Saturday, September 13, 2008

2 நாள் 2 films

முன்குறிப்பு: இது விமர்சனப்பதிவு அல்ல....

Theatre பக்கம் போய் ரொம்ப நாள் ஆய்டுச்சுன்னு, friday, செப் 12 "வால்-e" அப்படின்னு ஒரு sci-fi/animation/love story படத்துக்கு போனோம் (myself+vk அண்ணா) எனக்கு pixar animation studios படங்கள் மேல எப்பவுமே ஒரு தனிப்பட்ட மரியாதையும் அன்பும் உண்டு... அவங்களோட எல்லா படத்தையும் 1++ டைம்ஸ் பாத்துருக்கேன்.... already இந்த படம் மேலை நாடுகள்ல release ஆகி + both critical and financial success ஆகி + நல்லா சக்கை போடு போட்டு அப்பறமா இங்க release ஆயிருக்கு... so, வழக்கம் போல எதிர்பார்போட போனேன்... படமும் வழக்கம் போல ஏமாத்தல...

ஆனா அவுங்க reviewல சிலாகிச்சத போல படம ஒன்னும் pixar's பெஸ்ட் இல்ல... animation wise நெஜமாவே முன்ன விட, இதுல பின்னி பெடல் எடுத்துருக்காங்க.. கதைனு பாத்தா பெருசா ஒன்னும் இல்ல. அத இங்க -->கிளிக்கி<--chadhavandi... இந்த படம பாக்கும்போது நிறைய தமிழ் படங்கள் ஞாபகத்துக்கு வந்துச்சு.. (உதாரணம்: climaxla, நம்ம heroine eve, hero wall-eku பழச ஞாபகப்படுத்த, நம்ம மூன்றாம் பிறை கமல் ரேஞ்சுக்கு, "விஜி சீனு விஜி - விஜி சீனு விஜி" அப்படின்னு try பண்ணுவாக)... உங்க யாருக்காச்சும் வந்துச்சா??? மத்தபடி படம pixar'in தயாரிப்பில், மற்றுமொரு வெற்றிப்படம்... (ஆனா இந்த படத்துக்கு சென்னைல, ratatouilleவிட வரவேற்பு கம்மிதான்னு நெனைக்கறேன்)
http://www.deadlinehollywooddaily.com/wp-content/uploads/2008/06/wall-e_3.jpg
நம்ம ஹீரோ ஒரு ஏழை.. heroine பணக்கார வீட்ட சேர்தவங்க

அடுத்ததா நான் பார்த்த படம், "பொய் சொல்ல போறோம்"..
நாள்: wall-eku அடுத்த நாள்
இடம்: - (மொக்க) சாந்தி theatre..
பெருசா ஒன்னும் எதிர்பார்க்கல, அதனாலேயே படம் நல்லா இருந்துச்சு... படம் ஆரம்பம் to முடிவு காமெடி try பண்ணிருக்காங்க... சில இடங்கள்ல மொக்கையா இருந்தாலும் படம் bore அடிக்கல...படத்துல குறிப்பிட்டு சொல்லனுனா, நாசர், மௌலி and நெடுமுடி வேணு வோட நடிப்ஸ் நல்லா கீது... படம் நல்ல டைம் பாஸ்.... ஆனா இந்த படத்துக்கு தேவையே இல்லாத ஒரு விஷயம் - Songs.. BG வந்தாலும், பாட்டு நல்லா இல்ல.... ஹிந்தில Khosla Ka Ghosla! அப்படின்னு priyadarshan எடுத்த படத்த, அவரோட assistant விஜய் (கிரீடம் டைரக்டர்) தமிழ்ல இயக்கிருக்காரு.. அவசியம் பாக்கணும்னு சொல்லமாட்டேன்..இருந்தாலும் பாக்கலாம்...

http://im.sify.com/sifycmsimg/sep2008/Entertainment/Movies/Tamil/14756422_poisollaporom_330x234.jpg
எல்லாம் அம்மன் அருள்

No comments: