Sunday, January 16, 2011

காவலன்

இந்தப் பொங்கலின் இன்ப அதிர்ச்சி காவலன். நினைச்சே பார்க்கலை. இப்படி ஒரு விஜய் காணாம போயிட்டாருன்னு நினைச்சிகிட்டு இருந்தேன். ஆனா,  கலக்கிட்டாரு. இதைதானைய்யா பண்ணணும்னு இவ்வளவு நாள் சொல்லிகிட்டு இருந்தோம். இப்பவாச்சும் உரைச்சுதே. ரொம்ப சிம்பிளான, அழகான கதை. தன் ஹீரோயிஸத்தை சண்டைக் காட்சிகள்ள மட்டும் வெச்சிட்டு, மீதி நேரம் மொத்தமும், மனுஷன் நிஜமாவே நடிச்சிருக்காரு. அசின் ஒட்டலை. ரொம்ப மேலோட்டமா நடிச்சிருக்காங்க. வடிவேல் ஒரு சில இடங்கள்ல சிரிக்க வைக்கிறாரு. மத்தவங்க எல்லாம் கொடுத்த வேலையை செஞ்சிருக்காங்க. பாடல்கள் நல்லா இருக்கு. பிண்ணனி இசை பரவாயில்லை. மறுபடியும் விஜய் பற்றி சொல்லனும்னா, ரொம்பவே அடக்கி வாசிச்சிருக்காரு. அருமையான உடல் மொழி. தாய்மார்களுக்கு நிச்சயம் பிடிக்கும். விஜய் ரசிகர்களுக்கு பிடிக்குமான்னு சந்தேகமா இருக்கு. நான் இன்னொரு முறை பார்க்கலாமான்னு யோசிச்சிகிட்டு இருக்கேன். வித்தியாசமான கிளைமாக்ஸ். கண்டிப்பா குடும்பத்தோட பாருங்க..
Simply superb feel good movie...

p.s.1 - அபிராமி தியேட்டர்ல கடைசி வரிசைல உட்கார்ந்து பார்த்தேன். பாட்டெல்லாம் sound pan ஒழுங்கா இல்லாம, sync ஆகாம, ரொம்பவே படுத்திருச்சு. நல்ல பாடல்கள் எல்லாம் கேட்க மோசமா இருந்துச்சு... disappointing... யாராச்சும் அவங்ககிட்ட சொல்லுங்கப்பா...

5 comments:

kanagu said...

நான் இந்த படம் கொஞ்சம் நல்லா இருக்கும்-னு எதிர்பார்த்தேன்.. வீணாகல :)

திங்கள்கிழமை போறேன் :)

அபிராமி பல காலமா அப்படி தான் வச்சி இருக்காங்க... நீங்க வேற தியேட்டர் போயிருக்கணும் :)

ம.தி.சுதா said...

அப்ப பார்க்கலாமுண்ணிறிங்க...

கா.கி said...

@kanagu
இல்ல பாஸ். செண்டர்ல உட்கார்ந்து பார்த்திருந்தா நல்லா இருந்திருக்கும்..
சவுண்டு செட்டிங் ரொம்ப பாமரத்ததனமா பண்ணிருந்தாங்க. மத்தபடி தியேட்டர் நல்லாதான் இருந்துச்சு. ஒரு முறை ராவண் பார்க்கும்போது கூட நல்லா தான் இருந்துச்சு...

@மதி
கண்டிப்பா.. அடிக்கடி ”இது விஜய் படம்தானா”னு கிள்ளி பார்த்துக்க வேண்டியிருக்கும்... :)

எஸ்.கே said...

//அடிக்கடி ”இது விஜய் படம்தானா”னு கிள்ளி பார்த்துக்க வேண்டியிருக்கும்... :)//

ஹா..ஹா.. அந்த அளவு இருக்கா!

கா.கி said...

@எஸ்.கே
பின்ன, ரோஜா கையால அடி வாங்கறாரு. ஒரு பாட்டு முழுக்க அவருக்கு எதாவது அடி பட்டுகிட்டே இருக்கு. ஒரு சீன்ல, ஒரு கல் பென்ச் தடுக்குது. வழக்கமா அது அவர் கால் பட்டவுடனே உடையும், இதுல அப்படியில்லை... இப்படி நிறைய