@எஸ் கே -
மிக்க நன்றி :)
@பாலி -
தல, நீங்க வேற ஒரு முக்கியமான வேலைல இருந்தாதால உங்க வேலை பளுவ குறைக்க முயற்சி செஞ்சேன் :)
கிளைமாக்ஸ்ல வரதும் அதே செட் உடைகள் மாதிரி தான் தெரியுது. இத மாதிரி ரெண்டு மூணு சந்தேகங்களுக்காகவே ரெண்டு முறை படத்தை பார்த்தேன்...
அண்ட்மன்னிக்கவும், முதல் கேள்விய ஒழுங்கா படிக்காம பதில் சொல்லிட்டேன். ஓபன் எண்டிங்னு சொன்னது முடிவ. ஆரம்பம் லிம்போதான்..
ஏன், விளையாட்டுக்கு வரலைன்னு சொன்னீங்க??? இங்க கண்டிப்பா வேற யாரும் வந்து பிரச்சனை பண்ண மாட்டாங்க. கவலைபடாதீங்க.
@சர்வேசன்
//லிஃப்ட்ல மயக்கத்துல இருக்கரவங்களை எழுப்பினா போதுமே, பனிமலை வேட்டு வச்சு ஏன் சாகப் பாக்கணும்?//
எனக்கு நிஜமாவே உங்க கேள்வி புரியலைன்னுதான் சொல்லணும் :(
இருந்தாலும் கொஞ்சம் விளக்கிடறேன்.
முதல் லெவல் - யூசுபின் கனவு - அங்க கிக் அந்த தண்ணில விழற வண்டி
இரண்டாவது லெவல் - ஆர்தரின் கனவு - அங்க கிக் லிப்ட்டு
மூணாவது லெவல் - இயாம்ஸோட கனவு - அங்க கிக் அந்த இடம் தகர்க்கபடுவது, அப்போதான் எல்லாரும் அப்படியே கீழ இருக்கற அஸ்திவார பள்ளத்துல விழுவாங்க.
நாலாவது லெவல் - யாரோட கனவும் இல்லை, லிம்போ - அங்க கிக் எப்படியாவது நாம லிம்போல இருக்கோம்னு உணர்ந்து, சாவறது or free fallaa கீழ விழறது...
@ஜெய்
//அதுனாலயே முதல்ல ஃபாலோவர் ஆயிட்டேன்... //
மிக்க நன்றி :)
//இன்னைக்கு இந்த படத்தை புரிஞ்சுக்காம கிளம்பப்போறதில்லை...//
வாங்க பழகலாம் :))
//நியூயார்க் டைம்ஸ் படிக்கிற தோழி இல்லாம இருக்கணும்னு வேண்டிகிட்டு, கமெண்டறேன்...//
எனக்கு பாம்பே டைம்ஸ் படிக்கற தோழி கூட இல்லை... யாராச்சும் இருந்தா சொல்லுங்க.. :(
நான் சென்னை டைம்ஸ் படிப்பேன் :P
// கமெண்ட் டெம்ப்ளேட் கொஞ்சம் அகலமா//
மொத்த டெம்ப்ளேட் தான் மாத்தணும் தல ;(
//முதல் காட்சி ரியல் இல்லைதானே?//
மறுபடியும் மன்னிச்சு.. கேள்விய ஒழுங்கா பார்க்கலை..அது ரியல் இல்லை. லிம்போ
//இது எங்கேயும் சொல்லப்படற மாதிரி தெரியல/?
நேரடியா எங்கயும் சொல்லல. ஆனா சில டயலாக் imply பண்ணுது. அதனாலதான் சொன்னேன்.
// எல்லாரும் செத்தா லிம்போவுக்கு போவோம்னு தெரிஞ்சதும் அவ்வளவு டென்ஷன் ஆகறாங்க...?//
ஃபிஷர் போனது காபின் லிம்போவுக்கு. அதனால அவரை ஈசியா கண்டுபுடிக்கறாங்க. முதல்ல டென்ஷன் ஆவர்துக்கான காரணம், அவங்க அவங்களோட லிம்போவுல காணாம போயிடுவாங்கன்னு காரணத்துனால. சைட்டோவ காப்பத்த காபுக்கு எவ்வளவு காலம் புடிச்சிதுனு படத்துல சொல்லல. ஆனா அவர் சைட்டோவை கண்டு புடிக்கும்போது, சைட்டோ தொண்டுக்கெழமா இருக்கறாரு. காபிற்க்கும் ஒரு 40-50 வயசு இருக்கறா மாதிரி முடி எல்லாம் நரைச்சிருக்கு.
//ஹீரோவே மூணாவது லெவல்ல(பனிமலை) இருக்கப்ப, ஹீரோவோட மனைவி எப்படி லிம்போல இருப்பாங்க??//
மால் அங்க வரக்கூடாதுன்னு தான், கனவுகளோட ஆர்க்கிடேக்ச்சர காப் தெரிஞ்சிக்காம இருக்காரு. ஆனா, அரியாட்னே எமேர்ஜன்சி என்ட்ரி பத்தி சொல்லும்போது காபும் அதை கேட்டுடறார். அதனால மாலுக்கும் இப்போ அங்க எப்படி போறதுன்னு தெரியும். அப்படிதான் மால் அங்க வராங்க. ஹீரோவின் மனைவி எப்பவுமே லிம்போலதான் இருக்காங்க. காபுக்காக வெயிட் பண்றாங்க. இங்க முக்கியாமான விஷயம், லிம்போல இருக்கறதும், ஒவ்வொவொரு முறையும் பிளான கெடுக்கர்தும் காபோட குற்ற உணர்வின் பிரதிபலிப்புதான்.
//மூணாவ்து லெவல்ல குண்டடி பட்டு, திரும்ப மூணாவ்து லெவலே வந்தா?//
திருத்தம், மூணாவது லெவல்ல அடிபட்டு, நாலாவது லிம்போவுக்கு போயிட்டு, மறுபடியும் மூணாவது லெவலுக்கு வரார். வீரியம் குறைஞ்சு போய், திரும்ப defibrillatorஅ கிக்கோடா சின்கரனைஸ் பண்ணி அவர உயிரோட கொண்டு வராங்க.
//சைடோவை கண்டுபிடிக்க காப் லிம்போல இருந்தாதானே முடியும்? //
அதானால்தான் அரியாட்னே சுட வரும்போது தடுத்து, அவர் லிம்போலயே இருக்காரு.
//அவங்க பாட்டுக்கு சுட்டுட்டு காப் நிஜ உலகத்துக்கு போயிட்டா, சைட்டோவை யாரு காப்பாத்தறது?//
அவங்க ஒரு பதட்டத்துல சுட வரும் போதுதான் காப் சொல்லுவாரு, சைட்டோ இந்த நேரத்துக்கு இறந்துருப்பாறு, அதனால அவர தேடி கூப்ட்டுட்டு வரேன்னு.
//மோதிரம் போடலைன்னு சொன்னேங்க...//
நான் கவனிக்கலை. ஒரு யூகத்துலதான் சொன்னேன்.
//ஏன் ரெண்டு பேர் பார்வையில காட்சி அமைக்கணும்? அப்படி என்ன significance அதுக்கு?//
முன்னாடியே சொன்னா மாதிரி, இதுக்கு எந்த significanceஉம் இருக்கணும்னு அவசியம் இல்லை. நாம கொஞ்சம் ஓவராவே யோசிக்கறோம் ;)
// நான் ஏதாவது தப்பா புரிஞ்சுட்டாலும்//
இத மாதிரி ஓபன் எண்டிங் படங்கள்ல, தப்பு எது, ரைட்டு எதுன்னு சொல்லவே முடியாது.
மறுபடியும் கேள்வி கேட்ட எல்லாருக்கும் நன்றி. இன்னும் இருந்தாலும் கேளுங்க. எதையும் தாங்கும் 'இதையும்'.. :)
இன்னுமா நான் யாருன்னு தெரில??? ஹா ஹா ஹா
11 comments:
நன்றி கார்த்திக்... :)
இப்படி ஓபன் என்டிங்கா நன்றி சொல்லிட்டீங்களே. சொன்ன பதில்கள் ஒகேவா இல்லையா??
இந்த டிஸ்கசன் முடியாது போல தெரியுது தல... :) ஆஃபீஸ்ல வேற ஆணி நெறய... அதான் நன்றியோட முடிச்சுக்கலாம்னு பார்த்தேன்... நீங்க கேட்டுட்டீங்க இல்ல... அதான் திருமப வந்துட்டேன்...
ஒரு விஷயம் ஓபன் எண்ட்-னா, அந்த விஷயம் ஓபன் எண்ட்-ஆ இருக்கிறதுல கொஞ்சமாவது சுவாரஸ்யம் இருக்கணும்னு எதிர்பார்க்கிறேன்... படத்துல புரியாதது/காட்டாதது எல்லாமே ஓபன் எண்ட்-ஆ ஒத்துக்க முடியலைங்க... நாம எல்லாருமே புரியாத விஷயங்களையும் ஓபன் எண்ட்-னு நினைச்சுகிட்டு, நமக்கு பிடிச்சா மாதிரி புரிஞ்சுக்கறோம்னு நினைக்கிறேன்...
இந்த படத்துல ஓபன் எண்ட்-ங்கிறது, க்ளைமாக்ஸ் கனவா/நிஜமா, படம் முழுக்க கனவா/நிஜமா, கனவுன்னா யார் கனவு, காப்-ன் கனவா? மைல்ஸ்-ன் கனவா? சைடோ-வின் கனவா? ... இந்த மாதிரி மிக முக்கியமான விஷயங்கள்தான்... இந்த முக்கியமான விஷயங்களை ரெண்டு பக்கமும் argue பண்ணதான் படத்துல அங்கங்க வேணும்னே ரெண்டு பக்கத்துக்கும் argument points வச்சுருக்காங்க இல்லையா...
உதாரணத்துக்கு,
முடிவு நிஜம்னு சொல்லணும்னா, க்ளைமாக்ஸ்ல குழந்தைகள் வளர்ந்து இருக்கது, ஹீரோ கையில மோதிரம் இல்லாதது, (படம் பேர் போட்டு முடிச்சவுடனே டோட்டம் கீழே விழற சத்தம் கேக்குதாமே!!!) இந்த மாதிரியான arguments சொல்லலாம்...
முடிவு கனவுன்னு சொல்லணும்னா, குழந்தைகள் அதே ட்ரெஸ் போட்டு இருக்கது (அதே மாடல், அதே கலர்தான்னு ஞாபகம் பாலா... சைஸ் வேணா வேறவா இருக்கலாம்..), அதே இடத்துல விளையாடறது, இந்த மாதிரி arguments சொல்லலாம்...
கிட்டத்தட்ட நீங்க சொன்ன எல்லா பாயிண்டுமே நாங்களும் டிஸ்கஸ் பண்ணினோம்... ஆனா, நமக்கு இன்னும் புரியாத குட்டி குட்டி விஷயங்கள் எல்லாம் ஓபன் எண்ட்-னு சொல்லி assume பண்ணிக்க வேண்டாம்னு விட்டாச்சு... எனக்கே கொஞ்சம் லாஜிக் இடிக்கிற மாதிரி assume பண்ணிக்கிறதை விட, குழப்பத்துல இருக்கதே பெட்டர்னு நினைக்கிறேன்...
என் ஃப்ரெண்ட்ஸ் ஒவ்வொருத்தரோட assumptions இதெல்லாம்...
1.ஒவ்வொருத்தருக்கும் ஒரு லிம்போ இருக்கும்... நாலாவ்து லெவல் ஃபிஷருக்குதான் லிம்போ... ஆனா, ஹீரோவுக்கும் அரியாட்னிக்கும் அது மற்றுமொரு லெவல்தான்... அதுனாலதான் அவங்க சாகாமலே லிம்போக்கு வந்துட்டு போறாங்க... அப்பறமா, ஹீரோ வேன் லெவல்ல தண்ணிக்குள்ள இருக்கதால செத்துப்போய் சைட்டோவோட லிம்போவுக்கு போய் அவரை காப்பாத்தறாரு.. :)
2.ஃபிஷர் சாகவே இல்ல... குண்டடி பட்டு மயக்கம் ஆகிடறான்... அதுனால ஹீரோவும், அரியாட்னியும், செத்துகிட்டு இருக்க ஃபிஷரை கனெக்ட் பண்ணி நாலாவது லெவலுக்கு போய் மால்-ன் ப்ரொஜக்ஷனை கொன்னுட்டு, ஃபிஷருக்கு அங்க இருந்து ஒரு கிக் குடுத்து, இங்க defibrillator யூஸ் பண்ணி, மூணாவது லெவல்ல வலியில்லாம எழுந்திருக்க வைக்கிறாங்க... மால் செத்துட்டதால, அவங்க சுட்ட புல்லட் காயம் போயிடுச்சு... :)
3.நாலாவது லெவல் காப்-ன் சப்கான்ஷியஸ்... அது லிம்போ இல்ல... அதுல இருக்கது காப் முன்னாடி வாழ்ந்த லிம்போவின் ஞாபகங்கள்... காப்-ன் ப்ரொஜக்ஷன்-ஆன மால்-தான் ஃபிஷரை சுட்டதால, ஃபிஷர் இன்னும் காப்-ன் சப்கான்ஷியஸ் மைண்ட்லதான் இருக்கான்... அதான் அவனை கூட்டிட்டு வர அங்க போறாங்க...
இப்படி நிறைய... இதெல்லாம் தப்புன்னு என்னால சொல்ல முடியல... ஆனா, சரின்னும் ஒத்துக்கமுடியல... இதெல்லாம் one of the possible answers... but not too logical... இதுக்கெல்லாம் தெளிவான பதில் படத்துல இருக்கும்னு நம்பறேன்... ஏன்னா, அந்தாளு நோலன் குழந்தையா இருக்கறச்சே எடுத்த மெமெண்டோவுல வச்ச சில க்ளூவே கண்ணுல விளக்கெண்ணைய ஊத்திகிட்டு டிவிடில மெதுவா பார்த்துதான் கண்டுபிடிக்க வேண்டி இருக்கு... இதை ரெண்டு மூணு வாட்டி பாத்துட்டு முடிவுக்கு வரமுடியாதுன்னு நினைக்கிறேன்... (இப்படிக்கு, நோலன் ஃபேன்பாய்ஸ்) மால்-ம், சைட்டோ-வும் ஒரே மாதிரி சொல்லற “take a leap of faith" டயலாக் (ரெண்டு பேருக்கும் ஒருத்தரை ஒருத்தர் தெரியாது), யூசஃபின் இடத்துல அந்த தாத்தா சொல்லற "they come here only to sleep again. dream is their real world. who are you to say otherwise?" டயலாக்... இதெல்லாம் முக்கியமான விஷயங்கள்னு தோணுது எனக்கு... ஏன்னா ஹீரோ க்ளைமாக்ஸ் கனவுதான்னு புரிஞ்சே அதுல வாழ தயாராகுறானா? (மெமெண்டோ, ஷட்டர் ஐலண்ட் மாதிரி)
நேத்துதான் நண்பர் ஒருத்தர் சொன்னாரு அந்த டோட்டம் கீழே விழற சத்தம் பத்தி... சரியான தகவலான்னு இன்னும் தெரியல... அதுமாதிரி புது கண்டுபிடிப்புகள் இருந்தா கண்டிப்பா சொல்லுங்க தல... :) assumptions பத்தி பேசுனா டிஸ்கசன் முடிவில்லாம போயிடுங்க...
இதையும் பாருங்க... http://www.imdb.com/title/tt0209144/faq#.2.1.56
Is there a final truth to MEMENTO? Christopher Nolan claims there is one. In an article in New Times Los Angeles on March 15, [2001, when the movie was released in the US] Scott Timberg writes: 'Nolan, for his part, won't tell. When asked about the film's outcome, he goes on about ambiguity and subjectivity, but insists he knows the movie's Truth -- who's good, who's bad, who can be trusted and who can't -- and insists that close viewing will reveal all.'
//கிளைமாக்ஸ்ல வரதும் அதே செட் உடைகள் மாதிரி தான் தெரியுது//
// (அதே மாடல், அதே கலர்தான்னு ஞாபகம் பாலா... சைஸ் வேணா வேறவா இருக்கலாம்..)//
இல்லீங்க. அது இருக்கற குழப்பம் பத்தாதுன்னு நோலன் குப்புற அடிச்சி யோசிச்சப்ப தோணின மேட்டரு.
http://clothesonfilm.com/inception-jeffrey-kurland-costume-qa/14317/
இது படத்தோட காஸ்ட்யூம் டிஸைனர் கொடுத்த பேட்டி.
முழுசா படிக்கத் தேவையில்லை. இதை மட்டும் பாருங்க
/he children’s clothing is different in the final scene… look again…/
நான் திரும்ப படம் பார்க்கும்போது கன்ஃபர்ம் பண்ணிகிட்டேன். வேறு உடைகள்.
நான் கொஞ்சம் வேற ஒரு மேட்டர்ல பிஸி. அதான் கலந்துக்கலை. ஸாரி.
அடக்கொடுமையே... அந்த குழந்தைகள் வளந்து இருக்காங்களான்னு நல்லா கவனிச்சதுல இதை லைட்டா மிஸ் பண்ணிட்டேன்.. :( இந்த லட்சணத்துல நாங்க நாலு பேரா வேற பார்த்து நோட் பண்ணோம்...
// நான் கொஞ்சம் வேற ஒரு மேட்டர்ல பிஸி. அதான் கலந்துக்கலை. ஸாரி. //
முடிச்சுட்டு பொறுமையா வந்து கமெண்டிட்டு போங்க தல... நான் நாளைக்கு கண்டின்யூ பண்றேன்...
ஆக்சுவலி இந்த மேட்டரையெல்லாம்.. நான் கி.மு 200-லயே தினமும் 12-16 மணிநேரமா படிச்சி வந்திருந்தேன்.
ஷேர் பண்ண டைமில்லை.
அது தெரிஞ்சுதான் நான் கி.மு.250 ல இருந்து உங்களை போஸ்ட் போடச்சொல்றேன்...அது மட்டும் போட்டு இருந்தா, நாட்டுல இவ்ளோ குழப்பம், சண்டை, சச்சரவு வருமா?
// ஷேர் பண்ண டைமில்லை //
க்க்ர்ர்ர்ர்... ஸ்வேதாவுக்கு மட்டும் நேரமிருக்கு... ச்ச...
@all
பதிலிட்டேன்...
:))))
Post a Comment