இதே சேனல்ல, சென்னை ஸ்பீக்ஸ் அவுட் அப்படின்னு தரை மொக்கையா ஒரு விவாத நிகழ்ச்சி போய்கிட்டு இருக்கு. போன வாரத்துல ரஜினிய வெச்சி ஏதொ டாபிக். நிறைய பேர் அதைப் பத்தி சொன்னதால, யூ டியூப்ல பார்த்தேன். ஞானி + சுதாங்கன் ரஜினிக்கு எதிராகவும், சின்மயி + ஸ்ரீதர் பிள்ளை ஆதரவாகவும் பேசினாங்க. உளறினாங்கனு சொல்றதுதான் கரெக்டா இருக்கும். எந்த சைடும் ஒழுங்கா பேசாம, ஒரே மேலோட்டமான விவாதமாவே இருந்துச்சு. எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயத்தையே திரும்ப திரும்ப சொல்லிக்கிட்டு இருந்தாங்க. இந்த பதிவு எதுக்குன்னா, தயவு செஞ்சு இந்த மாதிரி மொக்கை ப்ரோக்ராமை என்கரேஜ் பண்ணாதீங்க.
இதோ அந்த ரஜினி விவாதம் எபிசொட்....
ஞானி + சுதாங்கன் ரெண்டு பேருக்கும் நல்லாவே வயசாகிடுச்சுன்னு நினைக்கறேன்... இதுல சுதாங்கன் வேற தப்பு தப்பா ஸ்டாடிஸ்டிக்ஸ் கொடுக்கறாரு. இன்னொரு முக்கியமான விஷயம் என்னன்னா, சின்மயி அவங்க ட்விட்டர் பக்கத்துல, "ரஜினிக்கு ஆதரவா பேச நாங்க இருந்தோம், எதிர்த்து பேசதான் ஆள் இல்லை. அதனாலதான் சுதாங்கன்னும் ஞானியும் பேசினாங்க. அவங்க ரெண்டு பேருமே ரஜினி ரசிகர்கள் தான். ஆள் இல்லாததால, அவங்க பேசினா பிரச்னை வராதுன்னு நினைச்சதால, அவங்கள பேச வெச்சாங்க"ன்னு சொல்லிருக்காங்க.. யார் இன்னா சொன்னான் என்ன, தூற்றுவார் தூற்றட்டும். கீழ இருக்கற படங்களைப் பாருங்க. ஒரு மெகா ஹிட்டு படம் கொடுத்த மனுஷன் மாதிரியா இவர் இருக்கறாரு...???
7 comments:
அந்த புரோக்ராம் என்க்கும் புடிக்கலைதான். ரஜினி பற்றி பேசின நிகழ்ச்சி மட்டுமில்ல, அந்த டிவியில் வரும் பல விவாத நிகழ்ச்சிகள் ஏதோ பேருக்கு நடக்கிற மாதிரிதான் இருக்கு!
ரஜினிகிட்ட ரொம்ப பிடிச்ச விசயமே இந்த எளிமைதான்! படங்கள் நன்றாக உள்ளன!
எந்திரன் ரஜினி பாணியில சொல்லனும்னா...
புல்லட் பாயின்ட் ஒன்: ஜர்னலிசம் கத்துக் கொடுக்கறது வேற... நிஜத்தில வேற...
பாயின்ட் டூ: ஜர்னலிசத்துக்கு உண்மையிலேயே எந்த விதிமுறையோ வரைமுறையோ இல்லை...
(அப்படின்னு தான் நான் இத்தனை வருஷமா நினைச்சிகிட்டு இருக்கேன்...!)
@sk
இதெல்லாம் விவாத நிகழ்ச்சினே சொல்லாதீங்க...
@RRC
புல்லட் பாயிண்ட் 1 - கரெக்ட் தான்...
2 - ditto... கண்டிப்பா இல்லை....
adikkadi unga veetupakamaavathu vanthu pongaaa okkkkkkkkkkkkk
adikkadi unga veetupakamaavathu vanthu pongaaa okkkkkkkkkkkkk
சினிமால நடிக்கறது அவரோட தொழில், அது முடிஞ்ச உடனே சாதாரண மனுஷனா மாறிடறாரு அவ்ளோதான். அதுனாலத்தான் மெஜாரிட்டி அவர தலைவாங்குது
@vinu
எந்த வீட்டுபக்கம்??
@விக்கி உலகம்
ஆனா இங்க நிறைய பேர் அப்படி நினைக்கறதில்லை...
@both
வருகைக்கு நன்றி :)
Post a Comment