புலி, தெலுங்கு படம். சிரஞ்சீவி தம்பி, பவன் கல்யான் ஹீரோவா நடிக்கறார். நம்ம BF எஸ்.ஜே. சூர்யா (best friend) டைரக்டர். இவங்க காம்பினேஷன்ல முதல்ல வந்த, தமிழ் குஷி ரீமேக், ஆந்திரப் பிரதேசத்துல மிகப் பெரிய ஹிட்டு. அதனால, இந்தப் படத்துக்கு நியாயமான எதிர்பார்ப்பு இருக்கு. மியூசிக் வேற நம்ம ஆஸ்கர்மான். So, அதுக்கும் எதிர்பார்ப்பு. படத்துல மொத்தம் ஆறு பாடல்கள். ரகுமானின் தாக்கத்தோட, சூர்யாவோட தாக்கம் அதிகமா இருக்கு. ஆந்திர ரசிகர்களுக்கு ஏத்த பாடல்கள். எல்லா பாடலைப் பற்றியும் ஓரிரு வரி/வார்த்தைகள்..
பவர் ஸ்டார் - அநேகமாக ஒபெனிங் சாங். நல்ல ரிதம். ஹோசன்னா விஜய் பிரகாஷ் பாடிருக்கார். கூடவே தன்வி, தெலுங்கையும் கடிச்சு துப்பிருக்காங்க. தெலுங்கு சுமாரா தெரிஞ்ச எனக்கே தெரியுது, லிரிக்ஸ் கொஞ்சம் காமெடியா இருக்குனு. மத்தபடி, பாடல் சூப்பர் ஹிட் ஆக நிறைய அறிகுறிகள் இருக்கு.
அம்மா தல்லே - ஆங்கிலத்துல டங் டிவிஸ்டர்ஸ்னு சொல்லுவாங்க, அதுமாதிரி, வார்த்தைகளை வேகமா அடுக்கிட்டே போறாங்க. அழகா பாடவும் செஞ்சிருக்காங்க, பாடகி சுஜாதாவோட பெண் ஸ்வேதா. கூட நம்ம நரேஷ் ஐயர். இந்தப் பாடலைப் பற்றி ஒரு சின்ன எக்ஸ்ட்ரா பிட்டு. நியூ படத்துல உபயோகப்படுத்த முடியாமப் போன மார்கண்டேயா பாடலோட வாடை, இந்தப் பாடல்ல, பலம்மா இருக்கு.
மாரலண்டே - ரஹ்மானே பாடிருக்கார். அவரோட ரசிகர்கள் சொல்றா மாதிரி, திரும்ப திரும்ப கேட்டாலும், முதல் ரெண்டு பாடல்கள் இம்ப்ரெஸ் பண்ண அளவுக்கு, இது ஈர்க்கலை. ரஹ்மானோட கே.எம் மியூசிக் கன்செர்வேடரி மாணவர்களோட சேர்ந்து இந்தப் பாடலை பண்ணிருக்கார். நாட்டுக்கு நல்லது பண்ண, அட்வைஸ் பண்றா மாதிரி வருது பாடல். வெயிட்டான orchestration.
மஹ மாயே - அடுத்த டூயட். நம்ம குச்சி சுச்சி பாடிருக்காங்க. ஜாவேத் அலியோட இணைஞ்சு. கேட்க கேட்க பிடிக்கக் கூடிய பாடல். ரஹ்மானோட பெஸ்ட் இல்லை. இருந்தாலும் ரசிக்கலாம். திரைல நல்லா இருக்கும்னு ஒரு நம்பிக்கை.
தோச்சே - கேட்டவுடனே ஐட்டம் நம்பர்னு உரைக்கும் பாட்டு. காஷ் n க்ரிஸ்ஸினு இரண்டு பாடகர்களை அறிமுகப்படுத்திருக்கார். இதான் அவங்களுக்கு முதல் திரைப்படப் பாடல்னு நினைக்கறேன். இவங்க ரெண்டு பேர் பாடறது நல்லா இருந்தாலும், ஸ்ரேயா கோஷல் பாடும்போதுதான் அந்தப் பாட்டுக்கே ஒரு அழகு சேருது. இந்தப் பாடல்லயும் நல்ல ரிதம். நல்ல டியூன்.
நம்மகம் - கடவுள் கிட்ட நம்பிக்கை வேண்டி ஒரு பாடல். காற்றில் வரும் கீதமே ஸ்டைல்ல, சித்ரா, மதுஸ்ரீ மற்றும் ஹரிணி சேர்ந்து பாடியிருக்காங்க. ரொம்ப அழகான மெலடி. நைட்டு இந்தப் பாடலை கேட்டீங்கன்னா, தூக்கம் நிச்சயம். ரொம்ப மினிமம் ஆர்கெஸ்ட்ரா. எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஒத்து வராத, நல்ல, (உண்மையான) பக்திப் பாடல்.
மொத்தத்துல புலி, ஆந்திர ரசிகர்களுக்கு ஏத்த ஒரு மசாலா ஆல்பம். எல்லா தரப்பினருக்கும், எதாவது இருக்கு. மாஸான சிவாஜிக்கு பிறகு, அடுத்த மாஸ் படம். ரஹ்மானிடமிருந்து (எனக்கு) ஒரு இன்ப அதிர்ச்சி. மிஸ் பண்ணிறாதீங்க. --> இங்க க்ளிக்கினா<-- எல்லாப் பாடல்களையும் கேட்க லிங்கிருக்கேன்.
அடுத்து நம்ம ஊர் பரபரப்பான எந்திரன் பாடல்களுக்கு போவோம்
அதிசயமா, புலி படப் பாடல்கள் என்னை கவர்ந்த அளவுக்கு, எந்திரன் படப் பாடல்கள் ஈர்க்கலை. உடனே "Rahman Songs requires repeated listening, it should grown on you, you are anti-rahman, uncle-ரஹ்மான்", அது இதுனு கமெண்ட் போடத் துடிக்காதீங்க. எனக்கு முதல் தடவை கேட்கும்போது புடிக்கலன்னா, எவ்வளவு தடவை முயற்சி பண்ணி முக்கினாலும் புடிக்காது. உதாரணத்திற்கு, எனக்கு இன்னைக்குவரை, சக்கரக்கட்டி படப் பாடல்களும், ஹிந்தி கஜினி படப் பாடல்களும் புடிக்கலை. எந்திரன் ரொம்ப மோசமான ஆல்பம் கிடையாது. ஆனா, ரஹ்மானோட பெஸ்ட்டும் கிடையாது. இன்டர்நேஷனல் ரசிகர்களை மனசுல வெச்சே இசையமச்சா மாதிரி இருக்கு. டெக்னோ மியூசிக்கோட ஓவர்டோஸ்னு சொல்லலாம். பாடல்களைப் பற்றி ஓரிருவரி,
அரிமா அரிமா - வீரபாண்டி கோட்டையிலே பாடலைப் போல, ரிச் orchestration. ஆனால், ஹரிஹரன் பாடுவது இரைச்சலாதான் இருக்கு. ஹீரோவின் புகழ் பாடி ஆரம்பிக்கும், இன்னொரு எம்.ஜி.ஆர் ஸ்டைல் டூயட் (oxymoron??)
பூம் பூம் / சிட்டி டான்ஸ் - டான்ஸ் ப்ளோர்களுக்கு ஏத்த பாட்டு. சிட்டி டான்சைப் பாடல்னு சொல்றதை விட, ஒரு கூடை சன்லைட் மாதிரி, சப்தங்களோட கோர்வைனு சொல்லலாம்.
இரும்பிலே ஒரு - முன்னாடி சொன்ன காஷ் N க்ரிஸ்ஸியோட சேர்ந்து ரஹ்மான் பாடிருக்கார். அதிரடிக்காரன் ஸ்டைல் பாடலாக இருக்காலாம். காஷ் பாடற இடங்கள் எல்லாம், aqua பார்பி கேர்ள் பாடலை நியாபகப்படுத்துது. ஏனோ....
காதல் அணுக்கள் - இந்த ஆல்பத்தோட, முதல் முணுமுணுக்கக்கூடிய பாடல். ஹோசனா பாடலுக்கு அப்பறமா, விஜய் பிரகாஷின் அடுத்த ஹிட் என்பது ஏறக்குறைய உறுதி. என்னைப் பொறுத்த வரை, ரொம்பச் சாதரணமான பாடல். அதனாலதான் ஹிட் ஆகுமோ என்னவோ.
கிளிமான்ஜாரோ - எனக்குப் பிடித்த ஒரே பாடல். சின்மயி வித்தியாசமான முறைல, கொஞ்சம் கீச்சுனு பாடிருக்காங்க. குலுவாலிலே பாடல் மாதிரி, ரொம்ப வித்தியாசமான பாடல். catchy. கண்டிப்பா ஹிட்டு.
புதிய மனிதா - சம்பிரதாயமான ஹீரோ ஒப்பனிங் சாங் இல்லை இது. பாடல் ஆரம்பிச்சு, பில்ட் அப் எல்லாம் வந்து, எஸ் பி பி பாட ஆரம்பிக்க ஒண்ணரை நிமிஷம் ஆகுது. வழக்கம் போல தன்னோட சவுண்ட் இஞ்சினியரிங் வித்தையை காமிச்சிருக்கார் ரஹ்மான். டிப்பு குமாரு மாதிரி ஆகிடக் கூடாதுன்னு வேண்டிக்கோங்க . அவ்வளவு மோசம் இல்லை, இருந்தாலும் not "that" impressive.
எனவே மக்களே, சமீபத்துல வந்த, ரெண்டு ரஹ்மான் படப் பாடல்கள்ல, என் ஓட்டு, புலி பாடல்களுக்கே. ஒரு வேளை, எந்திரன் பாடல்களோட காட்சியமைப்பு, எல்லா ஷங்கர் படப் பாடல்கள் மாதிரி, ஈர்க்கலாம். ஆனா, தனிச்சு நிற்கும்போது, வழக்கம் போல நிறைய
அடி வாங்குது. ஆனா, எப்பவுமே ஷங்கர் படத்தோட பாடல்கள் சுமாரா இருந்தாதான், அவரால, விஷுவலா நல்லா காட்சியமைக்க முடியுது. (ஒரு சிலப் பாடல்களைத் தவிர)
No comments:
Post a Comment