இதுல வேடிக்கை என்னன்னா, இப்படி சொல்ற பதிவர்கள், இதுக்கு முன்னாடியே, பல பதிவுகள்ள, மொக்கையா, சாதாரண மக்களுக்கு கருத்து சொல்லிருக்காங்க. இந்தப் படம் பார்க்கும்போது மட்டும் ஏன் சாதாரண மக்களா மாறிட்டாங்கன்னு தெரியல (இது இப்ப தேவையா). எது எப்படியோ, என் கருத்தை சொல்லாம விட மாட்டேன். (அதான் தெரியுமே) படம் எனக்கு பிடித்தது. பாட்டு இல்லைனா, ஒரு படம் எவ்வளவு வேகமா இருக்கும்னு காமிக்க, இந்த படம் ஒரு உதாரணம்.
படத்தோட ஹீரோ மோகன்லாலின் (இன்னாது) நடிப்பு, வழக்கம் போல சோப்பர். கமல் கஷ்டப்பட்டு அடக்கி வாசிச்சிருக்கார் (வேற வழி). பின்னணி இசை இன்னும் நல்லா பண்ணிருக்கலாம். டைப் அடிக்கும்போது எனக்கே dejavu மாதிரி இருக்கு (இங்கயுமா). அதனால இதுக்கு மேல படத்தப் பற்றி நான் சொல்ல விரும்பலை. வேற எங்கயாச்சும் review பார்த்துக்கோங்க. மொத்தத்துல, கமல் போட்ட திட்டம் (இவன் karamchandlala - HINDU ) அவருக்கே back -fire ஆயிடுச்சுன்னு நினைக்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு. ரொம்ப சிந்திச்சாலே இதான் பிரச்சனை.
___________________________________________________________________________
இதுக்கு முன்னால, நினைத்தாலே இனிக்கும் படம் பார்த்தேன். சொல்றதுக்கு ஒண்ணும் இல்லை. சன் டிவி ஸ்டைல்ல சொல்லனும்னா, "நினைத்தால் மட்டும் இனிக்கும்" பாத்துறாதீங்க. (லேட் வார்னிங்)
___________________________________________________________________________
விஜயின் வேட்டைக்காரன் (!?!?!?!) பாடல்கள் வழக்கம் போல செம்ம massala. எனக்கு மூணு பாட்டு (அனுஷ்கா!!!) புட்சிகிது. ஆனா சார் எதுக்கு அட்வைஸ் பண்றாருன்னு தெரியல(எதோ எதோ கவசாகி). புலி வருது புலி வருதுனு பாடல்,(கொ.... எடுத்ததா எடுக்காததா???) இதுக்கு நம்ம தளபதி குதிரைல வராராமா. எனக்கு வில்லு flashback + போக்கிரி போலீஸ் சீன் ஞாபகம் வந்து சிரிக்க ஆரம்பிச்சிட்டேன். ஏதோ ஆடி மாசம் அம்மன் பாட்டு கேட்ட effect. இதனால படம் ஓடுமான்னு கேட்டீங்கன்னா..................... "மதுர" அப்படீன்னு ஒரு படம் வந்துச்சுல்ல??(மச்சான் பேரு மதுர) அத ஞாபகத்துல வைங்க.
___________________________________________________________________________
ஜெயா டிவில, நாங்க வர finals episode, இந்த வாரம், சனிக்கிழமை காலை, telecast ஆச்சு (மறைந்திருந்து பார்க்கும் + காதல் கசக்குதய்யா). மிஸ் பண்ணவங்க, வியாழக்கிழமை சாயங்காலம் 5 மணிக்கு பாருங்க. இல்லை பொறுத்திருந்து youtubela பாருங்க.
விஜய் மாதிரி நாம எப்போ வித்தியாசமா நடிக்கப்போகிறோம்????
2 comments:
நான் youtubeல பார்த்தேன். அருமையான முயற்சி. வாழ்த்துகள் :)
@prem - வருகைக்கும், வாழ்த்திற்கும் நன்றி :)
Post a Comment