Showing posts with label மொக்கை. Show all posts
Showing posts with label மொக்கை. Show all posts

Sunday, August 17, 2014

'எடை'யப்பா


ரயில் நிலையங்களில் இருக்கும் எடை பார்க்கும் இயந்தரங்களின் மேல், சிறு வயது முதலே எல்லா சிறுவர்களையும் போல ஒரு ஈர்ப்பு. இன்று வரை அதன் தொழில்நுட்பம் புரியாமல் இருப்பதால், இன்று வரை அதன் மீதான சுவாரசியமும் குறையவில்லை. பல முறை எடை பார்த்திருக்கிறேன். காலுக்கு கீழே வைத்துப் பார்க்கும் சிறிய அளவிலான எடை பார்க்கும் இயந்திரமாக இருந்தாலும் விட்டதில்லை. ஏறி நின்று (எடை) பார்த்து விட்டுதான் மறுவேலை. 

என்றுமே எடையைக் கூட்டவோ, குறைக்கவோ பெரிய அளவில் நான் முயற்சி செய்ததில்லை. சிறு வயது முதலே ஒல்லியான தோற்றம் என்பதால், அவ்வபோது பாதாம் ட்ரிங், பால், தேன், pedia sure, complan என பல கட்டங்களைத் தாண்டி, நிச்சயமாக எதுவும் தேறாது என முடிவுசெய்து முயற்சிகளை கைவிட்டேன். ஆனாலும் அவ்வபோது எடை பார்த்து, அந்த நொடிக்கு மட்டும் வருத்தமடைந்த சந்தர்ப்பங்கள் வந்தன. முதுகலையில் சேரும்போதும் 49 கிலோ மட்டுமே இருந்தேன். முடியும் போது 52. ஆனால் அடுத்த ஒரு வருடத்தில் என்ன ஆனதோ தெரியவில்லை, 10 கிலோ வரை ஏறினேன். "ஒரு வழியா டீசண்டான வெயிட் வந்துட்டோம்" என மனதில் தோன்றியதால், முன்பு போல எடை பார்ப்பதை நிறுத்தி விட்டேன். 

பெசண்ட் நகரில் முருகன் இட்லி கடைக்கு நண்பர்களுடன் சென்றிருந்தேன். எடை பார்த்து ஒரு சில மாதங்கள் ஆகியிருந்ததால், அங்கிருக்கும் எடை பார்க்கும் நவீன இயந்திரத்தைப் பார்த்தவுடன், காலும் கையும் குறுகுறுக, ஆசை பீறிட, சில்லறை கடன் வாங்கிக் கொண்டு, இயந்திரத்தில் நின்றேன். 76.3 என வர, என் இதயம் ஒரு முறை நின்றது. அதற்கு முக்கியக் காரணம், சில மாதங்கள் முன்பு நான் இதை விட 10 கிலோ குறைவாக இருந்தேன். 

ஒரு காலத்தில் நான் 50 கிலோ வருவதற்கே அரும்பாடு பட்டுள்ளேன். வேலைக்கு போக ஆரம்பித்த பின், தானாக, இயற்கையாக எடை கூடியதால், பெரிதாக கவலைப் பட்டதில்லை. ஆனால், ஒரேடியாக இந்த 10 கிலோ ஏற்றத்தை மனம் ஏற்க மறுத்தது. மீண்டும் சில்லைற மாற்றி, மீண்டும் முயற்சித்தேன், இம்முறை 77. 

நின்று போன இதயம் வெடித்தது. கண்கள் கண்ட காட்சியை, மூளை ஏற்க மறுத்தது. நண்பர்களிடம் புலம்பிவிட்டு, வீட்டிற்கு வந்தேன். பேச்சு வாக்கில் அப்பாவிடம் சொல்ல, அவரும் அதிர்ச்சி ஆனார். தலைக்கனத்தினால் உடல் எடை உயர்ந்ததாக சரித்திரத்தில் இல்லை. அதனால் அப்பாவுக்கும் குழப்பம். "எக்சர்சைஸ் பண்ணு. இவ்ளோ இருக்க கூடாது. வீட்ல எதாவது வேலை செஞ்சாதான" என்று அவர் பங்கிற்கு ஏற்றிவிட, மேலும் கடுப்பானேன். வழக்கம் போல அம்மா மட்டுமே, இந்த வயதிற்கு இது சரியான எடை தான். கவலைப்பட வேண்டாம் என ஆறுதல் சொன்னார். ஆனால் மனம் ஆறவில்லை. எப்படி 10 கிலோ, எப்படி 10 கிலோ என அதீதமான யோசனை.

சில நாட்களுக்கு முன காதி கிராப்ட் கடையில் இருக்கும் இயந்திரத்தில் எடை பார்த்தேன். பழைய எடையான 67-ஐ காண்பித்தது. அபோதுதான் மனதின் பாரமும் இறங்கியது. மு.இ.கடையில் இருக்கும் இயந்திரம் கோளாறு என முடிவு செய்தேன். இப்போது ஒரு வகையில் நிம்மதியாக இருக்கிறது. நீங்கள் யாரும் மு.இ. கடை இயந்திரத்தை நம்ப வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். வாழ்க அரசாங்க இயந்திரம் !!

Friday, February 1, 2013

கடல்


எப்படியோ வருஷத்தோட ஆரம்பத்துல வந்த முதல் கண்டமான அலெக்ஸ் பாண்டியன் கிட்டேர்ந்து தப்பிச்சிட்டோமேனு சந்தோஷத்துல இருந்தேன். அதுல யார் கண்ணு பட்டுச்சோ தெரியலை, என்னை கடல்ல தள்ளி விட்டுட்டாங்க .Taking for grantedனு ஆங்கிலத்துல சொல்லுவாங்க. அப்படி, மணிரத்னம், தனக்குனு வர ரசிகர்கள், எதை எடுத்தாலும் பாராட்டிடுவாங்கனு குருட்டு நம்பிக்கைல, எதையோ எடுத்து தொலைக்க, இதுக்கு பேசாம தடை வாங்கிருக்கலாமேனு தோணிணதுதான் மிச்சம் ( நான் மணிரத்னம் ரசிகன் இல்லை)

 “இந்த படத்தில் வரும் பெயர்கள் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே”னு போடற இடத்துலேர்ந்தே ஜெயமோகன் கண்ணுக்கு தெரியராரு. ஏன்னா, அதுவும் படிக்க சிக்கலாதான் இருந்துது. அதை ஏன் மாத்தினாங்கன்னு தெரியலை. அடுத்து, டைட்டில்ஸ்ல வர மகுடி பாட்டு, யாருக்கு மகுடி, எதுக்கு மகுடி, என்ன மகுடினு நம்மளை நல்லா சிந்திக்க வைக்குது. கதைனு ஏதோ கதை பண்ணிருக்காங்க. திரைக்கதை செம்ம உதை வாங்கிருக்கு. நடிப்புனு பார்த்தா, கௌதம் கார்த்திக் நம்பிக்கை தராறு. எல்லா தமிழ் படங்கள்ளையும் அரை லூசா வர ஹீரோயின் பாத்திரத்துக்கு, இந்த படத்துல, அவங்களுக்கு மனநலம் கொஞ்சம் பாதிப்புனு justification சொல்லிருக்காங்க. அதுக்காக அந்த பொண்ணு நல்லா நடிச்சிருக்குனு சொல்ல வரலை. அரவிந்த்சாமி, அர்ஜுன் நடிப்பை பத்தி சொல்ல ஒண்ணும் இல்லை. ஒருத்தர் தியாகத்தோட மறுவுருவம், அடுத்தவர், நேரெதிர். மற்றும் பலர், மற்றும் பலர் மாதிரியே நடிச்சிருக்காங்க.

ஏதோ வெனிஸ்ல இருக்கறா மாதிரி, எப்ப பார்த்தாலும், எல்லாரும் படகுலதான் பயணப்பட்றாங்க. பாடல்கள் ப்டத்துல வந்த விதம், எடுக்கப்பட்ட விதம், ரெண்டுமே மெகா சைஸ் கொட்டாவீஸ். ”நெஞ்சுக்குள்ள” பாட்டுல, ஹீரோயின், வடிவேலு மாதிரி, அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்னு பண்ணுவாங்க பாருங்க, தியேட்டரே ஒத்த வார்த்தைல ஒரு சவுண்டு விட்டுச்சு. இதுல ”அடியே” பாட்டுதான் உச்சகட்டம். இடுப்பே இல்லாத பொண்ணுக்கு, பெல்லி டான்ஸ் ஸ்டெப் வேற. பிண்ணனி இசைல நீங்க இன்னும் வளரணும் சார். ராஜீவ் மேனனோட ஒளிப்பதிவு, சில இடங்கள்ள நல்லா இருக்கு. பல இடங்கள்ள, image quality அடி வாங்குது. இன்னும் சில காட்சிகள்ல out of focus. கிராபிக்ஸ், வழக்கம் போல தமிழ் சினிமா தரம். கடைசில வர ஆலேலூயா பாட்டுக்கு அடக்க முடியாம சிரிச்சிட்டேன், அதுலயும், அரவிந்த்சாமி ஏதோ பாப் சாங் ரேஞ்சுக்கு ஃபீல் பண்ணி வாயசச்சிட்டு வருவாரு பாருங்க. priceless. கடல், பெயர் காரணம் கூறுகனு சொன்னா, டைரக்டர்கே தெரியாதுனு நினைக்கறேன். ஸ்தோத்திரம், தொம்மை, டாம், மகுடி, டாம் அண்ட் ஜெர்ரி, இப்படி பல டைட்டில்ஸ் இருக்க, இதை ஏன் வெச்சாருனு தெரியலை.

இந்த படத்தோட ஒரே ப்ளஸ், புது வருஷத்துல என்னை பதிவு எழுத வெச்சதுதான். நீச்சல் தெரிஞ்ச என் நண்பனும், இந்தக் கடல்ல ரொம்ப கஷ்டப்பட்டான். மொத்தத்துல பன்ச் மாதிரி சொல்லனும்னா இது கDULL.


பி.கு எனது வயற்றெரிச்சலை செம்மையாகக் கொட்டிக்கொண்ட மணிசார், என் money sir?? அதுக்கும் ஸ்தோத்திரமா?? 

Saturday, July 9, 2011

வேங்கை - ப.வி

வழக்கமான ஹரியின் படம். இதைச் சொல்லி சொல்லியே போர் அடிக்குது. ஏய், நான் இப்படித்தான், என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோனு, எல்லாருக்கும் சவால் விட்டிருக்காரு ஹரி. ஆரண்ய காண்டம் பார்த்த கண்ணோட, மூளையோட, மனசோட இந்த படத்தை பாத்தீங்கன்னா,  சத்தியமா பிடிக்காது. நான் எதையும் எதிர்பார்க்கல, ஜாலியா என்ஜாய் பண்ணிட்டு வந்தேன். ரெண்டரை மணி நேரம், எனக்கும் என் நண்பனுக்கும் நல்லா பொழுது போச்சு.

தனுஷ், தன்னால முடிஞ்ச வரைக்கும் அந்த கேரக்டருக்கு ஜஸ்டிஃபை பண்ண முயற்சி பண்றாரு. மத்தபடி, எல்லா ஹரி படத்துலையும் வர கதாபாத்திரங்கள், அங்க இங்க கொஞ்சம் இடம் மாறி இருக்கு. அவ்வளவே. பிரகாஷ்ராஜ் இந்த படத்துக்காக தனியா நடிச்சாரா இல்லை, சிங்கம் படம் எடுக்கும்போதே சேர்த்து ஷூட் பண்ணிட்டாங்களான்னு தெரியலை. தமன்னா இல்லாம, வேற யாராவது நடிச்சிருந்தாலும் நல்லா இருந்திருக்கும். தமன்னா நண்பியும், தனுஷோட தங்கையும், நல்லா இருக்காங்க.. ஹி ஹி... இசை ஓகே.

மறுபடியும் சொல்றேன், இவர் இப்படிதான்னு தெரிஞ்சுகிட்டே எதையும் எதிர்பார்க்காம படம் பாருங்க, நிச்சயம் நல்ல டைம் பாஸ். நாம சுறாவையே தாங்கின இதயங்களாச்சே. வேங்கையெல்லாம் வெங்காயம் சாப்பிடறா மாதிரி :) எப்படி நம்ம ஹரி ஸ்டைல் பன்ச். அப்பறம் சந்திப்போமா. ஆனா இப்படியே போனா, அடுத்த ஹரி படத்தோட விமர்சனம் ரெண்டு வார்த்தைதான் இருக்கும். “ஹரி படம்”

யோவ், இது சாமி படத்துல யூஸ் பண்ணதாம், புதுசா ஒண்ணு வாங்குங்கயா..

Wednesday, February 23, 2011

நடுநிசி நாய்கள் - edge of the seat

இரு கோடுகள் லாஜிக்க நான் பல சமயங்கள்ல நண்பர்கள் கிட்ட சொல்றதுண்டு. இந்தப் படம் பார்க்கும்போதும் அதுதான் தோணிச்சு. எப்படின்னு சொல்றேன். இந்தப் படத்தை பத்தி ஒரு பக்கம் என்னடான்னா "இதெல்லாம் ஒரு படமா, கவுதம் மேனன் என்ன நினைச்சிகிட்டு இருக்காரு, இவ்வளவு வக்கிரமான படம் பார்த்தா அப்பாவி மக்கள் கெட்டுப் போய்ட மாட்டாங்களா, ச்சே ச்சே அபசாரம் அபசாரம்"னு கூவிக்கிட்டு இருக்காங்க. இன்னொரு பக்கம், "அவரு அப்படி என்ன சொல்லிட்டாரு.இருக்கர்ததான சொல்லிருக்காரு, இதுல என்ன கெட்டுப்  போச்சு, கரை நல்லது"னு சப்போர்ட் பண்ணிக்கிட்டு இருக்காங்க. எனக்கு படம் அப்படி வக்கிரமா, டிஸ்டர்பிங்கா தெரியல. ஏன்? ஏன்னா நான் இத விட வக்கிரமான, வயலன்டான, இன்டேன்ஸோட இருக்கற படம் பாத்துருக்கேன். அதான் இரு கோடுகள் லாஜிக்.

படத்தைப் பத்தி சொல்லனும்னா, ஒரு புது முயற்சி, அப்படிங்கற ஒரு ப்ளஸ் பாயின்ட்ட தவிர, வேற ஒண்ணும் சொல்லிக்கறா மாதிரி இல்ல. படம் ஆரம்பிக்கும்போதே, வீரா மாட்டிகிட்டு, வாக்குமூலம் தரா மாதிரிஇருக்கர்தால, அதான் மாட்டிகிட்டாரே, எப்படி மாட்டிகிட்டாருன்னு பார்க்கலாம்னு புஸ் ஆயிருச்சு. அப்படி காமிக்கப் பட்ட விஷயமும் ஒண்ணும் சுவாரசியமா இல்லை. ரொம்ப predictable. படத்துல நல்ல விஷயங்கள்னு பார்த்தா, டெக்னிக்கலா நல்லா இருந்துது. இசை இல்லாத மாட்டேர் சொல்லலைன்னா தெரிஞ்சிருக்காது. மீனாட்சி அம்மாவா வந்த ஸ்வப்னா ஆபிரகாமின் நடிப்பு கொஞ்சம் நல்லா இருந்துச்சு. முடிவா என்ன சொல்ல விரும்பறேன்னா, சாரி கவுதம் சார். ஏமாத்திட்டீங்க. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.


பி.கு. ஆது என்ன edge of the seatனு சொல்லிருக்கேன்னா, நிறைய பேரு படம் 
எப்ப முடியும், கிளம்பலாம்னு edge of the seatla ரெடியா இருந்தாங்க. அதான்

Monday, August 24, 2009

The கிரேட் கந்தசாமி challenge ...

நீங்க கந்தசாமி படம் பார்த்து நொந்த ஆளா?? குறைந்தது, அந்த படத்த பற்றி கேள்விப்பட்ட ஆளா?? அப்ப இந்த challenge உங்களுக்குதான். கீழ, என்னுடைய ரசனையின் அடிப்படையில், ஒரு match the following இருக்கு. அதுக்கு கீழ, ஒவ்வொரு வார்த்தைக்கும் equivalent வார்த்தையும் இருக்கு. உங்களால கரிக்டா match பண்ண முடியுதான்னு பார்க்கலாம். பின்னூட்டத்துல உங்க பதிலைப் போடுங்க.

for ex - கந்தசாமி -

1. தெரு முனையில் டீக்கடை வைத்திருப்பவர்
2. சுசி கணேசனின் கலைப் படைப்பு
3. வீணாக உழைத்து நொந்த சாமி ஆனவர்

இதுக்கு சரியான தேர்வு 1
got it??? இப்ப விளையாடுவோமா ??
கவலைப் படாதீங்க, ரொம்ப ஈசியாதான் இருக்கும்.

படம் நல்லா வரணும்னு சீட்டெழுதி போட்டிருக்கலாமோ???

The கிரேட் கந்தசாமி challenge ...

கந்தசாமி - 1
விக்ரம் -
ஸ்ரேயா -
சுசி கணேசன் -
தாணு -
படத்தில் பாடல்கள் -
படத்தில் பின்னணி இசை -
படத்தின் திரைக்கதை -
வடிவேலுவின் காமெடி -
தெலுங்கு சூப்பர் ஸ்டாரின் நடிப்ஸ் -
பிரபு -
என் பேரு மீனா குமாரி பாடல் -
எடிட்டிங்/எடிட்டர் -
காமிரா/காமிராமேன் -
சுசித்ரா -
மறுபடியும் விக்ரம் -
மறுபடியும் ஸ்ரேயா -
சென்சார் போர்ட் -
சத்யம் தியேட்டர் -
செல்வராகவன் -
கார்த்திக் கிருஷ்ணா -

பதில்கள்
  1. தெரு முனையில் டீக்கடை வைத்திருப்பவர்
  2. கணேசனின் கலைப் படைப்பு
  3. வீணாக உழைத்து நொந்த சாமி ஆனவர்
  4. மூன்று வருடங்களுக்கு ஒரு படம் நடித்து மொக்கை வாங்குபவர்
  5. தனி ஆளாக படத்தை காப்பாற்றுபவர்
  6. தான் பார்த்த/நடித்த பழைய படங்களை மறப்பவர்
  7. ராவணன் கைவிட்டால், காப்பற்ற இருக்கும் ஒரே ஆள்
  8. கந்தசாமி பார்த்துவிட்டு யோசிப்பவர்
  9. எந்த ஒரு மொக்கை படத்தையும் சுமாராக ஆக்கும் இடம்
  10. கேலிக்கூத்து
  11. குடுத்த பணத்திற்கு ஏற்றார் போல் வேலை செய்வது
  12. ஸ்ரேயா ஆடியிருந்தால் இன்னும் நன்றாக அமைந்திருக்கும்
  13. கொக்கரக்கோ கோழி
  14. தேவையில்லாமல் வந்து போவது
  15. மன ஆறுதலை தரும் ஒரே விஷயம்
  16. city of god படத்தை நிறைய முறை பார்த்தவர்
  17. இப்பொழுதுதான் தொழிலை கற்றுக்கொள்பவர்
  18. கொஞ்சம் கமெர்சியலா பண்றோம்
  19. எல்லா காட்சிகளிலும் தண்ணி அடித்தது போல் பேசுபவர்
  20. படத்திற்கு உறுதுணையாக இருப்பது
  21. நம் மண்டையை பிளப்பது
  22. பட்ஜெட்டில் துண்டு
  23. எவ்வளவு மொக்கை வாங்கினாலும் ஸ்டெடியாக இருப்பவர்
  24. பதிவு போடவே படம் பார்க்கும் கேசு
  25. அடுத்தடுத்து ஆப்புகளை பெறுபவர்
  26. தூக்கக் கலக்கத்தில் பேசுபவர்
  27. சில காட்சிகளில் நினைவிற்கு வந்து upset ஆக்குபவர்
  28. கருப்பு பணத்தை வெள்ளையாக்குபவர்
  29. மஞ்ச மாக்கான்
  30. வெளிப்படையாக நடிப்பவர்
  31. பல்காக இருப்பவர்
  32. பிள்ளையின் மானத்தை வாங்குபவர்
  33. பல்ராம் நாயுடுவிற்கு போட்டி
  34. தேடினாலும் கிடைக்காது
  35. மனதில் ஹிட்ச்காக் என்று நினைத்து கொள்பவர்
  36. எப்பொழுதும் மர்மமான ரோலில் நடிப்பவர்
  37. என்ன கொடுமை சரவணன் இது
  38. சூப்பரப்பு
  39. உரிச்ச கோழி
  40. அப்படின்னா??
ஒரு கேள்விக்கு பல பதில்கள் இருப்ப்பது போல இருக்கும். உங்களுக்கு எது சரின்னு படுதோ, அத செலக்ட் பண்ணுங்க...

மச்சான் ஒருத்தன் சிக்கிருக்காண்டா, வரியா படம் எடுப்போம்?? நான் உளவுத்துறை போலீசா நடிக்கிறேன்..

Monday, August 17, 2009

சிகாமணியின் சின்னபிள்ளைத்தனமான கதைகள் -3 (அவ்ளோதான்)

சி.சி.கதை 1 --> இங்க
சி.சி.கதை 2 --> இங்க

விடாம தொடர்ந்தான் சிகாமணி, "என்னதான் producer இளிச்சவாயா இருந்தாலும், நமக்கும் கொஞ்சம் நேர்மை வேணும்டா. அதனால, பாவப்பட்ட producer யாருவேனாலும் இந்த கதைய எடுத்துக்கலாம்"

"நீ கதைய முதல்ல சொல்லு" என நான் அவசரப்படுத்த,

"அவசரப்படாத, நம்ம ஹீரோ ஒரு ஏழை. அவருக்கு அப்பா இல்லை, அம்மா மட்டும்தான். அதோட ஒரு தங்கச்சி வேற, அந்த தங்கச்சிக்கு வயசு 4",

நான் மறுபடியும் குறுக்கிட்டு, "அது எப்படி மச்சான்???"

"அட, இரண்டு குழந்தைக்கு நடுவுல ஒரு இடைவேளைனு வெச்சிக்க, கதைய கேளு, நம்ம ஹீரோவுக்கு ஒரே ஒரு வேலைதான் தெரியும், அதாவது அப்பளம் விக்கறது. நம்ம அம்மா செஞ்சு தருவாங்க, ஹீரோ வித்துட்டு வருவாரு"

"முதல் சீன்ல, நம்ம ஹீரோ, தான் தூங்கியெழுந்த கிழிஞ்ச படுக்கைய மடிக்கராறு, அப்பறமா பல்லு வெளக்கி தண்ணி குடுக்கிறாரு, அப்புறம் குளிக்கராறு, அப்புறம்........." நான் பொறுமையிழந்து, "கொட்டிகிராறு, ஜீரணம் ஆவுது, ஏப்பம் விடுவாரு, இதெல்லாம் விடு, நீ கதைய மட்டு சொல்லு" என எரிச்சலாக, அவன் தொடர்ந்தான்,

"இருக்குற அப்பளத்தை எடுத்திட்டு போறாரு. ஆனா அந்த அப்பளத்த யாருமே வாங்கலை. இந்த இடத்துல, நம்ம சமுதயாம் எப்படி அப்பளம்னு ஒரு அயிட்டம் இருக்கறதையே மறந்து, pizza வெறி பிடிச்சி அலையராங்கன்னு, montagela காமிக்கறோம். சாயங்காலம் வரை எதுவுமே போனி ஆகாம, நம்ம ஹீரோ வீட்டுக்கு வராரு"

"வீட்டுக்குள்ள நுழையும்போதே கவனிக்கராறு. ஹீரோவோட தங்கச்சி பாப்பா ஒரு பக்கம் அழுவுது, இன்னொரு பக்கம் அம்மா சோகமா இருக்காங்க. வீட்டு நடுவுல ஒரு மெழுகுவர்த்திய கொளுத்தி வெச்சிருக்காங்க. கரெண்ட் இல்லையே.
அம்மா ஹீரோவா பார்த்து கேட்கறாங்க, "பாப்பாவுக்கு ரொம்ப பசிக்கிது. வீட்ல எதுவுமே இல்லை. அப்பளம் வித்த காசுல ஏதாவது வாங்கிட்டு வாப்பா"னு.

நம்ம ஹீரோவுக்கோ பயங்கர குழப்பம். "கைல காசு இல்லை, தங்கைக்கு பசிக்குது, வீட்ல ஒண்ணும் இல்லை. என்ன செய்ய"னு think பண்றாரு. தங்கைய பாக்குறாரு, விளக்க பாக்குறாரு, அம்மாவ பாக்குறாரு, தன் கைல இருக்குற அப்பளத்தை பாக்குறாரு. அப்பளத்தை பாக்குறாரு, அம்மாவ பாக்குறாரு, விளக்க பாக்குறாரு, தங்கைய பாக்குறாரு"

"டேய் போதும் சொல்லுடா"

"இப்படி மாறி மாறி பார்த்து என்ன பண்றாருன்னா.........." என கண்கலங்க ஆரம்பித்தான். நான் பதறிப் போய் "டேய் கதைய சொல்லிட்டு feel பண்ணுடா" என்றேன். அவன், "சொல்றேன் மச்சான். அப்புறம் என்ன பண்றாருன்னா, தன் கைல இருக்குற அப்பளக் கட்டுலேர்ந்து ஒரே ஒரு அப்பளத்தை எடுத்து, அந்த விளக்குல சுட்டு, தங்கச்சிக்கு குடுக்கறாரு பாரு........."

நான் அந்த இடத்தை விட்டு ஓட ஆரம்பித்தேன்.

தூரத்தில் அவன் குரல் கேட்டது, "டேய் அடுத்த முறை முழு கதைய சொல்லாம விட மாட்டேன். இப்ப பொழச்சிப் போ".....

அவனை நான் இன்னொரு முறை பார்ப்பதாக இல்லை......

சிகாமணியின் சேட்டைகள், இப்போதைக்கு முற்றும்...

Wednesday, July 1, 2009

சிகாமணியின் சின்னபிள்ளைத்தனமான கதைகள் -2

முதல் பகுதி -->இங்க<--

தொடர்ந்தான் சிகாமணி, "அதாவது படம் எவ்வளவு கேவலமா இருந்தாலும், பிரம்மாண்டத்த வெச்சு ஒட்டிரலாம்னு பல பேர் நினைக்கறதால, அத மாதிரியே ஒரு கதை. மொத சீன்லயே மவுண்ட் ரோடு LIC பில்டிங் மேல ஒரு டைனோசர் நிக்குது". உடனே நான், "அது எப்படி மச்சான். கிராபிக்ஸ்ஸா??". "இல்லைடா, ஒரு யானைக்கு டைனோசர் make up போட்டு நிக்க வெக்கறோம். இதுக்கு, ஆப்ரிக்கா வனப் பகுதிலேர்து ஒரு make up மேன வரவழைப்போம். இன்னும் கேளு. அந்த டைனோசர பார்க்க, மவுண்ட் ரோடு முழுக்க ஜனங்க குவியறாங்க"

"எல்லாம் ஜூனியர் ஆர்டிஸ்ட். என்னப் பண்றதுன்னே தெரியாம குழப்பத்துல இருக்குற நம்ம டைனோசர், பக்கத்துல இருக்குற பில்டிங் எல்லாத்தையும், தன் வாலாலையும், காலாலையும், (சென்சார்) அடிச்சு நொறுக்குது. அத கிராபிக்ஸ் பண்றோம். ஆனா, ரியலிஸ்டிக்கா இருக்கணுமே, அதனால, மவுண்ட் ரோட்ல இருக்குற எல்லா பில்டிங்குக்கும் வெள்ளை பெயிண்ட் அடிக்கிறோம். சுண்ணாம்பு பரவுதே. அப்புறம், அந்த டைனோசர அழிக்க, இந்திய ராணுவமே அங்க குவியுது. விமானப் படைலேர்ந்து, பிளைட்டெல்லாம் வருது. குண்டு போட்டு, டைனோசர அழிக்கப் பாக்கறாங்க, ஆனா எதுவும் நடக்கலை"

"கீழ இருக்குற மக்கள், என்ன ஆகப் போகுதோன்னு, அன்னாக்கா ஆ போட்டு, ஆகாயத்தை பார்க்க சொல்ல, நம்ம ஹீரோ, டைனோசர் ஸ்டொமக்க கிழிச்சிகிட்டு வெளிய வந்து, டைனோசர அழிக்கராறு. எப்பூடி??"

"மச்சான், பேரரசு உடம்புல, ஷங்கர் ஆவி புகுந்தா மத்திரி இப்படியொரு கதை யோசிச்சு வெச்சிருக்கியே. பட்ஜெட் எவ்வளவு??"

"10 கோடி"

"பத்துமா??"

"மொத சீனுக்கு கரெக்டா இருக்கும்"

"அடப்பாவி, முதல் சீனுக்கேவா. ரைட் விடு. எனக்கு கொஞ்சம் கியாரா இருக்கு, நான் வரட்டா??"

"அட இருடா. அடுத்து நாம எப்ப பார்க்கறது. இந்த கதயவே முடிக்கல. ஆனா, சிம்பிளா இன்னும் ஒரே ஒரு கதை சொல்றேன். கேட்டுட்டு போயேன்"

"நான் பாவம்ல. சரி சீக்கரமா சொல்லு. ஆனா இதோட நிறுத்திக்க. start music"

முதல்ல அவ்வளவு சிம்பிளா இருக்கும்னு நினைக்கல. கதைல இருக்குற செண்டிமென்ட கேட்டு எனக்கு வயறு upset ஆகிருச்சுனா பாருங்களேன்.

......will end in next post

Saturday, June 20, 2009

Tag எடுக்கலியோ Tagu...

நம்ம வாணி மேடம் ஒரு tag அனுப்பிருக்காங்க. Full பீட்டர். நமக்கும் லைட்டா பீட்டர் விட தெரியும்னு இத மாதிரி சமயங்கள்ல தான் comicalaa காமிக்க முடியும். எனவே, இதோ அந்த பெ.................................ரி........................ய்....................ய.................tag.
(சில கேள்விகளுக்கு மட்டும், என்னோட ஆதங்கம்/mindvoice/comments include பண்ணிருக்கேன். கண்டுக்காதீங்க)

Q: When you looked at yourself in the mirror today, what was the first thing you thought?
A:must have a shave asap
(மத்தபடி எப்பவும் பீல் பண்றா மாதிரி, இதெல்லாம் ஒரு மூஞ்சு and so on self sympathy dialogues)

Q: How much cash do you have in your wallet right now?
A:122rs

Q: What’s a word that rhymes with DOOR?
A: more

Q: What is your favorite ring tone on your phone?
A: sax prelude in "Vaan Nilaa" song from Kadhal virus

Q: Who is the 4th person on your missed call list on your cell phone?
A: My அம்மா (!!!!)

Q: What are you wearing right now?
A: trousers and vest

Q: Do you label yourself?
A: NO

Q: Name the brand of the shoes you’re currently own?
A:No shoes

Q: Bright or Dark Room?
A:Me sitting brightly in Dark room

Q: What do you think about the person who took this survey before you?

A:Good blogger. Nice narration. the wordpress template sucks though.

Q: What does your watch look like?
A:no watch (என் கை sizekku watch போட்டா, watchla கை போட்டா மாதிரி இருக்கும்)

Q: What were you doing at midnight last night?
A: Playing SIMS3

Q: What did your last text message you received on your cell say?
A: YA

Q: What’s a word that you say a lot?
A: dunno- dont tak this dunno as the word i say a lot. i really dunno.

Q: Who told you he/she loved you last? (Please exclude spouse , family, children)
A: NONE so far (ஆமாம், இது வேற)

Q: Last furry thing you touched?
A: my hair?? (come under furry???)

Q: Favorite age you have been so far?
A:from 5-18

Q: What was the last thing you said to someone?
A:match பாக்கல??? (to my அண்ணா)

Q: The last song you listened to?
A: "உன் மேல ஆசதான்" frm ஆயிரத்தில் ஒருவன்

Q: Where did you live in 1987?
A: hospital and home, cause born on last month of the year. so have to tak hospital in to acc.

Q: Are you jealous of anyone?
A: LOT

Q: Is anyone jealous of you?
A: சத்தியமா இல்லை

Q: Name three things that you have on you at all times?
A:Mobile, mobile cover, bike key

Q: What’s your favorite town/city?
A: Madras

Q: When was the last time you wrote a letter to someone on paper and mailed it?
A: I think some 6years back, reply to a akka met in a camp.

Q: Can you change the oil on a car?
A: car???

Q: Your first love/big crush: what is the last thing you heard about him/her?
A: let me know her name first...

Q: Does anything hurt on your body right now?
A: none but sore throat and cold disturbs...

Q: What is your current desktop picture?
A: Aqueduct in Segovia, Spain (wiki wallpaper)

Q: Have you been burnt by love?
A: ஏன் இப்படி வயத்தெரிச்சல கெளப்பறீங்க.
No Love, No failure....

Now iam passing this to Swathi, My Kid Brother and Poorna...
Thanks to Vani for Passing the tag :)

Monday, June 15, 2009

சிகாமணியின் சின்னபிள்ளைத்தனமான கதைகள் -1

நம்ம சிகாமணிக்கு, தமிழ் சினிமான்னாலே aversion. நல்ல கதையம்சம் இருக்குற படம் வருதேன்னு சொன்னா கூட, "என்ன நூத்துல ஒரு படம். அதாவது, நூறு shit வந்தா, ஒரு Hit" அவ்வளவுதான்னு சொல்லுவான். அதுவும் நம்மூரு படத்துல வர காதல் காட்சிகள்னா, அவன் வாய்லேர்ந்து கலர் கலரா கெட்ட வார்த்தைகள் வரும். "*#@!த பாட்டா எழுதறானுங்க, எழுதுற lyrics எல்லாம் !@#று மாதிரி இருக்கு. மேட்டர் படத்துல எல்லாத்தையும் காமிக்கரானுங்க, ஆனா இவனுங்க எழுதுறது அத விட வக்கிரமா யோசிக்க வைக்கும்"னு பொங்கி எழுந்துருவான்.

ஒரு நாள், வழக்கம் போல இத மாதிரியே சொல்லிக்கிட்டு இருந்தவன நிறுத்தி "நீ எவ்வளவு சொன்னாலும், இத மாதிரி சின்னபுள்ளத்தனமான படம் எடுக்கவும் கொஞ்சம் அறிவு வேணும். எங்க, உன்னால முடியுமா?? நீ விமர்சனம் மட்டும்தான் பண்ண லாயக்கு"னு சொன்னேன். "ஆமாம், பெரிய அறிவு. மண்டைல மசாலான்னு சொன்னத உன் directors எல்லாம் தப்பா புரிஞ்சிகிட்டு, ஒரே மொக்க மசாலா படமா தள்ளிகிட்டு இருக்காங்க. நான் அவங்கள விட மோசமா யோசிச்சு ஒரு கதை சொல்லட்டா??"னு கேட்க, நான் சரின்னு சொன்னேன் ... அவன் ஆரம்பிச்சான்...

"அதாவது, இது ஒரு மசாலா படத்துக்கான கதை. படத்தோட ஹீரோ பேரு சைதாபேட்டை, படத்தோட பேரும் சைதாபேட்டை. நம்ம, ஹீரோ, கலைஞர் ஆர்ச் பக்கத்துல டீ கடை வெச்சிருக்காரு.மொத சீனே மோதலோட ஆரம்பிக்குது ரொம்ப நாளா கடன் சொல்லி டீ குடிக்கிற, அந்த பேட்டை தாதா ஆளுங்கள அடிச்சு வெரட்டுராறு. கேள்வி கேட்க வந்த தாதாவையும் பின்னி பெடலேடுக்குராறு. அடிச்சு முடிசித்ட், "டீ மட்டும் இல்லடா, உன்னமாதிரி வெட்டி பசங்களையும் ஆத்துவேன்"னு மொக்கையா பன்ச் dialogue விட்டு,

//சைதாபேட்டை சைதாபேட்டை சைதாபேட்டை,
ஒரு ஆத்து ஆத்துனா, நீ கண்ணம்மாபேட்டை//னு intro சாங் பாடுரார்.

ஒரு நாள் அந்த பக்கமா வர நம்ம ஹீரோயின், ஹீரோ டீ ஆத்துற ஸ்டைல பார்த்து மயங்கி, ஊட்டில போய், "டீ டீ, ஊட்டி"னு டூயட் பாடுறாங்க. இவங்க கருமம் புடிச்ச லவ்வு, கன்னாபின்னான்னு develop ஆவுது. இதுக்கு நடுவுல நம்ம ஹீரோ, அந்த ஏரியா counsilor மாதிரி, ஏரியா பிரச்சனை எல்லாத்தையும் தீர்த்து வைக்கறார். அதே சமயத்துல, லவ்வே புடிக்காத ஹீரோயினோட அண்ணன், ஹீரோவுக்கு பாடம் புகட்ட, ஹீரோ காவலுக்காக டீ கடைல வெச்சிருக்குற நாய, போட்டு தள்ளிடுராறு. இவ்வளவு நாளா தாய்ப்பாசம் கெடைக்காத ஹீரோ, நாய் பாசம் வெச்சிருந்த நாய கொன்னதுல ஆவேசமாகி, graphicsla 3ஆ-6ஆ-9ஆ பொங்கி எழுந்து, எப்படியெல்லாம் ஹீரோயினோட அண்ணன, டிசைன் டிசைனா பழிவாங்கி, ஹீரோயின கைபுடிக்கராருனு மீதி கதைல சொல்றோம். இதுல பெரிய ஹீரோ யாரவது நடிச்சாக்கா, அவங்களுக்கு ஏத்த மாதிரி,
"மழைல மனுஷன்தான் நனைவான், புயல் நனையாது"னு பன்ச் டயலாக் எதையாவதோ சேர்த்துக்கலாம். எப்பூடி????"

சொல்லி முடிச்ச சிகாமாணிய ஏற இறங்க பாத்துட்டு, "நீ தமிழ் சினிமாவால இவ்வளவு பாதிக்க பட்டிருக்கேன்னு தெரியாம போச்சுடா. இந்த ஒரு கதை தான் யோசிச்சியா, இல்லை இன்னும் இருக்கா??"னு கேட்டேன். அதுக்கு அவன், "ஆமாம் இதுக்கெல்லாம் உட்கார்ந்து யோசிக்கறாங்க, இன்னொரு கதை சொல்றேன் கேட்கறியா"னு ஆரம்பிச்சான். அந்த மாதிரி ஒரு பிரம்மாண்டமான கதைய எப்படிதான் யோசிச்சானோன்னு இருக்கு........

......will continue

Saturday, January 3, 2009

ஒரு தடவ resolution எடுத்தா, என் பேச்சை......

எல்லாரும் நியூ இயர் resolution எடுப்பாங்க... அத செஞ்சு முடிக்காம, அடுத்த வருஷம் இன்னொரு புது resolution எடுப்பாங்க. ஆனா நான் எப்பவுமே மாற மாட்டேன். என்னோட default resolution, எப்பவுமே, 1024 x 768 and
19 inch ஸ்க்ரீன்ல 1440 x 900..... ;)


சில நல்ல கார்டூன்ஸ்.....