Friday, October 22, 2010

இவங்க பண்ற காமெடிக்கு.....

எங்களுக்கு ஜர்னலிசம் சொல்லி கொடுக்கும்போது ஒரு முக்கியமான விஷயம் சொன்னாங்க. தமிழ்நாட்ல, ரஜினி, கருணாநிதி அண்ட் ஜெயலலிதா, இவங்க எது பண்ணாலும் அது முக்கியமான நியூஸ். இதுல முக்கியமா நம்ம சூப்பர் ஸ்டார், முக்கினா முனகினா, எது பண்ணாலும் நியூஸ். எனக்கு தெரிஞ்ச வரைக்கும் ரஜினி எப்பவுமே விளம்பரங்கள் பின்னாடி ஓடினது இல்லை. அவர் பின்னாடிதான் எல்லா விளம்பரங்களுமே. சென்னைல, NDTV ஹிந்து அப்படின்னு ஒரு சுமாரான நியூஸ் சானல் வந்துகிட்டு இருக்கு. நடுவுல, ஹாண்ட்ஸ் அப் அப்படீங்கற ப்ரோக்ராம்ல, வெங்கட் பிரபு + தமிழ் பட டைரக்டர் + இந்த சானல், எல்லாரும் சேர்ந்து ஒரு காமெடி பரபரப்பு க்ரியேட் பண்ணாங்க.அப்போதான் நிறையே பேருக்கு இந்த சேனலைப் பத்தி தெரிய வந்துச்சு.

இதே சேனல்ல, சென்னை ஸ்பீக்ஸ் அவுட் அப்படின்னு தரை மொக்கையா ஒரு விவாத நிகழ்ச்சி போய்கிட்டு இருக்கு. போன வாரத்துல ரஜினிய  வெச்சி ஏதொ டாபிக். நிறைய பேர் அதைப் பத்தி சொன்னதால, யூ டியூப்ல பார்த்தேன். ஞானி + சுதாங்கன் ரஜினிக்கு எதிராகவும், சின்மயி + ஸ்ரீதர் பிள்ளை ஆதரவாகவும் பேசினாங்க. உளறினாங்கனு சொல்றதுதான் கரெக்டா இருக்கும். எந்த சைடும் ஒழுங்கா பேசாம, ஒரே மேலோட்டமான விவாதமாவே இருந்துச்சு. எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயத்தையே திரும்ப திரும்ப சொல்லிக்கிட்டு இருந்தாங்க. இந்த பதிவு எதுக்குன்னா, தயவு செஞ்சு இந்த மாதிரி மொக்கை ப்ரோக்ராமை என்கரேஜ் பண்ணாதீங்க.

இதோ அந்த ரஜினி விவாதம் எபிசொட்....











ஞானி + சுதாங்கன் ரெண்டு பேருக்கும் நல்லாவே வயசாகிடுச்சுன்னு நினைக்கறேன்... இதுல சுதாங்கன் வேற தப்பு தப்பா ஸ்டாடிஸ்டிக்ஸ் கொடுக்கறாரு. இன்னொரு முக்கியமான விஷயம் என்னன்னா, சின்மயி அவங்க ட்விட்டர் பக்கத்துல, "ரஜினிக்கு ஆதரவா பேச நாங்க இருந்தோம், எதிர்த்து பேசதான் ஆள் இல்லை. அதனாலதான் சுதாங்கன்னும் ஞானியும் பேசினாங்க. அவங்க ரெண்டு பேருமே ரஜினி ரசிகர்கள் தான். ஆள் இல்லாததால, அவங்க பேசினா பிரச்னை வராதுன்னு நினைச்சதால, அவங்கள பேச வெச்சாங்க"ன்னு சொல்லிருக்காங்க.. யார் இன்னா சொன்னான் என்ன, தூற்றுவார் தூற்றட்டும். கீழ இருக்கற படங்களைப் பாருங்க. ஒரு மெகா ஹிட்டு படம் கொடுத்த மனுஷன் மாதிரியா இவர் இருக்கறாரு...???

 
 

Saturday, October 9, 2010

தெய்வ குத்தம்

ஊரே எந்திரனப் பத்தி பரபரப்பா பேசிகிட்டிருக்கும்போது, நானும் எதாவது பதியலன்னா தெய்வ குத்தமாகிடும்னு நண்பர்கள் எல்லாம் கவலை படறாங்க. சரி எதாவது எழுதி வெப்போம்னு, இதோ, ஆரம்பிச்சிட்டேன். ஒரே பத்தில முடிச்சிடறேன். கவலை படாதீங்க.

படம் ஆஹா ஓஹோனு இல்லை. ஆனா நல்லாயிருக்கு. அதுவும் வில்லன் ரோபோ ரஜினிதான் படத்துக்கு பெரிய பலம் (அந்த கருப்பு ஆடு சீன், ரஜினி மட்டுமே செய்யக்கூடிய சீன்) . செலவழிச்ச காசு எல்லாம் ரோபோடிக்ஸ்கே போயிருக்கும்னு நினைக்கறேன். கிராபிக்ஸ் அப்படியே ஓலகத்தரம் எல்லாம் இல்லை. இருந்தாலும், அரிமா அரிமா பாடல்ல வர 100+ ரஜினி கிராபிக்ஸ் சூப்பர். முதல் பாதிய விட, ரெண்டாவது பாதி கொஞ்சம் ஸ்லோ. கடைசி இருபது நிமிஷம் செம்ம ஜாலி. கிளைமாக்ஸ் சண்டை எல்லாம் குழந்தைகள கண்டிப்பா குஷிபடுத்தும். படம் மொத்தத்துலையுமே வசனங்கள் நல்லா இருந்தாலும், தன்னைத்தானே கழட்டிகும்போது, ரோபோ பேசற வசனமும் குறிப்பா நல்லா இருக்கு. இண்டர்வல் ப்ளாக்ல, ரஜினி கொடுக்கற ரியாக்ஷன் செம்ம. படத்துல நிறைய இடங்கள்ல ரஜினி நடிச்சிருக்கார். மத்தபடி, ஒலக அழகி நல்லா ஆடிருக்காங்க. அரிமா + காதல் அணுக்கள் பாடல்களைத் தவிர, மத்ததெல்லாம் வேஸ்ட். படம் கண்டிப்பா ஓலகத்தரம் இல்லை. போலிகளைக் கண்டு ஏமாறாதீங்க. என்னதான் குத்தம் சொன்னாலும், கொஞ்சம் ஒரிஜினலா யோசிச்சு, கிடைச்ச காசுல அதை திரைக்கு கொண்டு வந்துருக்கார் டைரக்டர் ஷங்கர். மத்த ஷங்கர் படங்கள கம்பேர் பண்ணும்போது, இந்தப் படத்துல அழுத்தம் கொஞ்சம் கம்மிதான். என்னதான் இருந்தாலும், தலைவர் படம். நல்ல முயற்சிக்காக, கண்டிப்பா ஒரு தடவை, தியேட்டர்ல மட்டுமே, குடும்பத்தோட, பாருங்க. நல்லா பொழுதுபோகும்.

p.s. - கருப்பு - எந்த ற/ர வரும்???

அங்க ஒரு துப்பாக்கி குண்டு போயிட்டிருக்கு. அதை சுடணும்....