Wednesday, September 9, 2009

சென்சார் என்ற கேலிக்கூத்து

நண்பர்களே, திரைப்படங்களுக்கு சென்சார் போர்ட் என்கிற விஷயம் எதுக்கு இருக்கு (தமிழ்ல தணிக்கைனு சொல்றாங்க) எதை தணிக்கை பண்றாங்க? ஏதாவது விவகாரமான கசமுசா காட்சிகளோ, வெறி ஏத்தற (அந்த 'வெறி' அல்ல) ரத்தக் களரியான காட்சிகளோ, பொதுவுல, நாட்டுக்கு விரோதமான விஷயங்களோ இருந்தா, அதை சென்சார் செய்யவே இந்த போர்ட்.

ஆனா இவங்க பண்ற தணிக்கைல எனக்கு எப்பவுமே நம்பிக்கை இருந்தது கிடையாது. சினிமாவப் பற்றி படிப்பதற்கு முன்னாடியே இப்படின்னா, கொஞ்சம் சுமாரா விஷயம் தெரிஞ்ச அப்பறம், சுத்தமா நம்பிக்கை போய், அவங்க ஒரு காமெடி பீஸாவே தெரியறாங்க. முதல்ல எனக்கு வந்த சந்தேகம், எதுக்கு ஒரு படத்துக்கு A certificate குடுக்கறாங்கன்னு. காரணம் என்னனா, நான் மேலே சொன்னா மாதிரி, பலான பலான காட்சிகளோ, கத்திக் குத்துக்களோ இருந்தா அப்படி குடுப்பாங்க. ஆனா அதையும் நாய் வாய்ல பன்னு மாதிரி முழுசா இல்லாமா, குதறி வெச்சி, அப்பறம் குடுப்பாங்க. அதான் Adults ஒன்லின்னு குடுத்துட்டாங்கல்ல, அப்புறமும் எதுக்கு கட்டிங்க்னு பார்த்தா, அதுக்கான காரணம் வெளங்கலை.

இந்த சென்சார் பிரச்சனை பெரும் பிரச்சனை ஆகி, சண்டை போட்டு பல்பு வாங்கின ஆட்கள்ல சில பேர் நம்ம கமல், எஸ்.ஜே.சூர்யா, வேலுபிரபாகரன். இப்ப சமீப காலங்கள்ல, அதாவது 2-3 வருடங்களா வர படங்களுக்கு குடுக்குற rating எல்லாமே செம்ம காமெடியா கீது. உதாரணத்திற்கு சில படங்கள எடுத்துப்போம்,

குசேலன் படத்துல, எப்படி நட்பை விலாவரியா, விலா நோக சொன்னாங்கன்னு பாத்தீங்க. ஆனா அதோட இல்லாம,  நம்ம தலைவி நயன்தாரா எப்படி நடிச்சி காமிச்சிருப்பாங்கன்னு நீங்க எல்லாரும் நல்லா பாத்துருப்பீங்க, ஆனா அந்த படத்துக்கு, A குடுக்கவேணாமய்யா  அட்லீஸ்ட் ஒரு UA ....ம்ஹூம்.... இல்லையே . U குடுத்தாங்க..

அடுத்து, யாரடி நீ மோகினி அப்படின்னு ஒரு கலைப் படைப்பு. அதுல ரகசியா, கொடுமையான ஆட்டம் ஒண்ணு போட்டிருப்பாங்க. அதோட இல்லாம, படத்துல "இயற்கையா" சில விஷயங்களைப் பத்தி வசனங்கள் வேற, காமெடியா, வரும். இந்தப் படத்துக்கும் U.......

அடுத்து, சமீபத்துல வந்த நாடோடிகள். நிஜமாவே நல்லா படமா இருந்தாலும், படத்துல வன்முறை காட்சிகள் எந்த அளவு இருந்ததுன்னு பார்த்தவங்களுக்கு தெரியும். இந்த படத்துக்கும் U அளிக்கப்பட்டது...

இவ்வளவு ஏன், ரெண்டு வாரம் முன்ன வந்து, இப்ப நாறிக்கிட்டு இருக்குற கந்தசாமில, நம்ம ஸ்ரேயா அம்மணி எப்படி கலை சேவை செஞ்சாங்கன்னு பாத்திருப்பீங்க. அட்லீஸ்ட் யாரவது சொல்லிருப்பாங்க. அதைவிட, அந்தப் படத்துல, கடைசில, மீனாகுமாரி பாட்டு, உச்சக்கட்டம். டிரஸ் இருக்கா, இல்லையான்னே சந்தேகம் வர அளவுக்கு இருக்கும் பாடல் அது.

So, இப்படியாக சொல்லிகிட்டே போகலாம். நீங்களும் நோகாம படிச்சுகிட்டே இருப்பீங்க. எனக்கு ரொம்ப பிடித்த rating சிஸ்டம், ஹாலிவுட்ல இருக்கறது. அங்க ரொம்ப அழகா பிரிச்சிருக்காங்க. அதப் பற்றி மேல படிக்கனும்னா -> இங்க <- போங்க. அங்க நம்ம ஸ்பீல்பெர்க் அண்ணாச்சி, தன்னோட முயற்சியில, ஒரு புது rating முறையவே கொண்டு வந்திருக்கார். நாம ஊர்ல யாரும் மூச்சு கூட விட முடியாது. ஒரு வேளை  இதுலையும், அரசியல், ஊழல் எல்லாம் இருக்குமோ?? எனக்கென்னமோ சத்தியமா இருக்கும்னுதான் தோணுது.

திரைப் படங்களுக்கு சென்சார் வேண்டாம்னு சொல்ற அளவுக்கு நான் முற்போக்குவாதி இல்லை. Atleast, கொஞ்சம் கேனத்தனமா இல்லாம, ஒழுங்க இருந்தா சரி.என்ன சொல்றீங்க???


 சின்னத்திரைக்கு சென்சார் தேவைன்னு நினைக்கறீங்க???

5 comments:

kanagu said...

unmai than thalaiva...

'A' nu rating koduthutu yen scenes ellam cut pannanum nu enakku innum velangala... ivangala paatha ennaku sirippu sirippa varuthu..

ivanunga oru definition koduthalachum paravala... athayum panrathu illa...

seri neenga padathu mela ellam romba aarvama irukkeenga... ungalukkaga oru blog..

www.cablesankar.blogspot.com

padichu paarunga... ungalukku pidikkum nu nenaikeren
:))

Karthick Krishna CS said...

வருகைக்கு நன்றி நண்பரே.... உங்க சந்தேகம் நிறைய பேருக்கு இருக்கு, ஆனா யாருகிட்ட கேக்கறதுன்னு தெரியல. அப்புறம் நீங்க சொன்ன கேபிள் சங்கர் சாரோட ப்ளோக நான் ஒரு ஆறு மாசமாவே படிச்சிகினு இருக்கேன்.. இருந்தாலும், என் ஆர்வத்தை நல்ல புரிஞ்சிகிட்ட உங்களுக்கு நன்றி...

M Vijay said...

'அதைவிட, அந்தப் படத்துல, கடைசில, மீனாகுமாரி பாட்டு, உச்சக்கட்டம். டிரஸ் இருக்கா, இல்லையான்னே சந்தேகம் வர அளவுக்கு இருக்கும் பாடல் அது.' Indha madhiri commentsnaaladhan innum andha padam theatresla oadittirukku..

Anonymous said...

Sensor board - Boys padathuku "U" certificate kodutha manasatchi illatha pasanga !

Karthick Krishna CS said...

@vani
ya, tat too...