு கடைசி வரைக்கும் படத்தோட சம்பந்தபட்டவங்க ஒத்துக்கவே இல்லை. அதுவே எனக்கு செம்ம கடுப்பு. இதுதான் என்னோட இன்ஸ்பிரேஷன்னு சொல்றது அவ்வளவு கஷ்டமா? விக்ரமும் நல்லா ஒப்பேத்தினாரு.

பார்க்க முடியாமல் போன படங்கள்
180, காஞ்சனா, வெப்பம், பட்டா பட்டி, மௌன குரு

இந்திய அளவுல ரசிச்ச படங்கள்
Telugu - Alaa Modalaindhi,
Hindi - Pyaar ka Punchnama, Delhi Belly, Dirty Picture

பார்க்க முடியாமல் போனது
Telugu - Dookudu, Sri Rama Rajyam, 100% love, Golconda High School,
Hindi - No one killed jessica, Stanley ka dabba, Shaitan, Buddha Hoga tera Baap, Aarakshan, That girl in yellow boots

மொக்கை
Ra - One - வலிக்காம அடிச்ச படம். அப்பறம் எல்லாம் ஊமை காயம்.

இதுல டெல்லி பெல்லி படத்துக்கும், தமிழ்ல வந்த ஓரம் போ படத்துக்கும் சில ஒற்றுமைகளை பார்க்க முடிஞ்சுது. ஹிந்தி அளவுக்கு இல்லைனாலும், தமிழ்ல வசனம் கொஞ்சம் வெளிப்படையா இருந்துச்சு. அதே மாதிரி, வைர கடத்தல் மேட்டரும்.

உலக அளவுல நான் ரசிச்ச படங்கள்
சில படங்கள் பத்தி, சில வரிகள்.
  • Harry Poter Final Part - கண்ணீர் மல்க விடை கொடுக்கலாம்னு நினைச்சேன். தனியா படம் பார்த்ததுனால அழ முடியலை :P
  • Kungfu Panda 2 - முதல் பார்ட் அளவு இல்லைனாலும் enjoyable.
  • Hangover 2 - அதே டெய்லர், அதே வாடகை, ட்ரெஸ் கலர் மட்டும் வேற. நல்லா யோசிக்கறாங்க ரூம் போட்டு.
  • Ides Of March - எவ்வளவு பேருக்கு தெரிஞ்சிருக்கும்னு தெரியலை. சரியான பொலிடிகல் த்ரில்லர் படம்
  • Source Code - கொஞ்சம் குழப்பறா மாதிரி எடுத்த படம். ஆனா அப்படி ஒண்ணும் இல்லை. 
  • Bridesmaids - பெண்கள் மட்டுமே முக்கிய பாத்திரங்கள்ள இருக்கற இந்த படத்தை எழுதினதும் ஒரு பெண்தான். அவங்களுக்குள்ள இருக்கற பாசம், நேசம், ஈகோ இப்படி நிறைய விஷயங்களை எந்த சப்பைகட்டும் இல்லாம சொல்லிருக்காங்க.
  • X Men First Class - இன்னா கிராபிக்ஸ். இன்னா ஸ்க்ரீன்ப்ளே.
  • Super 8 - momentum எப்படி கொஞ்சம் கொஞ்சமா ஏத்தறதுனு கண்டிப்பா அவங்க ஊருக்கு போய் ஒழுங்கா படிச்சிட்டு வரணும். சாதாரண சின்ன பசங்க கதைய, ஏலியன் இன்வேஷனோட முடிச்சு போட்டு, அட்டகாசமா present பண்ணிருந்தாங்க. என்னதான் இருந்தாலும் நம்ம ஸ்பீல்பெர்க் தயாரிப்பாச்சே.
  • Bad Teacher
  • Horrible Bosses
  • Crazy, Stupid Love
  • Rise Of Planet Of Apes - இந்த படத்துக்காவது Andu Serkisகு ஒரு ஆஸ்கர் கொடுத்தா நல்லா இருக்கும். சீஸர்னு மனித குரங்கா அவர் நடிச்சிருந்த விதம் எனக்கு தெரிஞ்சு வேற யாருமே பண்ண முடியாத ஒரு விஷயம். 
  • Johny English Reborn
  • MI 4 - Brad Bird மேல வெச்ச நம்பிக்கை வீண் போகலை. பின்னு பெடல் எடுத்திருந்தாரு
  • Tin Tin
  • Tangled

பார்க்க முடியாமல் போனது
Fast Five, Cars 2, Rio, Rango, Transformers, Attack the Block, Sherlock Holmes

இந்த படங்களோட என்னை யோசிக்க வெச்ச இன்னொரு முக்கியமான விஷயம் டிக்கேட் ரேட். ரேட் ஃபிக்ஸ் பண்ண சட்டம் இருக்குனு தெரியும். ஆனா நம்ம கேபிள் அண்ணாச்சி சொன்ன அப்பறம்தான் டிக்கேட்டோட ரேட் இவ்வளவுனு தெரிஞ்சுகிட்டேன். முடிஞ்ச வரைக்கும் சூப்பரான சத்யம்ல பாக்கறதுனால அவங்களுக்கு கொடுத்தா பரவாயில்லைனு தோணுது. ஆனா 
டிக்கேட் மட்டும் இல்லாம, பார்க்கிங் + காண்டீன் சமாச்சாரங்கள்ல மத்த தியேட்டர்கள் அடிக்கற கொள்ளை, யாரும் கண்டுகிட்டா மாதிரி தெரியலை. 


ரசித்த பாடல்கள்

அய்யய்யயோ நெஞ்சு - ஆடுகளம்
யாரது - காவலன்
நான் ரொம்ப ரொம்ப - சிறுத்தை
கன்னித்தீவு பொண்ணா - யுத்தம் செய்
என்னமோ ஏதோ, அக நக - கோ
வாடா பின்லேடா - மங்காத்தா
கொலைகாரி, நேற்று இல்லை - தம்பு வெட்டோத்தி சுந்தரம்
நெஞ்சில் நெஞ்சில், நாங்கை - எங்கேயும் காதல்
சந்திக்காத, ஊசெல்லா, நியாலமே - 180
காற்றில் ஈரம் - வெப்பம்
சர சர - வாகை சூட வா
சில்லாக்ஸ் - வேலாயுதம்
காதல் என் காதல் - மயக்கம் என்ன
வில்லாதி வில்லன் - ராஜ பாட்டை
ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் - கழுகு
Kutta - Pyar ka punchnama
Kalaya Nijama - Sri Rama Rajyam

எனவே, இப்படித்தான் எனது 2011 சினிமா வாழ்க்கை கழிந்தது. 2012ல் மேலும் நிறைய ரூபாய்களையும், சக்தியையும் செலவழித்து, படங்கள் பார்த்து மக்களுக்கு உதவுவேன் என்று உறுதியளிக்கிறேன். இப்போதைக்கு டாடா :)

Monday, January 23, 2012

எண்ணிப் பார்த்தேன் - 2011 - 3

புது வருஷம் பொறந்து ஒரு மாசம் முடியப்போகுது, இன்னும் என்ன எண்ணிப் பாக்கறதுனு சில பேர் கேட்கலாம். என்ன செய்ய. ஏற்கனவே யோசிச்சு, ஹின்ட்ஸ் வேற எழுதி பதிவுல ஏத்தாம போறதில்லைனு முடிவு பண்ணிட்டேன். அதனால பொறுமையா படிச்சிருங்க. இதுக்கப்பறம் இன்னும் ஒரே ஒரு பதிவுதான். அப்பறம் வழக்கம் போல மொக்கை பதிவுகளை ஆரம்பிக்கறேன்.

பதிவிட முடியாமல் போன சில random விஷயங்களை பத்தின தொடர்ச்சி... முடிவு

கன்னத்தில் குத்துவிட்டால்


நவம்பர் மாசம் விவாசயத்துறை அமைச்சர் சரத் பவார் வாங்கின அறையோட சத்தம் இந்தியா முழுக்க கேட்டுது. ஹர்விந்தர் சிங்னு ஒரு சீக்கிய இளைஞர் அத்தியாவசிய பொருட்களோட விலையேற்றத்துல காண்டாகி, நம்மளை மாதிரி பதிவு மட்டும் போடாம அமைச்சரோட கன்னத்துல ஒரு அறையும் போட்டாரு. 
அடிச்சு முடிச்சிட்டு, ஊழல் அரசியல்வாதிகளுக்கு இது என்னோட பதில்னு கையில கத்திய வெச்சிகிட்டே சத்தமும் போட்டாரு. இதுக்கப்பறம் இன்னும் நிறைய பேர் அடி வாங்குவாங்கன்னு நினைச்சேன், ஆனா நடக்கலை. still, கொஞ்சம் சந்தோஷமா இருந்துச்சு. மக்கள் கொஞ்சம் கொஞ்சமா பொறுமையிழந்துட்டு வராங்கன்னு நினைக்கறேன். மாட்டிக்கமாட்டேன்னா கண்டிப்பா நானும் உதை கொடுக்க தயார் :)


கால்-திண்டாட்டம்


அடுத்த அதிர்ச்சி இண்டோர் நகரத்துலேர்ந்து வந்த செய்தி. அந்த ஊர் கால்பந்தாட்ட வீரர்கள் தங்களோட விளையாட்டுக்கான செலவுகளை பார்த்துக்க, கிரிக்கேட் ஸ்டேடியத்தை சுத்தம் பண்ணாங்களாம். என்ன கருமமோ. இந்த ஒரு செய்தியே, இந்தியால மற்ற விளையாட்டுகளோட நிலைமையையும்,  கிரிக்கேட்டுக்கு நாம தர தேவையில்லாத முக்கியத்துவத்தையும் காட்டிச்சு. தங்களோட கிழிஞ்ச ஷூக்களையும், விளையாட தேவையான பழைய பொருட்களையும் மாத்த இந்த காசு உதவும்னு அந்த வீரர்கள் சொல்லிருக்காங்க. இந்த நிலைமை அந்த மாநிலத்தில மட்டும்தானா இல்லை எல்லா இடத்துலையுமானு தெரியலை. ஒழுங்கா விளையாட தெரிஞ்சதா சொல்லிக்கற கிரிக்கேட்லையும் மரண அடி வாங்கிட்டு இருக்கோம். இதுக்கு செலவழிக்கற பணத்துல கால்வாசிய மத்த விளையாட்டுக்கும் கொடுத்தா நல்லா இருக்கும். இந்த மாதிரி ஐடியாக்களை லட்சம் பேர் சொல்லிருப்பாங்க. என்ன நடந்துச்சு. எல்லாரும் ஒரு அறை கொடுத்தா சரியா வரும்னு நினைக்கறேன். 


குடிவெறி


கொலைவெறி ஹிட்டான கையோட தமன்னாவோட பர்த்டே பார்டில தனுஷ் போதைல பாடின கொலைவெறிக்கும் நல்ல ஹிட்ஸ் வந்துச்சு. கூடவே நல்ல போதைல தமன்னாவும் பூனம் பாஜ்வாவும் இருக்காங்க. வேற யாரெல்லாம் இருந்திருப்பாங்க்ன்னு ஊகிக்க முடியுது. இதை பார்த்த அப்பறம் நம்ம தமிழ் கூறும் நல்லுலகம் ஒண்ணும் திருந்திடப்போறதில்லைனு நினைக்கறேன். தொடர்ந்து நடிகர்களுக்கு ராஜ மரியாதை கொடுப்போம். பாலாபிஷேகம் பண்ணுவோம். கோயில் கட்டுவோம். வாழ்க பாரதம்.

அடுத்த பதிவுல. இன்னும் ரெண்டு மூணு விஷயங்கள்,  2011 பாடல்கள் + படங்களை பத்தி சொல்லிட்டு, இந்த வருட எண்ணிப்பார்த்தேனை முடிச்சிக்கறேன்.. நன்றி :)

Saturday, January 7, 2012

எண்ணிப் பார்த்தேன் - 2011 - 2

பதிவிட முடியாமல் போன சில random விஷயங்களை பத்தின தொடர்ச்சி..

ஆயிரம் பித்தலாட்டம் பண்ண அபூர்வ சேனல்

நியூஸ் சேனல்கள் எவ்வளவு தூரம் தரம் இறங்க முடியும்னு (இதுக்கு முன்னாடியும் பெரிய தரம் இருந்ததா தெரியலை) போன வருஷம் மறுபடியும் தெரிஞ்சுது. CNN IBN சேனல், art of living ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் பேட்டில பண்ண தகிடுதத்தம் வெளிய வந்துச்சு. முன்னாடியே எடுத்த பேட்டிய, லைவ்னு சொல்லி, அவர் ஏதோ கேள்விக்கு பதில் சொல்லாம சமாளிக்கறா மாதிரி டெலிகாஸ்ட் பண்ணாங்க. ஆனா, அந்த பேட்டி ஒளிபரப்பான நாளே, அது பொய்னு தெரிய வந்து, வலைமனைல  பல இடங்கள்ள விவாதம் பண்ணாங்க. நிகழ்ச்சிய தொகுத்து வழங்கின சகரிகா கோஸ் (அந்த கோஸ் இல்லை), முதல்ல, இந்த மாதிரி பண்றதெல்லாம் எல்லா சேனல்லயும்  சகஜம்னு சொல்ல, ட்விட்டர்ல மக்கள் சகட்டு மேனிக்கு அவங்களை திட்ட, அப்பறம் வேற வழி இல்லாம, போலியா மன்னிப்பெல்லாம் கேட்டாங்க.  இப்படி ஒரு கேடுகட்ட விஷயத்தை பண்ணிட்டு இன்னும் அந்த சேனல் ஒளிபரப்பாகிட்டுதான் இருக்கு. மக்கள் எங்கயும் பொங்கி எழல. பாதிக்கப்பட்டவங்க யாரும் எந்த வழக்கும் தொடரலை. இன்னும் நிறைய பேர் அந்த சேனலை விசுவாசமா பாத்துட்டுதான் இருக்காங்க. இன்னொரு முக்கியமான விஷயம், இந்த சேனல் முன்னாடியே போலியான ட்விட்டர் அக்கவுண்ட்ல ட்வீட் பண்ணி கேவலமா மாட்டிகிட்டாங்க. இது மாதிரியே நிறைய குற்றச்சாட்டு அந்த சேனல் மேல இருக்கு. வாழ்க ஜனநாயகம் #it only happens in india

டின் டின்

சின்ன வயசுல படிச்ச டின் டின் காமிக்ஸ், கார்டூன் நெட்வொர்க்ல வரும்போதே ரொம்ப ஆர்வத்தோட பார்த்த ஆள் நான். அதை ஸ்பீல்பெர்க் படமா எடுக்க போறாருன்னு ரெண்டு வருஷம் முன்னாடி அறிவிப்பு வந்தவுடனேயே எதிர்பார்க்க ஆரம்பிச்சிட்டேன். ஏற்கனவே கதை தெரிஞ்சிருந்ததுனால படம் பெருசா சுவாரசியப்படுத்தல. ஆனா, அற்புதமான மேக்கிங். performance capture டெக்னாலஜியோட உச்சத்தை தொட்டிருக்காங்க. முக்கியமா, ஒரே ஷாட்ல வர சேஸிங் சீன். அதுல கொடுத்துருக்கற டீடைலிங். அதுக்காகவே படத்தை பல தடவை பார்க்கலாம். அடுத்த பார்ட், டின் டின் ஸீரிஸ்லையே எனக்கு புடிச்ச ரெண்டு கதை. பீட்டர் ஜாக்சன் எடுக்கராராம். அதுக்கும் ஆர்வத்தோட வெய்டிங்.

கொலைவெறி

2010௦ல மாமனாரோட எந்திரன் மாதிரி, 2011ல மாப்பிள்ளையோட கொலைவெறி. ஆடுகளத்தை தவிர சொல்லிக்கறா மாதிரி வேற எந்த படமும் வராத நிலைல (மயக்கம் என்ன லிஸ்ட்ல சேர்க்கலாமா வேணாமானு தெரியலை), இந்தியா மொத்தமும் கொண்டாடற ஸ்டாரா தனுஷ் மாறினதுக்கு ஒரே காரணம்.. இந்த பாட்டை வெச்சு நிறைய case study பண்றதா கூட கேள்விபட்டேன். பாட்டு இப்படி ஆரம்பிச்சா, இப்படிதான் முடியும்னு, ரொம்ப நாளா பாட்டு கேட்கற யார் வேணாலும் சொல்லக்கூடிய predictable டியூன். ஆனா அதுதான் பாட்டோட வெற்றிக்கு காரணம்னு நினைக்கறேன். நிறைய பாராட்டுகளோட, நிறைய குற்றச்சாட்டும் வந்திருக்கு. இந்த பாட்டை பாபுலரைஸ் பண்ண நிறைய காசு செலவழிசாங்க. இவ்வளவு ஹிட்ஸ் வரவேயில்லைன்னு நிறைய சொல்றாங்க. எவ்வளவோ கொடிகள் கொடுத்து மார்க்கெட்டிங் பண்ண ரா ஒன் படத்தோட சம்மக் சல்லோ பாடல் இவ்வளவு வெற்றி அடையலை. விஷயம் இல்லாம எந்த பாட்டுமே இவ்வளவு தூரம் ரீச் ஆகாதுங்கறது என் கருத்து. தினமும் கொலைவெறி பாடலோட தாக்கத்துல, அட்லீஸ்ட் ரெண்டு வீடியோவாவது யூடியூப்ல யாராவது அப்லோட் பண்றதா சொல்றாங்க. அவ்வளவு பேருக்கும் காசு கொடுத்துருப்பாங்களான்னு தெரியலை.

தற்கொலை


தினமும் நிறைய தற்கொலை செய்திகளை படிக்கறோம். தற்கொலைக்கான காரணத்தை பாத்துட்டு, எதாவது கமெண்ட் பண்ணிட்டு போறோம். ஆனா, அக்டோபர் மாசம் நான் படிச்ச ஒரு தற்கொலை நியூஸ், உண்மையிலேயே சுஜாதா கதைல வரா மாதிரி இருந்துது. கோவால, ஐ.டில வேலை செய்யற, லட்சக்கணக்குல சம்பாதிக்கற புருஷன் பொண்டாட்டி, ஆனந்த், தீபா தூக்குல தொங்கிட்டாங்க. தற்கொலைக்கு முன்னாடி ஒரு லெட்டர் வேற எழுதி வெச்சிருக்காங்க. அதுல “ நாங்க எங்க வாழ்க்கைய பரிபூரணமா வாழ்ந்துட்டோம். உலகம் முழுக்க சுத்தியாச்சு. பல இடங்களை பாத்தாச்சு. நாங்க நினைச்சே பார்க்க முடியாத அளவுக்கு சம்பாதிச்சாச்சு. எங்க உயிர் எங்களுக்கு மட்டும்தான் சொந்தம்ங்கற தத்துவத்துல எங்களுக்கு நம்பிக்கை இருக்கு. எவ்வளவு தூரம் வாழ உரிமை இருக்கோ, அதே அளவு சாகவும் எங்களுக்கு உரிமை இருக்கு”னு எழுதி வெச்சிருக்காங்க. படிக்கும்போதே எனக்கு ஒரு அமானுஷ்ய ஃபீல் இருந்துச்சு. இதொட, அவங்களோட இறுதி சடங்குக்கு பணமும். அவங்களோட சொத்துக்கள் யார் யாருக்கு போகனும்னும், தெளிவா, கைபட எழுதி வெச்சிட்டு செத்துருக்காங்க. இந்த தற்கொலைய விட, இந்த காரணம்தான் என்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணிச்சு. இப்போ பதிவு போடற வரைக்கும் பாதிச்சிருக்குனா பாருங்களேன். எதனால இந்த மாதிரி எண்ணங்கள் வருதுனு நினைக்கறீங்க?? கமென்ட்ல எழுதுங்க. அதை பத்தி தனியா வேற பதிவுல பேசலாம்.

தொடரும்....

Saturday, September 4, 2010

Inception - கடைசியா ஒரு தடவை கதை சொல்லட்டா????

போன மாசம் மொத்தமுமே இன்செப்ஷன் படத்தை வெச்சி பதிவு ஒப்பேத்தியாச்சு. இதுக்கு மேல மாவ அரைக்க முடியாது. அதனால, போன பதிவுல சொன்னா மாதிரி, நண்பர் பத்மநாபன் கேட்டதற்காக, கதையை, முடிஞ்ச வரைக்கும் எளிமையா சொல்ல முயற்சி பண்றேன். இது என்னோட புரிதலுக்கு ஏற்ப, என்னோட பார்வைல கதை. அதனால, "சொல்லப் படுகிறது, இருக்கலாம்" மாதிரியான வார்த்தைகள் இருக்காது.. நான் நம்பறத, உங்களுக்கு சொல்றேன்..

கதை

மு.கு - extraction - ஒருத்தரோட சப் கன்ஷியஸ்லேர்ந்து ஒரு நினைவை, ரகசியத்தை திருடுவது.
inception - ஒருத்தரோட சப் கான்ஷியஸ்ல ஒரு நினைவை விதைப்பது...

படம் ஆரம்பிப்பது லிம்போல. கடற்கரைல ஒரு ஆள் 
ஒதுங்கராறு. அது நம்ம ஹீரோ காப் (டிகாப்ரியோ), அங்க தன்னோட குழந்தைகள் மணல்ல விளையாடறத பாக்கறாரு. (இந்த காட்சிய, படம் முழுக்க,  அவர் பல முறை பாக்கறாரு) நாலு பேர் தூக்கி கொண்டு போய், தொண்டு கிழமான ஒரு சைனாகாரர் (சைடோ) முன்னாடி அவரை ஒக்கார வெக்கறாங்க. காப் கிட்டேர்ந்து ஒரு சின்ன பம்பரம் மாதிரி உள்ள பொருளை பாத்து, இதே மாதிரி ஒண்ணு, எனக்கு தெரிஞ்ச ஒருத்தர் கிட்டயும் இருந்துதுனு அந்த கிழவர் சொல்றாரு. 

CUT TO

அடுத்த காட்சி, காப், இளமையான சைடோ, ஆர்தர் மூணு பேரும் ஒரு எடத்துல பேசிகிட்டு இருக்காங்க. காப், சைட்டோகிட்ட, அவரோட சப் கான்ஷியாஸின்  பாதுகாப்பு அவசியம்னும், அதுக்கு தன்னால உதவ முடியும்னு சொல்றாரு. யோசனை பண்ணி சொல்றேன்னு சைட்டோ அந்த எடத்த விட்டு கிளம்பறாரு..

அது சைட்டோவோட கனவுன்னும், அங்க காப், ஏதோ ரகசியத்த திருட முயற்சி பண்றாருன்னும் 
அப்பறம் நமக்கு தெரிய வருது . அங்கேயே, மால் அப்படிங்கற ஒரு பெண்ணையும் சந்திக்கறார். அவங்க காட்டி கொடுக்கறதுனால, கனவுக்குள்ள கனவுன்னு, ரெண்டு லேயர்ல திட்டம் போட்டும், காபோட முயற்சி வீணாகுது. (இங்க இன்னொரு முக்கியமான விஷயம், மால், ஆர்தரோட கால்ல ஷூட் பண்றதுக்கு முன்னாடி, கனவுல ஒருத்தர கொலை பண்றதுனால நிஜத்துல அவங்க கண்ணு முழிச்சிருவாங்க. ஆனா, காயப்படுத்தினா, அந்த வலி ரொம்ப பயங்கரமானதா இருக்கும்னு சொல்லிட்டு சுடறாங்க)

அந்த முயற்சி தோல்வி அடையறதுனால, காபுக்கு வேலை கொடுத்தவங்க அவரை கொலை செய்யலாம்னு பயந்து, காப், தலைமறைவாக யோசிக்கறாரு. (காப், ஏதோ ஒரு குற்றத்துக்காக, தன்னோட ரெண்டு குழந்தைகள பிரிஞ்சு, அமெரிக்காவுலேர்ந்து தலை மறைவா இருக்கார்னு 
அப்போ நமக்கு தெரிய வருது). 

காப் தலைமறைவாகறதுக்கு முன்னாட், சைட்டோ அவரை சந்திச்சு, இன்செப்ஷன் பண்ணனும்னு சொல்றாரு. அப்படி வெற்றிகரமா பண்ணிட்டா, தன்னோட செல்வாக்கை பயன்படுத்தி, காப, அமெரிக்கவுல இருக்கற அவரோட குழந்தைகளோட சேர்த்து வேக்கறேன்னு வாக்கு கொடுக்கறாரு. ஆர்தர், இன்செப்ஷன் பண்றது ரொம்ப கஷ்டம்னு சொன்னாலும், காப், தன்னால பண்ண முடியும்னு ஒத்துக்கராறு.

காப், இன்செப்ஷன் செய்ய ஒரு அணியை திரட்டராறு. இதுல, அரியாட்னே - கனவுகளை வடிவமைக்கரவங்க (architect), இயாம்ஸ் - சித்தரிப்பாளன்னு  சொல்லலாமா?? பாவனை பண்றவர்னு சொல்லலாமா???(forger),  ஆர்தர் - ஆராய்ச்சியாளர் (point man) நம்ம காப் - களவாடப்போறவர்.. (extractor) (களவானின்னு சொல்லலாமா??), அப்பறம் யூசுப் - இவர்தான் மயக்க மருந்துக்கு பொறுப்பு (chemist) கூடவே சைட்டோ, இவங்க செய்யறத கண்காணிக்க வரார்.


திட்டம் போடும்போது, அப்படியே புது ஆளான அரியாட்னேவுக்கும் பயிற்சி கொடுக்கறாங்க. அப்படி ஒரு பயிற்சியப்போ, அரியாட்னே மால் பத்தின விஷயத்தை தெரிஞ்சிக்கறாங்க.  மால், காபோட இறந்து போன மனைவி. ஏதோ ஒரு பிரச்சனைனால, காபோட எல்லா கனவுகள்ளையும் மால் வந்து சதி பண்ணிடறாங்க. இதனாலேயே, காப் கனவுகள வடிவமைக்கரத நிறுத்திக்கராறு. ஏன்னா, அவருக்கு தெரிஞ்சா, அவரோட நினைவுகள்ல இருக்கற மாலுக்கும் எல்லாம் தெரிஞ்சிடும். அவங்க அங்க வந்து திட்டத்தை கெடுத்துடுவாங்க. 

இதனால கனவோட வடிவமைப்ப பத்தி தெரிஞ்சிக்கறதயும் நிறுத்திக்கராறு. இதைப் பத்தி, அணில இருக்கற மத்தவங்களுக்கும் அரியாட்னே சொல்ல சொல்றாங்க , ஆனா காப் இது அவ்வளவு சீரியஸ் பிரச்னை இல்லை. அதனால அவங்களுக்கு தெரிய வேணாம்னு மழுப்பிடராறு.

இந்த பயிற்சியில டாட்டம்னு ஒரு விஷயத்தைப் பத்தியும் சொல்றாங்க. எல்லார் கிட்டயும் ஒரு டாட்டம் இருக்கும். அதை வெச்சி, அவங்கவங்க, தான் கனவுல இருக்'கோமா', நிஜத்துல இருக்கோமான்னு கண்டுபுடிச்சிப்பாங்க. அப்படியொரு டாட்டம்தான், முதல் காட்சில காப் கைல இருக்கற பம்பரம். அது காபோட டாட்டம். அதை சுத்தி பார்த்து, விழுந்தா நிஜம்னும், சுத்திகிட்டே இருந்தா கனவுன்னும் காப் தெரிஞ்சிப்பாறு. 
இதை படத்துல பல முறை அவர் செஞ்சி பாக்கறாரு. 

அடுத்து கிக். ஒரு கனவுலேர்ந்து முழிக்க, நிஜத்துல கிக்குனு ஒரு விஷயத்தை பயன்படுத்தறாங்க. ஒரு இடத்துலேர்ந்து, எந்த பிடிமானமும் இல்லாம கீழ விழறது (freefall) தான் கிக். உதாரணத்துக்கு நாற்காலிலேர்ந்து பின்னாடி சாஞ்சு விழறது. அப்படி கனவுலகத்துல விழுந்தா, நிஜத்துல முழிக்கலாம்.

இவங்க இன்செப்ஷன் செய்ய வேண்டியது பிஷர்னு ஒரு இளம் தொழிலதிபரோட தலைக்குள்ள. செத்துப்போகப்போற தன்னோட அப்பாவின் மூலமா வர தொழில் சாம்ராஜ்யத்தை அவரே உடைக்கரா மாதிரி யோசனைய விதைக்கனும். அதுக்கு இன்செப்ஷன் பண்ணனும். இந்த வேலைக்காக பிஷர பத்தின எல்லா தகவலையும் சேகரிக்கறாங்க. இறந்த அப்பாவ பார்க்க, பிஷர் விமானத்துல போகும்போது, இன்செப்ஷன் பண்ணலாம்னு முடிவெடுக்கறாங்க.  


இங்க இன்னொரு முக்கியமான விஷயம். இன்செப்ஷன் செய்ய மூணு லேயர்னு முடிவு பண்ணி திட்டம் போடறாங்க. அடுத்தது, நிஜ உலகத்துல பத்து மணி நேரம்னா, கனவுல ஒரு வாரம், கனவோட ரெண்டாவது லேயர்ல ஆறு மாசம் அப்பறம் மூணாவது லேயர்ல பத்து வருஷம்னு கணக்கு மாறும். 

இதுல, லிம்போனு, நம்மூரு அரசியல்வாதி மாதிரி இன்னொரு சார்பற்ற லேயர் இருக்கு. இந்த லேயர் யாருக்கும் சொந்தமில்லை. இங்க இருக்கும்போது, நிஜமா கனவான்னு எந்த சந்தேகமும் வராது. ஆயுசுக்கும் அங்கேயே கெடக்க வேண்டியதுதான். நிஜவுலகத்துல முழிக்கவும் மாட்டாங்க. கோமா மாதிரி ஆகிடும்.

ஒரு சக்தி வாய்ந்த மயக்க மருந்து கொடுத்து பிஷர தூக்கத்துல ஆழ்த்தி, பிஷரோட ஆழ்மனசுல போக இன்செப்ஷன ஆரம்பிக்கறாங்க. 


முதல் லேயர், யூசுப்போட கனவு.

இயாம்ஸும்  சைட்டோவும், ஆர்தரோட சேர்ந்து பிஷர ஒரு வேன்ல கடத்தி கொண்டு போறாங்க. 
போற வழியில பல பேர் இவங்கள தாக்கறாங்க. காப், அதெல்லாம் பிஷரோட மனசுல அவரே ஏற்படுத்தி வெச்சிருக்கற தற்காப்பு. இந்த மாதிரி இன்செப்ஷன் பண்ணுவாங்கன்னு தெரிஞ்சு யார்கிட்டையோ பயிற்சி எடுத்துட்டுகிட்டு இருக்காருன்னு விளக்காராறு.

நடு ரோட்ல திடீர்னு ஒரு ரயில் வேற வருது. அது எப்படின்னு யாருக்கும் புரியல. எப்படியோ கஷ்டப்பட்டு, பின்னி மில் மாதிரி ஒரு எடத்துக்கு வராங்க. ஆனா சைட்டோ உடம்புல ஒரு குண்டு பாஞ்சிருக்கு. இதுக்கு மேல இவரால மேற்கொண்டு தொடர முடியாது. அதனால அவரை சுட்டு, நிஜ உலகத்துல முழிக்க வெச்சிடலாம்னு ஆர்தர் சைட்டோவ சுட முயற்ச்சி பண்றாரு. 

ஆனா, இவ்வளவு பவர்புல்லான மயக்க மருந்தோட வீரியம் குறையறதுக்கு முன்னாடியே, கனவுல இறந்து போனா, அவங்க லிம்போவுக்குதான் போவாங்க, முழிக்க மாட்டாங்கன்னு, காப் ஆர்தரை தடுக்கராறு. அரியாட்னே, ரயில் பத்தி காப் கிட்ட கேட்கும்போது, அது மால்னால தான் வந்துச்சுன்னு ஒத்துக்கராறு. அதை பத்தின முழு கதைய சொல்றாரு.

FLASHBACK

காப் மால் ரெண்டு பேருமே இந்த மாதிரி கனவுல திருடர வேலைல ஈடுபடறவங்க. ஒரு முறை இதை வெச்சி பரிசோதிச்சு பார்க்கும்போது, எக்கு தப்பா ரெண்டு பேரும் லிம்போவுக்கு போயிடறாங்க. காப், லிம்போ உண்மையில்ல, கனவுன்னு மால் கிட்ட சொல்லியும் அவங்க அங்கேர்ந்து வர மறுக்கறாங்க. அம்பது வருஷம் லிம்போவுலையே சந்தோஷமா இருக்காங்க.


கடைசியா எப்படியோ காப், மால்-ஐ நிஜ உலகத்துக்கு வர சம்மதிக்கவெக்கராறு. ஒரு ரயில் தண்டவாளத்துல ரெண்டு பேரும் தலையவெச்சி, இறந்து போய், நிஜவுலகத்துக்கு திரும்ப வராங்க. ஆனா அந்த லிம்போவோட தாக்கம் அதிகமா இருக்கறதுனால, நிஜ உலகத்துக்கு வந்த அப்பறமும், மால், அதுதான் கனவுன்னும், அங்க இறந்துபோனா நிஜவுலகத்துக்கு போகலாம்னும் நினைக்க ஆரம்பிக்கறாங்க. 

இதனால, அவங்களோட கல்யாண நாள் அன்னிக்கி, அவங்க எப்பவும் கொண்டாடுற ஹோட்டல் ரூம்லேர்ந்து மால் கீழ விழுந்து, தான் நிஜ உலகத்துக்கு போகனும்னு தற்கொலை பண்ணிக்கறாங்க. அதுக்கு முன்னாடியே, தன்னோட லாயர் கிட்ட, காப் தன்னை கொல்ல முயற்சி பன்றார்னும் சொல்லிடறாங்க. அப்போதான், தன் கூடவே காப் வருவார்னு அப்படி பண்றாங்க. இதனால, அவங்க இறந்த அப்பறம், கொலை பழி காப் மேல விழ, காப் அந்த நாட்டை விட்டு ஓடறாரு. 

Back to கனவு

இங்க முதல் லேயர்ல, இயாம்ஸ், பிஷரோட காட்பாதர் பிரவுனிங் மாதிரி வேஷம் போட்டு, தன்னை யாரோ டார்ச்சர் பண்றா மாதிரி கத்தறாரு. ஆர்தரும் காபும், பிஷர்கிட்ட ஒரு கஜானாவை திறக்கத் தேவையான நம்பர் கேட்ட்கறாங்க.
ஆனா அவருக்கு ஒண்ணும் தெரியலை. பக்கத்துல பிரவுநிங்கோட கத்தல் வேற.. பிஷர், பிரவுனிங்கோட பேசி பார்க்கறேன்னு சொல்றாரு. 

பிரவுனிங்கும் (இயாம்ஸ்) பிஷரும் பேசும்போது, பிஷர் அப்பா எழுதுன ரெண்டாவது உயில் பத்தி பிரவுனிங் சொல்றாரு. அது வெளிய வந்தா, மொத்த சாம்ராஜ்யமும் ஒண்ணுமில்லாம ஆகிடும், பிஷர் தேவைப்பட்டா அதை பயன்படுத்திக்கலாம். பிஷர், தான் எதுக்கு மொத்த சாம்ராஜ்யத்தையும் அழிக்கணும்னு கேட்கும்போது, "ஒரு வேளை உன் அப்பா, நீ உன்னோட சொந்த முயற்சில பெரிய ஆளா வரணும்னு நினைச்சிருக்கலாம்"னு பிரவுனிங் சொல்றாரு.

இதே நேரத்துல, பிஷரோட (கனவுலக) பாடிகார்ட்ஸ் அந்த இடத்தை நெருங்கறாங்க. அந்த இடத்தை காலி பண்றதுக்கு முன்னாடி, பிஷர் கிட்ட மறுபடியும் 
காபும் ஆர்தரும் கஜானா நம்பர கேட்கறாங்க . ஆனா பிஷர் தெரியாதுன்னு சொல்ல, ஏதொ ஒரு நம்பர சொல்லுனு அவங்க மிரட்ட, பிஷர், வாய்க்கு வந்த நம்பர சொல்றாரு. அங்கேர்ந்து ஒரு வேன்ல எல்லாரும் போறாங்க. அதுலையே மயக்க மருந்து கொடுத்து, அடுத்த லேயர் கனவுக்குப் போறாங்க. வண்டிய யூசுப் ஓட்டறாரு. 

ரெண்டாவது லேயர் ஆர்தரோட கனவு . 
(முதல் லேயர்ல கிக், வேனோட, எல்லாரும் ஒரு பாலத்துலேர்ந்து, தண்ணியில விழறது)

ரெண்டாவது லேயர்ல, ஒரு ஹோட்டல்ல, காப், பிஷர் கிட்ட வந்து, தான் அவரோட பாதுகாப்பு அதிகாரி சார்லஸ்னு அறிமுகப்படுத்திக்கராறு. அவர் இருக்கறது கனவுன்னும் நம்பவைக்கராறு. பிரவுன்ங்கை நம்பாதீங்க, அவர் கொஞ்சம் சரியில்லைனு ஒரு விஷயத்தையும் சொல்லி வைக்கறாரு. கொஞ்சம் கொஞ்சமா பிஷரோட மனசே பிரவுனிங்க கெட்டவரா சித்தரிக்குது. காப் இன்னும் பல விஷயங்கள் பேசலாம்னு பிஷரை ஒரு ரூமுக்கு கூட்டிட்டு போறாரு. அங்க இருக்கற பிரவுனிங் (forger) , தான் தப்பு பண்ணதா பிஷர் கிட்ட ஒத்துகிட்டு, இவ்வளவு வருஷமா உழைச்ச குடும்பம், ரெண்டாவது உயில்னால உடையறதை விரும்பாம அப்படி செஞ்சதா சொல்றாரு.. 


இந்த நேரத்துல, காப், பிரவுனிங் மனசுல இருக்கற ரகசியத்தை தெரிஞ்சிக்கிட்டுதான் ஆகணும்னு பிஷர சம்மதிக்க வெச்சி, அவரோட கனவுக்குள்ள போறாங்க. ரெண்டாவது லெவல்ல காவல் ஆர்தர். இதே நேரத்துல, பிஷரோட தற்காப்புகள், ஆர்த்தர தாக்க வர, அவர் அவங்கள அடிச்சி வீழ்திட்டு, இவங்க இருக்கற ரூமுக்கு வரும்போது, முதல் லெவல்ல கிக் ஆரம்பிக்குது. 

வேன் மேலேர்ந்து கீழ விழர்தால, ரெண்டாவது லெவெல்ல புவியீர்ப்பு விசை இல்லாம போகுது. இப்படி இருந்தா கிக்  கொடுக்கறது கஷ்டம்னு உணர்ற ஆர்தர், இருக்கற எல்லாரையும் எடுத்து கொண்டு போய், லிப்டோட கட்ராறு.

மூணாவது லேயர் (பிஷரின் கனவு), 


ஒரு பனி மலைல எல்லாரும் இருக்காங்க. அங்க ஒரு கட்டிடத்த நிறைய பேர் பாதுகாக்கறாங்க. காப், பிஷர்கிட்ட, அதுதான் பிரவுனிங் ரகசியத்தை வெச்சிருக்கற இடம்னு சொல்லி. அங்க போக சொல்றாரு. எல்லாரும் பிரிஞ்சு, அங்க இருக்கறவங்க கிட்ட சண்டை போட்டு, எப்படியோ பிஷர் அந்த கட்டிடத்தோட முக்கியமான பகுதிய அடைய உதவி பண்றாங்க. 

இதுக்கு நடுவுல, ஒரு குறுக்கு வழிய அரியாட்னே சைட்டோகிட்ட சொல்லும்போது, காபும் அதை கேட்டுடறாரு. இதனால, பிஷர் அந்த ரகசிய அறையை திறக்கதுக்கு முன்னாலேயே மால் அங்க வராங்க. தூரத்துலேர்ந்து இதை பாத்திக்கிட்டு இருக்கற அரியாட்னே, கூட இருக்கற காபை, சுட சொல்றாங்க. தன்னோட மனைவிய சுட தயங்கற அந்த நேரத்துல, மால் பிஷர சுட்டுடறாங்க. அப்பறம் காப் மாலை சுட்ராறு.

எல்லாரு பிஷர் விழுந்துருக்கற எடத்துக்கு வராங்க. சைட்டோவும் இறந்து போகராறு. பிஷர் இன்னும் இறந்து போகலைன்னும், அவர் காபோட லிம்போவுலதான் இருக்கனும்னும் அரியாட்னே சொல்றாங்க. ஏன்னா, காப் தன்னை தேடி வர, மால், அங்க தான் பிஷர வெச்சிருப்பாங்கன்னு சொல்றாங்க. இதுல முக்கியமான விஷயம், மால் காபோட குற்ற உணர்வின் பிரதிபலிப்புதான்.


இயாம்சை, பிஷருக்கு ட்ரீட்மென்ட் கொடுக்க சொல்லிட்டு, அரியாட்னேவும் காபும், அம்பது வருஷம் காப் - மால் வாழ்ந்த காபோட லிம்போவுக்கு போறாங்க. அங்க ஒரு வீட்ல மால் இருக்காங்க. அவங்க, காப், வயசாற வரைக்கும் பிரிய மாட்டோம்னு கொடுத்த தன்னோட வாக்குறுதிய காப்பத்தலைன்னு குத்தம் சொல்றாங்க. காப் குழப்பத்துல இருக்கார்னும், லிம்போதான் நிஜம்னும் சொல்றாங்க. இங்க காப் இன்னொரு பிளாஷ்பாக் சொல்றாரு.

முன்னாடி லிம்போவுல இருக்கும்போது, மால், அவங்களோட டாட்டம், அதாவது இப்போ காப் பயன்படுத்தற பம்பரத்தை, எடுத்து ஒழிச்சு வெச்சிடறாங்க. காப் இதை கண்டுபுடிச்சு, மால் இருக்கறது நிஜ உலகம் இல்லைன்னு 
மாலுக்கே ஒரு இன்செப்ஷனை செய்யறாரு. இதனால்தன், மால் காப் சொல்றதை கேட்டு, ரயிலுக்கடியில தலை வெக்கறாங்க. ஆனா நிஜத்துல வந்த அப்பறமும், இது கனவுன்னு காப் விதைச்ச எண்ணம் அவங்களவிட்டு போகாததுனால,  அவங்க தற்கொலை பண்ணிக்கறாங்க. இதனால்தான், இன்செப்ஷன் சாத்தியம்னும் காபுக்கு தெரிய வருது. 

மறுபடியும், இங்க லிம்போவுல, பிஷர கண்டு புடிக்கறாங்க. காப், தான் சைட்டோவ கண்டுபுடிக்கனும்னு சொல்றாரு. இதனால, அரியாட்னே, பிஷர கீழ தள்ளிவிட்டு, தானும் கீழ விழறாங்க. மூணாவது லேயர்ல இயாம்ஸ் கொடுக்கற ஷாக்கோடா, இந்த கிக்கு வேலை செஞ்சி, மூணாவது லேயர்க்கு போறாங்க. பிஷர் உயிரோட வராரு. அந்த ரகசிய அறைல இருக்கற விஷயத்தையும் தெரிஞ்சிக்கராறு.


இதே நேரத்துல, அந்த கட்டிடம் தகர்க்கப்பட்டு, எல்லாரும் அஸ்திவாரத்துக்குள்ள விழறாங்க, அதே நேரத்துல ரெண்டாவது லேயர்ல இருக்கற லிப்டுல ஏதொ செஞ்சி, ஆர்தர் அதை ப்ரீஃபால் ஆக்கராறு , அப்படியே முதல் லேயர்ல கரெக்டா வேன் தண்ணில விழுது. எல்லா கிக்கும் சரியா வேலை செய்ய, எல்லாரும் கரெக்டா கண்ணு முழிக்கறாங்க. இன்செப்ஷன் வெற்றிகரமா முடியுது.

மறுபடியும் முதல் காட்சி வருது. காப், லிம்போவுல பார்க்கற அந்த கிழட்டு சைனா காரரு நம்ம சைட்டோதான். காப் அவர் கிட்ட பேசி, ரெண்டு பேரும் சுட்டுகிட்டு, நிஜத்துக்கு வராங்க. வாக்கு கொடுத்தா மாதிரி, சைட்டோ, தன்னோட செல்வாக்கை பயன்படுத்தி, காபை அமெரிக்காவுக்குள்ள எந்த பிரச்சனையும் இல்லாம நுழைய வெக்கறாரு. 


காப் தன்னோட வீட்டுக்கு வந்து, எப்பவும் குழந்தைகள் விளையாடுற அந்த காட்சிய பாக்கறாரு. இது கனவா நிஜமான்னு தெரிஞ்சக்க, டாட்டம எடுத்து சுத்தராறு,  ஆனா இந்த முறை, குழந்தைகள் முகத்தை காமிக்கறாங்க. அப்பாகிட்ட ஓடி வராங்க. காபும், சுத்தி விட்ட பம்பரத்தை மறந்து, அவங்க கிட்ட ஓட, கேமரா சுத்திகிட்டு இருக்கற பம்பரத்த காமிக்குது. அது இன்னும் சுத்திகிட்டே இருந்து, விழறா மாதிரி நிலை தடுமாற, படம் முடியுது.



ங்கொக்கா மக்கா... ஒரு வழியா சொல்லிட்டேண்டா சாமி... 
ரொம்ப சொதப்பலைன்னு நினைக்கறேன். 
மறுபடியும் எல்லாருக்கும் நண்ணி...


வெற்றி வெற்றி வெற்றி.. சொல்லி முடிச்சிட்டேன்...

Wednesday, August 18, 2010

Inception பதில்கள் - 3

இன்னும் தொடருது...

@ஜெய்
//படத்துல புரியாதது காட்டாதது எல்லாமே ஓபன் எண்ட்-ஆ ஒத்துக்க முடியலைங்க... //
 கண்டிப்பா அப்படி இல்லை...

//நாம எல்லாருமே புரியாத விஷயங்களையும் ஓபன் எண்ட்-னு நினைச்சுகிட்டு,
நமக்கு பிடிச்சா மாதிரி புரிஞ்சுக்கறோம்னு நினைக்கிறேன்... //
இருக்கலாம்... ஆனா நூறு சதவீதம் அப்படியேன்னு நினைக்கவும் முடியாதே...

//இந்த முக்கியமான விஷயங்களை ரெண்டு பக்கமும் argue பண்ணதான் படத்துல அங்கங்க வேணும்னே ரெண்டு பக்கத்துக்கும் argument points வச்சுருக்காங்க இல்லையா... //
நோலனுக்கு வேற வேலையே இல்லைங்க. வாங்க ஆர்க்யூ பண்ணுவோம் :)

//முடிவு நிஜம்னு சொல்லணும்னா, க்ளைமாக்ஸ்ல குழந்தைகள் வளர்ந்து இருக்கது, ஹீரோ கையில மோதிரம் இல்லாதது, (படம் பேர் போட்டு முடிச்சவுடனே டோட்டம் கீழே விழற சத்தம் கேக்குதாமே!!!) //
அப்படி எதுவும் கேட்கலை. புரளிகளை நம்பாதீர்...

//முடிவு கனவுன்னு சொல்லணும்னா.......அதே இடத்துல விளையாடறது, இந்த மாதிரி arguments சொல்லலாம்...//
எனக்கு அதே மாதிரி டிரெஸ்னு தான் தோணுது..

//குழப்பத்துல இருக்கதே பெட்டர்னு நினைக்கிறேன்... //
நீங்களும் காப் மாதிரியே பேசறீங்களே...

//ஒவ்வொருத்தருக்கும் ஒரு லிம்போ இருக்கும்... நாலாவ்து லெவல் ஃபிஷருக்குதான் லிம்போ...//
கண்டிப்பா அது  ஃபிஷருக்குதான் லிம்போ, ஆனா அவரை கண்டெடுக்கறது காபோட லிம்போவுல. ஏன்னா அங்க தான் அவரை மால் புடிச்சு வெச்சிருக்காங்க.

//அப்பறமா, ஹீரோ வேன் லெவல்ல தண்ணிக்குள்ள இருக்கதால செத்துப்போய் சைட்டோவோட லிம்போவுக்கு போய் அவரை காப்பாத்தறாரு.. :)//
இதை ரெண்டு விதமா சொல்லலாம். அவர் தண்ணிக்குள்ள மயக்கத்துல இருக்கார்னும், ஏற்கனவே லிம்போல இருக்கறதால, அங்கேர்ந்தே சைட்டோவா தேடற வேலைய தொடங்கரார்னும் வெச்சுக்கலாம். ஏன்னா, ஃபிஷர காப்பாத்தின அப்பறம், அவர் எந்த கிக்கும் பயன்படுத்தலை

//ஃபிஷர் சாகவே இல்ல... குண்டடி பட்டு மயக்கம் ஆகிடறான்............
மால் செத்துட்டதால, அவங்க சுட்ட புல்லட் காயம் போயிடுச்சு... :)//
இது என்னோட புரிதல் கூடவும் கொஞ்சம் ஒத்துப்போகுது. ஃபிஷர் செத்ததா முடிவு பண்ணவே இல்லை. இயாம்ச ட்ரீட்மென்ட் கொடுக்க சொல்லிட்டுதான் அவங்க லிம்போவுக்கு போறாங்க.

//நாலாவது லெவல் காப்-ன் சப்கான்ஷியஸ்.....அதான் அவனை கூட்டிட்டு வர அங்க போறாங்க... //
அது லிம்போதாங்கர்துல இன்னும் என்னக்கு எந்த டவுட்டும் வரலை. இனிமேலும் வராதுன்னு நினைக்கறேன்.

//இப்படி நிறைய... இதெல்லாம் தப்புன்னு என்னால சொல்ல முடியல... ஆனா, சரின்னும் ஒத்துக்கமுடியல... //
அதுதான் டைரக்டரும் எதிர்பார்க்கறார்...
 
//மால்-ம், சைட்டோ-வும் ஒரே மாதிரி சொல்லற “take a leap of faith" டயலாக்....... தாத்தா சொல்லற "they come here only to sleep again. dream is their real world. who are you to say otherwise?" டயலாக்... இதெல்லாம் முக்கியமான விஷயங்கள்னு தோணுது எனக்கு... ஏன்னா ஹீரோ க்ளைமாக்ஸ் கனவுதான்னு புரிஞ்சே அதுல வாழ தயாராகுறானா?//
இந்த இடத்துல, இன்னொரு interpretationஉம் சில பேர் முன்வைக்கறாங்க. இயாம்சொட இடத்துல போயிட்டு, அந்த செடேஷன பரிசோதிக்கற இடத்துலேர்ந்து (தாத்தா டயலாக் அப்பறம்) எல்லாமே காபோட கனவுன்னும் சொல்றாங்க.

//Is there a final truth to MEMENTO? Christopher Nolan claims there is one.//
படத்தோட கிரானலாஜிகல் வெர்ஷன பார்த்த அப்பறம், முடிவு இருக்குனுதான் தோணுது.

@பாலி
//நான் திரும்ப படம் பார்க்கும்போது கன்ஃபர்ம் பண்ணிகிட்டேன். வேறு உடைகள்.//
தல, அதே செட் உடைகள் தான். நான் அதுக்காகவே நூத்தி இருவது ரூவா செலவழிச்சு பார்த்தேன். இன்னொரு தடவையும் பார்க்க ரெடி.

//ஆக்சுவலி இந்த மேட்டரையெல்லாம்.. நான் கி.மு 200-லயே தினமும் 12-16 மணிநேரமா படிச்சி வந்திருந்தேன்.//
தல, நானும் கனடா கபோதிக்கு, பத்து வருஷத்துக்கு முன்னாடியே உங்கள refer பண்ணி, இதைப் பத்தி எழுதி, ஒரு மெயில் அனுப்பினேன். பப்ளிஷ் பண்ணலை. இலக்கியவாதிகள மதிக்கத் தெரியாத கம்மனாட்டி பசங்க.. இதைப் பத்தி, ராணி முத்துல வேலை செய்யற என்னோட தோழிகிட்ட கூட, டப்ளிங்க்ல ஒக்காந்து பேசியிருக்கேன்.

@ஜெய் 
//நாட்டுல இவ்ளோ குழப்பம், சண்டை, சச்சரவு வருமா?//
கலைஞர்களுக்குள்ள இதெல்லாம் சகஜம் ....

@ஜெய் + பாலி
ஸ்வேதா யாரு??

அடுத்த பதிவுல, நண்பர் பத்மநாபன் கேட்டா மாதிரி, படத்தோட கதைய முடிஞ்சவரைக்கும் சிம்பிளா எழுதறேன்.. மறுபடியும் எல்லாருக்கும் நன்றி.. :)
கேள்விகள் இல்லாமையே பதில் சொன்னா அதுக்கு என்ன பேரு???

Thursday, August 12, 2010

Inception பதில்கள் - 2

போன பதிவுல சொன்ன பதில்களுக்கான சந்தேகங்களுக்கு பதில் சொல்லலாம்னு பார்த்தா, அதுவே கமெண்ட் பேஜ்ல நிறைய வந்துருச்சு. அதனால தனிப்பதிவா போட்டு, கல்லா கட்டலாம்னு பாக்கறேன் :P

@எஸ் கே -
மிக்க நன்றி :)

@பாலி -
தல, நீங்க வேற ஒரு முக்கியமான வேலைல இருந்தாதால உங்க வேலை பளுவ குறைக்க முயற்சி செஞ்சேன் :)
கிளைமாக்ஸ்ல வரதும் அதே செட் உடைகள் மாதிரி தான் தெரியுது. இத மாதிரி ரெண்டு மூணு சந்தேகங்களுக்காகவே ரெண்டு முறை படத்தை பார்த்தேன்...
அண்ட்மன்னிக்கவும், முதல் கேள்விய ஒழுங்கா படிக்காம பதில் சொல்லிட்டேன். ஓபன் எண்டிங்னு சொன்னது முடிவ. ஆரம்பம் லிம்போதான்..
ஏன், விளையாட்டுக்கு வரலைன்னு சொன்னீங்க??? இங்க கண்டிப்பா வேற யாரும் வந்து பிரச்சனை பண்ண மாட்டாங்க. கவலைபடாதீங்க.

@சர்வேசன்
//லிஃப்ட்ல மயக்கத்துல இருக்கரவங்களை எழுப்பினா போதுமே, பனிமலை வேட்டு வச்சு ஏன் சாகப் பாக்கணும்?//
எனக்கு நிஜமாவே உங்க கேள்வி புரியலைன்னுதான் சொல்லணும் :(
இருந்தாலும் கொஞ்சம் விளக்கிடறேன்.
முதல் லெவல் -  யூசுபின் கனவு - அங்க கிக் அந்த தண்ணில விழற வண்டி
இரண்டாவது லெவல் -  ஆர்தரின் கனவு - அங்க கிக் லிப்ட்டு
மூணாவது லெவல் - இயாம்ஸோட கனவு - அங்க கிக் அந்த இடம் தகர்க்கபடுவது, அப்போதான் எல்லாரும் அப்படியே கீழ இருக்கற அஸ்திவார பள்ளத்துல விழுவாங்க.
நாலாவது லெவல் - யாரோட கனவும் இல்லை, லிம்போ - அங்க கிக் எப்படியாவது நாம லிம்போல இருக்கோம்னு உணர்ந்து, சாவறது or free fallaa கீழ விழறது...

@ஜெய்
//அதுனாலயே முதல்ல ஃபாலோவர் ஆயிட்டேன்... //
மிக்க நன்றி :)

//இன்னைக்கு இந்த படத்தை புரிஞ்சுக்காம கிளம்பப்போறதில்லை...//
வாங்க பழகலாம் :))

//நியூயார்க் டைம்ஸ் படிக்கிற தோழி இல்லாம இருக்கணும்னு வேண்டிகிட்டு, கமெண்டறேன்...//
எனக்கு பாம்பே டைம்ஸ் படிக்கற தோழி கூட இல்லை... யாராச்சும் இருந்தா சொல்லுங்க.. :(
நான் சென்னை டைம்ஸ் படிப்பேன் :P

// கமெண்ட் டெம்ப்ளேட் கொஞ்சம் அகலமா//
மொத்த டெம்ப்ளேட் தான் மாத்தணும் தல ;(

//முதல் காட்சி ரியல் இல்லைதானே?//
மறுபடியும் மன்னிச்சு.. கேள்விய ஒழுங்கா பார்க்கலை..அது ரியல் இல்லை. லிம்போ

//இது எங்கேயும் சொல்லப்படற மாதிரி தெரியல/?
நேரடியா எங்கயும் சொல்லல. ஆனா சில டயலாக் imply பண்ணுது. அதனாலதான் சொன்னேன்.

// எல்லாரும் செத்தா லிம்போவுக்கு போவோம்னு தெரிஞ்சதும் அவ்வளவு டென்ஷன் ஆகறாங்க...?//
ஃபிஷர் போனது காபின் லிம்போவுக்கு. அதனால அவரை ஈசியா கண்டுபுடிக்கறாங்க. முதல்ல டென்ஷன் ஆவர்துக்கான காரணம், அவங்க அவங்களோட லிம்போவுல காணாம போயிடுவாங்கன்னு காரணத்துனால. சைட்டோவ காப்பத்த காபுக்கு எவ்வளவு காலம் புடிச்சிதுனு படத்துல சொல்லல. ஆனா அவர் சைட்டோவை கண்டு புடிக்கும்போது,  சைட்டோ தொண்டுக்கெழமா இருக்கறாரு. காபிற்க்கும் ஒரு 40-50 வயசு இருக்கறா மாதிரி முடி எல்லாம் நரைச்சிருக்கு.

//ஹீரோவே மூணாவது லெவல்ல(பனிமலை) இருக்கப்ப, ஹீரோவோட மனைவி எப்படி லிம்போல இருப்பாங்க??//
மால் அங்க வரக்கூடாதுன்னு தான், கனவுகளோட ஆர்க்கிடேக்ச்சர காப் தெரிஞ்சிக்காம இருக்காரு. ஆனா, அரியாட்னே எமேர்ஜன்சி என்ட்ரி பத்தி சொல்லும்போது காபும் அதை கேட்டுடறார். அதனால மாலுக்கும் இப்போ அங்க எப்படி போறதுன்னு தெரியும். அப்படிதான் மால் அங்க வராங்க. ஹீரோவின்  மனைவி எப்பவுமே லிம்போலதான் இருக்காங்க. காபுக்காக வெயிட் பண்றாங்க. இங்க முக்கியாமான விஷயம், லிம்போல இருக்கறதும், ஒவ்வொவொரு முறையும் பிளான கெடுக்கர்தும் காபோட குற்ற உணர்வின் பிரதிபலிப்புதான்.

//மூணாவ்து லெவல்ல குண்டடி பட்டு, திரும்ப மூணாவ்து லெவலே வந்தா?//
திருத்தம், மூணாவது லெவல்ல அடிபட்டு, நாலாவது லிம்போவுக்கு போயிட்டு, மறுபடியும் மூணாவது லெவலுக்கு வரார். வீரியம் குறைஞ்சு போய், திரும்ப defibrillatorஅ கிக்கோடா சின்கரனைஸ் பண்ணி அவர உயிரோட கொண்டு வராங்க.

//சைடோவை கண்டுபிடிக்க காப் லிம்போல இருந்தாதானே முடியும்? //
அதானால்தான் அரியாட்னே சுட வரும்போது தடுத்து, அவர் லிம்போலயே இருக்காரு.

//அவங்க பாட்டுக்கு சுட்டுட்டு காப் நிஜ உலகத்துக்கு போயிட்டா, சைட்டோவை யாரு காப்பாத்தறது?//
அவங்க ஒரு பதட்டத்துல சுட வரும் போதுதான் காப் சொல்லுவாரு, சைட்டோ இந்த நேரத்துக்கு இறந்துருப்பாறு, அதனால அவர தேடி கூப்ட்டுட்டு வரேன்னு.

//மோதிரம் போடலைன்னு சொன்னேங்க...//
நான் கவனிக்கலை. ஒரு யூகத்துலதான் சொன்னேன்.

//ஏன் ரெண்டு பேர் பார்வையில காட்சி அமைக்கணும்? அப்படி என்ன significance அதுக்கு?//
முன்னாடியே சொன்னா மாதிரி, இதுக்கு எந்த significanceஉம் இருக்கணும்னு அவசியம் இல்லை. நாம கொஞ்சம் ஓவராவே யோசிக்கறோம் ;)

// நான் ஏதாவது தப்பா புரிஞ்சுட்டாலும்//
இத மாதிரி ஓபன் எண்டிங் படங்கள்ல, தப்பு எது, ரைட்டு எதுன்னு சொல்லவே முடியாது.

 மறுபடியும் கேள்வி கேட்ட எல்லாருக்கும் நன்றி. இன்னும் இருந்தாலும் கேளுங்க. எதையும் தாங்கும் 'இதையும்'.. :)

இன்னுமா நான் யாருன்னு தெரில??? ஹா ஹா ஹா

Friday, February 19, 2010

மற்றும் பல... (cinema special)

ஆயிரத்தில் ஒருவன் படத்தை நான் முதல் நாளே பாத்தாலும், அதற்கான விமர்சனம் எழுதனுன்னு எனக்கு தோணவே இல்லை. வழக்கம் போல நம்ம பதிவுலகத்துல, படத்தை பல பேர் கிழிச்சி தொங்க போட்டாலும், சில பேர் வாயார வாழ்த்தினாங்க. எல்லாருமே பொதுவா சொன்ன ஒரு விஷயம், இப்படி வித்தியாசமா சிந்திச்சு ஒரு படத்தை எடுத்த செல்வராகவனை பாராட்டியே ஆகணும்னு. எனக்குப் படம் ரொம்ப பிடிச்சிருந்துது. படம் ஆரம்பிச்ச அஞ்சாவது நிமிஷமே நம்மை படத்துக்குள்ள, டைரக்டர் எடுத்துட்டுப் போய்ட்டார். மொக்க சவுண்ட் இருக்குற சங்கம் தியேட்டர்லையே இப்படினா, சத்யம் தியேட்டர்ல இன்னும் நல்லா இருந்திருக்கும். முதல் பாதி வேகம், ரெண்டாவது பாதி சொதப்பல்னு நான் எந்த குறையும் சொல்லப் போறதில்லை. சில குறைகள் இருந்தாலும், எனக்குப் படம் மொத்தமுமே பிடிச்சிருந்துது.
------------------------------------------------------------------------------------------------------------------
அடுத்து, மறுபடியும், நான் ரொம்பவே ரசிச்ச, கோவா பத்தி பேச வேண்டியிருக்கு. படம் பார்த்து முடிச்ச உடனே சொன்னேன், வயசான ஆளுங்களுக்கு இந்த படம் பிடிக்காதுன்னு.  அதேமாதிரி, பல பதிவர்களுக்கு இந்த படம் பிடிக்கல. என்ன குறைய கண்டாங்கன்னு தெரியலை. படத்தை கண்டபடி கண்டம் பண்ணாங்க. வெங்கட் பிரபு, சவுந்தர்யா காசுல கூத்தடிச்சிருக்காரு, ரெண்டாவது பாதி சரியில்லை, blah blah blah. படம் பார்க்கும்போது எந்த குறையும் தெரியலை. எனக்கு மட்டும்தான் இப்படியான்னு பார்த்தா, என் நண்பர்கள் எல்லாருக்குமே படம் ரொம்ப பிடிச்சிருந்துது. முக்கியமா சில பொண்ணுங்களுக்கு, சம்பத் கேரக்டர் ரொம்ப பிடிச்சிருந்துது. ஒரு வேளை எங்களுக்கு படம் பார்க்க தெரியலியோ???
------------------------------------------------------------------------------------------------------------------
தமிழ் படம்னு ஒரு படம் வந்துருக்கு இல்லையா. எல்லாருமே சிலாகிச்சு, தலைல தூக்கி வெச்சு கொண்டாடினாங்க. நானும் ரொம்பவே எதிர்பார்த்தேன். நேத்து அந்த படத்தை பார்த்தேன். Surprisingly, என்னை அவ்வளவா இம்ப்ரெஸ் பண்ணலை. முதல் பாதி நல்லா இருந்துச்சு. இரண்டாவது பாதி ரொம்ப இழுவை. அதுவும் கிளைமாக்ஸ்ல, ஒவ்வொரு தடையா தாண்டி போறது, ரொம்ப மொக்கை. கண்டிப்பா படம் மோசம் இல்லை. நிஜமாவே பாராட்டப் படவேண்டிய முயற்சி தான். எல்லாருக்கும் செம்ம தில்லுதான். ஆனா, என்னால புரண்டு புரண்டு சிரிக்க முடியலை. சில காட்சிகள் எல்லாம், கண்டிப்பா இந்த படத்தை கலாய்ச்சே ஆகணும்னு திணிச்சா மாதிரி இருக்கு. இதோட பார்ட்-2 வந்தா எப்படி இருக்குன்னு பார்க்கணும். (வரவிடுவாங்களா, நான் எடுக்கறேன்...:)
------------------------------------------------------------------------------------------------------------------
இன்னிக்கு காலேஜ் டூர் விஷயமா டெல்லி போறேன். வர ஒரு பத்து நாள் ஆகும். ஏதாவது சுவாரசியமா நடந்தா, வந்து பதிவரேன். அதுவரை உங்களிடமிருந்து விடை பெறுகிறேன்... டாட்டா..... :)

  
ஒரு வேளை நகசுத்தியோ????

Wednesday, February 10, 2010

PLAYLIST - JANUARY

ஒரு மிகப்பெரிய ஆச்சர்யம். புது வருடத்துல வந்த பாடல்கள் எதுவும் என்னை அவ்வளவா கவரலை. முக்கியமா விண்ணைத்தாண்டி வருவாயா பாடல்கள் எதுவுமே என்னை ஈர்க்கலை. ஹோசன்னா பாடல் மட்டும் கொஞ்சம் பரவாயில்லை போல இருந்துது. ஆனா பல்லவி முடிஞ்சு மறுபடியும் அதே டியூன் வந்து, ரைம்ஸ் மாதிரி ஆகிடுச்சு. ஆனா, வழக்கம் போல, ரகுமான் ரசிகர்கள் பாடல்களை சிலாகிச்சு, ஆஹா ஓஹோன்னு தள்ளியிருக்காங்க. ஒரு வேளை, காட்சியமைப்போட பார்த்தா எனக்கு புடிக்கும்ம்னு நினைக்கறேன். மத்தபடி, ரகுமானுக்கு மற்றுமொரு வெற்றி படம்.

டிசம்பர் மாசம் playlist எதுவும் போடலை, ஏன்னா எண்ணிப்பார்த்தேன் பதிவுல, playlist பாடல்களையும் சேர்த்து சொல்லிட்டேன். இப்போ, ஜனவரி மாத playlist பார்த்தீங்கன்னா, போன மாசம் சொன்னா மாதிரி, கோவா, தமிழ் படம் & அசல், மூணு படப்பாடல்களும் எனக்கு பிடிச்சிருந்துது.  அதனால,

அசல்
1. குதிரைக்கு தெரியும் - Typical பரத்வாஜ் பாட்டு. படத்துல மொத்தம் ரெண்டு நிமிஷம்தான் வருதுன்னு கேள்விப்பட்டேன். இந்த பாட்டோட வரிகளுக்கே X இல்ல A rating குடுத்துருக்கணும். But நல்ல ரிதம்.

2. டொட்டொடொய்ங் - செம்ம காமெடி லிரிக்ஸ். எப்பவும் விஜய் பாட்டுலதான் இத மாதிரி அர்த்தமே இல்லாம, அதே சமயம், சட்டுன்னு யார் வேணும்னாலும் பாடறா மாதிரி பாடல்களும், வரிகளும் இருக்கும். இப்போ அஜித் பாடலும். முகேஷ் பாடிருக்காரு. ஒண்ணு கவனிச்சீங்களா. அவர் பாடற எல்லா பாடல்களிலுமே இந்த மாதிரி ஏதாவது ஒரு சேட்டை இருக்கு. 
 
3. ஹே துஷ்யந்தா - pick of the album. ரீமிக்ஸ்னும் சொல்ல முடியாது, மெட்லினும் சொல்ல முடியாது. பார்த்த ஞாபகம் இல்லையோ பாடலை அழகா பிட் அடிச்சு, jab we met படத்துல வர ஒரு பாட்டோட beat loop மட்டும் சுட்டு, சூப்பரா assemble பண்ணிருக்காங்க. picturisation சொதப்பாம இருந்தா சரி.

கோவா
4, 5, 6. ஏழேழு தலைமுறைக்கும் - சந்தைக்கு வந்த கிளி பாட்டு ஞாபகத்துக்கு வந்தாலும், very pleasant. கொடுத்து வெச்ச ஆளுங்க. யாருக்கு இத மாதிரி ஒரு வாய்ப்பு கிடைக்கும். அதுவும், போன தலைமுறை உயிரோட இருக்கும்போதே, அவங்களைப் பற்றி புகழ்ந்து பாடறதுக்கு.

இது வரை - படத்துல இந்த பாடல் placement அழகா இருந்துது. ஆனா எதுக்கு அந்த முத்தக் காட்சின்னு தெரியலை. கமல்ஹாசனுக்கு அடுத்து, இங்க யாருக்கும் ஒழுங்கா முத்தம் குடுக்கவும் தெரியலை. என்ன இருந்தாலும், சூப்பர் மெலடி.

வாலிபா வா வா - செம்ம ஜாலி பாடல். நினைச்சு பாக்க முடியாத situation. நல்ல picturisation. ரொம்ப நாள் கழிச்சு, spb இளையராஜாவோட சேர்ந்து பாடிருக்காரு. (தனித் தனியா ரெகார்ட் பண்ணிருப்பாங்களோ). ரெண்டாவது interlude அட்டகாசம்.

தமிழ் படம்
7, 8. பச்சை......... - நல்ல கருத்துள்ள பாடல். முதல்ல, விஜய் ரசிகர்கள், சுறா பட பாடல்னு நினைச்சு, ரொம்ப ரசிச்சாங்கன்னு கேள்விப் பட்டேன். படத்துல பார்த்த அப்பறம், செம்ம காண்டுல இருக்காங்கன்னும் கேள்விப்பட்டேன். மறுபடியும் முகேஷ்.

குத்து விளக்கு - ஒரு அமைதியான குத்து பாடல். oxymoron மாதிரி இருக்கோ?? ஆனாலும் பாட்டு அப்டிதான். கஸ்தூரி இந்த பாடலுக்கு ஆடுறத நினைச்சு கூட பாக்க முடியலை. (பட டிக்கெட் இன்னும் கிடைக்கலை)

9. ஒடைக்கணும் ஒடைக்கணும் - புகைப்படம்.
 இந்த பாடல் எனக்குப் பிடிக்க ஒரே காரணம், இது ஷண்முகப்ரியா ராகத்துல இருக்கு. இந்த ராகங்கள் கண்டுபுடிக்கறது, ரொம்ப சுவாரசியமா இருக்கும். அதுவும் எனக்கு தெரிஞ்ச ஒண்ணு ரெண்டு ராகங்களை நான் ஈசியா கண்டுபிடிக்கும்போது, எனக்கு அந்த பாடல்களை, அதுக்காகவே பிடிக்கும். ரொம்ப நாள் கழிச்சு, கங்கை அமரன் இசையமைச்ச பாடல். ஆரம்பத்துல வர ஓட்டை தமிழ் டயலாக் தவிர, பெரிய குறை ஒண்ணும் இல்லை. ஏற்கனவே கேட்டா மாதிரி இருந்தா, நீங்க நாட்டு சரக்கு பாடலை இன்னும் மறக்கலைன்னு அர்த்தம். (அதுவும் ஷண்முகப்ரியா!!)

10. என் காதல் சொல்ல - பையா
வழக்கம் போல, யுவன் ஷங்கர் ராஜா மட்டுமே பாடக்கொடிய, ஸாரி, பாடக்கூடிய பாடல். குழப்பமில்லாத, simple டியூன். இந்த படத்துல வர, எல்லாருக்கும் பிடிச்ச, துளி துளி பாடலை விட, இந்த பாடல் எனக்கு புடிச்சிருக்கு. (முதல்ல வி.வ, இப்போ இது. எனக்கு ஏதாவது பிரச்சனையா???)

p.s. இவ்வளவு நாள் கழிச்சும், அவதார் பட டிக்கெட் கிடைக்கலை :(

p.s.2 - ரிசர்ச் வேலைல கொஞ்சம் பிஸி. ரெகுலரா பதிவலைன்னா தப்பா நினைக்காதீங்க.

என் பையனும் உன் மியூசிக் கேட்டு கெட்டுப்போய்ட்டான் ...

Friday, January 1, 2010

எண்ணிப் பார்த்தேன் - 2009 (பாகம் 2 )

முதல் பாகம் கொஞ்சம் scroll down பண்ணா பார்க்கலாம். இல்ல இங்க கிளிக்குங்க.

ரசித்த பாடல்கள்
உன் மேல ஆசைதான் - ஆயிரத்தில் ஒருவன்
புலி உறுமுது - வேட்டைக்காரன்
சுத்துது சுத்துது - கண்டேன் காதலை
அது ஒரு காலம் - அதே நேரம் அதே இடம்
ஒரு தேவதை - வாமனன்
ஏறத்தாழ ஏழு மணி - பேராண்மை
ஆடுங்கடா - நாடோடிகள்
பச்சை மஞ்ச - தமிழ் படம்
வாடா மாப்புள - வில்லு
நான் தருமண்டா - குங்குமப்பூவும் கொஞ்சும்புறாவும் 

பிற மொழிகளில்
Hindi

Chiggy Wiggy - Blue
Masakali - Delhi 6
Dhan te dan - Kaminey        
Hichki Hichki - Paa   
Telugu
Evade Subramaniam - koncham Ishtam koncham Kashtam
Edho Edho - Sasirekha Parinayam
English
We Made you - Relapse (eminem)  

மொக்கை வாங்கியப் படங்கள்

வில்லு - விமர்சனம்
படிக்காதவன் - விமர்சனம்
கந்தசாமி - விமர்சனம் --> இங்க
மாசிலாமணி  - விமர்சனம் --> இங்க
மோதி விளையாடு - விமர்சனம் --> இங்க
ஆதவன் - விமர்சனம் --> இங்க
வேட்டைக்காரன் - விமர்சனம் --> இங்க

SPECIAL MENTIONS

பள பளக்குற, விழி மூடி - அயன் 
ஹசிலி பிசிலி - ஆதவன்
கரிகாலன், நான் அடிச்சா - வேட்டைக்காரன்
முத்தம்மா - அழகர் மலை
வெள்ளைகாரி, பாதி காதல் - மோதி விளையாடு
ஓ மஹாசியா, குத்து விளக்கு - தமிழ் படம்
ஓம் ஷாந்தி ஓம் - முத்திரை
சீர்மேவும் கூவத்திலே - யோகி
வானம் எல்லை - உன்னைப்போல் ஒருவன்
நினைத்தும், பார்க்க முடியாம போன படங்கள் - அவதார், ஈரம், வெண்ணிலா கபடி குழு, மகதீரா, பேராண்மை, ரேணிகுண்டா, நான் கடவுள், சர்வம்...

இந்த வருடம் என் பதிவுலகத்துல மறக்க முடியாத வருடம்னு சொல்லலாம். என்னையும் நம்பி ஒரு 25 followers கிடைச்சாங்க. நிறைய புதிய பதிவர்கள், பதிவுகளப் பற்றி தெரிஞ்சுகிட்டேன். பதிவுலகத்துல நடக்கற கருத்து மோதல்கள் பற்றியும், சீரியஸா பதிவு எழுதற சிரிப்பு போலிஸ் பதிவர்களையும் பாத்து நல்லா சிரிச்சேன். பதிவுகள்னு பார்த்தா, அவ்வளவா டைம் கிடைக்காம, கொஞ்சம் கஷ்டப்பட்டேன்னே சொல்லணும். போன பதிவுல சொன்ன மாதிரி, கொஞ்சம் கமேர்ஷியலா சிந்திக்க ஆரம்பிச்சு இப்போ திருத்திகிட்டேன். புது வருடத்துல செந்தமிழ்ல எழுத ஆரம்பிக்கலாம்னு இருக்கேன். பார்ப்போம். 

என் வாழ்க்கைலன்னு பார்த்தா, இந்த வருடம் முக்கியமான ஒரு விஷயம் நடந்தது. எங்க காலேஜ் music ட்ரூப்ல சேர்ந்தேன். ஜெயா டிவி சகலகலா கல்லூரி overall trophy ஜெயிச்சோம். நானும் ஒரு பாடகன்னு எங்க காலேஜ்ல நம்ப ஆரம்பிச்சாங்க. முதல் முறையா ஒரு industrial visit போனேன். மூணு செமஸ்டரும் வெற்றிகரமா clear பண்ணிட்டேன். இன்னும் ஒண்ணு தான். அதுக்கு அப்புறம் வேலைக்கு போகணும். முதல் முறையா சிறந்த சில நண்பர்களும் நண்பிகளும் கிடைச்சாங்க. இப்படி நிறைய முதல்கள் இந்த வருஷம். சுத்தி இருக்குற மனுஷங்ககிட்டேர்ந்து நிறைய கத்துகிட்டேன். சில விஷயங்கள், திரும்ப திரும்ப prove ஆச்சு. சில பேர் அத prove பண்ணாங்க. இன்னொரு முக்கியமான விஷயம், வருடம் ஆரம்பம் ஆகும்போது கொட்ட ஆரம்பிச்ச முடி, இன்னும் நிக்கல. கடவுள் புண்ணியத்துல சொட்டையாகாம இருக்கேன். நல்ல டாக்டர போய் பாக்கணும். இப்போதைக்கு அவ்வளவே. பாருங்க, போன வருஷம் எழுத ஆரம்பிச்ச பதிவு, இந்த வருஷம் வந்துருச்சு. நான் ஜகா வாங்கிக்கறேன். அடுத்த வாரம் மீட்டலாம்..

Thursday, December 31, 2009

எண்ணிப் பார்த்தேன் - 2009

எல்லார மாதிரி நானும் சென்ற வருடக் கடைசியில, நான் ரசிச்ச படங்கள் மட்டும் பாடல்கள் பற்றிய பதிவியிருந்தேன் (link -->இங்க) இந்த வருடமும் அதை செய்யலாமா வேணாமான்னு மதில் மேல பூனையா யோசிச்சிகிட்டே இருந்தேன். எல்லா பதிவர்களும் அதை ஆரம்பிச்சு, பதிவிகிட்டும் இருக்காங்க. நானும் அதே மாதிரி எழுதுனா cliche ஆகிடுமேன்னு பயம் வேற. நாம சொல்ற சில விஷயங்கள மத்தவங்க படிச்சு பாராட்டுவாங்களோன்னு ஒரு ஆசை. சின்ன பசங்க மாதிரி, மத்தவங்க கவனத்தை ஈர்க்க வேலைகள செய்யறது. நாம என்ன நினைச்சாலும் இந்த trait நம்மள விட்டு போகறது ரொம்பவே கஷ்டம். அப்புறம்தான் ஒரு விஷயம் strike ஆச்சு.

"நான் யாருக்காக blog ஆரம்பிச்சேன் ?", "எனக்காக". என் எண்ணங்களுக்கு வடிகாலா இருக்குமேன்னு. ஆனா, கொஞ்ச நாட்கள்லையே, கமெர்ஷியல் டைரக்டர் மாதிரி, "இந்த பதிவு மக்களுக்கு பிடிக்குமா, பிடிக்காதா. படிப்பாங்களா மாட்டாங்களா, ஓட்டு போடுவாங்களா இல்லையா"ன்னு பலவிதமா யோசிக்க ஆரம்பிச்சிருக்கேன். நான் போடும் பதிவு மத்தவங்க படிச்சா என்ன, படிக்காட்டி என்ன. படிக்கலைன்னா நான் பதிவு எழுதறத விட்டுருவேனா?? கண்டிப்பா இல்லை. இதை படிக்கும் உங்க யாரையும் நான் insult பண்றதா நினைக்காதீங்க. ஆனா பொதுவான உண்மை இது மட்டுமே. (இருந்தும், இதை நான் யாருக்கோ சொல்லற நடைல தான் எழுதிகிட்டு இருக்கேன் பாருங்க)

ரொம்ப சிந்திச்சு, தெளிவான அப்பறம் தான்,  உட்கார்ந்து type பண்ணிக்கிட்டு இருக்கேன். cliche ஆனா என்ன இப்போ. எனக்காக நான் இப்போ, எனக்கு பிடித்த படங்கள் மற்றும் பாடல்கள் பற்றி எழுததான் போறேன். என் பதிவுகளுக்காக என்னை தொடரும் அன்பர்கள், க்ளிஷேவா இருந்தாலும் படிக்கதான் போறாங்க. இந்த முறை, வெறும் பெயர்களை மட்டும்தான் எழுதியிருக்கேன். காரணங்களை தனியா குறிப்பிடலை. பெருசா என்ன காரணம் இருந்திட முடியும். பிடிச்சிருக்கு. அவ்ளோதான். So here s my list....

ரசித்த திரைப்படங்கள்  
சிவா மனசுல சக்தி - விமர்சனம் -->இங்க 
யாவரும் நலம் - விமர்சனம் --> இங்க (கடைசி பத்தியில்)
அயன் - விமர்சனம் --> இங்க 
பசங்க - விமர்சனம் --> இங்க (கடைசி பத்தியில்)
நாடோடிகள் - விமர்சனம் --> இங்க
நியூட்டனின் மூன்றாம் விதி -விமர்சனம் -->இங்க (கடைசி பத்தியில்)
உன்னை போல் ஒருவன் - விமர்சனம் --> இங்க

நேஷனல் அண்ட் இன்டர்நேஷனல் லெவல்ல நான் ரசிச்ச படங்கள் சில
TELUGU
அருந்ததி
கொஞ்சம் இஷ்டம் கொஞ்சம் கஷ்டம் 
கிக்
PETER
Angels and Demons
2012 - விமர்சனம் --> இங்க 
Hangover
HP-6 - விமர்சனம் --> இங்க (இராண்டாவது பகுதியில)
UP
Confessions of a shopaholic
HINDI
பா
              அடுத்து பாடல்கள்னு பார்த்தீங்கன்னா... பதிவு ரொம்ப பெருசாகுதோ???....சரி இப்போதைக்கு பொழச்சி போங்க.. ஒரு நாலு மணி நேரம் கழிச்சு மறுபடியும் வரேன்...


film running successfully......

Saturday, December 12, 2009

PLAYLIST - NOVEMBER

மன்னிச்சிருங்க, கொஞ்சம் லேட் ஆயிடுச்சு. போன மாச playlistla இருந்த சில பாடல்கள், இன்னமும் இருக்கு. அவை,

1. வேட்டைக்காரன் படத்துல வழக்கம் போல மூணு பாட்டு - புலி உறுமுது, கரிகாலன், நான் அடிச்சா. இன்னும் பாடல்கள் போர் அடிக்கலைங்கறதே பெரிய விஷயம். ஒரு வேளை படம் வந்து, காட்சியமைப்பு நல்லா இல்லைன்னா வெளிய போய்டும்.

2. கண்டேன் காதலை - சுத்துது சுத்துது. இந்தப் பாடலை பற்றி இன்னமும் சொல்லனுமா??

3. யோகி - சீர்மேவும் கூவத்திலே. இதே மாதிரி நவராத்திரி படத்துலயும் ஒரு பாட்டு இருக்குங்க.

4. பேராண்மை - ஏறத்தாழ.

போன மாச playlist -->இங்க<--

நவம்பர் மாத playlistla புதுசா சேர்ந்திருக்கும் பாடல்கள்.

மோதி விளையாடு - படத்தை பார்த்து நொந்து போனாலும் (விமர்சனம்) இரண்டு பாடல்கள் நல்லா இருக்கறது ரொம்பவே லேட்டா காதுல விழுந்துச்சு. "பாதி காதல்" and "வெள்ளைக்காரி"னு ரெண்டு பாட்டு. ஹரிஹரன் இசைல, தமிழ்ல வந்துருக்கும் முதல் படம். பாவம். வேற ஒரு நல்லா படத்துல இந்த பாடல்கள் வந்திருக்கலாம்.

பா - இதை விடமுடியுமா. ஹல்கே ஸே போலே, ஹிச்சிகி and கும் ஸும். புதுசா என்ன சொல்றது இந்த பாடல்களை பத்தி. இளையராஜாவின் இசை. அவ்ளோதான்.

புதுசா வந்ததுல, பையா பட பாடல்கள் ஓரளவு நல்லா இருக்கு. அப்பாவி பாடல்களும் சுமாராதான் இருக்கு. கேட்க கேட்க நல்லா இருக்குமோ?? அடுத்த மாசம் பார்க்கலாம்.


துரதிர்ஷ்டவசமா என் headset காலி. புதுசு வாங்கணும். :(


p.s. பதிவுகள் போடாம ரொம்ப கதை பண்றேன்னு எனக்கே தெரியுது. கொஞ்சம் அவகாசம் குடுங்க. நல்லா பதிவா போடறேன். அப்பறம், நம்ம ராதா மாதவன் அண்ணன் இன்னொரு முறை அந்த சிறுகதை போட்டி பத்தி நியாபகப்படுத்தி "expecting ur participation" அப்படின்னு வேற சொல்லிட்டார். நம்மளை ரௌடினு நம்பிட்டாரோ? கண்டிப்பா அனுப்பறேன் அண்ணா. விருப்பம் இருக்குற எல்லாரும் கலந்துகொண்டு கலக்கவும்.

Thursday, November 12, 2009

PLAYLIST - OCTOBER

அக்டோபர் மாத playlistல பெரிய மாற்றங்கள் ஒண்ணும் இல்லை. சென்ற மாதம் வந்த பாடல்கள் பெருசா ஒண்ணும் என்னை ஈர்க்கல. புதுசா சேர்த்த மூணு பாடல்கள்ல, ஒண்ணு பேராண்மை படத்துல வர "ஏறத்தாழ ஏழு மணி பாடல்". ரொம்பவே அழகான மெலடி. வித்யாசாகர் இசைல, சாதனா சர்கம் சூப்பரா பாடியிருக்காங்க.
இங்க க்ளிக்கி கேட்கலாம் ..

அடுத்த பாடல், ஹிந்தி ப்ளூ படத்துல, ரஹ்மான் இசைல வந்த, Kylie Minogue + சோனு நிகம் பாடியிருக்கும் Chiggy Wiggy. இங்கிலீஷ் பாட்டு மாதிரி ஆரம்பிச்சு, அதையே பாங்க்ரா ஸ்டைல்ல மாத்தறது அழகா இருக்கு. -->இங்க கேளுங்க<--

யோகி படத்துல வரும் சீர்மேவும் கூவத்திலே ரொம்பவே வித்தியாசமான முயற்சி. யுவன் மறுபடியும் கலக்கியிருக்கார். இந்த படத்தின் தீம் மியூசிக்கும் நல்லாதான் இருக்கு. படத்தோட ட்ரைலர் பாத்தீங்களோ???

மற்றபடி, வரிசையிலிருந்து வெளியேறும் பாடல்கள், ஹசிலி பிசிலி & வானம் எல்லை...
சென்ற மாத லிஸ்ட் -->இங்க<--



siiiiiiiiiiiiiiiing in the rain...

Monday, October 5, 2009

PLAYLIST - SEPTEMBER

ரெகுலரா பதிவு போட முடியலனா என்ன பண்றது??? மண்டைய பிச்சிகிட்டு யோசிச்சா கூட, பதிவுக்கான ஐடியாவெல்லாம் அதுவா வரணும். ஆனாலும், என்னை நம்பி FOLLOW பண்றவங்களை, ரொம்ப நாள் காக்க வைக்க எனக்குப் பிடிக்கலை. SO, ஒவ்வொரு மாசாமும், அந்த மாதத்துல நான் ரசிச்ச பாடல்களைப் பற்றியும், படங்களைப் பற்றியும் சொல்லலாம்னு நினைக்கறேன். சில சமயங்கள்ல, இத மாதிரி ஏதாவது சுலபமா எழுதும்போது, அடுத்த பதிவுக்கான ஐடியா கிடைக்கும். எனவே, இப்போது நான் சொல்லப் போவது, சென்ற மாதத்துல, நான் ரசிச்ச நல்ல பாடல்கள். கொஞ்சம் பழைய பாடல்களும் இருக்கும்.
      
 1. பாடல் - சுத்துது சுத்துது, படம் - கண்டேன் காதலை. ஹரிஹரன் நிஜமாவே விளையாடுகிறார் பாட்டுல. அதுவும் ஒவ்வொரு FINISHING வரும்போதும், செம்ம RENDITION. கூடவே வரும் FLUTE, அற்புதம். ரொம்ப நாள் கழிச்சு, வித்யாசாகர் இசைல ஒரு அழகான பாடல்.

2. பாடல் - ஹசிலி பிசிலி, படம் - ஆதவன் - ஒரு DEFAULT ஹாரிஸ் பாட்டு. கார்த்திக் வழக்கம் போல நல்லா பாடிருக்கார். வழக்கம் போல எல்லா ஹாரிஸ் பாட்டு மாதிரியும், இதுலயும் ஏதோ ஒரு குருவிக்கார பாஷை வருது. வழக்கம் போல என்னன்னு புரியலை.
BUT VERY CATCHY.

3. வேட்டைக்காரன் படத்துல வர மூணு பாடல்கள் - கரிகாலன், புலி உறுமுது, உச்சிமண்டை. எனக்கு எப்பவுமே குத்து பாடல்கள்னா பிடிக்கும். கொஞ்சம் டீசண்டா சொல்லனும்னா பெப்பி SONGS ;). அதனாலேயே இந்த பாடல்கள் பிடிச்சிருக்கு. CRITICALA ANALYSE பண்ணா, மூணுமே குப்பை தான். விஜய் ஆண்டனி வேற என்னதான் பண்ண முடியும். நாய் வேஷம் போட்டா.......

4. பாடல் - உன் மேல ஆசைதான், படம் - ஆயிரத்தில் ஒருவன். தனுஷின், ஒரு மாதிரி அலட்சியமான பாடும் விதம் தான் இந்தப் பாட்டு நல்லா இருக்க காரணம்னு நினைக்கறேன். இசை ஜி.வியா, யுவியானு இன்னும் சரியா தெரியலை. யாராயிருந்தாலும், இந்த பாட்டு நல்லா இருக்கு.

5. பாடல் - முத்தம்மா, படம் - அழகர் மலை. நிறையப் பேரு கேள்விப் பட்டுருக்க மாட்டீங்க. படம் வந்து போயாச்சு. இளையராஜா இசைல, மத்த பாடல்கள் சுமாராதான் இருக்கு. ஆனா இந்த FOLK ஸ்டைல் பாடல் நல்லாவே இருக்கு. கொஞ்சம் "சிட்டு பறக்குது" பாடலை ஞாபகப்படுத்தினாலும், GOOD ONE.

6. பாடல் - வானம் எல்லை, படம் - உ.போ.ஒ. இந்தப் படத்தின் வேற எந்த பாடலும் என் மனசுல நிக்கல. BLAAZEவின் ராப் + ஸ்ருதி ஹாசனோட VOCALS அழகா பொருந்துது. (மியூசிக் வீடியோ இன்னும் நல்லா இருக்கு ;) "EASIER SAID THAN DONE" என்கிற ஆரம்ப வரி வார்த்தைகள், ரொம்ப நாள் புரியாம, இப்பதான் இணைய உதவியோட கண்டுபுடிச்சேன். ஒரு வேளை, கமல் ரசிகர்களை, பாடலோட வரிகள் கவரலாம்.

மத்தபடி, என் PLAYLISTLA எப்பவும் இருக்குற, எமினெம் பாடின/ராப்பின WE MADE YOU, MY BAND ஆகிய பாடல்களும் இருக்கு. அடுத்த மாதம் எவ்வளவு மாற்றங்கள் இருக்குன்னு பார்க்கலாம்/கேட்கலாம்...


நான் "பாட்டுக்கு" ஏதோ சொல்றேன்னு நினைச்சுராதீங்க.... 

Monday, August 17, 2009

சிகாமணியின் சின்னபிள்ளைத்தனமான கதைகள் -3 (அவ்ளோதான்)

சி.சி.கதை 1 --> இங்க
சி.சி.கதை 2 --> இங்க

விடாம தொடர்ந்தான் சிகாமணி, "என்னதான் producer இளிச்சவாயா இருந்தாலும், நமக்கும் கொஞ்சம் நேர்மை வேணும்டா. அதனால, பாவப்பட்ட producer யாருவேனாலும் இந்த கதைய எடுத்துக்கலாம்"

"நீ கதைய முதல்ல சொல்லு" என நான் அவசரப்படுத்த,

"அவசரப்படாத, நம்ம ஹீரோ ஒரு ஏழை. அவருக்கு அப்பா இல்லை, அம்மா மட்டும்தான். அதோட ஒரு தங்கச்சி வேற, அந்த தங்கச்சிக்கு வயசு 4",

நான் மறுபடியும் குறுக்கிட்டு, "அது எப்படி மச்சான்???"

"அட, இரண்டு குழந்தைக்கு நடுவுல ஒரு இடைவேளைனு வெச்சிக்க, கதைய கேளு, நம்ம ஹீரோவுக்கு ஒரே ஒரு வேலைதான் தெரியும், அதாவது அப்பளம் விக்கறது. நம்ம அம்மா செஞ்சு தருவாங்க, ஹீரோ வித்துட்டு வருவாரு"

"முதல் சீன்ல, நம்ம ஹீரோ, தான் தூங்கியெழுந்த கிழிஞ்ச படுக்கைய மடிக்கராறு, அப்பறமா பல்லு வெளக்கி தண்ணி குடுக்கிறாரு, அப்புறம் குளிக்கராறு, அப்புறம்........." நான் பொறுமையிழந்து, "கொட்டிகிராறு, ஜீரணம் ஆவுது, ஏப்பம் விடுவாரு, இதெல்லாம் விடு, நீ கதைய மட்டு சொல்லு" என எரிச்சலாக, அவன் தொடர்ந்தான்,

"இருக்குற அப்பளத்தை எடுத்திட்டு போறாரு. ஆனா அந்த அப்பளத்த யாருமே வாங்கலை. இந்த இடத்துல, நம்ம சமுதயாம் எப்படி அப்பளம்னு ஒரு அயிட்டம் இருக்கறதையே மறந்து, pizza வெறி பிடிச்சி அலையராங்கன்னு, montagela காமிக்கறோம். சாயங்காலம் வரை எதுவுமே போனி ஆகாம, நம்ம ஹீரோ வீட்டுக்கு வராரு"

"வீட்டுக்குள்ள நுழையும்போதே கவனிக்கராறு. ஹீரோவோட தங்கச்சி பாப்பா ஒரு பக்கம் அழுவுது, இன்னொரு பக்கம் அம்மா சோகமா இருக்காங்க. வீட்டு நடுவுல ஒரு மெழுகுவர்த்திய கொளுத்தி வெச்சிருக்காங்க. கரெண்ட் இல்லையே.
அம்மா ஹீரோவா பார்த்து கேட்கறாங்க, "பாப்பாவுக்கு ரொம்ப பசிக்கிது. வீட்ல எதுவுமே இல்லை. அப்பளம் வித்த காசுல ஏதாவது வாங்கிட்டு வாப்பா"னு.

நம்ம ஹீரோவுக்கோ பயங்கர குழப்பம். "கைல காசு இல்லை, தங்கைக்கு பசிக்குது, வீட்ல ஒண்ணும் இல்லை. என்ன செய்ய"னு think பண்றாரு. தங்கைய பாக்குறாரு, விளக்க பாக்குறாரு, அம்மாவ பாக்குறாரு, தன் கைல இருக்குற அப்பளத்தை பாக்குறாரு. அப்பளத்தை பாக்குறாரு, அம்மாவ பாக்குறாரு, விளக்க பாக்குறாரு, தங்கைய பாக்குறாரு"

"டேய் போதும் சொல்லுடா"

"இப்படி மாறி மாறி பார்த்து என்ன பண்றாருன்னா.........." என கண்கலங்க ஆரம்பித்தான். நான் பதறிப் போய் "டேய் கதைய சொல்லிட்டு feel பண்ணுடா" என்றேன். அவன், "சொல்றேன் மச்சான். அப்புறம் என்ன பண்றாருன்னா, தன் கைல இருக்குற அப்பளக் கட்டுலேர்ந்து ஒரே ஒரு அப்பளத்தை எடுத்து, அந்த விளக்குல சுட்டு, தங்கச்சிக்கு குடுக்கறாரு பாரு........."

நான் அந்த இடத்தை விட்டு ஓட ஆரம்பித்தேன்.

தூரத்தில் அவன் குரல் கேட்டது, "டேய் அடுத்த முறை முழு கதைய சொல்லாம விட மாட்டேன். இப்ப பொழச்சிப் போ".....

அவனை நான் இன்னொரு முறை பார்ப்பதாக இல்லை......

சிகாமணியின் சேட்டைகள், இப்போதைக்கு முற்றும்...

Saturday, January 24, 2009

எண்ணிப் பார்த்தேன் - 4 (அவ்ளோதான்)

முதல் 1 - 2 - 3 பகுதிகள் ரீடிட்டும் தொடரலாம்......

ஒரு பாடல், கேட்க எவ்ளோ நல்லா இருந்தாலும், அதை படமாக்கும்போது சுலபமா கெடுக்கலாம். நம்மில் பல பேருக்கு, ஒரு பாடல், திரைல பார்க்கற வரைக்கும், ரொம்ப பிடிச்சிருக்கும். நம் கற்பனைக்கு ஈடு குடுக்காம, அதை படமாக்கிருக்கும் போது, அடுத்து அந்த பாடல் கேட்கும்போது, அந்த பாழைப்போன picturisation ஞாபகத்துல வரும். ஒரு சில இயக்குனர்கள் தான், பாடல்கள நல்லா எடுக்கறாங்க. அப்படி, பாடலோட ஜீவன கெடுக்காம, நல்லா எடுத்த சில பாடல்கள பார்க்கலாம். இது என் லிஸ்ட் of "Best picturised songs". மொத்தம் 5 தான்.

5. கல்லை மட்டும் கண்டால் - தசாவதாரம்.
படத்தோட முதல் பத்து நிமிடங்கள், ஏதோ chaos theory வெச்சு relate பண்றா மாதிரி ட்ரை பண்ணாங்க. எதுக்குன்னு புரியல. ஆனா அந்த 10minutes, நல்லா powerful picturisation. அதுல இந்த பாடலும் வருது. கமல் (வழக்கம் போல) நல்லா நடிச்சிருப்பார். கிராபிக்ஸ் தான் கொஞ்சம் காமெடியா இருக்கும். (ஆனா, உடம்புல அந்த கொக்கிய துளைக்கும் இடத்துல, கிராபிக்ஸ் துல்லியமா இருக்கும்)

4. கண்கள் இரண்டால் - சுப்ரமணியபுரம்
தமிழ் சினிமால இன்னொரு montage பாடல். பாடல் மொத்தமே நகைச்சுவை இழையோட இருக்கும். ஜெய், தலைய ஆட்டுவார் பாருங்க. செம்ம காமெடி. சுவாதியோட கண்ணு, நிஜமாவே, வெளிய வந்து விழறா மாதிரியே இருக்கும். போன வருடத்துல, இந்தப் பாடல் தான், பலபேர்களால caller tunea வைக்கப் பட்டிருக்கு.

3. கண்ணதாசன் காரைக்குடி - அஞ்சாதே
கேட்டு பிடிக்காம, பார்த்து பிடிச்ச பாடல். நல்ல டான்ஸ்.

2. கோடான கோடி - சரோஜா
இன்னா டான்ஸ் movement. படம் முடிஞ்சு, கடைசி creditsla எல்லாரும் ஆடுறது, ஜூப்பரா இருக்கும்.

1. OBVIOUS - வாரணம் ஆயிரம் - எல்லாப் பாடல்களும்.
எனக்கு தெரிஞ்ச வரை, ஒரு படத்துல எல்லா பாடலும் நல்லா படமாக்கப் பட்டது, இந்தப் படத்துலதான். அனல் மேலே பாட்டும் மட்டும், சிம்ரன் வாயசைப்பாங்கனு நினைச்சேன். அஞ்சல பாட்டு தான் என் all டைம் fav.

அடுத்த லிஸ்டுக்கு வந்தா....
இங்க சொன்னது போல, போன வருடம், உங்கள மாதிரியே, நானும், எதிர்பார்த்து பல மொக்கைகள் வாங்கினேன்... அப்படி, நம்ம்ம்ம்ம்பி (வடிவேல் ஸ்டைல்) தியேட்டருக்கு போய், காண்டான படங்களோட லிஸ்ட் இது.

5. சாது மிரண்டால் - "சித்திக் strikes back" அப்படின்னு posterla இருந்தத, தப்பா புரிஞ்சிகிட்டு, முத நாள், நைட் ஷோ போனேன். படத்தோட, ஒவ்வொரு தருணமும், predict பண்ண முடிஞ்சது. நிஜமாவே backla strike பண்ணிட்டார் டைரக்டர். என் கூட துன்பப்பட்ட ஆள் ரமேஷ் அண்ணா...

4. அறை என் 305ல் கடவுள் - ஷங்கர் தயாரிப்பு, கொஞ்சம் நல்லா இருக்கும்னு நினைச்சேன். என் விதி. மறுபடியும் விளையாடிச்சு. கூட துன்பப்பட்டது - பாலா அண்ணா and family.

3. அஞ்சாதே - சிறந்த படங்கள் வரிசைல, நம்ம கார்த்திக், இந்தப் படத்த சேர்க்க சொன்னாரு. என் மனசாட்சி அதுக்கு இடம் குடுக்கல. பொறுமை இல்லாம, ரொம்பவே காண்டானேன். என் கூட துன்பப் பட்ட கோபால் and பாலா அண்ணாஸ், என்னை விட ரொம்ப வருத்தப் பட்டாங்க. இந்தப் படம் crtically acclaimed. but, made my situation critical. என் அபிப்ப்ராயத்த சப்போர்ட் பண்ற ஒரு review -->இங்க<--. இத எழுதுனவர் பேரும் கார்த்திக் ;).

2. பீமா - நான் ஏதாவது சொல்லனுமா??? கூடப் பட்டது, ரமேஷ் அண்ணா.

1. குசேலன் - ஐயோ.... அம்மா... (கவுண்டர் ஸ்டைல்) accompanied by ரமேஷ் அண்ணா (again) and நாகு அண்ணா. review -->இங்க<--

இவையே, நான் எண்ணிப் பார்த்தவை. இந்தப் தொகுப்புல சேர்க்க முடியாம, நீக்கவும் முடியாத சில...

Special Mentions

1. Where is the party - சிலம்பாட்டம் - (குஜாலா) பார்க்கவும் - கேட்கவும்
2. kabhi kabhi aditi - jaane tu...
3. டாக்ஸி டாக்ஸி - சக்கரகட்டி - song only
4. hey baby - ஏகன் - நல்லா choreo
5. Circus - Britney Spears - நாலு பாட்டு நல்லா இருக்கு...
6. அபியும் நானும் - நல்ல படம்
7. சிவகாசி ரதியே - பூ (செம்ம peppy song)
8. தாம் தூம் - கலைஞர் டிவில பார்த்து, செம்ம கடுப்பானேன். மொக்கை படம். பார்த்திருந்தா, இயக்குனர் ஜீவாவுக்கு, மறுபடியும் அட்டாக் வந்திருக்கும்..

whatever happens, life has to go on...

Saturday, January 10, 2009

எண்ணிப் பார்த்தேன் - 3

அந்த ரெண்டு பதிவையும் படிச்சிட்டு இங்க தொடருங்க....
______________________________________________________________________

இந்த பெரிய்ய்ய்ய்ய்ய்ய இடைவெளிக்கு மன்னிக்கவும். இந்த countdown பற்றி, ஒரு word file save பண்ணி வெச்சிருந்தேன். அது காணாம போயிருச்சு. எனக்கும், என்னென்ன படம் அதுல include பண்ணோம்னு ஞாபகம் இல்ல. அது இப்ப கிட்டி. So now lets continue...

அடுத்து, சிறந்த படங்களோட வரிசை பார்ப்போம்...

10. குருவி - யாரும் பதட்டப் படாம முழுசா விஷயத்த கேளுங்க. இந்த படத்த எல்லாரும் குப்பைல போட்டு வாட்டி எடுத்தாச்சு. ஆனா, அது எப்படி என் சிறந்த படங்கள் வரிசைல வந்துச்சுன்னு பார்த்தீங்கன்னா, இவங்க படத்துல இருந்த unintentional காமெடி. நான் ரொம்ப ரசிச்சு பார்த்தேன். நம்ப முடியாத stunts + கதை. அதுவும் அந்த interval block. PRICELESS. ஆனா, படம் எந்த இடத்துலயும் போர் அடிக்கல. சென்ற வருடம் வந்ததுல, சிறந்த கமர்ஷியல் + B C சென்டெர் + காமெடி படம் இது என்பது என் கருத்து.

9. சந்தோஷ் சுப்ரமணியம் - படத்தோட review --> இந்த பதிவின் <-- கடைசி பத்தில. ரசிக்கக் கூடிய நல்ல நகைச்சுவை திரைப்படம். செண்டிமென்ட பிழிஞ்சி இருந்தாலும், படத்துல அங்கங்க வரும் சிரிக்க வைக்கும் தருணங்கள் படத்துக்கு பெரிய +. ஜெனிலியா over acting கொஞ்சம் தாங்கல.

8. தசாவதாரம் - விமர்சனம் --> இங்க <--

7. பிரிவோம் சந்திப்போம் - ரொம்ப எளிமையான கதை. நல்ல நடிப்ஸ் and இசை. நிஜாமவே, தமிழ் படங்கள்ல, இதுவரை சொல்லாத ஒரு கதை. நல்ல முயற்சி. நல்ல வேளை படம் ஹிட் ஆச்சு. ஸ்னேகாவுக்கு ஒரு அவார்ட் குடுங்கப்பா.

6. வெள்ளித்திரை - சரியாக ஓடாத நல்ல திரைப்படம். நிறைய பேருக்கு பிடிக்கலன்னு கேள்விப்பட்டேன். எனக்கு ரொம்ப பிடிச்சது. கொஞ்சம் கனவு தொழிற்சாலை மாதிரி இருந்தது. எனக்கு ரொம்ப பிடிச்ச காமெடி லைன் "இவன் தலைல இடியே விழுந்தாலும் வழுக்கி விழுந்துரும்". படம் முழக்கவே நல்ல வசனம்s.

5. ஜெயம்கொண்டான் - ஒரு default கதைக்களம். நிறைய படங்கள்ல பார்ர்த்து பழக்கப்பட்ட story pattern. இருந்தும், நல்லா போர் அடிக்காம இருந்தது. ஆனா, பாடல்கள் ஒரு பெரிய இடைஞ்சல். (ஒரு பாட்டு நல்லா இருந்தும்)

4. சரோஜா - எல்லாரும் நல்லா spoiler வேலை பார்த்தாங்க. நான் படம் பார்ப்பதற்கு முன்னாடியே, இருக்குற காமெடி எல்லாத்தையும் சொல்லிட்டாங்க. படம் பார்க்கும்போது கொஞ்சம் தான் ரசிக்க முடிந்தது. இருந்தும், ஒரு வித்தியாசமான, நல்ல முயற்சி. சூப்பர் பாடல்கள் வேற. ஆனா, Second half கொஞ்சம் போர் அடிக்கல???

3. வாரணம் ஆயிரம் - பார்க்கவே முடியாத அளவுக்கு ரொம்ப மோசமான படம் இல்லை. எதிர்ப்பார்ப்பு இல்லாம இருந்திருந்தா நல்லா இருந்திருக்கலாம். இடைச்செருகலா தெரியாம, பாடல்கள நல்லா எடுததுக்காகவே 3வது இடம். சும்மா சொன்னேன். சூர்யா நடிப்பும் நல்லா இருந்துச்சு. விமர்சனம் --> இங்க <--

2. சுப்ரமணியபுரம் - "இந்த படத்தையா எல்லாரும் ஆஹா ஓஹோனு சொல்றாங்க. செம்மை கொடுமையா இருக்கே. ஒரு சாதரண கத்தி குத்து கந்தன் படத்துக்கு ஏன் இவ்ளோ பாராட்டுகள்", அப்படின்னு, படத்தோட கடைசி 20 நிமிஷம் வரை, நினைச்சிகிட்டு இருந்தேன். அந்த 20 நிமிடங்கள் பேஜாராய்டுச்சுப்பா.Slick Movie but Sick story. Sick ending.

1. பொய் சொல்ல போறோம் - போன வருஷத்தோட surprise. எல்லாரும் இந்த படத்த மொக்கைனு சொல்லிக்கிட்டு இருந்தாங்க. ஆனா நிஜாமவே excellent படம். ரொம்ப எளிமையா, அழகா எடுத்திருந்தாங்க. கம்மி செலவுல, தரமான படம் எடுக்க முடியும்னு, மறுபடியும், தெரிஞ்சிகிட்டேன். நான் முதல்ல எழுதுன விமர்சனத்துல, படத்த ரொம்ப பாராட்டல. இருந்தாலும், இப்ப யோசிச்சு பார்க்கும்போது, இந்த படம் நல்ல படமாகவே தோணுது.

ஓகே மக்களே. இதுவே என் pick of the lot in films-2008. எண்ணிப் பார்த்தேன்la இன்னும் ஒரே ஒரு பதிவு பாக்கி. அது விரைவில்....

நம்ம ஊர்ல இது vice-versa...

Wednesday, December 31, 2008

3 in ONE.. but மூணுல ரெண்டுதான்...

இப்ப என் கைல, butterfly அவார்ட் இல்லாம, 4 அவாரட்(by ரெண்டு பேர்) and 1 tag (by ஒருத்தர்) கீது. அதப் பற்றி தான் இந்த போஸ்ட். எனக்கு அவார்ட்னு தெரிஞ்சவுடனே, வழக்கம் போல, ஒண்ணுமே புரியல. மணிரத்னம் படம் மாதிரி, "ஏன், எதுக்கு, எப்படி, எதனால, தாம்பரம், பஸ் ஸ்டாண்ட், சிங்கப்பூர்", இப்படியெல்லாம் என்னை நானே கேட்டுகிட்டேன். அவார்ட் குடுத்த 2 ஆத்மாக்கள், கார்த்திக் and அருண்குமார். இந்த அவார்ட்ஸ் வாங்கரதுல, ஒரு ரூல் இருக்கு. நாமளும் யாருக்காவது இத குடுக்கணும். இங்கதான் சிக்கலே.

அவார்ட் குடுத்ததுதான் குடுத்தீங்க, இவ்ளோ பேருக்கா குடுக்கறது. நான் யாருக்காவது குடுக்கலாம்னு பார்த்தா, அவங்க எல்லாருக்குமே நீங்க ஏதாவது ஒரு அவார்ட் giving. ஏன் இந்த கொல வெறி???. So, நீங்க கட்டாயம் தப்பா நினைக்க மாட்டீங்கன்னு நானே assume பண்ணிக்கிட்டு, im going to end this chain of awards.
யாராவது முடிக்கனும்ல. என்னை மன்னிச்சு, எதிர்காலத்துல இத மாதிரி சிக்கல் ஏற்படாம பார்த்துக்கோங்க. மத்தவங்களுக்கும் கொஞ்சம் விட்டு வைங்க and கார்த்திக், உங்க tag, கொஞ்சம் மண்டைய தட்டி, யோசிச்சு, போஸ்ட் பண்ண வேண்டிய மேட்டர், எனவே, give me some time. Also explain the tag, im confused.

அவார்ட்ஸ் - AWARDS

1. KREATIV BLOGGER AWARD - குடுத்தது, கார்த்திக்....
சார் என்ன பீல் பண்றார்னா,

"The blog name suggests it- Creativ(et)ty. Few have the talent to blend imagination with humor and real-life incidents. He is the man of such a kind. Kaadal Kasakudaiya and how to write Tamil Lyrics posts defends what I’d mentioned above"


2. BLOG KING AWARD - குடுத்தது, again கார்த்திக்.... (புள்ளைக்கு இன்னா நம்பிக்கை)
இப்ப என்ன சொல்ல வரார்னா,

"Friend of Lancelot needs no better explanation for flair and talent (except me)"


மிக்க
நன்றி கார்த்திக்.. உங்க தன்னம்பிக்கையும், தன்னடக்கத்தையும் பார்த்தா ரொம்பப் பாவமா இருக்கு. வாழ்க வளமுடன்...

அடுத்தது

3. AMAZING BLOGGER AWARD &
4. EXTRAORDINARY BLOGGER AWARD...

வக்கீல் சார் சொன்னது,

"
I give him two awards for his versatile blogs, from Short film to count down to email messages to everyday life to interesting info to whatever. I award him AMAZING BLOGGER AWARD and EXTRAORDINARY BLOGGER AWARD (claps X 2). You deserve this award dude. The amazing goes to the Short film you've shot off late and the story style of it in your blog and extra ordinary goes to all the other blogs you have posted in your blogspace. Keep up the good work and very soon you are gonna get some shocking news from Kartik and Me. Keep guessing about it and don't use your usual silencer effect for this award showing your humbleness etc. Just accept it and spread it to others as well. Bring in more bloggers as we need competitors. Don't forget to book me as the hero for your first feature film. (Kartik you will be my KO PAA SE). How is beauty and Meera? :P"


கோடி நன்றிகள் அருண்குமார் அண்ணா.....

So, இப்படியாகத்தானே, இந்த ஆங்கில வருஷத்துல, ஏமாந்த ரெண்டு பேர் மாட்னதுல, எனக்கு 5 AWARDs கிடைத்தது. ரெண்டு பேருக்கும் நன்றிஸ். அடுத்த போஸ்டில் சந்திப்போமா.....

p.s.1 - எண்ணிப் பார்த்தேன் will continue for sure. நான் இப்ப ஹைதராபாத்இருக்கேன். So, ப்ளோக time அவ்வளவா இல்ல. இந்த சிறு பெடியனை மன்னிக்கவும்...

p.s. 2 - எனக்கென்னமோ அருணும் கார்த்திக்கும் தான் beauty and மீரானு வெளையாடுராங்கனு தோணுது. இது உண்மையா இருந்தா, எல்லாத்தையும் நிறுத்திருங்க. இல்ல.............. ஒண்ணும் பண்ண முடியாது. திருடனாய் பார்த்து திருந்தா விட்டால்.... தலைவர் சொன்னது....