@ஜெய்
//படத்துல புரியாதது காட்டாதது எல்லாமே ஓபன் எண்ட்-ஆ ஒத்துக்க முடியலைங்க... //
கண்டிப்பா அப்படி இல்லை...
//நாம எல்லாருமே புரியாத விஷயங்களையும் ஓபன் எண்ட்-னு நினைச்சுகிட்டு,
நமக்கு பிடிச்சா மாதிரி புரிஞ்சுக்கறோம்னு நினைக்கிறேன்... //
இருக்கலாம்... ஆனா நூறு சதவீதம் அப்படியேன்னு நினைக்கவும் முடியாதே...
//இந்த முக்கியமான விஷயங்களை ரெண்டு பக்கமும் argue பண்ணதான் படத்துல அங்கங்க வேணும்னே ரெண்டு பக்கத்துக்கும் argument points வச்சுருக்காங்க இல்லையா... //
நோலனுக்கு வேற வேலையே இல்லைங்க. வாங்க ஆர்க்யூ பண்ணுவோம் :)
//முடிவு நிஜம்னு சொல்லணும்னா, க்ளைமாக்ஸ்ல குழந்தைகள் வளர்ந்து இருக்கது, ஹீரோ கையில மோதிரம் இல்லாதது, (படம் பேர் போட்டு முடிச்சவுடனே டோட்டம் கீழே விழற சத்தம் கேக்குதாமே!!!) //
அப்படி எதுவும் கேட்கலை. புரளிகளை நம்பாதீர்...
//முடிவு கனவுன்னு சொல்லணும்னா.......அதே இடத்துல விளையாடறது, இந்த மாதிரி arguments சொல்லலாம்...//
எனக்கு அதே மாதிரி டிரெஸ்னு தான் தோணுது..
//குழப்பத்துல இருக்கதே பெட்டர்னு நினைக்கிறேன்... //
நீங்களும் காப் மாதிரியே பேசறீங்களே...
//ஒவ்வொருத்தருக்கும் ஒரு லிம்போ இருக்கும்... நாலாவ்து லெவல் ஃபிஷருக்குதான் லிம்போ...//
கண்டிப்பா அது ஃபிஷருக்குதான் லிம்போ, ஆனா அவரை கண்டெடுக்கறது காபோட லிம்போவுல. ஏன்னா அங்க தான் அவரை மால் புடிச்சு வெச்சிருக்காங்க.
//அப்பறமா, ஹீரோ வேன் லெவல்ல தண்ணிக்குள்ள இருக்கதால செத்துப்போய் சைட்டோவோட லிம்போவுக்கு போய் அவரை காப்பாத்தறாரு.. :)//
இதை ரெண்டு விதமா சொல்லலாம். அவர் தண்ணிக்குள்ள மயக்கத்துல இருக்கார்னும், ஏற்கனவே லிம்போல இருக்கறதால, அங்கேர்ந்தே சைட்டோவா தேடற வேலைய தொடங்கரார்னும் வெச்சுக்கலாம். ஏன்னா, ஃபிஷர காப்பாத்தின அப்பறம், அவர் எந்த கிக்கும் பயன்படுத்தலை
//ஃபிஷர் சாகவே இல்ல... குண்டடி பட்டு மயக்கம் ஆகிடறான்............
மால் செத்துட்டதால, அவங்க சுட்ட புல்லட் காயம் போயிடுச்சு... :)//
இது என்னோட புரிதல் கூடவும் கொஞ்சம் ஒத்துப்போகுது. ஃபிஷர் செத்ததா முடிவு பண்ணவே இல்லை. இயாம்ச ட்ரீட்மென்ட் கொடுக்க சொல்லிட்டுதான் அவங்க லிம்போவுக்கு போறாங்க.
//நாலாவது லெவல் காப்-ன் சப்கான்ஷியஸ்.....அதான் அவனை கூட்டிட்டு வர அங்க போறாங்க... //
அது லிம்போதாங்கர்துல இன்னும் என்னக்கு எந்த டவுட்டும் வரலை. இனிமேலும் வராதுன்னு நினைக்கறேன்.
//இப்படி நிறைய... இதெல்லாம் தப்புன்னு என்னால சொல்ல முடியல... ஆனா, சரின்னும் ஒத்துக்கமுடியல... //
அதுதான் டைரக்டரும் எதிர்பார்க்கறார்...
//மால்-ம், சைட்டோ-வும் ஒரே மாதிரி சொல்லற “take a leap of faith" டயலாக்....... தாத்தா சொல்லற "they come here only to sleep again. dream is their real world. who are you to say otherwise?" டயலாக்... இதெல்லாம் முக்கியமான விஷயங்கள்னு தோணுது எனக்கு... ஏன்னா ஹீரோ க்ளைமாக்ஸ் கனவுதான்னு புரிஞ்சே அதுல வாழ தயாராகுறானா?//
இந்த இடத்துல, இன்னொரு interpretationஉம் சில பேர் முன்வைக்கறாங்க. இயாம்சொட இடத்துல போயிட்டு, அந்த செடேஷன பரிசோதிக்கற இடத்துலேர்ந்து (தாத்தா டயலாக் அப்பறம்) எல்லாமே காபோட கனவுன்னும் சொல்றாங்க.
//Is there a final truth to MEMENTO? Christopher Nolan claims there is one.//
படத்தோட கிரானலாஜிகல் வெர்ஷன பார்த்த அப்பறம், முடிவு இருக்குனுதான் தோணுது.
@பாலி
//நான் திரும்ப படம் பார்க்கும்போது கன்ஃபர்ம் பண்ணிகிட்டேன். வேறு உடைகள்.//
தல, அதே செட் உடைகள் தான். நான் அதுக்காகவே நூத்தி இருவது ரூவா செலவழிச்சு பார்த்தேன். இன்னொரு தடவையும் பார்க்க ரெடி.
//ஆக்சுவலி இந்த மேட்டரையெல்லாம்.. நான் கி.மு 200-லயே தினமும் 12-16 மணிநேரமா படிச்சி வந்திருந்தேன்.//
தல, நானும் கனடா கபோதிக்கு, பத்து வருஷத்துக்கு முன்னாடியே உங்கள refer பண்ணி, இதைப் பத்தி எழுதி, ஒரு மெயில் அனுப்பினேன். பப்ளிஷ் பண்ணலை. இலக்கியவாதிகள மதிக்கத் தெரியாத கம்மனாட்டி பசங்க.. இதைப் பத்தி, ராணி முத்துல வேலை செய்யற என்னோட தோழிகிட்ட கூட, டப்ளிங்க்ல ஒக்காந்து பேசியிருக்கேன்.
@ஜெய்
//நாட்டுல இவ்ளோ குழப்பம், சண்டை, சச்சரவு வருமா?//
கலைஞர்களுக்குள்ள இதெல்லாம் சகஜம் ....
@ஜெய் + பாலி
ஸ்வேதா யாரு??
அடுத்த பதிவுல, நண்பர் பத்மநாபன் கேட்டா மாதிரி, படத்தோட கதைய முடிஞ்சவரைக்கும் சிம்பிளா எழுதறேன்.. மறுபடியும் எல்லாருக்கும் நன்றி.. :)
கேள்விகள் இல்லாமையே பதில் சொன்னா அதுக்கு என்ன பேரு???
14 comments:
@பாலி
//நான் திரும்ப படம் பார்க்கும்போது கன்ஃபர்ம் பண்ணிகிட்டேன். வேறு உடைகள்.//
தல, அதே செட் உடைகள் தான். நான் அதுக்காகவே நூத்தி இருவது ரூவா செலவழிச்சு பார்த்தேன். இன்னொரு தடவையும் பார்க்க ரெடி.
=====
இல்லீங்க. நீங்க அந்த பேட்டியை படிச்சிருப்பீங்க. நான் அந்த ஒரு காரணத்துக்காகவே இன்னொரு $10 செலவு பண்ணினேன் (உங்க செலவு கம்மிதான் :) )
அந்த குழந்தையோட ஸ்ட்ரைப் பேட்டர்ன் மாறியிருக்கும் பாருங்க.
எனக்கென்னமோ இன்னொரு 120 உங்க பர்ஸல காலின்னு நினைக்கிறேன். :)
//இன்னொரு $10 செலவு பண்ணினேன் (உங்க செலவு கம்மிதான் :) )//
இந்த கணக்கே தப்பு. $30 செலவு பண்ணினேன்.
தியேட்டருக்குள்ள போறதுக்கு முன்னாடியே அஞ்சலி தூங்கிட்டு இருந்துச்சி. ஆனாலும் அதுக்கும் டிக்கட் வாங்கிட்டுதான் விடுவேன்னு சொல்லி, வாங்கினாங்க.
சரியா படம் முடிஞ்சதும், அஞ்சலி எந்திரிச்சதும் சொன்ன முதல் வார்த்தை. I like the movie Bala (என்னை அப்படித்தான் கூப்பிடும். No Daddy, or அப்பா)
@பாலி
pattern?? ஐயையோ, அதை நான் கவனிக்கலயே. ஆனா கண்டிப்பா அதே கலர் தான்..சரி, மறுபடியும் பாக்கறேன்.. அந்தப் பேட்டியெல்லாம் சாட்சிக்கு கூப்பிடாதீங்க. அதெல்லாம் inception :P
@பாலி
பாவம். ஒரு பச்ச புள்ளைய படத்துக்கு கூட்டிட்டு போயி குழப்பறீங்களே. அந்த குழந்தைக்கு என்னா தெரியும் (பாம்பே எபக்ட்)
//அந்தப் பேட்டியெல்லாம் சாட்சிக்கு கூப்பிடாதீங்க. அதெல்லாம் inception :P
//
இல்லீங்க நிச்சயமா கிடையாது!!
அது உண்மை. அந்த பையனோட ஸ்ட்ரைபை கவனிக்கிறது கூட உங்களுக்கு கஷ்டமா தெரியலாம்.
ஆனா.. அந்த பொண்ணோட ட்ரெஸ் ரொம்ப ஈஸி.
படத்தோட முதல்ல காட்டுற ட்ரெஸ்ல அந்த பெண் குழந்தையோட ட்ரெஸின் ‘கை’ பகுதியும், ரோஸா இருக்கும்.
ஆனா, கடைசியில் அது வெள்ளையா இருக்கும்.
முயற்சி பண்ணுங்க தல!! :)
இதை நீங்க கண்டுபிடிக்கும் போது, இதுவரை நீங்க சொன்ன பதில்கள் எல்லாம் எப்படி மாறும்னு யோசிச்சிப் பார்க்கறேன். :)
இதுக்காகத்தான்.. நான் கும்மி மட்டும் அட்டண்ட் பண்ணுறேன். யு ஸீ மை பாய்ண்ட்?! :) :)
@பாலி
எல்லா தடவையும் அந்த பெண் ஒரே (பிங்க்??) கலர் டிரஸ் தான் போட்டிருந்தா மாதிரி ஞாபகம்
பாக்கறேன்.. ஆனா மத்த பதில்கள் எப்படி மாறும்னு நினைக்கறீங்க. காபோட கற்பனைல, அவரோட பசங்க வேற கலர் டிரஸ் போடவே கூடாதுன்னு ஒண்ணும் இல்லையே..
@பாலி
//யு ஸீ மை பாய்ண்ட்?! :) :)//
உங்க பாயின்ட் புரியுது.. ஆனா காரணம் புரியல.. உங்க பதிவுல நானும் கூட சேர்ந்து கும்மி அடிச்சாலும், அடியில இருக்கற குத்து என்னான்னு புரில.. முடிஞ்சா அப்பறமா மெயில் பண்ணுங்க :P
//காபோட கற்பனைல, அவரோட பசங்க வேற கலர் டிரஸ் போடவே கூடாதுன்னு ஒண்ணும் இல்லையே.//
அதுக்கும் ஒரு டயலாகில் காரணம் சொல்லுவாங்க. அவங்க முகம் திரும்பறதுக்குள்ள வந்துட்டனால, அந்த மெமரியை என்னால அழிக்க முடியலைன்னு (கிட்டத்தட்ட). அதனாலதான்.. எல்லா இடத்திலும் மால்-லின் உடைகள் மாறினாலும், பீச் பார்க்க்னு எந்த இடத்தில் இருந்தாலும் குழந்தைகளின் ட்ரெஸ் மாறலை(ன்னு நான் நினைக்கிறேன்).
ட்ரெஸ் மாறியிருந்தா இப்ப, நீங்க ஓப்பன் எண்ட்-ன்னு நினைச்சிட்டு இருக்கற மேட்டரெல்லாம் க்ளோஸ்ட் ஆகிடாதா?
இருந்தாலும்.. என்னையும் இந்த டிஸ்கஸனுக்குள் இழுக்கும் முயற்சியை கடுமையாக கண்டித்து வெளிநடப்பு செய்கிறேன்.
@பாலி
என்னோட பக்க/எதிர் வாதம் என்னானா, போன கமெண்ட்ல சொன்னதேதான். நாம் எவ்வளவு பேசிகிட்டாலும் நோலனே வாயத்திறக்கற வரைக்கும் வேலைக்கு ஆவாது..
ஆனா, சில கேசுங்க இருக்காங்க. நோலனே விளக்கினாலும் ஒத்துக்காம, அவர் பொய் சொல்றாருன்னு சண்டை போடற ஆளுங்க...
//கடுமையாக கண்டித்து வெளிநடப்பு செய்கிறேன்.//
தல, ஆடின கால், பாடிய வாய், பதிவிய கை, பின்னூட்டிய விரல், இதெல்லாம் சும்மாவே இருக்காது..
அதனால, உங்களையே நம்பியிருக்கற கோடிக்கணக்கான ரசிகர்களை ஏமாத்தாதீங்க.. :P
// அப்படி எதுவும் கேட்கலை. புரளிகளை நம்பாதீர்... //
ஆமாங்க.. .கூகிள் பண்ணதுல அது புரளி போலதான் தெரியுது... நாட்டுல நிறைய பேரு நோலன் மாதிரியே யோசிக்க ஆரம்பிச்சுட்டாங்க...
// அந்த குழந்தையோட ஸ்ட்ரைப் பேட்டர்ன் மாறியிருக்கும் பாருங்க. //
// அந்த பெண் குழந்தையோட ட்ரெஸின் ‘கை’ பகுதியும், ரோஸா இருக்கும். //
தல... நீங்கதான் நோலன் படம் பாக்க சரியான ஆள்... இதெல்லாம் நான் தியேட்டர்ல உட்கார்ந்து பார்த்தா விடிஞ்சுடும்... நமக்கு டிவிடி-யும் pause/play பட்டனும்தான் சரிவரும்... டவுன்லோட் லின்க் எதுவும் கிடைச்சா அனுப்புங்க...
// கண்டிப்பா அது ஃபிஷருக்குதான் லிம்போ, ஆனா அவரை கண்டெடுக்கறது காபோட லிம்போவுல. ஏன்னா அங்க தான் அவரை மால் புடிச்சு வெச்சிருக்காங்க. //
இப்போதைக்கு இந்த ஏரியாவுக்குள்ள நான் வரலைங்க... டிவிடி கிடைக்கட்டும்... பொறுமையா பார்த்துட்டு, திரும்ப பேசுவோம்... :)
// படத்தோட கிரானலாஜிகல் வெர்ஷன பார்த்த அப்பறம், முடிவு இருக்குனுதான் தோணுது. //
ஆங்... இதுதான் நம்ம ஏரியா... ஃப்ரீயா இருந்தா மெமெண்டோ பத்தியும் ஒரு போஸ்ட் போடுங்க... (இதுவரை ஹாலிபாலி போஸ்ட்லயும், என் போஸ்ட்லயும், அந்த கும்மியிலயும் சொல்லாத விஷயங்கள்...) உடனடியா கும்மியடிக்க நாங்க ரெண்டு பேரும் வருவோம்...
// கலைஞர்களுக்குள்ள இதெல்லாம் சகஜம் .... //
ஏற்கனவே பதிவரா எழுத்தாளரான்னு எல்லாம் வாய்க்காத்தகராறு போயிகிட்டு இருக்கு... இதுல கலைஞர் வேறயா? சத்தமா சொல்லாதீங்க பாஸ்... அதுக்கு வேற எதிர்வினை போட்ருவாங்க...
// ஸ்வேதா யாரு?? //
கிழிஞ்சது... அது ஒரு பெரிய கதை... பாலாவோட இந்த மாச போஸ்ட்ல தேடி பாருங்க... :)
// இன்னொரு $10 செலவு பண்ணினேன் //
அடக்கொடுமையே... ஐமேக்ஸ்ல 10$-தானா? பெங்களூரை விட கம்மியா இருக்கு... இங்க PVR-ல Gold Class 750 ரூவா...!! இந்த பக்கம் செட்டில ஆகலாம்னு வந்துடாதீங்க...
// அதுக்கும் ஒரு டயலாகில் காரணம் சொல்லுவாங்க. அவங்க முகம் திரும்பறதுக்குள்ள வந்துட்டனால, அந்த மெமரியை என்னால அழிக்க முடியலைன்னு (கிட்டத்தட்ட). அதனாலதான்.. எல்லா இடத்திலும் மால்-லின் உடைகள் மாறினாலும், பீச் பார்க்க்னு எந்த இடத்தில் இருந்தாலும் குழந்தைகளின் ட்ரெஸ் மாறலை(ன்னு நான் நினைக்கிறேன்). //
நீங்க சொல்றது சரிதாங்க பாலா... அதுனாலதான் குழந்தைகள் முகம் தெரியல... ட்ரெஸ்ஸூம் மாறல..
// அவங்க முகம் திரும்பறதுக்குள்ள வந்துட்டனால, அந்த மெமரியை என்னால அழிக்க முடியலை //
ஆனா, நாலவது லெவல்ல காப்-ஐ அங்கேயே இருக்க வைக்க மால்(projection) முயற்சி பண்ணறாங்க... அதுக்காக அந்த குழந்தகளை திரும்பி பார்க்க சொல்லறாங்க... குழந்தைகள் கிட்டத்தட்ட திரும்பறப்போ, காப் அவங்க முகங்களை பார்க்க மறுத்துடறாரு... அதாவது, காப் நினைத்தால் அவரால குழந்தைகளின் முகங்களை கனவுலயும் கொண்டுவர முடியும்னுதான் நினைக்கிறேன்... அதுனால க்ளைமாக்ஸ் ஏன் கனவா இருந்து அதுல காப் குழந்தைகள் திரும்பறதா நினைக்கக்கூடாது? ஏன் வேற ட்ரெஸ் போட்ருக்க மாதிரி நினைக்கக்கூடாது?
அது கனவுன்னு நான் சொல்லல... அந்த ட்ரெஸ் மேட்டர் கொஞ்சம் இண்ட்ரெஸ்டிங் and another point to the argument... ஆனா, அது முழுசா perspective-வையே மாத்திடும்னு தோணல...
// என்னையும் இந்த டிஸ்கஸனுக்குள் இழுக்கும் முயற்சியை கடுமையாக கண்டித்து //
இங்க கும்மியை கண்டினியூ பண்ணலன்னா, இன்செப்ஷன் பத்தி நானும் ரெண்டு மூணு போஸ்ட் போடுவேன் என எச்சரிக்கிறேன்...
Post a Comment